ரசலிடம் கேட்க வேண்டிய கேள்வி. அவர்தான் 1914 கிறிஸ்து வந்துட்டார் என காமிடி பண்ணியவர். இன்றும் யெகோவா சாட்சிக்கூட்டம் இதை நம்பிக்கிட்டு இருக்கிறது எவ்வளவு பரிதாபம்.
இந்த வசனத்தை ஏனோ வசந்தகுமார் தனக்கு தேவையான இடத்தில் உபயோகிப்பார் போல், எப்படி என்றால் பிதாவும் கிறிஸ்துவும் ஒன்று என்று நிரூபிக்க உபயோகிப்பார்!! இப்பொழுது இந்த வசனம் அவர் பார்வையில் படவில்லை போல்!!//
இந்த வசனத்திற்கென்றே தனிப்பதிவு போட்டிருந்தேன். அப்போது வளாதிருந்துவிட்டு இப்போது பதில் தருகிறாராம்.
இதற்குரிய பதிவில் இவ்வசனத்திற்குரிய விளக்கம் உள்ளது. அதனை தேடிப்படித்து விட்டு விமர்சனம் எழுத வாருங்கள்
பதிவு இயேசு கிறிஸ்து மிக்கவேல் தேவதூதரா? இங்கேயே தேடிப்பாருங்கள். கிடைக்கும்.
சும்மா எல்லாம் தெரிந்தவர் போல் எழுத வேண்டாம். புரிந்ததா?.....
நமக்கு அகஸ்டின் ஜெபக்குமார் என்றோ, வின்செண்ட் செல்வகுமார் என்றோ சாது என்றோ தினகரன் என்றோ ஆலன் பால்................... என்றோ வித்தியாசம் இல்லை!! கள்ள தீர்க்கதரிசனம் சொல்லுபவர்கள் கள்ள தீர்க்கதரிசிகளே!! சில தளங்களில் இந்த கள்ள தீர்க்கதரிசிகளுக்குள்ளும் தரம் பிரித்து எழுதுவது உண்டு!!\\
அப்படியானால் உங்களுக்கு யோவானின் ஆவியும் எலியாவின் ஆவியும் உண்டென சொல்லுவது எந்த ஆவியாம். திரித்துவ ஆவி எப்படி உங்களுக்குள் வாசமாயிருக்க முடியும். நீங்கள் என்ன தேவனா?
உங்கள் நண்பர் கி.பி 30000000000 நியாயத்தீர்ப்பு பரலோக தரிசனங்கள் எழுதியது எந்த ஆவி. இது கள்ளத் தீரக்கத்தரிசனங்கள் , போதனைகள் இல்லையா?
தேவதூதனுக்கு கால் இல்லை பாதம் உண்டு என்ற கூறுவது எந்த ஆவி
சகோ. அன்பு சொல்லுகிறார் தேவன் அனைத்தையும் அறிந்தும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முற்படுவதில்லை என இது எந்த ஆவி. தேவன் அறியாத விடயங்கள் உண்டு என கூறுவது கள்ளப்போதகம் இல்லையா தேவனுக்கு மேலாக தன்னை உயர்த்துவது எந்த ஆவி?
-- Edited by colvin on Monday 6th of June 2011 09:27:44 AM
நண்பர் கோவைபெரியன் காமடித்தனமான பதில்களுக்குப் பெயர் பெற்றவர் இதோ அவரின் இக்கட்டுரை தொடர்பான சில பின்னூங்கள். திரித்துவம் தொடர்பாக கிறிஸ்தவர்கள் என்ன சொல்லுகிறார் என்பதை கூற அறியாதவராக உளறியுள்ளார்.
//மாற்கு 13:32. அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.
இருவரும் ஒருவராம், பிதாவே கிறிஸ்துவாக வந்தாராம் என்கிற திரித்துவர்களுக்கு இந்த வசனம் வாசித்ததாக ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ!!
ஏகப்பட்ட நூலகளை எழுதிய வசந்தகுமார் எழுதுகிறார்; (உபயம் கொல்வினின் பதிவு): (இல்லாவிட்டால் இதை வேறு ஒரு சர்ச்சையாக்கிவிடுவார்கள்)://
இருவரும் ஒருவர் என்று பதிவு சொல்கிறதா நண்பரே. இயேசுவே தன் வாயால் அவரை என் பிதா என்று கூறியுள்ளார். இப்படியிருக்க எப்படி இயேசுதான் பிதா என்று நாம் சொல்லுகிறோம் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் சுத்த காமடியனாய் இருக்கிறீர்களே!
இயேசுவே பிதாவாக வந்தார் என்று சொல்லும் கூட்டம் இயேசுமட்டும் இயக்கத்தார். இவர்களும் துர்உபதேசிகளே!
ஏற்கனவே சகோதரர் ஜோன் கேட்ட கேள்விகளுக்கு பதில் எழுவீர்களானால் மீண்டும் இப்படி அபத்தமாக உளறமாட்டீர்கள்
கட்டுரையை முழுமையாக வாசிக்காமல் அதன் ஒரு பகுதியை எடுத்து வாசி்த்து விட்டு விமர்சனம் செய்ய வேண்டாம்
மனிதனாக அவதாரம் எடுக்கும்போது மனித இயல்புகளை சேர்த்துக் கொள்வது மிக அவசியம்.
பசியோடிருந்தார், தாகமாயிருந்தார். கல்வி கற்றார் இப்படி வரும் வசனங்களெல்லாம் மானிட வரையறைக்குள் உட்படும்போது தேவனுக்கு சாத்தியமாயிருக்க கூடியதே. அறியாமையும் மானிட சுவாவங்களில் ஒன்றுதான்
அதற்காக பாவம் செய்தாரா என கேட்கவேண்டாம்.? ஏனென்றால அவர் பரிசுத்தர். தேவனாகவும் இருந்தார் அதேவேளை மனிதராகவும் இருந்தார்
நூல் : யெகோவாவின் சாட்சிகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்
நூலாசிரியர்: சகோ. வசந்தகுமார்
வெளியீடு : இலங்கை வேதாகமக் கல்லூரி
(இயேசுவின் தெய்வீக் தன்மைகளை மறுப்பதற்கு வேதப்புரட்டர்களால் அதிகமாக பாவிக்கப்படும் வசனங்களில் இதுவும் ஒன்றாகும். வியாக்கியனப்படுத்துவதற்கு அதிக சிரமான வசனங்களில் இதுவும் ஒன்றாகும். .இக்கட்டுரையில் ஆசிரியர் இது குறித்து ஆராய்ந்துள்ளார்)
இயேசுக்கிறிஸ்து பிதாவைவிடத் தாழ்வானவர் என்பதற்கு யெகோவா சாட்சிகள் சுட்டிக் காட்டும் இன்னொரு வசனம் அவர் தம் மறுவருகையின் காலம் எப்போது என்று தமக்குத் தெரியாது என்று கூறியதாகும். “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.“ (மாற். 13:32) என்று இயேசுக்கிறிஸ்து கூறியமையால் , தம் வருகையின் காலத்தை அறியாதிருந்த இயேசுகிறிஸ்து சகலமும் அறிந்தவரல்ல என்றும், இதனால் அவர் தேவனாய் இருக்க முடியாது என்றும் யொகோவா சாட்சிகள் கூறுகின்றனர் (24) உண்மையில், இயேசுக்கிறிஸ்துவின் மாம்சமாகுதலை (யோவான் 1:14) சரியான விதத்தில் அறிந்து கொள்ளாத வரையில், அவரது இக்கூற்று யெகோவா சாட்சிகளின் தர்க்கத்தை உண்மை என்று நிரூபிப்பது போலவே தென்படும்.(25) நாம் ஏற்கனவே பார்த்தபடி இயேசுக்கிறிஸ்து மாமிசமாகுதல் தெய்வீகத் தன்மைகளைத் துறப்பதையல்ல, மாறாக மானிடத் தன்மைகளை சேர்ப்பதாகவே இருந்தது. (26) ஆரம்பத்தில் தெய்வத்தன்மையுடையவராயிருந்த இயேசுக்கிறிஸ்து மனிதராகிய போது மானிடத் தன்மைகளையும் சேர்த்துக் கொண்டார். எனவே அதன் பின்னர் இரு தன்மைகளையும் கொண்டவராகவே இருந்தார். எனினும், தேவத் தன்மைகளுடன் இருந்தவர் மானிடத் தன்மைகளை சேர்த்துக் கொண்டபோது அவர் தேவத் தன்மைகளை மானிடத் தன்மையின் வரையறைக்குள் அடக்கி வைத்திருந்தார்.இதனால் தேவத்தன்மையான சகலவற்றையும் அறியும் அறிவை மானித் தன்மையான சகலவற்றையும் அறியாதிருக்கும் தன்மைக்குள் அடக்கி வைத்திருந்தார். சகலவற்றையும் அறியும் ஆற்றல் மிக்க தேவத்தன்மை உடையவராய் அவர் இருந்தும் சில விடயங்களை அறியாதிருந்தமைக்கு (27) குறிப்பாக தனது மறுவருகையின் காலத்தை அறியாதிருந்தமைக்கு இதுவே காரணமாகும்.அறியாமை மானித் தன்மையின் முக்கியமான ஒரு அம்சமாய் இருப்பதனால், உண்மையான மானிடத் தன்மையைத் தம்மோடு சேர்த்துக் கொண்ட இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் சில விடயங்களை அறியாதவராகவே இருந்தார்.
இயேசுக்கிறிஸ்து மானிடத் தன்மையின் வரையறைக்குள் தம்மை உட்படுத்தி, மனிதர்களைப் போலவே சில விடயங்களை அறியாதிருந்தபோதும் சில சந்தர்ப்பங்களில், மனிதர்களால் எவ்விதத்திலும் அறிந்து கொள்ள முடியாத விடயங்களை அறிந்திருந்தமைப் பற்றியும் சுவிஷேசப் புத்தகங்களில் நாம் வாசிக்கலாம். அவர் மனிதர்களுடைய உள்ளங்களில் இருப்பதையும் அவர்களுடைய கடந்தகால வாழ்க்கை விபரங்களையும் எதிர்கால சம்பவங்களையும் அறிந்திருந்தார். (29) இதற்குக் காரணம் இயேசுக்கிறிஸ்து தேவனுடைய திட்டத்தின்படியான பணியைச் செய்வதற்காக இவ்வுலகுக்கு வந்தமையால் , அப்பணியைச் செய்வதற்கு வேண்டிய அளவு தெய்வீக அறிவு அவருக்குகு இருந்தது. ஆனால், அவர் தாம் செய்ய வந்த பணியோடு தொடர்பில்லாத விடயங்களைப் பொறுத்தவரை, மானிடத் தன்மையின் வரையறை காரணமாக அவற்றை அறியாதவராகவே இருந்தார். (30)
இயேசுக்கிறிஸ்து மனிதராக வாழ்ந்த காலத்தில் மானிட வரையறைக்கு உட்பட்டிருந்தமையால் “தமது தெய்வீகத் தன்மைகளை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் மட்டுப்படுத்தி வைத்திருந்தார்.(31) எனினும் இவ்வரையறை தெய்வீகத் தனமைகளை அவரிலிருந்து அகற்றிவிடவில்லை. தெய்வீகத் தன்மையின் செயற்பாடுகள் மானிடத் தன்மையால் மட்டுப்படுத்தப் பட்டிருந்த்து. (32) யெகோவாவின் சாட்சிகள் இயேசுக் கிறிஸ்துவின் “மாமிசமாகுதலை“ அதாவது, தெய்வீகத் தன்மைகளோடு அவர் மானிடத் தன்மைகளையும் கருத்திற் கொள்ளாததினால் அவரது மானித் தன்மை தெய்வீகத் தன்மையில் ஏற்படுத்திய வரையறைகளை அறியாதவர்களாக, இத்தகைய வரையறைக்கு உட்பட்ட காலத்தில் அவர் கூறிய சில கூற்றுக்களை அடிப்படையாகக் வைத்து, அவரது தேவத்துவத்தை மறுதலித்து வருகின்றனர். இயேசுக்கிறிஸ்து மானிட வரையறைக்கு உட்பட்டிருந்த காலத்திலும் தேவத் தன்மை உடையவராகவே இருந்தார் என்பதை கொலோசெயர் 2:9 அறியத் தருகிறது. (33)
Footnote & Reference
(24) Anonymous, Should you Believe in the Trinity p. 19
(25) இயேசுக்கிறிஸ்துவின் கூற்றுக்களிலேயே மிக கடினமானதாகும்.
(26) சுவிஷேசப் பத்தகங்களில் இயேசுக்கிறிஸ்து பல சந்தர்ப்பங்களில் மற்றவர்களிடம் கேள்வி கேட்டு விடயங்களைத் தெரிந்து கொண்டுள்ளதை நாம் அவதானிக்கலாம். இது ஒரு ஆசிரியர் தன் மாணவர்களைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக்க் கேள்வி கேட்பதைப் போன்ற செயல் அல்ல. உண்மையிலேயே அவர் அறியாதிருந்த விடயங்களைத் தெரிநது கொள்வதற்காகவே இது பற்றி மற்றவர்களிடம் கேள்விகள் கேட்டுள்ளார். (L. Morris The Lord form the Heaven p 44,46)
(31). R.C. Lenski, The Interpretation of St. Mark’s Gospel, pp590-591
(32) M.J. Erickson, Christian Theology p 735
(33) தேவனுடைய திரித்துவத்தப் போலவே இயேசுக்கிறிஸ்துவினுடைய இரு தன்மைகளையும் நம்முடைய குறுகிய அறிவினால் முழுமையாக்க்க் கிரகிக்க முடியாது. இயேசுக்கிறிஸ்து முழுமையான தேவனாகவும், முழுமையபான மனிதராகவும் இருந்தார் என்றே வேதம் கூறுகிறது. இவ்விரு தன்மைகளும் இயேசுக்கிறிஸ்துவில் ஒரேசமயத்தில் எவ்வாறு முழுமையாக இருந்தன என்பது நமது அறிவிற்கு எட்டாத விடயமாயினும் இதுவே வேதம் வெளிப்படுத்தும் சத்தியமாய் உள்ளது.