Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


மத்தேயு 7:13. இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.
கிறிஸ்துவின் ஈடுபலியின் மேல் நம்பிக்கை இல்லாத மூடர்களே!!

இது நண்பர் அன்புவுக்கும் பொருந்துமா? எல்லோரும் இரட்சிக்கப்பட மாட்டார்கள் என்று விவாதிக்கும் அவரை நீங்கள் மூடன் என்று சாடுகிறீர்களா?

 

தேவன் முன்குறித்த யாருக்காவது இது பிரயோஜனமாக இருக்கும்!!

எனக்கு விளங்கவில்லை, எதற்கு முன் குறித்திருக்கிறார்? 'ராச்சியத்தில்' கற்று கொள்ளவா? அதுதான் எல்லாம் கற்று கொள்ளுவார்களே அப்புறம் எதற்கு முன்குறிப்பு? உங்களை முன் குறித்து இருக்கிறாரா??

 

Mr.Anbu : இத்தள விவாதத்தைத்தான் காமெடி என்கிறீர்களே! அப்படியானால் அத்தளத்தில் இத்தனை நாளும் நீங்கள் காமெடிதான் பண்ணிக்கொண்டிருந்தீர்களோ?

உண்மைதான்! காமடியர்களோடு நடக்கும் விவாதம் ஓரிரு பதிவுகளுக்கு பின்பு காமடியாகிவிடும். அவர்களுக்கு ரசலின் போதை கண்ணை மறைத்தவுடன் தீவிரமாக விளக்கப்பட வேண்டிய வசனத்தை தவிர்ப்பார்கள். மாற்றி , மாற்றி உளறி நமக்கு சலிப்புதட்டும் வரை நேரம் கடத்துவார்கள். ஆபிரகாம் மற்றும் ஏசாயா பார்த்த யேகோவா யார் என்ற கேள்விக்கு 3 மாதங்களாக இழுத்து அடித்து , 4 முறை சொன்ன பதிலை மாற்றி , மாற்றி உளறியவர் பெரேயன் என்பது எல்லாருக்கும் தெரியும்! உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்குமே!


 

மத்தேயு 7:22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

இதையும் நினைத்து ஒரு ஓரமாக உட்கார்ந்து சிரிக்கலாம்

 

நிச்சயமாக உங்கள் 'சுவிசேஷத்தை' நம்பியவர்கள் இந்த வசனத்தை வாசித்து சிரிப்பார்கள். அவர்களுடைய சுலபமான பதில் "நீங்கள் அறிந்தால் என்ன அல்லது அறியாவிட்டால் என்ன" அதுதான் 'ராச்சியத்தில்' கத்து கொள்ளுவோமே! வசனத்தையும் காமடியாக்கிய பெருமை கோவை காமடியர்களையே சாரும்



-- Edited by John on Wednesday 27th of July 2011 08:04:51 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாதாம் அது போல் இந்த துஷ்ட்ட கோமாளிகளுக்கு தேவனின் இரட்சிப்பு தெரியாது!! ராஜியத்தில் தெரிந்துக்கொள்வார்கள்!!
வேலைவெட்டி இல்லாத பயலுவ!! இல்லாட்டியும் இவர்கள் எழுதிவிட்டாலும்.........!!! டாஸ்மாக்கை எல்லாம் விவாதம் செய்தவர்கள் தானே இந்த கோமாளிகள்!! சரக்கு தீர்ந்து போய்விட்டதால் அடுத்தவர்கள் வீட்டிற்குள் அத்துமீறுகிறார்கள் போல்!!//

கோவிச்சுகாதீங்க நண்பர் பெரேயன் அவர்களே . உங்களை நான் திட்டவில்லை காமடியன் என்று மட்டுமே சொன்னேன். நான் மட்டும் அல்ல பெரும்பாலான கிருஸ்தவர்கள் உங்கள் கருத்துக்களை காமடியாகவே பார்கிறார்கள் ஆகையால் தொடருங்கள். நீங்க திட்டுவது கூட காமடியாகவே எனக்கு தெரிகிறது. ராச்சியத்தில் இதுக்கெல்லாம் உங்களுக்கு பரிசு கிடைக்குமே (சாரி, சாரி...கற்று கொடுக்கப்போவதே நீங்கதானே)
 
 
 குறிப்பு : டாஸ்மார்க் சரக்கு இங்கே கிடைப்பது இல்லை. கோவையில் எப்படி? அதே போல தமிழில் ஒருவரை திட்டும் போது பன்மையில் எழுதக்கூடாது. என் ஒருவனை திட்டும்போது இப்படி எழுதணும் "இந்த துஷ்ட்ட கோமாளிக்கு தேவனின் இரட்சிப்பு தெரியாது!! ராஜியத்தில் தெரிந்துக்கொள்வான் வேலைவெட்டி இல்லாத பய!! "


-- Edited by John on Tuesday 26th of July 2011 11:11:41 PM



-- Edited by John on Wednesday 27th of July 2011 03:56:14 AM

__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


இதுவரை சகோ அன்பு சொன்னதில் எனக்கு எந்த குழப்பமும் வரவில்லை.

எனக்கும் predestination பற்றி எல்லாம் புரிந்திருக்கிறது என்று சொல்ல முடியாது.

ஆனால் அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்று தேவன் மிகவும் விரும்புகிறார் என்று நல்லா தெரியும். சகல சிருஷ்டிக்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட வேண்டும் என்பதும் தெரியும். 

John wrote:


தேவன் சமயங்களில் இப்படிப்பட்ட காரியங்களை செய்து நமக்கு ஒய்வு கொடுக்கிறார்.


          biggrin



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

golda wrote:

சகோ.அன்பு அங்கு கலக்குகிறார்!

ஆனால் அவர் திரித்துவமாய் இருக்கும் தேவனை நம்புவதில்லை என்பதுதான் சோகம்.


 

பரிசேயர் , சதுசேயர் வாதம் போல இவர்கள்  (பிடி)வாதமும் காமடியாக செல்லுகிறது. காமடியர்களுக்கு தலைவிதி (Fate) க்கும் தெரிந்தெடுப்பு (Predestination by Sovereignity ) க்கும் உள்ள வேறுபாடு தெரியவில்லை. ஜெபம் கிருஸ்தவ வாழ்க்கையிலே என்ன பங்கு வகிக்கிறது என்று இவர்களால் புரிந்து கொள்ள முடியாது. நண்பர் அன்புவிற்கு நற்கிரிகை என்பது என்ன? நாம் செய்யும் நற்கிரியையே தேவனுடைய செயல் என்பதும் , தேவனின் கிருபை மற்றும்  நம்முடைய  கிரியை எப்படி இரட்சிப்பில் பங்கு வகிக்கிறது என்று தெரியவில்லை. இந்த காமடியை வாசிக்கும் போது வேதத்தில் உள்ள ஒரு சம்பவம்  ஞாபகத்திற்கு வருகிறது. பவுல் சனகெரிப் சங்கத்தில்  விசாரிக்கப்படுகையில் இது நடந்தது.

 

....பின்பு அவர்களில், சதுசேயர் ஒருபங்கும் பரிசேயர் ஒரு பங்குமாயிருக்கிறார்களென்று பவுல் அறிந்து: சகோதரரே, நான் பரிசேயனும் பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன். மரித்தோருடைய உயிர்தெழுதலைப்பற்றிய நம்பிக்கையைக் குறித்து நான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன் என்று ஆலோசனைச் சங்கத்திலே சத்தமிட்டுச் சொன்னான். அவன் இப்படிச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் வாக்குவாதமுண்டாயிறறு: கூட்டம் இரண்டாகப் பிரிந்தது. (அப்போஸ்தலர் 23:6 -7 ) 

 

தேவன் சமயங்களில் இப்படிப்பட்ட காரியங்களை செய்து நமக்கு ஒய்வு கொடுக்கிறார்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


நீங்கள் என்னதான் என்னை கோமாளி என்று சொன்னாலும்  நீங்கதான் பெரிய காமடி போங்க! உங்களை காமடியில் யாரும் மிஞ்ச முடியாது! தமிழ் கிறிஸ்தவர்களை சிரிக்க வைக்க  'கோவை காமடியர்கள்'  என்கிற நீங்க இரண்டு பெரும் கட்டாயம் தேவை. இதே உங்கள் காமடிக்கு சில சாம்பிள்ஸ்
 
1 . ஜீவ புஸ்தகத்தில் பெயரில்லாதவன் சாத்தான் ஒருவனே!
 
2 . ஆக்கினை என்றால் சிட்சை (அப்போ I தீமோத்தேயு 3:6 அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே (G2917 κρίμα krima ) விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது. படி பிசாசும் சிட்சிக்க படுகிறானோ? அவனும் இரட்ச்சிக்கப்படுவனோ??)
 
3 . ஒரே மரணம் அதுவும் மாம்ச மரணமே !
 
4 . இயேசு மிகாவேல் தூதன்
 
5 . நியாயதீர்ப்பு என்பது தேவனுடைய இராச்சியத்தில் கற்று கொள்ளுதல் (அதுக்கு ஏன் பயப்படனும்? கற்று கொள்ள பயமா??)
 
6 . எல்லாருக்கும் இரட்சிப்பு உறுதி!
 
இங்கே என்னுடைய  நண்பர்கள் சிலரிடமும் இந்த காமடிகளை பகிர்ந்து கொண்டேன் எல்லோரும் வயிறு குலுங்க சிரித்தோம் biggrin  தொடருங்கள் உங்கள் காமடிப்பணியை!!  

 
//"இயேசு"வால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று நீர் பதிவு செய்தது எனக்கு தெரியும்!!
//
 
இந்த காமடிக்கு நடுவில் குருநாதர் ரசல் பாணியில் பொய் வேறு!!   Jesus CAN save  every body infact the offer is for everybody but Jesus WILL save somebody (i.e Church or His flock). WILL க்கும் , CAN க்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றால் நல்ல Dictionary எடுத்து படிக்கவும்.
 
நமது தளத்தில் உள்ள சகோதர்களும் கூட நான் சொன்னவற்றை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக கிழே உள்ள தொடுப்பை தருகிறேன் (காமடியர்களின் குழப்பத்திற்கும் 1 Timothy 2:6 அதிலே சிகிச்சை இருக்கிறது)
 
 


-- Edited by John on Tuesday 26th of July 2011 09:19:49 PM

__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


சகோ.அன்பு அங்கு கலக்குகிறார்!

ஆனால் அவர் திரித்துவமாய் இருக்கும் தேவனை நம்புவதில்லை என்பதுதான் சோகம்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

//2 தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

என்ற வசனத்துக்கு முதலில் விளகக்மளித்தால் நலம்.

 

இதில் நம்மை என்பது யாரை?//

நாம் தான்.

 

//தம்முடைய தீர்மானம் என்ன தீர்மானம்?//

பலி, தான தர்மம், தவம் போன்ற மனிதக் கிரியைகளால் அல்ல, இயேசு கிறிஸ்துவுக்குள் இலவசமாக இரட்சிப்பு உண்டு என்ற தீர்மானம்

 

//அதென்ன பரிசுத்த அழைப்பு?//

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, இரட்சிக்கப்பட அழைக்கிறார். வாசற்படியில் நின்று கதவைத் தட்டுகிறார்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


சரி, சரி நான் இந்த வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் பத்தி பெரேயன் அவர்களிடம் கேட்டு ஒரு முடிவுசெய்கிறேன். புடிச்சிட்டேன்! இதோபெரேயன்சொல்லுறார்.

"
இரண்டாம்மரணம்" என்கிற ஒரு வார்த்தை வெளி. புத்தகத்தில் மாத்திரமே இருக்கிறது!! இதை வைத்துக்கொண்டு, அது முதல் மரணம் போல் மனிதர்களுக்கு நேர்வதுதான் என்பது எப்படி சரியாக இருக்கும்!!"

அப்படிபோடு அருவாள! இந்த வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தை வேதத்தில் இருந்து எடுத்திடலாம். வேறு புஸ்தகத்தில் இதுபோல எல்லாம் சொர்க்கம் போகமாட்டாங்க என்று இருந்தால் அதையும் எடுத்திடலாம். வாழ்கபெரேயன்!! வளர்க அவரது வேதஅறிவு(??)

அப்படியே யாருக்காவது "இயேசு" என்ற பெயர் பிடிக்காவிட்டால் புதியஏற்பாட்டையே மொத்தமா எடுத்திடலாம் பிரச்சனையே இல்லே!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

  • பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (வெளி 21:8)

இது ஏன் இப்படி தப்பு தப்பா இருக்கு? ஒரே ஒருத்தனாகிய சாத்தானை பற்றி எழுதும்போது ஏன் பன்மையில் எழுதணும்? ம்ம்ம்ம்....எங்கேயோ தப்பு நடந்து இருக்கு.

  • மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.(வெளி 20:10)


OK
சாத்தானை தள்ளியாச்சு அப்புறம் என்ன நரகத்தை முடிடலாமா. சரி இந்த அதிகாரம் முழுவதையும் வாசித்துவிட்டு மூடலாம்.

  • ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (வெளி 20:15)

இது என்ன ஒரே குழப்பம்! சாத்தானை 10 ஆவது வசனத்திலே தள்ளியாச்சு! அப்புறம் என்ன திரும்ப ஜீவபுஸ்தகத்திலே பெயர் இல்லாத ஒருவனாகிய சாத்தானை திரும்ப நரகத்திலே தள்ளுறது?

இந்த வெளிபடுத்தின  விசேஷம் புத்தகத்தை குறித்து நண்பர் பெறேயனிடம் விசாரிக்கணும். இந்த புத்தகத்திலே ஏதே கோளாறு  இருக்கு.

  • வெளி 13:8 உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின்குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.


யோவான் உங்களுக்கு என்னஆச்சு? ஜீவபுஸ்தகத்தில் பெயர் இல்லாதவன் சாத்தான் ஒருவன்தான் அவன் மிருகத்தை வணங்குவானாஎன்னது???

"பேரெழுதப்பட்டிராத பூமியின்குடிகள் யாவரும்" ? அது ஏன் இப்படி நீட்டி முழங்குரிங்க சாத்தான் ஒருத்தேன் தானே! அதுக்கு எதுக்கு பேரெழுதப்பட்டிராத பூமியின்குடிகள் யாவரும்னு சொல்லுறீங்க.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். (வெளி 3:5)

என்னங்க ஜான் நீங்க சொல்லுறதை பார்த்தால் ஜெயங்ககொள்ளதவன்னு யாரோ இருப்பதுபோல வாசிக்கிரவுங்க தப்பா நினைச்சிறப்போறாங்க . "According to the Gospel of Kovai Bereyans" எல்லாருடைய பெயரும் இருக்குன்னு சுலபமா சொல்லவேண்டியதுதான? அத்தவுட்டுட்டு வெட்டியா ஜெயந்கொள்ளுகிறவன், கொள்ளாதவன்அப்படின்னுஎழுதணுமா?

அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூட பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள். (வெளி 20:15)

அய்யோ ! அய்யோ ! அக்கிரமம்!! ஜீவபுஸ்தகத்திலே சாத்தான் பேரு ஒண்டிதான் இல்லைன்னு பெரேயன் சொல்லியிருக்காரு அப்புறம் எப்படி மிருகத்தையும், கள்ளத்தீர்க்கதரிசியையும் நரகத்திலே Sorry அக்கினிகடலிலே Sorry , Sorry அக்கினி ஏறியிலே தள்ளலாம்?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்என்றார். (லூக்கா 10:20)

இயேசு அப்பா இதுல சந்தோஷப்படுறதற்கு பெருசா என்ன இருக்கு அதான் எல்லாருடைய பெயரும் புத்தகத்தில் இருகிறதே! பெரேயன் புத்தகத்தை முன்னாடியே தொறந்து சாத்தான் பேரு மட்டுமே இல்லைன்னு சொல்லிட்டார்.

அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்கிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூட சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது. (பிலிப்பியர் 4:3 )

ஜீவபுச்த்தகத்தில் பெயர் வருவதற்கு பிரயாசப்படனுமா? என்ன ஒன்னும் தெரியமே இருக்கீங்க பவுல். நீங்க தேவையில்லாம "கல்லெறியுண்டு, வாளால்அறுப்புண்டு, நிர்வாணத்திலும், குளிரிலும்" தேவைஇல்லாமல்இருந்துஇருக்குறீங்க. சாத்தான் பேர் தவிர எல்லார் பெயரும் இருக்குனு ஒருவார்த்தை எழுதியிருந்தா நாங்க எதுக்கு விசுவாசம் , பரிசுத்தம்னு கஷ்ட்டப்படபோகிறோம்?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

பெறேயன்ஸ்
//சாத்தான் ஒருவனே அந்த ஜீவபுஸ்தகத்திலே பெயர் இல்லாதவனாக காணப்படுகிறான்; ஏனென்றால் அவன் ஒருவனே நியாயம் தீர்க்கப்பட்டிருக்கிறான் (யோவான் 16:11), அவன் ஒருவனை தவிர அந்த இரண்டாம் மரணம் என்கிற அழிவிற்குள் யாராவது போகிறார்களென்றால் அது நீங்கள் வைத்திருக்கும் குப்பையானசிந்தைகள்தான்!!//

விவாதங்கள் எல்லைமீறியும் , சூடாகவும் போய்கொண்டு இருப்பதால் மேலே நண்பர் பெறேயன்ஸ் சொன்ன காரியத்தை சற்று நகைச்சுவையுடன் பதிலளிக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்கும் மேலே நான் "சாத்தான் மட்டுமே ஜீவபுஸ்தகத்தில் பெயர் இல்லாதவன்" என்று "உண்மையிலே" நினைக்கிற அளவிற்கு மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்  (நண்பர் அன்பு உட்பட) யாரும் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

அப்பாவியாகிய ஜான் நண்பர் பெரேயன் சொன்னதை உண்மையென்று நம்பிவிடுகிறார். பின்பு தொடர்ந்து வேதத்தில் சில வசனங்களை வாசிக்கிறார். வாசிக்கும்போது ஜானுக்கு ஏற்படும் சந்தேகங்களை தொடர்ந்து வாசியுங்கள்.

  • ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான். (யாத்திராகமம் 32:32)


என்னங்க மோசே கிண்டல்தானே பண்றீங்க? புத்தகத்திலே சாத்தான் பேரு மட்டும்தான் இல்லாம இருக்கும். தெரிஞ்சுகிட்டே கிறுக்கிபோடும்னு சும்மாதானே சொன்னீங்க?

  •  அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன். (யாத்திராகமம் 32:33)


தேவன் சொல்லுறதை பார்த்தால் சாத்தான் மட்டும்தான் அவருக்கு எதிரா பாவம் பண்ணவன்போல. யூதாஸ்கூட நல்லவர்.


 ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள் பேர் கிறுக்கப்பட்டுப் போவதாக; நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக. (சங்கீதம் 69:28)

எல்லாருமே நிதிமான்கள்தான்னு  பெறேயனுக்கு இருந்த அறிவு சங்கிதகாரனுக்கு இல்லை. என்னத்தைசொல்ல !!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

நண்பர் அன்புவிற்க்கும், காமடியர்களுக்கும் நடக்கும் விவாதம் சுவையாக சென்று கொண்டு இருப்பதால் சுவையோடு சுவை சேர்க்கும் நோக்கத்திற்காக இந்த பழைய 'இன்னும் பதில் சொல்லப்படாத' பதிவை வெளியிடுகிறேன்.

 

பிணம் எழுந்து போய் இன்னொரு பிணத்தை அடக்கம் பண்ணுமோ? இல்லை என்றால் மரித்தோர் யார்?

அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். (மத்தேயு 8:22)

 

தேவனும் சரிரத்தை மாத்திரம் தான் கொல்ல வல்லவரா? அப்போ கிழே உள்ள வசனங்கள் எதற்கு?

ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (மத்தேயு 10:28)

 

என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள். நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (லூக்கா 12:4-5)

 

நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? (யாக்கோபு 4:12)

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


Bro Colvin: சகோதரி கோல்டா கலக்குறீங்க....

உள்ள இறங்குனா கலக்கிடுவோம்ல! சகோ சில்சாம் எங்கே காணவில்லை?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

"அனைத்தும் அறிந்த கோவை காமெடியன்ஸ்:"

 
laughing.gif
 
laughing.gif

 

நல்ல Sense Of Humar சகோதரி! அவரு வேற நெறைய புக்கு (Books) வைத்து இருக்கிறாராம் நாம் அதை பாத்து கூட இருக்கமட்டோமாம். உண்மைதான் ரசலின் குப்பையை நாம் எதுக்கு பார்க்கணும்?

 

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோதரி கோல்டா கலக்குறீங்க.... நம்பவே முடியவில்லை. நண்பர் கோவை பெரியன் எத்தனை பேரைத்தான் சமாளிப்பார். உங்களுக்கென்று தனிப்பதிவு தொடங்கினாலும் ஆச்சரியமில்லை. 

ஆத்தும கரைசலின் 50 இற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தீர்கள். இதுவரை உருப்படியாக அதற்கு மறுப்பு எழுதினார்களா?

இப்போ நீங்கள் மாறுவேடம் பூண்டுள்ளதாக நண்பர் சொல்லுகிறார். இவரின் தளத்தில் அதுதானே நடக்கிறது.

எங்கே நண்பரே நிருபியுங்கள் பார்க்கலாம். இது எமது சவால். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

அனைத்தும் அறிந்த கோவை காமெடியன்ஸ்:

ஒரே ஹேடஸை குழின்னு, படுகுழின்னு, பாதாள குழின்னு, எரி நரகம், நரகம் என்று விதவிதமாக மொழிப்பெயர்த்து அதில் குளிர் காய்கிறீர்களே, அதைவிடவா காமேடி!!

வேதத்தை மொழிபெயர்த்த அத்தனை பேரும் மூல பாஷை தெரியாத முட்டாள்களா? நான் குறிப்பிட்ட எல்லா வசனத்திலும் Hades என்ற வார்த்தைதான் இருக்கிறதா?

ஆனால் போனவ வந்தவனெல்லாம் நானும் அபிஷேகிக்கப்பட்டவன் என்று சொல்வது நானும் ஒரு கிறிஸ்து என்று சொல்வதற்குச் சமம்.

மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று சொல்லியிருக்கிறார். எனவே உங்க மூஞ்சிக்கும் கிடைக்கும், கவலைப்பட வேண்டாம்!

அபிஷேகம் பெற்று விட்டீர்கள் என்றால், இயேசு கிறிஸ்து வெறும் படைக்கப்பட்ட மனிதன் தானோ, அல்லது தேவ தூதனோ எனும் சந்தேகமெல்லாம் தூள் தூளாகி விடும். எனவே, கோவை காமெடியன்ஸ், நீங்க ஜெபிக்க வேண்டிய ஜெபம் இது தான்: அன்புள்ள ஆண்டவரே, எங்களுக்கு வசனத்தைப் பார்த்தால் இயேசு கிறிஸ்து மனிதன் போல் தெரிகிறது. ஆனாலும் சகோ சில்சாம் & கோ, அப்படியல்ல இயேசு கிறிஸ்து தெய்வம் என்று நிறைய வசனங்களைக் காட்டி சாதிக்கிறார்கள். எது உண்மை ஆண்டவரே? எங்கள் ஐயங்களைத் தீர்த்து வைப்பீராக. அன்று உம் சீஷர்களை அபிஷேகித்தது போல் எங்களையும் அபிஷெகித்து, இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ எங்களுக்கு உத்வி செய்யுங்க பிதாவே. ஆமென்!

அப்போஸ்தலர் 10:38 நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்

பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல் இறங்கி இயேசு கிறிஸ்து மேல் வந்தார் அல்லவா? அபிஷேகம் பெறுவது தனி அனுபவம்.

அதிலும் கோல்டா போன்ற "பினாமி" பெயரில் எழுதும் சகோ(தரி) என்ன தான் மாறு வேடம் போட நினைத்தாலும், இவர் யார் என்பது எங்களுக்கு தெரியும்!!

நான் தான் செல்வி ஜெயலலிதா என்று தெரிந்து விட்டதா???



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

நரகம்

மத் 5:29 உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.

மத் 8:12 ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத் 13:

42. அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

50. அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.

மத் 16:26 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?

மத் 19:23. அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத் 23:15 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

மத் 24:51 அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

மத் 25:30 பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.

மத் 25:41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.

வெளி 20:15. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

--

இதைப் பற்றி கோவை காமெடியன்ஸ் என்ன சொல்கிறார்கள்? அவங்க வேதத்தில் இந்த வசனங்கள் இருக்கா இல்லையா?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
நித்திய ஜீவன் மற்றும் நித்திய ஆக்கினை என்றால் என்ன? எல்லாரும் இரட்சிக்கப்படுவார்களா?
Permalink  
 


// பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் பரலோகத்தில் பிரவேசிப்பானா அல்லது இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களை அனைவரும் பரலோகத்தில் பிரவேசிப்பார்களா என்கிற மிக பெரிய கேள்வி இருக்கிறது!! இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அனைவரும் பரலோகத்திற்கு போக முடியும் என்று போதிப்பவர்கள் தான் இன்று அநேகராக இருக்கிறார்கள்!! அப்படி பார்த்தோமென்றால் பல கோடி ஜனங்கள் பரலோகத்திற்கு உரியவர்களாக இருக்கிறார்கள்!! வெவ்வேறு சபைகளுக்கு சென்றாலும், சிறைச்சாலையில் இருந்தாலும், விபச்சார விடுதிகளில் இருந்தாலும், கொலை கொள்ளையில் ஈடுபட்டாலும், அல்லது மிஷனரி ஊழியம் செய்தாலும், இவர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களே!! அப்படி என்றால் இவர்கள் எல்லாரும் பரலோகம் சென்று விட முடியுமா??

அப்படி என்றால் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்று ஏன் கிறிஸ்து தம்மை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லி அவரை ஏற்றுக்கொண்டிருக்கும் ஜனங்களிடத்தில் சொல்ல வேண்டும்?//

ரொம்ப பெரிய கண்டுபிடிப்பு தான். கிறிஸ்துவாகிய மேசியாவின் வழியில் மனுக்குலம் இரட்சிப்பை அடைவதே பிதாவின் சித்தமாக இருந்தது. இந்த தேவ திட்டத்தை நிறைவேற்றத்தான் இயேசு பூமிக்கு வந்தார். இயேசுவை ஏற்றுக்கொண்டாலும் அவர் கற்பித்த அந்த இரண்டு கற்பனைகளையும் கைக்கொள்வதே பிதாவின் சித்தமாகிறது. அந்த 2 கட்டளைகளிலும் நியாயப்பிரமாணம் முழுவதும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியுள்ளது. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவன் மாய்மாலமாகவும் வாழ சாத்தியம் உள்ளது எனவே தான் இயேசு பிதாவின் சித்தத்தை நிறைவேற்றவேண்டும் என்கிறார். எதிலுமே முழுமையை எதிர்பார்க்கும் ஆண்டவர் தனது சித்தத்தை முழுமையாக நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்துகிறார்... இவ்வளவு பேசும் நீங்கள் பிதாவின் சித்தம் என வேறு ஏதாவது இருந்தால் என்னவென்று எடுத்து வையுங்கள் பார்ப்போம்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

//ஏசாயா பார்த்த யேகோவா யார் என்று கேட்டு ஒரு மாசத்திற்கு மேல் ஆகியும் பதில் இல்லை. கொடுமை!!//

பதில் இருந்தால்தானே சொல்லுவார்கள்., இரசலின் / யெகோவா சாட்சிகளின் வெளியீடுகளில் இந்த விபரங்கள் இல்லாத போது பதில் எப்படி தருவார்கள் சகோதரரே..?



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

«First  <  1 2 3 4 5  >  Last»  | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard