அருமையான கேள்விகள், பலமுறை இதில் உள்ள கேள்விகளை என் இந்து நண்பர்களிடம் கேட்டு மௌனத்தையே பதிலாக பெற்றுள்ளேன்.மறுபிறவி கொள்கை என்பது நியாயதீர்ப்பை மறக்கச்செய்ய சாத்தானால் சொல்லப்பட்ட வஞ்சகமான பொய் என்று சொன்னால் மிகையாகாது. அடுத்தபிறவி என்று ஒன்று இருக்கிறதே அதில் பார்த்துகொள்ளலாம் என்று நினைக்கும் மனிதன், தன் மரணத்திற்கு பிறகு, தன் கடைசி வாய்ப்பும் பறிபோனதை அறிந்தால்.....
எல்லாரும் போன பிறவியில் இருந்து மற்றும் ஒரு பிறவி எடுத்தவர்கள் என்றால் மக்கள் மற்றும் மாக்கள் தொகை குறைய அல்லவா வேண்டும்? ஏன் அதிகரிக்கிறது?
முதல் ஆத்துமா எப்படி உருவாக்கப்பட்டது?
எல்லா மனிதர்களும் கொஞ்சம், கொஞ்சமாக தங்களுடைய கர்மவினையை நீக்கி நல்ல ஆத்துமாக்களாக மாறிக்கொண்டு இருந்தால் உலகத்தில் ஏன் வர, வர கொலை மற்றும் குற்றங்கள் குறையாமல் அதிகரிக்கின்றன?
மறுபிறவி மற்றும் கர்மத்தில் நம்பிக்கையுள்ள இந்தியாவில் ஏன் வறுமையும், கொலை மற்றும் குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன?
நீங்கள் போன பிறவியில் என்ன தவறுசெயததால் முக்தி அடையாமல் இந்த பிறவியிலும் மனிதனாய் பிறந்துள்ளீர்கள்?
அப்படி என்ன தவறு செய்தோம் என்று தெரியாவிட்டால் அடுத்த பிறவியில் திரும்பவும் மனிதனாகவோ அல்லது கொசுவாக பிறக்க மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்?
உங்கள்ளுக்கு எவ்வளவு கர்மக்கடன் இருக்கிறது என்று தெரியுமா? அதை எப்போது தீர்த்து முடிக்கமுடியும் என்று தெரியுமா?
நிறைய தப்பு செய்து அடுத்த பிறவியில் ஒரு கொசுவாய் பிறந்தால் உங்களுக்கு என்ன நஷ்டம்? உங்களுக்கே போன பிறவியில் நீங்கள் யார் என்று தெரியாது அடுத்த பிறவியில் பிறக்கும் கொசுவுக்கு என்ன தெரியும்?
மிருகங்களுக்கு ஆத்துமா உண்டா? அப்படி என்றால் இரண்டு எலிகளுக்கு இடையே உள்ள நடவடிக்கையில் (behavioral) நல்விதிகளின் (Moral Lows) அடிப்படையில் வேறுபாடு காணமுடியுமா?
ஆத்துமா இல்லாத மிருகம் மற்றும் செடி கொடிகள் என்ன நல்ல காரியம் செய்து சூத்திரனாக மாறி, சத்திரியனாக மாறி பின்பு பிராமணனாக மாறி பரம்பொருளிடம் சேரமுடியும்?
-- Edited by John on Thursday 28th of April 2011 01:29:18 AM