Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சராசரி ‍ இந்தியன்‍ - ஒரு சுயவிமர்சனம்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: சராசரி ‍ இந்தியன்‍ - ஒரு சுயவிமர்சனம்
Permalink  
 


நல்லதொரு தலைப்பை எடுத்துக் கொண்டுள்ளீர்கள். விரைவில் பதில் அளிக்கிறேன்.

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

சுய விமர்சனம் பொதுவாக பலருக்கு பிடிக்காது, ஏனெனில் பலரும் மற்றவரை விமர்சனம் செய்தே பழக்கப்பட்டுள்ளோம். இந்தியருக்கு உலக அளவில் பெயரும் புகழும் உண்டு. தனிப்பட்ட முறையில் பல இந்தியர்கள் அன்னிய தேசங்களில் நற்பெயர் பெற்றுள்ளனர். தங்களது துறை சார்ந்த அல்லது சமூக பொறுப்புகளில் உயர்ந்த பல இந்தியரை நாம் சம காலத்தில் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்தியாவில் உள்ள சராசரி இந்தியனின் நிலை என்ன என்பதை நோக்குகையில் சில கருகலான உண்மைகள் பளிச்சிடுகின்றன‌.
அண்மையில் என்னை கலங்க செய்த 2 நிகழ்ச்சிகள், அடப்பாவிகளா, இப்படியுமா இருப்பார்கள் என நினைக்கதோன்றியது
நிகழ்ச்சி 1) இன்றைய செய்தித்தாளில் ஒரு செய்தி, நாக்பூரில் ஒரு பெண்ணை 4 பேர் கத்தியால் குத்தி படுகாயப்படுத்திவிட்டு பறந்தனர். ரத்த வெள்ளத்தில் குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்த அந்த பெண், சரியான நேரத்தில் மருத்துவமனை கொண்டு செல்லப்படாததால் உயிரிழந்தாள். இது போன்ற நிகழ்ச்சிகளை நமது பெரு நகரங்களில் அடிக்கடி பார்க்கலாம். காயப்பட்டு கிடப்போர் பலர் கவனிக்கப்படாமலே கிடப்பர். காரணம் நமக்கேன் வம்பு என ஒதுங்கி செல்லும் சக மனிதர்கள்
நிகழ்ச்சி 2) இந்திய கடற்பகுதியில் சுனாமி எச்சரிக்கை செய்யும் அளவு மானிகள் மீனவர்களால் உடைத்து திருடப்பட்டதாம். ஆயிரக்கணக்கில் காவு கொடுத்துவிட்டு, மறுபடியும் அப்படி ஒரு துயரம் நடக்குமுன் தப்பிக்க அரசு செலவு செய்து வைத்துள்ள கருவிகளை திருடுகின்றனர், இத்தனைக்கும் கடற்பகுதியில் சுனாமி வந்தால் முதலில் பாதிக்கப்பட போவது இதே மீனவர்களே.

சராசரி இந்தியனின் சமூக அக்கறையை மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகள் கேள்விக்குறியாக்குகிறது, இவ்விரண்டு நிகழ்வுகளும் ஒரு சாம்பிள் தான், இன்னும் பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த தொடுப்பின் முதல் வரிகளை இதனால் தான் சொன்னேன், நாம் நம்மை சுயவிமர்சனம் செய்துகொள்ளும் நிலையில் தான் இருக்கிறோம், பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இந்த விமர்சனம் தேவையே என்பது எனது கருத்து, விமர்சனங்களின் முடிவில் நம்மை நாமே கூட மாற்றிக்கொள்ளலாம்.எத்தகைய பொறுப்பு ஒரு சராசரி இந்தியனுக்கு உள்ளது எவ்வாறு நமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை நாம் சீர்தூக்கி பார்க்கவேண்டும். நமது தளத்திற்கு வரும் வெளி நாடுகளில் வாழும் இந்திய சகோதரர்கள் அங்குள்ள மக்களின் சமூக அக்கறையை பற்றி இத்தொடுப்பில் எழுதலாம்.

நம்மை நாமே நிர்வகித்துக்கொள்ளும் முறைகள் (அஃதாங்க நம்ம அரசியல்வாதிகள்) சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய அக்கறை, பெண்களை நாம் நடத்தும் முறை (பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நகரம், இந்தியர்களின் தலையெழுத்தை தீன்மானிக்கும் டில்லி தானாம்) போன்ற பல காரியங்களில் நாம் வெட்கி தலைகுனியும் நிலையில் தான் இருக்கிறோம்.

இந்த லட்சணத்தில் எதற்கெடுத்தாலும் மேனாட்டு கலாச்சாரம், அதன் சீர்கேடு என புலம்பிக்கொண்டு, அதற்கு கிறிஸ்தவ மதம் காரணம் என சொல்லும் காவிக்கோமாளிகள். மேனாட்டு மக்களிடம் இருக்கும் சமூக அக்கறை சராசரி இந்தியனுக்கு இருக்கிறதா என யோசித்தாவது பார்த்திருப்பார்களா? இந்தியாவின் ஆன்ம பலன் என நாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் காரியங்கள் உண்மையில் பெருமைப்பட்டுக்கொள்ளும் நிலையில் இருக்கிறதா?

கிறிஸ்தவர்களான நமது பொறுப்புகள் என்ன என்பதை நண்பர்கள் பகிர்ந்துகொள்ளலாமே. உங்களது அனுபவங்களும் பயனுள்ளதாக இருக்கும்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard