13 மார்ச் 2011 (ஞாயிறு) வே.வ: தானியேல் 9:1-19 கர்த்தரின் வார்த்தைக்கு நாம் எப்படி செவி சாய்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்குத் தானியேல் சிறந்த விளக்கத்தைத் தருகிறார். எரேமியா தீர்க்கதரிசியின் வசனங்களை வாசித்து, அதற்கு இணங்கி ஊக்கமாகவும் தாழ்மையாகவும் செவி சாய்க்கிறான். இஸ்ரவேலர்கள் 70 ஆண்டுகள் சிறைபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள் என்பதை வாசித்தறிந்தவுடன் அவன் மிகவும் சஞ்சலமும் வேதனையும் அடைகிறான் (தானி. 9:2; காண்க: எரேமியா 25:11-12; 29:10. இரட்டிலும் சாம்பலிலும் உபவாசத்தோடு அமர்ந்து கொண்டு, இஸ்ரவேலர்கள் தேவனுக்கு விரோதமாக பாவஞ் செய்து அவருடைய கட்டளைகளுக்கு விலகிப் போனார்கள் என்று அறிக்கை செய்கிறான் (தானியேல் 9:3-10) . தேவ வார்த்தைகளைத் தங்களுக்கு எடுத்துக் கூறிய தீர்க்கதரிசிகளை இஸரவேலர்கள் அலட்சியப்படுத்தியுள்ளனர். எனவே, உடன்படிக்கையின் பிரகாரம் கர்த்தர் இஸ்ரவேலர்களைத் தண்டிக்கிறார். அவர்கள் பாபிலோனியர்களிடத்தில் அடிமைப்பட்டுப் போனார்கள் (தானி.9:11-14, லேவி.26:27-45; உபா.28:64-68) .
இப்போதோ, தானியேல், கிருபைக்காக இறைஞ்சுகிறேன்: இஸ்ரவேலர்களின் நீதியின் நிமித்தம் அல்லாமல் கர்த்தரின் நீதியின் நிமித்தமாக அந்த மன்றாட்டு அமைகிறது (9:7, 14, 16, 18), அதுவும் அவருடைய நியாயத் தீர்ப்பையும், சீராக்கத்தையும் சார்ந்தே அமைகிறது (9:16). எனவே, தானியேல் இஸ்ரவேலர்களோடு, தாழ்மையோடும் குற்றவுணர்வோடும் தங்கள் பாவங்கள் நிமித்தம் அவமானத்தால் போர்த்தப்பட்டதாக ஜெபிக்கிறான் (9:8). மனஸ்தாபத்திற்குப் பிறகு உறவு புதுப்பிக்கப்படும் என்பதை அவன் அறிந்திருக்கிறான் (1 ராஜாக்கள் 8:33-34, 46-51). எனவே, தேவன் நாடு துறந்த நிலையில் இஸ்ரவேலர்கள் அனுபவிக்கிற பாடுகளில் இருந்து மிக விரைவில் விடுதலை தர வேண்டும் என்று கர்த்தரிடம் மன்றாடுகிறான். இஸ்ரவேலர்கள் மீண்டும் எருசலேத்தில் குடியமர்ந்து, அதன் மூலம் அவருடைய நாமம் மகிமைப்பட வேண்டும் என்று அவன் ஜெபிக்கிறான். (9:17-19).
கிறிஸ்தவர்களாகிய நாமும் கூட, நம்முடைய பாவங்களுக்காக, தேவ சமூகத்தில் மனஸ்தாப்ப் பட்டால், ஆண்டவர் மனந்திரும்புதலைத் தருவார் (2கொரி.7:10) நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டால், நீதியும் இறக்கமும் நிறைந்த கர்த்தர் நம்மை மன்னிப்பார் (1யோவான் 1:9).
தியானிக்கும் தருணம்
தேவனிடம் அறிக்கை செய்து மன்னிப்பு கேட்க வேண்டிய பாவங்கள் ஏதாவது உன்னிடத்தில் உண்டா?
ஜெபங்கள்
பரலோகப் பிதாவே, நீர் நீதி நிறைந்த ஆண்டவராய் இருப்பதற்காக உம்மை த் துதிக்கிறோம். பாவங்கள் தண்டிக்கப்படாமல் விட்டுவிடுபவர் நீரல்லர். உம்முடைய நீதியின் நிமித்தமும் கிருபையின் நிமித்தமும் நீர் எங்களை மன்னித்து விட்டதற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். நாங்கள் உமக்கு விரோதமாகப் பாவஞ் செய்ததை அறிக்கையிடுகிறோம். அவற்றிற்காக மனத் தாழ்மையாய் மன்னிப்பை வேண்டுகிறோம். பாவங்கள் நிமித்தம் தண்டிக்கப்பட வேண்டிய நாங்கள், அவற்றிற்குத் தம் சிலுவை மரணம் மூலம் கிரயம் செலுத்திய இயேசுவுக்காக நன்றி செலுத்துகிறோம். அவருடைய நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அசீரியர்கள் யூதேயாவின் தேசத்தைத் தாக்கும் போது எசேக்கியா தேசத்தை ஆண்டு வந்தான். தேவன், ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் தாம் அசீரியர்கள் திரும்ப விரட்டுவார் என்று வாக்களித்துள்ளார். ஆனால், அசீரியர்களோ, கர்த்தராகிய ஆண்டவரை நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள். தேசங்கள் தத்தம் தேவர்களை நம்பியிருந்தாலும், அவற்றையெல்லாம் தோற்கடிக்கச் செய்த்தே இவர்களது இந்தத் துணிகரத்திற்குக் காரணம்.
அந்த எச்சரிக்கைக் கடித்ததை தேவாலயத்திற்கு எடுத்துச் சென்று, எசேக்கியா இஸ்ரவேலர்களின் தேவனாகிய யேகோவாகிய தேவனுக்கு முன்பாக விரித்துப் போடுகிறான் (19:14). இஸ்ரவேலர்களின் தேவனாகிய கர்த்தரின் மகத்துவத்தை அறிக்கை செய்கிறான். சகலத்தையும் படைத்தவராய் இருப்பதால், யாவற்றையும் ஆள்பவர் என்று யேகோவாவை அறிக்கையிடுகிறான். பிற தெய்வங்களைப் போன்று யேகோவாவும் அவர்களைக் காப்பாற்ற முடியாது என்று அசீரியர்கள் கேலி செய்ததை எசேக்கியாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை (19:16) பிற தேசத்தாரை அசீரியர்கள் தோற்கடிக்க முடிந்ததற்குக் காரணம், அவர்களின் தெய்வங்கள் வெறும் விக்கிரங்கள்தாம் (19:17-18). ஆனால், யேகோவாவோ, உண்மையான கடவுள். எனவே, அவர் ஆண்டவர் என்று தன் தேசத்தார் அறிந்து கொள்ளும் பொருட்டு, தேசத்தை எதிரிகளின் தாக்குதலில் இருந்து காத்தருள வேண்டுகிறான். (19:19). நாமும் எசேக்கியாவைப் போல் ஜெகிகிறோமா? நாம் ஒரு நிர்பந்தமான நிலைமைக்குத் தள்ளப்படும் போது, யேகோவாதான் உண்மையான தேவன் என்று ஜனங்களுக்கு அறியச் செய்வோமா! தேவன் உண்மையாகவே எசேக்கியாவின் ஜெபத்திற்கு செவிசாய்த்து, அவனுடைய ஜனங்களை அசீரியர்களிடம் இருந்து விடுவித்தார். அதே தேவன், இன்னொரு நிலைமையில், பாவத்தில் மூழ்கிப் போன தம் ஜனங்களை, எதிரிகள் மூலம் அழித்து, தண்டித்தார். அவர் சகலத்தையும் ஆளுபவராக இருப்பதால், தம் சொந்த ஜனம் உட்படா, யாராலும அவரைக் கையடக்கப் படுத்த முடியாது.
எசேக்கியாவைப் போன்ற தெய்வாம்சம் பொருந்திய அரசனின் மன்றாட்டின் மூலம் இஸ்ரவேலர்களை இரட்சித்த்து, பரிபூரணமும் தெய்வாம்சமும பொருந்திய ஓர் அரசனே நம்மையும் இரட்சிக்க முடியும் என்பதை நினைவுறுத்துகிறது – அவர்தான் இயேசு கிறிஸ்து. இயேசு, நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து மன்றாடுகிறார். இயேசுவுக்குச் சொந்தமானவர்கள் இறுதி நாளின் நியாயத் தீர்ப்பில் இருந்து விடுவிக்கப் படுவார்கள். தேசங்கள் அனைத்துக்கும் பிதாவாகிய தேவனின் மகிமையில் ஆண்டவராய் இருக்கிறார் என்பதை அறியும்.
தியானிக்கும் தருணம்
உன் ஜெபத்திற்கு உண்டான காரணத்தைச் சிந்தித்துப் பார். அவருடைய சம்பூரணம் அறியப்படும் பொருட்டு, எசேக்கியாவைப் போல் ஆண்டவரை மகிமைப் படுத்தி ஜெபிக்கிறோமா? ‘உம்முடைய நாமம் பரிசுத்தப் படுவதாக’ என்று நம்மாலும் கூற முடியமா?
ஜெபங்கள்
எங்களுக்காக எப்போதும் பரிந்து பேசுகிற சம்பூரணம் நிறைந்த இயேசுவுக்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறோம்,ஆண்டவரே. ஆமென்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
மாபெரும் தேவாலயம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சாலமோன் ராஜா அது தொடர்பாக ந விரிவான ஜெபத்தை ஏறெடுக்கிறான். தேவனின் பிள்ளைகளாகிய நமக்கு அந்த ஜெபங்கள் மூன்று முக்கியமான காரியத்தை நினைவுறுத்துகிறது.
முதலாவது, தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டது மனித முயற்சியைப் பாராட்டுவதற்குப் பதிலாக, கர்த்தர் உண்மையுள்ளவர் என்பதைக் காட்டுகிறது. மனித வெற்றிக்கு அப்பாற்பட்ட கிருபை கர்த்தரின் உடன்படிக்கையில் உள்ளது என்பதை சாலமோன் கூறுகிறார் (1 ராஜாக்கள் 8:23). வானளாவிய கட்டிடம் எழுப்பப்பட���வதற்கு கர்த்தரே பிரதான பங்காற்றுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள மனதளவிலும் ஆன்மீகத்திலும் தரிசனம் தேவை. அதே தரிசனம் கர்த்தரின் உடன்படிக்கைக்குக் கீழ்ப்படியவும் தேவைப்படுகிறது. (1 ராஜாக்கள் 8:25-26).
இரண்டாவது, தேவாலயம் எவ்வளவு பெரிய மகிமையைக் கொண்டிருந்தாலும், கர்த்தரை அதில் அடக்கியாள முடியாது. அந்த தேவாலயம் எழுப்பப்படுவதற்குத் தேவையான ஒவ்வொரு காரியத்திலும் பிரயாசம் கூடிய அதே ராஜா, “தேவன் மெய்யாக பூமியிலே வாசம் பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?” என்று பாடுகிறான். (1 ராஜாக்கள் 8:27). சாலமோன் போன்ற ஒரு ராஜா இப்படித் தன்னைத் தாழ்த்துவதைக் கண்டு நான் வியப்படைகிறேன். உண்மையாகவே, கர்த்தர் மனித கரத்தால் எழுப்பப்பட்ட ஸ்தலத்தில் வாசம் செய்யத் தேவையில்லை. அவருக்கு மனித உதவி எதுவும் தேவைப்படாது. அவருடைய நாமத்தினால் எழுப்பப்பட்ட ஸ்தலத்தில் வாசம் செய்கிறார் என்பதற்கு நமக்கு ஆதாரம் தேவைப்படுவதாலேயே (மனித அறியாமை) அவர் அங்கு வருகையளிக்கிறார்.
மூன்றாவது, எல்லா ஜனங்களுக்கும் கர்த்தர் கிருபையையும் ஆசீர்வாதத்தையும் அருள தேவாலயம் பயன்படுகிறது. கர்த்தரைத் சொந்த அனுபவத்தில் காண முடியாதவர்களுக்கும் இது தேவை.
(1 ராஜாக்கள் 8: 41-42). கர்த்தரின் உடன்படிக்கை உறவுக்குள் வராத ஜனங்களுக்காகவும் சாலமோன் ஜெபிக்கிறார். அவர்களுடைய ஜெபங்களையும் கேட்டருள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார்! தேவனுடைய ஜனங்கள் உலகத்தாருடன் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு இது உத்திரவாதம் தருகிறது. அவ்விதம் மட்டுமே, உலகத்தார் கர்த்தரை அறிந்து கொண்டு தங்கள் பக்தியை வெளிப்படுத்த முடியும் (1 ராஜாக்கள் 8:43).
தியானிக்கும் தருணம்
எல்லா ஜனங்களும் கர்த்தரை அறிந்து கொண்டு அவரிடம் பக்தியை வெளிப்படுத்துவதற்கு தேவாலயம் அழைக்கிறது. ஆனால், ஓர் ஆலயம் எழுப்பப்படும் போது, அதன் சுவர்கள் கிறிஸ்தவர்களை உலகத்தாரிடமிருந்து பிரித்திருக்கிறதா?
ஜெபங்கள்
கர்த்தாவே, ஆலய சுவர்களுக்கு அப்பாலும், எங்களுடைய தரிசனத்தைப் படரச் செய்யும். உம்முடைய பிரசன்னம் தேவைப்படும்இடத்துக்கும், உம்முடைய கிருபை தேவைப்படும் மூலை முடுக்குகளுக்கும், உம்முடைய ஆசீர்வாதங்கள் பொழியப்பட வேண்டிய இடங்களுக்கும் எங்கள் கவனத்தைத் திருப்ப உதவியருளும். ஆமென்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
யாக்கோபின் வரலாறு மனித பலவீனம் மற்றும் பாவத்தைக் குறித்த பதிவாகும். தன் சகோதரனாகிய ஏசாவை வஞ்சித்த யாக்கோபு ஆரானுக்குத் தப்பியோடினான் (ஆதியாகமம் 27:41-28:10). சில காலம் கழித்து யாக்கோபு தாயகம் திருமபினான். தன் சகோதரனாகிய ஏசாவின் ஊருக்குப் புறப்பட்டு, யாப்போக்கு என்ற ஆற்றின் துறையைக் கடக்கும்போது அவன் வாழ்வில் ஒர போராட்டம் ஏற்பட்டது..
இந்த வேத பகுதியில் பல ஆவிக்குரிய பயனான காரியங்களைக் காண முடிகிறது.
24வது வசனத்தில் “யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்” என்று கூறப்பட்டுள்ளது. ஜெபத்தில் பிந்தித் தனித்திருப்பது (தனிமையான ஜெபம்) அவசியமானது. இதே போலொத்த உதாரணத்தை இயேசுவும் வெளிப்படுத்தினார். “அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத்.14.23). இயேசுவானவர் தனித்து ஜெபம் பண்ண தமது சீடர்களை அனுப்பிவிட்டார்.
நாம் கர்த்தரோடு உறவாடவே படைக்கப்பட்டிருப்பதால், அதில் மிகுந்த அக்கறை காட்டினால், அவருடைய பிரசன்னத்தை மட்டுமல்லாமல், வல்லமையையும் கூட்டிச் சேர்க்கிறது. தனது பெலவீனத்தில் மத்தியிலும் அவன் கர்த்தரோடு மல்லுக்கட்டினான். தனக்கு உண்டான காயங்களையும் வேதனைகளையும் வெளிப்படுத்தினான். யாக்கோபுவிற்குச் செவி சாய்த்தது போலவே, இயேசுவானவர் நமக்கும் வாஞ்சையோடு செவிசாய்க்கிறார். அவருக்கே மிகச் சரியான காரியம் தெரியும்.. நமது கவலைகளை அவரிடம் முறையிட்டால், கர்த்தர் நாம் செய்யவேண்டியதைக் காட்டுவதோடு, தம்மால் மட்டுமே ஆகக் கூடியத்தையும் வெளிப்படுத்துவார். நமது குழப்பத்தை அவர் புரிந்து வைத்திருக்கிறார். நமது குழப்பத்தை அவரிடம் ஒப்படைத்து விட்டு அவருடைய சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நமது கவலைகளை கர்த்தருடைய வல்லமையான கரங்களில் சமர்ப்பித்து விட்டால், அவரால் மட்டுமே வழங்கக்கூடிய சாந்தியை நாம் உணர்வோம்.
யாக்கோபு பிடிவாதமாய் இருந்தான். “நான் போகட்டும், பொழுது விடிகிறது” யாக்கோபு “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்”, என்றான். அவன் தனது விண்ணப்பத்தில் தெளிவாய் இருந்தான். அவன் ஆசீர்வாதத்தைக் கேட்டான். மீண்டும் யாக்கோபு பிடிவாதத்தைக் காட்டினான். “உமது பெயரைக் கூறும்” இந்த வேதப் பகுதியானது, “அங்கே அவனை ஆசீர்வதித்தார்” என்று கூறி முடிவடைகிறது (32.29). இறுதியில் கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். யாக்கோபு மன்னிக்கப்படுகிறான். தன் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டவனாய் அவன் தோன்றுகிறான். பாவ வாழ்வை விட்டு, விசுவாசத்தில் பணிவுடையவனாக மாறுகிறான்..
“.....நான் தேவனை முகமுகமாய்க கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன்” (32.30). என்று யாக்கோபு கூறுகிறான். எத்துணை அருமையான முடிவு….. “தேவனை முகமுகமாய் காண நாம் வாஞ்சிக்கிறோமா”?
தியானிக்கும் தருணம்
இந்த தபசு காலத்தில் தனிமையிலும் அசைவற்றும் இருக்க நேரத்தை ஒதுக்குவாயாக. ஜெபத்தில் பொறுமையாய் இருங்கள். யாக்கோபைப் போல் விண்ணப்பத்தில் தெளிவுடையவர்களாய் இருங்கள். “கர்த்தரை முகமுகமாய் காணும்” அனுபவத்தை நீங்களம் பெறக்கூடும்.
ஜெபங்கள்
கர்த்தவே, நீர் என்னண்டை வருவதற்கு நான் பாத்திரன் அல்லன். ஆனால், நீர் வாக்கருளின படி, என் உள்ளத்தில் வாசம் செய்து, என் சரீரத்தைச் சுகப்படுத்தும், ஆமென்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
24 ஏப்ரல் 2011 (ஈஸ்டர் ஞாயிறு) வே.வ: யோவான் 20:1-18
அநேக கிறிஸ்தவர்கள் அவர்களின் விசுவாசத்தைக் குறித்து புலம்புவதை நான் கேட்டிருக்கிறேன். அவர்கள் தங்களின் விசுவாசத்தைத் தற்காக்க மிகவும் கஷ்டப் படுகிறார்கள்; போராடுகிறார்கள். எபிரேயர் நிருபத்தை எழுதியவர் இப்படிச் சொல்லுகிறார், “விசுவாசமானது நம்பிக்கை வைப்பவர்களின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருககிறது ” விசுவாசத்தைக் குறித்த போராட்டம் அதை நாம் காணக் கூடிய ஒரு பொருளோடு ஒப்பிடும் போது அதில் சிக்கல்கள் எழும்புகின்றன. இவ்வுலகில் சில விஷயங்கள் கண்கூடாக் காணக்கூடிய முடிவையும் சில விஷயங்கள் காணமுடியாத முடிவையும் கொடுக்கும். கர்த்தர் மேல் வைக்கும் விசுவாசம் கண்கூடாகக் காண முடியாத ஒரு முடிவைத் தரக்கூடிய விஷயத்துக்கு ஓர் உதாரணம். இருந்தும, இவ்விஷயத்தை ஒரு நல்ல விளக்கத்தின் மூலம் விமர்சிக்கலாம். இயேசுவின் உயிர்த்தெழுதல் ஒரு சிறந்த எடுத்துக காட்டு .
மகதேலேனா மறியாள் கல்லறையின் கற்கள் அகற்றப்பட்டிருக்கிறது என்று சொன்னபோது இயேசுவின் சீஷர்கள் கல்லறையை நோக்கி ஓடி வந்தார்கள். இச்செயல் அவர்களின் அவிசுவாசத்தைக் காட்டுவதற்காக அல்ல. இருந்தும் கல்லறையின் கற்கள் புரட்டப்பட்டிருப்பதை நேரில் காண வேண்டும் என்பதற்காக கல்லறையை நோக்கி ஓடினார்கள். இப்படி இருந்தும் சீஷர்களின் இச்செயல் மட்டும் இயேசுவின் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு அத்தாட்சியாக இல்லை. இயேசு சீஷர்களுக்குத் தரிசனம் கொடுத்த பிறகே இயேசுவின் உயிர்த்தெழுந்தார் என்பதற்கு அத்தாட்சியாக இல்லை. இயேசு சீஷர்களுக்குத் தரிசனம் கொடுத்த பிறகே இயேசுவின் உயிர்தெழுதலைக் குறித்து சந்தோஷம் அடைநது அவர்களின் விசுவாசத்தை உறுதிப் படுததிக் கொண்டனர். (யோவான் 20:25) பிறகு அவர்களின் விசுவாசம் இயேசு தோமாவைப் பார்த்து, “நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய் ; காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்ற போது உயிர்த்தெழுதலின் சத்தியம் மேலும் வலுவடைந்தது.
நாமும் இயேசுவின் சீஷர்களைப் போல நமது விசுவாசத்தை அவ்வப்போது பல வழிகள் மூலம் வலுப்படுததுகிறோம். ஆலய ஆராதனைக்குச் செல்லாமலும், திருவிருநதில் பங்கு பெறாமலும் இருபபதினால் நமது விசுவாசத்தை வலுப்படுத்துவது கடினமாய் இருக்கும். மேலும் திருவிருந்து ஐக்கியத்தையும் நம்பிக்கையும் உருவாக்கும்.
தியானிக்கும் தருணம்
நம் விசுவாசம் இயேசு கிறிஸ்துவின் மேல் எவ்வளவு ஆழமாய் இருக்கிறது? எந்த நிலையில் உங்கள் விசுவாசம் உள்ளது? ஒன்றைத் தேர்ந்தெடுங்கள் :- 1. விசுவாசம் இல்லாமல் இருத்தல் 2. அவிசுவாசம் 3. விசுவாசிக்க மறுப்பது 4. சாதாரன விசுவாசம் 5. அசைக்க முடியாத விசுவாசம் ஏன்?
ஜெபங்கள்
வல்லமையுள்ள ஆண்டவரே, இயேசு கிறிஸ்து இல்லாமல் உம்மை விசுவாசிப்பது இயலாத காரியம். உம்முடைய வார்த்தைகள் இல்லாமல் உம்மை அறிவது முடியாத விஷயம். உம்முடைய அன்பு இல்லாமல் உமக்குக் கீழ்படிவது கடினம். உம்முடைய பரிசுத்த ஆவி இல்லாமல் உம்மைப் பின் தொடர முடியாது. இரக்கமாய் இவைகளைச் செய்ய எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.
மொழியாக்கக் குறிப்பு:
மேற்கு மலேசிய அத்தியட்சாதீனத்திற்காக 2011ம் ஆண்டின் தபசு காலத் தியானக் கட்டுரைகளைத் தமிழில் மொழி பெயர்ப்பதற்குத் தலைமையேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மற்ற மொழி பெயர்ப்புச் சுமைகள் அதிகமான இருந்ததால், என் குடும்பத்தார், உறவினர்களின் ஒத்துழைப்போடு இந்தப் பணியைச் செம்மையாகச் செய்ய முடிந்தது. அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
35 குருமார்கள் எழுதிய இக்கட்டுரைகளை அறுவர் மொழி பெயர்க்கும் போது, பல அம்சங்களில் ஒருமைப்பாட்டைக் காண முடியாமல் போகலாம். வாசகர்கள் இதைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் மொழி பெயர்ப்பும் ஒரு விதமான அருட்பணிதான். மத்தேயு 9:35-38ல் கூறப்பட்டுள்ளது போல், இந்த மொழி பெயர்ப்பு ‘வயல்களில்’ பணியாற்றுவதற்கு அநேகர் தேவைப் படுகிறார்கள். இவ்வளவு காலம் இந்த ‘வயல்களில்’ பணியாற்றியவர்கள், முதுமையின் காரணமாக பின் வாங்கத் தொடங்கி உள்ளனர். எனவே, இவர்களின் பணியை மேற்கொள்வதற்கு இரண்டாவது தலைமுறை தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டியுது அவசியமாகும்.
இந்த அழைப்பைப் பெறுகிறவர்கள், இது ஒரு கடினமான பணி என்று தயங்கி, பின்வாங்கக் கூடும். அனேகமாக எல்லா பணிகளும் ஆரம்பத்தில் கடினமாகத் தான் தோன்றும். இதற்கு உங்கள் வாழ்வில் பல அனுபவங்களையே ஆதாரமாகக் கொள்ளலாம். “ஐயையோ, இந்தப் பணிக்கு வேதாகமம், இறையியல், தமிழ், ஆங்கிலம், மொழி பெயர்ப்பு, கணினி – இப்படி எத்தனையோ துறையில் புலமை பெற்றிருக்க வேண்டுமே!” என்று மலைத்துப் போக வேண்டாம். நீங்கள் ஆலயத்திற்குத் தவறாமல் சென்று வருகிறவர்களாகவும், எஸ்பிஎம் வரையில் தமிழ்த் தகுதி உள்ளவர்களாயும் இருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். ஒரு சிறிய கட்டுரையைத் தந்து மொழி பெயர்க்க வழி காட்டுகிறேன். அப்போதே நீங்கள் மிகப் பெயரி ஆசீர்வாதங்களை அனுபவிக்கத் தொடங்குவீர்கள்.
அன்புடன்: ஜான்சன் விக்டர் அலைபேசி: 012-3095142
கட்டுரை ஆசிரியர்களின் பட்டியல்
இந்த தபசு கால தியானத் தொடருக்குக்குக் கட்டுரை வரைந்த பின்வரும் தரப்பினருக்கு விசேஷமாக நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.
1. மறை பெருந்திரு எங் மூன் ஹிங் 2. மறைதிரு ஆண்ட்ரூ பாங் 3. மரியாதைக்குரிய சார்ல்ஸ் சாமுவேல் 4. மரியாதைக்குரிய எட்டி ஒங் 5. மரியாதைக்குரிய ஸ்தீபன் அப்பராவ் 6. மரியாதைக்குரிய எட்வர்ட் ஜான் 7. முதல்வர் ஜேசன் செல்வராஜ் 8. நெறியாளர் மறைதிரு சார்ல்ஸ் பிரேசர் 9. நெறியாளர் மறைதிரு ஜான் கணபதி 10. நெறியாளர் ஏன்ட்ரு கூ 11. நெறியாளர் தியோ சூங் கீ 12. மறைதிரு டாக்டர் ஏன்ட்ரு சியா 13. டீக்கனஸ் மார்கிரேன் சியா 14. திரு. ஜான் டேனியேல் 15. மறைதிரு டாக்டர் விஜி டேனியேல் 16. மறைதிரு கேரல்ட் இம்மானுவேல் 17. பாஸ்டர் எலைன் கோ 18. மறைதிரு ஜெஸ்வின்டர் சிங் 19. மறைதிரு ஜான் கென்னடி 20. மறைதிரு டாக்டர் ஜோசப் குமார் 21. டாக்டர் பீட்டர் லாவ் 22. மறைதிரு லீ கோன் இம் 23. மறைதிரு டாக்டர் லிம் கார் யோங் 24. மறைதிரு பிராங்க் லின் யோக மின் 25. மறைதிரு நிக் லோய் பூன் லியோங் 26. திரு எலன் மெக் கிளைமன்ட் 27. மறைதிரு ஜோசுவா ஒங் 28. மறைதிரு டாக்டர் ஒங் மென். சாய் 29. திருமதி குளோ ராஜேந்திரன் 30. மறைதிரு டேவிட் ராஜையா 31. மறைதிரு டாக்டர் டான் ஜின் ஹுவாட் 32. மறைதிரு தீ ஹெங் பெங் 33. மறைதிரு டாக்டர் அல்பர்ட் வால்ட்டர்ஸ் 34. டீக்கனஸ் வொங் யோக் சான் 35. மறைதிரு டத்தோ டாக்டர் இயோ பெங் சான்
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
டெட்ரிச் பொன்ஹோஃபர் (Dietrich Bonhoeffer) என்பவர் ஜெர்மன் நாட்டு லூத்ரன் போதகர். மதகல்வி கற்றவர். இவர் இப்படி சொல்லியிருககிறார். ‘சீடத்துவம் இல்லாத கிறிஸ்தவன், எப்பொழுதும் ஒரு கிறிஸ்து இல்லாத கிறிஸ்தவனாவான்”. இதை யோவான் 19ம் அதிகாரத்தோடு ஒப்பிடலாம்
அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பும் நிக்கதேமுவும் இயேசுவின் சீஷராய் இருந்தும் யூதருக்குப் பயந்ததினால் இவ்விருவரும் யூதரின் ஆட்சி மன்றத்தில் உறுப்பினராய் இருந்தனர். இருந்தும் அவர்கள் இயேசுவுக்கு செய்த காரியங்கள் மறைக்கப்பட்ட காரியங்களாக இராமல் வெளிப்படையாகவே இருந்தது. யோவான் 9:22-ஐப் பார்த்தோமானால், அன்று இரவு இயேசுவை எதிர்த்து நின்றாலும் இயேசு இறந்த பின்பு தைரியமாக பிலாத்துவிடம் சென்று, “நாங்கள் இயேசுவின் உடலை அடக்கம் செய்ய விரும்புகிறோம்” என்றார்கள்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்த நிகழ்வு இவ்விருவரின் மன மாற்றத்திற்குக் காரணமாயிருந்தது. மறுபிறவி எடுத்தனர்,இல்லையென்றால் இவ்விருவரின் மனமாற்றத்திற்கு வேறு எந்த விளக்கமும் அளிக்க முடியாது. இங்கு இயேசுவின் சீஷத்துவம் வெளியானது.
நிக்கதேமு 75 பவுண்டு வெள்ளைப் போளம் கொண்டு வந்தார். இவ்வெள்ளைப் போளம் அதிக விலைமதிப்பு உள்ளதல்ல. ஆனால் இவ்வளவு பெரிய அளவு வெள்ளைப் போளம் இராஜாக்களுக்கும், இராஜ வம்சத்தாருக்கு மட்டுந்தான் பயன்படுத்தப்படும். இச்செயலால் தன் அன்பை வெளிப்படுத்தி இயேசுவின் ராஜ்யரீகத்தை வெளிப்படுததினான். யோசேப்பு தன் அன்பை வெளிப்படுத்த இயேசுவுக்குத் தனக்குச் சொந்தமான மிக விலை உயர்ந்த கல்லறையில் இயேசுவை அடக்கம் பண்ணினான்.
ஒரு மனிதன் ஒரு அடைக்கப்பட்ட நிலையிலிருந்து இயேசுவின் அளவில்லாத அன்பின் செயலான அவரின் இறப்பின் மூலம் விடுபட்டு தைரியமாக யோசேப்பைப் போலவும் நிக்கதேமுவைப் போலவும் இயேசுவை அறிக்கைப் பண்ண ஒரு சவாலாக அமைகிறது .
தியானிக்கும் தருணம்
“ஒன்றையும் கொடுக்கவியலாத, புண்ணியமும் இல்லாத, பாடுகளையும் அனுபவிக்காத ஒரு மதம், அதற்குரிய தகுதியையும் இழந்து விடுகிறது – மார்ட்டின் லூதர்”.வெளிப்படையாக கிறிஸ்துவுக்கு சாட்சி பகர, அவருடைய செப்பனிடும் வல்லமைக்கு உன்னை எப்படி அனுமதிக்கிறாய்..?
ஜெபங்கள்
பரம பிதாவே, உமது பிள்ளைகள் என்று அறிக்கை பண்ண நாங்கள் தயங்கும் போதும், வெட்கப்படும் போதும் எங்களை மன்னியும். தைரியமாக யோசேப்பைப் போலவும் நிக்கதேமுவைப் போலவும் கிறிஸ்துவை அறிக்கை பண்ண எங்களுக்கு உமது பரிசுத்த ஆவியை அருளிச் செய்யும். ஆமென் .
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
22 ஏப்ரல் 2011 (பெரிய வெள்ளி) வே வ: யோவான் 18:28-40
பிலாத்து இயேசுவிடம் கேட்டான், “நீ யூதருடைய இராஜாவா?” அதற்கு இயேசு, ”நீ என்னை யூதரின் ராஜா என்று நினைக்கிறாயா? அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி அப்படிச் சொல்லுகிறார்களா? (யோவான் 18:34)
பிலாத்து ஏன் இயேசுவானவரைக் கைது செய்தார்? என்று விசாரித்துக் கொண்டிருக்கையில், இயேசு மிகவும் சாந்தமாக தான் ஒரு இராஜா என்று கெம்பீரத்தோடு பதிலளித்தார். என்னுடைய இராஜியம் இவ்வுலகத்திற்குரியது என்றால், யூதர்கள் என்னைக் கைதாக்கினதை என் சீஷர்கள் தடுத்திருப்பார்களே. ஆனால் என் இராஜியம் வேறு இடத்திற்குச் சொந்தமானதாய் இருக்கிறது. உம்முடைய கூற்று சரியே. நான் ஒரு இராஜாவே. இக்காரணத்திற்கே நான் இவ்வுலகத்தில் பிறந்தேன். உண்மையைக் குறித்து சாட்சி கொடுக்க இவ்வுலகத்திற்கு வந்தேன். உண்மையை விரும்புகிறவர்கள் என் அண்டையில் இருப்பார்கள் (யோவன் 18:36, 37) .
பிலாத்து அதற்கு, “உண்மை என்பது என்ன?” என்று வினவினான்? உண்மையை எப்படி அறிந்து கொள்வது? உண்மை என்று ஒன்று இருக்கிறதா? அல்லது அது வெறும் பிரம்மையா? இந்த நாகரீக உலகில் அநேகருக்கு உண்மை என்னவென்று தெரியவில்லை. ஆனால் உண்மை போன்றுதான் தோன்றுகிறது என்று சொல்வதை ஒரு பாணியாகக் கடைபிடிக்கிறார்கள். சிலர் உண்மையைக் குருடர்கள் யானை எப்படி இருக்கும் என்று கண்டு பிடிப்பதற்காக அதைச் சுற்றி நின்று விமர்சிப்பதற்கு ஒப்பிடுகிறார்கள். ஒவ்வொரு குருடனும் தான் தொட்ட பகுதியை வைத்து, யானை அப்படித்தான் இருக்கும் என்று ஒரு தரப்பட்ட அரை குறையான கருத்தைக் கூறினர். உண்மை ஒரு தனிப்பட்ட மனிதனின் கருததைப் பொறுத்துள்ளது. உண்மை ஒரு கற்பனை நிலையான பொருளாய் உள்ளது. நாம் எது உண்மை என்று சொல்லுகிறோமோ அது மற்றவர்களுக்கு உண்மையாகத் தெரியாது. அந்தக் குருடர்களின் நிலையில் இருந்து பார்த்தால் அவர்கள் குருட்டுத தன்மையால் உண்மையான யானையின் உருவத்தைக் கண்டு கொள்ள இயலாமல் போனது. கண்பார்வை உள்ளவர்கள் நிச்சயமாக யானையின் தோற்றத்தைத் தவறுதலாக வருணனை செய்திருக்க மாட்டார்கள்.
பிலாத்து இயேசுவைக் குற்றமற்றவர் என்று அறிந்தும், தன் உள்ளத்தின் உணர்வைப் பின் பற்றவில்லை. பிலாத்துவின் இச்செயல், அதாவது சிலுவையில் அறையச் சொன்னது அவனது சொந்த விருப்பத்தின்படி அவனது கோழைத் தனத்தால் செய்யப்பட்டதாகும். உண்மையை அறிவதற்காக செய்யப்படவில்லை. தேவன் நமக்கு இயேசுவைப் பற்றி அறிய தேவ ஆவியை அருளுகிறார். இயேசு தம்மைப் பற்றிச் சொன்னது (நானே வழியும் ஜீவனுமாய் இருக்கிறேன் – யோவான் 14:6) இயேசுவிடமே உண்மையும் சத்தியமும உள்ளது. ஏன் என்றால் இயேசுவே உண்மையும் சத்தியமுமாள் இருக்கிறார்.
தியானிக்கும் தருணம்
இயேசு பிலாத்துவின் அரண்மனையில் கைவிடப்பட்ட நிலையில் நிற்கிறார்! நீ இயேசுவை என்ன செய்திருப்பாய்? நடு நிலைமையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. ஒரு நாள் உன் இருதயத்தில் இக்கேள்வி உதிக்கும். என்னை அவர் என்னசெய்வார்?
ஜெபங்கள்
பரலோக பிதாவே! இவ்வுலகத்தின் இரட்சகராகிய இயேசுவின் சத்தியத்தை அறிய என் கண்களைத் திறந்தருளும். ஆமென்
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
21 ஏப்ரல் 2011 (கட்டளை வியாழன்) வே வ: யோவான் 13:1-17, 31-35b.
இயேசு அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டி. சீஷர்களின் கால்களைக் கழுவினதால் யூதர்களின் மத சடங்கின்படி அசுத்தமாயினார். தேவாட்டுககுட்டியின் படி அதிக சுத்தமானவர். மேலும் அன்பு, இரக்கம், கிருபை நிறைந்தவர். இயேசுவானவர் பாதத்தைக் கழுவுவது ஓர் உயர்ந்த காணிக்கை. சீஷர்களுக்கு தம்முடனும், மற்றவர்களுடனும் உறவு கொள்வதற்கு ஓர் அழைப்பு. இதுவும் ஒரு கீழ்ப்படிதலின் அழைப்பு .
பாதத்தைக் குழுவுதல் ஏன் ஒரு கடினமான காரியம்? பேதுரு இயேசுவுக்கு எதிர்மாறாக, “நீர் என் பாதத்தைக் கழுவ வேண்டும்?” என்று கேட்டான். அதற்கு இயேசு மறுமொழியாக, “நான் உன் பாதத்தைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை; இது ஒரு புத கட்டளை. ஒரு சடங்காச்சாரம். அது ஒரு சடங்குக்கு முரண்பாடான காரியம். அக்காலத்தில் பாதத்தைக் கழுவுதல் ஒரு கேவலமான அடிமைகள் செய்யும் தொழில். நாமும் அதைப் போல் ஊழியத்தையும், சேவையையும் உயர்ந்த நோக்குடன் செய்து ஊழியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உயர்ந்த தகுதியைப் பார்க்கிறோம் .
ஒருவர் மற்றவர் பாதத்தைக் கழுவும் கிருபை, தேவாட்டுக் குட்டி நம் பாதத்தைக் கழுவினால் மட்டுமே முடியும். கடவுளின் இரக்கம் நம் மனமேட்டிமையை நீக்கி அவர் நம்மில் அன்பு கூறுவது போல நாமும் மற்றவர்களிடம் கூறவும், வேலைக்கார ரூபம் எடுக்கவும் முடியும். ஏன்? இதனால் இயேசு கூறுவது என்ன வென்றால்: “மற்றவர்கள் உங்களை என் சீஷர்கள் என்று சொல்லுவார்கள்.
தியானிக்கும் தருணம்
நாம் நம் சடங்கிற்கு அப்பால் இயேசுவானவர் போல் பாதத்தைக் கழுவி சபை அரசியலில் ஈடுபடாமல் தேவ ஜனமாக ஒருவர்க்கொருவர் பாதத்தைக் க்கழுவுதல் கடினமான காரியமா?
ஜெபங்கள்
ஆண்டவரே! என் ஊழியத்தில் பல காரிங்களில் மன மேட்டிமையான தவறான கொள்கைக்காகவும் ஈடுபட்டேன். இந்தத் தவற்றை நான் செய்தாலும் மற்றவர்கள் தவற்றை நான் பெரிதாக்கினேன். ஆண்டவரே! நம் சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்து, அவர்கள் குற்றங்களை உணர்த்தி அவர்களின் பாதத்தைக் கழுவ உதவி செய்யும். ஆண்டவரே, என் பாதத்தைக் கழுவும். ஆமென்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
உங்களைக் காட்டிக் கொடுப்பவன் என்று அறிந்து, அவனிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்? அந் உறவு நிச்சயமாக இதயப் பூர்வமானதாக இருக்காது.
இயேசுவானவர், தமது சீடர்களுக்கான இரா போஜனத்தில் தலமையேற்ற போது, (உங்களில்) எல்லோரும் சுத்தமானவர்கள் அல்லர் (13:11) என்று சுட்டிக் காட்டினார். தீட்டும், காட்டிக் கொடுக்கின்ற துடிப்பும் உடைய ஒருவன் தம் மத்தியில் இருக்கிறான் என்பதை இயேசு அறிவார். ஆனாலும், அதற்காக அவர் ஆத்திரப்படவில்லை. மாறாக. அந்நிலைமைக்காகக் காத்திருந்து தாம் வந்த நோக்கம் நிறைவேறும் பொருட்டாக அதனை ஏற்றுக் கொண்டார். ஆனாலும், அதன் தாக்கம் இயேசுவிடம் காணப்பட்டது: இயேசு. . . ஆவியிலே கலங்கி. . . ’ என்று 13 21ல் கூறப்பட்டுள்ளது.
யோவான் சுவிசேஷத்தில், ‘அனுப்ப்ப் பட்டேன்’, ‘அதற்கான (பிதாவின் நோக்கத்திற்கான) நேரம் இன்னும் வரவில்லை’. என்று இயேசு தம்மைக் குறித்து பேசுவதைக் காண்கிறோம். இப்போது, அதற்கான தருணம். நெருங்கி விட்டது. எனவே, அந்தத் துரோகியை அவர் சுட்டுகிறார். ‘உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’ (13:21)
இயேசுவுக்கு அருகில் அமர்ந்திருந்த யோவான், ஒரு இயல்பான கேள்வியைக் கேட்கிறான்: ‘அவன் யார்?’ இயேசு ஒரு துணிக்கையைத் தோய்த்து அந்தத் துரோகிக்குக் கொடுப்பதன் மூலம், அவனை அடையாளம் காட்டுகிறார். யூதஸ் விருந்தோம்பலில், சிறப்பு செய்யப்படும் விருந்தாளிக்கு இப்படி அப்பம் வழங்கப்படும். இது அன்புக்கும் நட்புக்கும் அடையாளமாகும். நியாயமான காரியத்தைச் செய்வதற்கு யூதாசுக்கு ஓர உத்தரவு தரப்படுகிறது. சுவிசேஷத்தின் 13:27ல் வாசிக்கிற படி, அவனுடைய உள்ளம் பிசாசானவனால் கடினமாக்கப்படுகிறது. இயேசுவானவரின் இந்த அன்பின் வெளிப்பாடு, யூதாஸ் தன் உள்ளத்தை இருளின் அதிகாரத்திற்கு ஒப்புக் கொடுத்ததற்கும் அடையாளமாகி விட்டது. யூதாஸ் தன் சாபத்தைத் தேடிக் கொள்ளும் முடிவை எடுக்கிறான். உண்மையாகவே, தேவ அன்பின் அதிகாரம், ஆண்டவருக்கு விரோதமாக நமது முதுகைத் திருப்பிக் கொள்ளும் கடைசி நிமிடம் வரைக்கும் நம்மில் நிலைத்திருக்கும். எத்துணை பெரிய அன்பு, பாருங்கள்! தேவ அன்பு மனித சுதந்திரத்தைப் பிடுங்கி எறியாது. ஆனால், அவருக்காக வாழும் சம்மத்த்தை நம்மில் எதிர்ப்பார்க்கிறது.
தியாணிக்கும் தருணம்
ஆண்டவரின் அன்பு உன்னை எட்டும் பட்சத்தில், எப்போது நீ யூதாஸைப் போல், அதற்கு விரோதமாக நடந்து கொண்டாய்?
ஜெபங்கள்
கர்த்தாவே,. முற்றுலும் பாவியாகிய எங்களிடத்தில் உமது அன்பு எட்டிச் சேர்வதற்காக நன்றி. உமது அன்பின் வெகுமதிக்குச் செவி சாய்க்கும் வகையில் உனக்கு உதவும். உமக்காக மாத்திரம் ஜீவிக்கவும் உதவிடும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
யோவான் சுவிசேஷத்தின் இந்தப் பகுதி மிக ஆழமான உண்மையைக் கொண்டு வருகிறது. மனுஷ குமாரன் மகிமைப்படுத்தப் படும் தருணம் வந்து விட்டது (12:23) என்று பேசுகிறார். தமது இவ்வுலக அருட்பணியில், தம்மை அனுப்பிய பிதாவிற்கு மகிமையைக் கொண்டு வந்தார். இப்போது இயேசுவானவர் மகிமைப்படுத்தப் படப்போகிறார். இந்த மகிமை பிதாவினிடத்தில் இருந்து வரப் போகிறது. ஆனால் எப்படி? இயேசுவானவர் பிதாவின் சித்தத்திற்குப் பங்கமில்லாமல் கீழ்ப்படிந்த படியால், பிதா அவரை மகிமைப்படுத்தப் போகிறார் (13:31).
இயேசுவானவர் தமது மரணத்தின் மூலம் மகிமைப்படுத்தப் பட்டார் என்று யோவானின் சுவிசேஷம் விவரிக்கிறது. இயேசுவானவர் தம்மை, நிலத்தில் விழுந்து செத்து மடியும் கோதுமை மணிக்கு ஒப்பிடுகிறார். பிதாவின் நோக்கத்தை நிறைவேற்ற அவர் மரணிக்க வேண்டியுள்ளது (12:24). பாவத்தின் நிமித்தம் விழுந்து போன மனித குளத்திற்கு நித்திய ஜீவனைத் தற, பிதாவின் சித்தத்தை நிறைவேற்றும் பொருட்டு, இயேசுவானவர் தம்மைப் பூரணமாக பிதாவினிடத்தில் ஒப்புக் கொடுக்க வேண்டியுள்ளது.
கிறிஸ்து மகிமைப் படுத்தப் படுதலில் இன்னொரு அம்சமும் உள்ளது. அஃது என்னவெனில், ‘உயர்த்தப்படுதல்’ ஆகும். 32ம். வசனத்தில், “நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும் போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக் கொள்ளுவேன், என்றார் ” என்று வாசிக்கிறோம். ‘உயர்த்தப் படுதல்’ என்பது இங்கே இரட்டைப் பொருளைத் தருகிறது. ஒன்று, சிலுவையில் உயர்த்தப்படுதல்; மற்றொன்று, பிதாவின் வலது பாரிசத்திற்கு உயர்த்தப் படுதல். சுருக்கமாக, இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் பிதாவாகிய தேவன் மகிமைப்படுத்தப் படும் பொருட்டு ஒரே சம்பவத்தின் இரண்டு புறங்களாகத் திகழ்கின்றன.
யோவான் சுவிசேஷத்தின் தொடக்கப் பகுதியில், தம் நேரம் இன்னும் வரவில்லை என்று அவ்வப்போது கூறுவதைக் காண்கிறோம். ஆனால், இந்த வேதப் பகுதியில் அந்த நேரம் வந்து விட்டது என்று குறிக்கப் படுகிறது. யோவான் சுவிசேஷத்தில் குறிக்கப் பட்டுள்ள ‘நேரம்’, இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் நிறைவேறப் போகும் நேரத்தைக் குறிக்கிறது. இயேசுவானவர் தமது ஜீவனைப் பிடித்து வைத்துக் கொள்ளாமல், பிறருக்குத் தியாகப் பலியாகக் கொடுத்தார். தம்மைப் பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக் கொடுக்கும் மாறாத முடிவின் மூலம், நமக்குக் கிருபையைப் பெற்றுத் தந்ததோடு, தேவனுக்குச் செய்ய வேண்டிய உண்மையான ஊழியத்திற்கு ஒரு முன் மாதிரியையும் தந்திருக்கிறார் (12:26); நிலத்தில் விழுந்து செத்து மடியும் அந்தக் கோதுமை மணியின் பாத்திரத்தை ஏற்றுக் கொண்டார்
தியானிக்கும் தருணம்
தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் காப்பான் (மத்திதேயு 10:39). நீதான் அந்த நபரா?
ஜெபங்கள்
பரலோகப் பிதாவே, இயேசுவானவர் புரிந்து கொண்டது போல, எங்கள் ஜீவனைக் காக்கும் செயலை ஆவியான அடிப்படையில் புரிந்து கொள்ள எங்கள் கண்களைத் திறந்தருளும். அந்தக் கோதுமை மணியைப் போல, உம்மை அறியாதவர்களுக்காக நிலத்தில் விழுந்து செத்து மடிவது நானாக இருக்கட்டும். இயேசுவின் நாமத்திநாலே ஜெபிக்கிறோம். ஆமென்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
புளிப்பில்லா அப்பப் பண்டிகைக்கு ஆறு நாட்களுக்கு முன்பு இயேசு மார்த்தாள் மரியாள் வீட்டுக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு ஒரு சிறப்பு விருந்து தயாரிக்கப்பட்டு அன்று இரவு வழங்கப்பட்டது. இந்த விருந்து ஏன் அளிக்கப்பட்டது ? (யோவான் 11ல் சொல்லிய படி) இயேசு லாசருவை மரணத்திலிருந்து உயிரோடே எழுப்பினதினால் லாசருவின் குடும்பத்தினர் அவருக்கு நன்றிக் கடன் செலுத்தினார்கள்.
இயேசு பந்தியில் இருக்கும் போது மரியாள் மற்றுமொரு காரியத்தைச் செய்து தன் நன்றிக் கடனைச் செலுத்தினாள். பரி.யோவன் 11ல் சொல்லிய படி “அப்பொழுது மரியாள் விலையேறப் பட்ட களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு ராத்தல் கொண்டு வந்து அதை யேசுவின் பாதங்களில் பூசி, தன் தலை மயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள். அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமறத்தினால் நிறைந்தது. என்று யோவான் 12:3ல் கூறப்பட்டுள்ளது.
எந்த அடிப்படையில் மரியாள் இக்காரியத்தைச் செய்தாள்? யூதாஸ் காரியோத்தின் யூகப்படி அந்த நளன தைலத்தின விலை ஒரு கூலி தொழிலாளியின் ஒரு வருட கூலியாகும். அது மட்டும் அல்ல, மரியாள் அந்தத் தைலத்தில் தண்ணீர் விட்டு அதை இயேசுவின் மேல் தெளிநத்து விட்டு மீதியைத் தனக்கென்று எடுத்துக் கொள்ளவில்லை. நளத தைலம் எல்லாவற்றையும் அப்படியே இயேசுவின் பாதத்தில் ஊற்றினாள். இச்செயல் மரியாள் இயேசுவின் பால் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துகிறது. இயேசுவின் பாதத்தின் கீழே அமர்ந்து அவருக்குச் சேவை செய்யும் விதம் அவளின் நன்றி கடனையும், பக்தியையும் காட்டுகிறது. மரியாள் நிச்சயமாக்க் காரணமில்லாமல் இவ்வளவு பெரிய செலவு செய்து இயேசுவைக் கௌரவித்து இருக்க மாட்டாள். மரியாளின் இச்செயலை இயேசுவின் சீஷர்களின் ஒருவனான யூதாஸ் காரியோத்து தூஷித்தான். தாளிப்பு? எங்கோ கேட்ட வார்த்தை போல் இருககிறதா? ஆமாம், அநேக ஆலய காரியங்கள் நடத்தப்படும்போது அந்நிகழ்வு பலராலும தூஷிக்கப்பட்டும, விமரிசிக்கப் பட்டும் வருகிறது .
மரியாளின் அந்த அன்பான செயலைப் போற்றுவதை விட்டு விட்டு அதைத் தேவையில்லாத வேலை என்று யூதாஸ் சொன்னான் .
தியானிக்கும் தருணம்
உங்கள் திறமையை ஆராதிப்பதற்கும், சீஷத்துவத்துக்கும் சுவிஷேச ஊழியம், மற்றும் அப்போஸ்தல ஊழியத்திற்கும் கொடுக்கிறீர்களா?
ஒரு நல்ல அறுவடை வேண்டும் என்றால் நாம் நல்ல விதையை விதைக்க வேண்டும். யூதாஸ் போன்று பலர் ஆலயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்கள் நமது செயலை தூஷிக்க வேண்டாம். கடவிவுளின் இராஜ்யத்திற்காக நாம் தொடர்ந்து பணிகளைச் செய்து வருவோமாக .
ஜெபங்கள்
அன்பின் தெய்வமே! மரியாளின் முன் மாதிரிக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். தினந்தோறும் உமது பாதத்தண்டை அமர்ந்து உம்மைத் தியானிக்கும் போது உமது வார்த்தையை எங்களுக்கு வெளிப்படுவதாக. உமக்காக அனைத்தையும் தியாகம் செய்து உம்மை மகிமைப் படுத்த எங்களுக்குக் கற்ப்பியும். மற்றவர்கள் என்னைப் பற்றியும் என் அர்பணிப்பைப் பற்றியும் என்ன சொல்வார்கள் என்று தயங்கி உமது ஊழியத்தைச் செய்ய பின்வாங்காமல் மரியாள் ஊற்றிய பரிமள தைலத்தைப் போன்று மணம் வீசி உமது நாமத்துக்குப் பெருமை சேர்க்க துணை புரியும். கர்த்தரின் நாமத்தில் வேண்டிக் கொள்ளுகிறேன். ஆமென்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
2. உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள்.
3. ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
4. இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின் மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன்குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று,
5. தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
6. சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து,
7. கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.
8. திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.
9. முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
நண்பர்களே,
இந்த வசனங்களில் நாம், இயேசுவானவர் தம் சீஷர்களிடம் ஒரு (யாரும் இதுவரை சவாரி செய்யாத) கழுதையை கட்டவிழ்த்து கொண்டு வரச்சொல்கிறார். நம்மில் பலர், ஐயோ, நான் எந்த ஒரு சாமர்த்தியமும் இல்லாதவன் (கழுதையை போன்றவன் ), யாருக்கும் என்னால் எந்த பயனும்மில்லை (யாரும் என் மேல் சாவாரி செய்ததில்லை), நான் எப்படி ஆண்டவருக்கு ஊழியம் செய்ய முடியும்? என்று நினைத்து வருந்துகிறீர்களா?
இந்த நாளிலே, இந்த வசனங்களை விசுவாசத்தோடு படித்து, ஆண்டவரிடம் உங்களை ஒப்புவியுங்கள். மத்தேயு.21:2- இல் கழுதையை கட்டவிழ்க்க சொன்ன தேவன், உங்கள் கட்டுக்களையும் அவிழ்ப்பார். அந்த கழுதையின் முன், மக்கள் தங்கள் வஸ்திரங்களை விரித்து வரவேற்றார்களாம். நீங்களும், இயேசுவை சுமந்துகொண்டு செல்லுங்கள், அப்போது உங்களுக்கும் அது சம்பவிக்கும்.
ஆனால், இந்த மரியாதைகள் எல்லாம் கழுதைக்காக அல்ல, அதன் மீதமர்ந்திருக்கும் இயேசுவுக்கே என்று கழுதைக்கு தெரியும்.
அதனால், இயேசுவினால் வரும் மதிப்பு, மரியாதை, கணம் முதலியவை நம்மை பெருமைகொள்ள வைத்தால், நாம் அந்த கழுதையிலும் கீழானோரே...
17 ஏப்ரல் 2011 (குருத்தோலை ஞாயிறு) வே.வ: மத்தேயு 21:1-11
குருத்தோலை ஞாயிறு இயேசுவின் இந்த உலக வாழ்க்கையின் இறுதி வாரமாக இருக்கிறது. இயேசு இந்த வாரத்தின் வெள்ளிக் கிழமையான புனித வெள்ளியன்று காலையில் சிலுவையில் அறையப்பட்டார். அன்று இரவு கல்லறையில் வைக்கப்பட்டார். சனிக் கிழமை முழுவதும் கல்லறையில் இருந்த இயேசு, ஞாயிறு காலையில் உயிர்த் தெழுந்தார் மத்தேயு 21:1-11ல் விவரிக்கப்பட்டது என்ன என்றால் இயேசு தன் சுய விருப்பத்தினாலும் முழு மனதோடும் முன்னேற்பாடு செய்யப்பட்ட ஒரு கழுதையின் மேல் ஏறி எருசலேமுக்குள் தனக்கு நேரிடப்போகிற சம்பவத்திற்காக சென்றார்.
சகரியா 9:9ல் விவரிக்கப் பட்டது போல இயேசு, ராஜாவாகிய மேசியா ஜெயிக்கப்பட்டது போல இயேசு, ராஜாவாகிய மேசியா ஜெயிக்கப் பட பிரயாணம் பண்ணி எருசலேமைச் சென்றடைந்தார்.
அங்கு மக்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டு, ஒரு ராஜாவைப் போல அவரை வரவேற்றனர். தங்கள் வஸ்திரங்களை இயேசு நடப்பதற்காக நடைபாதையில் விரித்தனர். குருத்தோலைகளை வெட்டி பாதையில் போட்டு, “ஓசன்னா, ஓசன்னா” என்று முழுக்கம் இட்டனர்
இந்த நிகழ்வானது அங்குள்ள மக்களை, “யார் இவர்?, யார் இவர்?”, என்று கேட்கத் தூண்டியது. இப்படி இருந்தும் இயேசுவின் எளிய தோற்றம் இராஜ சிங்காசனத்தை ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லாமல், மனிதனின் உள்ளத்தில் ஆட்சி செய்ய உகந்தததாக இருந்தது.
அப்படி இருந்தும், நமது பாவங்களுக்காக வெரிய (புனித) வெள்ளி அன்று சிலுவையில் அறையப்பட்டார். யோவான் 12:3ல் சொல்லப்பட்டது போல, “நான் பூமியிலிருந்து உயர்த்தப் பட்டிருக்கும் போது, எல்லோரையும் எண்ணிடத்தில் இழுத்துக் கொள்வேன் என்றார்
தியானிக்கும் தருணம்
இந்த பரிசுத்த வாரத்தில் இக்கேள்விகளைக் கேட்டு தற்பரிசோதனை செய்து பாருங்கள்
1. இயேசுவை நான் உண்மையில் ஒரு ராஜாவாக ஒரு இரட்சகராக அறிந்து, புரிந்து இருககிறேனா?
2. எந்தப் பகுதியில் எனக்கும் கிறிஸ்துவுக்கும் நல்ல உறவும் ஆன்மீனகப் பிணைப்பும் உள்ளது?
3. நான் கிறிஸ்துவைப் பற்றி என் குடும்பத்தினர்க்கும் மற்றவர்களுக்கும் அன்றாட வாழ்க்கையில் அறிக்கை செய்கிறேனா?
ஜெபங்கள்
பரம பிதாவே, உதட்டளவில் எங்கள் ஜெபத்தில் “ஓசன்ன, ஓசன்னா” என்று சொல்லி விட்டு, பிறகு “சிலுவையில் அறையும்” என்று யூதர்களைப் போல் சொல்லாமல், இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை உண்மையில் அறிந்து அவருக்கு தோத்திரமும் துதியும் செலுத்தக் கடவோமாக. ஆமென் .
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இயேசு கிறிஸ்துவோடு உறவாடுதல் ஒர் அறையில் தனித்த ஜெபத்தோடு முடிந்து விடாது. இப்பகுதியில் இயேசவின் அன்பையும் மனத் தாழ்மையையும் குறித்துப் பேசப்படுகிறது. இயேசு தம்முடைய நல்ல குணாதிசயங்களை ஒரு தத்துவத்தில் அடக்காமல் அந்த நல்ல குணாதிசயங்கள் இவ்வுலகத்தில் வெளிப்பட வேண்டும் என்று விரும்புறார். நம்முடைய விசுவாசம் நம்மை உணர்ச்சிப் பூர்வமாக கேட்கத் துண்டுவது, நம் கடவுளோடுகூட உறவாடும் அனுபவத்தோடு இவ்வுலகத்தில் காணப்படும் துயரங்களுக்கும் தொடர்புண்டா? பரி யோவான் சொன்னது போல, நீ கடவுளை நேசித்தால், உடைந்து கிடக்கும் இவ்வுலகத்தைக் குறித்து கரிசனை இல்லாமல் இருக்க முடியாது
ஆண்டவராகிய இயேசு, தன் அரையில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு முழங்காலிட்டு தன் சீஷர்களின் பாதங்களைக் கழுவ எத்தனித்த பொழுது, அவர் நமக்கு ஒரு தாழ்மையான ஊழியக் காரனாயிரு என்ற முன் மாதிரியை ஏற்படுத்தியிருக்கிறார். நம் உடல் உறுப்புகளில் மிகவும் அழகான உறுப்பு நம் பாதங்கள். பாதம் நம் நடத்தையைக் குறிக்கும். நம் நடத்தையைதான் நாம் முதலில் பரிசுத்தம் செய்ய வேண்டும்
தியானிக்கும் தருணம்
‘கிரியை இல்லாத விசுவாசம் செத்ததாய் இருக்கிறது’ இதுதான் நமது நிலைமையாய் இருக்கிறதா? எந்த வகையில்?
ஜெபங்கள்
அன்புள்ள இயேசு சுவாமி, என்னைச் சுற்றியிருக்கும் மக்கள் உம்முடைய அன்பைக் காண அனுதினமும் உதவிடும். இவ்வண்புதான் என்னில் மாம்சமாகிய மற்றவர்களுக்கும் தேவையுள்ளவர்களுக்கு உதவிட கிருபை புரிந்தருளும். ஆமென் .
தனி தியானம்:
1. எந்த வகையில் இந்த தியானங்கள் சீடத்துவத்தைப் பற்றிய உனது புரிந்தறிதலை வளர்த்துள்ளது? 2. இந்த தபசு காலத்தில் சீடத்துவத்தைக் குறித்து கற்றுக் கொண்டவற்றை செயல்படுத்துவதற்கு என்ன முயற்சிகளை மேற்கொள்ளப் போகிறாய்? 3. இயேசுக் கிறிஸ்த்துவின் சிறந்த சீடனாகத் திகழ்வதற்கு கர்த்தர் உனக்கு என்ன கூறுகிறார் என்பதை ஒரு குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைக்கிறாயா?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
15 ஏப்ரல் 2011 (வெள்ளி) வே வ: லூக்கா 14:25-35 பொது ஜனங்கள் கிறிஸ்துவை, அவருடைய அற்புதங்களக்காகவும் உணவு கொடுத்ததற்காக பின் பற்றுகிறார்கள். அவர்களுடைய ஒரே விருப்பம், ஆண்டவராகிய இயேசு ரோம ராஜ்யத்திற்கு ஒரு நல்ல கிரயம் கொடுத்தே ஆக வேண்டும் என்கிறார். அந்த கிரயம், நீங்கள் நேசிக்கும் எல்லா உலகப் பிரகாரமான காரியங்களையும் காட்டிலும், இயேசுவின் மேல் வைக்கும் நேசம் அதிகமாயிருக்க வேண்டும் (14:26). சிலுவையைச் சுமப்பது, அனுதினமும் அவமானப்படுவது, துன்பப்படுவது, அதின் மத்தியில் தொடர்ந்து கிறிஸ்துவுக்கு உங்களைத் தினமும் அர்ப்பணிப்பதுதான் அந்த விலையேறப்பெற்ற கிரயம் ஆகும் என்கிறார்.
மூன்று உவமைகளைக் கொண்டு ஒரு சீஷனின் கடமைகளை இயேசு விளக்குகிறார். முதலாவது, ஒருவன் சீஷத்துவத்தின் கிரயத்தைக் கொடுக்க முடியுயமா? இரண்டாவது, சீஷத்துவ ஜீவியத்தைத் தொடர்ந்து பின் பற்றக் கூடுமா? (14:30), மூன்றவாது சீஷத்துவ ஜீவியத்தில் முழு பெலம் பொருந்தி, தீமையின் வல்லமையை மேற்கொள்ளுகிறோமா?
சீடத்துவம் ஓர் ஆலயத்தின் சுவர்களின் கற்கள் போன்றது. எவ்வாறு, சுவர் கற்கள் எல்லா வித வெளித் தாக்குதல்களையும் தாங்குகிறதோ, அவ்வாறே, சீடத்துவம் எல்லாவிதப் பொல்லாங்கனின் தீமைகளை அனுபவிப்பதும் ஆகும். பொல்லாங்கன் எய்திடும் எல்லா தன்மையான அம்புகளையும் தாங்கிக் கொண்டு தேவனுடைய ஆலயமாகிய ஆத்துமாவைக் கட்டியெழுப்ப வேண்டும்.
ஓர் இராணுவ வீரன் எவ்வாறு எதிரியின் போர் வியூகங்களையும் தந்திரங்களையும் முன்னறிந்து, தன்னுடைய பெலவீனங்களுக்கேற்ப தற்காப்பு அரண்களைப் பெலப்படுத்தி போரிடுகிறானோ, அவ்வாறே ஒரு சீஷனும் பரிசுத்த ஆவியினால் பெலன் பெற்று (யோவான் 14) ஆவிக்குரிய மகா யுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் .
உப்பு எவ்வாறு உணவிற்குச் சுவையூட்டி, பதனிடுகிறதோ, அவ்வாறே ஒரு சீஷனும், உத்தமமும், உண்மையையும் பரிசுத்த்த்தையும் கொண்டு தன் ஆத்துமாவைப் பத்திரப்படுத்தி, தன் ஜீவியத்தை விரிவடையச் செய்ய வேண்டும் .
ஒரு கற்றூண் எவ்வாறு உறுதியும் பத்திரமுமாயிருக்கிறதோ, அவ்வாறே ஒரு சீஷனும் நன்றாய் ஆயத்தமாகி திரண்பட ஆவிக்குரிய ஜீவனை ஜீவிக்கிறது சிலுவையைச் சுமப்பதற்கு சமமாகும். அப்படி ஒரு சீஷன் சிலுவையைச் சுமப்பது மூலம், இவ்வுலகம் வருங்காலங்களில் நல்ல நிலமாக மாற முடியும்.
தியானிக்கும் தருணம்
சீஷத்துவம் ஒரு விளையாட்டான காரியம் அல்ல. சீஷத்துவத்தை மிகவும் அக்கறையோடு பேணி காக்க வேண்டும். நீங்கள் ஆலயமாகிய உங்கள் ஆத்துமாக்களைக் கட்டியெழுப்ப ஆயத்தமா? நீங்கள் சாத்தானின் படையை எதிர்த்துப் போரிட ஆயத்தமா? நீங்கள் இவ்வுலகத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட ஆயத்தமா?
ஜெபங்கள்
அன்புள்ள ஆண்டவரே, என் வாழ்க்கையை சீணத்துவத்திற்கு அர்பனிக்க உதவிடும். உம்முடைய உயிர்த்தெழுதலின் கிருபையையும் அன்பையும் என்மேல் ஊற்றிப் பெலப்படுத்தும். உம்முயைட வார்த்தையைக் கொணடு என்னை உணர்த்தும். ஆமென் .
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
தம்முடைய அனைத்ததையும் கொடுப்பதற்கு, முன் உன்னுடைய அனைத்தையும் அவருக்குக் கொடுத்து விடு
கிறிஸ்து எல்லாவற்றையும் எனக்காக கொடுத்தபடியால், நீயும் உன்னுடைய எல்லாவற்றையும் அவருக்குக் கொடுத்துவிடு
இந்த வசனங்களில் காணப்படும் ஒரே கருப்பொருள், ஏகமனதாக கிறிஸ்துவைப் பின்பற்றுதல். குறிப்பாக கிறிஸ்துவின் சீஷர்கள் ஏக சிந்தையுடன் ஆன்மீகப் பயணத்தைத் தொடர வேண்டும்
இந்த மூன்று காட்சிகளிலும் பரி லூக்கா மிகவும் கடுமையான சீஷத்துவத்தின் நிபந்தனைகளை விவரிக்கிறார். ஆம், சுய மறுதலிப்பு, என்பது ஆன்மீக ஜீவிய பாதையில் ஒரு முக்கிய அம்சமாகும் !
முதல் காட்சியில் (9. 57) பெயர் குறிப்பிடப் படாத ஒரு மனிதன் கிறிஸ்துவைப் பின்பற்ற தானாகவே முன் வந்தான். ஆனால், இயேசுவின் பதிலோ, வேறு விதமாய் இருந்த்து- ஒரு மிஷனரிக்கு இருக்க ஓர் இடம் கிடைக்காது. இரண்டாவது, ஒரு மிஷனரிக்கு உலகப் பிரகாரமான சுய பாதுகாப்பானது அவனுடைய விசுவாச வாழ்க்கைக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடும்
அம்மனிதனின் மௌனம், இயேசுவைப் பின்பற்றுகிற வாஞ்சைக்கு ஒரு குறிப்ட்ட நேரம் நிர்னயிக்கப்படவில்லை. இயேசுவின் இந்த வாக்கு, இக்காலத்திற்கு மிகவும் பொருந்தும்.
மற்ற இரண்டு காட்சிகளும் (9. 59, 61) ஒரே கருத்தை வலியுறத்துகிறது. ஒரு சீஷன், சீஷனாக வேண்டும் என்று தீர்மானம் எடுத்த பிறகு அதைத் தள்ளிப் போட நினைப்பதும் மற்ற தேவனுடைய இராஜ்யத்தின் விரிவாக்கத்திற்கும் எதிராக இருக்கும். எல்லா காரியங்க்களையும் அவன்பின் தள்ள வேண்டும் .
சீஷத்துவத்தின் கிரமம் மறு அர்த்தப்பட வேண்டும். மெய்யாய் இயேசுவின் அழைப்பை ஏற்றுக் கொள்கிறவர்கள், தங்களுடைய குணாதிசயங்களை மாற்றிக் கொள்ளுகிறார்கள். இயேசு நம்மிடத்திலிருந்து முழு அர்ப்பணிப்போடே ஒப்புக் கொடுப்பதேயே விரும்புகிறார்.
நம்முடைய விருப்பமும் கூட நம்முடைய ஆண்டவராகிய இயேசுவை நோக்கியே இருக்க வேண்டும். இயேசுவின் விருப்பத்தையே நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும்
தியானிக்கும் தருணம்
எது என்னை இழுத்துப் பிடித்திருக்கிறது? உலகமா? அல்லது கிறிஸ்துவா?
ஜெபங்கள்
ஆ, ஆண்டவராகிய இயேசுவே, எல்லா உலகப் பிரகாரமான காரியங்களையும் உதறித் தள்ளி விட உதவிடும். நான் உம் வழியில் நடந்து மெய் சீஷனாக மாரிட உதவிடும். ஆமென்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இயேசு எருசலேமை நோக்கி நடந்து போகையில் தனக்குச் சம்பவிக்கப் போகும் பாடுகளைத் தீர்க்கதரிசனமாய், மிகவும் துலலியமாகத் தன் சீஷர்களுக்குக் கூறினார். இச்சம்பவத்தைப் பரி மாற்கு மூன்றாவது முறை இப்பகுதியில் எழுதியுள்ளார். இயேசு, தான் காட்டிக் கொடுக்கப்பட போவதையும், மரணத்திற்கு ஒப்புக் கொடுக்கப்பட போவதையும், பரியாசம் பண்ணப்பட போவதையும், சாட்டையால் அடிபடப் போவதையும், மரிக்கப் போவதையும், மூன்றாம் நாளிலே (மூன்று நாட்களுக்குப் பிறகு அல்ல!) உயிர்த்தெழப் போவதையும் தீர்க்கதரிசனமாய் உரைத்தார். இருப்பினும் சீஷர்கள், தங்களின் கடின இருதயத்தின் நிமித்தம் இந்த தீர்க்கதரிசனத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமலும, உணராமலும போனார்கள்
செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும், யோவானும் இயேசுவிடத்தில் வந்து, இயேசுவின் வலது-இடது பாரிசத்தில் தாங்கள் அமர்த்தப்படுவதற்குத் தங்களுக்கு அதிகாரம் கொடுக்கும்படி கேட்டுக கொண்டார்கள் (10:37). இதை அறிந்த மற்ற பத்து சீஷர்கள், அவர்களுடைய சுயநலமான வேண்டுதலைக் கண்டு, கோபமானார்கள் (10:41). ஒரு வேளை அவர்கள் யாக்கோபோடும் யோவானோடும் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருககலாம். ஒரு வேளை அந்த பத்து சீஷர்களும் தாங்களும் அவர்களைப் போல சம உரிமை உள்ளவர்கள் என்று வாதித்திருககலாம். இப்படிப்பட்ட தர்க்கங்களும் வாதங்களும் பல முறை நடந்ததுதான் மிகவும் வருத்தமான விசயம். இயேசு பல முறை சீஷர்களுக்கு உண்மையான பெரியவன் யார் என்று ஏற்கனவே போதித்து விட்டார் (மாற்கு 9:35).
ஆனால், இயேசு கோப்படவோ பொறுமையிழநதோ காணப்படாமல் மறுபடியும் தன் சீஷர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார். ஒரு சீஷன் எப்படிப் பெரியவனாய் இருப்பது? தம் ஆதீக்கத்தின் கீழ் இருப்பவர்களை இரும்புப் பிடியாய் இருமாப்பாய் ஆதிக்கம் செலுத்துவது கிடையாது. மாறாக, நாம் மற்றவர்களுக்கு சேவை செய்பவனே மெய்யாகவே பெரியவனாய் இருககிறான் என்று உணர்த்தினார். இக்கருததை இயேசு வலியுருததவே தன் ஜீவனையே அனைவருககும் மீட்கும் பிணைப் பொருளாக்க் கொடுத்து ஒரு முன் மாதிரியைத் நமக்கு விட்டுச் சென்றார்
தியானிக்கும் தருணம்
மனிதன் பொதுவாக எல்லாரையும் ஆளுகை செய்ய வேண்டும் என்ற இச்சையுடையவன். இது கிறிஸ்தவர்களுக்கும் விதிவிலக்கு இல்லை. தற்காலத்தில் ஜனங்களை ஆளுகை செய்யப் பல தலைமைத்துவப் போராட்டங்களை ஒரு சில சபை தலைவர்கள் நடத்திக் கொண்டிருககிறார்கள். ஆனால் சீஷனாகிய சபை தலைவர்கள் சிறு பிள்ளைகள் போல் கற்றுக் கொள்ளும் மனபான்மையை வளர்க்க வேண்டும். சிந்தையில் அனுதினமும மறுரூபமாக வேண்டும். பரலோக இராஜ்யத்தின் நெறிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வேத வசனத்தை இருதயத்தில் எழுதி வைத்து, மனத் தாழ்மையாக மற்றவர்களுக்குச் சேவை செய்து, மெய்யான சீஷனாகவும் தலைவர்களாகவும் ஆவோமா?
ஜெபங்கள்
அன்புள்ள ஆண்டவராகிய இயேசுவே, உம்மையே நாங்கள் நோக்கிப் பார்த்து, உம்மைப்போல் மருரூபமாக தினமும் உதவிடும். நாங்கள் எப்பொழுதும் எச்சரிக்கையாயிருந்து, உமது நாம மகிமைக்காக மற்றவர்களுக்குச் சேவை, ஊழியம் செய்ய உதவிடும். ஆமென் .
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
மனிதன் முதன்மை விரும்பி. அப்படியானால் நாம் கிறிஸ்துவின் உண்மையான சீஷர்கள் அல்லர். இயல்பாகவே மனிதன் பெருமையான காரிங்களைப் பேசவும், முதன்மையான இடத்தை இச்சிக்கிறவனாயிருககிறான்
ஏன் இயேசு ஒரு குழந்தையைத் தம்மிடம் அனைத்துக் கொண்டு, தன் சீஷர்களை நோக்கி, “யார் தேவனுடைய இராஜ்யத்தில் பெரியவனாய் இருப்பான்” என்று கேட்டார்.
அக்காலசமுதாத்தில் குழந்தைகளுக்கு அங்கீகாரமும், அந்தஸ்தும் குழந்தை பாதுகாப்புச் சட்டங்களும் கிடையாது. ஆகவே, அக்காலத்தில் குழந்தைகள் எல்லா பொல்லாத கொடுமைகளுக்கும் உள்ளானார்கள். இயேசு ஒரு குழந்தையை அனைக்கும் பாவனையின் மூலம், சமுதாயத்தில் குழந்தைகளுக்கு அங்கீகாரமும், அந்தஸ்தும கொடுத்து அவர்களைக் கனப்படுத்துகிறார்.
ஆகவே, “யார் தேவனுடைய இராஜ்யத்தில் பெரியவனாய் இருப்பான்?” என்ற கேள்விக்கு தன் இருதயத்தில் குழந்தைகள் போல் தாழ்மையுடன் இருப்பவனே என்ற விடை தானாகவே கிடைக்கும் .
இருதயத்தில் தாழ்மையாயிருப்பது என்பது எவன் ஒருவன் தன் சுய சித்தத்தையும், பெறுமைகளையும், சுயநலத்தையும் வெறுத்துத் தள்ளி விடுகிறானோ, அவனே பரலோக இராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான். மற்றும் அதே தாழ்மை குணத்தோடு சமுதாயத்தில் மிகவும் தாழ்ததப்பட்டிருககும் ஜனங்களுக்கு, முக மலர்ச்சியோடும், அன்போடும், கரிசனையோடும், மன உருக்கத்தோடும சேவை செய்தால், தாம் தேவனை முக முகமாய் தரிசிக்கிறோம் என்று பொருள்படும். எப்பொழுது நாம் நம்முடைய ஆஸ்தி, சக்தி, அதிகாரம், திறமைகள், நேரம் போன்ற தாலந்துகளைத் தாழ்த்தப்பட்ட ஜனங்களுக்குச் செலவிட்டு, அச்ஜனங்களின் சமுதாய அந்தஸ்தை உயர்த்துகிறோமோ அப்பொழுது தேவ பிரசன்னம் தம் மத்தியில் பிரதிபலிக்கும் .
இயேசுவின் சீஷர்களாகிய நாம், எப்பொழுது நம்முடைய இரு கரங்களையும் மனமுவந்து திறந்து சமுதாயத்தில் தாழ்ததப்பட்ட ஜனங்களை வரவேற்கிறோமோ, அப்பொழுது இயேசு தம் மத்தியில் ஒரு ஊழியக்காரனாய்த் திகழ்வார். ஆண்டவராகிய இயேசு நம்மைத் தொட, அணைக்க, சுகமாக்க, மன்னிக்க, உதவிட, சேவிக்கவே நம் சிலுவையைச் சுமந்தார்.
தியானிக்கும் தருணம்
நான் இயேசுவின் சீஷனாக வாழ, தாழ்த்த, சேவிக்க மற்றவர்களுக்குச் சேவை செய்ய என்ன செய்ய வேண்டும்?
ஜெபங்கள்
அன்புள்ள ஆண்டவரே, நீர் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறீர். தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபையளிக்கிறீர். தயவாய் எங்கள் மனமேட்டிமை, சுயநீதி ஆகியவற்றை நீக்கிப்போட உதவி செய்யும். தாழ்மையின் ஆவியையும், சேவை செய்யும் ஆவியையும் என்னுள் தாரும. உம்முடைய வழிகளில் நடக்கக் கற்றுத்தாரும். உம்முடைய நற்பண்புகளின் பாத்திரமாக என்னை மாற்றும். ஆமென்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)