Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குழப்பமுள்ள இந்துமதம்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
RE: குழப்பமுள்ள இந்துமதம்
Permalink  
 


 

சகோ.கோல்வின்,
     உங்கள் வார்த்தைகள் மிகுந்த உற்சாகம் ஊட்டுகின்றன. நம் கிறிஸ்துவ வாழ்வில் இத்தகைய உற்சாகமூட்டுதல் கூட ஒரு ஊழியமாகும் (உற்சாகமின்மையால் விழுந்த ஊழியங்கள் பல). கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.
 
கிறிஸ்துவின்,
அசோக்


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

Ashokkumar wrote:

smileஆதாமின் பாவம், அவன் வம்சத்தினர் அனைவருக்கும் பரவியது லாஜிகலாக இல்லையாம்.

நம் பாவங்களுக்காக இயேசு தண்டனையை ஏற்றுக்கொண்டதால், நாம் ரட்சிக்கபடுகிறோம் என்பதும்  இவர்களது(இந்துக்களது) பகுத்தறிவிற்கு(?) ஏற்புடையதாய் இல்லையாம்.
ஆனால், திருவிளையாடல் புராணத்தில், பிட்டுக்கு மண் சுமந்த படலத்தில், சிவன் மீது பிரம்படி விழுந்த போது, அதன் வலியும், தழும்பும் உலக மக்கள் அனைவர் மேலும் வந்தது மட்டும் ஏற்றுக்கொள்ள முடிகிறதாம்.
இது மட்டும் எப்படி சார் லாஜிக்காகும்?

 

 உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது. இந்து சமயத்திலிருந்து இரட்சிகப்பட்டு வந்துள்ளதால் இந்து சமயத்தைப் பற்றி நன்கு அறிந்து வைத்துள்ளீர்கள். உஙகள் ஊழியம் சிறப்படைய வாழ்த்துக்கள்.

நானும் தற்போது இந்து சமயத்தின் மீது கவனத்தை திருப்பியுள்ளேன். விரைவில் பதிவிடுவேன். 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

smileஆதாமின் பாவம், அவன் வம்சத்தினர் அனைவருக்கும் பரவியது லாஜிகலாக இல்லையாம்.

நம் பாவங்களுக்காக இயேசு தண்டனையை ஏற்றுக்கொண்டதால், நாம் ரட்சிக்கபடுகிறோம் என்பதும்  இவர்களது(இந்துக்களது) பகுத்தறிவிற்கு(?) ஏற்புடையதாய் இல்லையாம்.
ஆனால், திருவிளையாடல் புராணத்தில், பிட்டுக்கு மண் சுமந்த படலத்தில், சிவன் மீது பிரம்படி விழுந்த போது, அதன் வலியும், தழும்பும் உலக மக்கள் அனைவர் மேலும் வந்தது மட்டும் ஏற்றுக்கொள்ள முடிகிறதாம்.
இது மட்டும் எப்படி சார் லாஜிக்காகும்?


__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Ashokkumar wrote:
சகோதரி. கோல்டவின் வேண்டுகோள் மிக நியாயமானது. பலர் இந்த யோகம், தியானம் இன்று சென்று தங்கள் ஆன்மீக வாழ்க்கையை  கெடுத்து கொள்கிறார்கள். என் கிறிஸ்துவ வாழ்க்கைக்கு முன். என் ஆன்மீக தேடுதலின் நிமித்தம், நான் பல யோகங்கள், தியான முறைகள் கற்றதுண்டு. ஒரு பத்து வருடங்களுக்கு மேல், இந்த யோகங்களை கற்றறிய அலைந்து திரிந்தேன். அவை:
  • ராஜயோகம் (பிரம்ம குமாரிகள் எனப்படும் குழுவினரால் கற்றுதரப்படுவது)
  • மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானம்
  • வேதாத்திரி மகரிஷியின் குண்டலினி யோகம்
  • மாஸ்டர் சோவா கோக் சுயியின் பிராண சிகிச்சையில் (pranic healing ) சொல்லித்தரப்படும் twin heart meditation .
  • ரெய்கி
  • கராத்தே பள்ளிகளில் கற்றுத்தரப்படும் ஜேன் தியான முறை (கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டு காலம் கராத்தே பயின்றேன்).
  • இதைதவிர ஆசனங்கள், மூச்சு பயிற்சிகள் வேறு.
இவைகளில் அனைத்துமே, நம் ஆன்மீக வாழ்க்கைக்கு நல்லதல்ல.அவைகளை பற்றி விரைவில் கட்டுரைகளை எதிர்பார்க்கலாம். 

அசோக்குமார்ஜி, நீங்கபெரிய expert ஆக இருப்பீங்க போல் தெரியுது! எல்லா குமாரிகள் பற்றியும் எழுதுங்க. தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்கிறேன். நன்றி.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

இறைவன் தன்னை மானிட ரூபத்தில் (இயேசு) வெளிப்படுத்தினார்.
  • நாத்திகன் => தன் கண்ணை மூடிக்கொண்டு, கடவுள் இல்லை என்றான்.
  • யூதன் => தான் எதிர்பார்த்தபடி அரசனாக வராததால் மறுதலித்து, இன்னும் காத்துக்கொண்டிருக்கிறான்.
  • இஸ்லாமியன் => வெளிப்பட்ட தேவனையே "தூதன்" என்று ஒதுக்கிவிட்டு, எதையோ வணங்குகிறான்.
  • இந்து => வெளிப்பட்டது, வெளிப்படாதது, சிறியது, பெரியது, பயப்படுத்துவது என்று அனைத்தையும் வணங்குகிறான்.
  • கிறிஸ்துவன் => தேவன் தம்மை வெளிப்படுத்தினபடியே வணங்கிக்கொண்டிருக்கிறான்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

சகோதரி. கோல்டவின் வேண்டுகோள் மிக நியாயமானது. பலர் இந்த யோகம், தியானம் இன்று சென்று தங்கள் ஆன்மீக வாழ்க்கையை  கெடுத்து கொள்கிறார்கள். என் கிறிஸ்துவ வாழ்க்கைக்கு முன். என் ஆன்மீக தேடுதலின் நிமித்தம், நான் பல யோகங்கள், தியான முறைகள் கற்றதுண்டு. ஒரு பத்து வருடங்களுக்கு மேல், இந்த யோகங்களை கற்றறிய அலைந்து திரிந்தேன். அவை:
  • ராஜயோகம் (பிரம்ம குமாரிகள் எனப்படும் குழுவினரால் கற்றுதரப்படுவது)
  • மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானம்
  • வேதாத்திரி மகரிஷியின் குண்டலினி யோகம்
  • மாஸ்டர் சோவா கோக் சுயியின் பிராண சிகிச்சையில் (pranic healing ) சொல்லித்தரப்படும் twin heart meditation .
  • ரெய்கி
  • கராத்தே பள்ளிகளில் கற்றுத்தரப்படும் ஜேன் தியான முறை (கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டு காலம் கராத்தே பயின்றேன்).
  • இதைதவிர ஆசனங்கள், மூச்சு பயிற்சிகள் வேறு.
இவைகளில் அனைத்துமே, நம் ஆன்மீக வாழ்க்கைக்கு நல்லதல்ல. அவைகளை பற்றி விரைவில் கட்டுரைகளை எதிர்பார்க்கலாம். 


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

ராமாயணத்தையும், ராமனையும் குறித்து நான் எழுதிய கட்டுரையை "ராமாயணம்" என்ற தலைப்பில் பாருங்கள். தேவையில்லாத hype கொடுக்கப்பட்ட ராமன் என்ற கதாபாத்திரத்தை உண்மையின் வெளிச்சத்தில் பாருங்கள்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

//பல தார மணங்கள் - நம்ம சாலமோன் ராஜாவை யார் ஜெயிக்க முடியும் இதில்? ஆபிரகாம், தாவீதும் அப்படித்தான்.//

சகோ.கோல்டா அவர்களே,
வேதத்தில் பலதார மணத்தை எப்போதும் பரிந்துரைத்ததில்லை. அதனால் வரும் தொல்லைகளையே சொல்லியுள்ளது. எந்த ஒரு தேவமனுஷனாயிருந்தாலும் (ஆபிரஹாம், தாவீது, சாலமன்) பலதார மணத்தால் கஷ்ட்டமே அனுபவித்தனர்.
ஆனால், இந்துத்துவத்தில் சொல்லப்படவில்லை. நம் நண்பர் EBI குறிப்பிட்டது போல், அவர்கள் தெய்வங்களே அதை செய்து அதை பெருமையாக்கினர்.
அசோக்


__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

eloi4u wrote:

golda wrote:

யோகா, தியானம் போன்றவற்றின் ஆபத்து குறித்தும் யாராவது எழுதலாம். பல கிறிஸ்தவர்கள் கூட யோகா செய்கிறார்கள்.


சில ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய டாக்டர் அண்ணா எழுதிய யோகாவைக் குறித்த கட்டுரை, அப்போது பெறும் வரவேற்பையும், அதே சமயம் எதிர்த்தரப்பிலிருந்து கடுமையான தாக்குதலையும் சந்தித்தது அந்த கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்

 





மிக தைரியமாக உண்மையை உள்ளபடி நன்றாக எழுதியிருக்கிறார். கட்டுரை காட்டிய உஙகளுக்கு நன்றி! கட்டுரை எழுதிய அவ்ருக்கு என் பாராட்டுக்கள்!

__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

golda wrote:

யோகா, தியானம் போன்றவற்றின் ஆபத்து குறித்தும் யாராவது எழுதலாம். பல கிறிஸ்தவர்கள் கூட யோகா செய்கிறார்கள்.


சில ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய டாக்டர் அண்ணா எழுதிய யோகாவைக் குறித்த கட்டுரை, அப்போது பெறும் வரவேற்பையும், அதே சமயம் எதிர்த்தரப்பிலிருந்து கடுமையான தாக்குதலையும் சந்தித்தது அந்த கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்

 



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
Permalink  
 

தியானம் என்பது நமது மனதிற்குள் ஒரு அமைதியை ஆரம்பத்தில் கொடுத்துவிட்டு, பின்பு அந்த தியானம் ஆழ்நிலை கொண்டுசென்று ஒரு வெற்றிடத்தை உருவாக்கும் ,
ஒரு இருள் நிறைந்த வெற்றிடமாகவே தோன்றும் , எல்லாவற்றையும் வெறுக்க வைத்துவிட்டு, போதையான உணர்வை கொடுக்கும் இதை தன ஆழ்நிலை தியானமையம் சொல்லி கொடுக்கிறது

அனுபவ உண்மை


__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Brother Rajkumar:

//இன்று இந்து மதம் பிரதானமாக நம்புவது யோகா தியானம் ஆகியவைகள் மூலம் எப்படியாவது மன அமைதி தேடுவது என்ற ஒற்றை வரியில் அடக்கி விடக்கூடியதாக மாறிவிட்டது.


இந்த யோகாவும் தியானமும் இன்று மனதை அமைதிப் படுத்தி எப்படி இன்னும் அதிகமாக டென்ஷன் இல்லாமல் பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்திலேயே கற்கப்படுகிறது அல்லது கற்பிக்கப்படுகிறது, //


போன வாரம் மதுரையில் நடந்த ஈஷா யோகா தியான வகுப்பில் கலந்து கொண்டவர்கள் 10,040 பேராம்.

யோகா, தியானம் போன்றவற்றின் ஆபத்து குறித்தும் யாராவது எழுதலாம். பல கிறிஸ்தவர்கள் கூட யோகா செய்கிறார்கள்.

__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

இந்து மதம் என்பது பல்வேறு இனக்குழுக்களின் பழங்குடி புராண கதைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ஒட்ட வைத்து உருவாக்கப்பட்டுள்ளதால் அனேக குழப்பங்கள் காணப்படுகின்றன.

பொதுவான கண்ணோட்டத்தில் பார்ப்போமானால் இந்து மதமானது பழைய உடன்படிக்கை கால கோட்பாடுகளை ஆதாரமாகக் கொண்டது என்று அறியலாம் உதாரணமாக

ஆசாரிய முறைமையின் படியான கற்ப கிரக பிரவேசம்(பிராமனர்கள் மட்டும் இங்கே லேவியர்கள் மட்டும்),

இரண்டாவது பூஜையின் போது மணி அடிப்பது, பழைய உடன் படிக்கை காலத்தில் மகா பரிசுத்த ஸ்தலத்தில் திரைக்கு மறுபக்கம் செல்லும் ஆசாரியன் உயிரோடு இருப்பதற்கு அடையாளமாக இந்த மனி அடிக்கப்படுமாம், அந்த மனிச் சத்தம் கேட்பது நின்று போனால் அவனுடைய இருப்பில் கட்டியிருக்கும் கயிரை (இன்றைய சபை ஆயர்கள் இடுப்பில் இருப்பது போல ஆனால் நீளமாக) பிடித்து இழுப்பார்களாம்,

அடுத்தது பலி செலுத்துதல், இன்றும் அனேக கோவில் திருவிழாக்களில் மிருகங்கள் பலியாகச் செலுத்தப்படுகிறது, அதில் இரத்தம் தெளித்தல், குடித்தல், என்று இரத்தத்திற்கு பிரதான இடம் (அதற்கு பின்னால் விருந்துண்டு குடித்து வெரிப்பது வேறு) உண்டு.

அடுத்ததாக இந்து மதத்தில் ஆரிய திராவிட வித்தியாசங்கள் உண்டு ஆரிய முறைமையானது முழுக்க முழுக்க பழைய உடன்படிக்கை அடிப்படையிலேயே கட்டப்பட்டுள்ளது

திராவிட முறையானது இனக்குழு தலைவர்களையும் இயற்கையையும் அடிப்படையாகக் கொண்டது, உதாரணமாக முருகன், இவன் ஒரு குறவர் இனத் தலைவனாக மதிக்கப்படுகிறான், இவன் திருமனம் செய்தவர்களுல் ஒருத்தி குறத்தி, மேலும் மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்தில் தலைவனாகவும் அறியப்படுகிறான். அப்பகுதியின் பூர்வ குடிகள் குறவர்கள்.

ஆகவே தான் மலை கண்ட பக்கமெல்லாம் முருகன் கோவில்கள் உள்ளன,


அதே போல மாரியம்மன் கோவில் இன்று கோடை காலத்தில் பார்த்தால் எல்லா மாரியம்மன் கோவில்களும் சாட்டப்படுகின்றன, காரணம் மாரி என்றால் மழை என்று பொருள், அந்த மழையை ஒரு பெண்ணாக உருவகம் செய்து அந்த பெண்ணை மகிழ்விக்க அவளுக்கு திருமணம் செய்து வைத்து (கணவனால வருவது பாலை மர கம்பம்), அவளை மகிழ்வித்து இந்த பூமிக்கு அழைத்து கோடையின் உக்கிரத்தை தணிக்க மக்கள் எடுக்கும் முயற்சிகளை நாம் இன்றும் பார்க்கலாம்.


ஆனால் ஆரிய முறை இந்து கொள்கைகளின் படி வருண பகவான் தான் மழை தரும் கடவுள் என்று சொல்லப்படுகிறது.


இன்றைய இந்து மதம் சொர்க்கம் நரகம் ஆகியவைகளை மறந்து விட்டது, அல்லது நிரூபிக்க முடியாததால் மறைக்கப்பட்டு விட்டது, இன்று இந்து மதம் பிரதானமாக நம்புவது யோகா தியானம் ஆகியவைகள் மூலம் எப்படியாவது மன அமைதி தேடுவது என்ற ஒற்றை வரியில் அடக்கி விடக்கூடியதாக மாறிவிட்டது.


இந்த யோகாவும் தியானமும் இன்று மனதை அமைதிப் படுத்தி எப்படி இன்னும் அதிகமாக டென்ஷன் இல்லாமல் பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்திலேயே கற்கப்படுகிறது அல்லது கற்பிக்கப்படுகிறது,

ஆனால் உலகம் தரக்கூடாத சமாதாணம் ஒன்று உள்ளது அது ஒரு குழந்தை தாயின் மார்பில் படுத்து உறங்கும் நிம்மதியான நிலை இதைத்தான் நம்முடைய இரட்சகர் வைத்து விட்டுப் போயிருக்கிறார்.

இதுவும் ஒரு மதம் என்ற அடிப்படையில் மேலோட்டமாக (பெயர் கிறிஸ்தவர்கள் உட்பட) பார்ப்பதால் அந்த சமாதாணத்தை ருசிக்க முடியாமையாலும் தவறான பிரச்சாரத்தாலும் ( சமாதாணத்தை அனுபவிக்க கொடுக்க முயலாததைக் குறித்து சொல்கிறேன்),

நிச்சயமாக ஒவ்வொரு ஆத்துமாவும் வாஞ்சிப்பது கிறிஸ்துவின் அன்பையும் சமாதாணத்தையுமே, ஆனால் தெரிந்து கொள்ளப்பட்ட சிலர் மாத்திரமே அதை கண்டுபிடிக்க கண்கள் திறக்கப்பட்டிருப்பதும் உண்மையே...............


__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

ebi wrote:

//பல தார மணங்கள் - நம்ம சாலமோன் ராஜாவை யார் ஜெயிக்க முடியும் இதில்? ஆபிரகாம், தாவீதும் அப்படித்தான்//

என்ன கோல்டா இப்படி சொல்லிட்டீங்க!! இங்கு சகோ.அசோக் அவர்கள் கடவுள் என்று சொல்லப்படுகிறவர்களின் நிலையை அல்லவா சொல்லியிருக்கிறார். சாலமோன், தாவீது போன்றோர்கள் மனிதர்களல்லவா?


அது அப்படியா? சரியாக கவனிக்க வில்லை. மன்னிக்கவும். :)

கிருஷ்ணன், கோபியர்கதைக்குசிலர் ஆவிக்குரியவிளக்கம்எல்லாம் கொடுக்கிறார்கள்!

மதுரை பாண்டி கோயில் சாமி ரொம்ப துடியான் சாமி என்று ஒருவர் சொன்னதற்கு, படைத்தது ஒரே கடவுள் என்றால், ஏன் அவர் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார் என்று கேட்டேன். பாவம் கொஞ்சம் முழிச்சாங்க.

கொஞசம் யோசித்தார்கள் என்றால் போதும். வெளியே வந்து விடுவார்கள். கொஞ்சம் படித்தவர்கள் வேறு மாதிரி பாதையில், யோகா, மெடிடேஷன் என்று போகிறார்கள். எத்தனை எத்தனை வஞ்சக வலைகளை சாத்தான் விரித்து வைத்திருக்கிறான்.

இரட்சிக்கப்பட்டிருப்பது பெரிய பாக்கியம் அல்லவா!


 





__________________
ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

//பல தார மணங்கள் - நம்ம சாலமோன் ராஜாவை யார் ஜெயிக்க முடியும் இதில்? ஆபிரகாம், தாவீதும் அப்படித்தான்//
என்ன கோல்டா இப்படி சொல்லிட்டீங்க!! இங்கு சகோ.அசோக் அவர்கள் கடவுள் என்று சொல்லப்படுகிறவர்களின் நிலையை அல்லவா சொல்லியிருக்கிறார். சாலமோன், தாவீது போன்றோர்கள் மனிதர்களல்லவா?


__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

ஆயிரம் முறை போய் சொல்லி, என்பதுதான் ஆயிரம் பொய் சொல்லி யாகி விட்டதாம்!

பல தார மணங்கள் - நம்ம சாலமோன் ராஜாவை யார் ஜெயிக்க முடியும் இதில்? ஆபிரகாம், தாவீதும் அப்படித்தான்.

நான் நினைத்ததுண்டு - பத்து கட்டளைகளில் ஒரு கட்டளையாக - You Shall Not Have More Than One Wife - என்று ஆண்டவர் சொல்லியிருந்திருக்கலாம் என்று.

நம் வேதம் போல் நம் இந்து சகோதர சகோதரிகளுக்கு ஒரு புத்தகம் இல்லை. அவர்கள் பல வேதங்கள், புராணங்கள், குருமார்கள் சொல்வதை கேட்டு ஒரு வழியாகி விடுகிறார்கள்.

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

திருமணங்கள்

இந்துக்களிடத்தில் திருமணமும் ஒரு சிக்கலான விஷயம்.ஒருவன் எத்தனை 
பெண்களை மணக்கலாம், ஒருபெண் எத்தனை ஆண்களை மணக்கலாம்,
என்று வரைமுரைஎல்லாம் இங்கில்லை. எந்த வயதில் மணக்கலாம்
என்றும் விளக்கமில்லை. ஓரினசேர்க்கையும் சில புராணங்கள் மூலமாக
 ஊக்குவிக்கப்படுகிறது. இதனால் ஒரு சராசரி இந்து தன் திருமனவாழ்விற்கு,
இந்துத்துவத்தில் எந்த ஒரு அறிவுரையோ விளக்கமோ பெற முடிவதில்லை.
மாறாக தாங்கள் திருமணத்தில் செய்யும் தவறுகளை நியாயபடுத்தவே,
இந்துத்துவத்தில் நிறைய வழிமுறைகள் உள்ளது.

 

"ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்"

இது பொதுவாக இந்துக்கள் மத்தியில் உள்ள ஒரு வழக்குச்சொல். இதை நம்
தமிழ் திரையுலகம் முதல்கொண்டு அனைவரும் வழிமொழிகிறார்கள். இப்படி
பொய் சொல்லலாம் என்று கூறுபவர்கள், தனக்கு வேலை இல்லாததை
மறைத்து ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்தால் ஒத்துக்கொள்வார்களா?
நான் கூறிய இந்த உவமை மிக சாதாரணமானது, இதைவிட பல பெரிய பொய்களை
 சொல்லி கல்யாணம் பண்ணி, பின்னர் தாங்கள் செய்ததை நியாயப்படுத்துபவர்கள்
உண்டு. இதற்க்கு வசதியாகவே இவர்கள் தெய்வங்களும், பொய்களை கூறி காதல்
கல்யாணம் செய்துள்ளனர்.

 

ஒருவனுக்கு ஒருத்தியா?

ஒருவனுக்கு ஒருத்தி என்று ராமாயணம் கூறுவதாக கதையளப்பார்கள். ஆனால்
ராமாயணம் "ஒருவனுகொருத்தி" என்பதை கட்டாயப்படுத்தி அழுத்தம் திருத்தமாக
 கூறியதா? அதே ராமன், கிருஷ்ணாவதாரத்தில் பலதார மணத்தையும்,
பத்மபுராணத்தில் "பலாத்கார மணத்தையும்" (அடுத்தவன் மனைவியாகிய
துளசியை கற்பழித்து மணந்த கதை) நியாய படுத்தியுள்ளார். இதனால்,
ஒருவனுக்கொருத்தி என்ற கருத்து "இப்படியும் வாழலாம்" என்று சொல்கிறதே
தவிர, "இப்படித்தான் வாழனும்" என்று சொல்வதாக இல்லை.

முருகனுடைய கதையும், சிவனுடைய கதையும் கூட பலதார மணங்களை,
ஆதரிப்பதாகவே உள்ளனர். எந்த பெண்ணாவது,  தன் இஷ்ட்டதேய்வமாகிய
முருகன் போலவோ, சிவன்  போலவோ, கிருஷ்ணன் போலவோ கணவன்
கிடைக்கவேண்டி நினைப்பாளோ?


ஒருத்திக்கு ஒருவனா?

மகாபாரதம், அதன் கதாநாயகியாகிய பாஞ்சாலி மூலமாக, ஒரு பெண் பலரை
ஒரே நேரத்தில் திருமணம் செய்து "கற்புடன்" வாழலாம் என்று கூறுகிறது.
இங்கு தமிழகத்தில் இதை நாம் அதிகம் வெளிப்படையாக காணமுடியாவிட்டாலும்,
இந்தியாவில் வடகிழக்கு பகுதிகளில், சகோதரர்கள் அனைவரும் ஒரே பெண்ணை
கல்யாணம் செய்து "பாஞ்சாலி வழியில்" "கற்புடன்" வாழ்கிறார்கள். ஒருவன்
இரண்டு எஜமானனுக்கே வேலை செய்ய முடியாது என்று வேதம் கூறுகிறது,
ஆனால் ஒருபெண் பலரை கணவர்களாக எப்படித்தான் சமாளிக்கிறார்களோ?

 

ஓரினசேர்க்கை திருமணங்கள் சரியா?

கிருஷ்ணன் அர்ஜுனன் மகனாகிய அரவானை மணந்தும் (மகாபாரதம்), ஒருமுறை
மோகினி வேடத்தில் இருக்கும்போது சிவனால் புணரப்பட்டும் (ஐயப்பன் பிறந்த
கதை), ஓரினசேர்க்கை தவறில்லை என்று சொல்கிறார்கள். அது தவறா இல்லையா
என்று அவர்கள் மனசாட்சியே பதில் சொல்லும்.

 


முடிவுரை
இவ்வளவு குளறுபடிகள் இருந்தும் இந்துக்கள் அவர்கள் பாதையை உண்மை என்று

நம்பி பின்பற்றுகிறார்களா? அல்லது வேறு நல்ல பாதை தெரியாததால்

சகித்துகொண்டிருக்கிரார்களா? அல்லது தங்கள் தவறுகளை நியாயப்படுத்துவதால்

விரும்பி  ஏற்றுகொள்கிரார்களா? எது எப்படியோ, தவறான பாதையில் சிக்கி

இருக்கும் அவர்களுக்காய் பிரார்த்தனை செய்து, உண்மை பாதைக்கு அவர்களை

கொண்டு வந்து சேர்ப்பது நமது கடமையே.


 


-- Edited by Ashokkumar on Thursday 17th of March 2011 10:05:08 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

சகோ. எபிக்கும், சகோ.கோல்வினுக்கும், சகோ.சில்சாமுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி, உங்களின் ஊக்கமுள்ள வார்த்தைகள் என்னை மேலும் எழுதச்செய்கிறது.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

இந்து சமயத்தைப் பற்றிய நல்ல குறிப்புகள் தந்துள்ளீர்கள். இன்னும் சற்று ஆழமாக செல்லாம். பொதுவாக இந்து சமயத்தினருக்கே அவர்களின் மதம் குறித்த விபரங்கள் தெரிவதில்லை. முறையான வேதநூல்கள் இல்லாதிருப்பதும். முரண்பாடுகள் கொண்டிருப்பதும் எது சரியான விபரம், எது தவறான விடயம் என்று தீர்மானிப்பதில் கூட இந்து சமயத்தவரிடையே கருத்துவேறுபாடுகள் இருப்பதை அவதானிக்கலாம்.

தொடரட்டும் உங்கள் பணி.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

சகோ.அசோக் அழகான கேள்விகளோடு அவர்களின் குழறுபடிகளை சொல்லியிருக்கிறீர்கள். இது அனேக இந்து மக்கள் உண்மையை அறிய ஒரு வாய்ப்பாக இருக்கும். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard