cricket ஏன் இவ்வளவு புகழ் அடைந்தது என்று எனக்கு புரியவில்லை. எப்படியோ cricket ஒரு விளையாட்டாய் இருந்தாலும் அது மனிதனின் இன்னொரு பக்கத்தை காட்டுவதாகவே உள்ளது ... அது என்ன , மறுபக்கம் .... கொஞ்சம் யோசிங்க ....
என்று அப்படியே உங்களை மிகவும் யோசிக்க வைத்துவிட்டேன் . உலக கோப்பை நடக்கும் இந்த சமயத்தில் கிரிகெட்டை நம்மோடு ஒப்பிடுவது இன்னும் அர்த்தமுள்ளதாகவே இருக்கும் என நினைக்கிறேன்.
முதலாவது stumps and bails :
ஒவ்வொரு stumps ஐ ஆவி , ஆத்துமா , சரிரம் என சொல்லலாம் . இதை தான் பொதுவாக உடல்,பொருள், ஆவி என்று சொல்கிறோம் நாம் முதலாவது ஆவிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் , ஆனால் நாம் சரிரதிற்க்கு முதலிடம் கொடுக்கிறோம் ... வேதத்தில் ஆவிக்கு முதலிடம் கொடுத்து ஆவி ,ஆத்துமா ,சரிரம் என்றே கூறப்பட்டு இருக்கிறது . bails ஐ ஆவியையும் ஆத்துமாவையும் இணைக்கக்கூடியஆவிக்குரிய சிந்தை என்றும் ஆத்துமாவையும் சரிரத்தையும் இணைக்ககூடிய மாம்சச்சிந்தை என்றும் சொல்லலாம் .
சிந்தைகள் நாம் யார் என்பதை தீர்மானிக்கிறது .
ஆவியையும் ஆத்துமாவையும் இணைக்கக்கூடியஆவிக்குரிய சிந்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் நாம் தேவனிடத்தில் அதிக நட்டமுடையவர்களாய் இருப்போம் .