Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பக்கத்துவீட்டுக்காரங்க கேள்வி கேக்கறாய்ங்க‌..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
பக்கத்துவீட்டுக்காரங்க கேள்வி கேக்கறாய்ங்க‌..!
Permalink  
 


மோசமான வார்த்தை பிரயோகங்களை முன்வைத்து நண்பர் பெரியன் அவர்களின் தளத்தில் Soul solution எழுத துவங்கியதால் தான் இந்தளவுக்கு ஒவ்வொருவரும் மோத நேர்ந்தது. விளக்கம் கேட்டால் நான் உன்னை சொல்லவில்லை என்பது. ஒருவரை நாய் அவன் இவன் என்று எழுதியபின்பு என்ன விளக்கம் கொடுத்தாலும் மனம் ஏற்க தயங்குகிறது. போதாக்குறைக்கு வேசி சபை அது இது என்று வேறு எழுதுவார்கள். ஏன் அரசாட்சி செய்தவர் குற்றம் செய்த போது வேதத்திலேயே அவர்கள் கண்டிக்கப்பட்டது நடந்தது, அதை அடிப்படையாக கொண்டு நேரே போய் கண்டித்து பாருங்களேன், தெரியும். நீங்க தான் வேதத்தை வார்த்தைக்கு வார்த்தை ஆராய்ச்சி (!) செய்து அதன் படி நடப்பவர்கள் ஆச்சே.


சோல் சொலூஷன் அவர்களை முகநூலில் (facebook) கண்ட பிறகு இவரா இப்படி எல்லாம் எழுதுகிறார் என எண்ண தோன்றியது. ஒன்றை தெளிவாக அவர்கள் புரிந்து கொள்ளட்டும், நாம் எக்காரணம் கொண்டும் இவர்களுடன் ஒத்துப்போக முடியாது ஒத்துப்போகவும் மாட்டோம், இவர்களும் அந்தப்படியே நம்முடன் இசைந்து போகப்போவதில்லை எனவே இனி இவ்வித வாத பிரதிவாதங்களை நாகரீகமான முறையிலாவது தொடரலாம். ஏனோ தானோ என்றல்ல தீவிரமாகவே இவர்களை எதிர்ப்போம்.



-- Edited by joseph on Wednesday 8th of June 2011 04:15:42 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: பக்கத்துவீட்டுக்காரங்க கேள்வி கேக்கறாய்ங்க‌..!
Permalink  
 


நண்பர் கோவைபெரியன் எழுதுகிறார்

 பாதம் என்கிற வார்த்தையை அப்படியே எடுத்துக்கொண்டால், தேவன் தன் பாதம் முழுவதையும் இந்த பூமியின் மேல் வைத்திருக்கிறாரோ!! பதில் தேவை!!

இதற்கு விளக்கமாக பதில் சங்கீதங்களின் உருவகங்கள் என்ற தொடரில் பதித்துள்ளேன் பார்க்கவில்லையா? வரும் வாரம் அதன் இறுதி பகுதியை பதிக்கிறேன். வசனங்களில் வரும் உருவகங்களையும் கருத்திற் கொள்ள வேண்டும். தேவனுக்கு அவயவங்கள் இருப்பதாக சொன்னால் அதனை எவ்விதம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு முறை உள்ளது. அத்தொடரை படித்து தெரிந்து கொள்ளுங்கள். அல்லது ஆதாரத்துடன் பதில் தாருங்கள். 

 

நண்பர் கோவைபெரியன் எழுதுகிறார்

//நீங்கள் மட்டும் தவறான எழுத்துகளை கொண்டு எழுதுவதே இல்லையா!! எழுதியும் இருக்கிறீகள்!! அடுத்தவர்களை சொல்லும் போது நீங்களும் போதித்து தான் வருகிறீகள் என்று நினைவில் இருக்கட்டும்!!//

உண்மைதான் நான் இல்லை என்று சொல்லவில்லையே. ஆரம்பத்தில் அமைதியாக இருந்த என்னை மோசமான வார்தைகளால் திட்டியதை மறந்து விட்டீர்கள் நான் அப்போதே மன்னிப்புக் கேட்டேன். நீங்கள் இதுவரை கேட்டீர்களா? இல்லைதானே. ஒரு அநாகரீகமானவனை கூட வைத்திருப்பீர்கள். அவன் என்ன வேண்டுமானாலும் மோசமாக எழுதுவான் அவனை கண்டிக்க மாட்டீர்கள் நாங்கள் வளாதிருக்க வேண்டுமா? அவனை முதலில் மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்கள். நான் பகிரங்கமாக அவனிடம் மன்னிப்புக் கேட்பேன். அவனை மோசமாக எழுதுவதை நிறுத்தச் சொல்லுங்கள். நானும் நிறுத்திக் கொள்வேன். என்ன புரிந்ததா? 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

John wrote:
தேவன் ஆதியிலே பிதாவா அல்லது வெறுமையாக இருந்து விட்டு பிதாவாக ஆனாரா?

 என்ன ஜாணு அண்ணே நீங்களும் சின்னபுள்ளத்தனமா கேள்வி கேக்கறீங்க‌... பிள்ளை பெத்தபிறகு தானே ஒருத்தன் அப்பாவாக முடியும்... இரஸல் கண்டுபிடித்த கடவுள் மொதல்ல அவரு படைச்ச அன்பான உலகத்துல ஒண்டியா ஒக்காந்துக்குனு- போரடிக்குதின்னு கல்லாக்கா ஒடச்சி தின்னிகிட்டு இருந்தாரு... திடீர்னு பாத்தா வயித்துல ஒரே வலி... பிள்ளை பெத்து பிதாவா ஆயிட்டாரு... இதுகூட தெரியாம கேள்வி கேக்கறீங்களே கேள்வி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
பக்கத்துவீட்டுக்காரங்க கேள்வி கேக்கறாய்ங்க‌..!
Permalink  
 


Bereans:

//ஏதோ எதிர்த்து கேட்கவேண்டும் என்கிற நோக்கத்தோடு மாத்திரம் எதையும் கேட்காதீர்கள், ஜோசப் அவர்களே!! தேவனின் அன்பை மனிதர்களின் அன்புடன் ஒப்பீட்டு பேச முடியாத காரியம்!! நீங்கள் ஏதோ புத்திசாலித்தனமாக கேட்க்கிறீர்கள் என்றும், அதற்காக உங்கள் சகாக்கள் உங்களை பாராட்டுகிறார்கள் என்பதை நினைத்து நீங்கள் தேவனை தான் தூஷிக்கிறீர்கள்!! அவ்வளவே!!//

அப்படி அல்ல ஏதோ எதிர்க்கவேண்டும் என்பதல்ல, உங்களை முழு மூச்சாக எதிர்க்கவேண்டும் என்பதற்காக தான் எழுதுகிறேன், வெளிப்படுத்தின விஷேஷத்தில் இருந்து எனது கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை, மெற்கண்ட தேவனுடைய அன்பிற்கு நீங்கள் அளித்த பதிலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களுடைய சொந்த கருத்தை தான் நீங்கள் முன்வைக்கிறீர்கள். கேள்வி கேட்க உங்களுக்கு உள்ள அதே உரிமை எனக்கும் இருக்கிறது, எனது சகாக்களுக்காகவும் அவர்களின் திருப்திக்காகவும் நான் கேட்கவில்லை அதுபோக உங்கள் தளத்தில் மட்டும் என்ன வாழுகிறது, சோல் சொலுஷன் எழுதுவதற்கு நீங்கள் கைதட்டுகிறீர்கள் நீங்கள் எழுதுவதற்கு மேற்படியார் விசில் அடிக்கிறார்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//மீகா 5:2 சொல்லப்பட்டிருக்கும் புறப்படுதல் என்பது தேவனின் திட்டமே!! அதை அப்படி வாசித்தோமென்றால், அநாதி காலமுதல் புறபட்டு வந்துக்கொண்டே இருக்கிறார் என்று தான் அர்த்தம் கொள்ள முடியும்!!//
 
அங்கே அப்படி  Present Continues Tense ல் எழுதப்படவில்லை. புறப்படுதல் என்ற தமிழ் வார்த்தையின் அர்த்தம் "origin " .  மேலும் ஆதியிலே வார்த்தை "இருந்தது" என்று தான் எழுதப்பட்டு இருக்கிறதே தவிர. ஆதியாகமம் 1 :1 உள்ளது போல ஆதியிலே வார்த்தை உருவாக்கப்பட்டது என்று இல்லை. மேலும் அவர் தேவனாய் (லோகோஸ்) இருந்தார் என்று இருந்தாலும் நீங்கள் 'ஒரு' போடுகிறீர்கள். தேவன் ஆதியிலே பிதாவா அல்லது வெறுமையாக இருந்து விட்டு பிதாவாக ஆனாரா?
 
//இயேசு கிறிஸ்துவிற்கு இரண்டு சுபாவம் இருந்தது எல்லாம் உங்கள் கருத்து, வசனம் இல்லாத கருத்து!!//
 
 நீங்க சொல்லுங்க கிறிஸ்துவுக்குள் எந்த ஒரே ஒரு சுபாவம் இருந்தது?
 
உருவாக்கப்பட ஒன்றுக்கு அல்லது மனிதனுக்குள் எப்படி "தேவத்துவம்" பரிபூரனமாய் இருக்க முடியும்?
 
உருவாக்கப்பட்ட ஒருவர் எப்படி சர்வ வல்லவராக இருக்கமுடியும்? 
 
அவர் வெறும் மனிதன் மட்டுமே என்றால் எப்படி தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஆக இருக்க முடியும்?
 
என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பம் தரித்தாள் என்று சொல்லுகிறான் தாவிது. அவர் பிறப்பிலே பாவமில்லாத தேவ சுபாவமும் (No man is Good except God) , பாவம் செய்ய முடிகிற (Potential to Sin)   மனித சுபாவத்தோடும் பிறந்தார்.
 
//கிறிஸ்து தான் பிதாவா? பிதா தான் கிறிஸ்துவா? ஏனென்றால் நீங்கள் தான் கிறிஸ்து பிதாவை சார்ந்திருந்தார் என்று எழுதியிருக்கிறீகள்!! அப்படி என்றால் பிதா வேறு தானே!!//
 
ஆமா! வேறுதான் அப்புறம்???
 
நான் கேட்ட கேள்விகளுக்கு மௌனம் தான் பதிலா...என்ன கேள்வி என்று கேட்டு காமடி பண்ணாதீர்கள்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: பக்கத்துவீட்டுக்காரங்க கேள்வி கேக்கறாய்ங்க‌..!
Permalink  
 


ஆனால் நமக்கு வேதம் தெளிவாகப் போதிக்கிறது, ஆதியிலிருந்தே பிதாவாகிய தேவன் ஆவியையுடையவராகவும் அதாவது செயல்படுகிறவராகவும் வார்த்தையினால் இடைபடுகிறவராகவும்- அதாவது பேசுகிறவராகவும் இருந்தார்,என்பதாக;

ஆனால் இரஸல் போதிக்கும் கடவுளோ முதலில் கல்லு மாதிரி இருந்திருப்பார்; பிறகு லேசாக அசைந்திருப்பார்,அப்புறம் ய்யியாங்ங்....... என்று குழந்தை மாதிரி கத்தத் துவங்கி அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக பேசத் துவங்கியிருப்பார்... சுத்த கேணப் பயலுங்க‌...கேபையில நெய் வடியுதுன்னா... கேக்கறவனுக்கு புத்தி எங்க போச்சுன்னு இதுக்குதான் ஊர்ப்பக்கம் சொல்லுவாய்ங்க‌... நாம் இதுபோல கஷ்டப்பட்டு எழுதும் வார்த்தைகளைக் கூட மானங்கெட்டுப் போய்த்  திருடி எடுத்து காப்பி பேஸ்ட் பண்ணி இந்த வார்த்தைகளாலேயே வைவாய்ங்க‌...பாருங்களேன்...ஏரியஸுக்கு ஏரியல் கட்டிவிட்டுட்டு இரஸலுக்கு முஸல் சூப்பு குடுப்போம்'ணேன்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

joseph wrote:

தேவன் அன்பானவர் என்ற வார்த்தை உண்மையானது, தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகையால் அவர் ஆதியிலே அன்புடன் தான் இருந்திருப்பார். ஆதியில் தனியாக இருந்த தேவன் (அஃதான் உங்க கணக்குப்படி கிறிஸ்துவை படைக்குமுன்) யாரிடம் அன்புடன் இருந்திருப்பார், தனியாக உலகத்தோற்றத்திற்கு முன் இருந்த ஒருவர் யார் மீதாவது அன்புடன் இருந்திருக்க முடியுமா?


 அற்புதமான கேள்வி, நண்பரே... இதே கேள்வியை மிக ஆரம்பத்திலேயே ஜாண் அவர்கள் எழுப்பியதாக நினைவு;அவர் இன்னும் தெளிவாக அன்பு எனும் உணர்வைப் பகிர்ந்துகொள்ளவே குறைந்தது இருவர் தேவை என்று சொல்லியிருந்தார்;இயன்றமட்டும் அதனை தேடியெடுத்து மீள்பதிவு செய்கிறேன்.

// ஆதியில் தனியாக இருந்த தேவன் //

ஐயோ பாவம் அவர் ஊமையா வேறு இருந்திருப்பாரே...



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
பக்கத்துவீட்டுக்காரங்க கேள்வி கேக்கறாய்ங்க‌..!
Permalink  
 


பக்கத்து வீட்டுக்காரவுகளுக்கு ஒரு கேள்வி

வெளி 21:6 இல் "நான் ஆல்பாவும் ஒமேகாவும் ஆதியும் அந்தமுமாய் இருக்கிறேன்" என்றவர் யார்? தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய் கொடுப்பேன்" இந்த ஒரு வாக்குத்தத்தை கொடுத்தவர் இயேசு (சமாரிய ஸ்திரீயுடன் நடந்த உரையாடலில் சொன்னது)

அடுத்து 22:1 இல் பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வந்ததை யோவானுக்கு காண்பித்தார். அதென்ன தேவனுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் ஒரே சிங்காசனம்?

அதுபோக 22:13 இல் மறுபடியும் ஆல்பாவும் ஒமேகாவும் ஆதியும் அந்தமும் என இயேசு தானே கூறுகிறார் உங்க கணக்குப்படி ஆதி வேறு அனாதி வேறு என்பீர்கள், சரி அந்தம் என்ற இறுதியை குறிப்பதால், அதையும் தாண்டி ஏதாவது இருக்கிறதா? ஆகக்கூடி ஆதியில் இருந்த தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என ஆதியாகமத்தில் ஆரம்பிக்கும் வேதம் கடைசியில் சீக்கிரமாய் வருகிறேன் என்ற இயேசுவின் க்ளெய்முடன் முடிகிறது யோவானும் கடைசியாக ஆமென் கர்த்தராகிய இயேசுவே வாரும் என முடிக்கிறார். இதுக்கும் ஏதாவது மூல பாஷை விளக்கம் இருக்கா? 

தேவன் அன்பானவர் என்ற வார்த்தை உண்மையானது, தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகையால் அவர் ஆதியிலே அன்புடன் தான் இருந்திருப்பார். ஆதியில் தனியாக இருந்த தேவன் (அஃதான் உங்க கணக்குப்படி கிறிஸ்துவை படைக்குமுன்) யாரிடம் அன்புடன் இருந்திருப்பார், தனியாக உலகத்தோற்றத்திற்கு முன் இருந்த ஒருவர் யார் மீதாவது அன்புடன் இருந்திருக்க முடியுமா?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

அருமையான பதில்கள் சகோ சில்சாம்.

இதற்கும் ஏதாவது நொண்டி சாக்கு சொல்வார்கள்,வேண்டுமானால் பாருங்கள் உங்கள் பதில் தவறாக இருந்தால் ஏன் தவறு என்று சொல்லவும் மாட்டார்கள். சரியானால் கூட அதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்;இப்படியானால் தவறு சொன்று நீங்களே சொல்லிவி்ட்டீர்களே என்று சத்தம் எழுப்புவார்கள். பொறுத்திருந்து பாருங்கள்.

கேள்விக்கு பதில் அளித்தால் அது சரியா பிழை என்று பதில கூற இந்த ஆத்மகோமாளிக்கு துப்பில்லை; தனககுத்தானே soulsolution என்று அதாவது ஆத்ம (மீகத்) தீர்வு என கள்ளத்தீர்க்கதரிசி மாதிரி பெயர் வைக்கத் தெரியும். ஆத்தும தீர்வினை தருபவர் தேவன் மடடுமே. இந்த கள்ளத் தீர்க்கதரிசிக்கு இது எங்கே புரியப்போகிறது. இவர் தான் தன்னை தேவனுக்கு சமன் என்கிறாரே..!?

மற்றவர்களை நியாயம் தீர்க்குமுன் இவர் தன்னைத் திருத்திக் கொள்ளட்டும். இவர் எல்லாம் போதிக்க வந்துட்டார்...



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

  • அருமையான பதில்கள் சகோ. சில்சாம். உங்களுடைய பதில்களுக்கு ஆதாரமான சில வசனங்கள்

"இயேசுவை அநாதியானவர் என்றே வேதம் சொல்லுகிறது."

எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. (மீகா 5:2)

//நேரடியான கேள்வி: வேதம் ஒரே தேவன் என்று சொல்கிறதா அல்லது மூன்று தேவர்கள் என்று சொல்கிறதா?//

இதற்கு உங்கள் பதில் என்ன?

இயேசு கிறிஸ்துவுக்கு இரண்டு சுபாவம் இருந்தது . அவருடைய மனுஷ சுபாவத்திலே அவர் பிதாவை சார்ந்து, அவர் சித்தம் கேட்டு அதன் படி நடந்தார். அவருக்கு களைப்பு, பசி, சிலுவை பாடுகளை குறித்த வேதனை எல்லாம் இருந்தது.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

  •     நேரடியான கேள்வி: வேதம் ஒரே தேவன் என்று சொல்கிறதா அல்லது மூன்று தேவர்கள் என்று சொல்கிறதா?

    ஒரே தேவன் என்றே சொல்லுகிறது.

  •     வேதம் இயேசுவை 'கிறிஸ்து' என்று சொல்கிறதா? அல்லது இவர்தான் பிதாவாகிய தேவன் என்று சொல்கிறதா?

    கிறிஸ்து என்றே சொல்லுகிறது.

  •     வேதம் பிதா பெரியவர் என்று சொல்கிறதா அல்லது இயேசுகிறிஸ்து பெரியவர் என்று சொல்கிறதா?

    இயேசுகிறிஸ்து பெரியவர் என்றே வேதம் சொல்லுகிறது. (பிதா பெரியவர்- பெரியவரை பெரியவர் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை.)

  •     வேதம் இயேசுவை குமாரன் என்று சொல்கிறதா அல்லது பிதாவாகிய தேவன் என்று சொல்கிறதா?

    இயேசுவை குமாரன் என்றே சொல்லுகிறது.

  •     வேதம் இயேசுவை 'அநாதி' தேவன் என்று சொல்கிறதா அல்லது ஆதி (ஒரு ஆரம்பம்) யுள்ளவர் என்று சொல்கிறதா?

    இயேசுவை அநாதியானவர் என்றே வேதம் சொல்லுகிறது. ( ஆதிக்கும் முன்பாக இருப்பவர் அநாதியானவர்தானா..? ஆதி என்பது ஆரம்பத்தைக் குறிக்கும் வார்த்தையல்ல. ஆரம்பம் எது என்பதை அறியாத இடத்தினைக் குறிக்கும் வார்த்தையாகும். இப்படி அடைப்புக்குறிக்குள் நினைத்ததையெல்லாம் எழுதவும் வேதம் அனுமதிக்கவில்லை.)
  •     பிதா கிறிஸ்துவுக்கு கீழ்ப்பட்டிருப்பாரா அல்லது கிறிஸ்து பிதாவுக்குக் கீழ்ப்பட்டிருப்பாரா?

    அது உங்கள் மாம்சம் உங்களுக்குக் கீழ்பட்டிருக்குமா அல்லது நீங்கள் உங்கள் மாம்சத்துக்குக் கீழ்ப்பட்டிருப்பீர்களா என்பதைப் பொருத்த விஷயம்.

  •     நான், நானேதான் நீங்கள் வணங்கும் பிதாவாகிய தேவன் என்று ஒருமுறையாகிலும் கிறிஸ்து 'பகிரங்கமாக' சொல்லியிருக்கிறாரா? இல்லை என்றால் ஏன்?

    சொல்லியிருக்கிறார்; ஆனால் அவர்களுக்குப் புரியவில்லை என்பதுடன் மூர்க்கத்துடன் அவரை அடிக்க வந்தார்கள் என்றே வேதம் சொல்லுகிற்து.

  •     கிறிஸ்து சுயசித்தம் செய்ய வந்தாரா அல்லது பிதாவின் சித்தம் செய்யவந்தாரா?
    பிதாவின் சித்தம் செய்யவே வந்தார்;கிறித்துவின் சுயசித்தம் என்பதே பிதாவின் சித்தம் தான்.

  • என்னையன்றி பிதாவால் ஒன்றும் கூடாது என்று சொன்னாரா அல்லது பிதாவன்றி என்னால் ஒன்றும் செய்யக்கூடாது என்று சொன்னாரா?

    சீடர்களைப் பார்த்து என்னையன்றி உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது என்று இயேசு சொன்னாரே தவிர இதுபோன்ற கருத்தில் அவர் எதையும் சொல்லவில்லை; கேள்வியே தவறு. பாடத்தில் இல்லாத கேள்விகளுக்கு க்ரேஸ் மார்க் போடப்படுமா..?

  •     தாம் ஒருவரே சாவாமையுள்ளவர் என்று பிதாவைப் பற்றிக்கூறப்பட்டுள்ளது; கிறிஸ்து செத்தாரா இல்லையா?
    கிறிஸ்து மரணத்தை ருசிபார்த்தார் என்று வேதம் சொல்லுகிறது; ருசிபார்த்தல் என்ற வார்த்தையிலேயே அனைத்தும் அடங்கியுள்ளது.

  • கிறிஸ்துவை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பியது யார்?
    பிதா எழுப்பினார், ஆவியானவர் எழுப்பினார், இயேசுவானவரும் மீண்டும் எழத்தக்க நிலையிலேயே தம்முடைய ஆவியை ஒப்புக்கொடுத்தார்; யாரும் அவருடைய உயிரைப் பறிக்கவில்லை. ஏனெனில் அவரைக் குறித்து ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள் என்று பேதுரு சொல்லுகிறான்.

  •     இயேசுகிறிஸ்துவின் தேவனானவர் யார்?
    பிரபஞ்சத்தின் தேவனல்ல‌.

  •     இயேசுகிறிஸ்துவை அனுப்பியவர் யார்?
    அவருடைய பிதா.

  •     இயேசுகிறிஸ்து தானாக வந்தாரா அல்லது யாருக்காவது 'கீழ்ப்படியும்' நோக்கத்தோடு அனுப்பட்பட்டாரா?

    தானாக சுயமாக வந்தார். யாரும் கட்டாயப்படுத்தி அவரை அனுப்பவுமில்லை;கீழ்ப்படியும்படி மிரட்டவும் இல்லை.மனிதன் வாழும் மாதிரியை சர்வவல்லவரே மனு உருவெடுத்து வந்து செய்துகாட்டினார், நாடகம் அல்ல‌. [அவர் முழுமையான மனுஷனாக இருந்தாலே அவரை பலியிட முடியும்; எனவே மனிதன் ஆனார் என்றும் வேதம் சொல்லுகிறது. தன்னைத் தொழத்தக்க தெய்வமாக இயேசுவானவர் தன் மீட்பின் திட்டம் நிறைவேறும் முன்னரே வெளிப்படுத்தியிருந்தால் ஆதாமின் பாவத்துக்கான தீர்வு உண்டாகாமலே போயிருக்கும் அல்லவா..?]

    சிந்திப்பீர்...செயல்படுவீர்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard