Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விரைவில் வர இருக்கும் இந்து கோயில்கள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
விரைவில் வர இருக்கும் இந்து கோயில்கள்
Permalink  
 


திருச்சிக்காரனுக்கு தற்போது எழுத வரவில்லை போலிருக்கிறது. நமது தளத்தில் உள்ள கட்டுரைகளை தனது தளத்தில் பதித்து மகிழ்கிறார். அதன் பின்னே உள்ள சூது என்னவென்றால், தனது அடியாட்களுடன் நம்மை அங்கு திட்டி தீர்ப்பார்கள். இவரே ஒரு பக்கம் திட்டி விட்டு, திட்ட தூண்டி விட்டு, பிறகு இப்படி எல்லாம் நாம் திட்ட கூடாது என்று நல்லவன் வேடம் போடுவார்.  போடட்டும், வேடதாரியை வணங்குபவர்தானே, அப்படிதான் இருப்பார்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

விரைவில் வர இருக்கும் இந்து கோயில்கள்
 
நம் நாட்டில் குஷ்புவிற்கும் நக்மாவிற்க்கும் கோயில் கட்டி புரட்சி செய்தனர். இப்போது சிலர் இந்துத்துவத்தை நடத்தி செல்ல நினைக்கும் பாதையை பார்க்கும்போது, கீழே கொடுக்கப்பட்ட பெயர்களில் கோயில்கள் வந்தாலும் ஆச்சரியம் இல்லை.
  • எங்க வீட்டு பிள்ளை கோவில்
  • உலகம் சுற்றும் வாலிபன் கோயில்
  • மலைக்கள்ளன் கோயில்
  • ஆயரத்தில் ஒருவன் கோயில்
 
என்னடா இது, எல்லாம் MGR பட பெயரா இருக்குன்னு பார்கறீங்களா... அது ஒன்னும் இல்லைங்க, நான் எழுதுவதற்கு நல்ல நல்ல தலைப்புகள் எல்லாம் எடுத்து தருபவர், திருச்சிக்காரன் என்ற ஒருவர். சில சமயம் நம்ம சில்சாம் அண்ணன்கூட (பெரிய மனது காரணமாய்) அவரை புகழ்ந்து எழுதி இருப்பதை படித்திருப்பீர்கள். அதைகூட, அந்த விளம்பரவிரும்பி, தன் தளத்தில் போட்டு, தான் நல்லவன் நாகரீகமானவன் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துகொண்டார். என்னடா, கோயில் பற்றி சொல்லவந்தவன், யாரையோ பற்றி பேசுகிறானே என்று நினைக்கவேண்டாம். இவருக்கு நான் நிறைய நன்றி கடன் பட்டிருக்கிறேன். வெறுமனே பின்னூட்டம் இட்டுகொண்டிருந்த நான் கட்டுரை எழுத, ஊக்குவிக்கபட்டதே இவரால்தான். 
அவருடைய தள கட்டுரைகளை படித்தவர்களுக்கு புரியும் அவருடைய கடவுள் கொள்கைகள் என்னென்னவென்று. கடவுளுக்கான அவருடைய இலக்கணங்கள்:
  • சர்வாதிகார கொடுங்கோலனை எதிர்க்க வேண்டும்
  • சமத்துவ கொள்கை வேண்டும்
  • அணைத்து மதங்களையும் உண்மை என்று நம்பும் (முட்டாளாக) ஆளாக இருக்க வேண்டும் (முக்கியமாக இந்துத்துவத்தை).
 
நாம் மேற்கூறிய அனைத்தும் பல இந்து தெய்வங்களை விட MGR க்கு பொருந்தும். இவர்களை பொறுத்தவரை கடவுள் என்பவர் உண்மையாய் இருக்க வேண்டும் என்பதோ, நம்மை படைத்தவராக இருக்கவேண்டும் என்பதோ இல்லை. அவர்கள் கற்பனைக்கு பொருத்தமான ஆளாக இருக்க வேண்டும். அவ்வளவே. மேலும் இப்போது திருச்சிக்காரன் ஒரு கோயில் கட்டி அதற்க்கு அனைவரையும் (round robin ) முறைப்படி அனைவரையும் அர்ச்சகராக்க கனவு கண்டு கொண்டு இருக்கிறார். அதனால்தான் அவருக்கு உதவியாய் சில கோயில் பெயர்களை நாம் எடுத்து கொடுத்தோம். இன்னும் சில படையப்பா கோயில், சிவாஜி கோயில், எந்திரன் கோயில் போன்றவையும் வரலாம்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard