நரகத்தில் முடிந்த வேதம் மறுபடி ஆதியாகமத்தில் இருந்து திரும்ப ஆரம்பிக்கும் என்பதே.
மறுபடி மனிதன் விலங்கிலிருந்து முன்னேறி ஆதாமாய் வருவான். அதன் பிறகு இன்னொரு உலகம் ஆரம்பிக்கும். இதே போன்று வேதம் திரும்ப கொடுக்கப்படும். அங்கும் அந்த நித்தியத்துக்குரிய இயேசு கிருஸ்து வருவார்.
எல்லா சிருஸ்டிகளும் பிரசவ வேதனைபட்டு தவிக்கின்றன. என வேதம் சொல்கிறது. எதற்கு என்றால் எல்லாம் மனிதனாக துடிக்கின்றன. மனிதனாக மாறுவதற்கான கியூவில் ஏராளமான உயிர்கள் நின்று கொண்டிருக்கின்றன. அதனாலேயே மனிதனாய் பிறப்பது மிகவும் அரிது என்று சொல்கின்றனர்.
மனிதனாய் பிறந்து நரகத்தில் வீழ்ந்து மிருகமாய் ஆனால் அடுத்த நித்தியத்திலேயே மனிதனாய் மறுபடி வந்து விடுவோம் என்ற உத்திரவாதம் இல்லை. சில சமயம் அதற்கு பல நித்தியங்கள் கூட ஆகலாம். இது, நமக்கு வேண்டிய ஒன்றுக்காக மிகப் பெரிய கியூவில் நின்று கொண்டு சிறிது, சிறிதாக முன்னேறி கவுண்டர் அருகில் வந்த போது அந்த வரிசையிலிருந்து விலகி கொள்வதை போன்றதாகும். அவ்வாறு விலகி விட்டால் மீண்டும் அந்த மிக நீண்ட வரிசையில் கடைசியாக போய் நிற்க வேண்டியதுதான். ஆகவே ஒரே பிறவியிலேயே உயர் நிலை அடைய வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை புரிந்து கொள்ளலாம்.
இப்படியே பல நித்தியங்களாக இரட்சிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும். பூமியில் இருக்கும் நாமும் பல நித்தியங்களாக தேவனை மறுதலித்து வந்தவர்களாக இருக்க கூடும். இதுவே ஆதாமுக்குள் நாம் தேவனுக்கு கீழ்ப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
நான் அப்படியே மிருகம் போலவே இருந்து விட்டால் பிரச்சனை இல்லையே. என்று சிலர் சொல்லலாம். ஆனால் அப்படியேயும் இருந்து விட முடியாது. ஏதாவது ஒரு நித்தியத்தில் மனிதனாக வந்தே ஆக வேண்டும். அதனால் இந்த பிறப்பு-இறப்பு சுழற்ச்சியில் இருந்து தப்ப முடியாது.
ஒரு மனிதன் மீதியாக இல்லாமல் எல்லாரும் இரட்சிக்கப்பட வேண்டும் எனபது தேவ சித்தமாகும். அது நிச்சயமாக நடக்கும். கடைசியாக தேவனை சென்று சேர்வது சாத்தானாக இருக்கும். இங்கே கேள்வி என்னவெனில் எத்தனையாவது நித்தியத்தில் ஒருவர் இரட்சிக்கப்படுவார் என்பதே. ஒரு நித்தியத்தில் நாம் செய்யும் பாவ / புண்ணிய பலன்கள் அடுத்த நித்தியத்தில் கூட வரும்.
இதைத்தான் மற்ற மத நூலகள் மறு பிறவி என்று சொல்கின்றன.
முன்பு ஒரு மனிதன் இறந்தவுடன் அவன் நியாத்தீர்ப்புக்காக காத்திருக்கிறான் என பார்த்தோம்.
இங்கே நியாயத்தீர்ப்புகாக காத்திருக்கும் போது என்ன நடக்கிறது என்பதை பின்னர் பார்ப்போம்.
(நியாயத்தீர்ப்புக்காக காத்திருக்கும் போது, ஒவ்வொரு ஆத்துமாவும் தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஏற்ப இன்பத்தையோ, துன்பத்தையோ அனுபவிக்கிறது. அது துன்பத்தை அனுபவிக்கும் போது பாதாளத்தில் உள்ளதாகவோ, நரகத்தில் (இது நியாயத் தீர்ப்புக்கு பின் வரும் நரகம் அல்ல) உள்ளதாகவோ சொல்லப்படுகிறது. இன்பத்தை அனுபவிக்கும் போது சொர்கத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
தேவனுக்குள் தங்கள் ஓட்டத்தை சரியாக ஓடி முடித்தவர்கள் இன்பமான உறக்கத்தை அனுபவிக்கின்றனர். பெயர் கிருஸ்துவர்கள் தங்கள் ஆசைகளாலும், துர்குணங்களாலும் (குற்ற மனப்பான்மை தவிர) துன்பத்தை அனுபவிக்கினறனர். இரட்சிக்கப்படாத கெட்டவர்கள் குற்ற மனப்பான்மை, ஆசைகள், துர்குணங்களால் தீமையை அனுபவிக்கின்றனர். இவர்கள் நல்லவர்களாக இருந்தால் இன்பத்தை அனுபவிக்கின்றனர்.
இவ்வாறு அனுபவிப்பது நிரந்தரம் அல்ல. ஒரு கால கட்டத்திற்க்கு பிறகு இவர்கள் அனைவரும் நியாயத் தீர்ப்புக்காக தேவனிடத்தில் வரும் வரையே இதை அனுபவிக்க வேண்டும்.) இப்போது முடிவாக எல்லாம் சேர்த்து
பிறப்பு - ஆன்மிக மறுபிறப்பு - சரீர மரணம் மற்றும் ஆத்தும அனுபவம் - புது பூமியில் மறுபிறப்பு அல்லது நரகத்தில் மறுபிறப்பு
அதன் பிறகு
நரகத்தில் மறுபிறப்படைந்தவர்கள் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
மறுபிறவி பற்றி சரியாக புரிந்து கொண்டால், அது எரியும் நரகத்தில் அழிவு என்பதை விட இந்த பிறவியிலேயே தேவனை சென்று அடைய வேண்டும் என்பதை மிக அழுத்தமாக சொல்வதை காண முடியும்,
வேதத்தில் மறுபிறவி என்பது மறைத்து வைக்கப்பட்டுள்ளது தவிர அது இல்லை என்று சொல்லவில்லை என்பதை அறிய முடியும். மேலும் இதன் மூலம் கீழ்கண்ட கேள்விகளுக்கும் பதில் கிடைக்கிறது.
1. எல்லா மனிதர்களுக்கும் இரட்சிப்பா?
2. அனியாயமாக எதற்கு ஒரு மனிதனை, அவரை அறியவில்லை என்ற காரணத்துக்காக நரகத் தீயில் தள்ள வேண்டும்? அவர் அன்பில்லாத தேவனா?
3. தேவ ஆவியோடு நம் ஆவி இணையா விட்டால் என்ன நடக்கும்? பெயர் கிருஸ்துவர்களின் கதி என்ன? (நரகத்துக்குத்தான் போவார்கள்)
4. மற்ற மதங்கள் சொல்லும் மறுபிறவி கொள்கை சரிதானா?
5. எதனால் உயிர்கள் வேறு, வேறு சூழ்னிலைகளில் பிறக்கின்றன? அதன் விதியை நிர்ணயிப்பது எது?
SANDOSH wrote:(இதற்கு மேல் இந்த தளத்தில் என் கருத்தை சொல்லக்கூடாது என்பதால் கீழ்கண்ட திரியில் சென்று காணவும்.)
நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்லதொரு கட்டுரையினைப் பகிர்ந்துகொண்ட நண்பர் சந்தோஷ் அவர்களுக்கு நன்றி;கலந்துரையாடல் தளம் என்பதே கலந்துரையாடவே என்பதால் நீங்கள் உங்கள் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்ட மேற்காணும் வரிகளை மறுக்கிறேன்;இங்கே நடைபெறும் எந்தவொரு விவாதத்திலும் நேரடியாகப் பங்கேற்க முழு உரிமையும் உண்டு என்பதால் நீங்கள் கொடுத்துள்ள தொடுப்பை நீக்கியிருக்கிறேன்.ஏனெனில் உங்கள் கட்டுரைக்கான எதிர்கருத்தையும் விவாதத்தையும் உங்களுடைய தளத்தில் தொடருவீர்களானால் இந்த திரியானது முழுமையடையாமற்போகும் ஆபத்து உண்டு.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
(எனக்கு தெரிந்த வேத ஆதாரத்தை கொண்டு இந்த கட்டுரையை எழுதியுள்ளேன். என் கண்ணுக்கு புலப்படாமல் ஏதாவது வேத வசனங்கள் இருக்குமானால் அதை சுட்டி காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.)
மறு பிறப்பு என்பது இல்லை என்று கிருஸ்துவர்கள் சொல்கின்றனர். ஆனால் இது அதிகப்பிரசங்கித்தனமான வேதத்தில் இல்லாத ஒரு செய்தியாகும். மறு பிறப்பு இல்லை என்பதற்க்கு ஏற்ற வசனங்கள் எதுவ்ம் வேதத்தில் இல்லை. மறுபிறப்பு இல்லை என்பதற்க்கு ஆதாரமாக அவர்கள் காட்டும் வசனம் இதுவே. இது எவ்வளவு குறைபாடுகள் உள்ளது என்பதை பார்ப்போம்.
இந்த வசனம் மறுபிறப்பை பற்றி எதுவும் சொல்லவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். இயேசு கிருஸ்து நீ மறுபிறப்படைய வேண்டும் என நாத்தான்வேலிடம் சொன்னார். அவ்வாறு மறுபிறப்பு அடைய வேண்டுமானால் முதலில் இறக்க வேண்டும். பின்பே பிறக்க முடியும். இங்கு அவன் வாழும் போதே உலகத்திற்க்கு மரித்து, ஆவியில் பிறக்க வேண்டும் என்பதைத்தான் சொல்லியிருக்கிறார் என்பது சரியானதாய் இருக்க முடியும். ஆகவே இங்கே சொல்லியிருக்கும் மறு பிறப்பை விட்டு விட்டு இந்த கேள்வியை ஆராய்வோம். ஆக இப்போது கேள்வி என்னவெனில்,
உடல் ரீதியாக ஒருவன் இறந்த பிறகு அவனுக்கு மறுபிறவு உண்டா, இல்லையா என்பதே.
முதலாவது மறு பிறப்பு என்றால் என்ன என்று பார்ப்போம். மறு பிறப்பு என்பது நம் வாழ்க்கையின் தொடர்ச்சி. ஆனால் இது வரை அறியாத இன்னொரு விதத்தில், இன்னொரு கோணத்தில் தொடருவது என்பதை புரிந்து கொள்ளலாம்.
ஒரு மனிதன் இறந்தால் அவன் சரீரத்தை விட்டு பிரிகிறான். அவன் ஆத்துமா மட்டும் உள்ளவனாக இருக்கிறான். லாஜிக்கலாக சொல்ல போனால் இதுவும் மறுபிறப்பே அதாவது உடலோடு பூமியில் வாழ்ந்த ஒருவன் இப்போது உடலில்லாமல் வெறும் ஆத்துமாவாக ஆவி உலகில் அடியெடுத்து வைக்கிறான். இதுவும் ஒருவகையில் மறுபிறப்பே. இந்த அனுபவத்தோடு கூட அவன் நியாயத்தீர்ப்புக்கு காத்திருக்கிறான்.
ஆக மரித்தல் என்பதற்க்கு அர்த்தம் முற்றிலுமாக அழிந்து போதல் / தனித்தன்மையை இழந்து போதல் என்பது இல்லாத வரை அந்த மரித்தல் என்பதும் இன்னொரு பிறவி என்பதும் ஒன்றுதான் என்பதை அறிய முடியும்.
மரித்த பிறகு ஆத்துமாவாக இருப்பதை மறுபிறவி என நான் எடுத்து கொள்ள மாட்டேன். இந்த பிறவியின் தொடர்ச்சி எனறே எடுத்து கொள்வேன் என ஒருவர் சொல்லலாம். அப்படியே வைத்துக் கொண்டு பிறகு நடப்பதை பார்போம்.
இப்போது இதுவரை சொல்லப்பட்டதை ஒன்றாக பார்ப்போம்.
பிறப்பு - (ஆன்மிக ரீதியிலான மறு பிறப்பு) - இறப்பு அல்லது ஆவியுலகில் பிறத்தல் அங்கே நியாயத்தீர்ப்புக்காக காத்திருத்தல்.
நாம் முதலில் பார்த்த பிரசங்கியின் வசனமானது இதைத்தான் சொல்கிறது / இதுவரைதான் சொல்கிறது என்பதை அறிய முடியும். மறுபிறப்பு உண்டு என்பதை சொல்லும் மற்ற மதத்தினரும் இதுவரை இதையேதான் சொல்கின்றனர் என்பதையும் அறியலாம். ஆகவே இதுவரை எல்லா மதமும் ஒன்றைத்தான் சொல்கிறது என்பதையும் பிரசங்கியின் இந்த வசனம் இதற்கு மேல் செல்லுபடியாகாது என்பதையும் அறிய முடியும்.
இப்போது கேள்வி என்னவென்றால் நியாயதீர்ப்புக்கு பிறகு ஆத்தும மனிதன் என்னவாகிறான். என்பதுதான்
ஒரு கூட்டம் புதிய பூமியில் வாழ தகுதி பெறுகிறது. அதாவது புதிய பூமியில் நித்தியமாக வாழ மறுபிறப்படைகிறது. எனபதை அறிய முடியும். இந்த மனிதர்களின் ஆத்துமா தேவ ஆவியினால் முதலிலேயே அழிக்கப்பட்டதாகும்.
இன்னொரு கூட்டம் நரகத்தில் தள்ளப்பட்டு தங்கள் ஆத்துமாவை இழக்கிறது. அதாவது நரகத்தில் மறு பிறவி எடுக்கிறது. இது இரண்டாம் மரணம் எனப்படுகிறது. ஏனெனில் முதலில் சரீரத்தை இழந்த மனிதன் இப்போது ஆத்துமாவை இழக்கிறான். முன்பே கூறியபடி ஒவ்வொரு மரணமும், ஒரு பிறப்பின் ஆரம்பமாகும். அதன்படி இங்கு ஆத்துமாவை இழந்த மனிதன் பிறக்கிறான்.
ஆத்துமா என்பது மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்றும் விலங்குகளுக்கு ஆத்துமா கிடையாது எனபதும் வேதம் சொல்லும் செய்தியாகும்.
அதனால் நரகத்தில் அவன் விலங்கை போல இருப்பான் என அறிய முடியும். இயேசு கிருஸ்துவும் அவனுடைய பூச்சி சாகாது என்று கூறுகிறார். அதனால் அவன் பூச்சியாக மாறுவான என அறியலாம். புதிய பூமியில் உள்ளவர்கள் கிருஸ்துவாக உயர்னிலை அடையும் போது இவன் மனித தன்மை இழந்து பூச்சியாக மாறுகிறான். அனேகமாக இது ஒரு "ஒரு செல்" உயிரினமாக இருக்க கூடும் என கருதுகிறேன்.
மனிதன் தன் ஆத்துமாவை இழக்கும் இந்த அனுபவமானது, எரியும் அக்கினியில் விழுவதாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. எப்படி அக்கினியில் போடப்பட்ட பொருள்கள் உருமாறுகிறதோ அப்படியே மனிதன் தன் ஆத்துமாவை இழப்பான்.
இந்த பகுதியோடு வேதம் முடிவு பெற்று விடுகிறது. இதன் பிறகு என்ன நடக்கும் என்பதை வேதம் சொல்லவில்லை.
இந்த உலகில் உள்ள எல்லாம் இறைத் தன்மையால் நிறைந்துள்ளது. அதனால் எதையுமே இலலாதபடிக்கு அழிக்க யாராலுமே கூடாது. ஒவ்வொரு அணுவும் கூட புத்தி உள்ளதாக இருக்கிறது என்பது அறிவியல் கூறும் செய்தியாகும். எனவே மனிதனை முற்றிலுமாக அழிக்க தேவனாலும் கூடாது. அது அவரை அவரே அழிப்பதற்க்கு சமானமாகும். இதுவே ஆற்றல் மாறா கோட்பாட்டிலும் வலியுறுத்தப்படுகிறது.
ஆக மனிதன் ஒருபடி கீழே விலங்காக போகலாம் அலல்து மேலே கிருஸ்துவாக போகலாமே தவிர அவனை இல்லாதபடிக்கு ஆக்க தேவனாலும் கூடாது. ஏனெனில் அவனில் இருப்பதும் இறைத் தன்மையே.
கிருஸ்துவ வேதமானது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தோடு அதாவது ஒரு நித்தியத்தோடு முடிந்து விட இந்து, புத்த, ஜைன மத நூலகள் அந்த கால கட்டத்தையும் தாண்டி செல்கிறது.
அப்படியானால் கிருஸ்துவ வேதத்தின்படி அதற்க்கு பிறகு என்ன நடக்கும் என்றால்.
என்னுடைய கருத்து:
(இதற்கு மேல் இந்த தளத்தில் என் கருத்தை சொல்லக்கூடாது என்பதால் கீழ்கண்ட திரியில் சென்று காணவும்.)
Dear Brother, I believe you are a Vaishnava, that is why you are talking about Vishnu being the creator of the world. According to Sivagothram, Sivan is the creator of the universe, and according to Sakthi, Maa Sakthi is the creator.. Please clarify who is the actual one.. In reality none of them.. Geeta is not the official book of the Hindus, please read the 4 Vedas and explain about the creation.. Please also let us know if there is any name given for the creator.. Please dont tell us that the name bramha is given, it actually means creator.. I cannot write creator and say he is God.. Also explain the role of Prajapathi and who it is.. Assume you have to pay 1lac to a bank. You have paid some money already, Imagine you got amnesia because of which you forgot everything. Now how will you know how how much you have already paid, how much is pending.. How can you be sure that you have to pay and not someone else.. If you don't have any of the details then how can substantiate to your payment. If God is an all knowing person, why he has not revealed these details to us.. Is it because he wants us to pay more than what we owe.. Is that why people get reincarnated again and again.. According to the Sivagothram reincarnation theory, the last life a person gets is Human, it starts with single sense and goes on to the sixth sense human. So it is not possible to became an animal after death and athma goes for judgement. This is contradicting to Baghawatham.. I humbly request my brother that you have to read the sacred books- the 4 Vedas with open mind and then you will know the truth. God bless you..
இந்த புனர்ஜென்மம், மறு பிறவி போன்றைவகள் இந்து மதத்திற்கு தொடர்புடையன அல்ல... மறுபிறவி கோட்பாடு உதித்தது புத்த சமயத்தில் இருந்து தான். பின்னாளில் இந்த மறுபிறவி கோட்பாடு இந்து மதத்திலும் புகுத்த பட்டது. ஆசையே அணைத்து துன்பங்களுக்கும் காரணம், இந்த ஆசையின் காரணமாகவே மனிதன் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்க வேண்டிய சூழல் உருவாகிறது என்று அறைகூவியர் புத்தரே.... இந்து மத வேதங்கள் அல்ல.. இந்த ருசிகரமான கோட்பாடு பின்னர் இந்து மதத்திலும் புகுத்த பட்டது. மனிதன் பாவம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கண்டுபிடிக்க பட்ட கற்பனை இது. நிற்க.
தமிழில் உள்ள சங்க இலக்கியங்கள் எவற்றிலும் மறுபிறவி கோட்பாடு வலியுறுத்த படவில்லை. இன்னும் சொல்ல போனால் மறுபிறவி பற்றி எங்கும் கூற படவே இல்லை. வடக்கிருந்து வந்த புத்த மதத்தினர் ஜைன மதத்தினர் மற்றும் ஸ்மார்த்த ( இன்றைய மொழியில் சனாதன தர்மம் என்னும் வெங்காயம்) ஆரியர்களால் தான் மறுபிறவி சரக்கு இங்கு இறக்குமதி செய்ய பட்டது. ஆகவே பிற்கால இலக்கியங்களான ( கி.பி 3 மூன்றாம் நூற்றாண்டுக்கு பின்) சீவக சிந்தமாணி, மணிமேகலை போன்ற புத்த ஜைன இலக்கியங்களிலும் மற்றும் தேவாரம் திருவாசகம் நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற பக்தி இலக்கியங்களில் மட்டுமே இந்த மறுபிறவி கோட்பாடுகளை காண முடியும். இவர்கள் சொல்லவருவது மனிதனின் ஞானதன்மையை கட்டி வைத்து இருக்கும் மாயையை அறுத்தால் பிறவி துன்பங்களில் இருந்து விடுப்படலாம் என்பதே. ஆனால் உண்மை என்னவென்றால் மறுபிறவி என்பதே ஒரு மாயை. ஒரு எடுத்துக்காட்டின் மூலம் சொல்ல வேண்டுமானால் நம் வீட்டில் நன்றாக எரிந்து கொண்டிருக்கும் ட்யுப் லைட் என்னும் விளக்கு திடீர் என்று எரியாமல் போனால் அது fuse பொய் விட்டது என்று அர்த்தம் அவ்வுளவு தான். அதற்காக அந்த விளக்கில் உள்ள ஆற்றல் வேறு ஒரு விளக்கிற்கு சென்று விட்டது என்று சொல்ல முடியுமா. அவ்வளவு தான் அதன் காலக்கெடு முடிந்துவிட்டது. அதை போன்று தான் நம் உடலில் இருக்கும் உயிர் ஆற்றலும். அதன் காலக்கெடு முடிந்து விட்டால் அது இந்த உடற்கூட்டை விட்டு அகன்றுவிடும். மிஞ்சி இருக்க போவது உயிரோடு இருந்த வரை நாம் செய்த பாவ புண்ணிய செயல்கள் மட்டுமே. அத்றர்க்கு பெயர் தான் கர்ம வினைகள் அதற்கான தீர்ப்பு இவ்வுலகின் இறுதி நாளில் எல்லாம் வல்ல ஆண்டவரால் மனிதர்களுக்கு அளிக்க படும். மறுபிறவி என்பது மக்களை ஏமாற்றும் ஒரு கவர்ச்சிகரமான ஒரு சொல்லாடல் அவ்வளவே. வேண்டுமானால் ஒன்று செய்யலாம் அதை வைத்து கொண்டு ஹிந்து மதத்தை காக்கும் போலி புன்னாகுகளான ஜகி வாசுதேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வேதாத்ரி, ராமகிருஷ்ண மடம், ரமணாஸ்ரமம் போல் "உங்களை நீங்கள் உணர்ந்து கொண்டு மெய்ஞானத்தை அடைந்து உங்களுக்குள் இருக்கும் இறைசக்தியை உணர்ந்து ஜீவன் முக்தி அடையலாம் வாருங்கள்!!! என்று கூறி அதற்கான கட்டணம் வெறும் 1000 டாலர் தான் என்று கூறி மேல்நாடுகளில் இருக்கும் அப்பாவி வெள்ளைகாரர்களை ஏமாற்றி பணம் பார்க்கலாம். அவ்வளவே... நன்றி ஆமென்
இந்த கலந்துரையாடல் தளத்தில் நாம் ஒருவருக்கொருவர் உரையாடும்போது நாம் இருவர் மாத்திரமல்ல, நூற்றுக்கணக்கான வாசகர்களும் வாசிப்பதன் மூலம் இதில் பங்கேற்கின்றனர்; எனவே அவர்களுக்கும் பயன்படும் வண்ணமாக எந்தவொரு கருத்தையும் தெளிவாக எழுதுமாறு வேண்டுகிறேன்;
மேலும் இந்த தளத்தின் புதிய உறுப்பினரான தங்களை நாங்கள் வரவேற்கும் வண்ணமாக முதலாவது உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டியது முக்கியமானதொரு நாகரீகமாகும்;அதற்கேற்ப இங்கே பகிரப்படும் கருத்துக்களைக் குறித்த உங்கள் எண்ணங்களை தெரிவிக்கலாம்; உங்களுடைய பின்னணியையும் நம்பிக்கைகளையும் பகிர்ந்துகொள்ளலாம்;
இதமான விவாதத்துக்கு நானும் யௌவன ஜனம் தளமும் எப்போதுமே ஆயத்தமாக இருக்கிறோம்; முதலில் அறிமுகம் பகுதிக்குச் சென்று உங்களைக் குறித்த விவரங்களைப் பதிந்து நண்பர்களுடைய வாழ்த்துக்களைப் பெறுங்களேன். வாழ்த்துக்கள்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
anc_ng wrote:முதல்மற்றும் எல்லா ஆத்மாபகவானால் விஷ்ணுவால் படைப்பின் போது உண்டாக்கப்பட்டது
Hello Friend! தங்களுக்கு இந்துமதமும் தெரியவில்லையே! முதலாவது தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தின் தத்துவங்களை சரியாக அறிந்து, பின் விவாதியுங்கள்.!
இந்துமத தத்துவப்படி படைப்புக் கடவுள் விஷ்ணு அல்ல, ப்ரம்மா என்பதைக்கூட அறியாதிருக்கிறீர்களே...!!!
anc_ng answer:
// hello friend! நீங்கள் கூறிய படைப்பு - ப்ரம்மா தான். ஆனால் இவர் உயிர்களை உருவாக்கவில்லை. நம் உடலை தான் உருவாக்குகிறார். இந்த உயிர் ஏற்கனவே விஷ்ணுவால் உலக படைப்பின் போது உருவக்கபட்டுவிட்டடு. (from பாகவதம்)
'இந்த ஜட இயற்க்கை என் கட்டளைபடி இயங்கி உற்பத்தி செய்கிறது. 'நானே எல்லோரின் விதை அளிக்கும் தந்தை(பகவத்கீதா 14-4)
இதுவே சனாதனதர்மமக்களின்(இந்துக்களின்) வேதங்களின் உண்மையான கருத்து.
//இது நம் உடல் அழியும்போது வேறு எதாவது உயிரினங்களின் (பிறப்பின்போது -கருவில்) உடலில்செல்கிறது//
நியூட்டன் விதிப்படி சக்தி இடம்மாறுவதை பிறப்புடன் ஒப்பிடுகிறீர்கள், பிறக்கும்போதுதான் உடலில் உயிர் சேர்கிறது என்கிறீர்கள், ஒரு கருவில் எப்போது உயிர் உண்டாகிறது என்பதைக்குறித்து முதலாவது ஏதாவது middle school புத்தகங்களில் தேடி வாசித்துவிட்டு பின்பு தொடருங்கள்...!!!
anc_ng answer:
//சாரி! ஒரு கரு உருவாகும் போதுதான் உயிர் உடலில் சேர்கிறது. கருவில் என்று எழுதுவற்கு பதில் பிறப்பின் பொது என்று தவறுதலாக வந்தது. தமிழ் transulation mistake
//இது நம் உடல் அழியும்போது வேறு எதாவது உயிரினங்களின் (-கருவில்போது) உடலில்செல்கிறது//
anc_ng wrote:முதல்மற்றும் எல்லா ஆத்மாபகவானால் விஷ்ணுவால் படைப்பின் போது உண்டாக்கப்பட்டது
Hello Friend! தங்களுக்கு இந்துமதமும் தெரியவில்லையே! முதலாவது தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தின் தத்துவங்களை சரியாக அறிந்து, பின் விவாதியுங்கள்.!
இந்துமத தத்துவப்படி படைப்புக் கடவுள் விஷ்ணு அல்ல, ப்ரம்மா என்பதைக்கூட அறியாதிருக்கிறீர்களே...!!!
//இது நம் உடல் அழியும்போது வேறு எதாவது உயிரினங்களின் (பிறப்பின்போது -கருவில்) உடலில்செல்கிறது//
நியூட்டன் விதிப்படி சக்தி இடம்மாறுவதை பிறப்புடன் ஒப்பிடுகிறீர்கள், பிறக்கும்போதுதான் உடலில் உயிர் சேர்கிறது என்கிறீர்கள், ஒரு கருவில் எப்போது உயிர் உண்டாகிறது என்பதைக்குறித்து முதலாவது ஏதாவது middle school புத்தகங்களில் தேடி வாசித்துவிட்டு பின்பு தொடருங்கள்...!!!
முதல்மற்றும் எல்லா ஆத்மாபகவானால் விஷ்ணுவால் படைப்பின் போது உண்டாக்கப்பட்டது
எல்லா மனிதர்களும் கொஞ்சம், கொஞ்சமாக தங்களுடைய கர்மவினையை நீக்கி நல்ல ஆத்துமாக்களாக மாறிக்கொண்டு இருந்தால் உலகத்தில் ஏன் வர, வர கொலை மற்றும் குற்றங்கள் குறையாமல் அதிகரிக்கின்றன?
நல்ல செயல் செய்யும் மக்கள் மிக மிக கம்மி. கோடியில் ஒருவர்
மறுபிறவி மற்றும் கர்மத்தில் நம்பிக்கையுள்ள இந்தியாவில் ஏன் வறுமையும், கொலை மற்றும் குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன?
நல்ல செயல்செய்யும் மக்கள் மிக மிக கம்மி. கோடியில் ஒருவர்
நீங்கள் போன பிறவியில் என்ன தவறுசெயததால் முக்தி அடையாமல் இந்த பிறவியிலும் மனிதனாய் பிறந்துள்ளீர்கள்?
இந்த பிறவியில் அல்லது நேற்று இந்த நேரத்தில் என்ன செய்தேன் என்றே நம்மால் சரியாக சொல்ல முடியாது. அப்புறம் போன பிறவியில் எப்படி தெரியும். எதோ போன பிறவியில் நல்லது பன்னனதுநல நமக்கு மனித பிறவி கிடசியிருக்கு
அப்படி என்ன தவறு செய்தோம் என்று தெரியாவிட்டால் அடுத்த பிறவியில் திரும்பவும் மனிதனாகவோ அல்லது கொசுவாக பிறக்க மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்?
நல்ல செயல்செயும். பைபிளில் சொனது போல...
உங்கள்ளுக்கு எவ்வளவு கர்மக்கடன் இருக்கிறது என்று தெரியுமா? அதை எப்போது தீர்த்து முடிக்கமுடியும் என்று தெரியுமா?
நிறைய தப்பு செய்து அடுத்த பிறவியில் ஒரு கொசுவாய் பிறந்தால் உங்களுக்கு என்ன நஷ்டம்? உங்களுக்கே போன பிறவியில் நீங்கள் யார் என்று தெரியாது அடுத்த பிறவியில் பிறக்கும் கொசுவுக்கு என்ன தெரியும்?
தெரியாது. தேவை இல்லாமல் மறுபடி மறுபடி இந்த உலகத்தில் பிறந்து கஷ்ட பட ஆசை இருந்தால் உங்கள் விருப்பம்
மிருகங்களுக்கு ஆத்துமா உண்டா? அப்படி என்றால் இரண்டு எலிகளுக்கு இடையே உள்ள நடவடிக்கையில் (behavioral) நல்விதிகளின் (Moral Lows) அடிப்படையில் வேறுபாடு காணமுடியுமா?
மிருகங்களுக்கு ஆத்துமா உண்டு. இதுபகவத்கீதா (2 -18 ) , etc .
வேதாகமம் ( வசனம்சரியாகபின்புகூறுகிறேன்) .
ஆத்துமா இல்லாத மிருகம் மற்றும் செடி கொடிகள் என்ன நல்ல காரியம் செய்து சூத்திரனாக மாறி, சத்திரியனாக மாறி பின்பு பிராமணனாக மாறி பரம்பொருளிடம் சேரமுடியும்?
மறு பிறவி இருகிறது. நம் எல்லோர் உடலிலும் உயிர் இருக்கிறது. இது ஒரு சக்தி. ஒரு சக்தியை அளிக்கமுடியாது. (நியுட்டன் விதி). எனவே இது நம் உடல் அழியும் போது வேறு எதாவது உயிரினங்களின் (பிறப்பின் போது- கருவில்) உடலில் செல்கிறது. இது நம் கர்ம வினை படி நடக்கும்(நம் செய்யும் நல்ல, கேட்ட செயல்களுக்கு ஏற்ப). எனவே ஏற்கனவே உள்ள ஜீவன்களே திருப்ப திரும்ப பிறக்கிறது. (போல் தோன்றுகிறது. ). இதனால் உயிர்கள் அதிகம் ஆகாது. இது பகவத் கீதா (2 -18 ) , etc . வேதாகமம் ( வசனம் சரியாக பின்பு கூறுகிறேன்) .
-- Edited by John on Thursday 28th of April 2011 01:29:18 AM
நல்ல கேள்விகள்!
இந்த கேள்விகள், மற்றும் சிவன் கதையெல்லாம் பிரிண்ட் செய்து இந்து நண்பர்களுக்கு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.
மறு பிறவி இருகிறது. நம் எல்லோர் உடலிலும் உயிர் இருக்கிறது. இது ஒரு சக்தி. ஒரு சக்தியை அளிக்கமுடியாது. (நியுட்டன் விதி). எனவே இது நம் உடல் அழியும் போது வேறு எதாவது உயிரினங்களின் (பிறப்பின் போது- கருவில்) உடலில் செல்கிறது. இது நம் கர்ம வினை படி நடக்கும்(நம் செய்யும் நல்ல, கேட்ட செயல்களுக்கு ஏற்ப). எனவே ஏற்கனவே உள்ள ஜீவன்களே திருப்ப திரும்ப பிறக்கிறது. (போல் தோன்றுகிறது. ). இதனால் உயிர்கள் அதிகம் ஆகாது. இது பகவத் கீதா (2 -18 ) , etc . வேதாகமம் ( வசனம் சரியாக பின்பு கூறுகிறேன்) .
சகோ ஜான் கலக்குவது இருக்கட்டும். உங்களுக்கு போஸ்ட் பண்ணத் தெரியலைதானே!
இரண்டாவது வரிசையில் 10 வது சிம்பல் T என்று இருக்கும். அதை கிளிக் செய்து notepad/wordpad இல் நீங்க டைப் செய்ததை காபி - பேஸ்ட் செய்து போடவும். Word இல் டைப் செய்திருந்ததால் இறுதியில் உள்ள W என்ற சிம்பலை உபயோகப்படுத்தவும்.
நேரடியாக copy-paste செய்தால் இப்படித்தான் இஷ்டத்திற்கு வரும். இது தெரியாமல் நானும் முழித்திருக்கிறேன்.
நன்றி சகோதரி . இனி இந்த பிழை வராமல் பார்த்துகொள்கிறேன்
-- Edited by jesus_my_love on Friday 29th of April 2011 09:32:36 AM
உலகத்தார் (பரத்தின் சிந்தனை இல்லாதோர்) யாவரும் மறுஜென்மம் என்று ஒன்று இருப்பதை விரும்புகிறார்கள். அதனால் தான் அவர்கள் மறுஜென்மம் என்று ஒன்று இருப்பதாக நம்புகிறார்கள், வலியுறுத்துகிறார்கள். ஏன் என்றால் அவர்களுக்கு இந்த பாவம் நிறைந்த உலகம் பிடித்திருக்கிறது. மீண்டும், மீண்டும் இந்த உலகில் பிறந்து, இந்த உலக சந்தோஷங்களை (பாவங்களை) அனுபவிக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். பரத்தை பற்றி அவர்கள் நினைப்பதில்லை, ஏனென்றால் அவர்களுக்கு அதில் இடமில்லை.
சற்றே கடுமையாக தோன்றினாலும் இது உண்மையே.
Bro.John,
Where ever you post, the message will go to the right person. So, dont worry.
உற்சாகப்படுத்தியதற்கு நன்றி சகோதர, சகோதரிகளே! இது ஏறத்தாழ ஒரு 5 வருடங்களுக்கு முன்பு ஒரு சகோதரருடைய தளத்திற்காக நான் எழுதிய கட்டுரையில் இருந்து எடுத்தது. முழு கட்டுரையையும் வசிக்க இங்கே சொடுக்கவும். மறுபிறப்பு என்ற சாத்தனுடைய பொய்தான் ஜனங்களை வஞ்சித்து பாவம் செய்ய ஊக்குவிக்கும் மிகபெரிய பொய் என்று நினைத்து கொண்டிருந்த என்னை "அசத்தல் ராஜாக்களான" ரசலின் சீஷர்கள் "எல்லாரும் பரலோகம் (யூதாஸ் , அந்தி கிறிஸ்து, கள்ள தீர்க்கதரிஷி உட்பட) போவர்கள்" என்று சொல்லி மூக்கில் விரல் வைக்க செய்து விட்டார்கள்! பவுலை விட யூதாஸ் தேவலை! பவுல் அடிபட்டு, செத்து பிழைத்து கடைசியில் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டதாக அறிகிறோம் ஆனால் யுதாசோ நாண்டு கொண்டு சுலபமாய் செத்து பரலோகம் போய் விட்டான்.
நான் தவறான Forum (Hindu - Christian) ல் வந்து புலம்புவதை சகோ. அசோக் குமார் மன்னிக்கவும்
சகோ ஜான் கலக்குவது இருக்கட்டும். உங்களுக்கு போஸ்ட் பண்ணத் தெரியலைதானே!
இரண்டாவது வரிசையில் 10 வது சிம்பல் T என்று இருக்கும். அதை கிளிக் செய்து notepad/wordpad இல் நீங்க டைப் செய்ததை காபி - பேஸ்ட் செய்து போடவும். Word இல் டைப் செய்திருந்ததால் இறுதியில் உள்ள W என்ற சிம்பலை உபயோகப்படுத்தவும்.
நேரடியாக copy-paste செய்தால் இப்படித்தான் இஷ்டத்திற்கு வரும். இது தெரியாமல் நானும் முழித்திருக்கிறேன்.
எல்லாரும் போன பிறவியில் இருந்து மற்றும் ஒரு பிறவி எடுத்தவர்கள் என்றால் மக்கள் மற்றும் மாக்கள் தொகை குறைய அல்லவா வேண்டும்? ஏன் அதிகரிக்கிறது?
முதல் ஆத்துமா எப்படி உருவாக்கப்பட்டது?
எல்லா மனிதர்களும் கொஞ்சம், கொஞ்சமாக தங்களுடைய கர்மவினையை நீக்கி நல்ல ஆத்துமாக்களாக மாறிக்கொண்டு இருந்தால் உலகத்தில் ஏன் வர, வர கொலை மற்றும் குற்றங்கள் குறையாமல் அதிகரிக்கின்றன?
மறுபிறவி மற்றும் கர்மத்தில் நம்பிக்கையுள்ள இந்தியாவில் ஏன் வறுமையும், கொலை மற்றும் குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன?
நீங்கள் போன பிறவியில் என்ன தவறுசெயததால் முக்தி அடையாமல் இந்த பிறவியிலும் மனிதனாய் பிறந்துள்ளீர்கள்?
அப்படி என்ன தவறு செய்தோம் என்று தெரியாவிட்டால் அடுத்த பிறவியில் திரும்பவும் மனிதனாகவோ அல்லது கொசுவாக பிறக்க மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்?
உங்கள்ளுக்கு எவ்வளவு கர்மக்கடன் இருக்கிறது என்று தெரியுமா? அதை எப்போது தீர்த்து முடிக்கமுடியும் என்று தெரியுமா?
நிறைய தப்பு செய்து அடுத்த பிறவியில் ஒரு கொசுவாய் பிறந்தால் உங்களுக்கு என்ன நஷ்டம்? உங்களுக்கே போன பிறவியில் நீங்கள் யார் என்று தெரியாது அடுத்த பிறவியில் பிறக்கும் கொசுவுக்கு என்ன தெரியும்?
மிருகங்களுக்கு ஆத்துமா உண்டா? அப்படி என்றால் இரண்டு எலிகளுக்கு இடையே உள்ள நடவடிக்கையில் (behavioral) நல்விதிகளின் (Moral Lows) அடிப்படையில் வேறுபாடு காணமுடியுமா?
ஆத்துமா இல்லாத மிருகம் மற்றும் செடி கொடிகள் என்ன நல்ல காரியம் செய்து சூத்திரனாக மாறி, சத்திரியனாக மாறி பின்பு பிராமணனாக மாறி பரம்பொருளிடம் சேரமுடியும்?
-- Edited by John on Thursday 28th of April 2011 01:29:18 AM
நல்ல கேள்விகள்!
இந்த கேள்விகள், மற்றும் சிவன் கதையெல்லாம் பிரிண்ட் செய்து இந்து நண்பர்களுக்கு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.