Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பெரியனா... வெறியனா..?


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
பெரியனா... வெறியனா..?
Permalink  
 


Brother Colvin:...மற்றும் கத்தோலிக்க சபைகுறித்து இவர்கள் கூறியதை கத்தோலிக்க திருச்சபையின் கவனத்திற்குக் கொண்டு போங்கள். இலங்கையில் இப்படிசெய்தால் கம்பி எண்ணவேண்டியிருக்கும.

அப்படியா? கத்தோலிக்க நம்பிக்கை நரகம் கொண்டு செல்லும் என்பது உங்களுக்கு தெரியுமா?



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோ. சில்சாம் இது போன்ற மிரட்டல்களைக் கண்டு பயப்பட வேண்டாம். சட்டநடவடிக்கை எதுவும் இதுவிடயத்தில் எடுக்க முடியாது என்பதுதான் உண்மை நிலவரம். எத்தனையோ இந்தியப் பத்திரிகைகளில் இன்னும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். குறிப்பாக வினவு தளத்தில் இன்னும் அதிகம் செய்கிறார்கள். இவர்கள் உண்மையிலேயே இராணுவத்தின் மீது அக்கறை இருந்தால் வினவு தளத்தின் மீது வழக்குத் தொடரட்டும். தங்கள் தேசப்பக்தியை இதன் மூலம் காட்டலாமே. இப்போதும் கூறுகிறேன் இராணுவத்தை மதிக்கிறேன். அதற்காக இதுவெல்லாம் ரொம்ப ஓவர். 

 

உங்களை பயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இப்படி செயல்படுகிறார்கள். கோர்ட்டுக்கு கேஸ் போனால் இது தாங்காது மற்றும் இப்படிப்பட்ட விடயங்களை கோர்ட்டில் எடுத்து வழக்கும் நடத்திக் கொண்டிருக்க மாட்டார்கள். இதை சவாலாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

 

மற்றும் கத்தோலிக்க சபை குறித்து இவர்கள் கூறியதை கத்தோலிக்க திருச்சபையின் கவனத்திற்குக் கொண்டு போங்கள். இலங்கையில் இப்படி செய்தால் கம்பி எண்ண வேண்டியிருக்கும்



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

//இப்படி எழுதி மீண்டும் இந்த விஷயத்திற்கு ஒரு ஆரம்பத்தை கொடுக்க நினைக்காதேயும்!! நீர் ஏதோ அறைகுறையாக மண்ணிப்பு கேட்டீர் என்று தான் நான் என் முழு திரியையே நீக்கினேன்!! நீர் எழுதியது இன்னும் என்னிடத்திலும் இருக்கிறது!! மண்ணிப்பு கேட்ட ஒரு விஷயத்தை நான் ஒன்றும் செய்யாததற்கு மண்ணிப்பு கேட்டேன் என்று பிரபலப்படுத்தீர்!! இந்த கடைசி பதிவு உம் திமிர்த்தனைத்தை தான் காண்பிக்கிறது!! இப்படி எழுதி மீண்டும் சர்ச்சையை துவக்கி வைக்காதீர் என்று எச்சரிக்கை செய்கிறேன்!!

//கொல்வின், ஜான், ஜோஸப் அவர்களே, தேவையில்லாமல் ராணுவ விஷயத்தில் சில்சாம் எழுதியதில் நீங்கள் நுழைய நினைக்காதீர்கள் என்பதை மாத்திரம் உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்!! ஒன்றும் செய்ய போவதில்லை என்கிற மமதையில் சில்சாம் இன்னும் எழுதிக்கொண்டு இருப்பது உங்கள் மூவருக்கும் தெரியவில்லை போல்!! இத்துனை எழுதியும், இன்னும் தான் தப்பாக ஒன்றும் எழுதவில்லை என்று கூப்பாடு போடுவது அவரின் அசட்டைத்தனத்தையே காண்பிக்கிறது!! தான் எழுதியது எத்துனை பெரிய தவறு என்பதை அறியாமல், ஏதோ ஜோஸப் அவருக்கு சாதகமாக எழுதியதை சுட்டி காண்பித்து ஜோஸப் அவர்களையும் தன் வலையில் இழுத்துக்கொள்ள பார்க்கிறார், ஜோஸப் அவர்களே தாங்கள் இதில் பங்கு பெற வேண்டாம் என்று நல்ல மனதுடன் உங்களுக்கு சொல்லுகிறேன், உங்கள் மூவரால் முடிந்தால் இவர் இப்படிபட்ட ஒரு பொய்யை திமிராம மீண்டும் மீண்டும் சொல்லுவதை நிறுத்த சொல்லுங்கள்!//

மறுபடியும் பூதம், அது என்ன நல்ல மனதுடன் சொல்லுகிறேன் என்கிறீர்கள், நல்ல மனது வேறு, நல்லா இல்லாத மனது வேறு என்று ஏதாவது இருக்கிறதா? சில்சாம் இப்படி எழுதியதை பற்றி நான் எதுவும் கமென்ட் பண்ணவில்லை, அதற்கு அவர் வேறு பல விளக்கங்கள் கொடுத்துவிட்டார். எனது வாதம் எல்லாம், இந்த நாட்டில் ராணுவத்தை பற்றி விமர்சிப்பது தவறா இல்லையா என்பது தான், ராணுவத்தை பற்றி பல்வேறு சாரரும் பல்வேறு கோணங்களில் விமர்சனம் செய்து வருகையில் சில்சாம் என்ற ஒரு தனி மனிதனின் மேல் நீங்கள் பழி வாங்கும் நோக்கில் பாய நினைப்பது எந்த வகையில் நியாயம். எழுதியதை நீக்கி விட்டேன் என சொல்லும் நீங்கள் அதை பிரதியெடுத்து வைத்திருக்கிறேன் என மிரட்டி வருகிறீர்கள்.

இயேசு பாவங்களை மன்னித்து மறந்தும் அல்லவா விடுகிறார். வேத ஆராய்ச்சி செய்கிறேன் என சொல்லுபவரின் அழகா இது. ஒன்றும் செய்யப்போவதில்லை என்ற மமதையில் அவர் எழுதுகிறார் என்பவர் ஏதோ செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறீரா?

சில்சாம் அகங்காரமாக எழுதுகிறார் என்கிறீர், அதை விட அதிக மோசமானது உமது பழிவாங்க நினைக்கும், என்னால் உன்னை பாதிக்கும் அளவுக்கு ஏதாவது செய்ய முடியும் என்ற எண்ணம், உண்மையில் நீர் மன்னிக்க நினைத்திருந்தால் எப்போதோ இதை முழுவதுமாக மறந்து விட்டிருக்க வேண்டும் , அதை விடுத்து மறுபடியும் மறுபடியும் மிரட்டல் விடுப்பதை தான் நீங்கள் வேதத்தில் கற்றுக்கொண்டீர்களா?

சமீபத்தில் கூட தடை செய்யப்பட்ட இயக்கத்தை பற்றி பேசுவதாக சீமான் கைது செய்யப்பட்டார். அப்போது உயர்நீதிமன்றத்தில் பதில் மனு செய்த போது அதை விசாரித்த நீதிமன்றம், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவது தவறு அல்ல என வழக்கு தொடர்ந்த அரசின் உச்சி மண்டை வீங்கும் அளவுக்கு குட்டு வைத்திருந்தது,

எனவே எந்த ஒரு பிரச்சனைக்கும் மற்றொரு கோணம் இருக்கும் என்பதை மறந்துவிடவேண்டாம். நான் ஏற்கனவே குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய விஷயங்களால் இராணுவம் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது, எனவே தேசதுரோகம், தண்டனை என்றால் ராணுவத்தை எதிர்த்து கொட்டாவி விட்டவனை கூட உள்ளே தான் வைக்க வேண்டும்.

ராணுவத்தின் மீதும் அதன் தியாகங்கள் மீதும் எனக்கு எப்போதும் அபிமானம் உண்டு ஆனால், தனிப்பட்ட முறையில் சில்சாம் எழுதியதை நீங்கள் வைத்து மிரட்டுவதை நான் எதிர்க்கிறேன். பல ஊடகங்களிலும் மீடியாக்களிலும் சீரியசாகவும், நகைச்சுவைக்காகவும் (அதிலும் திரைப்படங்களில்) ராணுவத்தாரை பலர் விமர்சனம் (கிண்டல்) செய்து தான் வந்துள்ளனர் என்பதை நினைவிற்கொள்க, அதையெல்லாம் விடுத்து நீர் ஏதாவது செய்து தான் எனது கோபத்தை தணித்துகொள்ள முடியும் என நீர் நினைத்தால் வேறு சொல்ல என்ன இருக்கு....


இதுவரை எப்படியோ, இனிமேல் திருச்சபைகளை வேசிமார்க்கம் என சொல்லுவதை நிறுத்துமாறும் அது குறித்து ஏதாவது பதிக்கவேண்டாம் எனவும் வேண்டுகிறேன். வீடு வீடாக சென்று நற்செய்தி அளித்து, மக்களின் தேவைகளுக்காக ஜெபிக்கும் எத்தனையோ உண்மை ஊழியக்காரரை உங்களை போன்றோர் கேவலமாக பிச்சைக்காரன் என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள், இது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

http://www.kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&topicID=41940619&p=3

பதிவு தொர்பானது இவருக்கு எவ்வளவு எழுதினாலும் புரிவதில்லை. மெனக்கட்டு இதனை பல வருடங்களாக ஏன் படிப்பிக்கிறார்கள். நூலகங்களில் இவற்றை ஏன் இதனை முக்கியமாக பயன்படுத்துகிறார்கள். ஆய்வாளர்களுக்கு பெருமளவு உதவுவது இந்த எண்ணக்கருதான் நீங்கள் என்ன அனுபவம் பெற்ற நூலகரா? இல்லைதானே தெரியாத விடயங்கள் இது பற்றி எழுதி உங்கள் அறிவை நிருபிக்க வேண்டாமே. இனி உங்கள் இஷ்டம். பெரியவரும் சேர்ந்து கொண்டதால் நகைச்சுவைக்கு குறைவில்லை. பலமுறை வாய் விட்டு சிரிக்கலாம். நீங்கள் ஏன் இப்படி எழுதுகிறீர்கள் என்பதை சிறுபிள்ளையும் புரிந்து கொள்ளும். இது விடயம் சம்பந்தமாக இனி எழுதுவதை குறைத்துக் கொள்கிறேன்.பிராணனிடம் சென்று மீன்குழம்பு பற்றி கதைப்பது போல் தெரிகிறது,எனக்கு.



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

//இராணுவத்தின் பலத்தைவிட மக்கள் சக்தியே இங்கு மேன்மையானது;இராணுவத்தையும் வங்கி அமைப்பையும் துப்புரவு தொழிலாளர்களையும் நான் ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்திவிட்டதாக என்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை நான் முழுவதும் மறுக்கிறேன்;அதுபோன்ற குற்றச்சாட்டுகள் விஷமத்தனமானதாகும், அவற்றை வன்மையாகக் கண்டிக்கிறேன்; இந்த மிரட்டல்களூக்கு நான் ஒருபோதும் பணியவே மாட்டேன் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.//

இப்படி எழுதி மீண்டும் இந்த விஷயத்திற்கு ஒரு ஆரம்பத்தை கொடுக்க நினைக்காதேயும்!! நீர் ஏதோ அறைகுறையாக மண்ணிப்பு கேட்டீர் என்று தான் நான் என் முழு திரியையே நீக்கினேன்!! நீர் எழுதியது இன்னும் என்னிடத்திலும் இருக்கிறது!! மண்ணிப்பு கேட்ட ஒரு விஷயத்தை நான் ஒன்றும் செய்யாததற்கு மண்ணிப்பு கேட்டேன் என்று பிரபலப்படுத்தீர்!! இந்த கடைசி பதிவு உம் திமிர்த்தனைத்தை தான் காண்பிக்கிறது!! இப்படி எழுதி மீண்டும் சர்ச்சையை துவக்கி வைக்காதீர் என்று எச்சரிக்கை செய்கிறேன்!!

கொல்வின், ஜான், ஜோஸப் அவர்களே, தேவையில்லாமல் ராணுவ விஷயத்தில் சில்சாம் எழுதியதில் நீங்கள் நுழைய நினைக்காதீர்கள் என்பதை மாத்திரம் உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்!! ஒன்றும் செய்ய போவதில்லை என்கிற மமதையில் சில்சாம் இன்னும் எழுதிக்கொண்டு இருப்பது உங்கள் மூவருக்கும் தெரியவில்லை போல்!! இத்துனை எழுதியும், இன்னும் தான் தப்பாக ஒன்றும் எழுதவில்லை என்று கூப்பாடு போடுவது அவரின் அசட்டைத்தனத்தையே காண்பிக்கிறது!! தான் எழுதியது எத்துனை பெரிய தவறு என்பதை அறியாமல், ஏதோ ஜோஸப் அவருக்கு சாதகமாக எழுதியதை சுட்டி காண்பித்து ஜோஸப் அவர்களையும் தன் வலையில் இழுத்துக்கொள்ள பார்க்கிறார், ஜோஸப் அவர்களே தாங்கள் இதில் பங்கு பெற வேண்டாம் என்று நல்ல மனதுடன் உங்களுக்கு சொல்லுகிறேன், உங்கள் மூவரால் முடிந்தால் இவர் இப்படிபட்ட ஒரு பொய்யை திமிராம மீண்டும் மீண்டும் சொல்லுவதை நிறுத்த சொல்லுங்கள்!!

இந்த சர்ச்சை முடிந்துவிட்டதாக எண்ணி சற்று நிம்மதி பெருமூச்சு விட்டேன்;ஏனெனில் இதனால் கடந்த வாரம் முழுவதும் நான் அலைக்கழிக்கப்பட்டேன்;அப்போதும் இப்போதும் எப்போதும் சொல்லுகிறேன், நான் கோவை பெரியன்ஸ் தளத்தின் நிர்வாகியை வேதனைப்படுத்தியதும் அதற்காக மன்னிப்பு கேட்டதும் சத்தியமான உண்மை;மற்றபடி அதுதொடர்பான மற்ற குற்றசாட்டுகளிலிருந்து நான் முழுவதும் களங்கமற்றவனாகவே இருக்கிறேன்.

என்னை இதுபோல மீண்டும் மீண்டும் அச்சுறுத்துவதே சட்ட விரோதமானதாகும்;இதன் விளைவுகளை யாராக இருந்தாலும் சந்தித்தே ஆகவேண்டும்;என்னை பழிவாங்க எதையெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்யுங்கள் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஜெயம் என்பவர் என்னுடைய செயல்பாடு முழுவதையுமே முடக்குமளவுக்கு மிரட்டல் விடுப்பதையும் அதன் ஆபத்தையும் உணராதவர்களைப் போலத் தொடர்ந்து எழுதுகிறார்களே என்று வருத்தமாக இருக்கிறது.

நான் இவர்களை விமர்சித்து எதை எழுதினாலும் "வாத்து...பாத்து" என்று தம்பியை ரோஸி மிரட்டுவாளே அதுபோல என்னை மிரட்டிக்கொண்டே இருந்தால் நான் சொல்லுவேன், "அது நேத்து"என்பதாக‌;

"மன்னித்துவிட்டேன்", ஆனாலும் என்னிடமிருக்கும் ஆதாரத்தை இன்னும் அழிக்கவில்லை என்பது எத்தனை சிறந்ததான தெய்வீக குணம் என்பதை நினைத்தாலே புல்லரிக்கிறது..!

இந்த காரியத்தில் பெரியவர் அன்பு அவர்களின் நிதானம் பாராட்டத்தக்கது; இந்த காரியத்தில் சமாதானமான இணக்கமான சூழ்நிலை உருவாக அவரே பாடுபட்டார்;எனவே அவரே மீண்டும் முளைவிடும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

colvin wrote:

சகோ. ஜெயத்திற்கு சில வார்த்தைகள்...

...இராணுவத்தினை தொடர்ந்தும் வினவு தளம் வசை பாடுகிறதே!. இன்னும் பல பத்திரிகைகள் வசை பாடுகின்றதே..?

தேசப்பற்றுள்ள நீங்கள் இவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்ப்பது மிக வருத்தத்திற்குரியது. நீங்கள் கேட்டால் உண்மையிலேயே உங்களுக்கு தேசப்பற்று இருக்குமானால் நடவடிக்கை எடுக்கலாமே. ஏன் தாமதம்..?

என்னால் ஆன இயலுமான பதிவுகளை நான் தருவேன். இது வியத்தில் நான் உங்கள் பக்கமே செய்வீர்களா?


அதானே, இராணுவத்தை யார் தூஷித்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே சரியாக இருக்கும்; சில்சாம் தூஷித்தால் மட்டுமே எனக்கு ரோஷம் வரும் என்பது கொஞ்சமும் நியாயமல்ல; இதில் தனிப்பட்ட விரோதம் இருப்பதாகவே நடுநிலையாளர்கள் கருதுவார்கள்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோ. ஜெயத்திற்கு சில வார்த்தைகள்...

உங்கள் மடல் கண்டேன். மகிழ்ச்சி. நீங்கள் யார் என்பது போகப் போகத் தெரியும் சகோ. அன்பு அதற்கு பின் எழுதியதை வாசிக்கவில்லையா? என்னையும் பேதையர் என எழுதியுள்ளார். அதாவது நான் விளக்கம் எழுதிய பின்பு. "Shut up" என்பது நல்ல ஆங்கில வார்த்தையா, சகோதரரே? மற்றும் வங்கி குறித்து அவர் எழுதியது சரியா? அல்லது எனது விளக்கம் சரியா? எங்களுக்கு தந்த வங்கி படிவத்தில் இது குறிதது தெளிவாக போட்டு தந்துள்ளார்கள். அன்பு சொல்வது உண்மையாகுமா, சகோதரரே? மற்றும் இராணுவத்தினை தொடர்ந்தும் வினவு தளம் வசை பாடுகிறதே!. இன்னும் பல பத்திரிகைகள் வசை பாடுகின்றதே..?

தேசப்பற்றுள்ள நீங்கள் இவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்ப்பது மிக வருத்தத்திற்குரியது. நீங்கள் கேட்டால் உண்மையிலேயே உங்களுக்கு தேசப்பற்று இருக்குமானால் நடவடிக்கை எடுக்கலாமே. ஏன் தாமதம்..?

என்னால் ஆன இயலுமான பதிவுகளை நான் தருவேன். இது வியத்தில் நான் உங்கள் பக்கமே செய்வீர்களா?



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

மேற்கோளில் காணும் மிரட்டலை (அ)நித்திய ஜீவன் தளத்தில் ஜெயம் எனும் ஒரு புதிய பூச்சி பதித்திருக்கிறது...

// அன்புச் சகோதரர் அன்பு அவர்களுக்கு

நித்திய ஜீவன் விவாத மேடையை சில மாதங்களாகப் பார்க்கிறேன். பயனுள்ள பல கருத்த்களை சொல்லியுள்ளீர்கள். ஆனால் சில நாளாக வேலை வெட்டி இல்லாமல் மற்றவர்களை தனிப்பட்ட முறையில் விமரிசிக்கிற சிலருக்கு பதில் சொல்வதில்தான் அதிக நேரத்தை வீனாக்குகிறீர்கள். உங்களை குற்றப்படுத்துவதாய் நினைக்காதீர்கள். காலத்தைப் பிரயோசனமாய் பயன்படுத்தத் தவறுகிறீர்களோ என ஆதங்கப்படுவதால் சொல்கிறேன்.

வேதத்தைப் புரட்டுவதுபோல் உங்கள் வார்த்தையையும் புரட்டுகிற கொல்வின், சில்சாமின் ஆகியோரின் வஞ்சகத்தை இன்னும் நீங்கள் புரியவில்லையா? அவர்களின் வஞ்சகத்துக்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன், அவர்களைப் புரிந்துகொள்ளுங்கள்.

ராஜ்குமாரை அறிவில்லாதவன் என்ற அர்த்தத்தில் பேதையர் என நீங்கள் சொன்னீர்கள் என்பது அனைவரும் புரியக்குடியதாக உள்ளது. ஆனால் கொல்வின் என்பவர் மிகவும் வஞ்சகமாக பேதையர் என்றால் பெண்கள் என்ற அர்த்தமும் உண்டு எனச் சொல்லி நீங்கள் அந்த அர்த்தத்தில் சொன்னதாக புதுக்கதை விட்டார். கொல்வின் சொன்னதை பிடித்துக்கொண்டு நீங்கள் பெண்களை இழிவு படுத்தியதாக சில்சாம் சொல்லி தந்திரமாக உங்களை பெண்களின் எதிரியாக மாற்றியுள்ளார்.

இப்படிப்பட்ட அநேக வஞ்சகங்கள் அவர்களிடம் உண்டு. எனவே உங்களுக்கு நான் சொல்கிற ஆலோசனை: அந்த வஞ்சகர்களின் தளத்துக்கு நீங்கள் செல்லவேண்டாம் என்பதே. நித்திய ஜீவன் தளத்தில் நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் பதிவுகளை மட்டும் கொடுங்கள்.

சகோ.பெரியன்ஸ் சொன்னபடி உலகத்தைச் சேர்ந்த அவர்கள் உங்களைப் பகைக்கத்தான் செய்வார்கள், உங்களை சிக்கலில் மாட்டிவிட கண்ணியையும் விரிப்பார்கள். அவ்ர்கள் கண்ணியில் நீங்கள் விழாமல் இருக்கணுமானால் அவர்கள் தளத்திற்கு நீங்கள் செல்லாமல் இருப்பதுதான் ஒரே வழி.

சில்சாமுக்கு எச்சரிக்கை:

ராணுவத்தையும் வங்கிக் காவலர்களையும் இழிவு படுத்திய உம்மை அன்புவும் பெரியன்ஸ்ம் மன்னித்து மறந்திருக்கலாம். ஆனால் உமது பதிவுகள் அனைத்தையும் எனது கம்யூட்டரில் பத்திரமாக வைத்துள்ளேன். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. கொல்வினோடு சேர்ந்து தந்திர செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் உமது தரங்கெட்ட இழிவான பதிவை சம்பந்தப்பட்ட அனைவரின் கவனத்திற்கும் கொண்டு செல்வேன் என எச்சரிக்கிறேன். நீர் தனிப்பட்ட முறையில் பெரியன்ஸிடம் மட்டும்ந்தான் மன்னிப்பு கேட்டிருக்கிறீர். ராணுவத்தையும் வங்கி காவலரையும் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட நிலையிலுள்ள கக்கூஸ் கழுவுவோரையும் ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்தியதற்கு மன்னிப்பு கேட்கவில்லை. சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன். இனி உமது விருப்பம்.//

யௌவன ஜனம் தளத்தின் பதிவுகளிலேயே  அதிகமாக வாசகர்களால் வாசிக்கப்பட்ட திரியாக இது மாறியிருக்கிறது; காரணம் இதில் என்னுடைய பல்வேறு விளக்கங்கள் பக்கம் பக்கமாக என்னுடைய தரப்பு நியாயமாக சொல்லப்பட்டுள்ளதுடன் எதிர்தரப்பினரின் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது; ஒரு கட்டத்தில் எப்பக்கமும் நெருக்கப்பட்டு சோர்வுற்ற நிலையில் மன்னிப்பு கேட்டு சகஜநிலையினை உருவாக்கமுயன்றேன்; ஆனாலும் (மேசியாவின்) எதிரிகள் திருப்தியடையாமல் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு வகையில் என்னை மீண்டும் களத்துக்கு அழைக்கிறார்கள்;என்னால் இவர்களை எதிர்க்கமுடியாது என்ற தோல்வியுணர்வினால் நான் ஒதுங்கவில்லை;பெரியவர்கள் சொல்வார்கள், "சின்ன கல்லுல எடுத்து துடைச்சிகிட்டா கையெல்லாம் அசிங்கமாயிடும்" என்பதாக அதுபோல இனியும் இவர்களோடு மோதுவதால் பயனேதும் இராது என்பதோடு இவர்களை எந்த காலத்திலும் திருத்தமுடியாது என்று தெரிந்துவிட்டது; இவர்கள் காரிருளை நம்பாவிட்டாலும் வேதம் சொல்லுகிறபடி அதுமாத்திரமே இவர்கள் பங்காகும்.

  • "தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது."(யூதா.13)

இதுபோன்ற எள்ளலுக்கும் நகையாடலுக்கும் அஞ்சியே, என்னுள்ளம் உடைந்தும் ஒரு வாரம் பிடிவாதமாக இருப்பவனைப் போல போராடிக்கொண்டிருந்தேன்;சுமார் இரண்டு வருடத்துக்கு முன்பாக அனுப்பியிருந்த மின்னஞ்சலை இத்தனை காலம் சேமித்து வைத்திருந்து இன்றைக்கு ரிலீஸ் பண்ணுமளவுக்கு வஞ்சகம் நிறைந்த விரியன்களிடம் பழகியிருக்கிறேனே அதற்கான ஆயத்தமும் மனோதைரியமும் இல்லாமல் இருப்பேனா?

நான் இப்போதும் எப்போதும் எதற்கும் ஆயத்தமாகவே இருக்கிறேன்; சர்வதேச இராணுவத்தையே நிந்தித்தேன் என்று ஒபாமாவிடமே நீங்கள் புகார் கொடுத்தாலும் என்ன நடக்குமோ அதுவே நடக்கும்;என்னுடைய நிலையைக் குறித்து ஏற்கனவே சொன்னதே எல்லா காலத்துக்கும் பொருந்தும்.அதையெல்லாம் நான் நீக்கவில்லையே ? மெய்யான மனதுருக்கம் ஏற்பட்ட காரணத்தினாலும் இதமான சூழ்நிலை உருவாகட்டும், நிதானமாக வாதிப்போம் என்ற நோக்கத்துடனே உங்களிடம் மன்னிப்பு கேட்டேனே தவிர நீங்களெல்லாம் சேர்ந்து என்னை திகார் ஜெயிலுக்கு அனுப்பிவிடுவீர்களோ என்ற அச்சத்தினால் அல்ல‌.

பெரியவர் அன்பு, ஜெயம் என்பவரின் இந்த மிரட்டலை உடனே நீக்காவிட்டால் முடிந்த பிரச்சினையானது மீண்டும் தொடருகிறது என்பதே அர்த்தம்... இதற்கு மேல் இந்த ஜந்துகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது; சிலருடைய பெயரில் ஜெயம் இருப்பதால் மட்டுமே அவர்கள் ஜெயித்துவிடமுடியாது. தனிப்பட்ட ஒருவர் எங்களில் முக்கியமான மூன்று பேரை இழிவாகப் பேசியதற்கு பதிலடியாக உலகப்பிரகாரமான முறையில் தகுந்த மரியாதையை செய்திருக்கிறேன்; இதனால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டு அதனைப் பொதுப் பிரச்சினையாக மாற்ற முயற்சித்தார்;அவர் மாத்திரமல்ல, இவற்றை வாசித்த யார் வேண்டுமானாலும் இதை பிரச்சினையாக்கி இருக்கமுடியும்;ஆனால் அந்த கேஸ் கோர்ட்டில் நிற்காது, நின்றாலும் எனக்கு கவலையே இல்லை என்பதை ஏற்கனவே அறிவித்துவிட்டேன்; செய்யாத ஒரு தவறுக்கு லாக்கப் கைதியைப் போல வர்றவன்,போறவன் கிட்டயெல்லாம் நான் மண்டியிட்டு கொண்டிருக்கமுடியாது.

இன்றைக்கு தமிழ் சினிமா உலகில் எந்த படமெடுத்தாலும் அதில் ஏதோ ஒன்று தங்களை பாதிப்பதாகச் சொல்லி, அச்சுறுத்தி பணம் பறிக்கும் கும்பல் ஒன்று இருக்கிறது அல்லது தங்கள் திரைப்படத்தை பிரபலப்படுத்த தயாரிப்பாளரே இதுபோன்ற சர்ச்சைகளைக் கிளப்பிவிடுகிறார்;அதுபோல நான் எதை எழுதினாலும் அது தங்களைப் புண்படுத்திவிட்டதாகச் சொல்லி ஆளாளுக்கு புகார் செய்தால் அதனை நான் எப்படி தடுக்கமுடியும்? இதோ மேலே எழுதியிருக்கும் வரிகளை வைத்து திரைப்படங்களைக் குறித்து புகார் செய்த அத்தனை பேரும் நான் அவர்களை இழிவுபடுத்திவிட்டதாக ஒரு புதிய புகாரை செய்தால் அதற்கென்ன செய்யமுடியும்?

என்னுடைய அருமை நண்பர் ஜோசப் ஏற்கனவே குறிப்பிட்டவண்ணமாக இந்த தேசம் மக்களாட்சி நடைபெறும் தேசமாகும்; இராணுவத்தின் பலத்தைவிட மக்கள் சக்தியே இங்கு மேன்மையானது;இராணுவத்தையும் வங்கி அமைப்பையும் துப்புரவு தொழிலாளர்களையும் நான் ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்திவிட்டதாக என்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை நான் முழுவதும் மறுக்கிறேன்;அதுபோன்ற குற்றச்சாட்டுகள் விஷமத்தனமானதாகும், அவற்றை வன்மையாகக் கண்டிக்கிறேன்; இந்த மிரட்டல்களூக்கு நான் ஒருபோதும் பணியவே மாட்டேன் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

பூகம்பத்துக்குப் பிறகும் ஆஃப்டர் ஷாக் (after shock) தொடருவதுபோல , (மேசியாவின்) எதிர்தரப்பினர் இன்னும் சமாதானமடைந்தது போலத் தெரியவில்லை; காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் ஆழம் அவர்களுக்கும் அதனை ஏற்படுத்தியவர்களுக்கும் மாத்திரமே தெரியும்.

ஆனாலும் அவர்கள் சில நியாயமான கேள்விகளால் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்;அதாவது அவர்களுடைய கருத்தை மட்டும் விமர்சனம் செய்யாமல் பெயரைக் குறித்தெல்லாம் ஏன் விமர்சனம் செய்கிறீர்கள்,என்பதே; இது ஒன்றும் அதிசயமில்லை நண்பர்களே, தேவகுமாரனாக அவதரித்த இயேசு நாதரே தம்முடைய எதிரியான ஏரோதுவை நரி என்று வர்ணிக்கவில்லையா?

நீங்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் எதிரிகளல்ல, என்பதை நிலைநாட்டவே (மேசியாவின்) என்று அடைப்புக்குறிக்குள் போட்டு எதிரிகள் என்கிறேன்;எதிரிகள் என்பாரை எதிர்தரப்பினர் என்றும் கொள்ளலாம்;மேலும் கோவை வெறியன் என்று குறிப்பிடக் காரணம், வெறியன் என்பது பெரியன்ஸ் எனும் வார்த்தையின் ஓசைநயத்துடன் இசைந்துவருவதே;நீங்கள் உங்களை பெரியன்ஸ் என்று அழைத்துக்கொள்வது சரிதானா என்பதைக் குறித்த ஆதங்கத்தைக் கொட்டவே இந்த திரியே துவக்கப்பட்டது;அதைக் குறித்து நீங்கள் இதுவரை ஒன்றும் சொல்லவில்லை.

என்னைப் பொறுத்தவரை,அது திருடன்-போலீஸ் விளையாட்டாக இருந்தாலும் சரி, ராஜா-ராணி விளையாட்டாக இருந்தாலும் சரி , அவரவருடைய நிலையில் தெளிவாக இருக்கவேண்டும்;இரண்டு திருடன் இரண்டு போலீஸ் இரண்டு ராஜா இரண்டு ராணி இருக்க வாய்ப்பில்லை, கதையிலும் விளையாட்டிலும் இதனால் வீணான குழப்பமே வரும்; அதுபோலவே வேதத்திலுள்ள பெரியன்ஸ் எனும் வார்த்தையுடன் நீங்கள் உங்களை இணைத்துக்கொள்வதற்கு முன்பதாக அந்த பெயருக்குரியவருடைய தகுதியுடன் உங்களுக்கு சம்பந்தமிருக்கிறதா என்று பார்க்கவேண்டுமல்லவா?

பார்வையாளரான எங்கள் கருத்தின்படி நீங்கள் உங்களை பெரியன்ஸ் என்று அழைத்துக்கொள்வது முறையல்ல;இப்படி கிறித்தவ விசுவாசத்தின் அடையாளமான ஒவ்வொரு சொல்லையும் நீங்கள் களவாடிக் கொண்டதால் அவ்வாறு சொல்லும்போதெல்லாம் மனசு வலிக்கிறது; யெகோவா சாட்சிகள் என்பதும் வேதமாணவர் என்பதும் பெரியன்ஸ் என்பதும் சர்ச்சைக்குரிய வார்த்தைகளாக மாற‌ யார் காரணம் என்று யோசித்தீர்களா?

எனவே யெகோவா சாட்சிகள் என்று குறிப்பிடாமல் இரசலின் யெகோவா சாட்சிகள் என்று குறிப்பிடுகிறேன்;வேத மாணவர் என்று குறிப்பிடுவதைத் தவிர்க்க பேத மாணவர் என்று குறிப்பிடுகிறேன்;பெரியன்ஸ் என்று குறிப்பிடுவதற்கு சங்கடப்பட்டு வெறியன்ஸ் என்று குறிப்பிடுகிறேன்.

இதன் பின்னணியிலுள்ள உணர்வு என்ன,நீங்கள் இதுபோன்ற சொற்களால் உங்களையும் கெடுத்துக்கொண்டு எங்களையும் ஏமாற்றக்கூடாதே என்ற நல்லெண்ணத்தினால் தான்;உதாரணமாக உண்மை விரும்பி என்ற பெயரில் ஒருவன் ஓயாமல் பொய்களை எழுதிக்கொண்டிருந்தால் அவனை உண்மை விரும்பி என்று அழைக்க விரும்புவீர்களா?

நீங்கள் எழுதுவதே உண்மை என்றெண்ணிக்கொண்டிருப்பதே மாயை;முகமதியரும் அவ்வாறே ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள்; உங்களுக்கும் அவர்களுக்கும் ஆறு வித்தியாசத்தில் ஒன்றிரண்டாவது தேறுமா என்று தெரியவில்லை;

இதுபோக கிறித்தவர்கள் என்ற பெயருக்கும் அதன் அடிப்படை தெரியாமல் சொந்தங் கொண்டாடுகிறீர்கள்;இதனால் சமுதாயத்தில் வீணான குழப்பமே உண்டாகும்;முகமதுவை இறுதித் தூதராகவும் குரானை இறைவேதமாகவும் ஏற்றுகொண்டோரை முகமதியர் என்று சொல்லுகிறோமே அதுபோலவே நீங்களும் உங்களை இரஸலியன் என்று பெருமையுடன் அழைத்துக்கொள்ளலாம்; அதைக் குறித்து எங்களூக்கு எந்தவித ஆட்சேபணையுமில்லை;அப்படிப்பட்ட ஒரு சிறப்புப் பெயரால் நீங்கள் உங்களை அழைத்துக்கொண்டாலே உங்களுடைய அருமைதனை அறியாத மடையர்களுக்கு சத்தியத்தின் மேன்மை தெரியவரும்; நீங்களும் நாங்களும் கிறித்தவர் என்ற பெயரால் மோதிக்கொள்வதால் சாமான்யரிடத்தில் வீணான குழப்பமே உண்டாகும் என்று அஞ்சுகிறேன்.

இது வைகோ அவர்கள் திமுகவிலிருந்து பிரிந்தபோது தன்னையே உண்மையான திமுகவாகச் சொல்லி போராடியது போல இருக்கும்;அவர் மதிமுக என்ற பெயரில் தனிகட்சி தொடங்கியபின்னரே குழப்பம் தீர்ந்தது;அதுபோலவே நீங்கள் உங்களையும் இரஸலியன் ஆகிய சிறப்புப் பெயரால் அழைத்துக்கொள்வதால் நாம் நிதானமாகப் பேசி ஒரு முடிவுக்கு வரும் வாய்ப்பு உண்டாகுமே,யோசிப்பீர்களா..?

ஆத்தும பிசின் என்று நான் செல்லமாக அழைக்கும் சோல் சொலீஷன் குறித்து...

உங்களிடம் நேர்மையுணர்வு இருக்குமானால் மனசாட்சியுடன் சொல்லுங்கள், புத்தம்புது மலராக தமிழ் கிறித்தவ தளத்துக்கு வந்த என்னைக் கெடுத்துப்போட்டதே,இந்த ஆத்தும பிசினின் உதாசீனமான எழுத்துக்கள் தானே? என்னைப் பொறுத்தவரையில் கோவை வெறியனும் இவரும் ஒருவரே;ஏனெனில் எவ்வளவோ நட்புடன் மன்றாடியும் எனக்கு கோவை வெறியனிடம் நியாயம் கிடைக்கவில்லை;என்னை முதன்முதலில் தூக்கியெறிந்து புறக்கணித்து கீழ்த்தரமாக தூஷித்தவர் இந்த சோலு சொலீஷன் என்பவரே;இவருக்கு இவருடைய பாணியிலே பதிலளிக்க முயற்சித்ததன் பலனாகவே என்னுடைய தரம் கெட்டது;இதற்கு என்னிடம் எழுத்துப்பூர்வமான ஆதாரம் உண்டு;அதனை அதன் தேதியிலிருந்தே அறியமுடியும்;உதாரணமாக கோவை வெறியன் அவர்களுடைய தளத்தில் நான் முதல் பதிவைப் போட்டதிலிருந்து தேதிவாரியாக ஆராய்ந்துபாருங்கள்; என்னுடய நியாயம் உங்களுக்கெல்லாம் தெரியவரும்; சோலு சொலீஷன் இதுவரை நட்புணர்வுடனும் மரியாதையுடன் எழுதியதே இல்லை என்ற நிலையில் யார் அவருடன் நட்புகொள்ளமுடியும்?

ஆத்துமாவையே நம்பாதவர்கள் ஆத்துமா பெயரில் எதையோ எழுதினால் அதனை எப்படி ஏற்கமுடியும்? யெகோவா சாட்சிகள் என்று குறிப்பிட்டாலே உங்களுக்குக் கோபம் வருகிறது;அந்த கோபமே எல்லா குழப்பத்துக்கும் காரணம்;மேலும் தகுந்த முன்னேற்பாடுகளுடன் உச்சக்கட்டத்தில் சொல்ல இருக்கும் ஒரு காரியத்தை அவசரப்பட்டு முந்திரிக்கொட்டைத் தனமாக நான் போட்டு உடைக்கிறேன்;இதனால் என் மீது தங்களுக்கு நட்புணர்வு ஏற்பட வாய்ப்பில்லாமற் போனது;என்னைப் போலவே உங்களை எதிர்க்கும் சுந்தரை ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொள்ளும் உங்களால் என்னை ஏற்றுக்கொள்ள முடியாததற்குக் காரணம்,என்மீதான எரிச்சல் தான்;சுந்தரையும் கூட லூஸு என்றெல்லாம் தாக்கியிருக்கிறீர்கள் அல்லவா?

(மேசியாவின்) எதிரிகளான நண்பர்களே, நாமனைவருமே கத்தோலிக்கத்தின் சிதறல்கள்,காலாகாலத்தில் கிடைத்த விதம்விதமான வாய்ப்புகளின் மூலம் ஓரளவு தெளிவு பெற்று வருகிறோம், அல்லவா? அதன்படி நீங்கள் எப்படி எங்களை கத்தோலிக்கத்தின் சிதறல்களாக எங்களை பாவிக்கிறீர்களோ அப்படியே உங்களையும் இரஸலின் சிதறல்களாக பாவிக்கிறோம்;அவர் இயேசுவை தெய்வமாகத் தொழுவதை மறுத்து யெகோவா எனும் யூதக் கடவுளையே வணங்கவேண்டுமென்று போராடினாரல்லவா? அதனை நீங்களும் ஏதோ ஒருவகையில் ஈர்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளுகிறீர்கள் தானே,அல்லது இரஸல் என்பவரே யார் என்று அறியாத நிலையில் இரஸலின் அடியவர் ஒருவர் மூலமாக நீங்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கலாம் தானே? அப்படியானால் நீங்கள் யெகோவா சாட்சிகள் என்று சொல்லிக்கொள்ள ஏன் அஞ்சுகிறீர்கள்?

பழைய கஞ்சியை புதிய தொன்னையில் ஊற்றிக்கொடுத்தாலும் அதன் ருசி மாறாதல்லவா? அதுபோலவே உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பெரிய பிளப்பு உண்டாயிருக்கிறது;நீங்கள் உங்கள் மேட்டிமையான போதனைக‌ளிலேயே மயங்கியிருந்து ஐசுவரியவானைப் போல இருக்கிறீர்கள்;அதற்கேற்ப நீங்கள் பாதாளத்தையும் நம்புகிறதில்லை; நாங்களோ உங்களிடம் யாசகம் கேட்டு பிழைக்கும் லாசருவின் நிலையிலிருக்கிறோம் என்றே வைத்துக்கொள்ளுவோம்; உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பிளப்பு உண்டாயிருக்கிறது;நீங்கள் எங்களிடம் வருவதற்கும் நாங்கள் உங்களிடம் வருவதற்கும் அதுவே தடையாக இருக்கிறது;

ஆனால் நாம் இருதரப்பினருமே இன்னும் உயிருடனிருப்பதால் ஒரே ஒரு வாய்ப்புண்டு,கிறித்துவாகிய பாலம் இன்னும் அகற்றப்படவில்லை; விரைவில் அந்த வாசல் மூடப்படும்;அதற்குப் பிறகு பிரிவு நிரந்தரமாகும்; வாசல் மூடப்படும்;இன்னும் நான் என்ன சொல்ல‌..!

  • "உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது." (லூக்கா.19:42)


{ குறிப்பிட்ட கருத்தின் பாதிப்பின் அடிப்படையிலும் மேற்கோள் காட்டாமலும் இதனை எழுதியதால் அதற்கான தொடுப்பு அவசியப்படவில்லை; மேலும் இதுபோன்ற நேருக்கு நேர் விவாதத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலக விரும்புகிறேன்.நெஞ்சிற்கினிய எனதருமை வாசகர்களுக்கு முழுவிவரமும் தெரியும் என்பதால் பொதுவாக எழுதியிருக்கிறேன்;வாசகரோ தளநண்பர்களோ கோரினால் விவரத்தைக் கூற ஆயத்தமாக இருக்கிறேன்...}



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

Citation and Reference!!

பதிவு தொடர்பாக

நான் சொல்லவராத கருத்துக்களை தயவு செய்து சொல்ல வேண்டாம். இது தொடர்பாக இணையத்தில் தேடி வாசித்துக் கொள்ளுங்கள். இதன் முக்கியத்துவத்தை பல்கலைக்கழக மாணவர்களிடம் விசாரித்தறிந்து கொள்ளுங்கள். உங்கள் புரிந்துணர்வு மிக தபபானது. சரியான விளக்கம் அதுவல்ல. 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

நண்பர் பெரேயன்

//மேலும் நாய் என்று எழுதிய ஒரு வார்த்தைக்கு ஜான் அவர்கள் இந்த அளவிற்கு சூடாக வேண்டிய அவசியம் இல்லை!! நீங்கள் எழுதிக்கொண்டு இருக்கும் தளத்தில் முதலில் அதை கடைப்பிடித்து விட்டு பிறகு அடுத்த தளத்தில் உள்ளவர்களுக்கு தங்களின் அறிவுறைகள் தந்தால் நலமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்!!

தங்களின் தளத்தில் உள்ளவர்களிடம் இதை கடைப்பிடித்து அதன் பின் அடுத்தவர்களிடம் கைய்யை நீட்டலாமே!!//

 

நான் அந்த குறிப்பிட்ட பதிவை பதிக்கவில்லை என்றாலும் இங்கே நீங்கள் "Contradict" பண்ணுகிற ஒரு விஷயத்தை சுட்டி காட்ட விரும்புகிறேன். உங்கள் தளத்தில் உள்ளவர்களை கண்டியுங்கள் என்று அடுத்தவரை சொல்லும் முன்பு  நீங்கள் உங்கள் தளத்தில் எழுதுகிற  Soul Solution ஐ கண்டிக்காதது எப்படி சரியாகும். மற்றவர்களுக்குத்தான் உபதேசமா? மேலும் Soul Solution என்பவர் இங்கே நடைபெற்ற எந்த ஒரு விவாதத்திலும் கலந்து கொண்டிருக்கமால் Just Like That தடித்த வார்த்தைகளை உபயோகிப்பதை பார்த்ததால் அவர் இன்னும் ராணுவத்தில் இருப்பது போலவும் நாங்கள் எல்லாம் சுட்டு தள்ளப்படவேண்டிய அந்நிய நாட்டவர்  என்றும் நினைக்கிறாரோ?

 



-- Edited by John on Saturday 26th of March 2011 09:17:07 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

John wrote:

நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டது போலவும் , நீங்கள் மாத்திரமே  தவறு செய்து விட்டும் மன்னிப்பு கேட்கக்கடமைப்பட்டவர் போலவும் ஒரு மாயையை சிலர் உண்டுபண்ணினாலும், எல்லாரும் குற்றவாளிகளே..!

எல்லாரும் அடுத்தவரை தனிப்பட்ட முறையில் தரம் குறைந்து விமர்சித்திருக்கிறோம்.


மிகச் சரியாகச் சொன்னீர்கள்,நண்பரே.உங்கள் அன்புக்கும் புரிதலுக்கும் நன்றி; தாங்கள் குறிப்பிட்ட வண்ணமாக குற்றம் யாருக்கு எதிராக இழைக்கப்பட்டது தெரியுமா,உன்னைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான் என்றாரே,அவருக்கு எதிராக;எது மாபெரும் குற்றம் தெரியுமா,மேசியாவை ஏற்றுக்கொள்ளாததே;எது அவரை ஏற்றுக்கொள்ளாதது தெரியுமா,அவரை ஆளத்தக்கவரல்ல என்று புறக்கணித்து தாங்கள் அறியாத மகத்துவத்தை தூஷிப்பதே;இதுவே சாமுவேல் காலத்திலிருந்து அவருடைய மனவேதனையாக இருக்கிறது; இவ்வகையில் யார் குற்றவாளி, யாருக்கு முன்பாக குற்றவாளி என்று ஆராயப்போனால் தலைசுற்றுகிறது..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//அடியேனுடைய வேண்டுகோளை ஏற்று என்னை முழுமையாக நம்பி நல்லெண்ண நடவடிக்கையில் முந்திக்கொண்ட ஐயா அன்பு அவர்களுக்கு நன்றி..! இனியும் நமக்குள் எந்த பிணக்கும் வராதிருக்க முயற்சிக்கிறேன்;//

ரொம்ப அருமை சகோ.சில்சாம். நாம் அனைவருமே இனி தனிப்பட்ட விமர்சனத்தை தவிர்த்து இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் முழங்கால் படியிடாதவர்களின் உண்மை முகத்தை அனைத்து கிருஸ்தவர்களுக்கும் வெளிப்படுத்துவோம். நீங்கள் தனிமை படுத்தப்பட்டது போலவும் , நீங்கள் மாத்திரமே தவறு செய்து விட்டும் மன்னிப்பு கேட்கக் கடமைப்பட்டவர் போலவும்  ஒரு மாயையை சிலர் உண்டு பண்ணினாலும், எல்லாரும் குற்றவாளிகளே! எல்லாரும் அடுத்தவரை தனிப்பட்ட முறையில் தரம் குறைந்து விமர்சித்திருக்கிறோம்.


__________________
ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

மிகுந்த சந்தோசம் சகோ.சில்சாம்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Andu@ யௌவன ஜனம் தள உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்

//இத்திரியின் முதல் பதிவில் நான் பதித்திருந்த வேண்டுகோள் தனது கவனத்திற்கு வரஇயலாமற்போனது என தகுந்த காரணத்துடன் சில்சாம் கூறுகிறார்.  அவர் சொல்வதை நான் ஏற்கிறேன்.

தற்போது சர்ச்சைக்குரிய பதிவை சில்சாம் நீக்கிவிட்டதால், நான் உறுதிகூறியிருந்தபடி, சர்ச்சைக்குரிய பதிவை மேற்கோள் காட்டி இத்தளத்தில் நான் பதித்துள்ள பதிவுகளை நீக்கிவிடுகிறேன். சகோ.பெரியன்ஸ்-ம் தனது தளத்தில் அப்படியே செய்வார் என நம்புகிறேன். //

அடியேனுடைய வேண்டுகோளை ஏற்று என்னை முழுமையாக நம்பி நல்லெண்ண நடவடிக்கையில் முந்திக்கொண்ட ஐயா அன்பு அவர்களுக்கு நன்றி..! இனியும் நமக்குள் எந்த பிணக்கும் வராதிருக்க முயற்சிக்கிறேன்; அமலேக்கியரைப் போலல்லாது இஸ்ரவேலரைப் போலயுத்தம் செய்வோம்...வெற்றி நமதே..! ((யாத்திராகமம் .17:-யோசுவா))



-- Edited by chillsam on Friday 25th of March 2011 02:27:46 PM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

நன்றி ஆதாம்... தற்போது புதிதாகப் பிறந்தது போல உணருகிறேன்; எப்போதெல்லாம் சிலுவையை நோக்கிப் பார்க்கிறோமோ அப்போதெல்லாம் சிந்தை புதிதாகிறது;நீங்கள் கூட கிண்டலாக, அண்ணா என்றழைப்பதாக எண்ணினேன்;ஆனால் தற்போது உங்களையும் நேசிக்கிறேன்;ஆனாலும் அண்ணன் சொல்லிக்கொள்ளுமளவுக்கு நான் ஒன்றிலும் பெரியவனல்ல‌..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
Permalink  
 

////நான் யாரையும் அசட்டை செய்ததாக தயவுசெய்து எண்ணிவிடவேண்டாம்;(மேசியாவின்) எதிரிகளாக நான் பாவித்து எழுதிவரும்  மதிப்பிற்குரிய எதிரிகளான‌ நண்பர்கள் உட்பட அனைவரையும் சமமாக நேசிக்கிறேன்; இந்த விஷயத்தில் அரசியல்வாதிகள் மேடையிலும் தேசத்தின் மன்றங்களிலும் ஆக்ரோஷமாக பேசிவிட்டு வெளியே வந்து கைகுலுக்கிக் கொண்டு அரட்டையடிப்பார்களே அதுபோன்ற பொய் கோபமே என்னிடம் உண்டு; இங்கே போட்டி உண்டு பொறாமையில்லை;வேகத்தின் அளவிலேயே விவேகமுமுண்டு.

எனவே இணக்கமான சூழல் உருவாக விரும்பி நண்பர்கள் எடுத்துள்ள எல்லா முயற்சிகளையும் ஊக்கப்படுத்தும் வண்ணமாக எனது சர்ச்சைக்குரிய வரிகளை அதாவது நண்பர் கோவை வெறியன் அவர்களை கோபப்படுத்திய சர்ச்சைக்குரிய‌ வரிகளை நீக்குவதுடன் என்னுடைய கடினமான போக்கினால் புண்பட்டிருக்கக்கூடிய அவருடைய மென்மையான உணர்வுகளை மதித்து, அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்புகோருகிறேன்./////

அண்ணா இப்போது தான் நீர் கிறிஸ்துவை தரித்து கொண்டதை வெளிப்படுத்துகிறீர் !!!!!!

 keep it up Good show 



__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

திரு பெரியன்ஸ்,
உங்கள் தளத்தில் நான் பதிவிடுவதை நிறுத்தியதற்கு மிக முக்கிய காரணம் சோல் சொல்யூஷன் என்பவர் தான். அவரை தரக்குறைவாக எழுதுவதை நிறுத்த சொல்லுங்கள். யாரை நாய் என்கிறார். இதை கைகட்டி வேடிக்கை பார்ஹ்ட்துக்கொண்டிருப்பீரோ? சில்சாமுக்கு புத்தி சொல்லசொல்லும் நீங்கள் உங்கள் நண்பரை மரியாதையாக எழுத சொல்லுங்கள்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

//இராணுவத்தை இழிவுபடுத்தும் அறிவாளிகளுக்கு நாட்டின் குடியுரிமைக்கே அருகதையில்லை. இந்த அயோக்கிய தேச துரோகிகளை நாடுகடத்த வேண்டும். சுதந்திர இந்தியாவின் மேன்மைதெரியாத தாந்தோன்றிக் கூட்டம். இந்த நாய்களுக்குப் புரியாத ஒரு விஷயம் இவன்கள் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் ஒரு பெரும்பகுதி ராணுவ பட்ஜட்டிற்குப் போகிறதென்பது. முட்டாள்களே இந்திய நாட்டில் இருந்தால் மரியாதையாக இந்திய அரசியல் சட்ட அமைப்புக்கு அடங்கியிருங்கள். இந்தத் உம்முடைய இந்த தேச துரோக விமர்சனம் 'மேலிடத்துக்கு'ப் போனால் ஜென்மத்துக்கும் வெளியே வராதபடிக்கு சாகும்வரை கம்பி எண்ணுவாய். பேச்சு சுதந்திரம் என்ற பேரில் வாயை அடக்காமல் அநாவசியமாகப் பேசி மாட்டிக்கொள்ளாதீர்கள். சில்சாமே எழுதியதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்டு தப்பித்துக்கொள். இல்லை ஜெயில் கஞ்சி குடிக்க தயாராகு. விளையாட்டல்ல நிஜம்!!! எச்சரிக்கை!!!!

நல்ல போர்ச்சேவகனாக எவ்வளவு தீங்கனுபவித்திருக்கிறோம் அந்த 20 வருட கால கட்டத்தில் என்பது எனக்கு சகோ பெரேயன்ஸுக்கும் தேவனுக்கும் தெரியும். வேறெந்த நாய்களுக்கும் விளக்கவேண்டிய அவசியமில்லை.//

பெரியன்ஸ் தளத்தில் ஆத்தும கரைசல் அல்லது கோந்து எனப்படும் ஒரு மனிதர் (?) எழுத்திலும் கருத்திலும் தடித்த சொற்களை பயன்படுத்திகிறார். ராணுவத்தை தான் இழிவுபடுத்தவில்லை என சில்சாம் ஏற்கனெவே சொல்லிவிட்டார். ஒருவேளை பெரியன்ஸ் அவர்களை தனிப்பட்ட முறையில் அவரது விமானப்படை சேவையை தாக்கியிருந்தால் அது தவறு தான் என்றும் நண்பர்கள் சொல்லிவிட்டார்கள். இதில் மறுபடியும் நாங்கள் தொடங்குகிறோமாம். ஐயா, உன் (உனக்கு இவ்வளவு போதும்) வார்த்தைகளுக்கு இணையான கேவலமான வார்த்தைகளை என்னாலும் எழுதமுடியும். சும்மா மிரட்டிப்பார்க்காதே. யாரய்யா தாந்தோன்றிக்கூட்டம், நாவை அடக்கி பேசு, தாந்தோன்றித்தனமாக எழுதுவது நானா இல்லை நீயா.
முதலில் உங்கள் கூட்டம் கத்தோலிக்க சபையை வேசி சபை என்பதை எழுதுவதை வாபஸ் வாங்கட்டும். தனிப்பட்ட ஒருவனை சொல்வதை விட ஒரு சபையையே வேசி என்பாயா? உனக்கென்ன அருகதை இருக்கிறது இது பற்றி சொல்ல. ராணுவத்தை கண்டித்து சீமான் முதல் எத்தனையோ பேர் பகிரங்கமாக பேசிவருகிறார்கள். மேலும் வடகிழக்கு மா நிலம் ஒன்றில் ஒரு பெண் எதற்காக 13 வருடம் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்கிறார் என்பதை வாசித்து பார்.

ராணுவத்தை யாரும் ஒட்டு மொத்தமாக பழிக்கவில்லை, தேசபக்தியோடு அவர்கள் சேவை செய்வதை கூட யாரும் மறுக்கவில்லை ஆனாலும் ராணுவம் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பு என சொல்லாதே. இவ்வளவு ஏன், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதளில் முன்னாள் ராணுவ அதிகாரிகளின் நில ஊழலை உரித்து தொங்கவிட்டார்களே, அது தேச துரோகமா? இல்லை இந்து தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்ட ஒரு ராணுவ அதிகாரி மாட்டியதை அம்பலப்படுத்தி எழுதினார்களே அது தேச துரோகமா. நீ என்ன ராணுவ ஆட்சி நடத்துகிறாயா? இந்த தேசத்தின் மிகப்பெரிய அமைப்பு மக்கள் சக்தி தான், அதனால் தான் 5 வருடங்களுக்கு ஒருமுறை அரசியல்வாதி ஓட்டு கேட்டு மக்களிடம் வருகிறான், மக்கள் இல்லையேல், அரசாங்கம் ஏது ராணுவம் ஏது?

சர்வ வல்ல அதிகார மையமான அமெரிக்க ராணுவமே வியட்னாமிலும் ஈராக்கிலும் ஆடிய ஆட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு கிளம்பியதால், மூட்டையை கட்டிக்கொண்டு நாடு வந்து சேர்ந்தது.

அரசியல் அமைப்பு சட்டமும் தெரியும், உலக நடப்புகளும் தெரியும். உன் வேலையை வேறு யாரிடமாவது வைத்துக்கொள்.

முதலில் நாய் என கீழ்த்தரமாக் எழுதுவதை நிறுத்து. கத்தொலிக்க சபையை பற்றியோ இனி வேறெந்த சபையை பற்றியோ தரக்குறாவாக எழுதினால் அந்தந்த சபையை சேர்ந்தவர்கள் பார்த்துக்கொண்டிருக்கமாட்டார்கள், பேச்சு சுதந்த்ரம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதாதே.

தேவனுக்கு தான் முதலில் பயப்படவேண்டும், எத்தனையோ நாடுகளில் ராணுவ ஆட்சியில், கம்யூனிச ஆட்சியில் தேவனை வணங்குவதே தேச துரோகம் என்கிறார்கள், அப்படியானால் அங்கு தேவனை வணக்கிய கிறிஸ்தவர்கள் செய்தது தேச துரோகமா. மிஸ்ட்ட்ட்ட்ட்டர் சோல் சொல்யூஷன். என்னத்தையாவது எழுதுமுன் கொஞ்சம் யோசித்து எழுதும்.



-- Edited by joseph on Friday 25th of March 2011 01:14:05 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இந்த திரியில் மட்டுமே எங்கெல்லாம் சர்ச்சைக்குரிய அந்த வரிகள் மேற்கோள் காட்டப்பட்டிருந்ததோ அவையனைத்தையும் இயன்றமட்டும் நீக்கியிருப்பதுடன் இனிவருங்காலங்களிலும் எவ்வளவு தான் என்னை தூஷித்தாலும் சரி, கிறித்துவின் சிலுவையினிமித்தம் அனைத்தையும் சகித்துக்கொள்ளவும் தீர்மானிக்கிறேன்.

இது யாருடைய அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்ட மனமாற்றம் அல்ல,ஒரு குறிப்பிட்ட ஆலோசனை ஊழியத்தின் போது என்னுடன் ஆவியானவர் இடைபட்டு தூண்டியதாகும்;அவருக்கே மகிமையுண்டாவதாக‌.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

«First  <  1 2 3 4 5 6  >  Last»  | Page of 6  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard