ரெவ்சாம் குறித்து மனந்திறந்த பாராட்டுக்குரிய காரியங்களை எழுதிவந்த இந்த திரியில் நண்பர் சந்தோஷ் அவர்கள் கேட்டார்கள்,இவ்வளவு அழகாகப் பிரசங்கம் பண்ணும் அவரைப் போய் கள்ளப்போதகர் என்று சொல்லலாமா, என்பதாக;அவர்க்கு பதிலளிக்கும்போது அடியேன் சொன்னது நாம் அவரை கள்ளப்போதகர் என்று சொல்லமுடியாது,ஆனால் கலப்பட போதகர் என்று சொல்லலாம் என்பதாக;அதற்கேற்ப இந்த வாரம்புதிய உடன்படிக்கையைக் குறித்த தொடர் செய்தியில் அவர் சொன்னது ஒருபுறம் சற்று உற்சாகமாக இருந்தாலும் மறுபுறத்தில் இதுவே அவரது அனைத்து தவறான கொள்கைகளுக்கும் ஆரம்பம் போலவும் இருந்தது.
சத்தியத்தைப் பொறுத்தமட்டில் கூட்டம் கூடுவது மட்டுமே சத்தியத்துக்கான குறியீடு அல்ல;சத்தியம் தனித்து நின்றாலும் இசைந்து செல்லாது;அது அனைத்தையும் வகை பிரிக்கும் பட்டயத்தைப் போன்றது;
இனி அவருடைய போதனையிலிருந்து...
பாவமன்னிப்பு என்பது என்ன?
"... நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்."(எரேமியா.31:34)
-இந்த வசனத்தில் "இனி நினையாதிருப்பேன் " என்று ஆண்டவர் சொல்லியும் பலர் அவரை நம்பாமல் தங்கள் பாவங்களையே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்;இதனால் ஆசீர்வாதமே இல்லை;பாவ மன்னிப்பு என்பதற்கான சரியான வார்த்தை தமிழில் கொடுக்கப்படவில்லை;அது குறித்து நாம் வெப்ஸ்டர்ஸ் அகராதியில் தேடினால் அங்கே அதற்கான பொருள் இப்படியாக இருக்கிறது, "செய்த குற்றத்துக்கு மன்னிப்பது", " பகையுணர்வு இல்லை என்று அறிவிப்பது", "செலுத்தவேண்டிய கடனை செலுத்தவேண்டிய அவசியமில்லை என்பது" இப்படியாக பல்வேறு அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளது; ஆனால் இயேசு செய்தது இதைக்காட்டிலும் மிகமிக விசேஷமானது; கிரேக்க மொழியில், மன்னித்தல் எனும் வார்த்தை இடம்பெற்றுள்ள சூழலைக் காண்போம்;
G863 ἀφίημι aphiēmi af-ee'-ay-mee From G575 and ἵημι hiēmi (to send; an intensive form of εἶμι eimi (to go)); to send forth, in various applications: - cry, forgive, forsake, lay aside, leave, let (alone, be, go, have), omit, put (send) away, remit, suffer, yield up.
இதன்படி அனுப்பிவிடுவது, வெளியேற்றுவது, அகற்றிவிடுவது, மறந்துவிடுவது, விட்டுவிடுவது எனும் அர்த்தங்களை அறியமுடியும்; இது ஒரு மனிதன் தன் மனைவியை விவாகரத்து செய்வது போலவும் இருக்கிறது;அதன் மூலம் அவன் அறிவிப்பது என்ன, தன் வாழ்க்கையில் அவளுக்கு இனி எந்த பங்குமில்லை என்று கூறி போதும்'டா சாமி ஆளைவிடு என்று முழுவதும் அவளுடைய பந்தத்திலிருந்தும் ஆளுமையினின்றும் வெளியேறுவதைப் போல இருக்கிறது; இதுபோலவே மனைவியரும் கூட தன் கணவனை விவாகரத்து செய்தபிறகு அனைத்து சட்டநடைமுறைகளின் படி விடுதலையாகிறார்கள்;ஆனாலும் சிலர் அது எப்படிங்க ஒரேயடியாக உறவு இல்லாமற் போகும் என்று கூறி இரகசியமாக தொடர்பில் இருந்தால் அது சட்டவிரோதமானதாகும்.
மேலும் மன்னித்து விடுதல் எனும் வார்த்தைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள மேற்கண்ட கிரேக்க வார்த்தையே,இயேசு தமது சிலுவைப்பாடுகளின் உச்சக்கட்டத்தில் "ஆவியை விட்டார்" என்ற வார்த்தைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது;இதற்கு விடுதலை என்றும் ஒரு பொருள் சொல்லப்படுகிறது;
"அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்."(மத்தேயு.9:2)
"இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்."(மத்தேயு.27:50)
-மேற்கண்ட இரு வசனங்களிலும் ஆவியை விடுதல், மன்னித்து விடுதல் ஆகிய இரு சொற்களுக்கும் கிரேக்க மொழியில் ஒரே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது;அப்படியானால் இயேசு நமது பாவங்களிருந்து நமக்கு விடுதலை கொடுத்தது எத்தனை சிறப்பான காரியமல்லவா? ஆனால் சிலர் இந்த விடுதலையுணர்வு இல்லாத காரணத்தால் இன்னும் பெலவீனராகவும் இயலாதவர்களைப் போலவும் இருக்கிறார்கள்;தாங்களே முழுவதும் விடுதலையாக்கப்பட்டவர்கள் என்பதை மறந்துவிட்டு யாராவது தங்களுக்காக ஜெபித்தாலே தங்கள் பிரச்சினை தீரும் என்று நினைக்கிறார்கள்;இதனால் சில ஊழியர்களும் இதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு 'எனக்கு எழுதுங்கள்', என்றும் "என்னைக் கூப்பிடுங்கள்" என்றும் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்; இப்படியே எனக்கு ஒருவர் எழுதினார்,"ஐயா,நான் திருமணத்துக்காக பல பெண்களைப் பார்த்துவிட்டேன், ஆனாலும் எந்த பெண்ணை முடிவுசெய்வது என்றே தெரியவில்லை, நீங்கள்தான் எனக்காக ஒரு பெண்ணை ஜெபித்து தேர்ந்தெடுத்து தரவேண்டும்" என்பதாக;பாருங்க, நான் யாரு,என்னைப் பற்றி என்னை இவர் நினைச்சிகிட்டிருக்காரு, இதுவா என் வேலை,நான் வேதத்தை பிரசங்கம் பண்ற ஆளுங்க, இது தான் என் வேலை, பொண்ணு பாக்கறது என் வேலை இல்ல, என் தொழிலையே மாத்திடுவீங்க போலிருக்கே, இத சொன்னா சில நண்பர்கள் சொல்றாங்க, இப்படியெல்லாம் நீ வெளிப்படையாக பேசினால் உனக்கு கூட்டம் சேராது,என்பதாக, இதோ இந்த கூட்டத்தை (காட்டி...) பாருங்க, எனக்கு கூட்டம் சேரலையா? ஹலோ இருக்கீங்களா, புரிஞ்சுக்குங்க, பாவம் மன்னிக்கப்பட்ட பிறகு நீங்கள் முழுவதும் விடுதலையாக்கப்பட்டவர்கள், பழைய பாவங்களை தேவன் மன்னித்து மறந்தது போலவே நீங்களும் மன்னிக்கப்பட்ட பாவங்களைக் குறித்து மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது;இது தேவனுக்கே எதிரானது; ஏனெனில் ஆண்டவர் ஆக்கினையில்லை என்று சொல்லியும் ஆக்கினை உண்டு என்பது போல அதையே யோசித்துக்கொண்டிருப்பது தேவனுடைய ஏற்பாட்டுக்கே எதிரானதாகும்.
"ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன்."(லேவியராகமம்.25:10 )
இதேபோன்றதொரு விடுதலையே இயேசுகிறித்துவின் பரிகாரபலியினால் நமக்குக் கிடைத்தது." இப்படியாக ரெவ்சாம் அவர்கள் போதித்த இன்றைய (06.03.2011) செய்தியில் என்னைக் கவர்ந்த பகுதி என்னவென்றால் பாவ மன்னிப்பைக் குறித்த நல்லதொரு விளக்கம்;இது இயேசு ஆவியை விட்டதுடன் தொடர்புள்ள ஒரு வார்த்தையால் விளக்கப்பட்டது சிறப்பாக இருந்தது;பாவ உணர்வு அல்லது குற்ற உணர்வு தொடர்ந்து செல்ல தடையாக இருக்கும் என்பது உண்மையே.
ஆனால் இதுவே அதீத நம்பிக்கை (Over confidence) நிலையையும் சுயநீதியையும் எட்டிவிடாதிருக்க வேண்டுமே? அதற்கு குற்ற உணர்வு இல்லாவிட்டாலும் செய்த பாவத்தைக் குறித்த ஒருவித வெட்கமும் மேலும் அது நெருங்காதிருக்க எச்சரிக்கையுணர்வும் தேவையல்லவா? அதற்காகத் தானே சபைக்கு வருகிறோம்,பாவத்தைக் குறித்த பயம் இல்லாவிட்டாலும் பாவத்தைக் குறித்த எச்சரிக்கையுணர்வு அவசியமல்லவா? ஏற்கனவே செய்த பாவங்களை அகற்றிவிட்டார்,இனி செய்யாதிருக்க என்ன செய்யவேண்டும் என்பதையும் போதித்தாலே அது முழுமையான போதகமாக இருக்கமுடியும்; அதாவது காயம் ஆறினாலும் அதன் தழும்பு மாறாதே? அந்த தழும்பையும் நான் தடுமாறிய இடங்களையும் கடந்து செல்லும்போது அந்த நினைவு மனதில் தோன்றுமே? அப்போது என்ன செய்யவேண்டும்? இனி நினையாதிருப்பேன் என்று சொன்ன ஆண்டவரை நினைவுகூர்ந்து அவருடைய அதிசய செயல்களுக்காக மனதார நன்றி செலுத்தி அவரை ஸ்தோத்தரிக்கவேண்டும்;அதுவே அந்த குறிப்பிட்ட பாவமானது நம்மை மீண்டும் மேற்கொண்டு ஆளாமல் தடுக்கும் அற்புதமான வழியாகும்;இந்த நிலையை எட்ட இனி பாவி இல்லை என்று அறிக்கை செய்தால் மட்டும் போதாது;பாவமில்லா பரிசுத்த ஜீவியத்தை வாழ்ந்து காட்டவேண்டும்.
இந்த காரியத்தில் பவுலடிகளின் முழுமையான போதகத்தை கவனிப்போம்; அவர் சொல்லுகிறார்,
" இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே."(ரோமர்.6:19)
"உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்."(ரோமர்.6:21)
"பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்."(1.தீமோத்தேயு.1:15)
இங்கே பவுலடிகள் தனது அதீதமான நம்பிக்கையைக் கொண்டு விசுவாச அறிக்கைகளைச் சொல்லவில்லை;ஆனால் தன்னை தாழ்த்துகிறார்;இன்னும் தன் மாணவனான தீமோத்தேயு தன்னைக் குறித்து என்ன நினைப்பானோ என்ற கூச்சமுமில்லாமல் தன்னை வெறுமையாக்கி பணிவுடன் போதிக்கிறார்; இதுவே ஆரோக்கிய உபதேசம்;இதுவே முழுமையான போதகம்;இப்படி போதிக்கும் போதகர்களே சபைக்கு தேவை;அப்படிப்பட்டவர்களாலேயே சபையானது உயிர்மீட்சி அடையும்;மற்றபடி செவித்தினவு அதாவது காதுக்குள்ளிருந்து கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பு நிரம்பி வழியும்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அருமை நண்பர் சந்தோஷ் அவர்களே, நான் ஒருபோதும் போதகர் ரெவ்சாம் அவர்களைக் கள்ளப்போதகர் என்று முத்திரை குத்தவில்லை; கலப்பட போதகர்என்று வேண்டுமானால் சொல்லலாம்; "யௌவன ஜனம்" தளமானது நடுநிலையானது என்பதையும் நல்லவைகளைப் பாராட்ட ஒருபோதும் தயங்காது என்பதையும் நிலைநாட்டவே கடும் சிரமத்துக்கிடையிலும் இந்த கட்டுரையை எழுதி பதித்தேன்; ஒரு நேரடி ஒளிபரப்பைக் கேட்டுக்கொண்டே அதன் ஆதார கருத்து மாறாமல் எழுதுவது எத்தனை சிரமமானது என்பதை வாசகர் உணர வேண்டும்;எந்தவொரு கட்டுரையையும் படிப்பதைக்காட்டிலும் எழுதுவதற்கு அதிகநேரம் எடுக்கும்;மேலும் எழுதுவதைவிட விமர்சிப்பதே எளிதானது அல்லவா? நான் இங்கே விமர்சிக்கவில்லை;ஒரு நல்ல விஷயத்தைப் பாராட்டும் நோக்கத்தில் எழுதியிருக்கிறேன்.
இதிலும் விமர்சனங்கள் உண்டு,விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது; இங்கே போதகர் ரெவ்சாம் அவர்களின் போதனையில் கவனிக்கத்தகுந்த சிறப்பான அம்சம் என்னவென்றால் சிக்கலான ஞானஸ்நானம் எனும் பொருளில் அவர் பிரசங்கித்தாலும் சர்ச்சைக்குரியதான நாமங்களைக் குறித்த பகுதிகளை (யாருடைய நாமத்தில் ஞானஸ்நானம், பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமத்தினாலேயா அல்லது கர்த்தராகிய இயேசுகிறித்துவின் நாமத்தினாலேயா) தொடாமல் செல்லுகிறார்; அதுபோலவே விசுவாசம் மற்றும் விசுவாசத்தின் கிரியைக் குறித்து பேசும்போது சர்ச்சைக்குரிய நியாயப்பிரமாணத்தின் கிரியை தொடர்பான கருத்துக்களைத் தவிர்த்துவிட்டார்; கேட்பவருக்குள் இரண்டாவது கருத்தைத் தோற்றுவிக்கும் வண்ணமாக எதிர்மறையானதை தேவையில்லாமல் தொட்டுச்செல்வதைத் தவிர்ப்பதும்கூட போதகசமர்த்தம் தான் போலிருக்கிறது;
இதைக் கூட பிரசங்கிக்க ஆளில்லையே என்ற நிலையில் போதகர் ரெவ்சாம் அவர்களது பிரசங்கம் பாராட்டுக்குரியது;இந்த பிரசங்கத்தை பெட்டகத்திலிருந்து காணொலியில் காண தொடுப்பைத் தொடரவும்
இன்று காலை சபை ஆராதனையின் நேரடி ஒளிபரப்பில் போதகர் ரெவ்சாம் அவர்கள் புதிய உடன்படிக்கை எனும் தலைப்பில் பகிர்ந்துகொண்ட செய்தியின் முக்கிய குறிப்புகளை இயன்றமட்டும் கேட்டது கேட்டவண்ணமாக எழுதிப் பதிக்கிறேன்;இதில் விமர்சனத்துக்குரிய- சர்ச்சைக்குரிய கருத்து எதுவுமில்லை;இது அவர் இன்று கொடுத்த செய்தியின் ஒருபகுதி அவ்வளவே.
"வேதத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட திருமணம் (Arranged marriage) மற்றும் காதல் (Love marriage) திருமணம் ஆகிய இரண்டுமே நடந்தது; ஆபிரகாம் தனது வேலைக்காரன் மூலம் தனது மகன் ஈசாக்குக்கு பெண் பார்க்கச் செய்தான்;முன்பின் பார்த்திராத இருவரும் சந்தித்து இறுதிவரை சந்தோஷமாக வாழ்ந்தனர்;அது எப்படி, முன்பின் தெரியாதவரோடு வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது என்று கேட்கமுடியாது;அது ஒரு திருமண முறை அவ்வளவே.
வேதத்தில் காதல் திருமணமும் நடந்தது; அதற்கொரு உதாரணம் யாக்கோபு ; அவன் வீட்டைவிட்டு வெளியேறி எங்கோ இருக்கும் தன் மாமன் வீட்டுக்குச் செல்கிறான்;வழியில் ஓரிடத்தில் ராகேல் என்பவளைப் பார்க்கிறான்;அவளை விரும்புகிறான்,முத்தமிட்டான்.
அந்த முதல் முத்தத்தின் விளைவால் அடுத்த 20 ஆண்டுகாலம் கண்ணீர் விடவேண்டியதானது; (சபையார் மத்தியில் சிரிப்பலை...) எது சரி, என்பதல்ல பிரச்சினை, எப்படி வொர்க் ஔட் (work out) பண்ணுகிறோம் என்பதிலேயே விஷயம் இருக்கிறது. இப்படியே இயேசுவை சந்திப்பது குறித்தும் அவரோடு தனது வாழ்க்கையை நடத்துவது பற்றியும் சொல்லப்படும் செய்தியானது சுவிசேஷம் என்று சொல்லப்படுகிறது;அதன் விளைவாக மனந்திரும்புதல் உண்டாகவேண்டும்; அதன் பொருள் டர்ன் அரௌண்ட் (Turn Around) அதாவது சென்று கொண்டிருக்கும் பாதையிலிருந்து நேரெதிர் திசையை நோக்கி திரும்புவது; மனந்திரும்புதல் என்பது பாவத்திலிருந்து மட்டும் என்பதல்ல; "என் வாழ்க்கையில் வித்தியாசமான ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறதே; இது ஏன் நடந்தது, இதை எப்படி மாற்றுவது என்று சிந்திப்பதே மனந்திரும்புதல் ஆகும். நாம் தவறானதில் இருக்கிறோம் என்பது அதன் ஆரம்பத்தில் தெரியாது; உதாரணத்துக்கு விமான நிலையத்தில் ஒரு மனுஷன் மும்பை செல்ல டிக்கெட் எடுத்திருப்பான்;போர்டிங் பாஸ் எடுத்திருப்பான்;விமானத்தில் ஏறி அமர்ந்திருப்பான்;அவனுக்கு விமானப் பணிப்பெண்கள் வந்து சான்ட்விச் போன்ற ஸ்நாக்ஸ் எல்லாம் கொடுத்திருப்பார்கள்;அருகில் சக பயணியும் இருப்பார்;ஆனாலும் விமானம் புறப்படும் ஒலிபெருக்கியில் குரல் ஒலிக்கும்,"பயணிகளே உங்களை வரவேற்கிறோம்;உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துகிறோம்; நாம் இன்னும் சற்று நேரத்தில் கொல்கத்தா பட்டணத்தை நோக்கி பறக்கப்போகிறோம்; உங்கள் பெல்டுகளை அணிந்துகொள்ளுங்கள்.." என்பதாக அறிவிப்பைக் கேட்டதும் அந்த மனிதன் திடுக்கிட்டுப் போய்,"ஐயய்யோ, நான் மும்பை செல்வதற்காகத் தானே டிக்கெட் எடுத்தேன், இப்போது என்ன செய்வது..." என்று தவிப்பான்;
இது ஒருவேளை தாமதமான முடிவாக இருக்கலாம்;அவன் மும்பை செல்ல டிக்கெட் எடுத்தது தவறல்ல,அவன் மும்பை செல்லும் விமானத்தைப் பார்த்து ஏறாததே பிரச்சினைக்கான காரணமாகும்;இதுபோல எல்லாம் சரியாகவே இருப்பது போன்ற மாயமான தவறுகள் நம்முடைய வாழ்க்கையில் நடைபெறக்கூடும்;தவறான வரிசையில் நின்றது முதல் தவறாக போர்டிங் பாஸ் வழங்கப்பட்டது வரை எல்லாமே தவறாகவே இருக்க அதிக வாய்ப்புகள் உண்டு;ஒரு தவறின் காரணமாக தவறான ஆளுடன் பயணிக்கிறோம்;தவறான ஏர்ஹோஸ்டஸ் யாருக்கோ தரவேண்டிய ஸ்நாக்ஸை நமக்குக் கொடுக்க நாமும் வாங்கி சாப்பிட்டோம்;நாம் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸும் அதனை நமக்குப் பரிமாறவேண்டிய விமானப் பணிப்பெண்ணும் இங்கே இல்லை; நம்மோடு பயணிக்க வேண்டிய ஆளும் இங்கே இல்லை;
நாம் நம்முடைய நிலையை உணர்ந்து உடனே அந்த தவறான இடத்துக்குச் செல்லும் விமானத்திலிருந்து வெளியேறாமல் தவறான இடத்தை நோக்கிச் செல்லும் நம்முடைய விமானத்தைக் குறித்தும் நம்முடன் பயணிக்கும் பயணியைக் குறித்தும் குறைசொல்லிக்கொண்டிருந்தால் எப்படியிருக்குமோ அதுபோலவே மனந்திரும்புதலின் சுவிசேஷத்தைக் கேட்டும் கீழ்ப்படியாத மனுஷனின் நிலைமை இருக்கிறது.
இந்த தப்பெல்லாம் எதினால் நடந்தது? நான் தவறானதைத் தேர்ந்தெடுத்ததாலேயே; பிரச்சினைக்கான காரணம் என்ன? தவறான விமானத்தில் ஏறியதுதான்; சுவிசேஷத்தின் சிறப்பு என்னவென்றால் வானத்தில் பறந்து கொண்டிருக்கையிலேயே விமானத்தை மாற்றிக் கொள்ளலாம்; ஒருவேளை அன்றாட வாழ்க்கையில் தவறான விமானத்தில் ஏறியவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது; ஆனால் மனந்திரும்புதலுக்கேதுவான சுவிஷேத்தைக் கேட்டவர் எந்த நிமிடத்திலும் தான் செல்லவேண்டிய விமானத்துக்குத் தன்னை மாற்றிக்கொள்ளமுடியும்; அடுத்து மனந்திரும்புதல் என்பது நற்செய்தியைக் கேட்பது மட்டுமல்ல, அதனை விசுவாசிப்பதிலேயே இருக்கிறது; இரட்சிப்பில் விசுவாசம் முக்கிய பங்கு வகிக்கிறது. சில காரியங்களை ஆண்டவர் ரொம்ப நுணுக்கமாகவும் குத்தலாகவும் சொல்லி வைத்திருக்கிறார்; உதாரணத்துக்கு 99 ஆடுகளில் காணாமற்போன ஒரு ஆட்டைத் தேடி மேய்ப்பன் சென்ற உவமையில், "மனந்திரும்ப அவசியமில்லாத 99 நீதிமான்களைப் பார்க்கிலும்..." என்று அவர் சொல்லும்போது அவர்களை அவர் நீதிமான்கள் என்று ஒப்புக்கொள்ளவில்லை; அவர்கள், தங்களைத் தாங்களே நீதிமான்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் என்பது பொருளாகும்; அவர் இந்த உலகத்துக்கு தேடுகிறவராக வந்தார்;அந்த தொலைந்து போன ஒரு ஆடு இருக்கும் இடத்துக்கே வந்தார்; காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடித்து அந்த ஆட்டின் இரண்டிரண்டு கால்களையும் தன் தோளின் இருபக்கமும் போட்டு சுமந்துகொண்டு வரும் மேய்ப்பனைப் போலவே ஆண்டவரும் செய்கிறார்; இது இனி அந்த ஆடு சுயமாக செயல்படமுடியாது;முழுவதும் மேய்ப்பனுக்கே சொந்தம் எனும் நிலைமையாகும்,இதுவே இரட்சிப்பு; சுவிசேஷம் அறிவிப்பின்போது மனந்திரும்புதல் உண்டாகிறது; மனந்திரும்புதலின் விளைவானமானது விசுவாசம் ஆகும்:விசுவாசம் என்பது மனதுக்கடுத்த காரியம் மட்டுமல்ல; அது ஒரு தீர்மானமோ உணர்வோ சந்தோஷமோ மட்டுமல்ல; அந்த விசுவாசம், ஆவி ஆத்துமா சரீரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும்; இருதயத்திலே விசுவாசித்தால் மட்டும் போதாது; மனதையும் சரீரத்தையும் பாதிக்கவேண்டும்;உதாரணமாக ஆதாம் ஏவாளின் மீறுதல் இருதயத்தில் துவங்கினாலும் அந்த கனியைப் பறித்து புசித்த பிறகே பாவம் நிறைவேறியது;அதன் பிறகே மரணமுண்டானது;தீர்மானங்கள் செயலாக்கப்பட்டு விளைவாக முடிந்தது; அதுபோலவே விசுவாசமும் உள்ளத்தில் பாதித்து செய்கையின்மூலம் அது நிறைவேறவேண்டும்;
"ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து.."(மத்தேயு.28:19)
ஆம்,சுவிசேஷத்தின் விளைவால் மனந்திரும்புதலுக்கு ஏற்ற விசுவாசம் உண்டானாலும் அது இரட்சிப்பாக மாறவேண்டுமானால் ஞானஸ்நானம் அவசியமாகும்;ஞானஸ்நானமானது விசுவாசத்தின் கிரியையாகும்; நம்பினால் போதாதா? போதாது; உள்ளான விசுவாசத்தினை சரீரத்தில் நடப்பித்து காண்பிக்கிறோம்; சுவிசேஷத்தைப் பிரசங்கித்து ஞானஸ்நானம் கொடுத்தார்கள்;ஏனெனில், உள்ளத்தில் விசுவாசிக்கிறாயா அதனை செய்கையில் காண்பி என்று போதித்தனர்,சீடர்கள்:
"பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;
இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.
அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்." (அப்போஸ்தலர்.2:38 - 41)
இதுவே அப்போஸ்தலர்களின் பிரசங்கத்தின் விளைவை அறியக்கூடிய விசேஷித்த பகுதியாகும்;மேலும் பின்வரும் வேதப்பகுதிகளும் சீடர்கள் பிரசங்கித்ததுடன் அந்த பிரசங்கமானது ஞானஸ்நானத்தில் நிறைவேறியதைக் காண்கிறோம்.
"தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம் பெற்றார்கள்."(அப்போஸ்தலர்.8:12)
"இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்."(அப்போஸ்தலர்.8:36)
"அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி,
கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்."(அப்போஸ்தலர்.10:47,48)
ஞானஸ்நானத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது? அதன் இரகசியம் என்ன? இந்நாட்களில் இதை பல மேடைகளில் யாரும் பேசுகிறதில்லை; ஏனெனில் மக்கள் அதனை விரும்புகிறதில்லை;ஆனால் இங்கே (In the Church..) சுவிசேஷம் மாத்திரமல்ல, ஞானஸ்நானமும் பிரசங்கிக்கப்படுகிறது; ஒவ்வொரு வாரமும் இரண்டாவது மூன்றாவது ஆராதனைக்கு இடையேஞானஸ்நானம் கொடுக்கப்படுகிறது; இதன் அவசியம் என்ன என்பதை கவனிப்போம்.
"அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்.
ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம் பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்."(கொலோசெயர்.2:11,12)
அக்கால வழக்கத்தின்படி உடன்படிக்கையின் அடையாளமாக விருத்தசேதனமாகிய பிரமாணம் கொடுக்கப்பட்டது; தற்காலத்தில் கிறித்துவின் பலி நிறைவேறுதலுக்குப் பிறகு ஞானஸ்நானமானது அந்த விருத்தசேதனத்துக்கு ஒப்பாக இருக்கிறது; விருத்தசேதனத்தின் மூலமே ஒருவன் தன் தகப்பனுடைய சொத்துக்களுக்கு உரிமையாளராக முடியும்; அந்நாட்களில் உடன்படிக்கை செய்துகொள்வோருடைய பெயர்களை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளுவார்கள்; அதன் தொடர்ச்சியாகவே தற்காலத்தில் மனைவி மற்றும் பிள்ளைகள் பெயருடன் குடும்பத் தலைவனுடைய பெயர் இணைத்து வழங்கப்படுகிறது; அதுபோலவே கிறித்துவின் மரணத்தின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கையின் காரணமாக நாம் கிறித்துவின் சுதந்தரராகவும் அவருடைய பரலோக மகிமைக்குப் பங்காளிகளாகவும் மாறுகிறோம்; ஞானஸ்நானத்தின் மூலம் மட்டுமே இவையெல்லாம் நடைமுறைக்கு வருகிறது; அம்ப்ளிஃபைடு (Amplified) பைபிளில் இதே வசனம் எப்படி இருக்கிறது என்றால்,"உங்களுக்கும் ஒரு விருத்தசேதனம் நடந்தது" என்கிறது;
11In Him also you were circumcised with a circumcision not made with hands, but in a [spiritual] circumcision [performed by] Christ by stripping off the body of the flesh (the whole corrupt, carnal nature with its passions and lusts).
12[Thus [g]you were circumcised when] you were buried with Him in [your] baptism, in which you were also raised with Him [h]to a new life] through [your] faith in the working of God [as displayed] when He raised Him up from the dead.
மேலும் மெசெஜ் (Message) டிரான்ஸ்லேஷனில், "தண்ணீருக்குக்கீழ் சென்றபோது பழைய மனிதன் செத்த புதுவாழ்க்கைக்கு அடையாளமாக இருக்கிறது" என்று இருக்கிறது. 11-15 Entering into this fullness is not something you figure out or achieve. It's not a matter of being circumcised or keeping a long list of laws. No, you're already in—insiders—not through some secretive initiation rite but rather through what Christ has already gone through for you, destroying the power of sin. If it's an initiation ritual you're after, you've already been through it by submitting to baptism. Going under the water was a burial of your old life; coming up out of it was a resurrection, God raising you from the dead as he did Christ. When you were stuck in your old sin-dead life, you were incapable of responding to God. God brought you alive—right along with Christ! Think of it! All sins forgiven, the slate wiped clean, that old arrest warrant canceled and nailed to Christ's cross. He stripped all the spiritual tyrants in the universe of their sham authority at the Cross and marched them naked through the streets.
இப்படியே வெளிநாட்டில் ஒரு இளைஞன் போதைப்பழக்கத்திலிருந்து விடுபட்டு ஞானஸ்நானம் பெற சபைக்கு வந்தான்;அந்த சபையில் ஒருவர் ஞானஸ்நானம் பெறுவதை எல்லோரும் பார்க்கும் வண்ணமாக அது கண்ணாடியால் அமைக்கப்பட்டிருக்கும்;தனது ஞானஸ்நானத்தை வித்தியாசமாக நடந்த எண்ணிய அந்த இளைஞன் அழைப்பிதழ் அச்சிட்டு எல்லோருக்கும் கொடுத்தான்;அதில் என்ன எழுதியிருந்தது தெரியுமா? "இந்த குறிப்பிட்ட நாளில் நான் மரிக்கப்போகிறேன்;நீங்களெல்லாரும் என்னுடைய அடக்க ஆராதனைக்கு அவசியம் வரவேண்டும்" என்பதாக; நண்பர்கள் சொந்தங்கள் எல்லோரும் பரபரப்புடன் கூடினார்கள்;பிறகே அறிந்துகொண்டார்கள்,அன்றைக்கு அந்த இளைஞன் ஞானஸ்நானம் பெறுகிறான் எனபதை;அவன் எல்லோரிடமும் சொன்னான், "ஆம்,நான் இன்றைக்கு மரிக்கப்போகிறேன்,நான் மரித்தாலும் உங்களோடு இருப்பேன், எப்படியெனில் என்னுடைய பழைய மனுஷனை இன்றைக்கு தண்ணீருக்கடியில் புதைத்துவிடுவதால் எனது பழைய சுபாவங்கள், பழக்கவழக்கங்கள் இல்லாத புதிய மனுஷனாக நான் உங்கள் நடுவில் வாழுவேன்" என்றானாம்; இன்றைக்கு ஞானஸ்நானத்துக்கு பதிலாக அதில் வேறே சில காரியங்களை சப்ஸ்டிட்யூட் செய்கிறார்கள் அல்லது அதைக் குறித்து பேசுகிறதே இல்லை; விசுவாசம் முழுமை பெறுவதே ஞானஸ்நானத்தில் தான்; கிறித்துவின் சிலுவையே அப்போஸ்தலர் செய்த பிரசங்கத்தில் பிரதானமாக இருந்தது; ஆனால் யூதர்களோ மதரீதியான ஏதோ ஒரு சடங்கைக் குறித்தே ஆர்வமாக இருந்தார்கள்;கிரேக்கரோ அறிவுபூர்வமான நூதனமான காரியங்களில் ஆர்வமாக இருந்தார்கள்; ஆனால் கிறித்துவின் சுவிசேஷமோ இவையெல்லாவற்றைக் காட்டிலும் விசேஷமானதாக இருந்தது;அதைக் குறித்து பவுல் அப்போஸ்தலன் பின்வருமாறு எழுதியிருக்கிறார்...
"சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது.
இப்படியாக போதகர் ரெவ்சாம் அவர்கள் செய்த பிரசங்கத்தை முழுவதுமாகக் கேட்கமுடியவில்லை;காரணம்,இந்த மாதத்துக்குரிய இலவச இணையதள பயன்பாட்டு அளவு முடிந்துவிட்டது;இலவச பயன்பாட்டு நேரமான (அதிகாலை 2 மணி முதல்) காலை எட்டு மணியும் ஆகிவிட்டது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)