Bro Chillsam: இது ஒரு நல்ல கேள்வி...மெய்யாகவே உணர்வுடன் கேட்கப்பட்ட நல்ல கேள்வி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை...இதற்கு நிச்சயமாகவே பதில் சொல்லவேண்டும் என்ற விருப்பமும் எனக்கு உண்டு;ஆனால் பதில் சொல்லும் நிலையில் நான் இல்லையே...என்ன செய்வது..?
வெங்காயம் உரித்துக் கொண்டிருப்பதால் தற்சமயம் பதில் சொல்ல இயலாத நிலையில் இருக்கிறார்!!
எல்லாம் சரி சகோ. சில்சாம் நீங்க சமையலில் மனைவிக்கு உதவ மாட்டீர்களா?
உங்கள் நண்பர்கள் இப்படி சலசலத்தால் உங்கள் பதில் எப்படியிருக்கும்?
இது ஒரு நல்ல கேள்வி...மெய்யாகவே உணர்வுடன் கேட்கப்பட்ட நல்ல கேள்வி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை...இதற்கு நிச்சயமாகவே பதில் சொல்லவேண்டும் என்ற விருப்பமும் எனக்கு உண்டு;ஆனால் பதில் சொல்லும் நிலையில் நான் இல்லையே...என்ன செய்வது..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
எனது மனைவி அவ்வப்போது பேச்சுவழக்கில் ஏதாவதொரு "ஹிட்" அடித்துவிட்டு போவது வழக்கம்;இன்று காலையில் அதுபோலவே ஒரு "ஹிட்" 70 வயதான எனது குண்டு மாமியார் (நான் கணிணி முன்பாக சுழல் நாற்காலியில் அமர்ந்திருக்க அவர்கள் என்னருகில் எனது கட்டிலின் நடுவே வந்து அமர்ந்ததும் கட்டில் கதறும்..!) அவ்வப்போது ஏதாவது கனவு கண்டுவிட்டு அதை என்னிடம் பகிர்ந்துகொள்ளத் துடிப்பது வழக்கம்;நான் அதற்குரிய சாதகமானதொரு விளக்கத்தைச் சொல்லவேண்டுமென்று எதிர்பார்ப்பார்;சொன்னாலும் என்னுடைய அறையிலிருந்து எழுந்துபோகாமல் நான் செய்துகொண்டிருக்கும் வேலைகளைச் செய்யவிடாமல் குழந்தைமாதிரி தொடர்ந்து வேறு சில புதிய கதைகளையும் அவர்களுடைய சில ஃபீலிங்ஸையும் எடுத்துவிட்டுக் கொண்டேயிருப்பார்;அவர்களை ஒருவாறாக மனம்புண்படாத வண்ணம் சமாளிப்பது பெரிய சோதனையாகும்;அவர்கள் சொல்லும் கனவுகள் பெரும்பாலும் இயற்கைக்கு மேற்பட்டதாகவும் அவர்கள் எதிர்பார்க்கும் விடைக்கு மிக சமீபமாகவுமே இருக்கும்;ஆனாலும் அதை நம்முடைய வாய்மொழியாக கேட்பதில் அவர்களுக்கு அலாதி ஆனந்தம்.
இன்று அப்படியே தான் ரெண்டு நாளுக்கு முன்பு கண்ட கனவாக எனது மாமியார் சொன்னது: "ஒரு பெரிய தோட்டம் அதில் வேலியோரம் நிறைய மரங்கள் வரிசையாக இருக்கிறது;அவற்றில் சில கனிகளில்லாமல் காய்ந்துபோயிருக்கவே வெட்டிப்போட வேண்டுமென்று யாரோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்;அவர்களில் ஒருவர் ரொம்ப பெரியவராக இருக்கிறார்;அவர் சொல்லுவதே அங்கு அதிகாரமாக இருக்கிறது;அந்த தோட்டத்தில் நடுவே ஒரு பெரிய பழைய மாமரம் அதிஉயரமாக அழகாக இருக்கிறது; அதிலும் கனிகளில்லாததால் அதையும் வெட்டிப்போடவேண்டுமென்று பேசப்படுவதைக் கேட்டு அண்ணாந்து பார்த்தால் உச்சியில் இயற்கைக்கு மாறுபட்ட பெரிய அளவில் நிறைய மாங்கனிகள் இருக்கிறது;ஒவ்வொன்றும் நல்ல பெரிய சைஸில் இருக்கிறது;உடனே நான் சொல்லுகிறேன்,அதோ பாருங்கள்,உச்சியில் எவ்வளவு பழங்கள் இருக்கிறது,என்பதாக;இதுகென்னப்பா அர்த்தம்?" என்று அப்பாவியாகக் கேட்டார்கள். இதற்கு என்ன அர்த்தம் சொல்லுவோமென்று தெரியாதா? அதைச் சொன்னதும் சந்தோஷத்தோடு தனது மருமகளைக் குறித்த சில வருத்தங்களைப் பகிர்ந்துகொள்ளத் துவங்கிவிட்டார்கள்;எனது பரிதாப நிலையை உணர்ந்த எனது பாரியாள்,"அம்மா இந்த பூண்டை கொஞ்சம் உரிச்சி குடுங்க" என்று தனது தாயாரை அழைக்கவும் நான் தப்பித்தேன்; தொடர்ந்து அடிச்சிவிட்டாள், ஒரு ஊசிவெடி,"கனவில் கண்டதைச் சொல்லச் சொன்னால் கண்டதையும் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே, என்பதாக..!
இதில் இன்னொரு பெரிய என்ன ஒரு காமெடி என்னவென்றால் நேற்றே எல்லா பூண்டையும் உரித்தாகிவிட்டது;தெரியாமல் அவசரப்பட்டு எழுந்து வெளியே சென்று சிரித்துக்கொண்டிருந்தார்கள்,குடும்பமாக..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)