அன்பான நண்பர் சந்தோஷ் அவர்களே, பயனுள்ள கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள்; அதிகம் பேசாதவர்கள் அதிகம் சிந்திப்பார்கள்; அதிகம் சிந்திக்காதவர்கள் அதிகம் பேசுவார்கள்; சிந்திக்காமல் பேசுகிறவர்களும் உண்டு; எழுதுகிறவர்களும் உண்டு..!
இதில் நீர் எந்த வகை என்று உமக்கே தெரியும்;அந்த வகையில் அதிகமாக எழுதும் சிலருடன் ஒப்பிடுகையில் அதிகமாக வாசிக்கும் பழக்கமுடைய தாங்களே இந்த கேள்விகளுக்கு பதில் சொன்னால் நல்லது; ஏனெனில் உங்களுக்கு விவாதமும் கூட விருப்பமில்லாத களம் தானே..?
சந்தோஷ் அவர்கள் கேள்விகள் தொடரும் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்; அவர் கேட்ட கேள்விகளுக்கு அவரையே பதில் சொல்ல வேண்டியிருக்கிறேன்; அல்லது இதனை கவனிக்கும் நண்பர்கள் யாரேனும் இவற்றுக்கு பதில் அளிக்கலாம்; இந்த கேள்விகள் சகோதரி கோல்டா அவர்களுக்குப் பிடித்தமான கேள்விகள் என்று எண்ணுகிறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அன்பான நண்பர் சந்தோஷ் அவர்களே, பயனுள்ள கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள்; அதிகம் பேசாதவர்கள் அதிகம் சிந்திப்பார்கள்; அதிகம் சிந்திக்காதவர்கள் அதிகம் பேசுவார்கள்; சிந்திக்காமல் பேசுகிறவர்களும் உண்டு; எழுதுகிறவர்களும் உண்டு..!
இதில் நீர் எந்த வகை என்று உமக்கே தெரியும்;அந்த வகையில் அதிகமாக எழுதும் சிலருடன் ஒப்பிடுகையில் அதிகமாக வாசிக்கும் பழக்கமுடைய தாங்களே இந்த கேள்விகளுக்கு பதில் சொன்னால் நல்லது;ஏனெனில் உங்களுக்கு விவாதமும் கூட விருப்பமில்லாத களம் தானே..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இன்றைய கால கட்டத்தில் எதற்கெடுத்தாலும் ஊழியக்காரர்களின், விசுவாசியின் ஆவியை சந்தேகப்படுவது சாதாரணமாகி விட்டது. அதிலும் ஜாமக்காரன் இதழின் மூலம் அனேக ஊழியரின் ஆவிகள் கேள்விக்குரியதாகி விட்டன. இதில் குறை சொல்பவர் சரியானவரா அல்லது குற்றம் சுமத்தப்படுபவர் சரியானவரா என அனேகர் தலையை பிய்த்து கொள்ள வைக்கிறது.
ஆவியின் அபிஷேகம் என்னும் பெயரில் ஊழியம் நடத்துபவர்களை குறை சொல்லும் மற்றவர்களும் நான் நடத்தும் கூட்டங்களில் தேவனுடைய அசைவாடுதலை காண முடிந்தது என பெருமையாக சொல்லி கொள்கின்றனர்.
ஒரு சில ஊழியக்காரர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எப்படியெல்லாம் பாவம் செய்தார்கள் என சொல்லி அதற்க்கு காரணம் அந்த ஊழியரின் கூட்டத்தில் கலந்து கொண்டு பாவம் செய்தவர் பெற்று கொண்ட ஆவியே என்றும் சொல்கின்றனர். அதாவது பாவம் செய்தவர்கள் அந்த ஊழியரின் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் பாவம் செய்யாமல் தன்னை காத்து கொண்டிருப்பார் என்ற ரீதியில் ஒரு சில ஊழியர்களின் மேல் குற்றம் சாட்டப்படுகிறது.
ஏற்கனவே அனேக கேள்விகளுக்கு (மரணத்துக்கு பிறகு மனிதனின் நிலைமை என்ன?, கிருபை மட்டும் போதுமா? அல்லது கிரியையும் செய்ய வேண்டுமா?) என்பது போன்ற கேள்விகளுக்கு தெளிவான பதில்களை தெரிந்து கொள்ள முடியாத விசுவாசிகள், இந்த கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வேதத்திலிருந்தே எடுத்து சொல்ல கூடிய தேவனை மனிதர்களுக்கு தூரமாக்க்கும் பல்வேறு குழுக்களால் வஞ்சிக்கப்படும் அபாயத்தில் இருக்கின்றனர்.
இது போதாதென்று ஊழியர்கள் பெற்ற ஆவிகளும் சரியில்லை, இந்த சபை சரியில்லை, அந்த சபை சரியில்லை மொத்தத்தில் எந்த சபையும் சரியில்லை போன்ற கருத்துக்களாலும் விசுவாசிகள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.
இது போன்ற கருத்துக்களை சொல்பவர்களுக்கு நமது கேள்விகள் :
1. மற்ற ஊழியரின் ஆவியின் அபிஷேக கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் பாவத்தை விட முடியாதவர்களை குற்றம் சாட்டுகிறீர்கள். அப்படியானால் உங்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கிருஸ்துவை போல மாறி இருக்கின்றனரா? அல்லது உங்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு எத்தனை சதவீதம் பேர் கிருஸ்துவுக்குரிய சுபாவத்தை பெற்றிருக்கின்றனர்.? அல்லது மற்றவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு பாவத்தை விட முடியாதவர்களை போல உங்களின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் யாரும் இல்லையா?
2. கிருஸ்துவ கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது, உடலில் உண்டாகும் ஒருவித சிலிர்ப்பு போன்ற அனுபவம் சரியான அனுபவமா? அல்லது தவறானதா? ஏன் யாரும் இதை பற்றி எதுவும் சொல்வதில்லை? இத்தகைய அனுபத்துக்கு வேத அடிப்படையிலான ஆதாரம் ஏதாவது உண்டா? அவ்வாறு ஆதாரம் இல்லாவிடில் இந்த போன்ற அனுபவம் பெறும் கூட்டத்தில் இடைபடுவது தவறான ஆவியா?
3. ஒரு ஊழியர் இயேசுவை மகிமைப்படுத்துகிறாரா? இல்லைய என்பதை வேண்டுமானால் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஒருவர் அறிந்து கொள்ளலாம். ஆனால் அங்கே இடைபடுவது பரிசுத்த ஆவியா? இல்லை வேறோரு ஆவியா? என்பதை எப்படி அறிந்து கொள்வது?
4. ஒரு ஊழியர் இயேசுவை மகிமைப்படுத்துகிறவர், அவரின் செய்தியால் தேவனுக்கு நெருக்கமானேன் என அவரின் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் முடிவு செய்திருக்கும் போது, அந்த ஊழியர் பெற்றிருப்பது வேறு ஒரு ஆவி என உங்களை போன்ற ஊழியர்களால் சொல்லப்படுகிறது.
அப்படியானால் இயேசுவை மகிமைப்படுத்தும் கூட்டத்தில் இன்னொரு ஆவி எப்படி செயல்பட முடியும்? ஒரு மனிதனே தன்னைப் போல இன்னொரு மனிதன் கையெழுத்து போட அனுமதிக்காத போது தன்னை மகிமைப்படுத்தும் கூட்டத்தில் இன்னொரு ஆவி செயல்படுவதை அனுமதிக்கும் அளவுக்கு இயேசு கிருஸ்து வல்லமையில்லாத தெய்வமா?
இவ்வாறு இல்லாவிடில் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவரின் அனுமானம் அல்லது அவரின் உணர்தல் தவறானதா?
5. இயேசுவை மகிமைப்படுத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டு உடல், மன ரீதியாக சில நல்லவைகளை பெற்று கொண்டேன், அந்த ஊழியர் மூலமாக இயேசு எனக்கு உதவி செய்தார் என ஒரு மனிதன் நினைத்திருக்கும் போது அந்த ஊழியரின் கூட்டத்தில் செயல்படுவது கள்ள ஆவி என சொல்லப்பட்டால் இயேசுவை விட அந்த கள்ள ஆவியே நல்லதை செய்யும் போலிருக்கிறதே என ஒருவர் நினைக்க வாய்ப்புண்டல்லவா?
(இந்த கேள்விகளுக்கு ஜாமக்காரன் மட்டுமல்ல, பதில் தெரிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம்)
(கேள்விகள் தொடரும்)
-- Edited by SANDOSH on Wednesday 9th of March 2011 06:54:21 PM