உங்களின் கருத்துதான் என் கருத்தும் சகோதரரே!. எம் வேதாகமத்திற்கு மிஞ்சி வேறு எந்த வெளிப்படு்த்தல்களோ வசனங்களோ இல்லை.
தமிழின் ஒப்பற்ற நீதிநூல் திருக்குறள். அதற்கான மதிப்பு அவ்வளவே!. பல இடங்களில் திருக்குறள் ஒன்றுபட்டாலும் நீங்கள் சுட்டிக் காட்டிய பிரகாரம் சில இடங்களில் முரண்படுகிறது.
நல்லகாரியங்களுக்கு பொய் பேசலாம் என்கிறது குறள். ஆனால் நம் வேதாகமோ இதற்கு முரண்படுகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
தற்போதைய கிறிஸ்துவத்தில், பிரபலமானவர்களை கிறிஸ்துவர்கள் என்று அறிவித்துகொள்வதில் நாம் மகிழ்ச்சி கொள்கிறோம். சமீப காலமாக, திருவள்ளுவரும் கிறிஸ்துவரே என்றும், திருக்குறள் பைபிள் வசனங்களையே சொல்கிறது என்று சில கிறிஸ்துவர்கள் கூற. ஹிந்துக்கள் கொதித்தெழுந்து, திருவள்ளுவர் ஹிந்துவே என உரிமை கொண்டாட, சிலர் அவரை சமணர் என்று அறிவிக்க, பல கூத்துக்கள் நடைபெறுகிறது.
நான் இங்கு என் தனிப்பட்ட கருத்தையே வைக்கிறேன். என் கருத்து தவறாயிருக்கும் பட்சத்தில் எனக்கு நண்பர்கள் சரியான வழியை காண்பிக்க வரவேற்கிறேன்.
திருவள்ளுவர் கிறிஸ்துவரை இருக்க வாய்ப்புகள் குறைவாய் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். மேலும், சத்திய வேதம் இருக்க, திருக்குறள் கிறிஸ்துவத்திற்கு கூடுதலாய் என்ன சேர்த்துவிட போகிறது. பவுலையும், பேதுருவையும் பார்த்து கிறிஸ்துவை ஏற்காதவர்கள், திருவள்ளுவரை பார்த்தா ஏற்க போகிறார்கள்? தவிர, திருக்குறளும் கிறிஸ்துவத்திற்கு சில இடங்களில் முரண் படுவதாகவே தோன்றுகிறது. உதாரணமாக, கீழ்கண்ட குறளை பார்க்கவும்.
"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலி தரும். "
இங்கு, தேவ சித்தமில்லாத காரியமாய் இருந்தாலும், நாம் முயன்றால், நாம் வேலை செய்த அளவு கூலி கிடைக்கும் என்று சொல்லுவதாக கற்பிககபடுகிறது. இது மனித முயற்சிகளை தேவனை விட உயர்த்துவதாகவே உள்ளது. தேவ சித்தமில்லாவிட்டால் நம் பிரயாசம் எல்லாம் வீண் என்பதே உண்மை, அதையேதான் வேதம் கற்ப்பிக்கிறது.
கிறிஸ்த்துவை பார்த்து கிறிஸ்துவத்திற்கு வராமல், வேறு யாரையாவது பார்த்து வருபவர்கள் வழிவிலகி போகும் அபாயத்தில் உள்ளார்கள். அதேபோல், கிறிஸ்துவத்தின் சப்போர்ட்டுக்கு ஆள் பிடிக்கும் வேலையும் நமக்கு வேண்டாம். இந்த உலகமே நமக்கு எதிராக நின்றாலும், நாம் கிறிஸ்துவையே சார்ந்துகொள்ளும் நிலைக்கு முன்னேற, நாம் இந்த உலக ஞானிகளையும் அவர்கள் போதகங்களையும் தள்ளிவிட்டு, வேதத்தை பருகி, கிறிஸ்துவில் நிலைக்கவேண்டும்.