சரியாக சொன்னீர்கள் சகோ.சில்சாம் ஏதாவது ஒரு கட்டுரையை எடுத்துக்கொண்டு விவாதத்திற்கு வரலாம். இவர்களின் Website எனக்கு பரிட்சயமானதுதான். இவர்களின் நோக்கமெல்லாம் இங்கு பதியப்படும் பதிவுகளை குழப்பி பார்வையிலிருந்து நீங்கச் செய்ய வேண்டும் என்பதான்.
நேர்மையான சிந்தனை உடையவர்கள் எனின் இதுபற்றி சிந்தித்திருப்பார்கள்.
adam wrote:சரிங்க அண்ணா கோல்டாவின் கேள்விக்கு பதில் சொன்னேன் அவ்ளோதான் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
-- ஆனால் எல்லா பதிவுகளையும் தங்கள் ஒரே திரி "ல் கொண்டு செல்வதின் நோக்கம் என்ன ???????????????????
ஆதாம் அவர்களே நீங்கள் "குரு"வைப் போல பதில் சொல்லவில்லை, மாறாக அர்த்தமற்ற கேள்விகளையே அடுக்கி வருகிறீர்கள்;முதலில் நீங்கள் யார் என்பதையும் எந்த விசுவாசத்தின்படி ஆண்டவரை ஏற்றுக்கொண்டீர்கள் என்பதையும் அறிவிக்கவேண்டுகிறேன்.
எல்லா பதிவுகளையும் அல்ல, பொதுவான கிறித்தவ விசுவாசத்துக்கெதிரான பதிவுகளை மட்டுமே ஒருங்கிணைக்க விரும்புகிறோம்; காரணம் அவை ஒன்றிணைக்கப்படவேண்டும் என்பதே..!
இந்த திரிக்கு பொருத்தமானதொரு தகவலை நண்பர்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்;யௌவன ஜனம் தளத்தில் பதிக்கப்படும் மாற்று நம்பிக்கையாளர்களின் படைப்புகள் மறைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது;ஆனால் நமது நோக்கம் அதுவல்ல,ஒரே இரவில் 20-க்கும் அதிகமான கட்டுரைகள் மாற்று நம்பிக்கையாளர் ஒருவரால் காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது;அவையனைத்தும் எமது பொதுவான கிறித்தவ விசுவாசத்துக்கெதிரானதாகும்;அதனைக் கணிக்கும் ஆற்றல் எமக்கு உண்டு;அதன்படி அந்த கட்டுரைகளை நீக்காமலும் சவாலை எதிர்கொள்ளும் வண்ணமாகவும் அவற்றை வாசித்தறியத் தேவைப்படும் அவகாசத்தைக் கருத்தில் கொண்டும் அனைவரும் வாசிக்க இயலாதவண்ணம் மூடிவைத்தோம்;இதனையே நாங்கள் செய்யும் சூழ்ச்சியாக (மேசியாவின்) எதிரிகள் வர்ணித்தனர்;ஆனால் தளத்தில் நண்பர்கள் அந்த கட்டுரைகளை வாசித்து பதிலளிக்கத் துவங்கியதும் அவை பொதுவான விவாதப்பகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டது;இதனால் எங்கள் நேர்மையும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் துணிச்சலும் நிரூபிக்கப்பட்டுள்ளது;ஆனால் (மேசியாவின்) எதிரிகள் சற்றும் பொறுப்பில்லாமல் நம்மைத் தடுமாறச் செய்யும் ஒரே நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்;அவர்களிடமிருக்கும் விஷயம் நல்லதாக இருந்தால் அவசரப்படவேண்டிய அவசியமே இல்லை;முதலில் இங்கே உறுப்பினராகி நண்பர்களுடைய படைப்புகளை வாசித்து அதற்கு பின்னூட்டமிட்டு நட்பை வளர்த்து பிறகு தத்தமது படைப்புகளை ஒவ்வொன்றாக வெளியிடலாம்;மாறாக ஏற்கனவே அவர்களுக்கு சொந்தமான வெப்சைட்டில் பதிக்கப்பட்ட கட்டுரைகளை இங்கே மறுபதிப்பு செய்வது விசுவாசிகளைக் குழப்பும் முயற்சியாகும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
யௌவன ஜனம் தளத்தின் சார்பாக மேற்காணும் வேண்டுகொள் விடப்பட்டது; அதனைப் பொருட்படுத்தாமல் நண்பர் ஆதாம் இங்கே தனது கேள்விகளைத் தொடருவது சரியல்ல; நீங்கள் கேட்கவிரும்பும் கேள்விகள் அறிவைத் தூண்டுவதாகவும் அறிவைத் தேடுவதாகவும் இருக்கட்டும்; அவற்றை நீங்கள் கேள்வி-பதில் பகுதியிலோ அல்லது விவாதங்கள் பகுதியிலோ பதிக்கலாம்;பொதுவான கிறித்தவ விசுவாசத்துக்கெதிரான கேள்விகளை Forum: யௌவன ஜனத்தின் மீது அதிரடி தாக்குதல் எனும் தளத்தில் பதிக்கவும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அப்படி இருக்க, நமது பெரிய உழியக்காரர்கள் அடிக்கடி எதோ ,மாமியார் வீட்டுக்கு போய்ட்டு வரா போல பரலோகத்துக்கு போறாங்களே அவங்க எங்க தான் போறாங்க யார பாத்து பேசறாங்க?????????????????????
@எபி நான் கிறிஸ்தவத்திற்கு புதியவன் , பல புத்தகங்களை படித்துள்ளேன் ரிக் , யசுர் , சாம, அதர்வண வேதங்களை, படித்துள்ளேன் , மேலும் , நமது வேதத்தை 2 வருடம் ஆராய்ச்சி செய்து அதில் பல வேத புரட்டர்கள் தங்கள் தங்கள் சுய லாபத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள் என்ற உண்மையை புரிந்து கொண்டேன்...
நான் பல புத்தகங்களை படித்தாலும் பைபிளின் உண்மை எங்கும் இல்லை என்பதை கொஞ்சம் கற்றுகொண்டேன், யென்னும் அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்
உங்களை நோகச் செய்ய வேண்டும் என்பது என் நோக்கமல்ல. உங்கள் பதிவுகளை வாசித்த பின் நீங்கள் பெரேயன்ஸ் கூட்டத்தாரின் நம்பிக்கையை கொண்டிருப்பது போல் தோன்றியதால்,அந்த எண்ணத்தின் அடிப்படையிலே பதித்தேன். i am really sorry Adam if my post hurts u in anyway and that is not my intention. சில்சாம்,கொல்வின்,ஜான் போன்ற சகோதரர்கள் அளவு எனக்கு தேர்ச்சியான அறிவு கிடையாது. இந்த தளத்தில் உங்களுக்கான பதிலை தள நண்பர்கள் மூலம் நிச்சயம் பெற்றுக்கொள்வீர்கள். மேலும் தங்கள் விசுவாசம் பற்றி சொல்லுங்கள். தாங்கள் கிறிஸ்துவின் தெய்வத் தன்மையை விசுவாசிக்கிறீர்களா? மரணம்,மறுரூபமாகுதல் பற்றி தாங்கள் ஏதேனும் கருத்தை கொண்டிருந்தால் அல்லது நம்பினால் அதனையும் பதிக்கலாமே இங்கே
திணறும் கொல்வின் தத்தளிக்கும் தளம் http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&topicID=41720544&p=3
சகோ. குரு. தங்களின் பதிவுக்கு எனது நன்றிகள். நான் எழுதியதை நன்றாக வாசித்துப் பாருங்கள். எனக்கு பதில் தெரியாது என்று எங்கும் கூறவில்லை. வேறுசில பணிகளில் இருப்பதால் அதனை விட்டு விட்டு இவரின் கேள்விகளை தற்போதைக்கு கவனிக்க முடியாது. இதைதான் அவருக்கு சொல்லியுள்ளேன்.
அத்துடன் மாற்றுக் கருத்துக்களுக்கு வழியும் காட்ட வேண்டும். அதில் தவறு இருப்பதாக நினைக்கவில்லை. இதை நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டாலும் எனக்கு பிரச்சினையில்லை. ஒரு கேள்விக்கு மாற்றுக்கருத்து, சாதக, பாதக கருத்துகள் இருப்பின் மிக நல்லது. அப்போது விரைந்து ஒரு முடிவிற்கு வர முடியும்.
நான் விலகி ஓடமாட்டேன் என உறுதி கூறுகிறேன். நீங்கள் பதில் அளிக்கும் பட்சத்தில் எனது கருத்தை தெரிவிக்க வசதியாக இருக்கும்.
அருமை சகோதரர்களே,எனது கணிணி பழுதுபட்டிருக்கிற காரணத்தினால் எனது வழக்கமான பங்களிப்பை இணையதளத்தில் வழங்க இயலவில்லை;எனவே நண்பர்கள் சர்ச்சைக்குரிய காரியங்களில் உடனடியாக எனது பதிலை எதிர்பார்க்காமல் பொறுத்திருக்க வேண்டுகிறேன்;மாற்று நம்பிக்கையாளர்களை இங்கே வரவைத்து உடனுக்குடன் அவர்களுக்கு பதிலளிக்கவேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பமாகும்;அதுபோல அவர்களும் வந்திருக்கிறார்கள்; அவர்களை எதிர்கொள்வதில் தேர்ச்சிபெற்ற நமக்கு அருமையான இரு சகோதரர்களை கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கிறார்;அவர்கள் வேறு யாருமில்லை, கோல்வின் மற்றும் ஜாண் ஆகிய இருவருமே அந்த மாணிக்கங்கள்; மாணிக்கங்கள் என்பது புகழ்ச்சிக்குரிய வார்த்தையானாலும் அவ்வாறு அடியேன் குறிப்பிடக் காரணம் அது மிகவும் சோதிக்கப்படும்;அவற்றை மிகவும் எச்சரிக்கையாக வைத்துக்கொண்டால் அதினால் அதிக பலனுண்டு;அதுபோலவே ஆரோக்கிய உபதேசத்தில் தேர்ச்சிபெற்றவர்களாகவும் விசுவாசத்தில் வைராக்கியமுள்ளவர்களாகவும் விளங்கும் இவர்கள் மூலம் நாம் இன்னும் நிறைய சத்தியங்களை அறியமுடியும்;தேங்கிவிடாமல் ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரே சுத்தமானதல்லவா? அதுபோலவே எந்தவொரு குறிப்பிட்ட போதனைக்குள்ளும் சிக்கிவிடாமல் சமநிலை காப்போரே இன்றைய கிறித்தவத்தின் சுழலும் சக்கரங்கள் ஆவர்;அந்த வகையில் நம்முடைய யௌவன ஜனம் தளத்துக்கு அண்மையில் கிடைத்துள்ள நல்ல நண்பர்களுக்காகவும் அதிகமான பங்களிப்பை வழங்கிவரும் கோல்வின்,ஜாண் மற்றும் அசோக் ஆகியோருக்காக கர்த்தருக்குள் மகிழ்கிறேன்; மற்றும் நமக்கு அருமையான நண்பர்கள் ஜோ,எபி,ஜீஸஸ்மைலவ்,கோல்டா ஆகியோர் இன்னும் உற்சாகமாக செயல்பட வாழ்த்துகிறேன்.
மாற்று நம்பிக்கையாளர்கள் தங்களுக்குரிய தனி துணை தளத்தில் மட்டும் சர்ச்சைக்குரிய கட்டுரைகளையும் கேள்விகளையும் பதிக்க பணிவுடன் வேண்டுகிறேன்.
அப்படியொன்றுமில்லை சகோதரரே. இது விரிவாக எழுதப்பட வேண்டிய கட்டுரை. வேறு சில கட்டுரைகளை தட்டச்சு செய்து கொண்டிருப்பதால் உடன் பதில் எழுதமுடியாமைக்கு வருந்துகிறேன்.
நான் குறிப்பிட்ட தளங்களுக்கு சென்று கேட்டாலும் பதில் கிடைக்கும். பல கருத்துக்களை அறிந்து கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து.
இங்கு நான் தளநிர்வாகி அல்ல. உங்களைப் போன்ற சாதாண பயனர்தான். உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமுமில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் கேள்வி என்ன என்பதை தெளிவாக சொல்லுங்கள். புரி்ந்து கொள்வதற்கு சிரமாக இருக்கிறது. விதாண்டாவாதம் வேண்டாமே. இதோ உங்களுக்காகவே அந்த தளங்கள். அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். மூலபாஷையின் படி பதில்களைப் பெற்றுக் கொள்ளலாம்
அடுத்தவர் சகோ. அன்பு மூலமொழியில் மிகுந்த பாண்டித்தியம் மிக்கவர். http://eternal-life.activeboard.com/
ஒருமுறை இவர்களிடமும் முயற்சிக்கலாமே. தவறேதும் இல்லையே! அதற்காக எங்களுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை என்பதில்லை. இவர்களிடம் நீங்கள் கேட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம்
தங்கள் சொல்லும் தளங்கள் பற்றி எனக்கு தெரியாது , தங்களால் முடியவில்லை என்றால் சொல்லுங்கள் நான் வேறு யாரிடமாவது கற்றுக்கொள்கிறேன் என் ஆவல் என்னவென்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு தெரியும் ,
சில்சாம் அண்ணா!!
உங்களுக்கு கூடவா எனக்கு பதில் சொல்ல கஷ்டமாக இருக்கிறது ,
மேலும் எபி நண்பரே நான் கேட்கும் கேள்விகளுக்கு தங்கள் பதில் சொல்லும் விதம் தான் கொஞ்சம் மனவருத்தமாக இருக்கிறது,
(நான் கரைத்து குடித்தவன்) நன்றி தங்களின் சான்றுக்கு , அனால் நான் மனித மனங்களை தான் உணர்ந்துள்ளேன் , வேதத்தை உணர உங்களால் உதவ முடியாது என்று சொல்லி விடுங்கள்
நான் எந்த காரணம் கொண்டும் தங்களை தொந்தரவு செய்வதில்லை
இது உறுதி
இதற்கு பதில் தராமல் இருந்தால் மற்றவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும்
சந்தேகம் கேட்க வந்தவர் போலில்லை என்பதே எங்கள் சந்தேகம்.
கற்றுக்கொள்ளவா அல்லது கொடுக்கவா என்பது தங்களின் மனசாட்சிக்கே தெரியும்.கற்று கொள்ள என்றால் ஏற்கனவே உங்களைப் போல் உபதேசத்தில் உள்ளவர்களான சகாயம்,பெரியன்ஸ் போன்றவர்களின் தளங்கள் தான் உங்களுக்கென்று இருக்கிறதே?
//வேதத்தை பற்றி நான் அறிந்து கொள்ள ௬டதா?
மறை பொருளை உணர்த்த வேறு வழி இருக்குதா?//
தங்களின் பதிவு ஏற்கனவே வேதத்தையும் (மூலமொழியையும் சேர்த்துதான்) கரைத்து குடித்துவிட்டது போல் இருக்கிறதே.மறைபொருளை உணர்த்தும் அளவு அறிவை கொண்டுள்ளீர்கள்.பின்னர் ஏன் ஒன்றும் தெரியாத மாதிரி கேட்கிறீர்கள்.
//கேள்விஎனாலே ஞானம் பிறக்கும் என்று நான் படித்திருக்கிறேன்//
Faith comes from listening to this message of good news-the good news about Christ.இதைத் தான் சொல்கிறீர்களா?