நேற்று (24.03.2011)- (ஒருநாள் மட்டும்) ஒரு கிராமத்திலிருந்து வந்த அழைப்பினிமித்தமாக தூரப் பிரயாணம் (4am) சென்றிருந்தேன்; நள்ளிரவு (1am) வீடுதிரும்பி கணிணியை திறந்தால் அது பழுதுபட்டு அதில் மீண்டும் பிரச்சினை;எனவே சுமார் 36 மணிநேரம் நான் நண்பர்களுடைய விவரங்களையும் தளத்தின் போக்கையும் கவனிக்க முடியாமற்போனது.
நான் யாரையும் அசட்டை செய்ததாக தயவுசெய்து எண்ணிவிடவேண்டாம்;(மேசியாவின்) எதிரிகளாக நான் பாவித்து எழுதிவரும் மதிப்பிற்குரிய எதிரிகளான நண்பர்கள் உட்பட அனைவரையும் சமமாக நேசிக்கிறேன்; இந்த விஷயத்தில் அரசியல்வாதிகள் மேடையிலும் தேசத்தின் மன்றங்களிலும் ஆக்ரோஷமாக பேசிவிட்டு வெளியே வந்து கைகுலுக்கிக் கொண்டு அரட்டையடிப்பார்களே அதுபோன்ற பொய் கோபமே என்னிடம் உண்டு; இங்கே போட்டி உண்டு பொறாமையில்லை;வேகத்தின் அளவிலேயே விவேகமுமுண்டு.
எனவே இணக்கமான சூழல் உருவாக விரும்பி நண்பர்கள் எடுத்துள்ள எல்லா முயற்சிகளையும் ஊக்கப்படுத்தும் வண்ணமாக எனது சர்ச்சைக்குரிய வரிகளை அதாவது நண்பர் கோவை வெறியன் அவர்களை கோபப்படுத்திய சர்ச்சைக்குரிய வரிகளை நீக்குவதுடன் என்னுடைய கடினமான போக்கினால் புண்பட்டிருக்கக்கூடிய அவருடைய மென்மையான உணர்வுகளை மதித்து, அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோருகிறேன்.
தேவ சமாதானம் நம்மை ஆளுவதாக,அவர் ஒருவரே நீதியுள்ள நியாயாதிபதி ஆவார்..!
-- Edited by chillsam on Friday 25th of March 2011 10:02:39 AM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
//What a Christian Advise, you know!! Please use all your arrows!!//
The Bible clearly mentions about using the spiritual armoury, the shield, breastplate arraow, it is a Christian advise alone Mr. Bereans. I think the issue is about to be closed, I could have written in your blog, but God Forbid, I will never set my foot in your blog again. I do have some self respect.
If at all Mr.Chill sam had said it was not the army or the armed services in its entirety. If you had taken it personal then it is certainly wrong in his part. Don't you know that many skeletons tumble out of retired armed professional, if you say that speaking out is against the nation its is height of absurdity, 2 days back, the Times of India had revealed the tainted army officers in the Adarsh land scam. If I am waging the War then TOI and other media have launhed a massive assault on the tainted officers, we are not in a military Junta country where speaking about the army itself is a crime. Nobody in this country is above the Law.
//gentility which I have shown, Mr Joseph!!//
Oh What a Gentility, Yes I appreciate-Thanks
//இதற்கென்று அவர் ஊழியர்கள் என்கிறா ஏஜண்டுகளை நியமிக்கவில்லை!!//
I think the last verses of Matt 28 is the commission to all his believers to preach the Gospel, and needy people of course will come to get healed and Didn't you see many thronged to the apostles to get saved and healed
//நீங்கள் இது போன்ற கூட்டங்களுக்கு தொடர்ந்து போக என் வாழ்த்துக்கள்!! சரி, இந்த சுகமளிக்கும் கூட்டங்களை இலவசமாக செய்ய சொல்லவேண்டியது தானே!! தூனுக்கு தூன் உண்டியல், இப்பொழுது பாடல் பாடப்படும், அப்பொழுது காணிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் அறிவித்து அதை நோக்கமாக கொண்டு தானே கூட்டங்கள் நடபெறுகிறது!! எங்கள் ஊரில் கலெக்ஷன் தகறாரில் பாஸ்டர் ஐக்கியத்தை விட்டு ஒருவர் வெளியேறி கலெக்ஷனுக்கென்றே தனியாக ஒரு கூட்டம் நடத்தினார்!! //
I know where to go and where not to go. Do you blame the offeratories that are taken, if you consider it to be fraud it is your height of misunderstanding, if the money is misused it is God who will Judge them. It is none of your business to comment on this. Many missionaries are supported by the money collected. Missionaries serving in Places where one will dare not to go. Don't have the misfortune of disgracing the sacrifices of the missionaries
//ஏன், ஆங்கிலேயர்கள் இருக்கும் நாடுகளில் சிறைச்சாலைகளோ, மருத்துவமனைகளோ இல்லையா!! வெஸ்லி என்ன வேறு யார் நினைத்தாலும் தேவன் ஒருவனை இழுத்துக்கொள்ளாமல் போனால் ஒருவனும் கிறிஸ்துவிடத்தில் வரான், தெரியுமா!! உங்களை போன்றோர் தான் மனிதர்களை தேவனாக்குவது,
யோவான் 6:44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; //
I don't know whether to cry or lament or laugh. Wesley accepted God's call for ministry and he went on preaching the Gospel as per God's commission given on Matt 28. I agree that whoever God calls will be drawn, but it is the duty to preach the Gospel, God sends his messengers. God right from the OT ages looks for people to send, Isaiah, Elijah, Jonah and the list is on....
//அற்புதங்கள் நடக்காத மதம் ஒன்று இருந்தால் சொல்லுங்களேன், ஏன் சாத்தான் கூட தான் அற்புதம் செய்வான்!! நான் அதற்காக விக்கிள்ஸ்வொர்த்தின் பிரயாசங்களை கொச்சை படுத்தவில்லை, ஆனால் யார் காரணம் என்று பார்க்காமல் சும்மா மனிதர்களின் பெயர்களையே சொல்லிக்கொண்டு போவதில் என்ன லாபம்!!//
I have written this only to respond to your accusations about christian meetings Large scale. I never meant to glorify Wesley or Wigglesworth, please don't imagine out of contest and write without understanding what I meant to write
Last but not the least. I willl ask you a question In any way, does the catholic church mentioned as Prostitute in the Bible, You said that we have to understand it that way, Nonsense. You say that you are people who look for and follow things only that are said in the Bible. If this arguement of yours hold dood then stop calling the churches that way as it is never mentioned in the Bible
பைபிளில் சொல்லப்படாத திரித்துவத்தை (இயேசுவின் ஞானஸ்னானத்தின் போது தேவனின் மூன்று நிலைகளும் வெளிப்பட்டது பைபிளிலேயே இருக்கிறது) நம்பமாட்டோம் எனும் நீங்கள் வேசி சபை என சொல்லப்படாத சபையை மட்டும் தூஷிப்பீர்கள். பைபிளில் இல்லை என்றால் பேசாமல் அது பற்றி சொல்லப்படவில்லை என வாயை மூடிக்கொண்டிருங்கள். //அப்படியே தான் வேசி சபையையும் புரிந்துக்கொள்ள முடியும்!! // சொல்லப்படாத ஒன்றை புரிந்து கொள்ளும் நீங்கள் திரித்துவத்தை மாத்திரம் பைபிளில் இல்லை என புரிந்துகொள்ள மாட்டீர்கள், வேடிக்கை தான்
//மண்ணிக்கனும், இயேசு கிறிஸ்துவை பின்பற்றி ஒரு புதிய மார்க்கமாக உருவாகி வருகிறதை தாங்க முடியாமல் தான் ரோமர்கள் கிறிஸ்தவர்களை பகைத்தார்களே அன்றி நீங்கள் சொல்லுவது போல், கிறிஸ்துவை தொழுதுக்கொள்வதற்காக அல்ல!!//
The Jews had an religious immunity to worship Jehovah God under the Romans, if Jesus was not worshipped, it definitely would not have been a problem for the Romans as they would have considered them another sub sect of Judaism but instead the Jews connived against the christians to malign them saying strange things about them, their worshipping etc to the Romans
-- Edited by joseph on Friday 25th of March 2011 11:43:20 AM
-- Edited by chillsam on Friday 25th of March 2011 12:04:21 PM
நேற்று (24.03.2011)- (ஒருநாள் மட்டும்) ஒரு கிராமத்திலிருந்து வந்த அழைப்பினிமித்தமாக தூரப் பிரயாணம் (4am) சென்றிருந்தேன்; நள்ளிரவு (1am) வீடுதிரும்பி கணிணியை திறந்தால் அது பழுதுபட்டு அதில் மீண்டும் பிரச்சினை;எனவே சுமார் 36 மணிநேரம் நான் நண்பர்களுடைய விவரங்களையும் தளத்தின் போக்கையும் கவனிக்க முடியாமற்போனது.
நான் யாரையும் அசட்டை செய்ததாக தயவுசெய்து எண்ணிவிடவேண்டாம்;(மேசியாவின்) எதிரிகளாக நான் பாவித்து எழுதிவரும் மதிப்பிற்குரிய எதிரிகளான நண்பர்கள் உட்பட அனைவரையும் சமமாக நேசிக்கிறேன்; இந்த விஷயத்தில் அரசியல்வாதிகள் மேடையிலும் தேசத்தின் மன்றங்களிலும் ஆக்ரோஷமாக பேசிவிட்டு வெளியே வந்து கைகுலுக்கிக் கொண்டு அரட்டையடிப்பார்களே அதுபோன்ற பொய் கோபமே என்னிடம் உண்டு; இங்கே போட்டி உண்டு பொறாமையில்லை;வேகத்தின் அளவிலேயே விவேகமுமுண்டு.
எனவே இணக்கமான சூழல் உருவாக விரும்பி நண்பர்கள் எடுத்துள்ள எல்லா முயற்சிகளையும் ஊக்கப்படுத்தும் வண்ணமாக எனது சர்ச்சைக்குரிய வரிகளை அதாவது நண்பர் கோவை வெறியன் அவர்களை கோபப்படுத்தியசர்ச்சைக்குரிய வரிகளை நீக்குவதுடன் என்னுடைய கடினமான போக்கினால் புண்பட்டிருக்கக்கூடிய அவருடைய மென்மையான உணர்வுகளை மதித்து, அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோருகிறேன்.
தேவ சமாதானம் நம்மை ஆளுவதாக,அவர் ஒருவரே நீதியுள்ள நியாயாதிபதி ஆவார்..!
-- Edited by chillsam on Friday 25th of March 2011 10:02:39 AM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
புரிந்துணர்விற்கு மிக்க நன்றி. ஒருவருக்கு எந்தநேரமும் ஒரே விடயத்தை திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருக்க முடியாது. நான் இத்தளத்தின் நிர்வாகியும் கிடையாது.
பலதடசை நான் சகோ. சில்சாமை கண்டித்தே வந்துள்ளேன். இராணுவத்தை குறிதத பதிவில் எனக்கு உடன்பாடில்லை என ஏற்கனவே சொல்லிவிட்டேன்.
//ஆனால் ஒரு காரியத்தில் மட்டும் தெளிவாக இருக்கிறேன்,இயேசு ஒருவரே மெய்யான தெய்வம்;அதற்காகவே நான் இவ்வளவு போராட்டங்களையும் அவமானங்களையும் சந்திக்கிறேன்;அவர் தொழத்தக்க தெய்வமல்ல என்று தொடர்ந்து தூஷிக்கும் யாருடனும் நான் இணங்கிப் போவது என்பது ஆகாத காரியமாகும்.இந்த எல்லா சர்ச்சைகளுக்கும் மூல காரணமாக விளங்குவது இயேசுவை தொழத்தக்க தெய்வமல்ல என்று கூறி எங்களை இழிவாக நடத்தி கொச்சைப்படுத்தியதே என்பதை உணரமாட்டீர்களா? //
நான் அதிகமாக இந்த விசயங்களை குறித்து எழுதவில்லை ஏனென்றால் சகோ. கொல்வின், சகோ. எபி மற்றும் சகோ. ஜோசப் ஆகியோர் இந்த காரியங்களை குறித்து நல்லமுறையில் Handle செய்துகொண்டு இருக்கிறார்கள். இந்த சமயத்தில் நண்பர்கள் அன்புவும், சகோ. சுந்தரும் எரிகிற தியில் என்னை உற்றுவது ஏற்று கொள்ளதகுந்தது அல்ல. நண்பர்கள் டினோ மற்றும் மற்ற நண்பர்கள் சகோ. சிலசாமை மட்டற்ற சகோதரர்களிடத்தில் தனிமைப்படுத்த வேண்டும் என்று செயல்படுவதும் நல்ல செயல் அல்ல! சகோ. சிலசாமை குற்றபடுத்தினால், அதே குற்ற்றத்தை எல்லாரும் செய்கிறோம், செய்திருக்கிறோம் என்பதே உண்மை. "உன்கண்ணில் உள்ள உத்திரத்தை..." வசனத்தை நாம் நமக்கே நினைவு படுத்திக்கொள்வது நலம்.
சகோ. சில்சாம் நீங்கள் சொன்னது போல "இயேசுவை தொழத்தக்க தெய்வமல்ல" என்று அவர்கள் சொல்லுவதுதான் தலையாய பிரச்சனை மற்ற Personal Remarks ஐ துசியை தட்டுவது போல மறந்துவிடுவது கிறிஸ்துவை பிரதிபலிப்பது மாத்திரம் அல்ல, இதை கவனிக்கிற மற்றவர்களையும் அதாயப்படுத்தி கொள்ள ஏதுவாகும். நம்மைவேசி என்று சொன்னால் சந்தோசப்படுங்கள். ஏனென்றால் கிருஸ்து நமக்காகத்தான் வந்தார். இயேசுவுக்கு முன்பாக முழங்காலை மடக்காத (அவர் திரும்ப வரும்போது மிகாவேல் முட்டியை உடைத்து இயேசுவுக்கு முன்பாக முடங்குபடி செய்வான்) பரிசேயனை விட இயேசுவை நேசிக்காமல் பாவத்தை நேசித்து இருந்தேன் என்னை மன்னியும் என்று அவரை தொழுது கொள்ளுகிற வேசியாகவே நாம் இருப்போம்.
இயேசு சொன்னார்
இவ்விருவரில் எவன் தன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன் தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார். (மத்தேயு 21:31-32)
//அவர் தொழத்தக்க தெய்வமல்ல என்று தொடர்ந்து தூஷிக்கும் யாருடனும் நான் இணங்கிப் போவது என்பது ஆகாத காரியமாகும்.இந்த எல்லா சர்ச்சைகளுக்கும் மூல காரணமாக விளங்குவது இயேசுவை தொழத்தக்க தெய்வமல்ல என்று கூறி எங்களை இழிவாக நடத்தி கொச்சைப்படுத்தியதே என்பதை உணரமாட்டீர்களா? //
நாத்திகர்கள் கடவுள் இல்லை என்கிறார்கள், இஸ்லாமியரோ கிறிஸ்துவை ஒரு தீர்க்கதரிசி என்கிறார்கள், இந்துக்களுக்கு கிறிஸ்து பத்தோடு பதினொன்னாவது கடவுள். அதுபோல இவர்களுக்கு கிறிஸ்து ஒரு மிகாவேல் தூதன், தெய்வத்தன்மையில்லாதவர். ஒவ்வொருவரும் அவர்களுடைய புரிதல்களுக்கேற்ப நம்புகிறார்கள்,எழுதுகிறார்கள். இயேசு தொழத்தக்க தெய்வமல்ல என்று இவர்கள் சொல்வதனால் மட்டும் அது உண்மையாகிவிடாது. கோ.பெ தனது கையிலிருக்கும் வேதம் போதிப்பதை எழுதுகிறார். அதுபோல நாமும் நமது கையிலிருக்கும் வேதம் போதிப்பதை எழுதுவோம்.
கோவை பெரியன்ஸ் மற்றும் அவர் தளத்திலுள்ளவர்களுக்கு: உங்கள் நம்பிக்கையும் எங்கள் நம்பிக்கையும் சுத்தமாக வெவ்வேறாக இருக்கிறது. எனவே எங்கள் கோட்பாட்டில் நம்பிக்கையுள்ள ஊழியர்கள், போதகர்கள் மற்றும் அவர்களின் ஊழியமுறைகள் பற்றி[ (உதா)பிச்சைக்காரர்கள்]விமர்சிப்பது சரியாகாது.
@சில்சாம்: இவர்களுக்காக நீங்கள் ஏன் விலகவேண்டும்? ஒருவர் இப்படித்தான் என்று தெரிந்துவிட்ட பிறகு அவர் சொல்வதற்கு ஏன் முக்கியத்துவம் தர வேண்டும்? கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள். அதே நேரம் நேரிடையாகவோ மறைவாகவோ இனியும் யாரையும் தாக்கி எழுதவேண்டாம்.
சகோ.சில்சாம் சர்ச்சைக்குரிய பதிவுகளை நீங்கள் முதலில் பதித்ததால் நீங்கள் முதலில் நீக்குவதே சரியாகும் . நீங்கள் நீக்கினால் கோ.பெ அவர்களும் நீக்குவதாக சொல்லியுள்ளாரே. மேலும் அன்பு அவர்களும் நீக்குவதாகவே சொல்லியுள்ளார்.
Why do you have to Quit, it is not a personal war, if they are still fighting it out, we still will fight it till the last arrow is shot.
Mr. Berean, It is a big mistake that you had reveled someone else's personal details , don't you know that it is against cyber laws. I request/advise you to remove his personal details.
Please stop writing about Catholic/or any church.
நீங்கள் தான் கிறிஸ்துவை வணங்குவதில்லையே, கிறிஸ்தவ சபைகளை பற்றி எழுத உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது, கிறிஸ்தவ நற்செய்தி கூட்டங்கள் சுகமளிக்கும் கூட்டங்களை பற்றி பகடி செய்துள்ளீர்களே. கிறிஸ்துவின் மகிமை அங்கு வெளிப்படுவதை உம்மால் பொறுக்க முடியவில்லையோ. போய் பாரும் அந்த கால முதல் இன்று வரை நற்செய்தி கூட்டங்கள் எப்படி நடக்கிறது என 1) வெஸ்லி தனது தகப்பனாரின் கல்லறை மீது நின்று பேசி தான் ஆங்கிலேயர்களை கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினார் 2) விகிள்ஸ்வொர்த்தின் கூட்டங்களில் எத்தனை அற்புதங்கள் நடந்தன தெரியுமா இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
2000 வருடங்களாக கிறிஸ்துவை தெய்வமாக தொழுபவர்கள் தான் கிறிஸ்துவுக்காக, கிறிஸ்துவின் அன்பை கல்லடி பட்டும் சொல்லடி பட்டும் அறிவித்துக்கொண்டிருக்கின்றனர். இது முடியாது, இயேசுவின் 2ம் வருகை மட்டும் தொடரும்.
-- Edited by chillsam on Friday 25th of March 2011 09:25:48 AM
// எனது பெயர் விவரம் "கோவை வெறியன்" அவர்களது தளத்தின் குறிப்பிட்ட திரியிலிருந்து நீக்கப்பட்டவுடனே சர்ச்சைக்குரிய வரிகள் என்னுடைய கட்டுரையிலிருந்தும் நீக்கப்படும் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்;அதேபோல இந்த வரிகளை மேற்கோள் காட்டி அவர் எழுதியிருப்பவையும் நீக்கப்படவேண்டியிருக்குமே;அதை என்ன செய்வது என்று புரியவில்லை..! //
இந்த அறிவிப்புக்கு எதிர்பார்த்த சமரசம் உண்டாகும் போலத் தெரியவில்லை; இந்த அறிவிப்புக்குக் காரணமாக இருந்தது கோல்வின் மற்றும் எபி ஆகிய சகோதரர்களின் புத்திமதிகளே;அவர்களும் அருமை நண்பர் ஜோசப் ஸ்னேகா அவர்களும் இணக்கமான சூழ்நிலையை உருவாக்க அதிக முயற்சியெடுத்து செய்து வருபவையும் கூட விமர்சிக்கப்படுகிறது;அவர்களுக்கும் எனக்கும் இடையில் எந்த கட்டுப்பாடுகளும் கட்டாயங்களும் இல்லை;அவரவர் தளங்களில் சுதந்தரமானதொரு வாழ்க்கையை வாழ்கிறார்கள்;ஆனாலும் தலைவர் - தொண்டர் என்றெல்லாம் உலகப் பிரகாரமான வார்த்தைகளால் இழிவுபடுத்துவது சகிக்கமுடியாததாகும்.
இதுவரை கோல்வின் அவர்களையும் ஜாண் அவர்களையும் இழிவுபடுத்தி எழுதிய வார்த்தைகளுக்கு யாரும் வருத்தம் தெரிவிக்காத நிலையில் என்னை மட்டும் கார்னர் செய்வது விஷமத்தனமானதாகும்;என்னைக் குறித்து மிகமிக மோசமாகவும் ஒருமையிலும் இழிவாகவும் எழுதியவற்றுக்காக நான் நியாயம் கேட்கவே இல்லை;நான் துஷ்டன் என்றால் என்னை விட்டு விலகு;தீமையோடு போராடாதே என்று உன் வேதம் சொல்லவில்லையா? என்னைக் குறித்த விவரங்களை பகிரங்கப்படுத்தி (மேசியாவின்) எதிரி அடையப்போகும் சுகம் என்னவோ? என்னை சட்டத்தின் பிடியில் நிறுத்தி அவர் அடையப்போகும் ஆனந்தம் என்னவோ, அதற்கு என்னை முழுவதும் உட்படுத்தியிருக்கிறேன்;ஆனாலும் மன்னிப்பு என்பதற்கும் கிறித்துவின் அன்பு என்பதற்கும் தனி அகராதியை வைத்திருக்கும் இவர்கள் இன்னும் முரண்டு பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
எனது தனிவிவரங்களை வெளியிட்டது சட்டப்படி தவறு என்று கோல்வின் சுட்டி காட்டியபிறகும் பிடிவாதமாக அவர் இருந்துகொண்டு நான் நிபந்தனை விதிப்பதாகக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது;நான் ஒருவரைக் குறித்து எழுதிய தரக்குறைவான விமர்சனத்தை நீக்கக் கோருவதற்கும் என்னுடைய தனி விவரங்களை வெளியிட்டு அவமானப்படுத்துவேன் என்று ப்ளாக் மெயில் செய்வதற்கும் எத்தனை வித்தியாசம் உண்டல்லவா? நான் எழுதியது தவறு என்பதை மறுக்கவில்லை;அதற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் ஏற்கனவே வருத்தம் தெரிவித்துக்கொண்டே இருக்கிறேன்;கோவை வெறியன் இந்த குற்றச்சாட்டுக்காக என்னைத் தூக்கில் போடமுடியாது;நான் உயிருக்கே அஞ்சாதவன்,எனவே மிரட்டலுக்குப் பணியவில்லை;என்னுடைய போராட்டங்கள் வெளிப்படையானது;இதில் ஒளிவுமறைவோ உள்நோக்கங்களோ இல்லை,இல்லை,இல்லவே இல்லை..!
எனது விமர்சனத்திலிருந்து சர்ச்சைக்குரிய வரிகளை நீக்குவது குறித்து நான் நியாயமான ஐயத்தையே எழுப்பியிருக்கிறேன்;ஏனெனில் இன்றைக்கு என்னை நீக்கச் சொல்லி நீங்கள் மிரட்டிக்கொண்டிருக்கும் அதே வரிகளின் அடிப்படையில் அன்பு அவர்கள் ஒரு கட்டுரையையே எழுதிவிட்டார்;நான் என்னுடைய வரிகளை நீக்கினாலும் என்னுடைய வரிகள் வெவ்வேறு தளங்களில் சூழலில் இன்னும் இருக்குமே என்கிறேன்;எனவே நீங்கள் சமாதானமான சூழலை உருவாக்க எண்ணினால் என்னைக் குறித்த தனி விவரங்களை நீக்குங்கள்;இனியும் இதுபோன்ற சட்டவிரோதமான செயல்பாடுகளில் ஈடுபடாதிருக்க உதவும் நட்புரீதியான விவாதங்களைத் துவங்குங்கள்;முடிந்தால் இயேசுவை மிகாவேல் தூதனின் அவதாரம் என்று எழுதிய வரிகளையும் கத்தோலிக்க சபை வேசிகளின் சபை என்று எழுதியதையும் நீக்குங்கள்;கோல்வின் ஜாண் போன்ற சுயாதீனமான நண்பர்களை சில்சாமின் அடிமைகள் போல சித்தரிக்காதிருங்கள்;தத்தமது கருத்துக்களை சுதந்தரமாகப் பகிர்ந்துகொள்ளும் நண்பர்களிடையே பிரிவினையை தோற்றுவிக்க எண்ணாதிருங்கள்;அது நரித்தனமாகும்.
நீங்கள் இனியும் அவ்வாறு செய்தால் என்னுடைய நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு சில்சாம் என்ற பெயரில் பணிபுரிவதையும் நிறுத்திவிட்டு இணையதளப் பணிகளிலிருந்தே ஓய்வுபெற எண்ணுகிறேன்;இதனை பொறுப்புடன் நிர்வகிக்கக் கூடிய யார் வேண்டுமானாலும் அதனை ஏற்று நடத்தட்டும்;இதனால் கடந்த ரெண்டு வருடங்களாக நான் கவனிக்காத எனது வீட்டு ஒழுங்குகளை கவனிக்கமுடியும்;நான் ஆசைபட்டு வாங்கி வைத்திருக்கும் எண்ணற்ற புத்தகங்களை என் ஆயுசு முடிவதற்குள் படிக்கமுடியும்;நீங்களெல்லாம் சொல்லுவது போல எனக்கு ஒன்றும் தெரியாது,"மனுஷரெல்லாரிலும் நான் மூடன்; மனுஷருக்கேற்ற புத்தி எனக்கு இல்லை."(நீதிமொழிகள்.30:2)
ஆனால் ஒரு காரியத்தில் மட்டும் தெளிவாக இருக்கிறேன்,இயேசு ஒருவரே மெய்யான தெய்வம்;அதற்காகவே நான் இவ்வளவு போராட்டங்களையும் அவமானங்களையும் சந்திக்கிறேன்;அவர் தொழத்தக்க தெய்வமல்ல என்று தொடர்ந்து தூஷிக்கும் யாருடனும் நான் இணங்கிப் போவது என்பது ஆகாத காரியமாகும்.இந்த எல்லா சர்ச்சைகளுக்கும் மூல காரணமாக விளங்குவது இயேசுவை தொழத்தக்க தெய்வமல்ல என்று கூறி எங்களை இழிவாக நடத்தி கொச்சைப்படுத்தியதே என்பதை உணரமாட்டீர்களா?
இவர்கள் இப்படி ஒன்றுகூட காரணமாக இருப்பது நீதியின் மேல் உண்டான பசிதாகம் அல்ல,தங்கள் பேர்பிரஸ்தாபம் எனும் கீழ்த்தரமான நோக்கமே; சுந்தர் கவலைப்படாதீங்க,உங்களை மறக்கலே,இன்னொரு ரவுண்டு உங்களிடம் வருகிறேன்,அப்போது எல்லாவற்றையும் விலாவாரியாகப் பேசுவோம்,சரியா...? ஒரே ஒரு ஐயம்... நீ இரத்தவியாதி வந்து சாவாய் என்று எங்கே எழுதியிருக்கிறேன் என்பதையும் எதற்காக அவ்வாறு எழுதினேன் என்பதையும் கொஞ்சம் திரும்பி பார்ப்பீர்களா? நீங்களெல்லாம் நியாயஸ்தர்கள் என்று உங்களிடமெல்லாம் நியாயத்துக்கு வருகிறோமே எங்களைச் சொல்லவேண்டுமய்யா..! உங்களுக்குப் பிடித்தமான சன்மார்க்க நெறிகளை எவ்வளவு வேண்டுமானாலும் எழுதுங்கள்,ஆனால் தயவுசெய்து இறையியல் கொள்கைகளை தனிப்பட்ட வெளிப்பாடுகள் என்ற பெயரில் எழுதாதிருங்கள், ஏனென்றால் உண்மையிலேயே அச்சத்துடனும், அன்புடனும் சொல்லுகிறேன்,அது உங்கள் சந்ததியாரை பெரிய அளவில் பாதிக்கும்; மனிதக் கொள்கைகளை ஏற்க மறுக்கும் நீங்கள்தரிசனம், வெளிப்பாடு என்ற பெயரில் அறிவிக்கும்போது அதை மட்டும் எந்த உரிமையில் வெளியிடுகிறீர்கள்? நீங்களும் மனிதர் தானே? உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளவேண்டாமய்யா..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கொலையைச் செய்துவிட்டு அதை மறைத்துவிட்டு இராணுவத்தில் சேர்ந்துவிட்டு நான் நாட்டை பாதுகாக்கும் இராணுவ வீரன் என்னை கைது செய்து சிறையில் அடைத்தால் அது இராணுவத்தையே கேவலப்படுத்தும் செயல் என்று பூச்சாண்டி காட்டி சிறுபிள்ளைத் தனமாக தப்பிக்க நினைப்பது எப்படியோ அப்படி நகைப்புக்குரியதாக இருக்கிறது இவர்களது பதிவுகள்,
இராணுவத்தில் பணிபுரிந்தாலும் அவர்களும் சாதாரண குடிமக்கள் தானே....? ஊழல் செய்யும் முதல்வரையும் பிரதமரையும் தனிமனிதன் கேள்விகள் கேட்கும் காலம் இது
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை இவர்கள் மறந்து விட்டார்கள் போலும்
இப்போது வந்து முன்னால் இராணுவ வீரன் என்னைப் பழித்தால் அது இராணுவத்தையே பழிப்பது போன்றது என்ற போர்வையில் ஒழிந்து கொண்டு வேதப்புரட்டு செய்பவர்களுக்கும், அப்பாவி குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் கும்பலுக்கும் பெரிதாக எந்த வித்தியாசமூம் இல்லை
;//இதிலிருந்து மேற்கோள் காட்டி ஏற்றோ மறுத்தோ இதுவரை ஏதாவது எழுதியிருக்கிறார்களா என்று பாருங்கள்;இதுதான் அவர்களுடைய பலமே..!// பதில் இருந்தால் எழுதியிருப்பார்களே. அவர்கள் எதுவும் செய்யட்டும். அவர்கள் அப்படியிருக்கிறார்கள், செய்கிறார்கள் என்பதற்காக நாமும் செய்யவேண்டாம். அவர்கள் எப்படியிருந்தாலும் அதன் பொருட்டு மாறாமல் நான் இப்படிதான் இருப்பேன் என்பதாகவே முயற்சி இருக்கட்டும்.
சகோ.சில்சாம், அவர்களுக்கு பதில் அளிப்பதில் தவறில்லை. ஆனால் இனிமேல் அவர்கள் பெயரையோ அல்லது தளத்தையோ குறிப்பிடாமல் ஏற்கனவே நீங்கள் சொன்னது போல் பொதுவாக பதிலளியுங்கள். ”கிறிஸ்துவைப்பற்றி, வேதவசனங்கள் பற்றி எந்த மாதிரி தவறான கருத்துக்கள் உலவுகின்றன என்றும் அது ஏன் தவறு, அதன் உண்மையான அர்த்தம் என்ன” போன்று பொதுவாக விளக்கம் தாருங்கள். அவர்களை தனிப்பட்ட முறையில் எக்காரணம் கொண்டும் எழுதவேண்டாம். டினோ போன்ற புதிய சைத்தான்கள்,இவர்கள் நிலைமை, குரங்குக்கு சொறிபிடித்த நிலைமை தான் போன்று எழுதவேண்டாம். அது தேவையில்லாததும் கூட. கருத்துக்கு எதிர்கருத்தை மட்டும் வையுங்கள். அவர் யார் என்ன எப்படிபட்டவர் என்பதெல்லாம் வேண்டாம்.
அன்பு நண்பர் எபி அவர்களே தங்களுடைய கருத்துக்காக நன்றி;நானும் எத்தனையோ முறை சாத்வீகமாகப் போக முயற்சித்ததற்கு அடையாளமாக ஒரு குறிப்பிட்ட திரியைக் கொடுத்திருக்கிறேன். துளித் துளியாக விஷம்..!
இது என்னுடைய பொதுவான விஷய ஞானத்திலிருந்து நான் முயற்சித்ததாகும்;இதிலிருந்து மேற்கோள் காட்டி ஏற்றோ மறுத்தோ இதுவரை ஏதாவது எழுதியிருக்கிறார்களா என்று பாருங்கள்;இதுதான் அவர்களுடைய பலமே..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இவர்களின் போதனைகள் ஒன்றும் புதியதும் அல்ல பதில் அளிக்கப்படாததும் அல்ல. யொகோவா சாட்சிகளின் வெளியீடுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு இந்த உண்மை தெரியும். நான் யாரையும் படிக்கும்படி சிபாரிசு செய்ய மாட்டேன். ஆயினும் சபைப்போதகர்கள், சபையை வழிநடத்துபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். அதை குறிதது விசுவாசிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். சத்தியத்தை மட்டும் அறிவித்தால் போதும் என்ற மனநிலையே இன்று பல விசுவாசிகள் கூட இந்த வலைக்குள் விழ காரணமாயிருக்கிறது. ஆங்கிலத்தில் ஏராளமான துர்உபதேசங்கள் குறித்து வெளிவந்துள்ளன. ஆனால் தமிழில் இந்த முயற்சி வெகுகுறைவே. யாரோ ஒரு சிலர் எழுதுகிறார்கள். இவர்களுக்கு விளம்பரமும் கிடைப்பதில்லை. மக்கள் ஆதரவும் தருவதில்லை. இத்தகைய எழுத்தாளர்களை உற்சாகமூட்ட வேண்டும். இவர்களின் ஆக்கங்களை இணையத்தில் கொண்டுவர வேண்டும். அனைத்து துர்உபதேசங்களையும் பதிந்து அதற்குரிய விளக்கங்களையும் பதிக்க வேண்டும். அப்போது ஜனங்கள் உணர்ந்து கொள்வார்கள். இவர்கள் துர்உபதேசங்களை கொண்டு வந்தாலும் அது அவர்களுக்கு புதிதான ஒன்றாக இருக்கக் கூடாது. சபைத் தலைவர்கள், ஊழியர்கள் சிந்திப்பார்களாக!
யெகோவா சாட்சிகள் மட்டுமல்ல இன்னும் பல துர்உபதேசக் குழுக்களும் உண்டு. முதலில இவர்களின் கொள்கைகள், கருத்துக்கள் என்ன என்பது பற்றியும் எழுத வேண்டும். பின்னர் அதற்கான விளக்கம் கண்டிப்பாக பதியப்பட வேண்டும். தேர்ந்த எழுத்தாளர்களினால்தான் இவை செய்யப்பட முடியும். இறையியல் கற்றவர்கள் இத்தகைய முயற்சிக்கு உதவ வேண்டும. இது தொடர்பில் அனுபவம் மிக்க ஊழியர்கள் வழிகாட்டுதல் பெறப்பட வேண்டும்.
இவர்களை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பதே மிகச் சிறந்ததாகும். அவர்களின் தளத்திற்கு இலவச விளம்பரம் செய்தே இவ்வளவு Hits Rate ஐ உயர்த்தியுள்ளோம். ஏற்கனவே நான் குறிப்பிட்டபடி எனக்கு ஒன்றும் இவர்களின் போதனைகள் புதியதல்ல. சும்மா சும்மா இவரகளுக்கு பதில் அளி்த்துக் கொண்டிருப்பதிலேயே நேரம் வீண்விரயம் ஆகிறது. அதனை வேறு வழியில் பிரயோசனப்படுத்திக் கொள்ளாம்
சகோ. சில்சாம் கடந்த இரண்டு வருடத்தில் இவர்களுடனான மோதலில் சாதித்தது என்ன? சற்று சிந்தி்த்துப் பாருங்கள். அந்த நேரத்தில் யெகோவா சாட்சிகள் மற்றும் ஏனைய துர்உபதேக் குழுக்களின் உபதேசக்குழங்களை பதித்து விளக்கம் எழுதியிருக்கலாம். காலத்தை வீணடித்துவிட்டீர்கள் என்றே கருதுகிறேன். ஆயினும் உங்கள் பிற சேவைகள் பாராட்டத்தக்கதே!
சகோ.சில்சாம், அவர்களுக்கு பதில் அளிப்பதில் தவறில்லை. ஆனால் இனிமேல் அவர்கள் பெயரையோ அல்லது தளத்தையோ குறிப்பிடாமல் ஏற்கனவே நீங்கள் சொன்னது போல் பொதுவாக பதிலளியுங்கள். ”கிறிஸ்துவைப்பற்றி, வேதவசனங்கள் பற்றி எந்த மாதிரி தவறான கருத்துக்கள் உலவுகின்றன என்றும் அது ஏன் தவறு, அதன் உண்மையான அர்த்தம் என்ன” போன்று பொதுவாக விளக்கம் தாருங்கள். அவர்களை தனிப்பட்ட முறையில் எக்காரணம் கொண்டும் எழுதவேண்டாம். டினோ போன்ற புதிய சைத்தான்கள்,இவர்கள் நிலைமை, குரங்குக்கு சொறிபிடித்த நிலைமை தான் போன்று எழுதவேண்டாம். அது தேவையில்லாததும் கூட. கருத்துக்கு எதிர்கருத்தை மட்டும் வையுங்கள். அவர் யார் என்ன எப்படிபட்டவர் என்பதெல்லாம் வேண்டாம்.
எனக்கருமையான வாசக நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்;நண்பர்கள் சலித்துக்கொள்ளாவிட்டால் கடைசி முயற்சியாக சில எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டு இத்துடன் இந்த விவாதத்துக்கு நானும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணுகிறேன்;எப்படியோ "பெரியனா வெறியனா" என்ற தலைப்பில் துவங்கப்பட்ட இந்த திரியானது சிலருடைய சூழ்ச்சிகளின் காரணமாகவும் வரட்டு கூச்சல்களின் காரணமாகவும் திசைதிருப்பப்பட்டு முடியும் தருவாய்க்கு வந்துவிட்டது;(மேசியாவின்) எதிரிகள் தங்களைபெரியன்ஸ் என்று அழைத்துக்கொள்வது சரியா என்பதை ஆராய்வதே இந்த திரியின் நோக்கமாக இருந்தது;அதற்கிசைவாக இதுவரை இல்லாத புதுமாதிரியாக "எதிரொலி" அல்லது "எதிரியின் ஒலி" என்று வர்ணித்து உரையாடல் பாணியில் வரிக்கு வரி போட்டு நமது கருத்துக்களை நேர்மையுடன் எடுத்து வைத்தோம்.
அதிலிருந்து சில வரிகளை மட்டும் எடுத்துக்கொண்டு கீழ்த்தரமான விதத்தில் குற்றச்சாட்டுகளைப் பிணைத்து நாடகமாடி கடந்த மூன்று நாட்களாக இந்த தளத்தில் நான் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யமுடியாத வண்ணமாக அச்சுறுத்தியும் மிரட்டியும் தூஷித்தும் பரபரப்பைக் கிளப்பினார்கள்;இந்த போராட்டத்தின் இறுதிகட்டத்தில் உச்சக்கட்ட க்ளைமாக்ஸாக அவர்களுடைய பொய்யான குற்றச்சாட்டுகளை வாபஸ் பெறாமலும் நம்முடைய விளக்கங்களை ஏற்றுக்கொள்ளாமலும் இருந்ததுடன் அவர்கள் ஏதோ பெரிய மனது பண்ணி நம்மை மன்னித்துவிட்டது போலவும் நாம் ஏதோ திருந்தாத ஜென்மங்கள் போலவும் ஸீன் போடுகிறார்கள்;ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சத்தமாகச் சொல்லுவதால் அது உண்மையாகிவிடாது;என்னுடைய அருமையான மதிப்பிற்குரிய (மேசியாவின்) எதிரியின் பதிலுரைகளைப் பார்த்து நானே மனம் நெகிழ்ந்துபோய் மன்னிப்பு கடிதம் எழுதிவிட்டேன்;
"அருமை நண்பரே,
(<...> Deleted <...>)
மேற்கண்ட வரிகளில் நான் எழுதியவை முழுக்க முழுக்க உங்களை மனதில் வைத்து எழுதியது;இது தனிமனித உணர்வுகளைத் தூண்டி மிகவும் துன்பப்படுத்தும் வரிகள்; இதைக் குறித்து நான் சொல்லும் நீண்ட விளக்கங்களையெல்லாம்விட மன்னிப்பு கேட்பதே சிறந்தது;என்னை மன்னித்து விடுங்கள்..." என்பதாக எழுதி பதிக்க இருக்கும்போது மீண்டும் அதே தேசதுரோகக் குற்றச்சாட்டையே பிரதானப்படுத்துகிறார்; மேலும் என் பெயரையும் வங்கி விவரத்தையும் குறிப்பிட்டதை இன்னும் நீக்கவில்லை. நான் ஒட்டுமொத்த இராணுவ வீரர்களையோ அல்லது அனைத்து ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களையோ இழிவுபடுத்தி ஒன்றையும் எழுதவில்லை என்பது எனது வரிகளை நட்புணர்வுடனும் சொஸ்த புத்தியுடனும் மீண்டும் மீண்டும் வாசித்தாலே நன்கு விளங்கும்;மேலும் இந்த வரிகள் அமைந்துள்ள பகுதியானது மிக நீண்டதாகும்;அந்த கட்டுரைப் பகுதி முழுவதையும் வாசித்தபிறகே ஒரு முடிவுக்கு வரமுடியும்; அதிலிருந்து இவர்கள் பதிலளிக்கவேண்டிய வாதங்கள் ஏராளமுண்டு;ஆனால் அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு நம்மை தனிமைப்படுத்தவேண்டும், இழிவுபடுத்தவேண்டும் ஒரே நோக்கத்துடன் இன்னும் மூச்சுவிடாமல் அரற்றிக்கொண்டிருக்கிறார்கள்; இதுபோலவே வேசிமகன் என்று நான் யாரையும் தூஷிக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் மறுத்தும் பக்கம் பக்கமாக விளக்கம் கொடுத்தும் கொஞ்சமும் மனசாட்சியில்லாமல் என்னுடைய விளக்கங்களையெல்லாம் புறக்கணித்துவிட்டு நான் அவர்களை "வேசி மகன்" என்று சொன்னதாக இன்றுவரை எழுதி வெட்கமில்லாமல் தங்களைத் தாங்களே அசிங்கப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்;இதற்கு அன்பு போன்ற பெரியவர்களும் துணைபோவது வருந்தத்தக்கது;இதற்கெல்லாம் ஒரே காரணம் இயேசுவை தெய்வமாகத் தொழுவதை எதிர்த்து இவர்கள் செயல்படுவதை நான் வன்மையாக எதிர்ப்பதும் அவர்களுடைய துருபதேசம் பரவ தடைக்கல்லாக இருப்பதுவுமே.
நண்பர் கோல்வின் அவர்களுக்கு இந்த சர்ச்சையில் எந்த சம்பந்தமும் இல்லாதிருந்தும் அவர் எத்தனை தாழ்மையுடன் மன்னிப்பு கேட்டார், அதுபோன்ற பெருந்தன்மை அவர்களுக்கு இருந்திருந்தால் கோல்வின் வெளிநாட்டை சார்ந்தவர் - கத்தோலிக்க சபையின் அங்கத்தினர் என்பதையெல்லாம் வைத்து அவரை தூஷித்ததற்கும் அவருடைய அபிமான ஆராய்ச்சியாளர் - ஆசிரியரான வசந்தகுமார் அவர்களைக் குறைத்துப் பேசியதற்கும் வருத்தம் தெரிவித்திருக்கவேண்டுமல்லவா? Citation & Reference இல்லாமல் எழுதுவது நூலக நடைமுறைகளுக்கு விரோதமானது என்று அவர் எத்தனை நேர்மையுடன் சொன்னாலும் அதையும்கூட பரியாசம் செய்கிறார்களே?
இதனால் நாம் அறியவேண்டியது என்னவென்றால் இவர்களுக்கெதிராக யாரும் எழுதக்கூடாது;ஆனால் இவர்கள் பொதுவான கிறித்தவ விசுவாசத்துக்கு விரோதமாக எதை வேண்டுமானாலும் எழுதுவார்கள்;இரவு பகலாக பிள்ளைகள் கண்விழித்து எழுதிப் பதிக்கும் ஒன்றையும் பரிசீலிக்கமாட்டார்கள்;இவர்கள் நிலைமை, குரங்குக்கு சொறிபிடித்த நிலைமை தான்;அது குணமாகவும் விடமாட்டார்கள்; மருந்துபோட வருபவர்களையும் கடித்து குதறுவார்கள்.
அப்பாவியான - மென்மையான குணாதிசயம் கொண்ட கோல்வின்,ஜாண்,சந்தோஷ் மற்றும் ஜோசப் ஸ்னேகா ஆகியோரையும் விட்டு வைக்கிறதில்லை;டினோ போன்ற புதிய சைத்தான்கள் வேறு புறப்பட்டு நம்முடைய சகோதரர்களுக்கு எதிராக எழுதிக்கொண்டிருக்கிறது; இனி நாம் என்ன செய்யலாம்,தொடர்ந்து முன்னேறுவதா,அல்லது சில நண்பர்கள் வேண்டிக்கொண்டது போல இவர்களுக்கு தேவையற்ற விளம்பரம் தராமல் ஒதுங்கிக்கொள்ளலாமா?
ஏனெனில் ஆரம்பத்தில் சில மாதங்கள் முன்பு வரையிலும் கூட இவர்களூடைய தளத்துக்கு பார்வையாளர்கள் 7 அல்லது 8 என்ற அளவிலேயே இருந்தது;ஆனால் அடியேனின் புண்ணியத்தில் இவர்களுடைய தளத்தின் தொடுப்பைக் கொடுத்து கொடுத்து நானும் இன்னும் எனது நண்பர்களும் எழுதிய காரியங்களால் இயல்பாகவே வாசகர்கள் ஈர்க்கப்பட்டு இவர்களுடைய தளத்துக்குச் சென்று வருவதால் இவர்களுடைய தளத்துக்கு இலவச விளம்பரம் கிடைத்து வருகிறது;இனியும் நாம் இவ்வாறு செய்து அவர்களுக்கு விளம்பரம் தேடித் தரலாமா அல்லது அமைதியாக விட்டால் தானே அடங்கிவிடும் என்று விலகிச் செல்லலாமா?
இதைக் குறித்த என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் இவர்களைக் குறித்து இன்னும் எழுதி - அதாவது நேர்த்தியான, விவரமான கட்டுரைகளை எழுதி கிறித்தவ சமுதாயத்தை எச்சரிக்கவேண்டும்;இப்படிப்பட்ட அடையாளங்களுடன்- இவ்வாறு சிலர் உங்கள் வீடுகளுக்கு வருவார்கள்;அவர்களை வழக்கம் போல், வெளியே போங்க என்றோ ஆண்டவரையறியாத இந்துக்கள் வீட்டுக்குப் போங்கள் என்றோ துரத்தாமல், நாங்கள் தெய்வமாக வணங்கும் ஆண்டவரை சந்தேகப்படும் வண்ணமாக நீ பொய்ச்செய்தியைப் பரப்ப எந்த தைரியத்தில் வீடுதேடிவருகிறாய் என்று கேட்டு, அவர்கள் மொழிரீதியாகவும் மூலபாஷையிலிருந்தும் எடுத்து தவறாக வியாக்கியானம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் உரிய பதிலைக் கொடுத்து வாயை அடைக்கவேண்டும்;இவர்களுடன் நாம் ஏன் நேரம் விரயம் செய்யவேண்டும் என்போமானால் அவர்கள் வேறு சிலரை வஞ்சிக்கும் ஆபத்து உண்டு. இது எப்படியிருக்கிறதென்றால் வீட்டுக்குள் பாம்பு நுழைந்துவிடுகிறது; அதனை ஒரு பெரிய கம்பு எடுத்து அடிக்காமல் ச்சும்மா விரட்டிவிட்டால் போதும் என்பதுபோலவே இருக்கிறது;அதை அப்படியே விரட்டினால் அது இன்னொரு வீட்டுக்குள் புகுந்து வேறு யாருக்கேனும் தீமைசெய்யுமே..? அது மிகவும் ஆபத்தானதல்லவா?
எனவே எனக்கு அருமையான வாசக அன்பர்களும் தள நண்பர்களும் இந்த காரியத்தில் நான் தொடர்ந்து செய்யவேண்டியவற்றில் தகுந்த ஆலோசனைகளைத் தருவதுடன் தங்கள் மேலதிக பங்களிப்பையும் வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
இந்த விடயத்தில் அடியேனுக்கு பிரமிக்கத்தக்க ஆதரவு தந்த தமிழ் கிறித்தவ தளத்தின் நண்பர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளைப் படைக்கிறேன்;என்னுடைய செயல்பாட்டினால் பல சமயம் என்னுடைய நண்பர்கள் சங்கடப்பட்டதுண்டு; இனி அவ்வாறு நேராதவண்ணம் பார்த்துக்கொள்ளுகிறேன்; இதோ இந்த பதிவு காலையில் எழுதத் துவங்கியது, எனவே இதனிடையே பதிக்கப்பட்டுள்ள நண்பர்களின் கருத்துக்கள் எனது பின்னூட்டத்தில் கவனிக்கப்படாதது போலிருக்கும்; ஆனாலும் தங்கள் விலைமதியான அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளுகிறேன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்;
மீண்டும் தங்கள் ஆதரவுக்கு நன்றி..!
எனது பெயர் விவரம்"கோவை வெறியன்" அவர்களது தளத்தின் குறிப்பிட்ட திரியிலிருந்து நீக்கப்பட்டவுடனே சர்ச்சைக்குரிய வரிகள் என்னுடைய கட்டுரையிலிருந்தும் நீக்கப்படும் என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்;அதேபோல இந்த வரிகளை மேற்கோள் காட்டி அவர் எழுதியிருப்பவையும் நீக்கப்படவேண்டியிருக்குமே;அதை என்ன செய்வது என்று புரியவில்லை..!
-- Edited by chillsam on Friday 25th of March 2011 10:06:04 AM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சகோ.கொல்வின் சொல்வது மிகவும் சரி. சில்சாம் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிவிடுவதே நல்லது. நம் எழுத்து சம்பந்தப்பட்டவருக்கு மனவருத்தத்தை தரும் பட்சத்தில் அதனை நீக்குவதோ அல்லது வருத்தம் தெரிவிப்பதோ தவறல்ல. நம் பக்கம் நாம் செய்யவேண்டியதை செய்துவிடுவோமே. அவ்வாறு நாம் செய்த பின் அதனை மறப்பதோ அல்லது மீண்டும் சொல்வதோ அவர்கள் காரியம். உங்கள் வேகமும் தைரியமும் பாராட்டக்கூடியது ஆனால் அதே நேரத்தில் நிதானமாகவும் செயல்படுமாறு வேண்டுகிறேன். எக்காரணம் கொண்டும் தனிப்பட்டமுறையில் யாரை தாக்கும்படி எழுதவேண்டம். அதேபோல் வேறுயாரும் தாக்கினாலும் தேவனிடம் அதை ஒப்படைத்துவிடுங்கள். அவர் பார்த்துக்கொள்வார்.
தளநண்பர்களின் அன்புடன் கூடிய புத்திமதிகளுக்கும் கடிந்துகொள்ளுதலுக்கும் நன்றிகூறுகிறேன்; கோல்வின் அவர்களே, நானாக எந்த அமைப்பிடமும் சென்று உதவிகேட்குமளவுக்கு எனக்கு தொடர்புகள் கிடையாது;எனவே நான் அமர்ந்திருக்கிறேன்,தேவனுடைய சித்தம் என்னுடைய வாழ்வில் எதுவாக இருக்கிறதோ அதுவே நடக்கட்டும்; எந்த சூழ்நிலையிலும் தவறானதொரு குற்றச்சாட்டுக்கு நான் பணிவது சரியாக இருக்குமா என்று நீங்களே சொல்லுங்கள்; யாரையும் மனம்புண்படும்படி பேசுவதோ எழுதுவதோ எனக்கு வழக்கமில்லை; ஆனாலும் தேவக் காரியங்களில் என்னால் சமரசம் செய்துகொள்ள முடியவில்லை.
கோல்வின் அவர்களைக் கவர்ந்த ஆசிரியர் வசந்தகுமாரை தூஷித்ததும் கோல்வின் சார்ந்திருக்கும் கத்தோலிக்க அமைப்பை வேசியின் சபை என்று சொன்னதும் என் மனதை பாதித்தது; இதுபோலவே இவர்களுடைய தூஷணங்களால் பலரும் மனம் வெதும்பிக்கொண்டிருக்கிறார்கள்; இஸ்லாமியரோ இந்துக்களோ கூட எழுதத் துணியாத வண்ணம் எழுதியிருக்கிறார்கள்; அதற்கெல்லாம் சட்டப்பூர்வமான நடவடிக்கை யெடுத்துக்கொண்டிருந்தால் நிலைமை என்னவாகும்?
இந்த விஷயம் இதோடு முடியாது பாருங்கள், நான் எதை எழுதினாலும் இதைச் சொல்லி மிரட்டுவார்கள்; மன்னிப்பு கேட்டாலும் தற்போதைக்கு நான் தப்பிக்கலாமே தவிர இதை அவர்கள் மறக்கவே மாட்டார்கள்; இது என்னுடைய கடந்த கால அனுபவமாகும்;திரிப்பதும் திருத்துவதும் அவர்களுக்கு கைவந்த கலையாகும்; தினம் தினம் சாகிறதைவிட ஒரே தரம் சாவதே எனக்கு மேலானது;என்னுடைய அருமை இரட்சகரை தெய்வமல்ல என்று தெருத் தெருவாக வந்து நின்று வீடு வீடாகச் சென்று தூஷிக்கும் இவர்கள் மூலம் நான் தண்டிக்கப்படுவது விண்ணக அரசின் தீர்மானமாக இருக்குமானால் அதற்கு எதிராக நிற்க என்னால் முடியாது; அவர்களுடைய தெய்வமான இரஸலின் யெகோவா என்னை தண்டிக்க சொல்லியிருந்து என்னுடைய அன்பு தெய்வமான இயேசுவானவர் என்னைக் காப்பாற்றாமற் போனாலும் சரி இவர்களிடம் நான் பணிந்துபோகவேமாட்டேன்;
"நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்." (தானியேல்.3:17,18)
-எனும் சங்கநாதமே எங்கள் வேதம்; அன்று அந்த மூன்று வாலிபர்களுடன் நான்காவதாக வந்து உலவிய அதே தேவகுமாரன் என்னுடனும் இருக்கிறார்; பொய்யான குற்றசாட்டுகளுக்கும் மிரட்டல்களுக்கும் அஞ்சமாட்டேன்; சட்டவிரோதமாக என்னுடைய தனிவிவரங்களை வெளியிட்டாலும் என்னுடைய புகைப்படத்தை வெளியிட்டாலும் எதற்குமே நான் கவலைப்படவே மாட்டேன்; முன்பைவிட இன்னும் அதிகமாகவே யெகோவா சாட்சிகள் மற்றும் வேதமாணவர் கூட்டத்தினருக்கு எதிராக செயல்படுவேனே தவிர என்னுடைய வேகத்தைக் குறைத்துக் கொள்ளமாட்டேன்.எனக்கு இணையத்தைத் தவிர வேறு பொதுமேடைகள் வாய்த்ததில்லை; ஆனால் இவர்கள் புண்ணியத்தில் அதுபோன்ற களம் எனக்கு அமையுமானால் அதையே என்னுடைய முழுநேர ஊழியமாக மாற்றிக்கொள்ளுவேன்.
இந்த உறுதிக்குக் காரணம்... இன்று மாலையில்...
(தொடரும்)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)