நமது தளவலத்தில், தமிழ்ஹிந்து தளத்தில் பார்த்த சிறுகதை இது. காழ்ப்புணர்ச்சியில் "தாண்டவம்" என கதை எழுதி என்னமாய் ஆடுகிறார்கள் இவர்கள்..!
இந்த கதையை எழுதிய ஜடாயு என்பவர்க்கு இருக்கும் எரிச்சல், கலாஷேத்ராவுக்கு எப்படி ஒரு கிறிஸ்துவ பெயர் கொண்ட பெண்மணி தலைவியாய் இருக்கலாம் என்பதே. பரதம் மீது எனக்கு அவ்வளவு அக்கறை இல்லாவிட்டாலும், இவர்கள் ஏன் இந்த சின்ன விஷயத்திற்கு இப்படி அலறுகிறார்கள் என்றே புரியவில்லை. எந்த ஒரு கலைஞனும் ஒரு கலையை கற்று, பிறகு தன்னுடைய பதிவையும் சேர்த்தே அந்த கலையை அழகு படுத்துவான். ஒரு ஓவியன் தான் வரைந்து பழகும்போது ஒரு கிளியை வரைந்தானென்றால், காலம் முழுக்க அவன் அந்த கிளியையே வரைய வேண்டுமென்பதல்ல. கலையின் அடிப்படையை கற்றபின்பு பிறகு தனக்கு, தன் எண்ணத்தில் உதிக்கும் பிம்பங்களையும், தான் நிஜவாழ்க்கையில் காண்பவற்றையும் வரைவான்.
அதே போல பரதம் பயின்ற ஒரு கிறிஸ்துவன், கிறிஸ்துவ தத்துவங்களை அந்த கலையில் வெளிப்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும். கலை என்பதே உணர்வுகளை வெளிப்படுத்துவதுதானே, இதில் கிறிஸ்துவ உணர்வை வெளிப்படுத்துவதில் இவர்களுக்கு என்ன பிரச்னை? பரதத்தில் காமம் முதல் ரௌத்திரம் வரை அனைத்தையும் வெளிப்படுத்துகிறார்களே, கிறிஸ்துவத்தை காட்டுவதில் என்ன தவறு?
மேலும் அவர்கள் சிலைகளை, அலுவலக, மற்றும் பாதுகாப்புகாக, தற்காலிகமாக அருங்காட்சியகதிற்கு மாற்றியதை வைத்து அந்த கிறிஸ்துவ பெயர் கொண்ட பெண்மணியின் வேலைக்கு உலை வைக்க இவர்கள் துடிக்கிறார்கள். மதவெறி இவர்களை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது பார்த்தீர்களா?
என்னைப் பொருத்தவரையில் கிறிஸ்துவின் நற்செய்தியை சொல்ல பரதம் தேவையே இல்லை. ஆனால், இவர்களின் கூச்சலை பார்க்கும் போது. வருகை சமீபமாய் இருக்கிறது என்று நன்றாகவே தெரிகிறது.