ஓ... இரசலுக்கும் பிரமிடுக்கும் என்ன சம்பந்தம்? உங்களுக்கு கனவில் கூட ரசல் தான் வருவார் போல!! பெரிய பிரமிடை ஏனோக்குதான் கட்டினார் என்பது நம்பும்படியாகத்தான் இருக்கிறது.
ப்ரமிட் மேட்டர் இரஸல் வழியே வந்து ப்ரன்ஹாமுக்கும் பொசிந்தது; அதில் மேய்ந்த சாதுஜி கூட்டத்தாருக்கும் அதன் பாதிப்பு இருப்பதில் வியப்பேதுமில்லை...நானே எல்லாவற்றையும் விவரமாக எழுதிவிட்டால் சிலர் உஷாராகி விடுவார்கள் என்ற காரணத்தினாலேயே தடுப்பு ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறேன்..!
வெளிநாட்டுக்காரன் உள்ளாடையைக் கூட வித்தியாசமா பேண்டுக்கு மேலே போட்டு தான் சூப்பர் மேன் என்று ஜனங்களை மயக்குவான்; இவர்களும் இப்படிப்பட்டவர்களே; ஒரு விஷயத்தை சுவாரசியமாகச் சொல்ல இண்டு இடுக்கிலெல்லாம் உபகதைகளை நுழைத்து மக்களை மதிமயக்குவதே பாபிலோனிய மார்க்கமாகும்; இவர்களோ மற்றெல்லாரையும் பாபிலோனிய மார்க்கம் என்கிறார்கள்;திருடன், திருடிவிட்டு திருடன் திருடன் என்று கத்திக்கொண்டே ஓடுவது போல..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)