Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுவிசேஷத்தை கண்டு சாத்தான் துடிக்கிறான்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
RE: சுவிசேஷத்தை கண்டு சாத்தான் துடிக்கிறான்
Permalink  
 


" ஐயா... சாமி... யாராவது வந்து என் தளத்தில் பின்னூட்டம் இடுங்கையா... என் கிட்ட பேசுங்கய்யா..."

http://thiruchchikkaaran.wordpress.com/2011/05/16/satanic-versus/

மேற்காணும் இந்த அவலக்குரல் திருச்சிக்காரனுடையது. நம் தளத்தை பார்க்கவே கஷ்ட்டமாக இருக்கிறது, இது மத வெறி தளம், என்றெல்லாம் பினாத்திய திருச்சிக்காரன், நமது தள கட்டுரைகளை கொண்டு தனக்கு அனுதாபத்தையும் மார்கெட்டையும் தேடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

நம்மை எப்படியாவது சீண்டிவிட்டு, பிறகு நாம் பதிலளிக்க போனால், மொக்கை போடுவது இவரது வழக்கமாக இருந்து வருகிறது.

இவரது தளத்தில் கிறிஸ்துவத்தை கொச்சைப்படுத்தும் கட்டுரைகளை தவிர மற்ற கட்டுரைகளை யாருமே மதிப்பதில்லை என்று அதன் பின்னூட்ட எண்ணிக்கைகளே காட்டுகின்றன. அந்த கிறிஸ்துவத்தை கொச்சைபடுத்தும் கட்டுரைகளின் பின்னூட்டங்கள், பொதுவாக நாம் அவருடைய தவறான புரிதலை எடுத்துரைக்கும் பின்னூட்டங்கள், மற்றும் இந்து அடிப்படைவாத வெறியர்களின் பின்னூட்டங்களால் நிறைகிறது. மற்றபடி அவருடைய இந்து நண்பர்களே அவரின் அரைவேக்காடு நிலையை இந்து தளங்களில் கூறி விட்டனர். இவருடைய அவல நிலை எப்போது மாறுமோ?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

// திருச்சிக்காரன், கந்தர்வன், சிவனடியான் இவர்களைக் குறித்து உங்கள் கருத்து என்ன‌..? இவர்களெல்லாம் ஒரேவிதமான கருத்தையுடையவர்களைப் போலத் தோன்றுகிறதல்லவா,ஆனா உண்மை அதைவிட உண்மையாக இருக்கலாம்;அதாவது இம்மூவரும் ஒருவராக இருக்கலாம் என்பது என்னுடைய யூகம்; அந்த ஆளுடன் பேசுவதற்கு யாருமில்லாத காரணத்தினால் தனக்குத் தானே எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்; அவருடைய கருத்துக்களை அவருடைய ஆட்களே ஒரு பொருட்டாக மதிப்பதில்லை; //

சகோ.சில்சாம்,

    இந்த சிவனடியான் என்பவர் தனபாலை போல திருச்சிக்காரனின் personality disorder இல் உதித்தவர் என்று தெரியும். அதனால்தான், அந்த பெயரில் கேட்கப்படும் கேள்விகளை நான் கண்டுகொள்வதில்லை. ஆனால், கந்தர்வன் விஷயம் கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது (சந்தேகம்தான், கந்தர்வன் முற்றிலும் வேறு ஒரு ஆள் என்று முழுதும் நம்பவில்லை). பொறுத்திருந்து பார்ப்போம், எவ்வளவு தான் ஆடுவார்களேன்று.

// அன்பரே, கீதோபதேசம் கூறுவதென்ன‌...எதிரே நிற்பவன் யார் என்று பாராமல் கொன்றழிக்கவேண்டும் என்று சொல்லவில்லையா..? கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற வேதமொழியே கொலையை கடமை என்று சொல்லுகிறதே...கண்ணனே துர்போதனையல்லவா செய்திருக்கிறான்..? இன அழிப்பையும் ஆதிக்கவெறியையும் எல்லா மதங்களும் ஊக்குவித்தே வந்துள்ளன; அது புத்தரை தெய்வமாக வழிபடும்  சீனா, இலங்கை, ஜப்பான் போன்ற‌ நாடுகளானாலும்  யுத்தம் செய்து ஆதிக்கம் செய்வதையே விரும்புகிறது; //

சகோதரி,

     அருமையான பதிவு.ஆனால் இப்படி தூங்குவதுபோல் நடிப்பவர் விழித்துக் கொள்ளமாட்டார்.  திருச்சிக்காரனுக்கு சமத்துவமும், விட்டுக் கொடுக்கும்  கொள்கையுமே முக்கியமாம். பாண்டவர் போல ஒரே பெண்டாட்டியை அனைவரும் பங்கு போட்டுகொள்வது போன்ற கீழ்த்தரமான நிலைக்கு கிறிஸ்துவர்களும் வர வேண்டும் என்பதே அவருடைய எண்ணம்.



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 34
Date:
Permalink  
 

Posted@Thiruchikkaran

//எந்த இந்து மதக் கடவுளும் தீண்டாமையை சொல்லவும் இல்லை. இந்து மத்தில் ஸ்ருதி என சொல்லப் படும் முக்கிய நூல்களான வேதம் , கீதை ஆகியயவ்றில் தீண்டாமையை பற்றி சொல்ல படவில்லை. இந்திய சமூகத்தில் தொழில் அடிப்படையில் குழுவாக பிரிந்தவர்கள் சாதியாக உருவாகி பிறகு சாதி மைப்பு இறுக்கமாகி விட்டது என்பதை முன்பே தெளிவாக சொல்லி இருக்கிறோம். இந்து மதத்தின் பேரால் தீண்டாமை கோட்பாட்டை , சாதி வேறுபாடுகளை நிலை நிறுத்துவதை முழு வீச்சில் எதிர்க்கிறோம். //

பெருமாள் என்பவன் ஒருவேளை மெய்யாகவே இருந்து அவனே நேரடியாக எழுந்து வந்தாலும் உங்களைத் திருத்தமுடியாதுங்க அண்ணே,மனசாட்சி என்பதை அடகுவைத்துவிட்டு மனுஸ்மிருதி எனும் புனிதமான ஆதிவேதத்தையே (???) திரித்துக்கூறும் ஒரே காரணத்துக்காகவே பெருமாள் (???) உங்களை தண்டிக்கட்டும்..!

// சாதி வேறுபாடுகளில் இருந்து இந்திய சமுதாயம் மீது வரும் அதே நேரத்தில், இந்தியாவை மத வெறி விடத்தில் மூழ்கடிப்பது சரியல்ல... //

கடந்த சுமார் ரெண்டாயிரம் வருடமாக சாதிவெறியிலிருந்து எழுந்துகொண்டே இருக்கிறீர்களா..?

நல்ல கதை...ஏன் தேர்தலில் சீட் கொடுத்த கட்சிகள் சாதிபாகுபாடு பாராது சீட் கொடுத்ததா..?

சினிமாவில் சாதி ஒழிக்கப்பட்டுவிட்டதா..?

சாதிபாடு ஒழிக்கப்பட்ட இரண்டு இடங்களை மிகுந்த சிரமத்துடன் இறுதி செய்யலாம்,ஒன்று சுடுகாடு, இன்னொன்று டாஸ்மாக் கடை,மூன்றாவதும் ஒன்றுண்டு, கண்டிப்பா சொல்லணுமின்னா சொல்றேன், விபச்சார விடுதி..!

நான்காவதும் சொல்லட்டுமா,கூவாகம்..!



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 34
Date:
Permalink  
 

Posted@Thiruchikkaran

// பழைய ஏற்பாட்டில் மட்டும் அல்ல, புதிய ஏற்பாட்டிலும் பிற மதங்களை சகித்துக்கொள்ள மறுக்கும் கருத்துக்கள உள்ளனவே. விக்கிரக ஆராதனைக் காராரை மிக இழிவாக காட்டி , அவருடன் சேராதே, சாப்பிடாதே என்று உள்ளது. //

உங்கள் கருத்துப்படி தீண்டாமைக்குக் காரணம் பைபிள் என்றாகிறது;அப்படியானால் இன்றைக்கும் கிராமங்களிலும் ஏன் சில நகரங்களிலும் இந்தியாவில் நிலவி வரும் தீண்டாமை குற்றங்களுக்கு பைபிளின் கருத்தே காரணமா..? அப்படியானால் இந்தியாவை கடந்த ரெண்டாயிரம் வருடங்களாக பைபிளா ஆட்சி செய்துவருகிறது;பைபிளுக்கு எதிராகவா பாரதி விவேகானந்தர் போன்றோர் போராடினார்கள்..? விக்கிரகத்தை ஆராதிப்பவரிலேயே சிலரை பாகுபடுத்தியும் சிலரை ஊரைவிட்டு தள்ளிவைத்தும் சிலர் கோவில் தேர்வடத்தைத் தொட தடைவிதித்தும் கொடுமை செய்தது யார் குற்றம்..?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

நண்பர் அசோக்குமார் அவர்களே,

திருச்சிக்காரன், கந்தர்வன், சிவனடியான் இவர்களைக் குறித்து உங்கள் கருத்து என்ன‌..? இவர்களெல்லாம் ஒரேவிதமான கருத்தையுடையவர்களைப் போலத் தோன்றுகிறதல்லவா,ஆனா உண்மை அதைவிட உண்மையாக இருக்கலாம்;அதாவது இம்மூவரும் ஒருவராக இருக்கலாம் என்பது என்னுடைய யூகம்; அந்த ஆளுடன் பேசுவதற்கு யாருமில்லாத காரணத்தினால் தனக்குத் தானே எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்; அவருடைய கருத்துக்களை அவருடைய ஆட்களே ஒரு பொருட்டாக மதிப்பதில்லை;

முப்பது கோடி முகமுடையாள் என்றான் பாரதி; முப்பத்து முக்கோடி தெய்வங்களைக் கொண்ட இவர்களுக்கோ ஒவ்வொருக்கும் குறைந்தது மூன்று முகம் கணக்கு வருகிறது;அதனை நிரூபிக்கவே இவர் மாத்திரமே மூன்று பெயர்களில் மூன்றுவிதமான தனது எண்ணங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று எண்ணுகிறேன்.இவர் அரசியலையும் மதத்தையும் இணைத்து உப்புமா கிண்டுவதிலிருந்தே தெரிகிறது இவருடைய முன்னோர்களும் இப்படியே கைபர் கணவாய் வழியாக வந்தேறி இந்தியாவின் அரசர்களை ஆட்டிப்படைத்தவர்கள் என்பது..!

முகலாய சாம்ராஜ்யத்தை ஒழிக்க ஆங்கிலேயனுக்கு வால்பிடித்து காலூன்ற வைத்தவர்கள் இன்றைய அமெரிக்காவை குறைகூறலாமா..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 34
Date:
Permalink  
 

திருச்சிக்காரன்: Title: உலக மகா யோக்கியர் போல பேசும் அமெரிக்க சமுதாயம்,  உண்மையிலேயே  நாகரிக சமுதாயமா ?

அழகிய  உடை அணிந்த இளம் அமெரிக்க பெண்கள் சன்  கிளாஸ் போட்டுக் கொண்டு, இந்தியாவின் பட்டி தொட்டி எங்கும் சென்று அங்கே இருக்கும் சிறுவர்களை கட்டித் தழுவிக் கொண்டு விளையாடி அவர்களுக்கு ஜீன்ஸ் , டி சர்ட் தருகிறார்கள்.

அட இது என்ன தவறா ஐயா, என்றால் இது தவறு இல்லை, அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் … அன்பு காட்டுங்கள் . வரவேற்கிறோம்,

ஆனால் அன்பு காட்டுவதாக் சொல்லி அப்படியே அவர்களை மத வெறி விடத்தில்  மூழ்க வைத்து பாவ ஸ்நானம் செய்ய வைக்கிறார்கள். இந்த அமெரிக்க யுவதிகளை  சந்திக்கும் முன் இந்திய அப்பாவி குடிசை வாசிகள் எந்த மதத்தையும் வெறுக்காத நாகரிக அன்பு நெஞ்சங்களாக வாழ்ந்தன. இவரக்ள அவர்களை மாற்றி , அவர்களின் மத சகிப்புத்தன்மையை அழித்து வெறுப்பு கருத்துக்கள் உள்ளவர்கள் ஆக்குகின்றனர்.

இவர்கள் அறிமுகப் படுத்தும் பரிசுத்த புனித நூலில் உள்ள பிற மத சகிப்புத் தன்மை அழிப்பு, மத வெறி பரப்பு கோட்பாடுகளை படியுங்கள்.

உபாகமம்.12 அதிகாரம்

  • 1.உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கிற தேசத்திலே, நீங்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் கைக்கொண்டு நடக்கவேண்டிய கட்டளைகளும் நியாயங்களுமாவன:
  • 2. நீங்கள் துரத்திவிடும் ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்த உயர்ந்த மலைகளின்மேலும், மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து,
  • 3. அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை நொறுக்கி, அவைகளின் பேரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள்.//

அன்பரே, கீதோபதேசம் கூறுவதென்ன‌...எதிரே நிற்பவன் யார் என்று பாராமல் கொன்றழிக்கவேண்டும் என்று சொல்லவில்லையா..? கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற வேதமொழியே கொலையை கடமை என்று சொல்லுகிறதே...கண்ணனே துர்போதனையல்லவா செய்திருக்கிறான்..? இன அழிப்பையும் ஆதிக்கவெறியையும் எல்லா மதங்களும் ஊக்குவித்தே வந்துள்ளன; அது புத்தரை தெய்வமாக வழிபடும்  சீனா, இலங்கை, ஜப்பான் போன்ற‌ நாடுகளானாலும்  யுத்தம் செய்து ஆதிக்கம் செய்வதையே விரும்புகிறது;

நீங்கள் குறிப்பிட்டுள்ள பைபிள் பகுதி பழைய ஏற்பாட்டிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது; அப்படியானால் புதிய ஏற்பாட்டின் நோக்கம் என்ன,அது கூறுவதென்ன என்றும் பார்க்கவேண்டுமல்லவா..? இறைவனால் யூதருக்கு இன அழிப்பு கட்டளை கொடுக்கப்பட்ட காலத்தில் மற்ற இனங்கள் என்ன செய்துகொண்டிருந்தன என்றும் பார்க்கவேண்டுமல்லவா..? மாவீரன் அலெக்ஸாண்டர் உலக முழுவதும் வெற்றி பெற்றுக்கொண்டே வந்தவன் எருசலேமில் வந்து மண்டியிட்டானல்லவா..? அது அக்காலத்தில் யூதருடைய கட்டுப்பாட்டில் இராதிருந்தும் எருசலேமின் மீது கிரேக்கனான அவனுக்கு நன்மதிப்புண்டாகக் காரணமாக இருந்தது எது...? வரலாற்றை ஒருபோதும் குறுகிய கண்ணோட்டத்தில் பாராதிருங்கள்,அகண்ட பார்வை மட்டுமே அகண்ட பாரதத்தின் முழு பிரச்சினையையும் வெளிக்காட்டும்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

 நண்பர்களே,

        எனது சமீபத்திய தளவலத்தில் (நகர்வலம் மாதிரி), திருச்சிக்காரன் தளத்தில்  உலக மகா யோக்கியர் போல பேசும் அமெரிக்க சமுதாயம்,  உண்மையிலேயே  நாகரிக சமுதாயமா ? என்று ஒரு மொக்கை கட்டுரை போட்டிருந்தார். ஒரு மொக்கை கட்டுரை பற்றி இங்கு எதற்கு பேசணும் ன்னு சொல்லறீங்களா? அந்த கட்டுரை மொக்கையா இருந்தாலும், அதில் அவரது சூழ்ச்சி ஒன்று உள்ளதை கவனித்த பின்னாலும் சொல்லாமலிருக்க என்னால் முடியவில்லை. அமெரிக்காவை பற்றி குறை பேசும் போக்கில் கிறிஸ்துவத்தையும், சுவிசேஷத்தையும் மனுஷன் சீண்டிபார்கிறார்.  இதில் அவர் சூழ்ச்சி என்னவென்றால், அமெரிக்காவையும் கிறிஸ்த்துவத்தையும் ஒன்றாக இணைத்து விட்டு, பிறகு அமெரிக்காவில் பல குறைகள் உள்ளது அதனால் கிறிஸ்த்துவமும் குறை உள்ளது என்று நிரூபிக்க இந்த ஏற்பாடு. மேலும் வேத வசனங்களை out of context இல் எடுத்து (சாத்தானை போல) தவறான பிராச்சாரம் செய்கிறார். இவர் கிறிஸ்த்துவத்திற்கு எதிரியாக இருப்பதால் இப்படி காழ்ப்புணர்ச்சி கொண்டு, மதவெறியினால் இப்படி கேவலமாக நடந்து கொள்கிறார். இவர் காந்தி அடிகளுக்கு எதிரியாக இருந்திருந்தால், மரண வேதனையில் துடித்த கன்றுக்குட்டியை கருணைகொலை செய்யசொன்ன அவர் வார்த்தைகளை திரித்து. காந்தியார் பசுவதைகாரர், கசாப்பு கடைக்காரர் என்றெல்லாம் கதை அளந்திருப்பார்.

வெளிநாட்டில் இருந்து வந்து இந்தியாவில் சுவிசேஷ ஊழியம் செய்யும் பெண்களை இந்த ராம பக்தன் இவ்வாறு சொல்கிறார்:

//அழகிய  உடை அணிந்த இளம் அமெரிக்க பெண்கள் சன்  கிளாஸ் போட்டுக் கொண்டு, இந்தியாவின் பட்டி தொட்டி எங்கும் சென்று அங்கே இருக்கும் சிறுவர்களை கட்டித் தழுவிக் கொண்டு விளையாடி அவர்களுக்கு ஜீன்ஸ் , டி சர்ட் தருகிறார்கள்.//

வேண்டுமானால் இவர்கள் இந்த மக்களுக்கு வேட்டி, சட்டை கொடுத்து கூடவே பகவத் கீதையை கொடுக்க வேண்டியதுதானே? குறைந்தது அவர்களுக்கு ஒரு கோவணமாவது கொடுத்திருக்கலாமே. இந்த இந்துத்துவாக்கள் அவர்களது கோவணத்தையும் பிடுங்கிக்கொண்டு அகோரிகலாக்கமளிருந்தால் சரி. இவர்களும், இவர்கள் சாமியார்களும், வெள்ளைக்காரனுக்கு அடிமையாகி அவனிடம் இப்போது நைந்துபோன இந்து சரக்கை விற்றுகொண்டிருக்கின்றனர் (நிர்வாண, ஆபாச ஆசிரமங்கள் அமைக்க). சாமியார்களிடம் கொள்ளை கொள்ளையாக பணம் கொடுத்து அவர்கள் சொல்லும் அபத்தத்தை ஆண்மீகமென்று நம்பும் இவர்களிடம், இலவசமாக உண்மையை, சுவிசேஷத்தை, சொர்க்கத்தை கொண்டு சென்றால், இப்படித்தான் கழுதையை போல் உதைப்பார்.

//ஆனால் அன்பு காட்டுவதாக் சொல்லி அப்படியே அவர்களை மத வெறி விடத்தில்  மூழ்க வைத்து பாவ ஸ்நானம் செய்ய வைக்கிறார்கள்.//

ஞானஸ்நானத்தை அவதூறு செய்யும் அளவுக்கு சாத்தான் இந்தாளை உபயோப்படுத்துகிறான்.

// இந்த அமெரிக்க யுவதிகளை  சந்திக்கும் முன் இந்திய அப்பாவி குடிசை வாசிகள் எந்த மதத்தையும் வெறுக்காத நாகரிக அன்பு நெஞ்சங்களாக வாழ்ந்தன. இவரக்ள அவர்களை மாற்றி , அவர்களின் மத சகிப்புத்தன்மையை அழித்து வெறுப்பு கருத்துக்கள் உள்ளவர்கள் ஆக்குகின்றனர்.//

இந்த யோக்கியன் அந்த மக்களை சந்தித்து, அவர்களை அன்புள்ளவர்கலாக்கலாமே. இந்த மனுஷனுக்கு (???) என்ன ஒரு எரிச்சல் பாருங்கள்.

மொத்தத்தில், சுவிசேஷம் அறிவிக்கப்படுவதை அறிந்து சாத்தான் துடிதுடிப்பதை அறிய, இந்த "யோக்கியன்" ஒரு உதாரணம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard