Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மந்திரம், மாயவித்தை பில்லி சூனியம் பற்றிய ஒரு ஆய்வுரைக் கண்ணோட்டம்


Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 2
Date:
RE: மந்திரம், மாயவித்தை பில்லி சூனியம் பற்றிய ஒரு ஆய்வுரைக் கண்ணோட்டம்
Permalink  
 


ஐயப்பன் கடவுளா அல்லது மனிதனா என்று கூறுங்கள்

__________________
Prathiba


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
மந்திரம், மாயவித்தை பில்லி சூனியம் பற்றிய ஒரு ஆய்வுரைக் கண்ணோட்டம்
Permalink  
 


கேள்வி :- குறிப்பிட்ட மரங்களில் தான் அசுத்த ஆவிகள் இருக்கும் என்பது உண்மையா?

பதில் :- பொய். ஏனெனில் அசுத்த ஆவிகளானது எல்லா இடங்களிலும் இருக்கும். குறிப்பாக புளியமரம், நாவல் மரம், வேம்பு மரம், என்பவற்றிலே இருக்கும் எனக் கூறுவது பொய். அநேகமாக சுடுகாடு, அந்நிய மதவழிபாட்டுகள் உள்ள ஸ்தானம் போன்ற இடங்களில் கட்டாயம் இருக்கும் எனலாம்.

கேள்வி :- பெண்ணுக்கும் பேய்க்கும் தொடர்பு உண்டா?

பதில் :- தொடர்பு உள்ளது என்று கூற முடியாது. அதாவது அதிகமாக பேய்கள் பெண்களைத் தாக்குவதற்கான காரணம் பெண்கள் பயந்த சுபாவமுடையவர்களாக இருக்கின்றமையேயாகும். இதனால் “பேய்“ என  இரவில் யாராவது கூறினால் பெண்கள் மருண்டு விடுவார்கள். பெண்களிடம் தீட்டு காரியம் காணப்படுவதும் ஒரு காரணமாக அமைகிறது. அதனால் தான் ஆவிகள் இலகுவில் பெண்களைத் தாக்குகின்றன.

கேள்வி :- மந்திரவாதி ஒருவர் மற்றொரு மந்திரவாதிக்கு எதிராக மந்திரம் செய்தால் அது பலிக்குமா?

விடை :- பலிக்காது, ஒவ்வொரு மந்திரவாதியும் தனக்கென ஒரு ஆவியை தெரிந்தெடுத்திருப்பான். அது அவனைப் பாதுகாக்கும். ஆகையால், அவர்களுக்கு விரோதமாக ஏதேனும் செய்யும்போது அவ் ஆவிகள் உடனே தடை பண்ணும்.

கேள்வி :- ஒருவர் செய்த மந்திரத்திற்கு எதிராக இன்னுமொருவர் மந்திரம் செய்யும்போது ஆவிகளுக்குள் பிளவு ஏற்படாதா?

பதில்-:- மந்திரங்களை செய்யும்போது எல்லோரும் ஆவிகளைப் பயன்டுத்தி செய்வதனால் ஒருவர் மந்திரம் செய்துவிடும் போது இன்னுமொருவர் அதை நீக்குவதற்கு மந்திரம் செய்வது வழமை. இப்படி மந்திரம் செய்யப்பட்டாலும் இரண்டு ஆவிகளுக்குள்ளும் விரோதங்கள் ஏற்பாடாது. மாறாக பஸ்பரத்துடன் செயற்படும் இந்த ஆவிகள் பரஸ்பரத்துடன் செயற்படுவதனால் முன்பு அனுப்பிய ஆவி பின்பு அனுப்பட்ட ஆவிக்கு தனது இடத்தை விட்டுக் கொடுத்து விட்டு போய்விடும். எப்படி இருந்தாலும் அந்த குறிப்பிட நபர் மீது ஒரு ஆவி இருந்து கொண்டே இருக்கும். அப்படியானால் மந்திரத்தை மந்திரத்தினால்  முற்றாக எடுக்க முடியுமா என்று கேட்டால் அதை முற்றாக எடுக்க முடியாது. என்றே பதில் கூறலாம். மாறாக அதற்குள்ளே மாறிமாறி வெட்டுவார்கள். அதாவது ஏவிய ஆவிகள் அதற்கள்ளேயே சுற்றி சுற்றி நிற்குமே தவிர முற்று முழுதாக வெளியே வராது. எனவே ஒருவர் மந்திரத்திற்குட்பட்டால் அவருக்குள் ஆவிகளின் செல்வாக்கு காணப்படும். அப்படி ஆவிகளின் செல்வாக்களுக்கு உட்பட்டவருக்கு அதில் இருந்து விடுதலையாவதற்கு ஒரே வழி இயேசுக்கிறிஸ்து மாத்திரமே


கேள்வி :- மந்திரங்களுக்கும் வர்ணங்களுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா?

மந்திரங்களுக்கும் வர்ணங்களுக்கும் சம்பந்தம் உண்டு என கூறமுடியாது. மாறாக மந்திரங்கள் செய்யும்போது சில குறிப்பிட்ட வர்ணத்தை தெரிந்து எடுத்துச் செய்வார்கள். இப்படிச் செய்யும்போது வர்ணத்தாக்கம் ஏற்படலாம்.

கேள்வி :- இறைச்சிக்கும் பேய்க்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா?

பதில் :- இறைச்சிக்கும் பேய்க்கும் சம்பந்தம் இருக்கிறது என்று கூற முடியாது. மாறாக மக்கள் இறைச்சிக்கும் பேயக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நம்பி இறைச்சியைக் கொண்டு போனால் ஆவிகள் அடிக்கும் என பயப்படும்போது இந்தப் பயத்தைப் பயன்படுத்தி ஆவிகள் தாக்குமே தவிர இறைச்சிக்கும் பேய்க்கும் எந்த விதமான சம்பந்தமுமில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் பயம்தான்.

கேள்வி :- ஆற்றங்கரையை நாடிப்போவதன் காரணம் என்ன?

பதில் :- தனிப்பட்ட இடங்களில் போய் இந்த மந்திரங்கள் செய்யலாம் என்பதால்

கேள்வி :- அமாவாசை நாள் மந்திரத்திற்கு முக்கிய நாளாக கருதப்படுவது ஏன்?

பதில் :- அமாவாசை நாளை முக்கிய நாளாகக் கருத்தக் காரணம் அந்த நாளில் ஆரம்பித்தால் ஏதாவது விஷேசமாக நடக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாகத்தான் இதைச் செய்கிறார்களே தவிர மற்றப்படி விசேஷம் ஒன்றுமில்லை. இந்த நாள் விசேஷமான நாள் இதில் காரியம் செய்தால் பலிக்கும் என்று கருதி விரதம் இருந்து செய்கிறார்கள் அதுவும் நடக்கிறது. அது அவர்களுடைய நம்பிக்கையேயன்றி நாளில் ஒன்றுமில்லை

கேள்வி – மந்திரத்திற்கு சக்தி இருக்கிறதா?

பதில் – ஆம் மந்திரத்திற்கு சக்தி இருக்கிறது தேங்காயையோ அல்லது தேசிக்காயையோ அல்லது வேறு எதையாவது மந்ரம் செய்யும்போது அது சுற்றும் என்றார். (அப்படி செய்தீர்களா என கேட்டபோது) பாதுகாப்பிற்காக தேங்காய்களை ஓதி வைக்கும்போது அவை யாரேனும் வரும்போது கதைப்பது போல் செயற்படும்.

கேள்வி :- ஒரே நேரத்தில் ஒரே ஆவியை பலரும் அழைத்தால் என்ன நடக்கும்?

பதில் :- ஒரே பெயரில் பல ஆவிகள் இருக்கின்றன. உதாரணமாக காளியின் பெயரில் 108 ஆவி இருக்கிறது. இந்த 108 ஆவிகளுக்கும் இன்னும் 108 ஆவி இருக்கிறது. ஆகவே ஒரே நேரத்தில் பலர் ஒரே ஆவியைக் கூப்பிட்டால் இவற்றில் ஏதாவது ஒன்று போகுமே தவிர ஒரு தடுமாற்றம் வராது.

கேள்வி :- மைபார்க்கிறது என்றால் என்ன?

பதில் :- பூவரசம் இலை என்ற ஒரு இலை இருக்கிறது. இதை அரைத்து சுண்ணாம்போடு கலந்து கண்ணாடியில் வைத்து அந்தப் பகுதியை மட்டும் பாரக்கும்போது தெரியும். அதாவது ஒரு சில காரியங்களைச் சிந்தித்துக் கொண்டு பார்க்கும்போது அவர் சிந்திக்கிறது நடப்பது போல் தெரியும். இதை வைத்துத்தான் கூறுவார்கள். ஒருவருடைய பொருளை யாராவது எடுத்துக் கொணடு  போய்விட்டார் என்றால் எடுத்தவர் இவராகத்தான் இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டு பார்க்கும்போது அவர்கள் சிந்தித்த உருவம் போனால், எடுத்தவர் இவர்தான் என்று கூறுவார்கள். அவர் சிந்தித்த உருவமும் சிந்தித்த நபரும் சரியாக தென்பட்டால் அவர்தான் திருடியது என்று கூறுவார்கள் ஆகவே மைபார்ப்பது என்பது சிந்தித்துச் சொல்லும் ஒரு காரியமாகும். எண்ணெயை பூசிவிட்டுப் பார்க்கலாம். 

கேள்வி :- அசுத்த ஆவி பிடித்திருப்பரின் பெயரைக் கேட்கலாமா?

பதில் :- கேட்கவேண்டியதில்லை. கேட்டும் பிரயோஜனம் இல்லை. காரணம் கேட்டாலும் அவை உண்மையைச் சொல்லப் போவதில்லை. எனவே கேட்கத் தேவையில்லை.

கேள்வி :- ஊழியக்காரர்கள் அசுத்த ஆவியை துரத்தும்போது என்ன செய்ய வேண்டும்?

ஊழியக்காரர்களாகிய நாம் ஆவிகளைத் துரத்தும்போது அது அங்கிருந்து புறப்பட்டு எமது வீட்டை நோக்கியே வரும் என்பதை மறந்து போகாமல் முதலாவது எமது வீட்டை ஒப்புக் கொடுத்து ஜெபிக்க வேண்டும். பின்பு அசுத்த ஆவிகளைத் துரத்த போவது நன்று


கேள்வி :- இரட்சிக்கப்பட்ட பின்பு ஆவியின் தாக்கம் ஏற்படுமா? 

பதில்  - ஏற்படுமென்று கூறுவதற்கில்லை. காரணம் நான் மந்திரம் செய்து கொண்டிருந்தபோது என்னுடைய மந்திரம் பலிக்கவில்லை. நான் மந்திரத்திற்கு பயன்படுத்திய தெய்வம் என்னை துன்புறுத்தியதால் அத்தெய்வத்தை நான் அடித்தேன். ஆனாலும் அது ஒன்றும் செய்யவில்லை. இதற்குக் காரணம் எனக்காக யாரே ஜெபம் செய்தபடியால் என்று பின்பு அறிந்து கொண்டேன். இதற்கு பின்பு என்னை சிலர் கொல்ல முற்பட்டனர். அந்த நேரம் வெளியே போக முடியாமல் உள்ளே இருந்தேன். அந்த நேரம் எனக்கு சுவிஷேசம் சொன்னவர் என்னைச் சந்தித்து எனக்காக ஜெபம் செய்தார். இதற்குப் பின்பு எல்லா மந்திரக் காரியங்களையும் சுட்டெரித்தேன். நான் மந்திரத்தை விட்டு வெளியேறிய பின்பு ஆவிகள் கனவில் தோன்றி எனக்கு உதவி செய்வதாக கூறியது. ஆனாலும் என்னை பெலப்படுத்தியவர்கள் அவ்வாறு செய்யவிடவில்லை. இதற்கு பின்பு கொழும்பில் இருந்து மந்திரிக்க வந்தார்கள். எனது மனது தளர்வது போல் இருந்த்து. அந்த நேரமும் என்னை பெலப்படுத்தியவர்கள் மூலம் அதை விட்டுவிட்டேன். நான் ஊழியத்திற்கு போன பின்பு தேவன் செய்த அற்புதத்தால் முழுமையாக அவருக்கு என்னை ஒப்புக் கொடுத்தேன். இதற்கு பின்பு ஆவியின் தாக்கம் ஏற்படவில்லை என்று சாட்சி பகர்ந்தார். ஆக இரட்சிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் சிறிது தாக்கம் இருந்துள்ளது என்று அவருடைய கூற்றின் மூலம் புலப்படுகின்றது. இதே நேரத்தில் இந்தியாவில் பிரபல மந்திரவாதியாக இருந்து இரட்சிக்கப்பட்ட தொட்டண்ணாவின் சாட்சியைக் கவனித்தால் அவரும் தனக்கு இரட்சிக்கப்பட்ட ஆரம்பத்தில் ஆவியின் செயற்பாடு அதிகமாக இருந்தது என்று கூறியுள்ளார். மேலும் தான் இரட்சிக்கப்பட்ட பின்பு மீண்டும் மந்திரம் செய்யப் போகக் காரணம் தன்னை யாரும் கவனிக்காமையே என்றும் கூறியுள்ளார். இவை இரண்டும் இவருடைய சாட்சியுடன் ஒத்துப் போகிறது. அதாவது இவரை யாராவது பெலப்படுத்தாவிட்டால் இவரும் மந்திரம் செய்யப் போயிருப்பார் என்பது இவருடைய கூற்றில் இருந்து தெரிய வருகிறது. எனவே ஆவியிலிருந்து விடுபட்டவர்கள் இரட்சிக்கப்பட்டு விட்டோம் இனி அசுத்த ஆவிக்ள கிரியை செய்யாது என்று இருக்காமல் அவற்றுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கேள்வி :- இப்போது உங்களுக்கு அசுத்த ஆவி பிடித்திருப்பதை இனங் காண முடியுமா?

பதில் :- இரட்சிக்கப்பட்ட பின்பு நான் அசுத்த ஆவிகள் குறித்து இவைதான் என்று இனம் காண முற்படவில்லை. அதேவேளை ஊகிக்கவும் முடியாது என்பது என் கருத்து

கேள்வி :- ஜாதகத்தைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?

அதாவது ஜாதகம் எழுதியிருக்கின்றபடி நடக்கும்  அல்லது நடக்கிறது என்று கூறுகிறார்களே,இது பற்றிய உங்கள் கருத்து என்ன என்ற கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அது அப்படியல்ல. அந்த நாளில் நடக்குமென்று அவர்கள் நம்புகிறபடியால் அதைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற அசுத்த ஆவி கிரியை செய்து அவர்களைத் தாக்குகின்றதே தவிர ஜாதகப்படி நடப்பது என்று கூறமுடியாது. என்ற கூறியது மட்டுமல்ல. இன்னுமொரு உதாரணக் கதையையும் கூறினார். அதாவது ஒருவருக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கண்டம் இருப்பதாக அவருடைய ஜாதகத்தில் எழுதியிருந்தாகவும் அதேவேளையில் அந்த குறிப்பிட்ட நேரத்தில் மந்திரம் செய்தால் பிழைக்க வைக்க முடியும் என்றும் எழுதியிருந்தது. இதை அறிந்த நபர் அந்த நாளும் அந்த நேரமும் வரும்போது பயத்தாலேயே வியாதி உற்றதாகவும், பின்பு தான் அந்த நேரத்திற்குப் போய் அவருக்கு மந்திரம் செய்து அதை எடுத்துப் போட்டதாக கூறிய பின்பு அவருக்கு சுகம் கிடைத்ததாகவும் மக்களின் நம்பிக்கைத் தான் இதற்குக் காரணம் என்று கூறினார். மேலும் ஜாதகம் எழுதுவதற்கு சரியான நேரம் கொடுக்க வேண்டும். ஆனால் சரியான நேரம் கொடுக்க மாட்டார்கள். ஆகவே அவர்கள் கொடுக்கின்ற நேரத்தை வைத்துத்தான் என்ன நட்சத்திரம் என்ன கண்டம் என்று பார்த்துத்தான் எழுதிக் கொடுப்பார்கள். அதை உண்மையென மக்கள் நம்புகின்றமையால் சாத்தான் அவர்களின் நம்பிக்கையை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்துகின்றான் என்று கூறினார். இவர் ஜாதக விடயத்தில் கூறவந்த முக்கிய விடயம் என்றவென்றால் ஜாதகம் எழுதுவதற்கு சரியான நேரம் அவசியம். இந்தச் சரியான நேரம் யாராலும் கொடுக்க முடியாததால் எழுதப்படும் ஜாதகம் பொய்யாகும்.

கேள்வி :- மந்திரவாதிகள் மத்தியில் எப்படி சுவிசேஷத்தை கூறுவது?

இக்கேள்விக்கான பதில் அவருடைய சுவிசேஷ ஊழியத்துடன் தொடர்பு பட்ட அனுபவமான பதிலாக இருந்தது மந்திரவாதிகள் மத்தியிலே சுவிசேஷத்தினை .கூறுவதென்பது இலகுவான செயலல்ல. அதற்கு பிரதான காரியங்கள் ஐந்து தேவை. அவையாவன

1.    பரிசுத்த ஆவியானவர் உதவி
2.    பரிசுத்தமான வாழ்க்கை
3.    ஜெபம்
4.    உபவாசம்
5.    விசுவாசம்


உண்மை விடயம்

மந்திரவாதி ஒருவரின் மனைவி வியாதிப்பட்டிருந்தாள். அதை குடும்பத்துடன் ஜெபத்துடன் உபவாசத்துடனே அங்கு சென்றபோது எதிரே தென்பட்டவன் அந்த மந்திரவாதிதான். தேவஆவியானவரின் பெலத்துடன் சென்றமையினால் வந்த விடயத்தை கூறியபோது அவர் ஜெபிக்கும்படி அனுமதி கொடுத்தார். ஜெபிக்கப்பட்டது. அந்த சகோதரி விடுதலை அடைந்தார். நாளடைவில் அந்த குடும்பம் இரட்சிக்கப்பட்டு பின்பு தலைவர் மந்திரவாதியும் இரட்சிக்கப்பட்டார். எனவே மேற்குறிப்பிட்ட காரியங்களை கருத்திலெடுத்து செயற்படும்போது பெரிய காரியங்களை கர்த்தர் செய்வார்

முடிவுரை.

இவ்வுலகில் எத்தனை ஆயிரம் மந்திரங்கள், பில்லி சூனியம் மாயவித்தைகள், இருந்தாலும் அத்தனையும் வீண்பிரயாசங்களாகும. ஏன்? மந்திரங்கள் பில்லி சூனியம், மாயவித்தை செய்யப்பட்டவர்களை ஒரு நொடிப்பொழுதில் இயேசுவின் வல்லமையானது விடுதலையாக்கி இயசுவின் இரத்தமானது சுத்திகரிக்கின்றதாயிருக்கின்றது. அந்த வல்லமைகள் இயேசுவின் சர்வ வல்லமைக்கு முன்பாக நிற்க முடியாது. உண்மையாகவே இந்த செய்முறை வேலையானது பிரயோஜனமாகவுள்ளது. எதிர்கால ஊழிய வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் என விசுவசிக்கிறேன். மக்களின்  அறியாமையெனும் இருளை நீக்கி இயேசு கிறிஸ்துவின் ஆச்சரியமான ஒளிக்குள் அழைத்து வருவதற்கு இது பெரிதும் உறுதுணையாகும்.


மந்திரம், சூனியம் எல்லாம் மன்னவன் முன் நில்லாது
அசுத்த ஆவியின் கட்டுகளெல்லாம்
அருமை இரட்சகர் நாமத்தால் உடையும்
அறியாமை இருள் நீக்குவோம்
இயேசு எனும் ஒளி வீசுவோம்
மந்திரங்கள் மாயை
இயேசுவின் மாண்பு மிகு நாமமே உண்மை



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: மந்திரம், மாயவித்தை பில்லி சூனியம் பற்றிய ஒரு ஆய்வுரைக் கண்ணோட்டம்
Permalink  
 


chillsam wrote:
// கிறிஸ்தவர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் இவற்றிலே நம்பிக்கையுடையவர்களாக இருக்கின்றன. //

இது உண்மை நிலவரத்துக்கு மாறான கூற்றாகும்; இன்றைக்கு மாற்று மார்க்கத்தவரைவிட கிறித்தவர்களே அதிகம் இதுபோன்ற காரியங்களைக் குறித்த தவறான கருத்துக்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்...!


நண்பரே என்னை தவறாக எண்ணவேண்டாம்;நான் உங்களுக்கெதிராக எதையும் எழுதவில்லை;தமிழ் கிறித்தவர்களுக்காக எழுதப்பட்டுள்ள உங்கள் கட்டுரையிலிருந்து பெற்ற தகவல்களை என்னுடைய வட்டாரத்தில் வைத்து ஒப்பிட்டு பார்த்தேன்;தமிழ் கிறித்தவத்தின் தலைநகரான சென்னையில் இது தான் தற்போதய நிலவரம்;எங்கோ ஒரு சிலர் அல்ல,பிரபலமாக இருக்கும் அனைத்து ஊழியர்களுமே இந்த மூடநம்பிக்கைகளை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.அதுவே அவர்களுடைய பிரபலத்துக்கும் காரணமாக இருக்கிறது;இணைத்துள்ள துண்டு படமே அதற்கு சாட்சி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
மந்திரம், மாயவித்தை பில்லி சூனியம் பற்றிய ஒரு ஆய்வுரைக் கண்ணோட்டம்
Permalink  
 


காலத்துக்கேற்ற உபயோகமான கட்டுரையினைப் பதித்தமைக்கு நன்றி, கோல்வின் தொடருங்கள்..!

Quote:
இந்துக்கள், பௌத்தர்கள் என்பவர்கள் மத்தியில் இந்த மந்திரம், மாயவித்தை, வசியம் என்பன பிரபல்யம்மடைந்து காணப்படுகின்றன. அதற்காக மற்றைய மதத்தவர்கள் இதனை செய்யவில்லை என்றல்ல. கிறிஸ்தவர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் இவற்றிலே நம்பிக்கையுடையவர்களாக இருக்கின்றன. இவைகள் மூலம் பல காரியங்கள் செய்து வருகின்றனர். இந்த மந்திரம், மாயவித்தை, வசியம் இம்மூன்றும் ஒன்றுல்ல, மூன்றுமே மூவகைப்பட்டவை. எனவே, கீழ்வருகின்றதான தலைப்பின் கீழே அவற்றின் ஆராய்ந்து பார்ப்பது நன்று

இது உண்மை நிலவரத்துக்கு மாறான கூற்றாகும்; இன்றைக்கு மாற்று மார்க்கத்தவரைவிட கிறித்தவர்களே அதிகம் இதுபோன்ற காரியங்களைக் குறித்த தவறான கருத்துக்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; அந்த எண்ணமானது மந்திரவாதிகளாலோ சூனியக்காரர்களாலோ தோற்றுவிக்கப்படவில்லை; தீர்க்கதரிசன ஊழியம் செய்வதாகச் சொல்லும் ஊழியர்களாலேயே தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

எப்படியெனில் ஒரு மோசடி ஊழியரோ அல்லது ஒரு மந்திரவாதியோ எடுத்துவிடும் ஒரு பொய்யை ஒரு அப்பாவியான நபர் (ஆணோ, பெண்ணோ..) ஊழியரிடம் வந்து சொல்லுகிறார், அதனை சற்றும் ஆராயாமல் ஏதோ தனக்கு சக்தியில்லை என்று தன்னிடம் ஜெபிக்க வந்தவர் நினைக்காதிருந்தால் சரி என்ற சுயநலத்தினால் அந்த கருத்தை ஊக்குவித்தும் ஆமோதித்தும் பேசி ஜெபிக்கிறார்; சுகமாவதற்கு தேவ வல்லமை மட்டுமே காரணமல்ல, சம்பந்தப்பட்டவர் மனோரீதியாக இன்னொரு பாஸிட்டிவ் சிந்தைக்கு மாறியதே. இப்படி தான் கதை ஓடுகிறது..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

 

இவ்வுலகிலே மூடநம்பிக்கைகளுக்கும், வீண்பிரயாசங்களுக்கும் மலிவில்லை. பண்டைய காலம் தொட்டு இன்றுவரை மந்திரம், பில்லிசூனியம், மாயவித்தை என்பவற்றிலே மக்கள் நம்பிக்கை வைத்து தமது பிரயாசங்களை வீணாக்கி பணங்களையும் அழித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வாழ்க்கையில் எவ்வித மாற்றங்களும் வளரச்சிகளும் இல்லை. இதனால் நோய்களும் விரோதங்களும் சமாதானமின்மையும் மரணமுமே நேரிடுகின்றன. இதையறியாமல் இதனை இன்பமாகவும், தமது வாழ்வின் ஆதாரமாகவும் நினைத்து இதற்கு அடிமையாவோர் ஏராளமாகவுள்ளனர்..

அசுத்த ஆவிகளுடன் தொடர்புட்ட இந்த செயல்களினால் இதனை செய்பவர்கள் அந்த அசுத்த ஆவிகளுக்கே அடிமையாகின்றனர். வாழ்வின் ஆயுளையே இதற்காக செலவிடுகின்றனர். உண்மையான கடவுள் ஒருவர் இருக்கிறார். அவர் ஏன் “இயேசுக்கிறிஸ்து“ என்பதை விசுவாசித்து, ஏற்றுக்கொள்ள, அந்த ஆவிகள் தடை செய்கின்றன. 

 

இரட்சிக்கப்படும் முன்இரட்சிக்கப்பட்ட பின்
மந்திரவாதிதேவஊழியன்
இடம் -  மத்துறட்டஓசன்னா சபை
பெயர் - பாலச்சந்திரன்பாலசந்திரன்

 

மந்திரம், மாயவித்தை, வசியம்

இந்துக்கள், பௌத்தர்கள் என்பவர்கள் மத்தியில் இந்த மந்திரம், மாயவித்தை, வசியம் என்பன பிரபல்யம்மடைந்து காணப்படுகின்றன. அதற்காக மற்றைய மதத்தவர்கள் இதனை செய்யவில்லை என்றல்ல. கிறிஸ்தவர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் இவற்றிலே நம்பிக்கையுடையவர்களாக இருக்கின்றன. இவைகள் மூலம் பல காரியங்கள் செய்து வருகின்றனர். இந்த மந்திரம், மாயவித்தை, வசியம் இம்மூன்றும் ஒன்றுல்ல, மூன்றுமே மூவகைப்பட்டவை. எனவே, கீழ்வருகின்றதான தலைப்பின் கீழே அவற்றின் ஆராய்ந்து பார்ப்பது நன்று

 

வசியம்

வசியம் என்பது ஐந்து விதங்களிலே செய்யப்படுகின்றது இதனை செய்பவர்கள் தம் முழு நம்பிக்கையும் அதன் மேல் செலுத்தியே செய்கின்றனர். அவ்வைந்து வசியங்களையும் கீழ்வருமாறு நோக்கலாம்.  

1. ராஜவசியம்

தேவைப்படும் நபர்களின் பெயர்களைப் பதித்து, அவர்களை வசியப்படுத்தி வைத்திருக்க வேண்டும் எனும் நோக்குடன் செய்யப்படுகின்றது. அநேகமாக யாரேனும் ஒருவர் எதிரியாக இருந்தால் அவரை தம்முடன் நன்றாகியிருக்க வேண்டுமென வசியம் செய்யப்படும்.

2. லோக வசியம்

இது ஜனங்களையும், தெய்வங்களையும் ஆவிகளையும் வசியம் செய்து கொள்வதை குறிக்கின்றது. லோக வசியம் அநேகமானேரால் நடைமுறையில் செய்யப்பட்டு வருகின்றது. கூடுதலாக இதனை பலரும் விரும்புகின்றனர். 

3. சர்வ வசியம்

இது இந்துக்களின் தெய்வங்களை வசீகரித்தலாகும். அதாவது அசுத்த ஆவிகளான 33 கோடி ஆவிகளையும் வசீகரித்து வைத்து, காரியங்களையும் செய்யும்படிக்கு செய்யும் வசியமாகும். 33 கோடி ஆவிகளையும் வசீகரப்படுத்தினால் மந்திரம் செய்யலாம். 

4. மிருக வசியம்

இது மனிதர்கள் தெய்வங்களை வசீகரப்படுத்தப்படுவதைப்போல மிருக ஜீவன்களையும் வசிகரித்தலாகும். உதாரணமாக எடுத்துக் கொண்டால் மிகவும் கொடூரமான நாய் இருக்கும் வீட்டில் களவு செய்ய வேண்டுமானால் அந்த நாயிலிருந்து தப்பும் முகமாக அதனை வசப்படுத்தச் செய்யும் வசியமாகும். 

5. ஆண் பெண் வசியம்

இது தமது காதல், திருமணம் என்பன தடைப்பட்டிருப்பவர்கள் ஆண் பெணையோ பெண் ஆணையோ வசியம் செய்து தமது காதல் ஆசையை அல்லது திருமணத்தினை நடாத்தும்படி வசியப் படுத்துவதாகும். இவ்வசியம் செய்யவதற்கு குறிப்பிட்ட நபரினதும் பாவனைப் பொருட்கள் தலைமயிர் என்பனவற்றுள் ஏதேனும் இருந்தால் தான் நல்லது இல்லாவிட்டாலும் வசியம் செய்யலாம். இவ்வசிய முறையானது இரண்டு முறைகளிலே செய்யப்படுகின்றது

1.சாதாரண தரம்

2. உயர்தரம்

 

சாதாரண தரம்

இதனைச் செய்ய நாட்கள் சற்று அதிகம் தேவைப்படும் இதற்கான பொருட்கள் சாப்பாடு, விபூதி, எண்ணெய், என்பவற்றைப் பயன்படுத்தி, சாப்பிடக் கொடுத்தால் அல்லது எண்ணெய் உடுப்புகளில் தேய்த்தால் அல்லது தலைமயிரில் தேய்த்தால் இது நாளடைவில் பலனளிக்கும் .இச்சாதாரணதர வசியமானது சற்று செலவு குறைந்தாக காணப்படுகின்றது.

 

உயர்தரம்

இவ்விசயம் செய்வதற்கு பணச்செலவானது சற்று அதிகமாகும். ஓர் ஆணுக்கு வசியம் செய்ய வேண்டுமானால் அந்த ஆணின் வலது காலில் ஒரு துளி இரத்தம் எடுத்து, அதனை மந்திர வசியம் செய்வதற்காக பயன்படுத்தும் ஐவகை எண்ணெய், மூலிகையுடன் கலந்து இரவு நேரத்திலே, வசியம் செய்பவரினதும் (யாருக்கு) செய்யும்படி சொன்னாரோ அவரின் பெயரையும் உச்சரித்து, மோகினி ஆவியின் பெயரைக் கூறி  ஒரு நாளுக்கு 1008 தடவையாக முறையாக 7 நாட்களுக்கு எந்திரம் வைத்து தேசிக்காய் எடுத்து எண்ணெயின் மேல் கொண்டு போகையில் எண்ணெயில் அசைவுகள் தென்படும். (இது ஆண் செய்ய வேண்டும்) இவ்வெண்ணெயினை பெண் சுண்டு விரல், உடுப்பு, நெற்றியில் வைத்து பார்த்தால் சாப்பாட்டில் கலந்து முதுகில் எந்திரம் வைத்து நினைத்தால் அவளுக்கு அது தெரியும். அப்போது வா என்று கூறினால் அவள் வருவாள். இதுதான் உயர்தர வசியமாகும். 

 

அசுத்த ஆவிகள்

வசியம் செய்யப்படுகையில் அசுத்த  ஆவிகளுடன் தொடர்பு ஏற்படுகின்றது. அசுத்த ஆவிகள் எனும் போது இந்து மத்த்திலுள்ள 33 கோடி தேவர்களையும் குறிக்கின்றது. ஆவிகளுடன் பேசுதல் என்பது தெய்வங்களின் ஆவிகளுடன் பேசுதல் என்று கூறுவர். இங்கு தெய்வத்தின் ஆவிகளாக இந்து தெய்வங்களையே குறிப்பிடப்படுகின்றது. இரண்டாவதாக செத்த மனித ஆவிகளுடன் பேசுதல் ஆவிகளோடு பேசுதல் எனப்படும். 

 

ஏவல் பில்லி சூனியம்

ஏவல் பில்லி சூனியம் என்பன தெய்வங்களின் ஆவிகளை ஏவி விடுதல் எனப்படும். இது பின்வரும் மூன்று முறைகளில் செய்யப்படும். 

தெய்வம் எனும் ஆவிகளை ஏவி விடுதல் – உம் - முனி, காளி, 

செத்த ஆவிகளை ஏவி விடுதல் – 

மிருகங்கள், ஊர்வனவற்றை ஏவி விடுதல் 

நாய் – கடிக்கும்படி

மாடு – முட்டும்படி

பாம்பு – கொத்தும்படி

 

மந்திரம் பில்லி சூனியம் வசியம் எனபவற்றால் ஏற்படும் விளைவுகள் யாவை?

1.பணவிரயம்

2.ஏமாற்றம்

3.மரணம் ஏற்பட வாய்ப்புண்டு

 

மாணவர்களது கேள்விகளும் விரிவுரையாளரின் பதில்களும்

கேள்வி :- செத்த ஆவியை எப்படி வசியம் செய்வது?

பதில் : ஒரு வீட்டிலே (இந்துக்களின்) ஒருவர் மரித்து அவரது கிரியைகள் முடிந்த பின்பு 8ம் நாளிலே ஆவிகளை வரவழைப்பர். அந்த ஆவிகளிடம் அந்நபர் எவ்வாறு இறந்தார்? எனக் கேட்பார்கள். அது எவ்வாறெனின் மந்திரம் செய்பவர் தனது உதவியாளருடன் இறந்தவர் வீட்டில் பிரவேசித்து இறந்தவருக்கு விருப்பமான பொருட்களை வைத்து, செத்தவரின் ஆவியை மந்திரங்கள் உச்சரிப்பதன் மூலம் அழைக்க வேண்டும். அப்போது குடும்பத் தலைவனின் மண்டையோடு எரித்த சாம்பலை தட்டிலே கொட்டி அதில் பெயர் எழுதி மந்திரம் உச்சரிப்பர். அதனிடம் கேள்விகள் கேட்பார்கள். ஆவி பதிலளிக்கும். இங்கு இறந்தவரின் ஆவியல்ல, அந்நேரத்தில் 33 கோடி தெய்வ ஆவிகளுள் ஒன்று வருகிறது. வீட்டார் நீ யார், என கேள்வி கேட்கையில் அது இறந்தவரின் பெயரைக் கூறும். எனவே மேற்குறிப்பிட்ட முறையின் மூலமாகவே இறந்த ஆவிகளை வசியம் செய்ய இயலும். 

 

கேள்வி  :- ஏவல் பிசாசு என்றால் என்ன?

பதில் :- ஆவிகளை மனுஷர் ஏவிவிடுதல், அதாவது எதிராளிகளின் குடும்பங்களை பிரிக்கும் எண்ணமாக ஆவிகளை ஏவி விடுதலைக் குறிக்கும். முரடனாக இருப்பவனுடன் மோத முடியாவிட்டால் நாய்கள், மாடுகள் என்பவற்றை ஏவி விடுதல், செத்த ஆவிகளை ஏவுதல், மற்றும் தெய்வ ஆவிகளான காட்டேரி, முனி, காளி என்பவைகளை வசியம் செய்து ஏவி விடுதல்

 

கேள்வி :- ஆவிகளை ஏவியபின் பிரதி உபகாரம் செலுத்த வேண்டுமா?

ஆம் ஏனெனில் கோழிகளை அநேகமாக இவ்வாறு இரத்தப்பலியாக செலுத்தி பிரதிஉபகாரம் செய்யவார்கள். பிழையான முறையிலே செய்தால் ஆவி ஆபத்தினை விளைவிக்கும். ஆதலால் செய்கின்ற பிரதியுபகாரத்தினை அந்த ஆவியை திருப்திப்படுத்தும் வண்ணம் நேர்த்தியாக இரத்தப் பலியாக செலுத்தலாம். 

 

கேள்வி :- செத்த ஆவியை எழும்பி வர வசியம் செய்கையில் அதற்கு உருவம் ஒன்று இருக்குமா?

பதில் :- இல்லை. ஆனால் அந்த ஆவியானது வசியம் செய்யும் வீட்டுக்கு யாரேனும் வந்திருந்தால் அவரக்ள் மூலம் அல்லது வேறு நபர்கள் மூலம் வெளிப்பட்டு பேசும். 

 

கேள்வி :- செய்வினை செய்யப்பட்டால் செய்யப்பட்ட நபர் அதை எடுக்க முடியுமா?

பதில் :- ஆம். யாருக்கு செய்வினை செய்யப்பட்டதோ, அவர்கள் செய்வினை செய்தவரிடம் வந்து , அவரிடம் விடயத்தினை கூறுகையில் அவர் வேறு ஆவிகளைக் கொண்டு, அந்த செய்வினையினை நீக்கிப் போட முடியும். 

 

கேள்வி – இயற்கையுடன் தொடர்பான மந்திரம் செய்ய முடியுமா?

முடியும். இயற்கையுடன் தொடர்ப்படுத்தி மந்திரம் செய்யும்போது தேவைக்கேற்ப பிரகாரம் செய்ய முடியும். இப்படி செய்வது குறிப்பிட்ட சில காலங்களுக்கு மட்டுமே நிலைத்திருக்கும். தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமானால் குறித்த கால அளவு முடிவடையும் போது மீண்டும் மீண்டும் அதனை புதுப்பித்து செயற்படுத்த முடியும். அவை அநேகமாக தொழில் போன்ற காரியங்களில் கையாளப்படுகின்றது. 

 

கேள்வி :- நோய் ஏற்பட என்ன வசியம் செய்ய வேண்டும். 

பதில் :- இது ஏவல் வசியம் எனப்டும். ஒருவருக்கு நோய் ஏற்பட்ட வசியம் செய்ய வேண்டுமாயின் அவரது காலடி மண்ணை எடுத்து, அவரது பெயரை உச்சரித்து சந்தனக் கட்டையினால் ஒ உருவம் செய்ய வேண்டும். ஆணுக்கு வசியம் செய்ய வேண்டுமானால் பெண் உருவமும். பெண்ணுக்கு வசியம் செய்ய வேண்டுமானால் ஆண் உருவமும் பின்னர் மாவினால் உருவம் ஒன்று செய்து, ஊசி, முட்டை என்பவற்றுடன் வைத்து ஊசியினால் முட்டையை குத்தும்போது யாருக்கு எதிராக வசியம் செய்யப்பட்டதோ அந்நபருக்கு அதே நேரம் உடலின் பகுதியில் குத்துக்கள்(வேதனை) ஏற்படும். 

 

கேள்வி :- அதிகமாக இரவு நேரம் மந்திரங்களை செய்வது என்பதைப் பார்க்கையில் மந்திரம் நேரம் என்பற்றுக்கு இடையில் தொடர்பேதும் உள்ளதா?

பதில் :- நேரம் என்பது முக்கியமில்லை. இரவு நேரங்களில் மந்திரங்களைச் செயக் காரணம் என்னவெனில் ஆட்களின் நடமாட்டமானது இரவு நேரங்களில் இல்லை என்பதனால் அமைதியான சூழ்நிலையினை அடிப்படையாகக் கொண்டு மந்திரங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் இதற்கு நல்ல நேரம் கெட்ட நேரம் என வேறுபாடு கிடையாது. எந்நேரமும் மந்திரம் செய்யலாம். 

 

கேள்வி:-உறுதியான சில விசுவாசிகள் அசுத்த ஆவிகளால் அலைக்கழிக்கப்படுகின்றனர். இது ஏன்?

பதில் :- உறுதியான விசுவாசிகள் என கணிப்பிடும் முறை தவறு. இரட்சிக்கப்பட்ட நீண்ட காலமாக இருந்தாலும், அவரது வாழ்க்கையில் மறைமுகமான பாவங்கள் காணப்படலாம். எனவே, இந்த இரகசிய பாவங்களில் அந்நபர் தொடர்ந்து ஈடுபடுகின்றபோது அசுத்த ஆவியின் இலக்கிற்கு ஆளாக வேண்டி ஏற்படும். உண்மையான விசுவாசிகளிடம் ஆவி செல்லாது

                                                                         (அடுத்த பதிப்பில் நிறைவு பெறும்)

 



-- Edited by colvin on Monday 2nd of May 2011 01:47:53 PM

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard