eloi4u wrote:நீங்கள் ஒரு தவறு செய்து உங்கள் கணவர் ஊர் எல்லாம் போய் சொல்லி உங்களுக்கு புத்தி சொல்லச் சொல்லுகிறதாக வைத்துக் கொள்வோம், ஊரார் உங்களைப் பார்க்கும் போதெல்லாம் உங்களுக்கு ஏதோ அவர்கள் மணம் போன போக்கில் ஏதோதோ புத்தி சொல்கிறார்கள் என வைத்துக் கொள்வோம் உங்கள் கோபம் யார் மீது திரும்பும்? உங்கள் கணவர் மீது தானே? இதே தவறைத் தான் உங்கள் கணவரிடம் நீங்கள் செய்கிறீர்கள் அவரும் கோபப்படுகிறார். என்றேன்
இன்னும் புதுப்புது உறவுகள் மலர்வதற்கும் இதுபோன்ற வதந்திகளால் எழும் அனுதாப அலைகள் காரணமாக இருக்கிறது;வதந்திகளில் சிக்கும் ஆணும் பெண்ணும் மனதளவில் நெருங்கி வருவதற்கும் ஒருவருக்கொருவர் ஆறுதல் தேடுவதற்கும் காரணமாக இருக்கிறது;இதுவும் இன்னொரு பெண்ணாலேயே நடைபெறுகிறது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அந்த பெண்ணிற்கு 2 சிறு பிள்ளைகள். காலையிலும் வேலை. மாலையிலும் அவளுக்கு சரியான வேலை வீட்டில் உண்டு. வேலைக்கும் வர வேண்டும். பல நாள் சரியான தூக்கம் இல்லாமல் கண்ணெல்லாம் உள்ள போயிடும். ஒரு நாள் என்னிடம் சொன்னாள். மாமியார் உதவியே செய்ய மாட்டேங்கிறாங்க. கஷ்டமா இருக்கு என்று. மாமியாரை ஏன் வயசான் காலத்தில் கஷ்டப்படுத்துற, உன் கணவரை உதவி செய்ய சொல்லலாம் அல்லவா என்று சொன்னேன். அவர் சொல்வாராம் -- எனக்கு இந்த வீட்டு வேலை எல்லாம் பழக்கமில்லை. அத்துடன் நான் உனக்கு உதவி செய்தால் எங்க அம்மா என்ன நினைப்பாங்க என்று. எதுக்கு இவனுங்களுக்கெல்லாம் கல்யாணம் தேவைப்படுகிறது என்று நான் நினைத்துக் கொள்வேன். வேலைக்கு ஆள் வைக்க விடுவதும் கிடையாது. அது வீண் செலவாம். எப்பவும் அவளுக்கு எங்காவது வலித்துக் கொண்டுதான் இருக்கும். எனக்கு இரத்தக் கண்ணீர் தான் வரும் இப்படி கதை கேட்டால். இந்த பெண் தான் நன்றாக சம்பாதிக்கவும் செய்கிறாள். இப்ப இவ தான் லோன் போட்டு வீடும் கட்டப் போகிறாள். 2 பிள்ளைகள் உருவாக காரணமாக இருந்தது மட்டும் தான் அந்த ஆணின் பங்கு இக் குடும்பத்தில்.
மாமியார் மருமகள் நாத்தனார் உறவுமுறைகளில் சில சில விரிசல்கள் சண்டைகள் இருக்கும். அது தவிர்க்க முடியாதது நேற்று வந்தவள் ஆளுகை செய்வதா? என்ற நினைப்பு மாமியாருக்கும், நாத்தனாருக்கும், இருக்கும். இது என் வீடு என் குடும்பம் இதில் தலையிட இவர்கள் யார் என்று மருமகள்களுக்கும் இருக்கும். ஆனால் கனவனின் இருதயத்தை கைக்குள் போட்டுக்கொள்ளத் தெரியாத மனைவி நிச்சயம் கையாளாகாதவராகத்தான் இருப்பார் எனக்குத் தெரிந்து ஒரு சகோதரிக்கு தன் கனவன் மீது சந்தேகம், ஊரெல்லாம் போய் சொல்லி தன் கணவனை ஞாயம் விசாரிக்கச் சொன்னார், அவரை நான் பார்த்ததில்லை அடிக்கடி போன் செய்து எனக்கு கீழ் பணிபுரியும் அந்த பெண்ணைக் குறித்து விசாரித்துக் கொண்டே இருந்தார். ஒரு நாள் என்ன விசயம் என்று கேட்ட போது, அடக்கமுடியாமல் கதறி அழுதார்.
நீங்கள் ஒரு தவறு செய்து உங்கள் கணவர் ஊர் எல்லாம் போய் சொல்லி உங்களுக்கு புத்தி சொல்லச் சொல்லுகிறதாக வைத்துக் கொள்வோம், ஊரார் உங்களைப் பார்க்கும் போதெல்லாம் உங்களுக்கு ஏதோ அவர்கள் மணம் போன போக்கில் ஏதோதோ புத்தி சொல்கிறார்கள் என வைத்துக் கொள்வோம் உங்கள் கோபம் யார் மீது திரும்பும்? உங்கள் கணவர் மீது தானே? இதே தவறைத் தான் உங்கள் கணவரிடம் நீங்கள் செய்கிறீர்கள் அவரும் கோபப்படுகிறார். என்றேன்
இது தவிர வேறு ஏதேனும் உங்களுக்குள் பிரச்சனையா? என்றேன், இல்லை சார் என்றார். உங்கள் கணவர் மீது எத்தனை சந்தேகம் உள்ளதோ அத்தனை அன்பு செலுத்தி உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவாருங்கள், அவர் அன்பாய் உங்களிடம் பேசும் போது அவரிடம் நீங்கள் காணும் குறைகளை அவருக்கு எடுத்து சொல்லி புரியவையுங்கள். உங்களிடம் அவர் எவ்வளவு அன்பாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறீகளோ அத்தனை அன்பை அவருக்கு நீங்கள் முதலில் கொடுங்கள், உங்கள் இருவரின் புரிதலுக்கும் நடுவில் உங்கள் தகப்பன் தாயாரைக்கூட அனுமதிக்காதீர்கள். அவர்களிடம் கூட உங்கள் கணவரை விட்டுக்கொடுக்காதீர்கள் என்றேன். சரி முயற்சி செய்து பார்க்கிறேன் சார் என்றார்.
கடந்த வாரம் என்னை அலுவலகத்துக்கு சந்திக்க வந்து இப்போதெல்லாம் எங்களுக்குள் சண்டையே வருவதில்லை, அவர் என் மீது மிகுந்த அன்பாய் இருக்கிறார் நன்றி என்றார், பின்புதான் அவர் கிறிஸ்துவர் என்று தெரிந்தது. கிறிஸ்தவம் குறித்த சில ஆலோசனைகளையும் வழங்கி அனுப்பி வைத்தேன்.
பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் என்பதெல்லாம் உலகத்தாருடைய குழப்பமான போராட்ட களமாகும்;ஆனால் கிறித்தவ விசுவாசத்தில் உள்ளவர்களுக்கு இதைக் குறித்த தெளிவான போதனைகள் உண்டு; மனிதர்களுடைய குற்றங் குறைகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் மனிதர்களோடு மனிதர்களாக ஒப்பிட்டு கற்கவோ கற்பிக்கவோ முயற்சிப்பதைவிட இதைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்பதை அறிய விழைவதே அறிவுடைமையாக இருக்கும்.இது நீங்கள் நடத்திக்கொண்டிருக்கும் அனைத்து விவாதங்களைக் குறித்ததான எனது பொதுவான கருத்தாகும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
என் தாயார் சுகவீணப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது என் அப்பா 4 நாட்களும் தூங்கவில்லை அருகிலிருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டார்கள். இத்தனைக்கும் அப்படி நடந்து கொண்டபோது அவர்கள் வயதானவர்களாக இருக்கவில்லை மரிக்கும் போது என் தாயாரின் வயது 43 அப்படி பார்த்துக்கொண்டபோது என் தகப்பனாருக்கு வயது 44 அவ்வளவே, இத்தனைக்கும் அவர்களுக்கு அத்தனை ஆழமாகவெல்லாம் வேதவசனங்கள் தெரியாது
உங்க அப்பாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!. ஆனால் அப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.வசனம் பேசும் பலர் தான் அன்பற்றவர்களாய் இருக்கிறார்கள்.
ஆனால் கிறிஸ்தவ தம்பதிகளில் 100க்கு 99 விழுக்காடு எனக்குத் தெரிந்தவரையில் அப்படி இல்லை
அவருக்கு இனையாக யாரையும் நேசிக்க கூடாது என்றிருக்க இப்படி இனையாக நேசிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்தனை அபத்தம்?
வசனம் அப்படித்தானே சொல்லுது?
மேலும் வீடாளுபவர்கள் பெண்கள்தான் அப்படியிருக்க ஆணாதிக்கம், தாழ்ந்ததிலும் தாழ்ந்த ஜாதியாக பெண்கள் மதிக்கப்படுகிறார்கள் என்று சொல்வதெல்லாம் எங்கேயோ ஒருசில வீடுகளில் நடக்கும் விதிவிலக்குகள்.
நான் பார்த்த சில கதைகள்
--
பேப்பர் படித்துவிட்டு தூக்கி எறிந்து விட்டு போய் விடுவாராம். அதை உரிய இடத்தில் வைக்கச் சொன்னால் - எல்லா வீட்டிலேயும் பெண்கள் தான் இதையெல்லாம் செய்றாங்க. நீ என்ன என்னை அதிகாரம் பண்ற என்று கேட்பாராம். இருவரும் நன்கு படித்து வேலைக்குச் செல்பவர்கள்.
--
அந்த பெண்ணிற்கு 2 சிறு பிள்ளைகள். காலையிலும் வேலை. மாலையிலும் அவளுக்கு சரியான வேலை வீட்டில் உண்டு. வேலைக்கும் வர வேண்டும். பல நாள் சரியான தூக்கம் இல்லாமல் கண்ணெல்லாம் உள்ள போயிடும். ஒரு நாள் என்னிடம் சொன்னாள். மாமியார் உதவியே செய்ய மாட்டேங்கிறாங்க. கஷ்டமா இருக்கு என்று. மாமியாரை ஏன் வயசான் காலத்தில் கஷ்டப்படுத்துற, உன் கணவரை உதவி செய்ய சொல்லலாம் அல்லவா என்று சொன்னேன். அவர் சொல்வாராம் -- எனக்கு இந்த வீட்டு வேலை எல்லாம் பழக்கமில்லை. அத்துடன் நான் உனக்கு உதவி செய்தால் எங்க அம்மா என்ன நினைப்பாங்க என்று. எதுக்கு இவனுங்களுக்கெல்லாம் கல்யாணம் தேவைப்படுகிறது என்று நான் நினைத்துக் கொள்வேன். வேலைக்கு ஆள் வைக்க விடுவதும் கிடையாது. அது வீண் செலவாம். எப்பவும் அவளுக்கு எங்காவது வலித்துக் கொண்டுதான் இருக்கும். எனக்கு இரத்தக் கண்ணீர் தான் வரும் இப்படி கதை கேட்டால். இந்த பெண் தான் நன்றாக சம்பாதிக்கவும் செய்கிறாள். இப்ப இவ தான் லோன் போட்டு வீடும் கட்டப் போகிறாள். 2 பிள்ளைகள் உருவாக காரணமாக இருந்தது மட்டும் தான் அந்த ஆணின் பங்கு இக் குடும்பத்தில்.
--
எங்கள் வீட்டிலெல்லாம் என் தாயார் இருந்த நாட்களில் கூட விடுமுறை நாளான ஞாயிற்று கிழமைகளில் என் தகப்பனார் தான் சமைப்பார். பரிமாறுவார், என் தகப்பனாருக்கும் தாயாருக்கும் எனக்கு தெரிந்தவரை எந்த ஒரு சண்டையும் வந்ததில்லை, என் தாயார் தரும் ஆலோசனைகளை மதித்து முக்கிய முடிவுகளை என் தகப்பணார் எடுப்பார்.
அருமையான உங்க அப்பாவை நல்ல முன்மாதிரியாக வைத்துக் கொள்ளுங்கள்!
golda wrote:போன வருடம் கூட அவங்களுக்கு சிக்குன் குன்யா வந்த போது, (அம்மா வீட்டிற்கு அனுப்பி வைக்காமல்) லீவு போட்டு, இரவெல்லாம் முழித்திருந்து, வேலை எல்லாம் செய்து கொடுத்து அவங்களை நல்லா கவனித்துக் கொண்டேன் - இப்படியெல்லாம் நல்ல சாட்சி உள்ள ஆண்கள் அந்த வசனத்தை சொன்னால்தான் வசனத்துக்கு மரியாதை!! யார் யார் எப்படி என்று அவங்க அவங்க மனசாட்சிக்குத் தான் தெரியும்!!
என் தாயார் சுகவீணப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது என் அப்பா 4 நாட்களும் தூங்கவில்லை அருகிலிருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டார்கள். இத்தனைக்கும் அப்படி நடந்து கொண்டபோது அவர்கள் வயதானவர்களாக இருக்கவில்லை மரிக்கும் போது என் தாயாரின் வயது 43 அப்படி பார்த்துக்கொண்டபோது என் தகப்பனாருக்கு வயது 44 அவ்வளவே, இத்தனைக்கும் அவர்களுக்கு அத்தனை ஆழமாகவெல்லாம் வேதவசனங்கள் தெரியாது
golda wrote:மனைவியை இயேசு கிறிஸ்து நேசிப்பது போல் நேசிக்கிறேன்.அவங்களுக்காக என் உயிரையையும் கொடுப்பேன்.
அவருக்கு இனையாக யாரையும் நேசிக்க கூடாது என்றிருக்க இப்படி இனையாக நேசிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்தனை அபத்தம்?
மேலும் வீடாளுபவர்கள் பெண்கள்தான் அப்படியிருக்க ஆணாதிக்கம், தாழ்ந்ததிலும் தாழ்ந்த ஜாதியாக பெண்கள் மதிக்கப்படுகிறார்கள் என்று சொல்வதெல்லாம் எங்கேயோ ஒருசில வீடுகளில் நடக்கும் விதிவிலக்குகள். விதிவிலக்குகளை விவாதிக்க முடியாது. எத்தனையோ குடும்பங்களைப் பார்த்து இருக்கிறேன். நீங்கள் சொல்லுவது அபத்தமாக இருக்கிறது, கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருக்கிறது.
எனக்குத் தெரிந்து சரியான புரிதல் இல்லாத, அல்லது ஈகோ நிறைந்த கனவன் மனைவிக்குள் மாத்திரமே இப்படி அடக்கியாளும் செயல்கள் இருக்கின்றன.
எங்கள் வீட்டிலெல்லாம் என் தாயார் இருந்த நாட்களில் கூட விடுமுறை நாளான ஞாயிற்று கிழமைகளில் என் தகப்பனார் தான் சமைப்பார். பரிமாறுவார், என் தகப்பனாருக்கும் தாயாருக்கும் எனக்கு தெரிந்தவரை எந்த ஒரு சண்டையும் வந்ததில்லை, என் தாயார் தரும் ஆலோசனைகளை மதித்து முக்கிய முடிவுகளை என் தகப்பணார் எடுப்பார்.
கோல்டா சொல்வது என்னவோ எனக்கு புதுக்கதையாக இருக்கிறது
சகோதரி கோல்டாவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...ரொம்ப காயப்பட்டிருக்கீங்க'ன்னு தெரியறது...இந்த அண்ணனை இருக்கிறான் கவலைப்படாதீங்க..."உன் ஆசை அவனை பற்றி இருக்கும்,அவன் உன்னை ஆண்டுகொள்வான்" என்று அந்த ஆண்டவரே சபிச்சிட்டாரே...நீங்க எங்க தான் போவீங்களோ..? அண்ணன் நான் இருக்கேன்,என் வீட்டுக்கு வந்துருங்க... அண்ணிய அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிச்சிரலாம்...அடடா,இப்பவும் நான் அண்ணனாகவும் ஆணாதிக்கவாதியாகவும் அல்லவா கோல்டாவுக்கு தோன்றுவேன்...என்ன தான் செய்வது...? கண்ணீருக்குக் காரணமான சுரப்பிகள் வேலை அதிகம் வேலைசெய்யாததால் மன உளைச்சலில் தவிக்கும் ஆண்களுக்கும் ஆண்டவர் ஸ்வர்க்கத்தில் இடந்தருவாராக..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அப்ப, இயேசு கிறிஸ்து போல் உன்னை நேசிப்பேன். உனக்காக உயிரையும் கொடுப்பேன் என்று வசனத்தின்படி ஆண்களும் சொல்ல வேண்டும் அல்லவா?.அதை ஏன் சொல்ல மாட்டேங்கிறாங்க?
பரிசேயர்கள் பரிசேயர்கள் என்று ஒரு கூட்டம் இருந்தார்கள். அவங்கள மாதிரி வசனத்தை தலைகீழா கரைத்து குடிச்சவங்க யாரும் கிடையாது. வசனத்தை அப்படியே எழுத்து மாறாமல் கடைப்பிடிக்கவும் செய்வார்கள். ஆனால்அன்பு, இரக்கம், தயவு, நீதி என்று ஒன்றும் செயலில் இருக்காது. அவங்களைத்தான் ஆண்டவர் நல்லா காய்ச்சி எடுத்தாரு. இப்படித்தான் வசனத்தை டாண் டாணென்று ஆண்டவருக்கே ஒரு சமயம் சொல்லிக் கொடுத்து அவர் கீழ்படிகிறாரான்னு டெஸ்ட் பண்ணினார்கள். ஆனாலும் வசனமாகிய ஆண்டவர் மனிதர்கள் சொன்ன வசனத்தின்படி செய்யாமல் கல்லெறிபட்டு காயப்பட்டு சாகாதபடி ஒரு பெண்ணைக் காப்பாற்றினார்.
என்ன சொல்ல வர்றேன்னா, மனைவியை இயேசு கிறிஸ்து நேசிப்பது போல் நேசிக்கிறேன்.அவங்களுக்காக என் உயிரையையும் கொடுப்பேன்.போன வருடம் கூட அவங்களுக்கு சிக்குன் குன்யா வந்த போது, (அம்மா வீட்டிற்கு அனுப்பி வைக்காமல்) லீவு போட்டு, இரவெல்லாம் முழித்திருந்து, வேலை எல்லாம் செய்து கொடுத்து அவங்களை நல்லா கவனித்துக் கொண்டேன் - இப்படியெல்லாம் நல்ல சாட்சி உள்ள ஆண்கள் அந்த வசனத்தை சொன்னால்தான் வசனத்துக்கு மரியாதை!! யார் யார் எப்படி என்று அவங்க அவங்க மனசாட்சிக்குத் தான் தெரியும்!!
நீ பெண். நீ சமைக்கணும். துவைக்கணும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வது, நீ இந்த ஜாதி..இந்த வேலைதான் செய்யணும் என்று சொல்வதைப் போல அசிங்கமானது என்று ஏன் யாருக்கும் புரிய மாட்டேங்குது? கீழ் ஜாதியிலும் கீழாய் தான் பெண் மதிக்கப்படுகிறாள், அன்பை போதிக்கும் கிறிஸ்துவை தெய்வமாய் கொண்ட கிறிஸ்தவர்களாலும். அன்பு சகோ விஜய்(vijay76) ஆனாலும், அகிலப் புகழ் வாய்ந்த சகரியா பூணன் ஆனாலும், இது தான் பெண்கள் பற்றிய அவர்கள் மதிப்பீடு. அவர் வருகையில் தான் சரியாகுமோ? சீக்கிரம் வாங்க ஆண்டவரே!
நான் ஜெபம் பண்ணுவதுண்டு.பெண்ணாய் பிறந்ததினால் ஒரு சொட்டு கண்ணீர் யார் வடிக்க நேர்ந்தாலும், அவங்களை பரலோகத்திற்கு நீங்க கொண்டு வந்து விடணும் ஆண்டவரே என்று. கண்டிப்பாக பரலோகில் பெண்கள் தான் அதிகம் இருப்பார்கள். ஏனென்றால் சிறுமைப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களின் தேவன் அவரல்லவா.
//அன்பு கூருவேன் என்று சொன்னா போதாதா? ஏன் கீழ்படிவேன், பணிவிடை செய்வேன் என்றெல்லாம் வேலைக்காரி மாதிரி சொல்ல வைக்கிறாங்க- என்று யோசித்ததுண்டு. //
கிழே உள்ள வசனங்களால்தான்
ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் (எபேசியர் 5:24 )
அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள். (I பேதுரு 3:6 )
அன்பு கூருவேன் என்று சொன்னா போதாதா? ஏன் கீழ்படிவேன், பணிவிடை செய்வேன் என்றெல்லாம் வேலைக்காரி மாதிரி சொல்ல வைக்கிறாங்க- என்று யோசித்ததுண்டு.
---
Royal bride-to-be Kate Middleton has chosen to take the modern version of marriage vow that does not include the commitment to 'obey' the husband, according to the prayer book of the Church of England.
As part of the revised version of the prayer book, the bride in Church of England weddings is asked to take one of two vows: 1. '(Wilt) thou have this man to thy wedded husband, to live together after God's ordinance in the holy estate of Matrimony? Wilt thou obey him, and serve him, love, honour, and keep him in sickness and in health; and, forsaking all other, keep thee only unto him, so long as ye both shall live?'
2. '(Wilt) thou have this man to thy wedded husband, to live together according to God's law in the holy estate of Matrimony? Wilt thou love him, comfort him, honour and keep him, in sickness and in health? And, forsaking all other, keep thee only unto him, so, long as ye both shall live?' Kate has chosen the second version that does not include the word 'obey', according to details released on Thursday.