சிருஷ்டிப்பா, பரிணாம வளர்ச்சியா? (Creation or Evolution?)
அனைத்தையும் ஆண்டவர்தான் படைத்தார்.பரிணாம வளர்ச்சிக் கொள்கை தவறு. அவங்க சொல்வது போல் ஓரினம், இன்னொன்றாக மாற்றம் அடைந்திருக்குமானால், அதை இப்ப செய்து காட்ட வேண்டியதுதானே. Genetic Engineering (மரபணு ஆராய்ச்சி) நன்றாக வளர்ச்சியடைந்திருக்கிறது இப்போழுது. கண்ணற்ற உயிரினத்தை எடுத்து, (genes) ஜீன்ஸ் ஐ மாற்றி, கண்ணை உருவாக்கலாமே. ஒரு நாயை பூனையாய் மாற்றிக் காட்டலாமே. ஏன் செய்ய முடியவில்லை?
ஆதி 1 இல் சொல்லப்பட்டிருக்கும் நாள் என்பது 24 மணி நேர நாளா? அல்லது ஆயிரக்கணக்கான வருடங்கள் அடங்கிய நாளா? (24 hour day or age day?)
ஆண்டவரால் அனைத்தையும் 6 நாளில் படைத்திருக்க முடியும்.அப்படியும் நடந்திருக்கலாம். அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளும் ஆகியிருக்கலாம்
பிரபஞ்சத்தின் வயது என்ன? பூமியின் வயது என்ன? (What is the age of the earth and universe?)
சிலர் எல்லாம் 10,000 வருடத்திற்குள்ளாக படைத்து முடிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் அறிவியல் சொல்லும் வயது வேறு. எது சரி? எப்படி படைப்பும், அறிவியலின் கணிப்பும் இணைய முடியும்?
நான் evolution (பரிணாம வளர்ச்சி) பற்றி தெரிந்து கொள்ள விரும்பிய போது, Dr E K Victor Pearce எழுதிய Evidence For Truth - Science என்ற புத்தகம் என் கைக்குக் கிடைத்தது. அவர் எழுதியிருப்பது எனக்கு ஏற்றுக் கொள்ளும்படி இருந்தது. அப்புத்தகத்தில் நான் படித்த காரியங்களை இங்கு எழுதுகிறேன். ஒகே?