Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒரிஸ்ஸாவில் மிஷினரிகளுக்கு நேர்ந்த கொடுமை...


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 7
Date:
RE: ஒரிஸ்ஸாவில் மிஷினரிகளுக்கு நேர்ந்த கொடுமை...
Permalink  
 


திரு. பீட்டர் சாமுவேல்...

விசேஷ காரணம் என்றெல்லாம் ஏதும் இல்லை... என் நண்பன்(அவரும் கிறித்துவர்) ஆலோசனையின் படி எதாவது ஒரு கிறித்துவ பெயருக்கு என்னை மாற்றி கொள்ளும் படி கூறினார். உண்மையான் மனமாற்றம் ஏற்பட்ட பிறகு பெயரில் என்ன இருக்கிறது என்று நான் கேட்டேன். இருந்தாலும் முழுமையாக என் பழைய பாவ வாழ்கையிலிருந்து விடுபட்டு மெய்யான பாதைக்கு வந்ததற்கு சாட்சியாக ஒரு புது கிறித்துவ சமய பெயரை வைத்து கொள்ளும் படி என்னிடம் அன்போடு கேட்டு கொண்டார். என்ன பெயர் வைத்து கொள்வது என்று அவரிடம் கேட்டபொழுது.. நான்கு அயிந்து பெயர்களை பரிந்துரைதார்... அதில் ஒன்று தான் இந்த பெயரும்..நான்கு அயிந்து பெயர்களையும் நான் வைத்து கொள்ள முடியுமோ.. அதனால் அயிந்து பெயரையும் துண்டு சீட்டில் எழுதி ஆண்டவனை வணங்கி அவர் முன்பு குலுக்கி போட்டு எடுத்ததில் இந்த பெயர் விழுந்தது.. அதையே ஆண்டவர் எனக்கு கொடுத்த ஆசீர்வாதமாக நினைத்து புளங்காகிதம் அடைந்து வைத்து கொண்டேன்.. ஆனந்தமான வாழ்க்கையாக என் நாட்கள் செல்கிறது. மெய்யான பாதைக்கு என்னை இட்டுசென்ற ஆண்டவருக்கு நன்றி.. ஆமென்

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
ஒரிஸ்ஸாவில் மிஷினரிகளுக்கு நேர்ந்த கொடுமை...
Permalink  
 


அன்பு சகோதரர் பிரான்சிஸ்,
கிறிஸ்த்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். உங்களை குறித்து அறிவதில் மகிழ்கிறேன். ஆவிக்குள்ளாக நீங்கள் அதிகமாக வளர்வதற்கும், கனி தரும் மரமாக வாழ்வதற்கும் ஆண்டவரை பிரார்த்திக்கிறேன்.

சகோதரி கோல்டா,
வாழ்த்துக்கு நன்றி. என்னை சுற்றி உள்ள அனைத்து பலவீனமான சகோதரர்களும் (இடராதவண்ணம்) பலம் கொண்ட பிறகு, நாம் Champagne உடன் என் பிறந்தநாளை கொண்டாடலாம்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
RE: ஒரிஸ்ஸாவில் மிஷினரிகளுக்கு நேர்ந்த கொடுமை...
Permalink  
 


francis wrote:

நான்ஆச்சாரமான இந்து குடும்பத்தில் பிறந்திருந்தாலும்


 தங்கள் Francis என்ற பெயருக்கு ஏதாவது விசேஷ காரணமுண்டா?

(ஓரு ஆர்வத்தில் தான் கேட்கிறேன்)



__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 7
Date:
ஒரிஸ்ஸாவில் மிஷினரிகளுக்கு நேர்ந்த கொடுமை...
Permalink  
 


திரு. ஜோசப்

//புதிய நண்பரான தங்களை வரவேற்கிறோம், தொடர்ந்து உங்கள் பங்களிப்பை தாருங்கள்.//

உங்கள் கனிவான வரவேற்பிற்கும் தாங்கள் எனக்கு கொடுத்த ஊக்கத்திற்கும் மிக்க நன்றி. என்னால் முடிந்த அளவு மிக சிறந்த பதிவுகளை தர முயற்சிக்கிறேன். மேலும் எனக்கு கிருத்துவம் பற்றி அதிகம் தெரியாது(ஏசுநாதரின் நற்செய்தியை தவிர). உண்மையை கூறவேண்டுமானால் நான் கிறிஸ்தவ பாதைக்கு முழுமையாக வந்தே சில வாரங்கள் தான் ஆகின்றன..ஆனால் பல ஆண்டுகளாக எனக்கு இயேசுநாதர் மீது ஒரு உள்ளம் உருகிய ஈர்ப்பு இருந்துகொண்டு இருந்தது. நான்ஆச்சாரமான இந்து குடும்பத்தில் பிறந்திருந்தாலும் என்னுடைய பள்ளி நாட்களிலேயே எந்த ஒரு செயலாக இருந்தாலும் இயேசு கிறிஸ்துவை வணங்கி விட்டு தான் தொடங்குவேன்.. வேறு எந்த இந்து மத தெய்வங்களின் மீதும் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதில்லை. மேலும் ஆரம்பத்தில் கிறிஸ்துவை பற்றி நான் அதிகம் தெரிந்து கொண்டது தினமலர், தினகரன் போன்ற பத்திரிகைகளுடன் வரும் ஆன்மீக மலர் என்னும் இலவச இணைப்பின் மூலமாக தான். அதில் வரும் ஒரு பக்க செய்திகளில் தான் நான் பல பைபிள் வசனங்களை தெரிந்து கொண்டேன். இது வரை நான் எந்த கிறித்துவ சமய பிரச்சாரத்திற்கும் சென்றது இல்லை..ஆனால் நேரம் கிடைக்கும்போது எல்லாம் நான் சாந்தோம் தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்ய தவறியது இல்லை. ஆகவே, தவறுதலாக எதாவது நான் தட்டச்சு செய்திருந்தால் தயவு செய்து பிழைகள் பொருத்து கொள்ளும்படி அன்போடு கேட்டு கொள்கிறேன் . பைபிள் பற்றிய தெளிந்த ஞானத்தை எனக்கு போதிக்கும் படி என் அன்பு கிறித்துவ சகோதரர்களிடம் கேட்டு கொள்கிறேன். நன்றி. ஆமென்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
RE: ஒரிஸ்ஸாவில் மிஷினரிகளுக்கு நேர்ந்த கொடுமை...
Permalink  
 


சீரியசான ஒரு விவாதத்தில் இந்த பதிவு தேவையா சகோதரி



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பிறந்த நாள் வாழ்த்துக்கள்,அசோக்...

Let's celebrate with Champagne!!!

 



__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 7
Date:
ஒரிஸ்ஸாவில் மிஷினரிகளுக்கு நேர்ந்த கொடுமை...
Permalink  
 


தமிழ்ஹிந்து இணையத்தளம் இவ்வாறு கட்டுரை வெளியிட்டதில் ஆச்சர்ய பட ஒன்றும் இல்லை. அவர்கள் தங்களின் சனாதன (அ)தர்மத்தை காப்பாற்ற வேண்டும் என்று துடிக்கிறார்கள். அதற்கு ஏதோ அவர்களால் செய்ய முடிந்தது ஒரு இணையம் ஆரம்பித்து தங்கள் மன குமுறலை வெளிபடுத்துவதுதான்.

என்றைக்கு 80 கோடி இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நாட்டில் எங்கே தங்கள் மதம் மிக சிறுபான்மை மதமான (இந்தியாவை பொறுத்தவரை) கிறித்துவ மதத்தால் அழிந்து விடுமோ என்று பயந்து இயக்கம், இணையத்தளம் போன்றவைகளை தொடங்கி போராட துவங்கி விட்டார்களோ அப்போதே மிக சிறுபான்மையாக உள்ள கிறித்துவ சமயம் இந்துமதத்தின் ஆணிவேரை ஆட்டம் காணவைத்து விட்டது என்று தான் அர்த்தம் (சாமுவேல் அதிகாரத்தில் வரும் தாவீதிற்கும் கோலியதிர்க்கும் இடையே நடந்த போரை தான் இது நினைவு படுத்துகிறது) .

இவர்களுக்கு இந்துக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் முதலில் அணைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்திற்கு சென்று இறைவனை தொட்டு அபிஷேகம் செய்யும் அர்ச்சக வேலை குறிப்பிட்ட ஒரு சாதியாருக்கு தான் சொந்தம் என்று தடை வாங்கிய பார்பன சதிகார கும்பலுக்கு போய் சமூகநீதியை பற்றி உபதேசித்து அந்த சட்டத்தை எதிர்த்து போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வைத்து அணைத்து சாதியாரையும் அர்ச்சகராக்கி பார்க்கட்டும். அல்லது சிதம்பரம் நடராசர் கோவிலில் இருக்கும் திருச்சிற்றம்பல மேடையில் தமிழ் பாசுரங்களான தேவாரம்,திருவாசகம் போன்றவைகளை பாடக்கூடாது என்று தடுக்கும் சிதம்பரம் கோயில் தீட்சிதர்களை கண்டித்து அதில் வெற்றி கண்டு வரட்டும் . குறைந்த அளவு தங்களின் சனாதன தர்மத்தை காக்கும் இணையத்தளத்தில் அது தொடர்பாக ஒரு கட்டுரையாவது தீட்டடும். இவர்களுக்கு தமிழ்மொழியை பற்றியோ அல்லது தமிழ் இனத்தை பற்றியோ எந்த கவலையும் இல்லை. தங்கள் இந்து தர்மத்தை அதாவது பத்து பைசாக்கு கூட பிரயோஜனம் இல்லாத வடமொழி ஆரிய வேதநெறியை காக்க வேண்டும் அவ்வுளவுதான். தமிழர் நலனிலோ, தமிழ் மொழியின் மீதோ ஒரு சிறு அக்கறையும் இல்லாத தமிழ்ஹிந்து போன்ற முன்றாம் தரமான மலிவான ஆர்.எஸ்.எஸ் போன்ற கீழ்த்தரமான இந்து மத இயக்கங்களின் குரலாக ஒலித்திடும் இது போன்ற இணையதளங்களின் கட்டுரைகளுக்கு நாம் மதிபளிக்கவேண்டாம். கிருத்துவம் தமிழகம் எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் காலம் விரைவில் மலரும்... இது ஆண்டவரின் சித்தம்... ஆமென்.. நன்றி.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

மலைவாழ்மக்கள் மத்தியில் ஊழியம் நடப்பதை பற்றி தமிழ் ஹிந்து தளம் ஒரு கட்டுரை விட்டிருக்கிறது. படித்து பார்த்தால், ஒரே புளுகு மூட்டைகள். ஆனால், சுவாரசியமாக இருக்கிறது. சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட மக்களின் கற்பனை குதிரைகள் என்னமாய் ஓடுகிறது...

மிஷினரிகள் அந்த மக்களை கட்டாயப்படுத்தி மதமாற்றுவதாக கூறுகிறார்கள், நானும் யோசித்து பார்த்தேன், அதெப்படி ஒருவரை கட்டாயமாக (அதுவும் அவர்கர் சமுதாயம் விரும்பாத பொது) ஒருவரை மதமாற்றமுடியுமென்று. கட்டாயப்படுத்தி ஒரு காரியத்தை சாதிக்க முடியுமென்றால், நல்லபண்புகளை கட்டாயப்படுத்தி இந்திய மக்கள் அனைவருக்கும் கொண்டுவந்திர்க்கலாமே... அது ஏன் முடியவில்லை?

சமுதாயத்தின் கட்டாயத்திற்காக சிலர் இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாமே தவிர, (ஊழியக்காரர்) ஒருவர் கட்டாயம் செய்வதினால் யாரும் கிருஸ்துவராவதில்லை.
இதில் அவர்கள் கிறிஸ்துவர்கள் செய்யும் அநியாயங்கள் என ஒரு லிஸ்ட் சொன்னார்கள் (கேட்டால் சிரிப்பீர்கள்):
ஊழியர் அந்த மலைவாழ்மக்களின் மொழியை அந்த மக்களை போலவே பேசுகிறாராம் (இதில் என்னய்யா அநியாயம்?)
கிறிஸ்துவராகி ஞானஸ்நானம் எடுத்த பிறகு பெயரை மாற்றுவதில்லையாம் (பெயரை மாற்றினாலும் அநியாயமன்னுதான் சொல்லுவாங்க)
மலைவாழ்மக்கள் மொழியில் தொலைக்காட்சியில் கிறிஸ்த்துவ நிகழ்சிகள் வருகிறதாம் (இதற்காக போராட்டம் செய்து அதை நிறுத்தியும் விட்டார்கள்).
அட்சரம் (எழுத்து) இல்லாத ஒரு மொழியை கற்றுக்கொண்டு, தியாகமாய் மழையிலும் வெயிலிலும் (உயிர் போகும் அபாயத்திலும் ) ஊழியம் செய்பவர்களை, சொகுசாக சென்னையிலும், அமெரிக்காவிலும் உக்காந்து கொண்டு, வாய்கூசாமல் விமர்சிக்கிறார்கள். ஆண்டவர் வருகையில் இருக்கிறது இவர்களுக்கு...


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
RE: ஒரிஸ்ஸாவில் மிஷினரிகளுக்கு நேர்ந்த கொடுமை...
Permalink  
 


பிரான்சிஸ், கையை கொடுங்க பின்னி பெடலெடுத்துட்டீங்க. நீங்க எழுதினது 100 க்கு 100 உண்மை. இவர்கள் மேலை நாடுகளில் யோகா, மெடிடேஷன் அது இது என தங்களது நம்பிக்கைகளை பரப்பி வருவது எல்லாம் எந்த கணக்கில் சேர்த்தி என தெரியவில்லை. மேற்கத்திய நாடுகளின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் கிறிஸ்தவம் காரணம் என்பார்கள் இங்குள்ள அம்பிகள் சிலர், அதுவுமின்றி தேசபக்தி பற்றி வாய் கிழிய கிழிய பேசும் இவர்களது தேசபக்தியை ஜெமினி பிளை ஓவர் மேல் காலங்காத்தால 5 மணிக்கு பாத்தா தெரியும் கீழே அமெரிக்க தூதரகத்தின் முன் நிற்கும் கூட்டத்தில் பாதி இவர்களது வகையறாவாகத்தான் இருக்கும்.

அப்புறம் ஒன்னு சகோதரரே வலது சாரி அமைப்புகளாவது தங்களது மத நம்பிக்கைகள் அழிவதாக சொல்லி எதிர்ப்பார்கள் ஆனால் கிறிஸ்தவர்கள் என்று சொல்லும் சில விஷ செடிகள் இந்தியாவில் நற்செய்தி அறிவிக்கும் பணிக்கே களங்கம் கற்பித்துக்கொண்டு இருக்கின்றன, இவர்களது நூதன உபதேசத்தின் சாராம்சம் என்னவென்றால் ஒட்டு மொத்த இந்தியாவும் கிறிஸ்தவம் வராமல் வருணாசிரமத்தின் நிழலில் அல்லல்பட்டு கிடந்திருந்தாலும் பரவாயில்லை என்பார்கள், அஃதாவது உலகத்தின் எந்த நம்பிக்கை உள்ளவனும், அவன் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாவிட்டிருந்தாலும் ரட்சிக்கப்படுவானாம் எப்படி கதை பாருங்கள். இவ்விஷ செடிகளை எதிர்த்து இந்த தளத்திலேயே பல பதிவுகள் இடப்பட்டிருக்கின்றன, அவற்றையெல்லாம் பாருங்க, ஒரிசாவின் மிஷனரிகளையே எந்தளவுக்கு பகடி செய்து இந்த கும்பல் மட்டம் தட்டியிருந்தார்கள் என்பது புலப்படும். எதுக்கும் வாசித்துவிட்டு ரத்த அழுத்தத்தை ஒரு முறை செக் பண்ணிக்குங்க.ஏற்கனவே ஒரு நண்பருக்கு பி.பி எகிறிவிட்டதாம்

புதிய நண்பரான தங்களை வரவேற்கிறோம், தொடர்ந்து உங்கள் பங்களிப்பை தாருங்கள்.



__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 7
Date:
ஒரிஸ்ஸாவில் மிஷினரிகளுக்கு நேர்ந்த கொடுமை...
Permalink  
 


அனைவருக்கும் வணக்கம் ...................

ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னனி மற்றும் சில வெங்காய இந்து மத அமைப்புகள் எல்லாம் எப்போதும் தங்களுக்குள் ஒரு காமெடி அடித்து கொள்வார்கள் மேடை கிடைத்தால் போதும் இந்த காமெடியை மேடை தோறும் கூட முழங்குவார்கள். அது என்ன காமெடி என்றால் "உலகிலேயே அமைதியை விரும்பும் சாத்வீகமான மதம் இந்து மதமாம்".எப்படி இருக்கு இந்த காமெடி..அப்புறம் ஏன் இந்த ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகள் எல்லாம் கையில் கம்பு,வாள் போன்றவைகளை வைத்து சண்டைக்கு பயிற்சி எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

உலகில் எந்த கிறித்துவ மத அமைப்பை சேர்ந்தவர்கள் இது போன்ற கொடும் ஆயுதங்களை கொடுத்து பயிற்சி அளிக்கிறார்கள். அன்பு மற்றும் மனித குலத்திற்கு செய்யும் தொண்டின் மூலமாக தான் இது நாள் வரையில் கிருத்துவம் மக்களை ஈர்த்திருகிறது. சேவையின் மூலமே இறைவனை அடையும் லட்சிய பாதையை மனிதனுக்கு அளித்தது கிறித்துவ சமயம் என்றால் அது மிகை ஆகாது.

இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்று கூறி கொள்ளும் இவர்கள் இது வரை வியாதியிலும், வறுமையிலும் அவதிப்படும் ஏழை நடுத்தர மக்களுக்காக என்ன சேவை செய்து கிழித்தார்கள். இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கோவிலில் செய்யப்படும் கருட சேவை மட்டும் தான். எந்த இந்து மதத்தை சேர்ந்த சாமியார் சேரியில், குடிசைகளில் வாழும் ஏழைகளுக்காக அவர்கள் இடத்திற்கு நேரில் சென்று உதவியிருக்கிறார். இந்த ராம்தேவ்களுக்கும், ஸ்ரீ ஸ்ரீகளுக்கும்,நித்யானந்தாவுக்கும் நினைவில் இருப்பது எல்லாம் எப்போது தங்கள் ஆசிரமத்தின் அடுத்த கிளையை எந்த நாட்டில் தொடங்கலாம். யோகா, தியான வகுப்புகள் நடத்தி வெள்ளைகாரர்களிடம் இருந்து dollar , euro களை எப்படி அறுவடை செய்யலாம் என்பதாகவே தான் இருக்கும்.

இந்து மதம் செய்த உருப்படியான(கேவலமான) செயல் செய்யும் தொழிலின் மூலம் மனிதரில் ஜாதிகளை ஏற்படுத்தி ஏற்ற தாழ்வுகளை உண்டாக்கியது தான். சுமார் 16 நூற்றாண்டுகள் தாழ்த்தபட்டவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்கிற பெயரில் அணைத்து உரிமைகளையும் பறித்து வைத்து மக்களை மிருகங்களை விட கேவலமாக நடத்தி இருட்டில் தள்ளியது தான் இந்து மதம் செய்த மகத்தான சாதனை.

கிறித்துவ மிஷினரிகள் இந்த மண்ணில் கால் வைத்த பிறகு தான் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் குறிப்பாக தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்க பட்ட மக்களுக்கும் ஒரு விடிவு காலம் பிறந்தது.. இவர்களும் (இந்துமத பாதுகாவலர்கள்) மக்களுக்கு எந்த சேவையும் செய்ய மாட்டார்கள் இவர்கள் வணங்கும் தெய்வங்கள் என்னும் கற்சிலைகளும் இந்த பார்பனர்கள் செய்யும் கொடுமையை கண்டிக்காமல் அமைதியாக இருக்குமாம் அனால் இவர்கள் (அரிஜன மக்கள்) எந்த காரணம் கொண்டும் பர சமயம் புகாமல் தன்மானத்தோடு (இந்துமதத்தில் இருக்கும் வரை ஏது தன்மானம்) மதம் மாறாமல் தங்கள் தாய் மதத்திலேயே இருக்க வேண்டுமாம்.

மேலும் இந்துக்கள் அனைவரும் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாம். இயேசுவை கண்டாலும் வணங்குவார்களாம், அல்லாவை கண்டாலும் வணங்குவார்களாம். அப்புறம் நன்றாக என் வாயில் வந்துவிடும். இந்துக்கள் பரந்த மனபான்மை கொண்டவர்களா இல்லையா என்பதை ஒரிசாவை பார்த்து தெரிந்து கொள்ளலாம் , குஜராத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் கர்நாடகாவை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த மாவட்டங்களில் எல்லாம் எப்படி சிறுபான்மை மக்கள் படுகொலை செய்ய பட்டார்கள். அதிலும் குறிப்பாக ஒரிசாவிலும் கர்நாடகத்திலும் கிறிஸ்தவர்கள் எப்படி எல்லாம் இந்துத்துவா வெறியர்களால் துன்புறுத்த பட்டார்கள். ஒரிசாவில் கன்னியாஸ்திரிகள் இந்துத்துவ வெறிநாய்களால் கொடூரமாக கற்பழிக்க பட்டது எல்லாம் இவர்களின் பரந்த மனப்பான்மைக்கு ஒரு எடுத்து காட்டு.

உண்மையில் இந்துகளில் பரந்த மனப்பான்மை உள்ளவர்கள் தமிழர்கள் தான். இந்தியாவிலேயே மதவெறி இல்லாத இனம் தமிழ் இனம் மட்டும் தான். அதற்க்கு காரணம் இந்து மதம் அல்ல இயல்பாகவே தமிழர்களுக்கு எந்த காலத்திலும் மத வெறி என்பது கிஞ்சித்தும் கிடையாது நல்ல விஷயம் எங்கிருந்து வந்தாலும் ஏற்று கொள்ளும் மனபக்குவம் உள்ளவர்கள் தமிழ் நன்மக்கள்.அதனால் தான் எந்த மாநிலத்திலும் இல்லாத மத நல்லிணக்கத்தை இங்கு காண முடிகிறது. மற்றபடி எந்த வடமாநிலத்திலும் மத நல்லிணக்கம் என்பது இருப்பதாக தெரியவில்லை . அதற்கு மேற்கண்ட காணொளி தக்க அதாரம்.

உண்மையை சொல்ல வேண்டுமானால் உலகிலேயே மென்மையான சாத்வீக மதம் கிறித்துவ மதம் தான். மனித குலத்திற்கு செய்யும் சேவை மூலமாக மட்டுமே இறைவனை அடைய முடியும் என்று கூறும் ஒரு உன்னதமான சமயம் கிறிஸ்துவ சமயமே. இதை நான் சொல்லவில்லை மகாத்மா காந்தியே கூறுகிறார். “If Christians would really live according to the teachings of Christ, as found in the Bible, all of India would be Christian today.”. இந்தியா முழுவதும் கிறிஸ்துவ நாடகுமா என்பது தெரியாது ஆனால் தமிழ்நாடு ஒரு நாள் முழுமையான கிறித்துவ பூமியாக மலரும். தமிழர்கள் அனைவரும் விரைவில் மெய்யான பாதைக்கு வருவார்கள் நன்றி.ஆமென்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Ashokkumar wrote:
பிறந்த நாளும் அதுவுமா அழ வைச்சுட்டீங்க, சந்தோசமா? இன்னும் மனசு வலிக்குதுங்க. ஒரு மனிதன் வலியில் துடிக்கும்போது, மீண்டும் மீண்டும் அடித்து, அவன் உடல் உறுப்புகளை சிதைக்க எப்படித்தான் இவர்களுக்கு மனசு வருதோ??? இவையனைத்தும் செய்து விட்டு, அன்றைய இரவு எப்படி இவர்களால் தூங்க முடிந்தது? என்னவோ போங்க... மனசு ரொம்ப பாரமா இருக்கு.
ஆனா ஒண்ணு, இந்த வீடியோ எனக்குள்ளே ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவந்திருக்கு. அடிபட்ட ஒவ்வொருவரையும் பார்க்கும் போதும், ஆண்டவரே கண்ணுக்கு முன் இருந்தார். ரொம்ப நன்றி. இந்த பிறந்தநாள் எனக்கு இவ்வளவு பெரிய திருப்பு முனையாக இருக்கும் என்று நினைக்க வில்லை.
நன்றி,
அசோக்
 

 பிறந்த நாள் வாழ்த்துக்கள்,அசோக்...உங்கள் வரிகள் என் கண்களையும் குளமாக்கிவிட்டது;நாம் பிறந்ததிலிருந்து பல்வேறு சூழ்நிலைகளில் அழுதுகொண்டுதானே இருக்கிறோம்;என்ன தற்காலத்தில் ஆண்டவருக்காகவும் அவருடைய சொந்த இரத்தத்தினால் வாங்கப்பட்ட திருச்சபைக்காக‌  அழுகிறோம்;கவிஞனும் பாடினான்,"பிறக்கும் போதும் அழுகின்றாய்,இறக்கும்போதும் அழுகின்றாய்..."என்பதாக‌;

நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன், இளகிய மனங் கொண்டோர் இதனைப் பார்வையிடவேண்டாம் என்று; அதுவே உங்களுக்குத் தூண்டுதலாக இருந்ததோ என்னவோ..? இது ஏதோ ஒருநாள் எங்கோ ஒருமூலையில் நடைபெற்ற சம்பவம் அல்ல, இதுபோன்ற சம்பவங்கள் அன்றாட நிகழ்வாகிவிட்டது; இன்னும் தமிழ்நாட்டில் தற்போது நிகழ்ந்த ஆட்சிமாற்றங்களுக்குப் பிறகு இங்கும் நிலைமை மோசம்;ஒவ்வொரு வாரமும் ஆராதனையை நடத்தி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிறது;ஏழை எளிய ஊழியர்கள் மிகவும் அச்சுறுத்தப்படுகிறார்கள்;

அண்மையில் தேர்தல் முடிவு வருவதற்கு சில நாட்கள் முன்பே நிகழ்ந்த ஒரு உண்மை சம்பவம்... சென்னை விமான நிலையத்தின் எதிரே உள்ளது நங்கநல்லூர் என்ற பகுதி; அங்கே மூன்று நாள் தெருமுனை கூட்டத்துக்காக அழைக்கப்பட்டிருந்தேன்;(நான் வழிப்போக்கன் தானே..?) அங்கு நேருக்கு நேராக மேடைக்கு முன்பாக வந்து மிரட்டி இடையூறு செய்ததுடன் மூன்றாவது நாள் கூட்டத்தை ரத்துசெய்யவைத்தார்கள்;

மூன்றாவது நாள் சபையின் மூன்றாவது மாடியில் கூட்டம் நடக்கிறது; அங்கேயும் வந்து ரகளை செய்தார்கள்;இத்தனைக்கும் அந்த பாஸ்டர் அங்கே 40 வருடத்துக்கும் மேலாக ஊழியம் செய்துவருகிறார்; அன்றிரவு பாஸ்டரை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து எழுதிவாங்கிக்கொண்டதுடன் அவரது வீட்டு மாடியில்- அதாவது சபைக்கு மேல் அமைக்கப்பட்டிருந்த மணிக்கொரு தரம் நேரத்தைக் கூறி வசனம் கூறும் கருவியை அணைக்கச் செய்தார்கள்; இதுவே நவநாகரீக நகரமான சென்னையின் இன்றைய நிலைமை; இங்கேயே இப்படியென்றால் வடதேசத்தில் எப்படியிருக்கும்..?

பிறந்தநாளைக் குறித்து என்ன, நம்முடைய ஆண்டவர்தான் மறுபிறப்பைக் குறித்து சொல்லியிருக்கிறாரே, இன்று நீங்கள் புதிதாய் பிறந்தீர்கள்..!

{நெஞ்சை உலுக்கும் இந்த செய்தியைக் கூட பரியாசம் செய்யும் (மேசியாவின்) எதிரிகளுடன் நாம் சமரசம் செய்துகொள்ளமுடியுமா, நீங்களே சொல்லுங்கள்..! ஆண்டவரை அறியாத அந்த எதிரிகளைவிட ஆண்டவரை அறிந்தும் அவருடைய நாமத்தை தூஷிக்கும் இந்த துரோகிகளே கொடியவர்கள் என்கிறேன்..!}



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

பிறந்த நாளும் அதுவுமா அழ வைச்சுட்டீங்க, சந்தோசமா? இன்னும் மனசு வலிக்குதுங்க. ஒரு மனிதன் வலியில் துடிக்கும்போது, மீண்டும் மீண்டும் அடித்து, அவன் உடல் உறுப்புகளை சிதைக்க எப்படித்தான் இவர்களுக்கு மனசு வருதோ??? இவையனைத்தும் செய்து விட்டு, அன்றைய இரவு எப்படி இவர்களால் தூங்க முடிந்தது? என்னவோ போங்க... மனசு ரொம்ப பாரமா இருக்கு.
ஆனா ஒண்ணு, இந்த வீடியோ எனக்குள்ளே ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவந்திருக்கு. அடிபட்ட ஒவ்வொருவரையும் பார்க்கும் போதும், ஆண்டவரே கண்ணுக்கு முன் இருந்தார். ரொம்ப நன்றி. இந்த பிறந்தநாள் எனக்கு இவ்வளவு பெரிய திருப்பு முனையாக இருக்கும் என்று நினைக்க வில்லை.
நன்றி,
அசோக்
 


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: ஒரிஸ்ஸாவில் மிஷினரிகளுக்கு நேர்ந்த கொடுமை...
Permalink  
 


ஆர்ப்பாட்டமாக தனது முதல் முத்திரை பதிப்பைக் கொடுத்த நண்பர் ஃப்ரான்சிஸ் அவர்களை யௌவன ஜனம் சார்பில் வாழ்த்தி வரவேற்கிறேன்.

வடதேசத்தில் இதுபோன்ற வெறியர்களை சமாளித்து கர்த்தருடைய ஊழியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி வரும் காரணத்தினாலேயே சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களை "அண்ணன்" மரியாதையுடன் குறிப்பிட்டேன்; அவருடைய ஊழியக் களத்துக்கு ஒரு முறையாகிலும் செல்லாமலும் அவருடைய ஊழியத்துக்காக ஒரு பைசாவும் கொடுக்காமலும் இருக்கும் சில நல்லவர்கள் அவரைக் குறித்து குறைகூறுவதற்கான‌ தார்மீக உரிமை இல்லாதவர்களாவர்.

ஏனெனில் நாம் பணம் கொடுத்து வாங்காத பயன்படுத்தியிராத ஒன்றின் மீதும் நமக்கு குறைசொல்லும் உரிமையில்லை;இது நுகர்வோர் சம்பந்தமான உரிமைகளிலிருந்து நான் சொல்ல விரும்பும் கொள்கையாகும்.இதுபோன்ற தியாகமான மிஷினரி பணிக்கு சங்கநாதம் செய்வது மட்டுமல்லாது நம்முடைய தியாகமான காணிக்கைகளை அவர்களுக்கு அனுப்பி தாங்கவேண்டும்; வாழ்வில் ஒருமுறையாகிலும் இதுபோன்ற சவால் மிகுந்த பணித் தளங்களைச் சென்று பார்வையிட்டு வரவேண்டும்; நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு இயக்கத்தில் இதற்கான வாய்ப்புகளை எளிதாக உருவாக்கித் தருகிறார்கள்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 7
Date:
ஒரிஸ்ஸாவில் மிஷினரிகளுக்கு நேர்ந்த கொடுமை...
Permalink  
 


அனைவருக்கும் வணக்கம் .................

மேற்கண்ட காணொளி இந்துக்களின் வன்மனதிற்க்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துகாட்டு... பைபளில் உள்ள நற்செய்தியை ஒருவர் போதித்த காரணத்திற்காக இந்துத்துவா வெறியர்களால் ஒருவர் தாக்கப்படுகிறார் என்றால் இந்துமதம் மக்களிடம் தோற்றுக்கொண்டு இருக்கிறது என்பது தான் அர்த்தம். ஏனென்றால் மக்கள் அனைவரும் இப்போது இந்துமதத்தின் மீது உள்ள நம்பிக்கையை இழக்கத் தொடங்கி விட்டார்கள். அதற்கு பெரிய சான்று இன்றைய நாளில் இந்து மதத்தில் இருந்து கிறித்துவ மதத்திற்கு மாறும் அன்பர்களிடம் கேட்டாலே தெரியும்..!

சாதி இழிவு காரணமாக‌ நீங்க மதம் மாறியது அந்த காலம்... ஆனால் இன்று அனைத்து தரப்பில் இருந்தும் மக்கள் கிறித்துவ மதத்திற்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்; ஏனென்றால் கிறித்துவத்தில் தான் மெய்யான சமாதானமும் அமைதியும் கிடைப்பதாக உணருகிறார்கள். தங்கள் வாழ்க்கை சிக்கல்கள் மன துன்பங்கள் நீங்க இந்துக்கள் அனைவரும் முதலில் செல்வது தங்களின் கோயிலுக்கு தான்; ஆனால் கோயில் கோயிலாக சென்று பணமும் காலமும் விரையம் ஆனது தான் மிச்சம், தங்கள் கஷ்டம் தீரவில்லை என்று இருக்கும் நிலையில் கிறித்துவ மதத்திற்கு வருகிறார்கள் .

இங்கு இருக்கும் பிரார்த்தனை முறையும் வழிபாடும் தங்கள் மனதிற்கு மிகுந்த அமைதியும் நிம்மதியும் தருவதாகவும், மேலும் தங்கள் வாழ்க்கை துன்பங்கள் நீங்கி வளமோடு வாழ்வதாகவும் சொல்கிறார்கள். தேவைபட்டால் கிறிஸ்துவ ஊழியர்கள் தங்கள் வீடுகளுக்கே வந்து பிரார்த்தனை ஜெபம் போன்றவைகளை செய்து விட்டு போகிறார்கள் அது தங்கள் மனதுக்கு மிக இதம் தருவதாக கூறுகிறார்கள். நான் சொல்வதில் ஏதும் கட்டுக்கதை அல்ல, சந்தேகம் உள்ளவர்கள் தேவைப்பட்டால் இந்நாளில் கிறித்துவ மதத்திற்கு மாறிய பல இந்துகளிடம் பொய் விசாரித்துப் பாருங்கள். எந்த கோயில் பார்ப்பனன் வீடு தேடி வந்து துன்பங்கள் தீர பூஜை செய்து விட்டு போகிறான்? கோயிலுக்கு சென்று அங்கு கடவுளை பார்ப்பதற்க்கே போட்டா போட்டி பொது தரிசனம், கட்டதரிசனம், சிறப்பு கட்டண தரிசனம், இறைவனை தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு ஒரு கட்டணம், அருகில் நின்று பார்ப்பதற்கு ஒரு கட்டணம், கருவறை வாயில் வரை சென்று வழிபட ஒரு கட்டணம் என்று பாவம் அப்பாவி ஏழை மற்றும் நடுத்தர பக்தர்களை ஒரு வழிபண்ணிவிடுகிறார்கள். கடைசியில் எந்த பலனும் இருப்பதும் இல்லை.

இதை நான் எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் இன்று இருக்கும் நிலையில் இந்துக்களே இந்து மதத்தை வெறுக்கும் நிலைக்கு போய்விட்டார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. இந்த நிலையில் ஒரு நற்செய்தி அறிவிப்பாளர் இயேசுவின் உபதேசங்களை மக்களிடம் கூறும்போது அவை மிகுந்த வரவேற்பை பெறுகின்றன. அனைவரும் ஆண்டவர் இயேசுவின் நற்செய்திகளாலும் கிறித்துவ சமயத்தின் பிரார்த்தனை முறைகளாலும் ஈர்க்கபடுகிறார்கள். அப்படியே கிறித்துவ சமயத்திற்கும் மாறுகிறார்கள். இதை கண்டு இந்துத்துவா வெறியர்களுக்கு வயிற்று எரிச்சல்,பொறமை, பொச்சாப்பு ஏற்படுகிறது. தங்கள் மதத்தின் மக்கள் தொகை குறைவது கண்டு மேற்படி காணொளியில் இருப்பதை போன்ற வெறிநாய் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

ஏற்கனவே ஒரிசாவில் 1999- ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டேய்னை (stains ) தன் பிள்ளைகளோடு இந்துத்துவ வெறியன் தாரசிங் என்னும் மிருகம் ஜீப்பில் வைத்து எரித்து கொன்றது நினைவில் இருக்கலாம். ஸ்டெய்ன் பாதிரியார் மக்களை இயேசுவின் வழிக்கு திருப்புவதில் அபார வெற்றி கண்டார்; அதை தாங்கி கொள்ள முடியாமல் தான் இந்துத்துவா வெறியர்களால் அவர் படுகொலை செய்ய பட்டார்.

ஆகவே திரு. சில்சாம் மற்றும் கிறிஸ்துவ அன்பர்கள் யாரும் இந்த காணொளியை பார்த்து மனம் கலக்கம் அடைய வேண்டாம். அவர்களின் இந்த வெறியாட்டம் வீரத்தின் அடையாளம் அல்ல அவர்களின் பயத்தின் விளைவு தான் இது. விரைவில் இந்துமதம் நீர்த்து போக போகிறது என்பதின் அறிகுறி தான் இது. விரைவில் மெய்யான கிறித்துவின் பாதைக்கு மக்கள் திரும்புவார்கள் அதற்கு முன்னோடியாக இருக்க போவது தமிழ்நாடு தான் ஆண்டவரின் அருளால் விரைவில் இது நடக்கும்; ஆமென்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

சில செய்திகள் ஏன் தான் நம்முடைய கண்களில் படுகிறதோ என்று மாய்ந்து போகுமளவுக்கு சோர்வடையச் செய்கிறது; இன்று ஃபேஸ்புக் (facebook) தளத்தில் ஒரு நண்பரால் பகிர்ந்துகொள்ளப்பட்ட இந்த காணொளி படம் மனதைப் பிசைந்தது; இயேசுவைக் குறித்த நற்செய்தியைப் பிரசங்கித்ததால் வந்த பாடுகளே இவை;ஆனாலும் மறுபுறம் இதெல்லாம் வேண்டாத வேலை என்று இங்கிருந்தே குழப்பம் விளைவிக்கும் (மேசியாவின்) எதிரிகளுடனும் போராட வேண்டியதாக இருக்கிறது; இந்த படத்தைப் பார்த்தால் அவர்கள் என்ன சொல்லுவார்கள்... நல்லவேளை இப்படிப்பட்ட அடிகளையெல்லாம் வாங்கி சாகாமல் ரஸ்ஸல் கிருபையால் இரட்சிக்கப்பட்டோம்‍அதாவது மீட்கப்பட்டோம் ‍அதாவது பாபிலோனிய வேசி சபையின் திரித்துவ போதனையினால் பிறந்த இயேசுவை தெய்வமாகத் தொழும் தொல்லையிலிருந்து தப்பித்தோம் என்பார்களோ..? இளகிய மனங் கொண்டோர் இந்த காணோளியைப் பாராதிருக்கவும் வேண்டுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard