ஒருமுறை அவர் ஆண்டவரிடம் கேட்டாராம், 'ஆண்டவரே நீங்க சர்வ வல்லமையுள்ளவர். தேசத்தின் மேல் ஒரு ஆபத்து வருகிறது என்றால் அதை நீங்களே தடுத்து நிறுத்தி விடலாம். எதற்காக அதை எங்களுக்கு வெளிப்படுத்தி, ஜெபிக்க சொல்றீங்க?' என்று கேட்டாராம்.
அதற்கு ஆண்டவர் சொன்னது:
பிசாசு எப்போழுதும் குற்றப்படுத்திக் கொண்டே இருக்கிறவன். ஆண்டவர் அவராக மனிதர்கள் ஆளுகையின் கீழ் ஒப்புக் கொடுக்கப்பட்ட உலகத்தில் , மனிதர்களின் விண்ணப்பமில்லாமல் , கிரியை செய்தால் பிசாசு அது தவறு என்று ஆண்டவரை குறை சொல்வான். யாருமே இதை நீங்க செய்யணும் என்று கேட்கவில்லை.அப்ப ஏன் செய்றீங்க எனும் அவன் வாயை அடைக்க, நாம் செய்த ஜெபங்களை ஆண்டவர் அவனுக்குக் காட்டுவார். அப்ப அவனால் ஒன்றும் குறை பேச முடியாது. மனிதர்கள் ஆண்டவ்ரை நோக்கிக் கூப்பிட்டால் அவர் உதவி செய்வார். பிசாசை நோக்கிக் கூப்பிட்டால் அவன் வருவான்.மனிதர்கள் எந்தளவுக்கு இடம் கொடுக்கிறார்களோ, அந்தளவிற்குத்தான் ஆண்டவரோ, பிசாசோ கிரியை செய்யமுடியும்.
ஜெபத்தின் அளவும் பிரச்சினையைப் பொறுத்து மாறுமாம். ஆட்சி மாறணும் என்றால் பலர் ஜெபிக்கணும். சில ஜெபம் கண்ணீரோடு செய்யப்படணும். சில கண்டிப்பாக உபவாசத்துடன் தான் செய்யப்படணும். சிலவற்றுக்குத் துதித்தால் போதும்.
பாவத்தினால் வரும் நியாயத்தீர்ப்பு நீங்க, பாவத்திற்கு வருந்தி மன்னிப்பு கேட்கும், பரிந்து பேசும் , மன்றாட்டு ஜெபம் தேவை. அதைத்தான் தானியேல் செய்தார். நெகேமியா செய்தார். மோசேயும் செய்தார்.
ஆண்டவரிடம் சும்மா பேசிக்கொண்டிருப்பதும் ஜெபம் தான். ஒருவர் அவரது வேலை ஸ்தலத்தில் உள்ள பிரச்சினைகளை எல்லாம் ஜெபத்தில் ஒரு நண்பனிடம் சொல்வது போல் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தாராம். இப்படி பேசுவது சரிதானா என்று அவர் நினைத்த போது ஆண்டவர் சொன்னது - பரவாயில்லை நீ சொல்லலாம். எனக்கு ஆலோசனைக் கர்த்தர் என்ற பெயரும் இருகிறதல்லவா. உனக்கு நல்ல ஆலோசனை தருவேன் என்று சொன்னாராம்.
என் காது குப்பைத் தொட்டி கிடையாது.இஷ்டத்திற்கு ஜெபம் பண்ணக்கூடாது என்றும் ஒருமுறை ஆண்டவர் சொன்னதாக வின்சென்ட் செல்வகுமார் சொன்னார்.
இயேசு கிறிஸ்து இரவெல்லாம் ஜெபித்தார். அந்த நாளில் நடந்த காரியங்களையெல்லாம் பிதாவிடம் சொல்வாராம். இது சாது சொன்னது!