கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போக நினைத்தானாம் என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு. இது VNK கூட்டத்தாருக்கு மிகவும் சரியாக பொருந்தும். இங்கே ஒரு இலையை கூட புடுங்க முடியாதவன் ராஜ்யத்தில் போய் என்னத்தை புடுங்குவான் என தெரியவில்லை. நியாயத்தீர்ப்பை குறித்து வேதம் பலமுறை எச்சரிப்பு செய்வது இந்த செவித்தினவுள்ளவர்களுக்கு கேட்பதில்லை. நியாயத்தீர்ப்பு என ஒன்று இருந்தால் அதில் பாக்கியம் அடைவோரும் இருப்பார்கள், தண்டிக்கப்படுபவர்களும் இருப்பார்கள், எல்லாருக்கும் இரட்சிப்பு என்பது உண்மைதான் ஆனால் அதற்கு தகுதியுள்ளவனாக ஆக வேண்டும் என்பது இந்த கோமாளிகளுக்கு தெரிவதில்லை. எல்லாரும் மீட்கப்படுவார்கள் என்றால் அதற்கு பேர் நியாயத்தீர்ப்பு இல்லை.
இன்று காலை இந்த வேத பகுதியை வாசித்துக்கொண்டிருந்தபோது பல கேள்விகள் எனக்குள் எழுந்தன. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் சுவிஷேஷத்தை ஜாக்கிரதையாய் பிரசங்கம் பண்ண வேதம் நமக்கு போதித்திருக்க, மேசியாவின் எதிரிகள் சுவிஷேஷப்பணி என்பது கிறிஸ்து தனது சீடர்களுக்கு மாத்திரம் சொன்னது, மற்றவர்களுக்கு சொல்லவில்லை அதனால் நாங்க ஏ.சி ரூம் போட்டு வேத ஆராய்ச்சி செய்வோம் என்கிறார்கள், அழிந்து போகிற ஆத்துமாக்களை குறித்து பாரப்படும் ஆண்டவர் சுவிஷேஷம் அறிவிக்கும் படி தான் தன் தாசர்களை ஏவுகிறார், ஆனால் இவர்களுக்கோ சுவிஷேஷப்பணி என்பது எட்டிக்காயாய் இருக்கும்.
1 நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ;யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:
2 சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு. எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.
3 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமானஉபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,
4 சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.
6 ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன். நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது.
7 நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.
8 இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார். எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
2 தீமோத்தேயு 4 :1 முதல் 8 வரை
1) பவுல் தனது குமாரனைப்போல் இருந்த தீமோத்தேயுவுக்கு சொன்னது, யார் இந்த தீமோத்தேயு என பார்த்தால் அவர் இயேசுவின் நேரடி சீடராகவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட 70 பேரிலோ இருந்ததில்லை. ஆனாலும் பவுல் அவருக்கு ஜாக்கிரதையாய் திருவசனத்தை உபதேசிக்க சொல்கிறார். ஜாக்கிரதையாய் அறிவிக்க சொன்ன காரணம் மக்கள் மனந்திரும்பி ரட்சிப்பை அடையவேண்டும் என்பது தான். இப்படியிருக்க மேசியாவின் எதிரிகள், சுவிஷேஷப்பணி என்பது சீடர்களுக்கு மாத்திரம் தான் மற்றவர்கள் அறிவிக்கதேவையில்லை என்றும் பாவிகள் ராஜ்யத்தில் வந்து கற்றுக்கொள்வார்கள் என தங்கள் சோம்பேறித்தனத்துக்கு வியாக்கியானம் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.
2) 3 மற்றும் 4 ம் வசனங்களில் இவர்களை பற்றி அவ்வளவு தெளிவாக பவுல் சொல்லியிருக்கிறார். ஆரோக்கிய உபதேசத்தை பொறுக்க முடியாத இவர்கள் செவித்தினவுள்ளவர்களாய் ரசல் போன்றவர்களை போதகர்களாக தெரிந்து கொண்டு கட்டுக்கதைகளுக்கு சாய்ந்து போகப்போகும் கதையை பவுல் அப்போதே செப்பியிருக்கிறார்.
3) 5 ம் வசனத்தில் சுவிஷேஷகனுடைய வேலையை செய் என வேண்டுகோள் (கட்டளை?) கொடுக்கிறார். சீடர்களுக்கு மட்டும் தான் சுவிஷேஷப்பணி என சொல்லி சொம்படித்துகொண்டிருக்கும் கோமுட்டிகளுக்கு செருப்படி கொடுக்கும் வசனமாக இது இருக்கிறது.
4) நல்ல போராட்டத்தை போராடினேன், என்ன நல்ல போராட்டம் என்பதை எல்லாம் விளக்கிக்கொண்டிருந்தால் என்ன பதில் சொல்வார்களோ தெரியாது.
(மேசியாவின்) எதிரிகளுக்கு சுருக்கமாக எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் அர்த்தப்படுத்தத் தெரியாததால் யார் என்ன எழுதினாலும் அதை குற்றம் சொல்வார்கள். வேதத்தை அரைகுறையாக அர்த்தப்படுத்திக் கொள்வார்கள்.
//அதாவது துனை போதகன் எப்படி புரிந்துக்கொள்கிறார் என்றால், அதில் இல்லாதது தான் அர்த்தம் என்று புரிந்துக்கொள்கிறார்!! சாம்பிள்:
//பிரதிக்கு கிடைக்கும் தண்டனை வாதிக்கு களிகூருதலை கொடுக்கும் என்ற அர்த்தம் கூட தெரியாதவர்கள்!!!// //
நாம் சரியாக அர்த்தப்படுத்திக்கொடுத்தாலும் வேதத்தில் இல்லாத வார்த்தையை சொன்னான் என்பார்கள். சரியான காமெடிதான்!!!
தாய் மொழி தமிழா இல்லாமல் இருக்குமோ? ஆனால்,கவிதையெல்லாம் எழுத தெரியுது, பக்கம் பக்கமா (சொந்த) வசனம் பேச தெரியுதே?
ஒரு வேளை இவங்க, சாத்தான் பறக்கும் தட்டில் கொண்டு வந்து இங்க போட்டுட்டு போயிட்ட வேற்றுக் கிரக வாசிகளா (Aliens!) இருக்கும்! அதனால் அவனுக்கேத்த மாதிரியே சிந்திக்கிறார்கள்!பேசுகிறார்கள்!
(மேசியாவின்) எதிரிகளுக்கு சுருக்கமாக எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் அர்த்தப்படுத்தத் தெரியாததால் யார் என்ன எழுதினாலும் அதை குற்றம் சொல்வார்கள். வேதத்தை அரைகுறையாக அர்த்தப்படுத்திக் கொள்வார்கள்.
//அதாவது துனை போதகன் எப்படி புரிந்துக்கொள்கிறார் என்றால், அதில் இல்லாதது தான் அர்த்தம் என்று புரிந்துக்கொள்கிறார்!! சாம்பிள்:
//யோவான் 3:16 - விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் - அதாவது விசுவாசியாதவன் கெட்டுப்போவான், அவனுக்கு ஆக்கினைத் தீர்ப்பு என்பது தான் வேதத்தில் சுவிசேஷம்!!!//
யோவான் 3:16 - என்ற வசனம் தான் வேதத்தில் சுவிசேஷத்தின் சுருங்கிய வடிவம் என்ற கருத்தையே //விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல்// என்றும் //விசுவாசியாதவன் கெட்டுப்போவான்// என்றும் சொல்லி இதை எடுத்துக்கூறும் வசனமே வேதத்தில் சுவிசேஷம் என்று அதாவது சுவிசேஷத்தின் சுருங்கிய வடிவம் என்று எழுதினேன்.
அந்த கருத்து கோவை பெரேயன்ஸ் மற்றும் சோல்சொல்யூஷனால் என்ன பாடுபடுகிறது என்பதைக்காணும்போது கோவை பெரேயன்ஸ் & கோ விற்கு வாசித்து எதையும் புரிந்துகொள்வதில் மிகப்பெரும் பிரச்சினை இருக்கிறது என்பது உறுதியாகிறது!!!
//அதனால்தான் கிறிஸ்துவின் சரீரமாகிய முன்குறிக்கப்பட்டவர்கள் அடங்கிய சபைக்கு இப்போது "நியாயத்தீர்ப்பு"(போதனை), உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு நாள் (1000வருட போதனை) இனி வருவதாயிருக்கிறது.//
எந்த அகராதியில் ”நியாயத்தீர்ப்புக்கு” அர்த்தம் ”போதனை” என்று போட்டிருக்கிறது என்று சொன்னால் சரி பார்க்க வசதியாக் இருக்கும்.
நல்ல நோய் எதிர்ப்பு சக்தி இருக்குமானால், கிருமிகள் நம்மை ஒன்றும் செய்யாது. அது போல் ஆண்டவருக்குள் நல்லா புஷ்டியா வளர்ந்திருந்தோமானால், எந்த ரே ஸ்மிதின் துர் உபதேசமும் நம்மை ஒன்றும் செய்யாது.
//ஏனென்றால் பாவம் இருப்பதினால் தான் மரணமே!! பாவத்துடன் தான் மரிக்கிறோம்!!! //
ஆண்டவர் பூமியில் இருக்கும் போதே பாவங்களை மன்னித்தார்.
லூக்கா 5:20 அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
இப்பவும் அப்படியே பாவத்தை மன்னித்தார் என்றால் நாம் பாவத்துடன் மரிக்க வேண்டியதில்லையே.
***
ரோமர் 4:7 எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
என்றால் சிலருடைய பாவங்கள் மன்னிக்கப்பட வில்லை என்றுதான் அர்த்தம்.
மாற்கு 4:12 அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.
சிலர் பாவங்கள் மன்னிக்கப்படு்வதில்லை என்று சொல்லப்படுகிறது. அப்ப அவங்க எல்லாம் உயிர்தெழ மாட்டாங்களா?
ஊழியக்காரர்கள் எல்லாம், சோஃபா வில் உட்கார்ந்து பேசுறாங்க என்று அநியாயத்திற்கு வருத்தப்படும் பெரேயன்ஸ் அவர்களே, சோஃபா வில் உட்கார்ந்துதான் பேச முடியும், நின்று கொண்டு அல்ல!!
ஆமாம் இன்னும் ஷட்டில் காக் விளையாண்டு முடிக்காமல் இருக்கிறது!! ஞாபகப்படுத்தியதற்கு நன்றி!!
ஆனால் அதற்கப்புறம் என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியவில்லை. ஜெபம் தேவையில்லை என்று சொல்றீங்களா??
[இவர்களாக எங்களை தேவன் அழைத்தார் என்று தங்களை தீர்க்கதரிசி என்றும் ஊழியர் என்றும் சொல்லிக்கொண்டால் உங்களை போன்றோர் உட்கார்ந்து நம்பிக்கொண்டு இருங்கள், எங்களுக்கு என்ன!!??]
விசெ- நாத்திகராக இருந்து, குடி சிகரெடுக்கு அடிமைப்பட்டு தேவ கிருபையால் விடுதலையானவர்.
இந்த தகுதியெல்லாம் நமக்கும் இல்லையா?? பவுலுக்குதான் அவர் தகப்பனா? உங்களுக்கு இல்லையா? பவுல் ஜெபத்தைத்தான் கேட்பாரா? உங்க ஜெபத்தைக் கேட்க மாட்டாரா? ஆண்டவர் பட்ச பாதம் உடையவர் அல்ல. உங்களையும் தரிசனம் கொடுத்து பயன்படுத்த அவர் சித்தமுள்ளவராகத்தான் இருக்கிறார். நீங்க ஆண்டவருக்காக ஒரு துரும்பையும் அசைக்கமாட்டோம் என்று உறுதியாக இருப்பதால், ஆண்டவரும் அமைதியாக இருக்கிறார்.
//இல்லாத எக்காளச்சத்தம் எல்லாம் சாது கேட்டிருக்கிறார், கானக்கூடாத தேவனை எல்லாம் விசெ பார்த்திருக்கிறார்!! //
பவுலை தேவன் சந்திக்கவில்லையா? அகாலப் பிறவி போன்ற எனக்கும் தரிசனமானார் என்று சொன்னாரே. பேதுருவை தேவதூதன் வந்து விடுவிக்கவில்லையா? ஸ்தேவான் இயேசுவை பார்க்க வில்லையா? யோவான் எக்காள சத்தம் கேட்க வில்லையா? ஆவியில் கேட்காமல், பூமியில் கேட்க ஆல்வின் தாமஸ் மீட்டிங் செல்லவும். அவர் எக்காளம் ஊதுகிறார்!!
//இல்லாட்டி உங்களின் சுவிசேஷத்தால் தான் பூமி நிறைந்திருக்கிறதே, பிறகு எப்படி கிரிஸ்து விசுவாசத்தை காணமாட்டேன் என்கிறார்!!
யோசியுங்கள்!!//
நீங்களே சொன்னபடி இக்கால ஊழியர்கள் தங்கள் ராஜ்ஜியத்தை கட்டுவதில் பிஸியாகி விட்டார்கள். போதாக்குறைக்கு பிசாசும் அந்திக் கிறிஸ்துவின் ஆவியினால் உங்களைப் போன்றோரை மயக்கி வைத்திருக்கிறான். அடுத்து உலகத்தில் நடைபெறப் போவது சர்வ மத ஒருங்கிணைப்பு. இது சரியா தவறா என்று உங்கள் வேத பண்டிதர்கள் என்ன் சொல்கிறார்கள் என்று பார்த்து வையுங்கள். அப்பத்தான் யாராவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியும்.
இப்படி உலகம் போய்கொண்டிருப்பதால்தான் விசுவாசத்தைக் காண்பாரோ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஒருத்தர் இரட்சிக்கப்பட்டாலும் முழு பரலோகமும் களி கூர்வதால், சுவிசேஷம் சொல்வது அதி முக்கியம். ஊழியத்தின் பலனாக எண்ணிக்கையைப் பார்க்கத் தேவையில்லை.
//காவலில் உள்ள ஆவிகள் நோவா காலத்தில் தவறு செய்தவர்கள் மாத்திரமே!! அவைகள் நோவா காலத்தில் மனுஷக்குமாரத்திகளுடன் திருமனம் செய்துக்கொண்ட ஆவிகள், நோவாவின் ஜல பிரலயத்தின் போது இந்த பூமியை விட்டு மீண்டும் தங்களின் ஆவிக்குரிய சரீரத்தில் தப்பிக்கும் போது தான் அவர்களை காவலில் (இனியும் அவர்கள் மாம்ச சரீரத்தில் வெளிப்படுத்தமுடியாதபடி) வைத்தார் தேவன்!!//
அப்படியா? எந்த வசனத்தில் இதெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது??
//லாசரு உயிர்த்தெழுந்தபின் என்னவயிற்று, இயேசு கிறிஸ்து உயிரோடு எழுப்பினவர்களுக்கு எங்கிருந்து இந்த ஞாபகங்கள் வந்தது. தூங்கி எழுவதுபோல இருக்கும் என்பதால்தான், "நித்திரையடைந்தவர்கள் நிமித்தம்", "நித்திரையடைந்து" என்று வசனம் சொல்கிறது. என்னத்தத்தான் வேதத்தில் வாசிக்கிறீர்களோ? //
நீங்க சொன்னது - மூளையில்தான் எல்லாம் பதிவாகுது.
நித்திரை பண்ணுகையில் மூளை உயிரோடுதான் இருக்கிறது. எனவே நித்திரை தெளிந்தவுடன் எல்லாம் திரும்ப ஞாபகம் வரும். ஆனால் மரித்து மண்ணுக்கு போனவுடன் மூளையும் இல்லாமல் போய் விடுகிறது. அதாவது ஒரு மனிதனைப் பற்றிய எல்லாம் அழிக்கப்பட்டு விடுகிறது. ஆத்துமா, ஆவி என்று எதுவும் சரீரம் மரித்தபின் இருப்பதில்லை என்றால் உயிர்தெழும்போது எங்கிருந்து ஞாபகங்கள் வரும்? மேஜிக்கா?உங்க லாஜிக்கை நீங்களாவது follow பண்ண வேண்டாமா?
அப்ப நோவா காலத்தில் 8 பேரைத் தவிர உலகத்தில் இருந்த அனைவரும் தூதர்கள்?? இந்த உங்க வெளிப்பாட்டுக்கு முன்னால சாதுவும் விசெ உம் எந்த மூலைக்கு?? நோவா காலத்தில் நடந்தது போல் கடைசிக் காலத்திலும் நடக்கும் என்று ஆண்டவர் சொன்னதற்கு என்ன அர்த்தம் என்று நினைக்கிறீர்கள்?
//ஒரே மேப்பனால் அளிக்கப்பட்ட செவ்வையும் சத்தியாமுமானவைகளை மனித தத்துவம் என்று சொன்னால் சத்தியமாக உருப்படவே மாட்டீர்கள்... ஜாக்கிரதை. //
எல்லாம் மாயையும், மனதுக்கு சஞ்சலமாயிருக்கிறது என்று பிரசங்கி சொல்கிறார். ஏன்? வெறும் சூரியனுக்கு கீழே இருக்கும் உலகத்தை மட்டும் பார்த்தால் அப்படித்தான் தெரியும். இந்த வாழ்க்கையோடு ஆண்டவரையும் சேர்த்துப் பார்த்தால்தான் நம்க்கு அமைதியும், நம்பிக்கையும் வரும்.
//கிறிஸ்து இயேசு மனித குலத்திற்கு தன்னை ஈடுபலியாக ஒப்புக்கொடுத்ததை அவர்கள் பார்த்து தெரிந்துக்கொண்டது தான், காவலில் உள்ள ஆவிகளுக்கு பிரசங்கம் என்பதின் சுருக்கம்!!//
காவலில் உள்ள ஆவிகளுக்கு பிரசங்கம் பண்ணினார் என்றால் ...... காவலில் உள்ள ஆவிகள் பார்த்து தெரிந்து கொண்டார்கள் என்று அர்த்தமா? இப்படி தமிழை தமிழுக்கு மொழி பெயர்க்கும் கலையை எங்கே படித்தீர்கள்?? எந்த வாக்கியத்தையும் எப்படியும் அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம் ... அப்படித்தானே?. பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு!!
//கூறு கெட்டவர்கள் என்று ஏன் கூறுகிறோம் என்பது இப்பவாவது புரிந்ததா?//
[கோல்டா அவர்களே பரலோகம் செல்ல பவுல் பேதுரு கேட்டகரியில் இருக்க வேண்டும்!! மனசாட்சியுடன் சொல்லுங்கள் நீங்கள் அந்த கேட்டகரியில் இருக்கிறீர்களா, ]
பேதுரு போல் அப்பப்ப அவரை மறுதலிக்கிறோம். அப்பப்ப அவருக்கு ஆலோசனை சொல்றோம். அவருக்கு உதவி செய்ய பட்டயத்தை உருவுகிறோம். படகை விட்டு இறங்கப் போகிறேன் என்று உணர்ச்சி வசப்படுகிறோம். மனங் கசந்து அழுகிறோம். பவுல் போல் இல்லையென்றாலும் பேதுரு போல் இருக்கிறோம்.
நாம் பரிசுத்தமற்றவர்கள். எனவே பரலோகம் செல்ல முடியாது என்று நினைக்கிறீங்க போல. உண்மைதான் அலை எப்ப ஓய? கடலில் எப்ப குளிக்க? அது போல் சரீரம் இருக்கும் வரை நாம் பாவம் செய்து கொண்டுதான் இருப்போம். செய்த பாவத்தை அவர் உணர்த்தும் போது மனைந்திரும்புகிறோமா, இருதயத்தைக் கடினப்படுத்துகிறோமா என்பதுதான் முக்கியம். அவர் நம் நினைவுகளின் தோற்றத்தையும் அறிகிறவர். உண்மையில் அவரை நேசிக்கிறோமா, அவருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று நினைக்கிறோமா என்றுதான் அவர் பார்க்கிறார்.
சில பாவங்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கலாம். அதிலிருந்து நம் சுய பெலத்தால் வெளியே வர முடியாதுதான். அதற்கும் அவரை தேடுகையில் அவர் விடுதலை செய்வார். இது என் அனுபவம். தமிழ் கிறிஸ்தவ தளத்தில் பதித்தது.
--
பெண்ணாய் இருப்பதில் ஒரு(ஒரே?) நன்மை என்னவென்றால், சிகரெட், குடி போன்ற கெட்ட பழக்கங்களுக்கு அடிமைப்பட வாய்ப்பில்லை.
ஆனால், எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. என்னவென்றால் புத்தகம் படிப்பது. நல்ல பழக்கம்தான் என்றாலும், அது எனக்கு ஒரு அடிமைத்தனமாக இருந்தது. ஏதாவது ஒரு புத்தகம் கையில் இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது. குமுதம் படிக்காவிட்டால் தலை வெடித்து விடும். இப்படி இருக்கையில் ஒரு நாள் ஆராதனை வேளையில், ”நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன் நிம்மதி நிம்மதியே” என்ற பாடலை நான் உணர்ந்து ஒன்றிப் பாடுகையில் ஒரு சந்தோஷத்தால் ஆண்டவர் என்னை நிரப்பினார்.மனம் லேசானது. அன்றிலிருந்து குமுதம் படிக்க வேண்டும் என்ற ஆசை என்னை விட்டு போயே போய் விட்டது. நான் குமுதத்தை விட்டது என்னைப் பொறுத்தவரை எட்டாவது உலக அதிசயம்!
இப்பொழுதும் உலக பிரகாரமான புத்தகங்கள்(குமுதமும்) படிக்கத்தான் செய்கிறேன். ஆனால் அது சுவையற்றதாய் இருக்கிறது.
//எங்களுக்கு பொருத்தப்பட்ட ஒரே சிப் இரட்சிப்பு மட்டுமே. கிறிஸ்துவினால் பழைய எல்லா கழிசடைப் போதகங்களும் wash செய்யப்பட்டவர்கள் என்பதில் பூரிப்படைகிறோம்.//
ஷார்ப்பா உங்க மூளை வேலை செய்யுது!வாழ்த்துக்கள்!! ( உபயம்: K link Healthcare products ???) ஆனால் என்ன பிரயோஜனம்? உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும்...
//http://bible-truths.com//
Thanks for the link. பார்க்கிறேன்.
--
உங்க இருவருக்கும் தேவை தேவ தொடுதல். A supernatural touch from God!!