Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யோவான் 4 : 1-ல் இயேசு யாருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
யோவான் 4 : 1-ல் இயேசு யாருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்?
Permalink  
 


// "நீ மன்னித்தால் உனக்கு மன்னிப்பு உண்டு" நீ மன்னிக்கவில்லை  என்றால் உனக்கு நிச்சயம் மன்னிப்பு இல்லை..//.

அடியேன் கொல்வின் அவர்களுக்குக் கொடுத்த அறிவுரையின் விளைவின் காரணமாகவோ என்னவோ மேற்கண்ட வரிகள் ஒரு குறிப்பிட்ட நபரிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது;இந்த நபருடன் நான் விவாதித்து நேரத்தை வீணாக்க எனக்கு கட்டளையிடப்படவில்லை;ஆனாலும் எனது கருத்து திரிக்கப்பட்டு திசைதிருப்பப்படாதிருக்க வேண்டி எனது விளக்கத்தினை சுருக்கமாக எனதருமை வாசகர்கள் முன்வைக்கிறேன்.

மன்னிப்பு என்பது சாதாரண சொல்வழக்குக்கு அப்பாற்பட்ட உன்னதமான குணாதிசயம் என்று உயர்த்தியே குறிப்பிட்டிருக்கிறேன்;மன்னிப்பு எனும் நற்குணத்தைக் கூற அதைவிட சிறந்த சொல்லும் தமிழில் இல்லை;ஆனால் ஆங்கிலத்தில் சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்தக் கூடிய சொற்கள் உண்டு;என்னைப் பொருத்தவரையில் தனிப்பட்ட முறையில் எனக்கு எதிரிகளும் இல்லை;அப்படியே என்மீது வருத்தமும் கசப்பும் உள்ளோரிடம் வலியச் சென்று சீர்பொருந்துகிறேன்;அப்படிப்பட்ட வாய்ப்புக்காக ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்.

ஆனால் இந்த விவாத மேடையைப் பொறுத்தவரையில் நான் மன்னிப்பு சம்பந்தமாக‌ வைத்திருக்கும் குறியீடு வித்தியாசமானது;அது எனது தனிப்பட்ட உரிமை மற்றும் எனக்கும் என் தேவனுக்குமான காரியமாகும்;அவர் என்னிடம் சொல்லுகிறார்,உன்னை விரோதிப்பவர்கள் எனக்கும் விரோதி என்பதாக;அப்படி சொன்னவர் இயேசு அல்ல,பிதா என்றா சொல்லுவீர்கள்? எனவே என்னுடைய விசுவாசத்துக்கும் என்னுடைய நண்பர்களின் விசுவாசத்துக்கும் எதிராக சவால் விட்டு சுயசித்தத்துடன் நேரடியாக மோதுவோரை நானும் எதிர்க்கிறேன்.

இது சம்பந்தமான முந்தைய விவாதத்துக்கு தொடுப்பைத் தொடருமாறு பணிவுடன் வேண்டுகிறேன்..சிரமத்துக்கு வருந்துகிறேன்..!


http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&topicID=38770805&p=3


எப்படியெனில் தேசத்தைப் பாதுகாப்பதற்காக இராணுவ வீரர்கள் பயிற்றுவிக்கப்பட்டு செயல்பட்டாலும் அவர்களால் தேச ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாதிகளுடன் சமரசம் செய்துகொள்ளமுடியாது;அதுபோலவே என் தேவனைப் பகைத்து தூஷிப்பவர்களை அவருடைய நாமத்தினிமித்தம் நான் சத்தியத்தினிமித்தம் எதிர்க்கிறேன்;அவர்களை என்னால் பொறுத்துக்கொள்ள‌முடியாது;இதற்குக் காரணம் என்னுடைய எதிரிகளுக்கு என் இரட்சகரே சத்துருவாக இருப்பதே.அவரை மீறி இவர்களுடன் உறவு கொள்ள என்னால் முடியாது;

நான் இராஜாவின் போர்சேவகன் அல்லவா..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
RE: யோவான் 4 : 1-ல் இயேசு யாருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்?
Permalink  
 


//மற்றும் உங்களின் இறுதிக் கேள்வி இயேசுவை மேசியா வென்று யூதர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இன்று கூட அதே நிலைமை தான். யூதர்கள் இயேசுவை கடவுளுக்கு சமமாக பார்க்க விரும்பாது காரணத்தால் தான் இவ்வளவுக்கும் காரணம். நன்றி //

அன்பு நண்பர் ராஜ். இந்த கருத்தில் இருந்த நான் சற்று வேறுபடுகிறேன். யூதர்கள் இயேசுவை அன்று ஏற்று கொள்ளாததின் காரணம்.

1. அவர்கள் எதிர்பார்த்தது ரோம அடக்குமுறையில் இருந்து ஒரு விடுதலை (மோசே பார்வோனிடம் இருந்த பெற்று கொடுத்ததை போல) ஆகையால் இயேசுவும் மோசேயை போல ஒரு "அடையாளம்" காட்டுவர் என்று நம்பினார்கள்

  • வேறு சிலர் அவரைச் சோதிக்கும்படி வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று அவரிடத்தில் கேட்டார்கள். (லூக்கா 11:16)

     இந்தச் சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை (லூக்கா 11:29)

2. அவர்கள் மேசியா ஒரு ராஜா என்று மட்டுமே நினைத்தார்கள் தேவன் அல்லது ஆண்டவர் என்று நினைக்கவில்லை

  • அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரன் என்று வேதபாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள்?. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே. தாவீதுதானே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். (மாற்கு 12:35-37)
        
    3. அவர்களுக்கு தங்களுடைய அதிகாரத்தை தக்கவைக்கவேண்டும் இந்த இயேசுவால் ரோமர்கள் தங்களுடைய அதிகாரத்தை பறித்துவிடக்கூடாது என்றும் நினைத்தார்கள்

  • நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள். (யோவான் 11:48)

இன்றைய யூதர்கள் பின்வரும் காரணங்களுக்காக இயேசுவை மறுக்கிறார்கள்.

1. அவர் மேசியாவுக்குள்ள எல்லா தீர்கதரிசனங்களையும் இன்னும் நிறைவேற்றவில்லை. விசேஷமாக தேவாலயம் கட்டப்படவில்லை.

2. அவர்களை பொறுத்தவரையில் மரிக்கிறவர் மேசியா இல்லை. ஜெயிக்கிறவரே மேசியா. இவர்கள் அந்தி கிறிஸ்து வெளிப்படும் போது அவனை மேசியா என்று நம்பி ஏமார்ந்து பின்பு இயேசுவை ஏற்று கொள்வர்ர்கள். புறஜாதிகளில் ஒரு நிறைவு வரும்வரை அனேக யூதர்கள் விசுவாசிக்கமாட்டார்கள் என்று வேதம் சொல்லுகிறது

  • மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும். (ரோமர் 11:25)


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நண்பர் ராஜ் அவர்களே அருமை நண்பர் கொல்வின் அவர்களின் தாழ்மையை கவனித்தீர்களா? இந்த அருமையான குணாதிசயமானது கிறித்துவை தெய்வமாகத் தொழுவோருக்கே வாய்த்திருக்கும்;இனி நீங்களே உங்கள் பாதையைத் தேர்ந்தெடுக்கவேண்டும்;நீங்கள் எங்களுக்கு கற்பிக்க‌ விரும்புகிறீர்களா அல்லது கற்க விரும்புகிறீர்களா என்பதை "நறுக்" கென எடுத்துச் சொல்லுங்கள்;எனது கேள்விகளில் தாங்கள் கண்டுகொள்ளாதவற்றை சற்று கவனியுங்கள்;தொடருங்கள்..!

அருமை நண்பர் கொல்வின் அவர்களின் பெருந்தன்மைக்காகக் கர்த்தருக்கு மகிமை செலுத்துகிறேன்;அடியேன் ஏற்கனவே நண்பர் விஜய் அவர்களுக்கு முன்வைத்த வேண்டுகோளை உங்களிடமும் வைக்கிறேன்;தயவுசெய்து மன்னிப்பு எனும் மாபெரும் பரிசை சாதாரணமான சூழ்நிலைகளில் பயன்படுத்தாதிருங்கள்;ஏனெனில் நீங்கள் உங்களுக்காக எழுதவில்லை; கர்த்தருக்காக எழுதுகிறீர்கள்;உங்கள் கண்டனத்துக்குக் காரணமான கணிப்பு ஒரு கட்டத்தில் சரியாகவும் இருக்கக்கூடும் அல்லவா? அப்படியானால் உங்கள் மன்னிப்பு என்னவாகும்? ஆண்டவர் ஒருபோதும் யாரிடமும் மன்னிப்பு கேட்கிறதில்லை;அவருக்காக எழுதும் நீங்களும் மன்னிப்பு கேட்கவேண்டாம்; நண்பர்களுக்குள்ளும் மன்னிப்பு என்ற வார்த்தையோ, நன்றி என்ற வார்த்தையோ அர்த்தமற்றது;நாம் அடித்துக்கொண்டாலும் அணைத்துக்  கொள்ளக்கூடியவர்களே;எனவே அதிகபட்சம் வருந்துகிறேன் அல்லது பொறுத்துக்கொள்ளுங்கள் என்றே குறிப்பிடவும்;ஆனாலும் அடியேனைப் போன்றவர்கள் எழுத்து ஓட்டத்தில் கிண்டலாக மன்னிக்க,என்று குறிப்பிடுவதுண்டு;அது கணக்கில் கொள்ளப்படாது.நன்றி..!(???)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோ. ராஜ் அவர்களே மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களின் சில வசனங்கள்தான் அப்படி எண்ணத் தோன்றியது

//பரிசுத்த ஆவி என்பது தேவனின் செயல் நடப்பிக்கும் சக்தி.//

பொதுவாக யெகோவா சாட்சிகள் இந்த வசனத்தைப் பாவிப்பார்கள்.

பரி்த்த ஆவி ஆள்தத்துவம் உடையவர். (யோவா 4:24)

1 கொரிந்தியர் 2:10 இல்
நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.

இலிருந்து அவர் தனித்துவமான நபர் செயல்நடப்பிக்கும் சக்தி அல்ல தெளிவு.

சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். (யோவான். 16:13)


அவருக்கு சிந்தை இருப்பதாக ரோமர் 8:27 கூறுகிறது.
எபேசியர் 4.30 இல் உணர்வுடையவராக இருப்பதும்

உங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். இனி கவனமாக எழுதுகிறேன். சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 8
Date:
Permalink  
 

/// அருமை நண்பர் கொல்வின் அவர்களுக்கு ஒரு ஆலோசனை;நம்முடைய தளத்தில் நுழைந்து பல்வேறு ஐயங்களை எழுப்பி வரும் நண்பர் இராஜ் அவர்களை யாருடனும் ஒப்பிட்டு யோசிக்க வேண்டாம்;ஏனென்றால் அவர் கோவை வெறியன் தளத்தில் எழுதும் தேனீர் பூக்கள் என்பவராக இருப்பாரோ என்ற ஐயம் எழுவது இயல்பு;ஆனாலும் அவர் தன்னை முழுவதுமாக வெளிப்படுத்தும் வரை பொறுத்திருப்போம்;நம்மைப் பொறுத்தவரை அவர் குழந்தையாகவே இருக்கட்டும்;ஆனாலும் அவர் சாதாரண குழந்தை அல்ல; நூலகத்துக்குச் சென்று ஆராய்ச்சியெல்லாம் செய்து விவாதிக்கவும் ஆயத்தமாகி நிற்கும் குழந்தையாவார்;அவரிடம் நான் கேட்ட சில எளிமையான கேள்விகளிலேயே அவர் நம்மிடம் கேட்ட கேள்விக்கு பதில் இருக்கிறது;அதற்கு பதிலளிக்க அவர் முதலில் முயற்சிக்கட்டும்..!

நண்பர் இராஜ் அவர்களே நீங்கள் தொடருங்கள்;நாம் ஆரம்பத்தில் கதைத்த இடத்திலிருந்து தொடருவோம்;எனக்குரிய தங்களால் இயன்ற பதில்களைத் தருவீர்களா அல்லது நான் இன்னும் விளக்கமாக கேள்வி கேட்கட்டுமா? மன்னிக்க,கேள்வி கேட்ட உங்களுக்கு பதிலுக்கு பதிலாக கேள்வியை பதிலாக முன்வைப்பது முறையற்றது போல இருக்கலாம்;ஆனாலும் இந்த கேள்விகள் நாம் நட்புகொள்ள உதவியாக இருக்கும் என்று எடுத்துக் கொள்ளுங்களேன்.///

சில்சாம் அவர்களே,
இதன் அர்த்தம் என்ன நண்பரே, நீங்கள் என்னை தவறாக புரிந்துகொண்டு இருக்கின்றிர்கள்  போல ..............  யாரயோ என்னுடன் இணைத்து பேசுறீங்கள் ::::::




__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 8
Date:
யோவான் 4 : 1-ல் இயேசு யாருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்?
Permalink  
 


/// தாங்கள் இதுவரை வாசித்துள்ள பிரபல போதகர்களின் புத்தகங்களைக் குறித்த உங்கள் எண்ணத்தை சற்று பகிர்ந்துகொள்ளுவீர்களா? உங்களை அண்மையில் மிகவும் கவர்ந்த உயிருடனிருக்கும் அல்லது மரித்துவிட்ட போதகர் யாரோ..?///

பிரபல போதகர்கள்  எழுதிய புத்தகம் என்றால் அநேகம் உண்டு. அதை நான் பதிவுகள் கொடுக்கும் பொது அந்த பெயரையும் குறிப்பிட்டு சொல்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த போதகர் என்றால் காலம் சென்ற  பாஸ்டர், தினகரன் ஐயா அவர்களே, நான் சத்தியத்தை முதல் முதலாக இவரின் பிரசங்கத்தின் மூலமே ஏற்றுக்கொண்டேன். இவரின் பாடல்கள் மற்றும் பிரசங்கம் என்றால் விரும்பி கேட்பது உண்டு. மற்றும் போங்கே, பென்னி இன், இன்னும் சிலர் ........

///கர்த்தருடைய நாமம் யெகோவா என்பதை எப்படி தெரிந்துகொண்டீர்கள்? அவருக்கு வேறே நாமங்கள் வழங்கப்படவில்லையா? அந்த விசேஷித்த நாமத்தை உச்சரிக்க ஏன் யூதர்கள் அஞ்சினார்கள்? அந்த நாமத்தினால் புறவினத்தார் இரட்சிக்கப்படுவார்கள் என்று அப்போஸ்தலர்கள் போதித்தனரா? ஸ்தேவான் போன்ற புனிதர்கள் கொடூரமாகக் கொலைசெய்யப்படவும் யூதர்களான அவர்கள் யூதர்களால் பகைக்கப்படவும் காரணமாக இருந்த பிரச்சினை எது?///

தேவனுடைய  பெயர் ''கர்த்தர்'' , ''கடவுள்'' என்பது தான், அவறது பெயர் என்று சிலபேர் நினைக்கிறார்கள்.  உண்மையில் சங்கிதம் 83 :17  இன் படி அவருக்கு யேகோவா என்ற நாமம் இருக்கு. இது பைபளில் 7000  தடவைகள் வருகின்றன. யேகோவா என்ற பெயரின் அர்த்தம் என்னவென்றால் தம்முடைய ஒவ்வொரு வாக்கையும் காப்பாற்றுபவர் என்றும், தம்முடைய ஒவ்வொரு நோக்கத்தையும் நிறைவேற்றுபவர் என்று அர்த்தம். அத்துடன் எப்படி எல்லாம் ஆக வேண்டுமோ அப்படி எல்லாம் ஆகிறவர் என்று இன்னுமொரு அர்த்தமும் உண்டு.

யூதர்கள் யெஹோவா என்ற நாமத்தை உர்சரிக்காது இருந்ததுக்கு இரண்டு  காரணங்கள் உண்டு:. அதில் ஒன்று பூர்வகாலத்தில் இந்தப் பெயர் எப்படி உச்சரித்து என்று யாருக்கும் தெரியாது என்ற காரணத்தால் அதை உச்சரிக்காது விட்டார்கள். இரண்டாவது காரணம் யூதர்களின் பாரம்பரியத்தோடு சேர்ந்தது. அதாவது எபிரேயர்களுக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமான சட்டங்களை தவறாக அர்த்தம் கொண்டதின் காரணமாக யேகோவா என்ற பெயரை சொல்லாது விட்டார்கள்.  :::::::::  இருந்தாலும் அவரின் பெயரை அழைத்து ஜெபிப்பதோ எனக்கு முக்கியமாக இருப்பதால் கடவுளின் பெயரை அழைக்க தவறுவதில்லை.

மற்றும் உங்களின் இறுதிக் கேள்வி இயேசுவை மேசியா வென்று யூதர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இன்று கூட அதே நிலைமை தான். யூதர்கள் இயேசுவை கடவுளுக்கு சமமாக பார்க்க விரும்பாது காரணத்தால் தான் இவ்வளவுக்கும் காரணம். நன்றி

-- Edited by raj5481 on Thursday 3rd of March 2011 11:55:48 PM



__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

raj5481 wrote:

திரு, சில்சாம் அவர்களே, யோவான் 4 : 1 இன் படி ''யோவானைப் பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங் கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது'', ............எனக்கு இதில் ஒரு சிறிய சந்தேகம்...... இயேசு யாருக்கு ஞானஸ்நானங் கொடுத்தார்?......



நண்பரே தொந்தரவுக்கு மன்னிக்கணும்...நீங்கள் குறிப்பிட்ட யோவான்.4:1- ல் இயேசு யாருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறது? இதில் நீங்கள் அறியவிரும்பும் தகவல் என்ன? அல்லது சொல்ல விரும்பும் சேதி என்ன என்பதை அடியேன் அறியலாமா?

 



-- Edited by chillsam on Thursday 3rd of March 2011 11:24:38 PM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
யோவான் 4 : 1
Permalink  
 


அருமை நண்பர் கொல்வின் அவர்களுக்கு ஒரு ஆலோசனை;நம்முடைய தளத்தில் நுழைந்து பல்வேறு ஐயங்களை எழுப்பி வரும் நண்பர் இராஜ் அவர்களை யாருடனும் ஒப்பிட்டு யோசிக்க வேண்டாம்;ஏனென்றால் அவர் கோவை வெறியன் தளத்தில் எழுதும் தேனீர் பூக்கள் என்பவராக இருப்பாரோ என்ற ஐயம் எழுவது இயல்பு;ஆனாலும் அவர் தன்னை முழுவதுமாக வெளிப்படுத்தும் வரை பொறுத்திருப்போம்;நம்மைப் பொறுத்தவரை அவர் குழந்தையாகவே இருக்கட்டும்;ஆனாலும் அவர் சாதாரண குழந்தை அல்ல; நூலகத்துக்குச் சென்று ஆராய்ச்சியெல்லாம் செய்து விவாதிக்கவும் ஆயத்தமாகி நிற்கும் குழந்தையாவார்;அவரிடம் நான் கேட்ட சில எளிமையான கேள்விகளிலேயே அவர் நம்மிடம் கேட்ட கேள்விக்கு பதில் இருக்கிறது;அதற்கு பதிலளிக்க அவர் முதலில் முயற்சிக்கட்டும்..!

நண்பர் இராஜ் அவர்களே நீங்கள் தொடருங்கள்;நாம் ஆரம்பத்தில் கதைத்த இடத்திலிருந்து தொடருவோம்;எனக்குரிய தங்களால் இயன்ற பதில்களைத் தருவீர்களா அல்லது நான் இன்னும் விளக்கமாக கேள்வி கேட்கட்டுமா? மன்னிக்க,கேள்வி கேட்ட உங்களுக்கு பதிலுக்கு பதிலாக கேள்வியை பதிலாக முன்வைப்பது முறையற்றது போல இருக்கலாம்;ஆனாலும் இந்த கேள்விகள் நாம் நட்புகொள்ள உதவியாக இருக்கும் என்று எடுத்துக் கொள்ளுங்களேன்.

(நல்லா நடிக்கறாங்கப்பா...ரெண்டு பேரும் என்று யாரும் எங்களை கிண்டல் செய்யவேண்டாம்...ப்ளீஸ்,நான் ரொம்ப சோர்ந்து போயிருக்கேன், கொஞ்சம் ரெஸ்ட் வேண்டும் அதான்..!)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நண்பர் ராஜ் அவர்களே நீங்கள் கிறித்தவ விசுவாசத்துக்குப் புதியவர் என்பதையும் இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பதையும் முழு மனதாக நம்புகிறேன்;ஆனாலும் நீங்கள் படிக்கத் தெரிந்தவர், ஆதலால் இந்த தளத்தின் போராட்டங்களை நீங்கள் நிச்சயமாக உணர்ந்திருப்பீர்கள்;அந்த பாதிப்பு எங்கள் எழுத்துக்களில் இருக்குமானால் தயவுசெய்து பொறுத்துக்கொள்ளுங்கள்.

நாங்களும் கூட‌ எந்த சபைக்காகவோ பாரம்பரியத்துக்காகவோ ஸ்தாபனத்துக்காகவோ போராடாமல் வேத வார்த்தைகளுக்காகவே போராடிக் கொண்டிருக்கிறோம்;நீங்கள் எப்படி ஒன்றுமறியாத அப்பாவியாக நட்பு நாடி வந்தவராக உள்ளே நுழைந்நீர்களோ அதே போன்ற நட்புணர்வுடனும் உங்களை ஆதாயப்படுத்தும் ஆர்வத்துடனும் உங்களை வரவேற்கிறேன்;உங்களையாவது நண்பராக்க முடியுமா என்று முயற்சிக்கிறேன்.

கேள்வி கேட்பதில் தவறு இல்லை;சத்தியத்தை அறிந்துகொள்ளும் முயற்சியிலும் தவறு இல்லை;ஆனால் தாங்கள் கேள்வி கேட்கும் அணுகுமுறையானது எங்களைப் பரிசோதிக்கும் தோரணையில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்;எல்லாம் அறிந்த ஒருவர் கூட அப்பாவி போல வேடமிட்டு சுற்றி வரமுடியும்;ஆனாலும் நான் இன்னும் உங்களை நம்புகிறேன்;
நாம் இணைந்து நடக்க முயற்சிப்போம்.

இங்கே நாம் மாத்திரமல்ல, அனுதினமும் நூற்றுக்கணக்கான் வாசகர்கள் நம்முடைய எழுத்துக்களை வாசித்து செல்லுகிறார்கள்;அவர்களுக்கு நாம் உபயோகமான எதையாவது கொடுக்கவேண்டுமே என்ற பொறுப்புணர்வு என்னை அதிகம் அழுத்துகிறது;தயவுசெய்து ஒத்துழைக்கவும்;நன்றி..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 8
Date:
Permalink  
 

//நிச்சயமாக பாரம்பரியத்தை நம்பக்கூடாது. யார் சொல்வதையும் வேத ஆதராம் இல்லாமல் நம்பக்கூடாது. உங்களுடைய நிலை சரியானதே!ஆனால் திரித்துவம் என்பது பாரம்பரியம் அல்ல,இது இந்த புரட்டர்கள் திரும்பத்திரும்ப சொல்லிவரும் பொய்! எளிமையாக சொன்னால் வேதம் தெளிவாக சொல்லுகிறது "தேவன் ஒருவரே!" (Not only just unique but ONLY one) ஆனால் வேதத்தில் வருகிற மூன்று "Personalities" (பிதா , குமாரன், பரிசுத்த ஆவியானவர்) Claimed to be God. அவர்களுடைய செய்கை, அதிகாரம், நடத்தை எல்லாம் தேவனை வெளிப்படுத்துவதால் வேதம் தவறாததாகவும் இருப்பதால் பிதா , குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்பவர்கள் ஒரே தேவனுக்குள் உள்ள மூன்று ஆள்தத்துவங்கள் என்றே தீர்க்கமுடியும். வேறு எப்படி பொருள் கொண்டாலும் வேதம் தவறாய் மாறிவிடும்.ரெண்டு தேவன்கள் என்று சொல்லுவது விபச்சாரம்.  திரித்துவம் என்ற கோட்பாடு ரோமன் கத்தோலிக்கத்திற்கு சொந்தமானது அல்ல, Iranius, the Deciple of Polycorp (who is the deciple of John) என்பவர் இரண்டாம் நூற்றாண்டின் இறுதிகளிலே இயேசு தொழத்தக்கவர் என்று எழுதியிருக்கிறார். Nicean கவுன்சில் என்பது King Constintine க்கும் முந்தி (அதாவது Pagan influence கிறிஸ்தவத்தில் நுழைக்கப்படும் முன்பு)  உருவானது ஆகும் அப்போதே Nicean Creed ல் திரித்துவம் தெளிவாய் குறிப்பிடப்பட்டு உள்ளது. கிழே உள்ள சுட்டிகள் உங்களுக்கு நல்ல உதவியாய் இருக்கும் என்று நம்புகிறேன். ///

நன்றி சகோதரர் JOHN அவர்களே,
தங்களின் கருத்துக்கள் எனக்கு பிரயோஜனமாக இருந்தது.                                   உண்மையிலே திருத்துவம் தொடர்பான பல சந்தேகங்கள் இருந்தாலும் நான் இயேசுவை    தெய்வமா? என்ற கேள்வி கேட்கும் அளவுக்கு செல்லவில்லை. நான் இது போன்ற கேள்விகளுக்கு விடை காணவே இந்த தளத்துக்கு வந்து இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.  மற்றும் அண்மையில் கத்தோலிக்க நூலாகிய டிரினிடாஸ் - பரிசுத்த திருத்துவத்தின் ஓர் இறையியல் கலைக்களஞ்சியம் ( ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் நீங்கள் சொல்லிய திருத்துவதைக் குறித்தும் அத்துடன்  சேர்த்து எபிரேய வேத எழுத்துக்களின்  அத்தாட்சி, கிரேக்க வேத எழுத்துகளின் அத்தாட்சி, மற்றும் திருத்துவம் குறித்த பூர்வ கிறிஸ்தவர்களின் நிலை அவர்கள் குறித்த சரித்திர ஆசிரியர்களின்  பதிவுகள்;  அடுத்து மிக முக்கிய பதிவாகிய  நைசினுக்கு முற்பட்ட கால பிதாக்கள் என்ன கற்பித்தார்கள்? (நைசியாவின் கான்ஸ்தான்டின் வகித்த பாகம் /அதநேசியன் விசுவாசப்  பிரமாணம்  )  போன்ற பதிவுகள் ........  சந்தர்ப்பம் வரும் போது எல்லாம் முறையாக விவாதிப்போம் ::::: நன்றி


__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 8
Date:
Permalink  
 

///பாரிய பொய். குழந்தையாக இருக்கும்போது ரோமன் கத்தோலிக்கத்தில் ஞானஸ்நானம் கொடுத்துவிடுவார்கள். அப்போதே சபையில் சேர்ந்துவிட்டதாக இதற்கு அர்த்தம்.

ஒருவேளை வளர்ந்தபின் மதம்மாறியிருந்தாலும் ஞானஸ்நானம் எடுத்தபின்பே கத்தோலிக்கன் என்ற தகுதி வரும். அன்றேல் பூசைப்பலியில் பங்குபற்றினாலும் கூட நற்கருணை பெற முடியாது. ஒரு பார்வையாளனாகவே இருக்க முடியும். திருச்சபையுடன் உறவுகளை பேண முடியாது.///


திரு, கொல்வின் ::  நண்பரே,

நான் ரோமன் கத்தோலிக்கனாக இருந்த போதே,   ஞானஸ்நானம் எடுத்து விட்டேன்.  நான் சொன்னது வேதத்தை அறிந்த பின்,  ரோமன் கத்தோலிக்க ஆலயத்துக்கே செல்வது இல்லை. நான் ஞானஸ்நானம் என்ற கேள்வியே கேட்க காரணம் எனது சபையில் என்னை ஞானஸ்நானம் எடுக்க சொல்லி எமது மூப்பர்கள் கேட்டுக் கொண்டநிமித்தமே இந்தக் கேள்வியே கேட்டேன். மற்றும் கள்ளை வணங்கும் வணக்க முறைக்கும் ரோமன் கத்தோலிக்க வணக்கத்துக்கும் எனக்கும் தற்பொழுது எந்த சமந்தமும் இல்லை. கொல்வின் அவர்களே எதையும் சரியாக அறிந்து கொள்ளாமல் யாரையும் பொய்யன் என்றோ அல்லது யாருடைய மனதையும் நோகடிக்க வேண்டாம். (அல்லது  நோகாது பேச பழகிக்கொள்ளுங்கள்). யோவான் 1:1  என்ற வசனத்தின் கேள்வியே கேட்டீர்கள். இதை தெரிந்தால் நான் ஏன் இந்த தளத்துக்கு வருகிறேன்


__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//நான் யேகோவா என்னும் நாமம் கொண்ட தேவனை விசுவசிக்கிறேன். அவரின் மகனாகிய இயேசுகிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். பரிசுத்த ஆவி என்பது தேவனின் செயல் நடப்பிக்கும் சக்தி. மற்றும் வேதத்தில் இருக்கும் வசனத்தை மட்டுமே நன்புபவன். எந்த வித பாரம்பரிய நண்பிக்கைகளையும் வேத ஆதாரம் இல்லாமல் நன்புபவன் அல்ல. பின்குறிப்பு :- நான் யெகோவாவின் சாட்சி என்ற சமய பிரிவை சேர்ந்தவன் அல்ல .....//


நிச்சயமாக பாரம்பரியத்தை நம்பக்கூடாது. யார் சொல்வதையும் வேத ஆதராம் இல்லாமல் நம்பக்கூடாது. உங்களுடைய நிலை சரியானதே! ஆனால் திரித்துவம் என்பது பாரம்பரியம் அல்ல, இது இந்த புரட்டர்கள் திரும்பத்திரும்ப சொல்லிவரும் பொய்! எளிமையாக சொன்னால் வேதம் தெளிவாக சொல்லுகிறது "தேவன் ஒருவரே!" (Not only just unique but ONLY one) ஆனால் வேதத்தில் வருகிற மூன்று "Personalities" (பிதா , குமாரன், பரிசுத்த ஆவியானவர்) Claimed to be God. அவர்களுடைய செய்கை, அதிகாரம், நடத்தை எல்லாம் தேவனை வெளிப்படுத்துவதால் வேதம் தவறாததாகவும் இருப்பதால் பிதா , குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்பவர்கள் மூன்று ஆள்தத்துவங்கள் உள்ள ஒரே தேவன்  என்றே தீர்க்கமுடியும். வேறு எப்படி பொருள் கொண்டாலும் வேதம் தவறாய் மாறிவிடும்.ரெண்டு தேவன்கள் என்று சொல்லுவது விபச்சாரம்.  திரித்துவம் என்ற கோட்பாடு ரோமன் கத்தோலிக்கத்திற்கு சொந்தமானது அல்ல, Iranius, the Deciple of Polycorp (who is the deciple of John) என்பவர் இரண்டாம் நூற்றாண்டின் இறுதிகளிலே இயேசு தொழத்தக்கவர் என்று எழுதியிருக்கிறார். Nicean கவுன்சில் என்பது King Constintine க்கும் முந்தி (அதாவது Pagan influence கிறிஸ்தவத்தில் நுழைக்கப்படும் முன்பு)  உருவானது ஆகும் அப்போதே Nicean Creed ல் திரித்துவம் தெளிவாய் குறிப்பிடப்பட்டு உள்ளது. கிழே உள்ள சுட்டிகள் உங்களுக்கு நல்ல உதவியாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

http://www.desiringgod.org/resource-library/articles/what-is-the-doctrine-of-the-trinity

http://www.desiringgod.org/resource-library/articles/what-we-believe-about-the-trinity



-- Edited by John on Thursday 3rd of March 2011 09:03:55 PM

-- Edited by John on Thursday 3rd of March 2011 11:26:24 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

//நான் ரோமன் கத்தோலிக்கம் சபையே சேர்ந்தவன்//
//நான் இன்னும் ஞானஸ்நானம் எடுக்கவில்லை.//

பாரிய பொய். குழந்தையாக இருக்கும்போது ரோமன் கத்தோலிக்கத்தில் ஞானஸ்நானம் கொடுத்துவிடுவார்கள். அப்போதே சபையில் சேர்ந்துவிட்டதாக இதற்கு அர்த்தம்.

ஒருவேளை வளர்ந்தபின் மதம்மாறியிருந்தாலும் ஞானஸ்நானம் எடுத்தபின்பே கத்தோலிக்கன் என்ற தகுதி வரும். அன்றேல் பூசைப்பலியில் பங்குபற்றினாலும் கூட நற்கருணை பெற முடியாது. ஒரு பார்வையாளனாகவே இருக்க முடியும். திருச்சபையுடன் உறவுகளை பேண முடியாது.

யோவான் 1:1 இன் விளக்கம் என்ன?


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

raj5481:- என் விசுவாசம்

நான் யேகோவா என்னும் நாமம் கொண்ட தேவனை விசுவசிக்கிறேன். அவரின் மகனாகிய இயேசுகிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். பரிசுத்த ஆவி என்பது தேவனின் செயல் நடப்பிக்கும் சக்தி. மற்றும் வேதத்தில் இருக்கும் வசனத்தை மட்டுமே நன்புபவன். எந்த வித பாரம்பரிய நண்பிக்கைகளையும் வேத ஆதாரம் இல்லாமல் நன்புபவன் அல்ல. பின்குறிப்பு :- நான் யெகோவாவின் சாட்சி என்ற சமய பிரிவை சேர்ந்தவன் அல்ல .....

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&topicID=41482128&p=3



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

raj5481 wrote:

நன்றி நண்பர்களே,
நான் ரோமன் கத்தோலிக்கம் சபையே சேர்ந்தவன். நான் வேதத்தை கடந்த சில மாதங்களாகவே வாசித்தும், சில பிரபல போதகர்கள் எழுதிய ஆங்கில புத்தகங்கள்  உதவி கொண்டு வேதத்தை ஆராய்ந்து படித்துக் கொண்டு வருகிறேன். வேதத்தை இன்னும் அதிகம் அறியவும் பல முயற்சிகள் எடுக்கின்றேன். அடுத்து நான் இன்னும் ஞானஸ்நானம் எடுக்கவில்லை. எனது சபை மூப்பர்கள் மற்றும் போதகர்கள்  ஞானஸ்நானம் எடுக்கச் சொல்லி சில அறிவுறுத்தல்கள் சொன்னார்கள். நான் சொன்னேன் கொஞ்சம் பொருத்து எடுக்கிறேன் என்று; காரணம் நான் இன்னும் வேதத்தை முழுமையாக கூட படித்து முடிக்கவில்லை. அப்படி இருக்கும் போது எவ்வாறு ஞானஸ்நானம் எடுப்பது என்று?, எனக்கு  கொஞ்சம் பயமாக இருக்கிறது.  நான் நினைக்கிறேன் நான் கொஞ்சம் இதை அறிந்து கொண்டு செயல்படலாம் என்று. அதை தவிர என் கேள்விக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. தங்கள் ஊகமான பதிகளை எதிர்பார்த்து :::::::


தாங்கள் இதுவரை வாசித்துள்ள பிரபல போதகர்களின் புத்தகங்களைக் குறித்த உங்கள் எண்ணத்தை சற்று பகிர்ந்துகொள்ளுவீர்களா? உங்களை அண்மையில் மிகவும் கவர்ந்த உயிருடனிருக்கும் அல்லது மரித்துவிட்ட போதகர் யாரோ..?

கர்த்தருடைய நாமம் யெகோவா என்பதை எப்படி தெரிந்துகொண்டீர்கள்? அவருக்கு வேறே நாமங்கள் வழங்கப்படவில்லையா? அந்த விசேஷித்த நாமத்தை உச்சரிக்க ஏன் யூதர்கள் அஞ்சினார்கள்? அந்த நாமத்தினால் புறவினத்தார் இரட்சிக்கப்படுவார்கள் என்று அப்போஸ்தலர்கள் போதித்தனரா? ஸ்தேவான் போன்ற புனிதர்கள் கொடூரமாகக் கொலைசெய்யப்படவும் யூதர்களான அவர்கள் யூதர்களால் பகைக்கப்படவும் காரணமாக இருந்த பிரச்சினை எது?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 8
Date:
Permalink  
 

நன்றி நண்பர்களே,
நான் ரோமன் கத்தோலிக்கம் சபையே சேர்ந்தவன். நான் வேதத்தை கடந்த சில மாதங்களாகவே வாசித்தும், சில பிரபல போதகர்கள் எழுதிய ஆங்கில புத்தகங்கள்  உதவி கொண்டு வேதத்தை ஆராய்ந்து படித்துக் கொண்டு வருகிறேன். வேதத்தை இன்னும் அதிகம் அறியவும் பல முயற்சிகள் எடுக்கின்றேன். அடுத்து நான் இன்னும்  ஞானஸ்நானம் எடுக்கவில்லை. எனது சபை மூப்பர்கள் மற்றும் போதகர்கள்  ஞானஸ்நானம் எடுக்கச் சொல்லி சில அறிவுறுத்தல்கள் சொன்னார்கள். நான் சொன்னேன் கொஞ்சம் பொருத்து எடுக்கிறேன் என்று; காரணம் நான் இன்னும் வேதத்தை முழுமையாக கூட படித்து முடிக்கவில்லை. அப்படி இருக்கும் போது எவ்வாறு ஞானஸ்நானம் எடுப்பது என்று?, எனக்கு  கொஞ்சம் பயமாக இருக்கிறது.  நான் நினைக்கிறேன் நான் கொஞ்சம் இதை அறிந்து கொண்டு செயல்படலாம் என்று. அதை தவிர என் கேள்விக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. தங்கள் ஊகமான பதிகளை எதிர்பார்த்து :::::::


__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நண்பரே, முதலாவது தங்கள் பின்னணியையும் கிறித்தவ விசுவாச அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளுங்களேன்;இது முதலாவது நண்பர்கள் தளமாக்கும்;அடுத்து தங்கள் கேள்வியின் நோக்கம் என்ன,என்பதையும் குறிப்பிட்டால் நலம்;அதாவது நீங்கள் ஞானஸ்நானம் பெறும் நோக்கத்துடன் கேள்வி எழுப்பியதுண்டானால் அதனைக் குறிப்பிடவும்;நீங்கள் விசுவாசத்தின் ஆரம்பநிலையில் இருப்பதாக தனிமடலில் குறிப்பிட்டுள்ளதால் ஞானஸ்நானத்தைக் குறித்து அறியும் ஆர்வம் - அதிலும் வேதத்திலுள்ள யாரோ ஞானஸ்நானம் எடுத்ததைக் குறித்து அறியும் ஆர்வம் ஏற்பட்டது எப்படி என்பதையும் தாங்கள் ஞானஸ்நானம் எடுத்துவிட்டீர்களா என்பதையும் ஆம் எனில் தங்கள் ஞானஸ்நான அனுபவத்தையும் சற்று பகிர்ந்துகொள்ளும்படி வேண்டுகிறேன்;நன்றி..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 8
Date:
யோவான் 4 : 1-ல் இயேசு யாருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்?
Permalink  
 


திரு, சில்சாம் அவர்களே,யோவான் 4 : 1 இன் படி ''யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது'', ............

எனக்கு இதில் ஒரு சிறிய சந்தேகம்......
இயேசு யாருக்கு ஞானஸ்நானங் கொடுத்தார்?......


-- Edited by raj5481 on Thursday 3rd of March 2011 06:17:25 AM


__________________

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard