Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரிசேயர்களுக்கு ஒரு கேள்வி


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: பரிசேயர்களுக்கு ஒரு கேள்வி
Permalink  
 


ஞானஸ்நானம் - சகோ சந்தோஷ்

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாண காலத்தில் வாழ்ந்த எவரும் ஞான்ஸ்நானம், மற்றும் திருவிருந்து எடுக்க வேண்டியதில்லை. ஏனென்றால் அந்த கட்டளைகள் புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களான நமக்கு உரியது. புதிய ஏற்பாடு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, உயித்தெழுந்த பின் தான் ஆரம்பிக்கிறது. கள்ளன் எப்படி ஞானஸ்நானம் எடுக்காமல் பரலோகம் போனான் என்ற கேள்வியே அர்த்தமற்றது. ஏனென்றால் அவன் ஆபிரகாம், லாசரு போல் பழைய ஏற்பாட்டு காலத்தைச் சேர்ந்தவன்.இதுதான் சகோ சன்காவேரி சொன்னது.

இதில் என்ன தவறு காண்கிறீர்கள் என்று புரியவில்லை.

எனக்கு இது மிகவும் உபயோகமான நல்ல வெளிப்பாடு.

--

விசுவாசமா, கிரியையா என்று பார்த்தால், விசுவாசத்தினால் தான் இரட்சிப்பு. ஆனால் இரட்சிக்கப்பட்ட பின்பும், கிரியை ஒன்றும் இல்லாமல், விசுவாசம் மட்டுமே இருக்குமானால் அது சரியான் இரட்சிப்பு இல்லை. கிரியை காணப்படாவிட்டால், இரட்சிப்பைக் கூட இழக்க நேரிடலாம்.விசுவாசம் இருக்கு என்பதே கிரியையினால் தான் தெரிய வரும். ஆபிரகாம் வாக்குத்தத்தை விசுவாசித்தார் என்பது ஈசாக்கை பலியாக கொடுக்க ஒப்புக் கொடுத்த போது தான் நிரூபணமாயிற்று. பிசாசுகளும் தேவன் உண்டென்று விசுவாசிக்கின்றன. ஆனால் அவைகளிடம் அதற்கேற்ற கிரியை கிடையாது.

முதலில் விசுவாசம், அப்புறம் கிரியை. இரண்டும் தேவைதான்.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

//கள்ளன் என்பவருக்கு, விசுவாசம் இல்லை. என்பதை எதை வைத்து கூறுகிறீர்.//

 இரட்சிக்கப்பட்ட கள்ளனுக்கு விசுவாசமில்லை என்று நான் எப்போது சொன்னேன்?

அவனும் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டான் என்றே சொல்கிறேன்.

//அதே போல் முற்பிதாவான ஆபிராகாமின், மடியில் இருந்த  தரித்திரன் லாசருவின்  விசுவாசம். எங்கு சொல்லப்பட்டிருக்கிறது.//

ஆபிரகாமின் மடியில் இருந்த லாசரு, இயேசு கூறிய கதையில் வரும் ஒரு பாத்திரம். மேலும், அந்த லாசரு ஞானஸ்நானம் பெற்றான் என்று எங்குள்ளது?  அவன் விசுவாசமும் அங்கு சொல்லப்படவில்லை, ஞானஸ்நானமும் சொல்லப்படவில்லை.

//ஞானஸ்நானம் என்பது அடக்கம் பண்ணப்படுதல்  உரோமர் 6:3-4.//

ஞானஸ்நானம் என்பது அடக்கம் பண்ணபடுதலும்தான். ஆனால், நாம் இங்கு பேசுவது தண்ணீரில் பெரும் ஞானஸ்நானம். ஆனால், ஞானஸ்நானம், மற்றும் திருவிருந்து எனப்படும் செயல்கள், கீழ்ப்படிதளால் செய்யப்படுபவையே.



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 32
Date:
Permalink  
 

 ஞானஸ்நானம் என்பது கீழ்படிதல்.


 கள்ளன் என்பவருக்கு, விசுவாசம் இல்லை. என்பதை எதை வைத்து கூறுகிறீர்.

அதே போல் முற்பிதாவான ஆபிராகாமின், மடியில் இருந்த  தரித்திரன் லாசருவின்  விசுவாசம். எங்கு சொல்லப்பட்டிருக்கிறது.

ஞானஸ்நானம் என்பது அடக்கம் பண்ணப்படுதல்  உரோமர் 6:3-4.



__________________
karna


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

முற்றிலும் சரி சகோ. அசோக்.
 
 
ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்கு முன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை. வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது (ரோமர் 4:3-4)


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

இந்த (நல்ல) வெளிப்பாடு தேவனிடத்திலிருந்து வந்ததா?

தேவனிடத்தில் பட்சபாதமில்லையே... இரட்சிப்பு எல்லாகாலங்களிலும் விசுவாசத்தின் மூலமே.

பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி, விசுவாசத்தின் மூலமே இரட்சிப்பு.

ஞானஸ்நானத்தின் மூலம் ரட்சிப்பென்பது, கிரியைகளின் மூலம் இரட்சிப்பென்பதற்க்கு சமம். ஞானஸ்நானம் என்பது கீழ்படிதல்.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

suncauvery wrote:

பெந்தெகோஸ்தே நாளன்று தான் சபை ஸ்தாபிக்கப்பட்டது. இதனுடைய ஸ்தாபகர் பரிசுத்த ஆவியானவர். இதன் பிற்பாடு கடவுளை விசுவாசிப்பவர்கள் சபையின் கீழ் வருகிறார்கள். ஆனால் சிலுவையில் அறையப்பட்ட ஓர் கள்ளன், பழைய ஏற்பாட்டு காலத்திற்குள் வருகிறான். எப்படி முற்பிதாவான ஆபிரகாமும், மரித்த தரித்திரனான லாசருவும் பரதீசில் கணப்பட்டார்களோ. அப்படியே இந்த கள்ளனும் சென்றான்....


 இது நல்ல வெளிப்பாடு!



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 32
Date:
Permalink  
 

பெந்தெகோஸ்தே நாளன்று தான் சபை ஸ்தாபிக்கப்பட்டது. இதனுடைய ஸ்தாபகர் பரிசுத்த ஆவியானவர். இதன் பிற்பாடு கடவுளை விசுவாசிப்பவர்கள் சபையின் கீழ் வருகிறார்கள். ஆனால் சிலுவையில் அறையப்பட்ட ஓர் கள்ளன், பழைய ஏற்பாட்டு காலத்திற்குள் வருகிறான். எப்படி முற்பிதாவான ஆபிரகாமும், மரித்த தரித்திரனான லாசருவும் பரதீசில் கணப்பட்டார்களோ. அப்படியே இந்த கள்ளனும் சென்றான்....



__________________
karna


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Bro Christopher: கேள்வி என்ன வென்றால், இதை செய்யாதவர்கள் பரலோகதிற்குள் பிரவேசிக்க முடியுமா?

போக முடியும்தான். ஆனாலும், ஆண்டவரை அறியும் அறிவில் வளர வளர, அவர் மேல் உள்ள அன்பு கூடக் கூட, அவர் சொல்வதையெல்லாம் செய்யவேண்டும் என்ற விருப்பம் நமக்குத் தானாய் வரும். அப்ப யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் நமக்கே ஞானஸ்நானம் எடுக்க வெண்டும், திருவிருந்தில் பங்கெடுக்க வேண்டும் என்ற விருப்பம் வரும்.அப்படி அவர் மேலுள்ள அன்பின் நிமித்தம் எதையும் செய்வதுதான் சிறந்ததேயன்றி, பாஸ்டரை நேசித்தோ, சபையை நேசித்தோ, பெற்றோரை நேசித்தோ செய்வது சரியல்ல என்பது என் கருத்து.



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

sjchristopher wrote:

அவன் ஞானஸ்நானம் எடுக்கவில்லை ஆனாலும் அவன் கண்டிப்பாக பரதீசுக்கு போய் இருக்க வேண்டும். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான தேவ சித்தம் என்ன...


 ஒருவர் கள்ளனா இருந்தா ஞானஸ்நானம் எடுக்க வேண்டியதில்லை??



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, அவர் சித்தம் செய்து வாழ்பவர்கள், சபைக்கு செல்லாவிட்டாலும் , கண்டிப்பாக பரலோகம் செல்வார்கள்.

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, சபைக்கு சென்றும், அவர் சித்தம் செய்யாமல் வாழ்பவர்கள், பரலோகம் செல்வது கஷ்டம்தான்.

--

ஆண்டவர் பலரது உள்ளங்களையும் இக்கடைசிக் காலத்தில் தட்டி எழுப்பி சபையில் காணப்படும் அநியாயம், அக்கிரமம், வியாபாரத்தன்மை, ஆவிக்குரிய வேசித்தனம், கறை, திறை எல்லாம் தெளிவாகக் காட்டி , பாரப்படுத்தி ஜெபிக்க வைக்கிறார். சபை ஐக்கியத்திலிருந்து சிலரை விலக சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அந்த அளவிற்கு உலக வழிமுறைகள் ஆவிக்குரிய சபைகளிலும் நீக்கமற நிறைந்து ஆண்டவரின் நாசிக்கு நாற்றம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சபை அந்தி கிறிஸ்துவை, கள்ளத் தீர்க்கதரிசியை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாக இருக்கிறது. II தெச 2:4 வசனத்தை அந்திக் கிறிஸ்துவை பிசாசை ஆராதிப்பவர்களும், உண்மை தேவனை ஆராதிப்பவர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம். தலைவர்களுக்கு சரியான வெளிப்பாடு இல்லை. விசுவாசிகளும் சொந்தமாக யோசிக்க, வெளிப்பாடு பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படாததால், அவர்களுக்கும் எது சரி எது தவறு என்று பகுத்தறியும் தன்மை இல்லை. எளிதில் சாத்தானால் வஞ்சிக்கப்படும் அபாயத்தில் தான் சபை இப்ப இருக்கிறது. உதாரணத்திற்கு எங்க சபையையே எடுத்துக் கொள்வோமே. மாவட்டத்தில் பெரிய , அந்நிய பாஷை அடையாளத்துடன் இயங்கும் (so called) ஆவிக்குரிய சபைதான். ஃபாதர் பெர்க்மான்ஸ் போன்ற ஊழியர்களுடன் நெருக்கம் உண்டுதான். துதி ஆராதனை சிறப்பாகத்தான் இருக்கும். ஊழியக்காரர்களுக்கு பிரசங்க வரம் உண்டுதான். ஆனால், தலைவர்களுக்கு இருக்கும் ஒரே வெளிப்பாடு/தரிசனம்- சபை வளரணும், பெரிசாகணும். அவ்வளவுதான். என்னைக் கேட்டால் சபை வளரத் தேவையானது ஆத்தும பாரமும், மன்றாட்டு ஜெபமும் தான். அது இருந்தால் care cell இருக்கோ இல்லையோ சபை தானாய் வளரும்.

ஆனால் சபையில் என்ன நடக்குது? இந்த area வில் உள்ள பெரிய சபை எது என்று பார்க்கிறார்கள். சிங்கப்பூரில் உள்ள சிட்டி ஹார்வெஸ்ட் சர்ச் (City Harvest Church) கண்ணில் படுகிறது. அதன் தலைவர் ஸ்டைலான அலங்கார உடைகள் விற்கும் தொழில் செய்யும் காங் ஹீ (Kong Hee). உடனே, இலட்சக்கணக்கில் பணம் செலவு செய்து அங்கே ஊழியக்காரர்களை(அதாவது மகன்/மருமகன் மார் மட்டும்) அனுப்பி, அவர்களிடம் சபை வளர என்ன திட்டம் இருக்கிறது என்று பார்த்து, படித்து வர வைக்கிறார்கள். அவர்கள் வந்து Kong Hee புகழ் பாடி, இயேசு கிறிஸ்து பணக்காரராக வாழ்ந்தார் என்று தப்பு தப்பாக பிரசங்கம் பண்ணி, காணிக்கை எடுக்கும் முன் காணிக்கைப் பிரசங்கம் என்ற புதுமையைப் புகுத்தி, ஊழியம் செய்கிறார்கள். (City Harvest Church - Cash Harvest Church என்றும் சொல்லப்படுகிறது! )எங்க சபையில் 3 பேர் அங்கு சென்று படித்ததால் நான் கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி(சகோ ஜான் பாஷையில் திருடி) Kong Hee பற்றி கண்டு பிடித்து, அப்ப தமிழில் டைப் பண்ண தெரியாததால் ஆங்கிலத்தில் எழுதி எங்க சபை ஊழியர்களுக்கு நவம்பரில் அனுப்பிய ஈமெயில் இது.

படித்து மகிழவும் ( அசோக்குமார்ஜி மன்னிக்க வேண்டுகிறேன்)

--

Jesus Made a Whip

Dear All, 

Three of our ministers  went to CHC, Singapore for Bible Study and training. So,I did a little research on CHC and Kong Hee and this is what I found: 

Pastor Kong Hee’s wife Sun Ho released a MTV style pop song video called China Wine in 2007.See the video below. I also understand that they sell her CDs in the church and the congregation is asked to buy them.

http://www.dailymotion.com/video/x76esy_sun-china-wine_music 

There are a few professions which a Christian cannot enter into. One cannot be a Christian and be in the cine field or modeling where the flesh is glorified. One cannot be a Christian and also produce MTV style pop songs like that of Michael Jackson or Shakira -the one who sang for world cup football. But, it seems these pop singers are Sun Ho’s role models. She wants to be like them. That’s why she is staying in America . This is very wrong, imo. Apostle Paul says that his fellow worker Demas deserted ministry for the love of present world, likewise, it seems Sun Ho also deserted her call to be the pastor of the church for her love of popularity and pop songs. See few more of her pictures.

http://www.transitioning.org/2010/06/16/sun-ho-the-controversial-pastors-wife/

http://www.divaasia.com/article/7381

http://sunfare.wordpress.com/ 

Pastor Kong Hee vigorously defends his wife in the following article "Wholesome Shallowness".Only if you watch the China Wine  video, you will understand "what" Kong Hee is defending in his article.(Though, I won't advise anyone to watch such things). Read Below.

http://www.konghee.com/www/2009/09/wholesome-shallowness/ 

Kong Hee encourages and sees nothing wrong in these things in the name of “cultural mandate”. He even compares pop songs with the books in the Bible. He doesn’t know to distinguish holy from unholy. How can he call himself a minister of the Holy God?? May be that’s why he likes to call himself a businessman.  

Unwholesome Depth - The following is a good analysis of Kong Hee's article.

http://rageagainstthesolitude.blogspot.com/2010/06/unwholesome-depth.html

 Kong Hee is deceived. One sign of end times is deception. Bible says false Christs and false prophets will arise and deceive many in the end times. That’s what is happening before our eyes. 

Kong Hee calls darkness as light, bad as good ,wrong as right and bitter as sweet. That deserves a woe (Isaiah 5:20 , 21). What fellowship Christ has with Belial?( 2 Cor 6:14-16) What good it will be, if in the end Jesus would say to the Pastor of 33,000 member church “I never knew you. Depart from me”? (Matthew 7:23) 

Why do we say, we must avoid watching tamil films and cine songs? Because they glorify flesh , revenge, violence and other useless worldly things, so we shouldn't support them by watching them . Also they have the capacity to corrupt our soul. Sun Ho is not just watching, she is willingly making things that will corrupt. I'm sure the devil is very pleased with the ways of Sun Ho and Kong Hee. 

Kong Hee also preaches that Jesus was rich when He lived on earth. Imo, that is nonsense. I wonder how anyone can preach like this. Jesus was born in manger -his father couldn’t arrange a place in the inn, in a carpenter’s family -poor profession, their family offered pigeons -poor people offering, his house was in Nazareth -poor city, and didn’t ride a horse-rich man’s vehicle. Jesus was divinely provided at times. But,Jesus lived like an ordinary middle class or a poor Jewish man and certainly not as a rich man when he was on earth. Preaching otherwise, imo is preaching a lie. Rich Jesus is another Jesus and another gospel. Kong Hee even has the audacity to preach that Jesus wore designer clothes.  May God have mercy on him. I think he preaches like that to justify his fashion clothes business and their rich worldly luxurious lifestyle.  

Prosperity Gospel is the doctrine of the devil. When Jesus was on earth, he made people to leave everything and follow him. He didn’t prosper anyone’s business. He didn’t make anyone rich and famous. The one and only worldly blessing he offered to people is physical healing. All the 12 apostles (except John) were KILLED and not made KINGS and Jesus himself DIED shamefully in the cross. His Kingdom is not of this world. We need to take up the CROSS (not CROWN) and follow Jesus.

I'm not saying having money or  being rich is bad. 

In the story of frog and hot water, the water was heated gradually and the frog was conditioned to accept the heat and in the end it perished. That is what is happening now. The devil is heating the waters through ministers like Kong Hee. Believers are being conditioned to accept, wrong as right. 

The world is moving towards one world church and one world religion. The devil needs christian ministers who will lead believers into accepting this as a solution for world peace. If Kong Hee continues likes this, my prophecy is that (mark this, this is a sure prophecy!), he will host/participate in interfaith conferences in the future. His 33,000 sheep just as they accepted his defense of obscene China Wine and rich Jesus without any question will also accept this and perish. 

I understand that currently CHC is investigated for misuse of church funds. May be God is shaking them to come out of their fleshy ways and love of mammon.  

Another popular minister currently in trouble is Benny Hinn. Nobody can understand why his wife of 30 years wants to divorce him now. To add to this, before his divorce is finalized, he was seen holding hands with a lady minister in Rome , Italy . He initially said that they traveled independently to Italy for respective ministry duties and later admitted that he invited her to come to Rome and they traveled together for donating money to the Vatican museum(not for ministry). He said he was invited by the Vatican but the Vatican officials have denied that! It’s all very sad.  

 Benny Hinn stayed at a $10,000 per night hotel in Rome . It seems, he owns a $10 million home and a private jet. I really cannot understand why ministers of Jesus Christ want to live rich like Bill Gates or President of America. May be they see themelves as some big CEOs than as SERVANTs of people and God. 

We will be safe if we  have the spiritually rich and powerful Lord Jesus Christ who was humble enough to die in the cross for us as our role model, and not the rich prosperous Jesus or Kong Hee or Benny Hinn who seem to be corrupted by the world, flesh and money. 

Another popular prosperity gospel mega church pastor in America currently in trouble is Bishop Eddie Long. He is accused of sexually assaulting young boys. 

Yet another ministry currently in trouble in America is Robert Schuller's Crystal Cathedral mega church. They recently declared bankruptcy. They say he preaches a different gospel. 

It is very obvious that God is shaking the church NOW, especially those ministers/ministries living rich and preaching the prosperity gospel or some other gospel.   

The following articles are very good. 

Was Jesus Rich?

http://www.letusreason.org/wf15.htm 

The ATM God 

http://herescope.blogspot.com/2010/08/money-god.html

http://herescope.blogspot.com/2010/08/money-god_20.html 

These tamil articles describe the state of today's churches and believers.

இரண்டில் ஒன்று 

http://vijay76.wordpress.com/2010/10/24/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-1/

 

http://vijay76.wordpress.com/2010/10/31/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/ 

 -Golda.

 

 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
Permalink  
 

//ஆனால் சத்தியமான உண்மை என்னவென்றால் இதுமாத்திரமல்ல, வேறொன்றினாலும் யாருமே தன்னை பரலோகத்துக்குத் தகுதிப்படுத்திக்கொள்ளுவது இயலாத காரியமாகும்;//

 

மிக சரியான வார்த்தைகளாக தெரிகிறது.

எனக்கு தெரிந்து சிலர், வேறு சில காரணங்களால்(எனக்கும் அந்த காரணங்கள் முழுமையாக என்ன வென்று தெரியாது) ஆலயம் செல்வதில்லை, ஆனால் கிறிஸ்தவ வாழ்க்கைக்குரிய அணைத்து எண்ணங்களும் (for example he will not take bribe in his office, he will read bible regularly, he pray daily, நிறைய இரக்க சிந்தனை உள்ளவர்) சரியாக இருக்கிறது. அவரை பற்றிய தங்கள் அபிப்ராயம் என்ன?





__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

John wrote:

ஞானஸ்நானம் எடுப்பது மற்றும் திருவிருந்து எடுப்பது என்ற இரு கட்டளைகளும் அன்பு தேவன் இயேசு கிறிஸ்துவின் நேரடி கட்டளைகளாகும். ஒருவன் இவைகளை செய்யவில்லை என்றால் நிச்சயம் அது பாவமே!

sjchristopher wrote:


 

உங்கள் சொற்படி, இந்த காரியங்களை செய்யவில்லை என்றால் அது பாவம்...

நானும் கொஞ்சம் முயற்சிக்கட்டுமா...நண்பர்கள் சற்று பரிசீலித்துப் பார்ப்பார்களாக. ஞானஸ்நானமும் சரி,திருவிருந்தும் சரி அல்லது வேறெந்த மார்க்க கடமையும் சரி பெறுவதும் கொடுப்பதுமான காரியமாகும்;எனவே ஞானஸ்நானம் "எடுப்பது" என்ற வார்த்தையில் சற்று மாறுபடுகிறேன்; திருமுழுக்கினர் யோவான் திருமுழுக்கு கொடுத்தார், மனந்திரும்பியோர் பெற்றார்கள்,சரியா..?

கொடுப்பவரிடம் பெறுவதற்கு முதல் அடையாளம் கீழ்ப்படிதல் ஆகும்;ஒரு மனிதன் சொந்த ஞானத்தினாலும் மூளையறிவினாலும் யோசித்து சரிபார்த்து நிரூபணங்களையெல்லாம் பரிசீலித்து இங்கே வருவானானால் அவனும் கடைசி வரை இதேபோல நடத்தப்படுவான்; விகல்பம் இல்லாமல் குழந்தையைப் போல தாழ்த்துபவர்களையே கர்த்தர் தேடிக்கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட உள்ளங் கொண்டோர் கேள்வி கேட்கமாட்டார்கள்;கேள்வி கேட்பவன் புத்திசாலியாக இருக்கலாம், ஆனால் ஞானியாக முடியாது; ஞானத்தின் ஆரம்பமே பயப்படுதலும் தாழ்த்துவதும் கீழ்ப்படிதலுமே.

அடுத்தது இவற்றை செய்யாதோர் பாவிகள் அல்ல,அல்லது பாவம் செய்பவர்களல்ல;அவர்கள் தங்கள் பாவத்திலேயே அல்லது பாவத்தன்மையிலே நிலைத்திருப்பார்கள்;இந்த கடமைகளை ஒரு சமயம் நிறைவேற்றியும் தொடராது விட்டோர் பின்மாற்றத்தில் இருக்கிறார்கள்;அது பாவத்தன்மையில் இருப்பதைவிட கொடிய நிலையாகும்;அப்படிப்பட்டோரே நியாயத்தீர்ப்புக்காக வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்களைப் புதுப்பிக்கிறது கூடாத காரியம் என்றும் வேதம் சொல்லுகிறது;இரஸலியன் கூட்டத்தின் பேதமாணவர்கள் அந்த வகையினரே..!

John wrote:

ஆனால் செய்கிறது எந்த விதத்திலும் நம்மை பரலோகத்திற்கு தகுதிப்படுத்தாது!

sjchristopher wrote:

மிக்க நன்றி சகோ.ஜான் அவர்களே....இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.

ஒரு கேள்வி: கேள்வி என்னவென்றால், இதை செய்யாதவர்கள் பரலோகத்திற்குள் பிரவேசிக்க முடியுமா? என் உள்ளத்தில் என்ன தோன்றுகிறதென்றால், - "இவை இரண்டும் முக்கியம், ஆனால் விசுவாசம் இதைவிட ரொம்ப முக்கியம். விசுவாசம் இருந்தால், இவை இல்லாமலும் நாம் பரலோகம் போக வாய்ப்பு உள்ளது". இதை சொன்னால் சில நண்பர்கள் (in the church where I go), ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இதை குறித்த உங்கள் கருத்து என்ன..?

அருமை நண்பர்களே, நீங்கள் யோசிப்பதைப் பார்த்தால் அரிச்சுவடி அல்லது ஒரு மொழியின் எழுத்துக்களைக் கல்லாமலே அந்த மொழியைப் பேசலாமே என்பது போல இருக்கிறது;ஒரு மொழியைக் கற்பதற்கு எப்படி அரிச்சுவடியும் அதனைத் தொடர்ந்து அதன் இலக்கணமும் அவசியமோ அதுபோல ஒரு விசுவாசி முழுமையான பரிபூரண நிலையை அடைவதற்கு கீழ்ப்படிதலுக்கு அடையாளமான ஞானஸ்நானம் மற்றும் ஐக்கியத்துக்கு அடையாளமான திருவிருந்து ஆகியவற்றில் பங்கேற்றாக வேண்டும்;ஒன்றை ஒரே முறை செய்யவேண்டும்;மற்றதை தொடர்ந்து செய்யவேண்டும்;படுத்துக்கொண்டும் போர்த்திக்கொள்ளலாம்,போர்த்திக்கொண்டும் படுத்துக்கொள்ளலாம் என்பதைப் போன்றதல்ல,இவ்விரண்டும் பிரமாணமும்;வேதமும் இதைக் குறித்து...

  • "விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். " (மாற்கு.16:16 )

மேற்கண்ட வரிகள் நம்முடைய ஆண்டவர் தமது திருவாய் மலர்ந்து மொழிந்த வார்த்தையாகும்;இதற்கு மாறாக யார் எதை சொல்லிவிடமுடியும்..?

விசுவாசம் கேள்வியினாலும் கேள்வியானது வேத வசனத்தினாலும் வருகிறதாக பவுலடிகள் சொல்லுகிறார்;கேள்வி என்பது கேள்வி கேட்பதையல்ல,சொல்லக் கேட்பதைக் குறிக்கும்;விசுவாசம் என்பதில் சம்மதிக்கப்பண்ணுவது சேருவதற்கு வாய்ப்பில்லை;ஏனெனில் யாரையும் சம்மதிக்கவும் நம்பவும் செய்வது நம்முடைய காரியமல்ல;அதுபோன்ற அறிவுஜீவிகளுக்கு சுவிசேஷம் தேவையுமல்ல;

விசுவாசமானது நங்கூரமிட்டவுடனே நான் கேட்பேன், இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்பதாக;ஊழியர் சொல்லுவார், நீ, பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமத்தினால் (நாமங்களுக்கடுத்த உபதேசம் கள்ள உபதேசம் ஆகும்...) ஞானஸ்நானம் பெறவேண்டும் என்பதாக; அடுத்தது இயல்பாக எந்த மனித முயற்சியோ மனித ஞானத்தின் பாதிப்போ இல்லாத நிலையில் பெறும் அபிஷேகம்;

இந்த வரிசை எந்த நிலையிலும் யாருக்காகவும் மாறாது; மாற்றப்படக்கூடாதது ஆகும்.

இவை தவிர பரலோகத்துக்கு தகுதியாவது எதினால் என்று யாராவது கேட்டால் நண்பர்கள் இங்கே குறிப்பிட்டதுபோல ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்தின் மூலமாக மட்டுமல்ல என்று சொல்லுவது ஒருவேளை புரட்சிகரமாக இருக்கலாம்,ஆனால் சத்தியமான உண்மை என்னவென்றால் இதுமாத்திரமல்ல, வேறொன்றினாலும் யாருமே தன்னை பரலோகத்துக்குத் தகுதிப்படுத்திக்கொள்ளுவது இயலாத காரியமாகும்;

பரலோகத்துக்கு நான் தகுதியானவன் என்று எவனாவது நினைவு கொண்டானானால் அவனைக் குறித்து வேதம் சொல்லும்,அவன் பொய்யன், தன்னை குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணுகிறான்;வேர் தன்னை சுமக்காமல் தான் வேரை சுமப்பதாக எண்ணுகிறான் என்று அர்த்தம்;ஆனால் கீழ்ப்படிதலுக்கும் மாயமற்ற விசுவாசத்தும் களங்கமில்லாத அன்புக்கும் இணையானது எதுவுமில்லை எனலாம்.

இப்படியாக நான் எதையும் என்னுடைய கொள்கையாகவோ போதனையாகவோ எழுதவிரும்பவில்லை;ஏனெனில் அதன்மூலம் என்னைப் பின்பற்றுவோர் சிலர் சேர்ந்தாலும் நான் ஒரு குழுவாகி விடுவேன்; நானும் எதையாவது போதிக்கத் துவங்கி இன்னொரு மனித போதனைக் கூட்டத்தை உருவாக்கிவிடுவேனோ என்ற அச்சத்தின் காரணமாகவே நான் இதுவரை உருப்படியாக எதையும் செய்யவில்லை.இவையனைத்தும் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் சத்தியத்தைக் குறித்த என்னுடைய புரிதல் ஆகும்;இதற்கு மாறாக வேறு யாராவது சத்தியத்தின் அடிப்படையில் எதைச் சொன்னாலும் ஒரு சிறுபிள்ளையைப் போல அதனை பரிசீலித்து ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன்;

நான் எழுதியுள்ள கருத்துக்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் வசனத்தின் பாதிப்பு இருப்பதை வசனத்தை நேசித்து வாசிப்போர் அறிவர்;அப்படியும் அறியாத நண்பர்கள் கேட்டுக்கொண்டால் மட்டும் அதற்குரிய வசனத்தைப் பதிக்க ஆயத்தமாக இருக்கிறேன்;அதாவது குறிப்பிட்ட வரியை மேற்கோள் காட்டி இந்த கருத்தை நீங்கள் எந்த அடிப்படையில் எழுதினீர்கள் என்று கேட்கலாம்.நன்றி..!

நண்பர்கள் தயவுசெய்து தமது கருத்துக்களைத் தொடர பணிவுடன் வேண்டுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
Permalink  
 

John wrote:

குறிப்பு: ஞானஸ்நானம் எடுப்பது மற்றும் திருவிருந்து எடுப்பது என்ற இரு கட்டளைகளும் அன்பு தேவன் இயேசு கிறிஸ்துவின் நேரடி கட்டளைகளாகும். ஒருவன் இவைகளை செய்யவில்லை என்றால் நிச்சயம் அது பாவமே! ஆனால் செய்கிறது எந்த விதத்திலும் நம்மை பரலோகத்திற்கு தகுதி படுத்தாது!
மிக்க நன்றி சகோ.ஜான் அவர்களே....இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.
ஒரு கேள்வி:

உங்கள் சொற்படி, இந்த காரியங்களை செய்யவில்லை என்றால் அது பாவம், கேள்வி என்ன வென்றால், இதை செய்யாதவர்கள் பரலோகதிற்குள் பிரவேசிக்க முடியுமா?

என் உள்ளத்தில் என்ன தோன்றுகிறதென்றால், - "இவை இரண்டும் முக்கியம், ஆனால் விசுவாசம் இதைவிட ரொம்ப முக்கியம். விசுவாசம் இருந்தால், இவை இல்லாமலும் நாம் பரலோகம் போக வாய்ப்பு உள்ளது". இதை சொன்னால் சில நண்பர்கள் (in the church where I go), ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

இதை குறித்த உங்கள் கருத்து என்ன..?



__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

அன்பு சகோ. கிறிஸ்டோபர் அவர்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறேன்!

பரலோகம் போக வேண்டிய ஒரே தகுதி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்று கொள்ள வேண்டிய விதத்தில் ஏற்றுக்கொண்டு அவருடைய நீதியினால் நான் தேவனால் ஏற்று கொள்ளப்படுவேன் என்று விசுவாசிப்பதே!

பரலோகம் போக சில காரியங்களை/கட்டளைகளை கைக்கொள்ள வேண்டும் என்று முனைவது மாத்திரம் அல்ல நினைப்பதே கர்த்தருக்கு அருவருப்பானது. நாம் செய்கிற எந்த உழியமும் இயேசுவை நேசிப்பத்தின் அடையாளமாக இருக்க வேண்டுமே அன்றி தேவனிடத்தில் தகுதியை உயர்த்துவதற்காக செய்யக்கூடாது (தேவாலயத்தில் ஜெபித்த பரிசேயன் அதை செய்தான்) இயேசு தெளிவாய் சொல்லுகிறார்.
 
அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.
  • இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். (யோவான் 6:28-29)
மேலும் ரோமர் 4 மற்றும் 5 ஆம் அதிகாரங்களை வாசித்தால் தேவன் ஒரு பாவியை எந்த அடிப்படையில் ரட்சிக்கிறார் என்பதை அறிந்து கொள்ளள்ளலாம். (யாக்கோபு எழுதின நிருபத்தில் ஒருவன் கிரியையினால் ரட்சிக்கபடுவது போல வசனங்கள் இருந்தாலும் அவைகளை சரியான விதத்தில் புரிந்து கொண்டால் குழப்பம் இருக்காது. அதை குறித்து தனியான திரியில் பார்க்கலாம்)

  • ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும். (ரோமர் 4:4)
 
  • இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. (ரோமர் 5:9)
நீயாதீர்ப்பின் நாளில் என்ன நடக்கிறது என்று பார்ப்போமா? நீயாத்தீர்ப்பில் இருவகையான புத்தகங்களை குறித்து பார்க்கிறோம்.

1. புத்தகங்கள் (அவனவனுடைய கிரியைகள்)
2. புத்தகம் அல்லது ஜீவ புஸ்தகம்
  • மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். (வெளி 20:12)
(ஆத்துமத்தில்) மரித்தோர் (அல்லது இயேசு கிறிஸ்துவை ஏற்று கொள்ளாதோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக (எந்த ஒரு மனிதனும் தன்னுடைய சொந்த கிரியையின் படி நீயாயம்தீர்க்கப்பட்டால் போக கூடிய இடம் நரகமே!) நரகம் போவார்கள்.
  • அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. (ரோமர் 3:10-12)
ஆனால் இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டவன் ஜீவ புஸ்தகத்தில் பெயர் இருப்பதன் அடிப்படையில் பரலோகம் போவான்

  • ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான் (வெளி 20:15)
குறிப்பு: ஞானஸ்நானம் எடுப்பது மற்றும் திருவிருந்து எடுப்பது என்ற இரு கட்டளைகளும் அன்பு தேவன் இயேசு கிறிஸ்துவின் நேரடி கட்டளைகளாகும். ஒருவன் இவைகளை செய்யவில்லை என்றால் நிச்சயம் அது பாவமே! ஆனால் செய்கிறது எந்த விதத்திலும் நம்மை பரலோகத்திற்கு தகுதி படுத்தாது!

இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பது என்றால் என்ன என்றும் ஒரு தனி திரியில் தியானிப்போம். இயேசு கிறிஸ்துவை பலர் பல காரியங்களுக்காக பல்வேறு நிலைகளில் விசுவாசிக்கலாம் ஆனால் எல்லாம் ரட்சிப்புக்குரிய விசுவாசம் அல்ல!

உதாரணம்:

இயேசு தேவனுடைய குமாரன் ஆனால் தொழத்தக்கவர் அல்ல என்பது "சாத்தனுடைய" விசுவாசம். அது ஒருவனை நிச்சயம் பரலோகம் சேர்க்காது..!


__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
Permalink  
 

John wrote:

பிதாவை அறியாமல் , ஒரு நற்கிரியையும் செய்யாமல் வலது பக்கத்து கள்ளன் எப்படி பரதீசுக்கு போனான்?


 இது ஒரு நல்ல கேள்வி தான். உங்களது பதில்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.....

அவன் ஞானஸ்நானம் எடுக்கவில்லை ஆனாலும் அவன் கண்டிப்பாக பரதீசுக்கு போய் இருக்க வேண்டும். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான தேவ சித்தம் என்ன...



__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

John wrote:
இதை விட ஒரு முக்கியமான வேலை வந்து விட்டது


இதைவிட‌...? ஓகே..ஓகே..! அதையும் கவனிங்க‌...இதையும் கொஞ்சம் பாருங்க‌...உங்களைப் போன்ற பிள்ளைகள் தாம் எமது நம்பிக்கையின் நட்சத்திரங்களாக்கும்...எத்தனை கடினமான சூழ்நிலையிலும் தங்களது அழகான விவாதங்களை அடியேன் வாசித்துவிடுவது வழக்கம்;கர்த்தர் தாமே தங்களுடைய வைராக்கியத்துக்கு ஏற்ற பலனை அருளிச் செய்வாராக..!

  • சரியானதைக் கண்டுபிடிப்பதும் அதனைப்
  • பிடித்துக்கொள்ளுவதும் அதனைக்
  • கொண்டு செல்லுவதும் அதனைச்
  • சென்று சேர்ப்பதும் அதனை
  • சேர்த்து முடிப்பதும் அதனை
  • முடித்து நிற்பதும் அதில்
  • நின்று வெல்வதும் அதை
  • வென்று நிற்பதும் சாதாரணமான பணியல்லவே...
  • வாழ்த்துக்கள்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//என்ன அவ்வப்போது அப்சென்ட் ஆகிறீர்கள்...இதெல்லாம் சரியல்ல‌..! அப்புறம் நாம் ஓடிப்போயிட்டோமுன்னு அவனுங்க தூங்கப்போயிருவானுங்க‌, அவனுங்கள தூங்கவும் விடக்கூடாது...தூக்கவும் விடக்கூடாது...ஆமா..!//

முடிந்தவரையில் ஆப்சென்ட் ஆகாதிருக்க முயற்சிக்கிறேன் பிரதர். இதை விட ஒரு முக்கியமான வேலை வந்து விட்டது



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

John wrote:
//இப்படியிருக்க இந்த "நல்ல கள்ளனை" மாத்திரம் அன்றைக்கே எப்படி பரதீசுக்கு கூட்டிச்சென்றார்? //
 
உங்களை பொறுத்தவரையில் இரண்டு கள்ளர்களும் ஒன்றுதான். இரண்டு பெரும் 'கடைசியில்' ஒரு நாள் பரதிசுக்கு போக போகிறார்கள். உங்களுக்கு தெரிந்த இந்த அபரிமிதமான(?) உண்மை(??) இயேசு கிறிஸ்துவுக்கு தெரியாததினால் ஏதோ ஒரு கள்ளன் பரதிசுக்கும், மற்றவன் வேறு எங்கோ  போகப்போவது  போல தெரியாமல் சொல்லிவிட்டார். 
அதுசரி "இந்த ரெண்டு கள்ளர்களுக்கும் என்ன வித்தியாசம், ஒருவன் மரிக்கும் தருவாயில் அவரை நோக்கி அபயமிட்டதால் என்ன பலன் என்று செத்துபோன ரசலிடம் கேட்டு   விளக்குவீர்களா?
 

அடிச்சி நொறுக்குகிறீர்கள்,ஜாண்...அப்படித்தான் நல்லா இடிங்க‌...எறும்பு ஊற கல்லும் தேயும் என்பார்களே அதுபோலவும் மூடனை நொய்யோடு நொய்யாகப் போட்டு குத்தினாலும் அவனுடைய மூடத்தனம் அவனைவிட்டு நீங்காது என்பார்களே அதுபோலவும் நம்மால் இயன்றதை செய்துவைப்போம்;

என்ன அவ்வப்போது அப்சென்ட் ஆகிறீர்கள்...இதெல்லாம் சரியல்ல‌..! அப்புறம் நாம் ஓடிப்போயிட்டோமுன்னு அவனுங்க தூங்கப்போயிருவானுங்க‌, அவனுங்கள தூங்கவும் விடக்கூடாது...தூக்கவும் விடக்கூடாது...ஆமா..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

  நண்பர் சோல் சொலுசன் 

//இயேசு கிறிஸ்து "மரித்து" மூன்றாம் நாள்தான் உயிர்த்தெழுந்தார் என்றும் தேவன் அவரை மரித்தோரிலிருந்து மூன்றாம் நாள்தான் "உயிரோடு" எழுப்பினார் என்றும் நாம் நன்கறிவோம்."//
 
மூன்றாம்நாள் அவர் சரிர பிரகாரமாய் எழுந்தது உண்மைதான் ஆனால் வேதம் அவர் ஆவியிலே உடனடியாக உயிர்த்தெழுந்தார் என்றும் கூறுகிறது.
 
  • அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். (I பேதுரு 3:18-19 )
 
அவரோடு கூட அனேக பரிசுத்தவான்களும் எழுந்தார்கள் ஆனால் அவருடைய சரிர பிரகாரமான உயிர்தெழுதல் நடந்தபின்பே பரிசுத்தவான்களும் Visible ஆக காணப்பட்டார்கள்.
 
  • அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது. கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்(மத்தேயு 27:51-53)
//ஒரு கமா (,) வினால் ஒரு தவறான கோட்பாடு அல்லது பிரசங்கமே உருவாக காரணமான கிங் ஜேம்ஸ் மொழிப்பெயர்ப்பாளர்கள் மற்றும் இதை மொழிப்பெயர்த்த "பரிசுத்த வேதாகமம்" காரர்கள் தான் பொறுப்பாகிறார்கள்.//
 
இப்படி கிங் ஜேம்ஸ் மொழிப்பெயர்ப்பாளர்கள் என்று சொல்லி  தமிழில் மாத்திரம் "," வை Today க்கு அப்புறம் போடாமல் முன்னால் போட்டுவிட்டது  போல புளுகுவது ரசலின் கையாட்களுக்கு கை வந்த கலை. வேதத்தை மாற்றி சாத்தானின் கருத்துக்களை புகுத்தின NWT குப்பையில் தான் உங்கள்  விருப்பத்திற்கு ஏற்றார்போல மொழிபெயர்த்து இருக்கிறார்கள். ஆனால் அதை படித்துவிட்டுத்தான் உளறுகிறோம் என்பதை நீங்கள் மறைக்கும் மர்மம் என்னவோ!
 
 New Living Translation(©2007)
And Jesus replied, "I assure you, today you will be with me in paradise."

New International Version(©1984)

Jesus answered him, "I tell you the truth, today you will be with me in paradise."

English Standard Version (©2001)

And he said to him, “Truly, I say to you, today you will be with me in Paradise.”

New American Standard Bible (©1995)

And He said to him, "Truly I say to you, today you shall be with Me in Paradise."

International Standard Version (©2008)

Jesus said to him, "I tell you with certainty, today you will be with me in Paradise."

GOD'S WORD® Translation (©1995)

Jesus said to him, "I can guarantee this truth: Today you will be with me in paradise."

King James Bible

And Jesus said unto him, Verily I say unto thee, To day shalt thou be with me in paradise.

American King James Version

And Jesus said to him, Truly I say to you, To day shall you be with me in paradise.

American Standard Version

And he said unto him, Verily I say unto thee, To-day shalt thou be with me in Paradise.

Bible in Basic English

And he said to him, Truly I say to you, Today you will be with me in Paradise.

Douay-Rheims Bible

And Jesus said to him: Amen I say to thee, this day thou shalt be with me in paradise.

Darby Bible Translation

And Jesus said to him, Verily I say to thee, To-day shalt thou be with me in paradise.

English Revised Version

And he said unto him, Verily I say unto thee, Today shalt thou be with me in Paradise.

Webster's Bible Translation

And Jesus said to him, Verily I say to thee, This day shalt thou be with me in paradise.

Weymouth New Testament

"I tell you in solemn truth," replied Jesus, "that this very day you shall be with me in Paradise."

World English Bible

Jesus said to him, "Assuredly I tell you, today you will be with me in Paradise."

Young's Literal Translation

and Jesus said to him, 'Verily I say to thee, To-day with me thou shalt be in the paradise.'
 
//இப்படியிருக்க இந்த "நல்ல கள்ளனை" மாத்திரம் அன்றைக்கே எப்படி பரதீசுக்கு கூட்டிச்சென்றார்? //
 
உங்களை பொறுத்தவரையில் இரண்டு கள்ளர்களும் ஒன்றுதான். இரண்டு பெரும் 'கடைசியில்' ஒரு நாள் பரதிசுக்கு போக போகிறார்கள். உங்களுக்கு தெரிந்த இந்த அபரிமிதமான(?) உண்மை(??) இயேசு கிறிஸ்துவுக்கு தெரியாததினால் ஏதோ ஒரு கள்ளன் பரதிசுக்கும், மற்றவன் வேறு எங்கோ போகப்போவது போல தெரியாமல் சொல்லிவிட்டார். 
 அது சரி "இந்த ரெண்டு கள்ளர்களுக்கும் என்ன வித்தியாசம், ஒருவன் மரிக்கும் தருவாயில் அவரை நோக்கி அபயமிட்டதால் என்ன பலன் என்று செத்து போன ரசலிடம் கேட்டு  விளக்குவீர்களா?
 


__________________
«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard