இக்கட்டான காலகட்டத்தில் துரோகம் எம்மை வலைத்தபோது, எமக்கு கிடைத்த ஓர் புத்தகத்தை படித்த நினைவுகள்...
சாத்தான்.... கிறிஸ்துவாகிய ஆண்பிள்ளை பிறக்காதபடி தடுக்க எடுத்த முயற்சிகளையும், பிறந்தபின்னர் கிறிஸ்து சிலுவையையடைந்து மனிதனுடைய மீட்பை விலைகொடுத்து வாங்கி கொள்ளாதபடி தடுத்து, அழித்துபோடவும், சாத்தான் மேற்கொண்டவைகள் அனைத்தும் வேதாகம பகுதிகளிலிருந்து வாசிக்கையில் எத்துணை வியக்கத்தக்கதாயுள்ளன.....!
ஆதாமும் ஏவாளும் மீறுதலுக்கு உட்பட்டதும்,அவர்களோடே தானும் தேவ சாபத்துக்கு உள்ளானதையும், 'ஸ்திரியினுடைய வித்து' என்பவர் தனது தலையை நசுக்க ஏற்பட்டுள்ளதையும் சாத்தான் அறிந்து கொள்ள நேரிட்டது. (ஆதி 3:4-15).
இதனால் சாத்தான் வெகுளியும், விரோதமும் கொண்டவனாக இந்த வாக்குதத்தத்தின் 'வித்து' தோன்ற கூடும் என எண்ணி, ஆபேலை கொன்று போடும் திட்டத்தில் ஈடுபட்டு, தனது சொந்த சகோதரன் காயீனை கொண்டே அதை நிறைவேற்றினான்.பின்பு தேவ குமாரர்களாகிய தூதர்கள், சாத்தானுடைய தூண்டுதலின் படியே மனித குமாரத்திகளை (காயீன் போன்றோரை) விவாகம் பண்ணும்படி செய்து. அத்தகைய பாவம் பூமியில் பெருகவே அச்சந்ததியின் பிற்பிறப்புகளான மனித வர்க்கத்தையே பூமியிலிருந்து நிக்கிரகம் ப்ண்ணிவிடுமளவுக்கு திட்டமிட, இது கடவுளை வேதனைப்படுத்திற்று..!
இத்திட்டத்தை சாத்தான் முழுமையாக செய்யும்போது, சாத்தானுக்கு அது வெற்றியாகவும், கடவுளுக்கு தோல்வியாகவும் அமையுமானதால், கடவுள் அச்சமயம் நோவா என்பவரை மனிதருள் பிரதிநிதியாக, பிரித்தெடுத்து அவனது குடும்பத்தை தப்புவித்து கொண்டார்.ஆனாலும் வெகு நாட்களுக்குள் இந்த நோவா திராட்சை தோட்டத்திலிருந்து கிடைத்த பழரசத்தால் மதிமயங்கி கிடக்கவே, மீண்டும் காமின் மகன் கானான் சபிக்கப்பட்டு போகும்படி நேரிட்டது. (ஆதி 9:18-27).
பின்பு மக்கள் பலுகிப்பெருகவே, சாத்தான் அவர்களுடைய இருதயத்தை பெருமையினாலும், சுயநல பெருக்குகளினாலும் நிரப்பி விடவே, அவர்கள் எழுந்து.ஒருங்கிணைந்து பாபேல் கோபுரத்தை கட்டினார்கள். ஆனால் கடவுள் அங்கே, அவர்களோடு இடைபடவே, அதன் விளைவாக பாசைகள் தாறுமாறாக்கப்பட்டு ஒற்றுமை பிரிந்து, சிதைவுண்டனர் (ஆதி 11:1-9).
பின்பு கடவுள் ஆபிரகாமை அழைக்கவே,அவனுடைய வித்துக்கு நேராக போராட்டம் திரும்பியது.ஆபிரகாமிற்கு 75 வயது ஆகியும் பிள்ளையில்லை. சாராள் 65 வயதான மலடியாயிருந்தாள்.(ஆதி 16:1). சாத்தான் இச்சூழ்நிலையை பார்த்து எள்ளி நகையாடினான். சாராளின் கர்ப்பம் அடைப்பட்டு இருந்ததற்கு சாத்தானின் கை ஓரளவுக்கு உத்தரவாதம் உடையதேயானாலும், தேவையானால் ஓர் அற்புதத்தை எச்சூழ்நிலையிலும் நடப்பிக்ககூடும் என காண்பிக்க சாராள் 90 வயது எட்டும் வரை கடவுள் பொறுத்திருந்து, பின்பு அவள் கர்ப்பம் தரித்து வாக்குதத்தத்தின் பிள்ளையை பெறும்படிக்கு செய்தார் (ஆதி 17:17 / 18:9-15 / 21:1-3).
ஈசாக்கு 12 வயது சிறுவனானதும், ஆபிரகாம் அவனை கொண்டுப்போய் மோரியா மலையின் மேல் பலியிடும்படி பிறப்பிக்கப்பட்ட கட்டளைகூட சாத்தானுடைய தூண்டுதலின் படியான சோதனை எனலாம்..! இது யோபுவுக்கு ஏற்பட்ட சோதனைக்கொத்தது.(யோபு 1:6-12 / 2:3-6). ஈசாக்கை கொல்லும்படி ஏற்பட்ட சதியும் தோற்றுவிட்டது. கடவுள் ஆபிரகாமின் உத்தமத்தையும், உறுதிபாட்டையும் அறிந்து கொண்டவுடன் ஈசாக்கை தப்ப வைத்துக்கொண்டார். ஈசாக்கு மணம் முடித்த பின்பும் சாத்தான் அவனுக்கு சந்ததி கிடைக்கவிடாமல் தடுக்க ரெபேக்காளை மலடியாக்கினான். ஆயினும் ஈசாக்கு கடவுளிடம் ஊக்கமாய் செபிக்க (ஆதி 25:20-21) அவனுக்கு இரட்டை பிள்ளைகளை அருளிச்செய்தார். பிள்ளைகள் வளர்ந்ததும் அவர்களுக்குள்ளே கசப்பையும் குரோதத்தையும் உருவாக்கி, காயீன் - ஆபேல் கதையின் முடிவுக்கொத்த இன்னோரு கொலை பாதகத்துக்கு வழிவகுத்து அதனால் தேவ சந்ததிக்கு முற்பிதாவாக யாக்கோபை வரவிடாமல் அழித்துவிடப் பார்த்தான்.
மோசே பிறக்கும் காலம் வந்த போது எபிரேய குலத்தின் ஆண்பிறப்புகளை அடியோடு அழித்துவிடும் நோக்கத்துடன் எபிரேய ஆண்பிள்ளைகளை பிறக்கும் போதே கொல்ல, பார்வோன் உத்தரவிடும்படி அவனைத் தூண்டுதல் செய்தவனும் சாத்தானே...!ஆனால் ஓர் குழந்தையின் அழுகுரல் அவனது சதி திட்டத்தை வீணடித்து விட்டது..!(யாத் 2:5-10).
இவ்விதமாய் சரித்திரம் தொடர யோசபாத் ராசாவின் காலம் முடிந்து.அவன் மகன் யோராம் இராச்சியபாரம் ஏற்றதும், அவன் தன்னுடைய சகோதரர் யாவரையும் பட்டயத்தால் கொல்லும்படியானது.(2 நாளா 21:4). அதின் விளைவாக அரச குடும்பமான சந்ததியில் மீந்திருக்கின்ற ஒரே நபருக்குள், அச்சந்ததி சார்ந்துவிடும் படியான நெருங்கிய நிலை ஏற்பட்டது.ஆனாலும் யோராமுக்கு பிள்ளைகள் இல்லாமலில்லை: அவர்கள் எல்லாரையும் கூட அரபியர்கள் அன்று அழிக்க முற்பட்ட போது, இளையவனான அகசியா தப்பினான் (2நாளா 22:10-12).ஆனால் அகசியாவுக்கு பிள்ளைகள் இருந்தார்கள். இவ்வேளையில் 'அத்தாலியா' அன்னும் அகசியாவின் தாயார் அகசியா கொல்லப்பட்டபின் சாத்தானால் ஏவப்பட்டு, அகசியாவின் பிள்ளைகளைக் கொல்ல முற்பட்டாள்.ஆயினும் எல்லா பிள்ளைகளையுவே அழிக்க விடாமல் கடவுள் தலையிட்டு, ஓரே ஒரு குழந்தை மட்டும் அதனுடைய தகப்பன் சகோதரியினால் காக்கப்பட்டு, ஆலயத்து ஓர் அறையில் ஒளித்து வைக்கப்படும்படிச் செய்தார்:(2நாளா 22:10-12). 6வருடங்களாக 'ஓர் இராச வம்ச வித்து' என்கிற தகுதிக்குரியவனாக அச்சிறு பிள்ளையின் மேலேயே தேவ சனம் சார்ந்திருந்தது. மேலும் சிறைபிடிப்பு காலத்தில் ஆமான் கையினாலே எபிரேய வம்சம் முழுவதுமே அழிக்கபட சாத்தான் சதி செய்தபோதும்,அத்திட்டத்தை ஆகாஸ்வேரு இராசாவின் இரவு நித்திரை ஒன்றை தடைபடுத்திய ஒரே ஒரு சிறிய காரியம் அதமாக்கிற்று. (எஸ்த் 3:8-15 / 6:1-11) இந்த சரித்திரம் நீண்டு கொண்டே போகிறது.
கடைசியாக வாக்குப்பண்ணப்பட்ட 'வித்து' பிறந்தது. பிறப்பை தடுக்க இயலாத சாத்தான் அவர் சிலுவையை அடைவதற்குள்ளாவது அழித்துவிட தீர்மானித்தான். அதற்கென்று ஏரோதை தூண்டி, பெத்லகேமில் 2 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண்பிள்ளைகளையும் பட்டயத்தால் கொல்ல உத்தரவு பிறப்பித்தான்: ஆயினும் தேவ எச்சரிப்பு பெற்று பிள்ளையாகிய கிறிஸ்து எகிப்துக்கு எடுத்து செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டது.
கிறிஸ்து தமது ஊழியத்தை தொடங்கும்போது சாத்தான் அவரை வனாந்திரத்தில் வைத்து சோதித்து, ஆலய உப்பரிக்கை மேலிருந்து கீழே குதிக்க ஓர் ஆலோசனை கொடுத்தான். இதிலும் தோல்விகண்ட சாத்தான் கிறிஸ்துவை அவரது சொந்த சனங்களாலே ஓர் செங்குத்தான பாறை மேலேயிருந்து கீழே விழச் செய்ய தூண்டினான்.(லூக் 4:29). கடலில் இருமுறை ஏற்பட்ட புயல்களுமே சாத்தானால் ஏவப்பட்டதும், கிறிஸ்துவை அழிக்க உண்டான முயற்சிகளாயும் இருந்தன. ஓர் உயிரற்ற காரியத்தை நாம் அதட்ட முடியாது: ஓர் ஆளையே அதட்ட முடியும்: கிறிஸ்து காற்றையும் கடலையும் அதட்டியபோது, அவர் அந்த தொந்தரவுகளை உருவாக்கிய ஆளான சாத்தானையே அதட்டினார் எனப்பொருள் (மத் 8:24-27).
பின்பு சாத்தான் சதுசேயர்கள், பரிசேயர்கள் மூலமாக கிறிஸ்துவுக்கு நேராக தனது போராட்டத்தை தொடர்ந்து கடைசியில் யூதாஸ் காரியோத்து மூலமாக கிறிஸ்துவை காட்டிக்கொடுக்க செய்தான்.பின்பு கெத்செமனே தோட்டத்தில் கிறிஸ்துவை அவருடைய பாடுகளுக்கு முன்பாகவே சரீரத்தில் ஏற்பட்ட களைப்பின் மிகுதியினால் இரத்தவேர்வை சிந்தவைத்து கொல்ல முயற்சித்தான்.
கடைசியாக பிலாத்து என்பவனால் கிறிஸ்து சிலுவையில் அறையப்படும்படிச் செய்தபோது அதன் மூலம் இறுதியில் தான் வெற்றி பெற்று விட்டதாய் எண்னிவிட்டான். அதனை உறுதிபடுத்தும் முகனாக கிறிஸ்துவின் கல்லறை முத்திரையிடப்பட்டு பாதுகாக்கப்படும்படியான ஏற்பாடுகளை மிகவும் கவனமாய் நிறைவேற்றி முடித்தான்: ஆனாலும் 3-ம் நாளில் கிறிஸ்து மரித்தோரைவிட்டு உயிர்தெழுந்ததுமே , ஏமாற்றமடைந்த சாத்தானுடைய கோபத்திற்கும், ஆத்திரத்திற்கும் அளவேயில்லை.
கடைசி முயற்சியாக சாத்தானும் அவனது தூதர்களும் போட்டிபோட்டு கிறிஸ்துவின் பரத்துக்கு ஏறுதலை தடுத்துவிட எதிரிட்டார்கள் என்பதும் ஏற்க்கதக்கதான உண்மையே..! இதற்கு பிற்பாடு தோன்றிய சபையின் சரித்திரமே சாத்தானுக்கும், கடவுளுடைய பிள்ளைகளுக்குமிடையே நிகழ்ந்துகொண்டிருக்கும் நீண்டகால அடக்கமுடியாத போராட்டத்தின் கடந்த வரலாறு என்றால் மிகையாகாது...!
அப்.பவுல் தெசலோனிக்கேய சபைக்கு எழுதும்போது "நங்கள் உங்களிடம் வர அநேகந்தரம் பிரயாசப்பட்டோம், ஆனால் சாத்தான் தடை பண்ணினான்" என்கிறார்.(1தெசலோ 2:18). கிறிஸ்து இராச்சியத்தை பெறும்படிக்கு பூமிக்கு திரும்பி வரும்படியான காலம் நெருங்கி விட்டமையாலும், சாத்தானுடைய ஆளுகையும்,அதிகாரமும் பூமியிலே முற்றுப் பெறப்போகிற நேரம் வந்துவிட்டமையாலும் அக்காலகட்டத்துக்கும் அருகாமையில் தான் நிற்கிறதாய் உணருகின்ற சாத்தன், மகாகோபாவேசத்தல் மிகுந்து, கிறிஸ்து பூமிக்கு இரண்டாம் தடவை திரும்பி வருவதை தடுக்க கூடியவரையில் தனது சேனைகளைக் கொண்டு எதிர்ப்பான்: வான மண்டலத்தில், அவ்வேளை பெறும் போர் மூண்டுவிடும் என்பதை நிச்சயிக்கலாம்....!
வெற்றி புலிகளுக்கே...! தமிழீழம் தமிழருக்கே....!
திட்டவேண்டும் என்பவர்கள்... தயவுசெய்து என்னை திட்டுங்கள்....! நன்றி........!
-- Edited by suncauvery on Wednesday 25th of May 2011 01:43:59 PM
-- Edited by suncauvery on Wednesday 25th of May 2011 09:06:41 PM
-- Edited by suncauvery on Wednesday 25th of May 2011 09:16:37 PM
"உன் வித்துக்கும், அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்" என கடவுள்.. பாம்பிற்க்கு சாபமிட்டார். பிசாசு.. தானியேல் தீர்க்கதரிசியை விட அதிக ஞானவான்... எங்கே அந்த ஸ்திரீயின் வித்து என்பவர், பிறந்து தனது தலையை நசுக்குவாரோ.. என்று அஞ்சி. அவர் பிறந்து விடாதபடிக்கு, அதை தடுக்க, அவன் எடுத்த முயற்சிகளை, சற்று ஆராயுங்கள். ஏனெனில் இயேசுநாதர், அவனை பற்றி சொல்லும் போது, "அவன் ஆதிமுதல் மனுச கொலைப்பாதகனாய் இருக்கிறான்" என்றார்.