அண்மையில் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் ஏழை மாணவர்களை சேர்க்கமாட்டோம், அப்படி சேர்க்கும்படியான ஆணையை (அனைவருக்கும் கல்வி) ஏற்கனவே உள்ள பெற்றோர்கள் எதிர்க்கவேண்டும் என அப்பள்ளி நிர்வாகம் லாபி செய்தது, காரணம் ஏழை பிள்ளைகள் படிக்கும் போது மற்ற மேல்தட்டு பிள்ளைகளின் ஒழுக்கம் கெடுகிறதாம், இவர்களுக்கென்று தனிக்கவனம் செலுத்தவேண்டியுள்ளதால் ஆசிரியர்களும் தேவையற்ற பணிச்சுமைக்கு ஆளாகிறார்களாம். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் இப்பள்ளியை யார் நடத்துகிறார்கள் என (இணைப்பு செய்தியை படிக்க) இது தான் அவாளுக்கும் நம்மவாளுக்கும் உள்ள வித்தியாசம், அந்தகாலத்தில் தூரதேச பிரயாணம் வந்து பின் தங்கிய மக்களிடையே வந்து கல்வி, மருத்துவம் போன்ற சேவை செய்து பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உயர பாடுபட்டனர், மிஷனரிகள், இப்போதுள்ள அம்பிகளுக்கு அது போன்ற தியாகத்துடன் கல்வி கற்பிக்கவும் முடியவில்லை, மிஷனரிகளை பகடி செய்யாமலும் இருக்க முடியவில்லை. பின்னே, கறுப்பா இருக்கிறவா, கடைசி வர்ணத்துக்காரா எல்லாம் படிச்சுட்டா, எப்படி சகிச்சுக்கிறது. அவாளெல்லாம் பள்ளிக்கு வந்தா ஸ்டேன்டர்டு கெட்டுப்போயிடுமோல்லியோ....