Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இரஸலியன் பேதமாணவர் கூட்டத்தாருக்கு சுந்தர் ரிவீட்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
இரஸலியன் பேதமாணவர் கூட்டத்தாருக்கு சுந்தர் ரிவீட்..!
Permalink  
 


பாம்பு என்று மிதிக்கவும் முடியாதாம், பழுது என்று தாண்டவும் முடியாதாம்... அப்படியே முன்னே போனா கடிக்க வருமாம்,பின்னே சென்றால் உதைக்க வருமாம்... அதுபோல சிலரை எந்த நிலையிலும் கணிக்க முடியவில்லை; ஆரோக்கியமான சகோதரர்களையெல்லாம் முகாந்தரமில்லாமல் பகைத்து ஒதுக்கிவிட்டு வெளிப்பாடுகளை மட்டுமே நம்பி அதன்மூலமே தன்னை பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ள சிலர் முயற்சிப்பதால் வீணான குழப்பங்களே உண்டாகிறது; இதோ இங்கே மனதாரப் பாராட்டி 48 மணிநேரத்துக்குள் இன்னொரு பல்டியடித்திருக்கிறார், சுந்தர நபிப் பெருமான்..!

=>என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்?

"அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்..(யோவான் 10:29 )

// இவ்வார்த்தைகளை இயேசுவே தனது வாயால் சொல்லியிருக்க அந்த வார்த்தைக்கு சற்றும் மதிப்பு கொடுக்காமல், திரித்துவம்  என்றொரு மூன்று சமதேவ  கொள்கையை  போதித்து இயேசுவை பிதாவுக்கு சமமாக்க அதிகமதிகமாக முயற்சிகள் நடக்கிறது.   அதைவிடுவோம்! //

 =>இயேசு வெளிப்படுத்திய பிதா யார்?


இதுபோல சர்வ வல்லதேவனைக் குறித்து அந்த மகா தேவனுக்கே பாடம் எடுக்கும் துணிகரம் நமக்கு இதுவரை வந்து வாய்க்கவில்லை; இப்படிப்பட்டவர்களைக் குறித்தே நான் இப்போதும் சொல்லுவேன், தாயின் கருவறையை ஆராயத் துடிக்கிறவர்கள்... பெற்ற தாயிடமே .... என்பதாக‌.. வேறென்ன சொல்ல‌..!

கிறித்தவ விசுவாசத்துக்கு விரோதமான இதுபோன்ற விஷமத்தனமான கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்; மீண்டும் உமது பழைய தூசிகளையெல்லாம் தட்டியெடுத்து அலம்பல் பண்ணத் துவங்கினால் நானும் இங்கேயிருக்கும் உம்முடைய விடையளிக்கப்படாத கேள்விகளுக்கெல்லாம் விடைதேடி களத்தில் இறங்கவேண்டியிருக்கும்;முதலில் உமது விசுவாசத்தை சரியாக நிர்ணயித்துக்கொண்டு பிறகு இதுபோன்ற கொள்கை அறிவிப்புகளைச் செய்யவும்.

யௌவன ஜனம் தளத்தின் நண்பர்களுக்கு ஒரு தகவல்; இறைவன் எனும் தளத்தின் நிர்வாகியான சுந்தர் பல்வேறு முரண்பட்ட காரியங்களை எழுதி வெளிப்பாடு குவித்திருக்கிறார்;வெளிப்படுவதெல்லாம் வாசனையானதல்ல‌... அதிலே பல நாற்றங்களும் உண்டு; அதுபோலவே சுந்தர் எனும் இந்த நபர் எழுதி வைத்திருப்பதையெல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு வாதிட்டுக் கொண்டிருந்தால் பிறகு இவரும் பெரிய ஆளாகிவிடுவார் என்றே அமைதி காத்தோம்; ஆனாலும் அவருடைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை இங்கே அவ்வப்போது எதிர்த்து வந்திருப்பதுடன் அவற்றை இங்கே மொத்தமாக தொகுத்து வைத்துள்ளோம்; தேவைப்பட்டால் அவற்றை மீண்டும் எடுத்து ஒவ்வொன்றுக்கும் பதிலளிக்க ஆயத்தமாக இருக்கிறோம்; இதற்கிடையே திரித்துவ உபதேசத்தைக் குறித்து ஒன்றும் அறிந்திராத இவர் போகிற போக்கில் அடித்துள் காமெண்ட்டினால் அதிர்ச்சி ஏற்படுகிறது;இதன் இரகசியம் வேறொன்றுமில்லை; பழைய நண்பர்களுடன் மீண்டும் உறவைப் புதுப்பிக்கவும் புதிய நண்பர்களை வசீகரிக்கவுமே இந்த புதிய வேஷம்; மற்றவையெல்லாம் அரைத்த மாவுதான்; இந்த ஆள் முன்னாலும் செல்லமாட்டார்,வழியும் விடமாட்டார்; இயேசுநாதர் மிகாவேல் தூதனின் அவதாரம் என்றால் அதையும் எதிர்ப்பார்; இயேசுநாதர் ஆதிதேவனுக்கு சமமானவர் என்றால் அதையும் எதிர்க்கிறார்; இதுபோன்ற ஆட்களை தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க அனுப்பினால் இவருக்கு தேர்தல் கமிஷனே கமிஷன் கொடுக்கும்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: இரஸலியன் பேதமாணவர் கூட்டத்தாருக்கு சுந்தர் ரிவீட்..!
Permalink  
 


நண்பர் சகாயம் அவர்களுக்கு,

நான் ஏற்கனவே தெரிவித்தவண்ணமாக விவாதம் சார்ந்த உங்களுடைய நேரடி கருத்துக்கள் மட்டுமே, ‍அதாவது நான் எப்படி உங்களுக்காகவே விசேஷமாக தட்டச்சு செய்து அப்போதைக்கப்போது பதிலளிக்கிறேனோ அதுபோன்றவை மட்டுமே, இனி இங்கு அனுமதிக்கப்படும்.

ஏனெனில் நீங்கள் நன்றாக அறிந்தவண்ணமாக இந்த தளமானது சபை பாகுபடற்றது மட்டுமல்ல, "இயேசுகிறித்துவை தொழத்தக்க‌ தெய்வமாக" விசுவாசிப்போருடைய தளமாகும்;உங்களையும் எங்களையும் இணைக்கும் பாலமே இந்த விசுவாசம் மட்டுமே;இதில் நீங்கள் மாறுபட்ட கொள்கையையுடையவராக இருப்பதாலேயே மற்ற நண்பர்களுடன் இசைந்து செல்லமுடியாத நிலை உள்ளது.

எனவே இங்கு பதிக்கப்பட்ட அதே கட்டுரை வேறு தளங்களிலோ அல்லது உங்களுக்கு சொந்தமான தளங்களிலோ இடம்பெற்றிருக்குமானால் அதை இங்கும் தொடருவது முறையல்ல என்பதுடன் அதனால் வீணான குழப்பங்களே உண்டாகும்;நீங்களே வெவ்வேறு பெயர்களில் கிறித்தவ தளங்களில் உலாவருவதும் வெளிப்படையாகவே தெரியவருகிறது.

இந்நிலையில் இங்கே பெரும்பான்மையான நண்பர்களுடைய வேண்டுகோளை சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஔட் அஃப் கான்டக்ஸ்டிலும் (out of Context) ஔட் ஆஃப் ஃபோகஸிலும்  (out of focus) சம்பந்தமில்லாத கட்டுரைகளைப் பதிப்பதை தவிர்க்கவும்;மேலும் இதுபோன்ற அணுகுமுறையுடன் செயல்படும் நீங்கள் எந்த காலத்திலும் எம்மை பதிலளிக்கத் திராணியில்லாதவர்கள் என்றோ விவாதத்தைவிட்டு ஓடுகிறவர்கள் என்றோ தூஷித்து பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்றும் பகிரங்க‌மாக எச்சரிக்கிறேன்;ஒரே இரவு கண்விழித்தால் உங்கள் கட்டுரைகளுக்கு நியாயமான பதிலைக் கொடுக்க என்னால் முடியும்;ஆனாலும் அது என் வேலையல்ல.உங்களுக்கு எப்படி நீங்கள் தடவிக் கண்டுபிடித்ததை ப்ரமோட் பண்ணும் அழுத்தம் உண்டாயிருக்கிறதோ அதுபோலவே எனக்கும் தேவாதி தேவனே பிரத்தியட்சமாக வெளிப்படுத்தின சத்தியங்களை மட்டுமே ஆராய்வது பிரதானமாக இருக்கிறது.

உங்களால் பதிக்கப்பட்டு, நண்பர்களால் விளக்கம் கோரப்பட்டு, நீங்கள் பதிலளிக்காததும் திசைதிருப்பியதுமான கட்டுரைகள் நீக்கப்படும்;வாசகரை குழப்பும் வண்ணமாக அதிகமான வேத வசனங்களைப் பதிக்காமல் ஒரு வசனத்தை மட்டும் நிதானமாக பகுத்து ஆராயவும் வேண்டுகிறேன். எங்களுக்கு தேவைப்பட்டால் வசனங்களை வேதத்திலிருந்தே படித்துக்கொள்ளுகிறோம்.Thanks..!

முதலில் இங்கே இந்த திரியில் பதிக்கப்பட்டுள்ள சுந்தர் அவர்களின் கூற்றுக்கு தகுந்த பதிலை அவருக்கும் எங்களுக்கும் நேரடியாக ,வசனம் ஒன்றையும் குறிப்பிடாமல் சொல்லுங்கள், பார்க்கலாம்..? வசனத்தை மேற்கோள் காட்டுவது பெரிய காரியம் அல்ல,அதனை சாத்தானும் செய்கிறான் அல்லவா..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

Bro.Chillsam,

  I do agree with Bro.Colvin and Bro.Ebi. This guy Cad.Sahayam is just wasting the space in our site. None of his words are related to the topic that are discussed.

Mr.Cad.Sahayam,

   You are not even able to understand very normal conversations (atleast your messages does'nt show it). How do you expect everyone to beleive that you guys are teaching Bible secrets(?), which you think that many have misunderstood? You have already fooled yourself and now you are trying to fool us (which is not at all possible). Either you change for good or don't waste your time here.

Thanks,

Ashok



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

ebi wrote:

சகாயம் அவர்களே, நீங்க ஏன் கேள்விக்கு பதில் சொல்லாம அதற்கு சம்பந்தம் இல்லாத ஒரு பதிலையே பதிக்கிறீங்க. சகோ.சுந்தர்தான் தெளிவாக கேட்டிருக்கிறாரே. அதற்கு தங்களின் பதில் துளி கூட பொருத்தமாக இல்லை. தாய்மொழியான தமிழ்மொழியில் உள்ள கேள்விகளையே சரியானபடி புரிந்து பதில்சொல்ல முடியவில்லையென்றால் மூலமொழியில் உங்கள் புரிதல்கள் இதைவிட மோசமாக தானே இருக்கும்.  


 

 மிக அருமை எபி் பிரதர் எனது பரிசுத்த ஆவியானவர் குறித்த கேள்விகளுக்கு இன்னும் பதில் இல்லை. கண்டதையும் Copy & Paste செய்கிறார் இவரிடம் பதில்களை எதிர்பார்ப்பது வடிகட்டின முட்டாள்தனம். தளநிர்வாகம் இவரின் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

சகாயம் அவர்களே, நீங்க ஏன் கேள்விக்கு பதில் சொல்லாம அதற்கு சம்பந்தம் இல்லாத ஒரு பதிலையே பதிக்கிறீங்க. சகோ.சுந்தர்தான் தெளிவாக கேட்டிருக்கிறாரே. அதற்கு தங்களின் பதில் துளி கூட பொருத்தமாக இல்லை. தாய்மொழியான தமிழ்மொழியில் உள்ள கேள்விகளையே சரியானபடி புரிந்து பதில்சொல்ல முடியவில்லையென்றால் மூலமொழியில் உங்கள் புரிதல்கள் இதைவிட மோசமாக தானே இருக்கும்.  



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 72
Date:
Permalink  
 

http://bibleloversassembly.com/bible/index.php?option=com_content&view=article&id=46&Itemid=1

எங்களை பற்றி

நாங்கள் வேத அன்பர் மன்றம் (biblel lovers assembly) சபையை சார்ந்தவர்கள்.
Reg.No: 105 IV/2011
எந்த ஒரு தனி மனிதனையும் பின்பற்றாமல், வேதத்தின் ரகசியங்களை விருப்பமுள்ளவர்களுக்கு, விரிவாகவும், விளக்கமாகவும் தெரிவிக்க
ஒன்று சேர்கிறோம். கலா.1:10;
நாங்கள் வேதமாணவர் சபையையோ, யோகோவாவின் சாட்சிகள் சபையையோ, வேறே எந்த ஒரு சபையையும் சார்ந்தவர்கள் அல்ல.
சத்தியத்தை சத்தியமாகவே சொல்வதில் பெருமைகொள்கிறோம். யோவான்.17:17;

மேலும் எங்களின் நோக்கம் பணம் வாங்குவதும் அல்ல.
பரிசுத்த வேதாகமத்தின் மீது கொண்ட பற்றுதலாலும், கிறிஸ்துவமார்க்கம் தவறாகப்போவதாலும், ஏற்பட்ட உந்துதலினால் உருவாக்கப்பட்டதுதான் எங்களின் இந்த (biblel lovers assembly) குழு.

குறிப்பு :

பிதாவை சென்றடைய குமாரன் மூலமாய் பரிசுத்த ஆவி துணையோடு போராடும் எவரும் எங்களின் சகோதர சகோதரிகளே; சபை பாகுபாடின்றி வரவேற்கிறோம் .

எச்சரிக்கை :

வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. கலா.8:7
நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலா.8:8.

இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே. கலா.8:10.
உண்மை சத்தியத்தில் அவர் வரும் வரை நிலை நிற்போம் என்ற மனஉறுதி உள்ளவர்கள் மட்டும் துணிச்சலோடு உள்ளே வாருங்கள் .
தேவ சமாதனம் ஆமென்.


__________________
yes


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 72
Date:
Permalink  
 

நீதிமொழிகள் 16:18 அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.

நீதிமொழிகள் 13:10 அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.


__________________
yes


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
இரஸலியன் பேதமாணவர் கூட்டத்தாருக்கு சுந்தர் ரிவீட்..!
Permalink  
 


நம்ம சுந்தரப் புருஷன் பல காரியங்களில் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் சில காரியங்களில் ரொம்ப தெளிவாகவே இருக்கிறார்;அவர் இன்று பதித்துள்ள "தங்கள் போதனையின் முக்கிய நோக்கம் என்ன?" என்ற பதிவை வாசித்து ஆனந்தம் அடைந்தேன்;என்ன வெங்காய நோக்கம்... உங்களையும் என்னையும் வஞ்சிப்பது தான்,நோக்கம்..!?

பேதமாணவர் மற்றும் இரஸலியன் கூட்டத்தாரின் எல்லா கட்டுரைகளையும் வரிவிடாமல் படிக்க நமக்கு நேரமும் இல்லை பொறுமையுமில்லை;ஆனால் ஒரே ஒரு குறியீட்டின் மூலம் இவர்களை அடையாளங் கண்டு ஒதுக்குகிறேன்; அது என்னவென்றால் "இயேசுவானவரைத் தொழத்தக்க தெய்வமாக" இவர்கள் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை,என்பதே.

ஆனால் "இறைவன்" தளத்தின் சுந்தர் அவர்களுடைய மொத்த சாரத்தையும் எடுத்து கோடைக்கால கரும்பு ஜூஸ் போல இங்கே எழுதியிருக்கிறார்;இந்த ஒரு பதிவுக்காக மட்டும் சுந்தருக்கு 100 மார்க்கை யௌவன ஜனம் தளம் சார்பாக வழங்குகிறேன்; எனவேதான் நண்பர் சகாயம் அவர்களையும் கூட அங்கே அனுப்பியிருந்தேன்;அவரோ என்மீதே சீறுகிறார்; உங்களுக்கு தேவை சிங்கிள் டீ எனில் அதை யார் வாங்கிக்கொடுத்தா என்ன, வாங்கி குடிச்சிட்டு போயிண்டே இருக்கவேண்டியதுதானே..?!

நமது  தளத்தில் பதிவிட்டுள்ள சில சமீபகாலத்தைய பதிவுகளை கண்ணோக்கும்போது அந்த பதிவுகளில் சில கருத்துக்கள் (..அதுக்கு தான் நாங்க சொல்றோம்,ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாக‌...) நமது விசுவாசத்துக்கு  முரணாக இருப்பதை அறிய முடிகிறது.
 
முக்கியமாக,
  • 1. "பரிசுத்த ஆவி" என்பது "ஒரு தேவ வல்லமை" அல்லது "தேவ சிந்தை" என்றும் ஆவியானவர் ஒரு தனி ஆள்தத்துவம் உள்ள தேவனல்ல என்றும். சொல்லபட்டிருக்கிறது.
  • 2. மனிதனுக்கு ஆத்துமா என்று எதுவும் தனியாக கிடையாது. ஆவியும் சரீரமும் சேர்ந்த ஒரு மனுஷனே ஒரு ஆத்துமா என்று பொருள்கொள்ளப்படுகிறது.
  • 3. பாதாளம் மற்றும் நரகம் என்று எதுவும் கிடையாது பாதாளம் பிரேதகுழி என்றும் நரகம் "குப்பை எரிக்கிற மேடு"  என்று சொல்லப்பட்டுள்ளது.
  • 4. சுவிசேஷம்  சொல்லவேண்டிய  தேவையில்லை என்று போதிக்கப்படுகிறது.
  • 5. "எல்லோருக்கும் மீட்பு" யாருக்கும் தண்டனை இல்லை  என்பதுபோன்றதொரு கொள்கை போதிக்கப்படுகிறது.
இப்பொழுது இங்கு எனது கேள்வி என்னவெனில்,: இந்த நாட்களில் மட்டுமல்ல ஆதி நாட்களிலும்:
  • "நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்."(மாற்கு 16:15)
-என்ற வார்த்தை அடிப்படையில், ஆத்துமாக்களின் மீதுள்ள கரிசனையில்  சுவிஷேசம் சொல்வதற்காக பலர் தங்கள் இன்னுயிரை பணயம் வைத்து  காடுகள் மேடுகள் என்று சுற்றி ஆத்துமாக்களுக்காக பரிதபிபுடன் அலைந்து ஆண்டவரைபற்றியும் அவர் தரும் ஆத்துமா இரட்சிப்பு பற்றியும் எடுத்து சொன்னதாம் நம் போன்றவர்கள் இன்று ஆண்டவரை ஏற்றுக்கொண்டு அழிவில் இருந்து தப்பித்திருக்கிறோம் என்று அறியமுடிகிறது.
 
அதாவது சுருக்கமாக சொன்னால், நாம் கஷ்டப்பட்டு பிரயாசம் எடுத்து செய்யும்  ஒவ்வொரு காரியத்துக்கும் எதாவது ஒரு முக்கிய காரணம் நிச்சயம் இருக்கும். தேவையற்ற காரியங்களுக்கு யாரும் பெரிய பிரயாசம் எடுப்பது இல்லை. 
 
"அவனவன்  செய்த கர்மாவுக்கு தக்க பலன் உண்டு" என்று இந்துக்கள் கருதுவதால்  அவர்கள் இறைவனை நம்பி நல்லதை செய் என்று  போதிக்கிறார்கள்.
 
"அவனவன்  கிரியைக்கு தக்க சொர்க்கமோ நரகமோ உண்டு" என்று இஸ்லாமியர் போதிக்கின்றனர்  எனவே  அவர்களும் இறைவனுக்கு பிரியமாய் நடவுங்கள் என்று போதிக்கிறார்கள்.  
 
"இயேசுவை ஏற்றுக்கொண்டால் ஆத்துமா மீடுபு உண்டு" என்று கிறிஸ்தவர்கள் போதிக்கிறார்கள் எனவே  இயேசுவை ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் வலியுருத்துகிரர்கள்  
 
இவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் ஒருஅடிப்படை
நோக்கம் இருக்கிறதை அறியமுடிகிறது.   
 
இந்நிலையில்  இங்கு எனது கேள்வி என்னவெனில்:   .
 
"இன்று செத்தால்  ஒன்றுமில்லை" " நாளை  உயிர்த்தெழும்போது  எல்லோருக்கும் நீதி போதிக்கப்பட்டு மீட்பு  நிச்சயம் உண்டு"   என்ற ஒரு கொள்கையுடன் இருக்கும் தாங்கள் இவ்வளவு  சிரமம்  எடுத்து யாருக்கு எதற்காக போதனை செய்கிறீர்கள்? என்ற உண்மையை  அதாவது தாங்கள் ஆண்டவரை பற்றியும் அவரது வசனத்தை பற்றியும் எல்லா இடங்களிலும் ஊடுருவி எழுதுவதன் நோக்கம் என்ன?
 
நாங்கள் ஆண்டவரை  பற்றி எழுதுவதன்  மெயின் நோக்கம் "பாவம் செய்த ஆத்துமா முதலில் பாதாளத்தில் வேதனை அனுபவிக்கும் பின்னர் நரகத்தில் அழிக்கப்படும்" என்று கருதுவதால்  அந்த அழிவுக்கு மனுஷர்கள் தப்பித்துகொள்ள வேண்டும் என்ற வாஞ்சையால் உருவானது   
 
அதுபோல் தங்களின் மெயின் நோக்கம் என்ன?  அது எவ்வித வாஞ்சையால் உருவானது?
 
இந்த திரியில் தயவுசெய்து விளக்குங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

எங்கள் சுந்தருக்கே நீங்கள் பதில் சொல்லமுடியாவிட்டால் எங்கள் கேள்விகளுக்கு எல்லாம் உங்களால் என்ன பதில் சொல்லமுடியும்..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard