அன்பு சகோ. பீட்டர் சாமுவேல். தங்கள் கருத்தோடு 100% ஒத்து போகிறேன். நிறைய எழுதுங்கள். எதோ நீங்கள் கிரியை செயக்கூடாது என்று சொல்லுவது போல ஒருவர் திரித்து எழுதி உளறிக்கொண்டு இருக்கிறார் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து எழுதுங்கள்
பாவம் என்பதின் முதன்மையான Definition "Anything that does not bring glory to God" கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவை பாவத்தின் கனிகள் அல்லது பாவங்கள் (plurel )
அன்பு சகோதரி மற்றும் சகோதரர்களே, நான் சொல்லுகிற காரியங்கள் சற்றே முரணாக தோன்றினாலும் சற்றே பொறுமை காத்து நான் சொல்ல வருகிற காரியங்களை முழுமையாய் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் (ஏற்றுக்கொள்ள அல்ல).
முதலாவது பாவம் என்றால் என்ன என்று வேதம் சொல்லுகிறது என சற்று ஆராய்ந்தால் நலமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். மனிதன் குற்ற மனசாட்சிக்கு இடம் கொடுத்து தேவனை விட்டு தூரம் போக வேண்டும் என்பதே நம்மைக் குறித்து சாத்தானுடைய திட்டமாயிருக்கிறது. ஆதாம் கீழ்படியாமல் போனபோது ஆண்டவர் அவனை துரத்தவில்லை தேடி வந்தார். ஆனால் ஆதாமோ தன்னுடைய ஒன்றுமில்லாத தன்மையை அறிந்து தேவனை விட்டு ஓடி ஒழிந்து கொண்டார். தேவன் அவரை அழைத்தபோதும் அத்தி இலைகளாகிய தன் சுய நீதியையே அணிந்து கொண்டு தேவனிடம் வர முயற்சித்தார். ஆனால் தேவனோ அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் தோலாகிய நீதியின் ஆடையை அவனுக்கு அணிவித்தார். காரணம் மனிதன் மீண்டும் தன் நன்மை தீமையை சார்ந்து கொள்ளாது எல்லாவற்றிற்கும் தம்மை மாத்திரம் சார்ந்திருக்க வேண்டும் என்பதே தேவனின் நோக்கம்.
மனிதனுடைய குற்ற மனசாட்சி நீங்கவே பழைய ஏற்பாட்டில் பலி கொள்கையை தேவன் ஏற்படுத்தினார்.
எல்லாவற்றிற்கும் தேவனை சார்ந்திருப்பதைத் தான் தேவன் விரும்புகிறார். சுய இஷ்டமாய் நடப்பது தான் பாவம். தேவனை சாராது வாழ்வது தான் பாவம். உருவாக்கின தேவனை அறியாதது தான் பாவம். உருவாக்கின தேவனை அறிந்தும் அவருடய சித்தம் செய்யாததுதான் பாவம். அவருடைய சித்தம் என்ன? அவரை நேசிக்க வேண்டும், அவருடைய சாயலாய் உருவாக்கப்பட்ட மனிதனை நேசிக்க வேண்டும். இது தான் கனி கொடுத்தல் (ஆவியின் கனி அன்பு ...).
தன் கணவனையும் மகன்களையும் உயிரோடு கொளுத்தினவர்களையும் அவர்களுக்காய் ஜீவனை கொடுத்த இயேசு நேசிப்பது போல நேசித்து மன்னிக்க முடிந்தால் அதுதான் கனி கொடுத்தல். இயேசுவை சார்ந்து அவரில் படர்ந்து வாழ்ந்தால் மட்டுமே இக்கனிகளை வெளிப்படுத்த முடியும்.
பழைய ஏற்பாடு முழுவதும் தேவனை விட்டு மனிதன் பின்வாங்குவதை மட்டுமே பாவம் என அதிகமாய் வலியுறுத்துகிறது. புதிய ஏற்பாடோ இயேசுவை தேவனுடைய குமாரன் என்று ஏற்றுக்கொள்ளாததையும் மனுக்குலத்திற்காய் அவர் செய்த பாவ பரிகாரத்தை ஏற்றுக்கொள்ளாததையும் தான் பாவம் என வலியுறுத்துகிறது. இயேசுவை ஏற்றுக்கொள்கிறவன் அவர் ஒவ்வொருவரையும் நேசிப்பது போல, அவரை நேசித்தால் எங்கே விபசாரம், எங்கே களவு, எங்கே பொய்சாட்சி, எங்கே கொலை, ......(கலாத்தியர் 5:15 முதல் 5:25 வரை) ரோமர் 13:9 ன் படி எல்லா பாவங்களும் அன்பில்லய்மையே.
தேவனிடத்தில் அன்பு என்பதை தவிர்த்து தாவீது அரசரிடம் என்ன நீதியை எதிர்பார்ப்போம்? பத்சேபாளிடம் மட்டும் தான் அவர் பாவம் செய்தாரா? அவருக்கு எத்தனை மனைவிகள் அதில் எத்தனை பேர் அடுத்தவர் மனைவிகள்? எத்தனை அருமையான திட்டமிட்ட கொலைகள்?
ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார் புறப்பட்டார். நமது சமுதாயத்தில் வேலைக்காரியை கற்பமாக்கி குழந்தையோடு துரத்திவிடுதல் பாவமா இல்லையா? தேவன் பார்பது சமுதாய பார்வை அல்ல என குறிப்பிடவே இதை எழுதுகிறேன். யாரும் இடறிப்போவதோ அல்லது தாவீதையும் ஆபிரகாமையும் தூஷிப்பதோ என் நோக்கமல்ல. ஏனெனில் அவர்கள் ஜீவனில் (பரலோகில் என்று சொல்ல பயமாக இருக்கிறது, யாராவது சண்டைக்கு வந்துவிடப் போகிறார்கள்) இருக்கிறார்கள் என இயேசுவே சாட்சி கொடுத்தாரே (தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல் ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார் அவர் ஆபிரகாமின் தேவன், தாவீதின் குமாரன் என அழைக்கப்பட்டவர்)
பரிசுத்த ஆவியானவர் என்னை நடத்தும்போது நான் முரண்டு பிடித்து என்னுடைய மாமிசத்தின் இச்சையை நிறைவேற்ற ஓட இயலாது. கடினமான சூழ்நிலைமையில் அன்னிய பாஷையை பேசுவதின் மூலம் அவற்றை மேற்கொள்ள முடியும் (இது என் அனுபவம் மட்டுமே அப்படி பேசும்போது ஆவியானவர் எனக்குள் இருக்கிறார் என்ற உணர்வு மேலோங்கும்). நான் தேவனுடைய ஆலயமாயிருக்கும்போது அவருக்கு பிடிக்காத எதையும் அவர் முன்பாக செய்ய எப்படி தைரியம் வரும்?
விபசாரம் ஏன் பாவம் - அது தேவன் நேசிக்கிற இன்னொரு மனிதனை (அல்லது மனுஷியை) வஞ்சிக்கிறது - அன்பில்லாய்மையை வெளிப்படுத்துகிறது - தேவனுடைய ஆலயமாகிய சரீரத்தை கெடுக்கிறது;சினிமா பாவமா - அது விபசார எண்ணங்களை தூண்டுகிறது;குடிப்பது பாவமா - அது மூர்க்கத்தை தூண்டுகிறது - சரீரத்தை கெடுக்கிறது;தேவன் அனுமதிக்கிற பணவசதிகள் போதாது என எண்ணி அதிக ஆசை கொள்வது கூட பாவம் தான்.
நான் சுகமாய் இருப்பது தேவனுடைய சித்தமெனில் தேவனுடைய சித்தம் செய்யாதிருக்கும்போது தேவனுடைய சித்தத்திற்கு மாறாய் நடப்பதற்கான பெலனை தேவன் குறைக்கும்போது மனம்திரும்பாமல் உலக பரிகாரியை நாடுவதும் பாவம்தான். எரிச்சல், கசப்பு, வைராக்கியம், கோபம், பகை, விரோதங்கள் எல்லாம் பாவம் தான். அன்பில்லாத எல்லாம் பாவம்தான்.
ஏதோ தன் மாமிச பெலவீனத்தினிமித்தம் இச்சையில் விழுந்துவிட்ட சகோதரனை எச்சரிப்பு!!!!!!!! செய்யும் டீவி அன்பர்கள் அவர்களை ஏமாற்றி தசம பாகத்தை (புதிய ஏற்பாட்டில் ஏது தசம பாகம்? ஏது ஓய்வு நாள் என்பது வேறு விஷையம்) எனக்கு (சபைக்கு கூட அல்ல) அனுப்பினால் ஆசீர்வாதம் என கூறி தங்கள் வாழ்க்கையை வசதியாக்கிக் கொள்வது பெரிய பாவம். சம நிலை என்றால் என்ன? கம்யூனியன் என்றால் என்ன என அறியாமல் ஒரு வேளை சாப்பாட்டிற்கே வழியில்லாதவர்களிடமிருந்து தசம பாகம் வாங்கி அவர்களை விட மேலான அந்தஸ்தில் வாழ்வது விபசாரத்தை விட பெரிய பாவமில்லையா? தங்கள் மனசாட்சிக்கு தவறு என தெரிந்தே வெளிப்படுத்தலில் சொல்லப்பட்டுள்ள எச்சரிக்கிற மூன்று தூதர்கள் ஏஞ்சல் டீவி தான் என கூறுவது பாவமில்லையா?
தேவனை சார்ந்து நடக்காதவனுக்கு (அல்லது அவர் குமாரனை விசுவாசிக்காதவனுக்கு) நித்திய அழிவு. தேவனோடு நடப்பவனுக்கு மீட்பு. இதில் எந்த சுய நீதிக்கும் இடமே இல்லை.
ஏதோ ஆதங்கத்தில் எழுதிவிட்டேன். தவறிருந்தால் சுட்டிக்காட்டவும். எழுதியவற்றிற்கு வேத வசன ஆதாரம் கேட்டால் தருகிறேன். டைப் செய்யவே அதிக நேரமெடுத்ததால் ஆதாரங்கள் தேடி கோர்க்க இயலவில்லை மன்னிக்கவும்.
விபசாரம் களவு .... பாவம் இல்லை என கூறியதாக தயவு செய்து எடுத்துக்கொள்ள வேண்டாம். தேவனுடைய பார்வையில் பெரிய பாவமாக எது தென்படுகிறது என்பதை விளக்கவே முயற்சிக்கிறேன்.
ஆனால், இரட்சிப்பை ஒருவர் இழக்க முடியும் என்பதை இன்னும் ஏற்கமுடியவில்லை. ஏனென்றால், வசன ஆதாரங்கள் என் கருத்துக்கு ஏற்ப ஏராளமாக உள்ளது. அவற்றை அடுத்த பதிவில் தருகிறேன்.
பாவத்திற்கு மரிப்பது சில பாவங்களுக்கு உடனே நேரிடுகிறது. சில பாவங்களை நாம் தொடர்ந்து செய்கிறோம்.
பாவம் என்று உணர்த்தப்படும் உணர்வுள்ள இருதயம் இருந்தால் நாம் செடியோடு இணைக்கப்பட்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
ஆவியானவர் பாவத்தைக் குறித்து கண்டித்து உணர்த்துவார். எனவே ஆண்டவரிடம் அப்பப்ப திட்டு வாங்கிட்டு இருக்கிறோம் என்றால் செடியோடு இணைக்கப்பட்டுத் தான் இருக்கிறோம் என்று அர்த்தம். கவலைப்படத் தேவையில்லை. இருதயம் கடினமாச்சு, ஆண்டவரால் உணர்த்த முடியவில்லை என்றால் தான் யூதாஸ் மாதிரி ஆகிட்டோம் என்று அர்த்தம்.
இரட்சிக்கப்படும் போது இயேசுவாம் திராட்சைச்செடியோடு இணைக்கப்படுகிறோம். பின் நிலைத்திருந்தால் தான் ஜீவன். அல்லது காய்ந்து போக வேண்டியதுதான். இரட்சிக்கப்பட்டு பின் வாங்கிப் போன ஊழியக்காரர்களையோ, விசுவாசிகளையோ நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? யூதாஸ், அனனியா சப்பீராள் எல்லாம் இரட்சிக்கப்பட்டவர்கள் தானே. பாலாசீர் லாறீ என்று ஒருவர் அப்படித்தான் பின் வாங்கிப் போனார் என்று சொல்கிறார்கள்.
மத் 7:23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச்செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்
2 பேதுரு 2:20 கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளால் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்
2 பேதுரு 3:17 ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து
எபி 10:38 விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.
எபி 10:26-29
26. சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்,
27. நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
14. நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப்பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்
பிலி 2: 12 ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்புநிறைவேறப்பிரயாசப்படுங்கள்
1 கொரி 3: 17 ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
நம் இரட்சிப்பை நாம் இழக்கக்கூடும் என்று தெரிகிறதல்லவா.
சாது நேற்று சொன்னது:நாம் இரட்சிக்கப்படும் போது ஆவி, ஆத்துமா, சரீரத்தில், - ஆவி தான் இரட்சிக்கப்படுகிறது. அவரைக் குறித்த அறிவு வளர வளர , வசனம் வாசித்து தியானிக்க தியானிக்க ஆத்துமா மறுரூபமாகிக் கொண்டே இருக்கும் (ரோமர் 12: 2),அதாவது இரட்சிப்படைந்து கொண்டே இருக்கும். இது ஆத்தும இரட்சிப்பு. (நான் சொல்வது) சரீரத்தை இரட்சிக்கவும் முடியாது, மறுரூபமாக்கப்படவும் முடியாது. அதை சிலுவையில்தான் அறைய வேண்டும். சாகும் வரை அறைந்து கொண்டேதான் இருக்க வேண்டும்.இதுவே இரட்சிப்பின் இரகசியம்!
இங்க பேசுற டாபிக்கை அவர் பேசுகிறாரா? அல்லது அவர் பேசுறதை நாமும் பேசுகிறோமோ என்று தெரியவில்லை. ஏதோ ஒரு ஒற்றுமை ஏஞ்சல் டீவிக்கும், சில்சாம் போர்டிற்கும் இருக்கிறது!!
குறிப்பு:- நாளை காலை நான் குடும்பத்தோடு (Including my in-laws) "Disney Land" க்கும் "Grand Canyon" க்கும் போகிறோம் ஆகையால் இன்னும் ஒரு பத்து நாட்களுக்கு எந்த ஒரு பதிவும் இருக்காது.
Happy Holidays....
__________________
கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்
குறிப்பு:- நாளை காலை நான் குடும்பத்தோடு (Including my in-laws) "Disney Land" க்கும் "Grand Canyon" க்கும் போகிறோம் ஆகையால் இன்னும் ஒரு பத்து நாட்களுக்கு எந்த ஒரு பதிவும் இருக்காது.
குறிப்பு:- நாளை காலை நான் குடும்பத்தோடு (Including my in-laws) "Disney Land" க்கும் "Grand Canyon" க்கும் போகிறோம் ஆகையால் இன்னும் ஒரு பத்து நாட்களுக்கு எந்த ஒரு பதிவும் இருக்காது.
பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். கர்த்தரின் கரம் உங்களை வழிநடத்தும். 10 நாட்கள் என்பது எங்களுக்கு நீண்ட இடைவெளியாக இருந்தாலும் குடும்பமாக பயணம் செய்வது நிச்சியம் மகிழ்ச்சிக்குரிய விடயமே.
//.. ஆனால், என் வாழ்வில் பாவத்தின் கிரியைகள் அறவே இல்லை என்று என்னால் அறுதியிட்டு கூற முடியாது. சில பாவ கிரியைகளை தொடர்ந்து செய்கிறேன் ( பின்னால் அதற்காக வருத்தப்பட்டாலும்). நான் பாவத்திற்கு மரித்தவனாய் இருந்தால், இதை எப்படி செய்வேன்? இவற்றை செய்வதினால், நான் பாவத்திற்கு மரிக்கவில்லை என்றாகி விடுமா?//
அன்பு சகோ. அசோக் குமார் கணேசன். பாவம் செய்யாமல் ஜீவித்து மரித்த ஒரே ஒருவர் இயேசு கிறிஸ்துதான். நமக்கு கொடுக்கப்பட்ட புதிய தன்மையின் (New nature) படி உண்மையில் நாம் பாவத்திற்கு மரித்துவிட்டோம் , நம்மை அவர் ராஜாக்களும், ஆசாரியர்களுமாக மாற்றிவிட்டார்! ஆனால் பழைய மனிதன் இந்த உலகத்தில் இருந்து மரிக்கும் வரை பாவத்திற்கு இழுத்து கொண்டேதான் இருப்பான். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில் நாம் யார் என்பதை உணர்ந்து கொண்டு போராடுவது முக்கியம். பவுல் நாம் பாவத்திற்கு மரித்தவர்கள் என்று 'எண்ணி' கொள்ள சொல்லுகிறார்
(இதற்க்கு சரியான மொழிபெயர்ப்பு "பாவம் செய்யான்" அல்ல "பாவத்தில் நிலைத்திரான்" அல்லது "பாவத்தை தொடரான்")
We know that God's children do not make a practice of sinning, for God's Son holds them securely, and the evil one cannot touch them. (1 John 5:18)
இரட்சிக்கப்பட்ட ஒருவன் ஒரு காரியத்தை "பாவம்" என்று நிச்சயித்த பின்பு தன்னுடைய மனதில் இதை நான் செய்கிறேன், நாளையும் செய்வேன் , செய்துகொண்டே இருப்பேன் என்று சொல்லுகிறவன் நிச்சயமாக இரட்சிக்கப்பட்டவனாக இருக்க முடியாது. இரட்சிக்கப்பட்டதின் அடையாளம் பாவமில்லாத வாழ்க்கை அல்ல மாறாக பாவம் இல்லாமல் வாழ முயற்சிக்கும் முயற்சியே!
இது ரொம்ப சிக்கலான கேள்விதான். திராட்சை செடியோடு இணைந்து இருங்கள் என்ற கட்டளை (Commandment) நமக்கு கொடுக்கப்பட்டு உள்ளது அதே சமயம் நான் உங்களில் இணைந்து இருக்கிறேன் ஒருவனும் என்னிடத்தில் இருந்து உங்களை பறித்துக்கொள்ள முடியாது என்கிற (Soverign) Promise ம் கொடுக்கப்பட்டு இருக்கிறது
நம்முடைய கடமையையும் , தேவனுடைய சர்வ வல்லமையையும் எப்படி இணைப்பது என்ற கேள்விக்கு விடை எனக்கு தெரிந்தவரை தேவனை தவிர ஒருவனுக்கும் தெரியாது. ஆனால் பவுல் இரண்டையும் இணைத்து ஒரு காரியத்தை சொல்லுகிறார்.
நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன். (பிலிப்பியர் 3:12)
எபிரேய நிரூப ஆக்கியோனும் இவ்வாறு சொல்லுகிறார்
ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; (எபிரெயர் 12:1)
நம்மை பிடித்தவர் இயேசு கிறிஸ்து. அவரே விசுவாசத்தை துவக்குகிறவர் , துவக்கினதை முடிக்கிறவர் ஆனாலும் அவர் என்னை எதற்க்காக பிடித்தாரோ அதை நான் பிடித்து கொள்ளும்படி தொடருவதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை! எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு என்னை ஓரளவு தெரியும் ஒருவிஷயத்தை என்னால் 'சிறப்பாக' செய்யமுடியும் என்றால் அது "பாவம் மட்டுமே!" என்னுடைய இரட்சிப்பு என்னுடைய கையில் என்று தேவன் சொல்லிவிட்டால் நான் அதை நிச்சயம் இழந்து விடுவேன்! ஏனென்றால் என்னுடைய பாவமும் (பாவங்கள் அல்ல பாவம்) எதிரி பிசாசும் என்னைவிட கோடி மடங்கு Power உள்ளவர்கள் ஆனால் என்னுடைய இரட்சிப்பு இயேசுவின் கரத்தில் இருக்கிறது அவர் பிசாசையும், பாவத்தையும் விட "Infinity" மடங்கு பெரியவர்!! எந்த கொம்பனும் அவரிடம் இருந்து என்னை பறிக்க முடியாது (ஆனந்த கண்ணீர் வரவில்லையா?) .
குறிப்பு:- நாளை காலை நான் குடும்பத்தோடு (Including my in-laws) "Disney Land" க்கும் "Grand Canyon" க்கும் போகிறோம் ஆகையால் இன்னும் ஒரு பத்து நாட்களுக்கு எந்த ஒரு பதிவும் இருக்காது.
அருமையான விளக்கங்கள். முதலாவது, நான் இங்கு கற்றுக்கொள்ளவே விரும்புகிறேன், வாதிட அல்ல. அதனால், இன்னும் சில கேள்விகள் எனக்கு எழுகின்றது.
//இயேசுவின் ரத்தத்தால் மாத்திரம் ஒருவன் இரட்சிக்கப்படுவது உண்மையானால், நான் இயேசுவை ஏற்றுக்கொண்டுவிட்டு பாவத்தை தொடர்ந்து செய்தால் என்ன நஷ்டம்? பவுலுடைய பதில் "அது நடக்காத ஒன்று ஏனெறால் இயேசுவை ஏற்று கொண்டவன் பாவத்திற்கு செத்து விட்டவன், செத்தவன் எப்படி பாவத்தில் பிழைப்பான்?" //
நான் கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன். இயேசுவை ஏற்றுக்கொண்டேன். என் வாழ்வில் கனிகளும் காணப்படுகிறது (சில நாட்களுக்கு முன்புதான், என் வாழ்வை சற்றே திரும்பி பார்த்தபோது, என் முயற்சி எதுவும் இல்லாமல், சில கனிகள் காணப்பட்டதை குறித்து நானும் என் மனைவியும் ஆண்டவரை துதித்தோம்). ஆனால், என் வாழ்வில் பாவத்தின் கிரியைகள் அறவே இல்லை என்று என்னால் அறுதியிட்டு கூற முடியாது. சில பாவ கிரியைகளை தொடர்ந்து செய்கிறேன் ( பின்னால் அதற்காக வருத்தப்பட்டாலும்). நான் பாவத்திற்கு மரித்தவனாய் இருந்தால், இதை எப்படி செய்வேன்? இவற்றை செய்வதினால், நான் பாவத்திற்கு மரிக்கவில்லை என்றாகி விடுமா?
குறிப்பு:- இந்த தளத்தை வேவு பார்க்கும் இந்து நண்பர்களே, அசோக் குமார் கணேசன் பாவம் செய்கிறார் என்று நீங்கள் கட்டுரை போட்டாலும் ஆச்சர்யம் இல்லை. உங்களுக்காக ஒன்று சொல்லுகிறேன். நான் பாவம் என்று சொல்லும் விஷயம், நீங்கள் பாவம் என்று உணராமல், உங்கள் வாழ்வில் அன்றாடம் செய்யும் சில செயல்களே.
ஒருவன் இரட்சிக்கப்பட்ட பின்பு பாவம் செய்கிறான் அல்லது பாவத்தில் நிலைத்து (Habitual Sin or Living in Sin) இருக்கிறான் என்றால் அவன் இரட்சிக்கப்பட வில்லை என்று அர்த்தம். ஒரு கிளை கனிகொடுக்கவில்லை என்றால் கோளறு அது செடியோடு இணைந்து இல்லை யாரும் தானாய் கனிகொடுக்க முடியாது
இந்த கேள்வி ஒன்றும் புதிதான கேள்வி அல்ல, பவுலிடம் இந்த கேள்வியை சிலர் கேட்க அவருடைய பதில் என்ன என்று ரோமர் 6 ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். இங்கே Context is Very Simple. இயேசுவின் ரத்தத்தால் மாத்திரம் ஒருவன் இரட்சிக்கப்படுவது உண்மையானால், நான் இயேசுவை ஏற்றுக்கொண்டுவிட்டு பாவத்தை தொடர்ந்து செய்தால் என்ன நஷ்டம்? பவுலுடைய பதில் "அது நடக்காத ஒன்று ஏனெறால் இயேசுவை ஏற்று கொண்டவன் பாவத்திற்கு செத்து விட்டவன், செத்தவன் எப்படி பாவத்தில் பிழைப்பான்?"
ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே. பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? (ரோமர் 6:1-2)
ஆனாலும் இந்த உலகத்தில் வாழும் நாட்களில் நாம் மாம்சத்தில் வாழ்வதால் "பாவத்திற்கு எதிராக ரத்தம் (Not physically) சிந்தும் அளவிற்கு போராடவேண்டும் " . இயேசு கிறிஸ்துவும் இதைத்தான் "பரலோக ராஜ்ஜியம் பலவந்தம் பண்ணப்படுகிறது , பலவந்தம் (Forcefully Fighting against the Sin) பண்ணுகிறவர்கள் அதை பிடித்துகொள்ளுகிறார்கள் என்றார்" . இரட்சிக்கப்பட்ட நமக்கு ஆவிக்குரிய யுத்தம் ஒன்று உண்டு (அது பெரும்பாலான பெந்தேகொஸ்தே சபைகளில் செய்யும் பொல்லாத ஆவிகளை "கட்டி" ஜெபிக்கிற ஜெபம் அல்ல) அது பாவம் நம்முடைய சரிரத்தில் கிரியை செய்யாத படிக்கு போராடுவது. இதைத்தான் இயேசு கிறிஸ்து கண் இடறல் உண்டாக்கினால் அதை பிடுங்கு, என்றும் கால் இடறல் உண்டாக்கினால் அதை தறித்து போடு என்றும் சொல்லுகிறார். அதையே பவுலும்
அப்படியே நீங்களும், உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.(ரோமர் 6:11-12)
இந்த ஆவிக்குரிய யுத்தம் பற்றி தனியாக தியானிக்கலாம்.
//இரட்சிப்பை யார் மீதும் ஆண்டவர் திணிப்பதில்லை. நாம் பிறருக்காக ஜெபிக்கும் போது அவர்கள் இரட்சிக்கப்பட ஏற்ற சூழ்நிலை உண்டாகிறது. எனவேதான் ஜெபம் அவசியமாகிறது.//
அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார். (அப்போஸ்தலர் 16:14 )
சந்திரனை வணங்கிக்கொண்டு இருந்த ஆபிரகாம் எப்படி தேவனுக்கு கிழ்படிந்தான்?
ஜெபம் தேவனுடைய புயத்தை முறித்து நமக்கு பதில் கொண்டுவருவது இல்லை. தேவன் அவருடைய மகிமையில் நாமும் பங்கு பெறும்படி சில காரியங்களை நமது மூலம் செய்தால் நடக்கும் படி நியமித்து இருக்கிறார். ஜெபம் என்பது நாம் கேட்டு ஆண்டவர் செய்வதை நாமும், அதே காரியத்திற்காக வேண்டுதல் செய்கிற பலரும் கண்டு அவருடைய நாமத்தை மகிமை படுத்துவதற்கே!
-- Edited by John on Wednesday 18th of May 2011 06:04:55 PM
//நான் முன்பே சொன்னது போல "ஒருவன் தான் பெற்ற ரட்சிப்பை இழந்து போக முடியும் என்றால் “தேவனே என் நண்பனை ரட்சியும்!” என்ற ஜெபத்தை தேவன் கேட்பதற்கு அந்த நண்பனுடைய ஒத்துழைப்பும் தேவை. அப்போது தேவன் எப்படி "சர்வ வல்லவர்" ஆக முடியும்?//
இரட்சிப்பை யார் மீதும் ஆண்டவர் திணிப்பதில்லை. நாம் பிறருக்காக ஜெபிக்கும் போது அவர்கள் இரட்சிக்கப்பட ஏற்ற சூழ்நிலை உண்டாகிறது. எனவேதான் ஜெபம் அவசியமாகிறது.
42. பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன் நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை;
43. அந்நியனாயிருந்தேன் நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்கவரவில்லை என்பார்.
44. அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதியுள்ளவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம் என்பார்கள்.
45. அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
46. அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
இது 500 வருஷங்களாக நடக்கிற ஒரு விவாதம் நிச்சயமாக இந்த Forum ல் நாம் முடிவு காண முடியாது என்றாலும் நான் சகோ. அசோக் அவர்களின் கருத்துக்களை ஆமோதிக்கிறேன். இரட்சிப்பு என்பதில் எந்த ஒரு கிரியையும் இல்லை (ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்து உட்பட, ஆனால் இவை இரண்டையும் எடுக்கக்கூடாது என்று சொல்லவில்லை) பெற்ற இரட்சிப்பை ஒருவன் இழந்து போக முடியாது என்பதே என் வாதம். வேதத்தில் வருகிற இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுங்கள் போன்ற வசனங்கள் "நான் உண்மையிலே ரட்சிக்கப்பட்டு இருக்கிறேனா" என்பதை உறுதிபடுத்துவதே ஒழிய இரட்சிக்கப்பட சில கிரியைகளை செய்யவேண்டும் என்று எடுத்து கொள்ளக்கூடாது! அடுத்த வசனமே சொல்லுகிறது செய்கையை(கிரியையை) உண்டாக்குகிறதும் தேவனே!
எப்போது கிரியை உள்ள நுழைகிறதோ அப்போது கிருபை வெளியே போய்விடும்!
அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியையல்லவே (ரோமர் 11:6 )
நான் முன்பே சொன்னது போல "ஒருவன் தான் பெற்ற ரட்சிப்பை இழந்து போக முடியும் என்றால் “தேவனே என் நண்பனை ரட்சியும்!” என்ற ஜெபத்தை தேவன் கேட்பதற்கு அந்த நண்பனுடைய ஒத்துழைப்பும் தேவை. அப்போது தேவன் எப்படி "சர்வ வல்லவர்" ஆக முடியும்?
பேதுருவுக்கும் , யூதாசுக்கும் இடையே இருந்த "Decisive Difference" இயேசு கிறிஸ்து பேதுருவின் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு ஜெபித்த "பரிந்து பேசின" ஜெபமே!
சகோ.கோல்டா, உங்களுக்கு பாடம் எடுப்பதற்கு மன்னிக்கவும். சில விஷயங்கள், ரொம்ப innovative வாக இருப்பதால் உண்மையாகிவிட முடியாது. உலகத்தில் ஆதாம் காலத்தில் இருந்து இரட்சிப்பு என்பது விசுவாசத்தினால் மாத்திரமே, கிருபையால் மாத்திரமே. கிரியை விசுவாசத்தை வெளிப்படுத்துமே ஒழிய, அது deciding factor அல்ல. ஆண்டவர் என்றைக்கும் மாறாதவர். ஆபிரகாமுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயம் என்றில்லை.
//விசுவாசம் மட்டுமே இருக்குமானால் அது சரியான் இரட்சிப்பு இல்லை.//
இரட்சிப்பில், அது என்ன சரியான இரட்சிப்பு அரைகுறை இரட்சிப்பு? இரட்சிப்பு உங்களாலோ, என்னாலோ என்றால் அதில் குறைகள் இருக்கலாம், இரட்சிப்பு தேவனால் இருப்பதால் அது எப்போதும் சரியாகவே இருக்கும். அதனால், சரியான இரட்சிப்பு அரைகுறை இரட்சிப்பு என்றெல்லாம் இல்லை. இருப்பது இரண்டே category , ஒன்று இரட்சிக்கப்பட்டவர், இன்னொன்று ரட்சிக்கபடாதவர்.
//கிரியை காணப்படாவிட்டால், இரட்சிப்பைக் கூட இழக்க நேரிடலாம்.//
இரட்சிப்பு கிரியையால் வந்திருந்தால் உங்கள் கூற்று உண்மையே. ஆனால் இரட்சிப்பு தேவனின் கிருபையால் வந்ததே, அதனால் இரட்சிக்கப்பட்ட ஒருவர் அதை இழப்பதில்லை. அப்படி இழக்க வாய்ப்பிருந்தால், தேவன் "நித்திய ஜீவன்" அல்லது "eternity " என்ற வார்த்தைகளை வேதத்தில் சொல்லி இருக்கமாட்டார். "கிரியை காணாமல் போகும் காலம் வரை ஆண்டவரோடு இருப்பாய்" என்று சொல்லி இருப்பார்.
//விசுவாசம் இருக்கு என்பதே கிரியையினால் தான் தெரிய வரும்.//
யாருக்கு தெரியவரும்?
//ஆபிரகாம் வாக்குத்தத்தை விசுவாசித்தார் என்பது ஈசாக்கை பலியாக கொடுக்க ஒப்புக் கொடுத்த போது தான் நிரூபணமாயிற்று.//
சகோதரி, தேவன் இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர். அவருக்கு நிருபணங்கள் தேவையில்லை. ஆபிரகாமின் விசுவாத்தை அவர் ஈசாக்கின் பலி மூலம் உலகிற்கு நிரூபித்தார். தேவனுக்கு ஆபிரகாமின் விசுவாசம், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே தெரியும்.
//பிசாசுகளும் தேவன் உண்டென்று விசுவாசிக்கின்றன. ஆனால் அவைகளிடம் அதற்கேற்ற கிரியை கிடையாது.//
பிசாசுகள், இயேசுவை ஆண்டவர் என்றும், "தங்கள் பாவங்களுக்காக இயேசு சிலுவையில் மரித்தார்" என்றும் "தங்களுக்காய், மூன்றாம் நாளில் உயிர்த்தார்" என்றும் விசுவாசிப்பதில்லை. தேவன் இருக்கிறார் என்று விசுவாசிப்பது வேறு, தேவன் என் ஆண்டவர் என்று விசுவாசிப்பது வேறு.
//முதலில் விசுவாசம், அப்புறம் கிரியை. இரண்டும் தேவைதான்.//
விசுவாசம் இருந்தால் கிரியை வரும். கிரியைகள் அவர் மூலமாய் வரவேண்டும், நாமாக செய்யும் கிரியைகள் செத்த கிரியைகள்.
நீங்கள், james 2 ஐ நீங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். நானும் இப்படி குழம்பியவந்தான். இப்போது அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது. கேள்விகள் இருந்தால் தொடுக்கவும். பதில் தருகிறேன்.