சமீபத்தில் அகில இந்திய அளவில் ஊழலை எதிர்த்து அன்னா ஹசாரே என்ற காந்தீயவாதி எழுப்பிய போர்க்குரல், அதுவும் ஊழல்வாதிகளை விசாரிக்க அமைக்கப்பட்ட லோக்பால் மசோதாவின் வரைவுத்திட்டம் நாடு தழுவிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக சட்டமனற தேர்தல்களிலும் இது ஒரு பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அதனை தொடர்ந்து யோகா குரு ராம்தேவ் தனது போராட்டத்தை ஆரம்பித்தார். அன்னா ஹசாரே யாவது ஒரு சில வடக்கத்திக்காரர்களுக்கு மாத்திரம் பரிச்சயம் ஆனவர் ஆனால் ராம்தேவ் அகில உலக அளவில் தனது ஆயுர்வேத ஆராய்ச்சியால் பெரும் புகழ் அடைந்தவர். இவர் இரு சாமியார் என்றதாலோ என்னவோ இந்துத்துவ இயக்கங்கள் தனது வழக்காமான பஜனையை பாட ஆரம்பித்துவிட்டனர். ஏற்கனவே தேசபக்தியை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டதாக நினைக்கும் அவர்கள், ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்த ராம் லீலா மைதானத்தில் தலையை காட்ட ஆரம்பித்தனர். இதற்கு ராம்தேவுடன் இப்போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் அதிருப்தி அடைந்தனர். ராம்தேவ் முன்வைத்த போராட்ட காரணங்கள் சரியாக இருப்பினும் அவர் முன்வைத்த குறிப்புகள் செயல்படுத்த முடியாத வகையில் இருக்கின்றன.
1) கறுப்பு பணத்தை மேலை நாட்டு வங்கிகளில் இருந்து இங்கு கொண்டு வர வேண்டும் 2) ஒவ்வொரு மாவட்ட வளர்ச்சிப்பணிக்கும் இதனை பகிர்ந்து அளிக்கவேண்டும் 3) இதை பயன்படுத்தும் அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள ராம்தேவ் யோகா பயிற்சி அளிப்பார் 4) கள்ள நோட்டு புழக்கத்தை குறைக்க 500,1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற வேண்டும் 5) ஊழல்வாதிகள் மரண தண்டனை அடையவேண்டும்.
மத்திய அரசுக்கு புளியைக்கரைக்க ஏகப்பட்ட அம்சங்களை தொகுத்து அளித்துள்ளார். இதனால் ஆரம்பத்திலேயே இப்போராட்டத்தை பேச்சுவார்த்தை அது இது என நீர்த்துப்போக மத்திய அரசு பிரயத்தனப்பட்டது, பல மத்திய அமைச்சர்கள் தங்களது வேலையை விட்டு ராம்தேவை கெஞ்சிக்கொண்டிரு ந்தனர், கடைசியில் மிஞ்ச முடிவு செய்த மத்திய அரசு, போலீசை அனுப்பி கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தை போராட்டக்காரர்களை விரட்டினர். இதற்காகவே காத்திரு ந்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ வினர், மிகப்பெரிய அ நீதி நிகழ் ந்துவிட்டதாக சவுண்டு விட ஆரம்பித்துள்ளனர்.
ஊழலை ஒவ்வொரு கிறிஸ்தவனும் எதிர்க்கவேண்டும், வேதம் பரிதானம் வாங்குவதை கடுமையாக எதிர்க்கிறது, அநீதியுள்ள நியாயாதிபதிகளையும் அதிகாரிகளையும் வெளிப்படையாக வேதம் கண்டிக்கிறது ஊழலை எதிர்ப்பதில் எவ்வித கருத்துவேறுபாடும் இல்லை ஆனால் ஊழல் எதிர்ப்புக்கு காவிச்சாயம் பூசுவதை வன்மையாக கண்டிக்கவேண்டும். அதுவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சிக்கியோர் ராம் லீலா மைதானத்துக்கு வன்ததால் பாபா ராம்தேவே, இது மதசார்பற்ற போராட்டம் என மறுபடியும் மறுபடியும் சொல்ல நேர்ந்தது.
ஊழலுக்கு சமமாக மதவாதம் கேடுள்ளது தான், இதுவரை ஊழல் செய்தவரை மட்டும் உள்ளே தள்ளிய அரசாங்கமும் நீதித்துறையும் எத்தனை மதவாதிகளையும் சாதி வெறியர்களையும் உள்ளே தள்ளியுள்ளது. ஆகக்கூடி பணத்தால் பணத்தின் அளவால் நடக்கும் குற்றங்களை பெரிதாக நினைக்கும் அரசு மனித உயிர்களை வேட்டையாடியவர்களை விட்டு வைத்திருப்பது ஏன்? அப்போ மனித உயிர் விலை மதிப்பில்லாதது என்று சொல்வதெல்லாம் வெறும் வாதம் தானா? ஊழல் எதிர்ப்பு அனைவருக்கும் பொதுவானதே ஆனால் அதற்கு காவிச்சாயம் பூசி, பாரத மாதா படத்துக்கு முன் வணக்கம் வைத்து மணியடிக்கும் தேசபக்தி தான் ஊழலுக்கு எதிராக இருக்கிறது என்ற எண்ணம் மாறவேண்டும். ஊழலை அனைத்து மதத்தவரும் எதிர்க்கவேண்டும். இன்னும் சீர் செய்யப்படவேண்டிய பிரச்சனைகள் ஏராளம் உள்ளன, குறிப்பாக அனைவருக்கும் கல்வி, மின்சாரம், நிறை ந்த வேலைவாய்ப்பு, சுத்தம் சுகாதாரம் போன்றவை பூரணப்படுத்தப்படவில்லை.
ஊழலை எதிர்த்து பாபா ராம்தேவ் மட்டும் அல்ல, ஒவ்வொரு இந்திய குடிமகனும் போர் தொடுக்கவேண்டும்.