அதனை பூரணம் என்ற மறுமைக்குரிய வார்த்தையினால் குறிப்பிடுவதைக் காட்டிலும் ஆயத்தம் எனும் ஆரம்ப வார்த்தையினால் சிந்தித்தால் முழுவதும் விளங்கும்.
vijay76 Wrote on 23-02-2011 17:04:45: ஆம், இதை நானும் ஒப்புக்கொள்ளுகிறேன்.
Chillsam:-எப்படியெனில் ஒரு முக்கியஸ்தரின் (VIP) மெய்க் காப்பாளராக நியமிக்கப்படும் ஒரு அதிகாரி ஆரம்பநிலையில் ஒரு சாதாரண காவலனாக மேலதிகாரியின் கூப்பிட்ட குரலுக்கு ஓடிச் சென்று சேவகம் செய்யும் பணியாளாக இருக்கிறார்; அதிலும் மேலதிகாரியின் வீட்டு ஆடர்லியாக இருந்த காலங்கள் பரிதாபமானது;ஆனாலும் அவர் தனது பணிவினாலும் துணிவினாலும் போற்றப்பட்டு கமாண்டோ பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்; அவர் கமாண்டோ பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர் உடனே அதில் நியமிக்கப்படவில்லை;மீண்டும் அடிமட்டத்துக்குச் சென்று ஒரு சாதாரண காவலாளியைவிட கடுமையாக சோதிக்கப்பட்டு நெருப்புக்கும் தண்ணீருக்கும் மலைக்கும் மலை முகடுக்கும் பள்ளத்துக்கும் பாதாளத்துக்கும் சவால் விட்டு பாய்ந்து தாக்கும் மிருகத்துக்கும் ஊர்ந்து செல்லும் பிராணிக்கும் ஒப்பாக பயிற்றுவிக்கப்பட்டு சிறப்பான விருதுகளுடனும் அதிநவீன ஆயுதங்களுடனும் பணியில் அமர்த்தப்படுகிறார்;இப்போது அவருடைய சோதனைகளுக்கேற்ற அங்கீகாரம் கிடைத்தது போலிருந்தாலும் அவர் எதிர்கொள்ளவேண்டிய சவால்களும் அதிகம்;அவர் தன்னை மாத்திரமல்ல,தான் யாருக்காக (VIP) நிறுத்தப்பட்டிருக்கிறாரோ அவரையும் (VIP) சேர்த்து பாதுகாக்கவேண்டும்; இதையே ஒரு கமாண்டோவின் வேறு மாதிரியாகவும் சொல்லலாம்,ஒரு கமாண்டோ வீரர் தன்னைக் காத்துக்கொள்வதைவிட தன்னால் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியஸ்தரைக் (VIP) காப்பாற்றுவதே தலையாய நோக்கமாகும். உதாரணத்துக்கு தலைவர் இராஜீவ்காந்தி அவர்களைப் பாதுகாக்கும் பணியிலிருந்த சுமார் 37 உயர் அதிகாரிகள் அவரோடு மரித்தார்கள்;அவர்கள் எல்லாருக்கும் நினைவிடம் அமைக்கப்படவில்லை;ஆனால் இராஜீவ்காந்திக்கு நினைவிடம் உண்டு;அந்த நினைவிடம் அவருடைய நினைவை மட்டும் போற்றவில்லை,அவரைப் பாதுகாக்கத் தவறிய வீரர்களுக்குடைய இயலாமையையும் சுட்டிக்காட்டுகிறது.
இதையே ஊழியர்களுக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் நம்முடைய நிலைமை என்னவென்றும் நாம் செய்யவேண்டியது என்ன என்றும் எளிதாகப் புரியும்;அதனைப் போதிக்க சகோ.சாக் பூணன் போன்றவர்கள் தேவையில்லை;நம்முடைய மனசாட்சியே போதும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சகரியா பூணன் அவர்களின் பிரசங்கங்கள் மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் அவர்கள் ஒரு தனிப்பிரிவாக செயல்படுவதும், பூரணமான பின்புதான் ஊழியம் செய்ய வேண்டும் என போதிப்பதும் எந்தளவில் உண்மையோ.? சகோ.விஜய் அவர்கள் சகரியா பூணனை முழு உதாரணமாக எடுத்துச் சொல்லியிருக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.
வாங்க சேகர்,வாங்க...எங்கே போயிட்டீங்க உங்களுக்காக அங்கே ஒரு கேள்வி காத்திருக்கிறதே...
சரி, இங்கே குறிப்பிட்டதில் என்னுடைய கருத்து என்னவென்றால், பூரணமான பின்புதான் ஊழியம் செய்ய வேண்டும் என்று போதிப்பதில் என்ன தவறு? இதை யார் எதிர்க்கமுடியும்? எல்லா தலைவர்களுமே 1.பேதுரு.5:6 சொல்லியே தனக்குக் கீழுள்ளவர்களை அடக்கிவைப்பார்கள். "அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். "(1.பேதுரு.5:5,6)
ஆனால் தனது வாரிசுக்கு மட்டும் அந்த வசனத்தை சொல்லிக்கொடுப்பதில்லை;இந்த மோசடியான போதனையைவிட, "பூரணமானபின்புதான் ஊழியம் செய்ய வேண்டும் " என்ற போதனை தவறானது என்று சொல்வதற்கில்லை.
vijay76 Wrote on 23-02-2011 17:04:45:
அன்பு சகோதரர் சேகர் அவர்களுக்கு, நான் சகோ.சகரியாபூணன் அவர்களின் பல செய்திகளைக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை கூட அவர் பூரணமான பின்புதான் ஊழியம் செய்ய வேண்டும் என்று சொன்னதில்லை. அப்படி யாரும் செய்ய முடியாது. ஆனால் செத்த நிலையில் இருந்து கொண்டு மனந்திரும்பாமல் உயிருள்ளவன்போல் மாய்மாலம் செய்துகொண்டு ஊழியம் செய்வதைத்தான் அவர் வன்மையாகக் கண்டிப்பார்.
Chillsam:-// பூரணமான பின்புதான் ஊழியம் செய்ய வேண்டும் // என்பதை ஊழியத்துக்கான பயிற்சிக் காலம் மற்றும் சுயத்தை ஒடுக்குதல் ஆகிய கிறித்துவின் மாதிரியுடன் ஒப்பிட்டால் இது நிச்சயம் அவசியமே;தன்னை முன்மாதிரியாக நிறுத்த இயலாதவன் ஊழியத்துக்கு இலாயக்கில்லாதவன் ஆவான்.அதனை பூரணம் என்ற மறுமைக்குரிய வார்த்தையினால் குறிப்பிடுவதைக் காட்டிலும் ஆயத்தம் எனும் ஆரம்ப வார்த்தையினால் சிந்தித்தால் முழுவதும் விளங்கும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
Chillsam:-//"நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது" என்று பக்தன் யோபு சொன்னதைப் போல விஜய் அவர்கள் பயந்த காரியம் பரிசுத்தவான்களுக்கு நேரிடாத வண்ணம் பார்த்துக்கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம்;//
//ஆனால், அவர் எழுத்துக்களில் பெண்களை தரைமட்டத்தில் தான் வைத்திருப்பார் - என்ற என் கருத்தையும் சொல்லிக் கொள்கிறேன். இப்பதான் காலத்தின் கடைசியில், என் மனைவிக்கு தீர்க்கதரிசன் அபிஷேகம் உண்டு. ஊழியத்தில் அதிகம் பயன்படுத்தியிருக்கலாம் என்று நினைக்கிறேன் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்//
நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது
Chillsam:- இப்படி எழுதுவதையும் பொய்ப் பிரச்சாரம் செய்வதையும்விட மோசமான ஒரு போக்கு என்னவென்றால் அவர்களுடைய படைப்புகளைத் தங்கள் மேடைகளில் பிரசங்கித்து அத்தனை புகழ்ச்சியையும் தங்களுக்கே சேரவேண்டும் என்று எண்ணி செயல்படுவதும் முதிர்ந்த ஊழியர்களான அவர்களைத் தனிமைப்படுத்தும் வண்ணமாக அவர்களைக் குறித்த புகழ்ச்சியையும் சாட்சியையும் தவிர்ப்பதுவுமாகும்.
அதற்காக நான் அஞ்சி நடுங்கி என்னை சீர்திருத்திய தலைவர்களைக் குறித்துப் பேசுவதையும் எழுதுவதையும் தவிர்த்தால் என்னைப் போன்ற நன்றிகெட்டவன் யாருமிருக்கப் போவதில்லை;இது இயேசுவை மறுதலித்த பேதுருவின் செயலுக்கு இணையானது என்று எண்ணுகிறேன்; தவறுகளையே சுட்டிக்காட்டி புழுதி கிளப்பும் என்னிடம் மாற்றுவழி கேட்கும் ஆத்துமாவுக்கு சரியான பதிலை என்னால் சொல்லமுடியாவிட்டால் நான் மஞ்சள் பத்திரிகையின் எழுத்தாளனுக்கு ஒப்பாவேன் என்ற அச்சம் எனக்கு உண்டு.
அனைத்து பிரிவைச் சேர்ந்த ஸ்தாபனத் தலைவர்களின் வீட்டிலும் வேதகலாசாலைகளிலும் இருக்கக்கூடிய ஒரு புத்தகத் தொகுப்பு, "விவிலியக் களஞ்சியம்" என்பதாகும்; ஒவ்வொன்றும் டெலிபோன் டைரக்டரியைவிட இரு மடங்கு கனமும் ஆறு தொகுதிகளுமான அந்த புத்தகமானது ஒரு கத்தோலிக்க பாதிரியார் எழுதியதாகும்;அவருடைய பெயர் "தியாகு" . இத்தனைப் பெரிய பொக்கிஷத்தின் விலை என்ன தெரியுமா, சொன்னால் நம்பமாட்டீர்கள், மொத்தமாக வெறும் 600 ரூபாய் மட்டுமே.
நான் இரட்சிக்கப்பட்டு ஊழியத்துக்கு வந்த ஆரம்ப நாட்களில் இந்த புத்தகத் தொகுப்பை வாங்க விரும்பி அவர் தங்கியிருந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து லயோலா காலேஜ் வளாகத்திலிருந்த குடியிருப்பில் அவரது சிறிய அறையில் சென்று அவரை சந்தித்தேன்;ஓய்வுபெற்ற நிலையில் மிகவும் வயதாகி தனிமையில் இருந்தார்;அவரது அறைமுழுவதும் சுருட்டுப் புகையின் நாற்றம் தாங்கவில்லை;ஆனாலும் என் மனதில் அவர்மீதான மரியாதை சற்றும் குறையவில்லை;அவருடைய மாபெரும் ஊழியத்துக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தி அவரிடம் தலைவணங்கினேன்.
நான் சொல்ல வந்த காரியம் இத்துடன் முடியவில்லை;அவர் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார்,என் பகுதிக்கு அருகில் ஒரு குறிப்பிட்ட ஊழியர் பெயரைச் சொல்லி அவர் தனது பைபிள் காலேஜுக்காக வாங்கிச் சென்ற புத்தகங்களுக்கான தொகையைப் பெற்றுத் தர வேண்டினார்;அதன் அப்போதய மதிப்பு சுமார் 10000 ரூபாய்;அவர் ஒரு பெந்தெகொஸ்தே ஊழியராக இருந்து இப்படி வயதான ஒருவருக்கு மன உளைச்சலைத் தந்தது நியாயமா? இப்போது சொல்லுங்கள் சுருட்டு பிடித்த பாதிரியார் மோசமானவரா அல்லது அத்தனை மலிவான விலையில் விற்ற புத்தகத்திலேயே 10000 ரூபாய் ஏமாற்றிய பெந்தெகொஸ்தே ஊழியர் மோசமானவரா?
தந்தை தியாகு அவர்கள் தற்போது எங்கே இருக்கிறாரோ அல்லது மிகுந்த பெலவீனத்திலிருந்த அவர் உயிருடன் இருக்கிறாரோ அறியேன்,ஆனால் அவருக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
Vijay:இப்படிப் பொத்தாம் பொதுவாகக் கூறாமல் எந்தெந்தக் காரியங்களில் பெண்களை மட்டம்தட்டி எழுதியிருக்கிறார் என்று கூறுவிர்களானால் அதுபற்றி வேறொரு திரியில் விவாதிக்கலாம்.
ok. I will start a new thread.
Vijay: எனக்குத் தெரிந்து அவர் பெண்களை பட்டம்தட்டி பேசுபவரோ எழுதுபவரோ அல்லவே அல்ல.
You need to be a woman to understand women. Put yourself in the shoes of a woman!
Vijay:பெண்கள் சபையின் மேய்ப்பர்களாக இருக்கக்கூடாது என்று ஒருவேளை அவர் சொல்லியிருந்தால் நீங்கள் அவரையல்ல அப்போஸ்தலர் பவுலையே கேள்வி கேட்க வேண்டும்.
கேள்வி எல்லாம் ஆண்டவரிடம் கேட்டால் தான் தெளிவான் பதில் கிடைக்கும்
Chillsam:இப்படிப்பட்ட விவஸ்தையில்லாத கருத்துக்களே வாதத்தின் போக்கை திசைமாற்றுகிறது.அப்படியானால் நான் //அவர்களைக் குறித்தும் விவாதிப்போம் என்று யாரும் சொல்லாதிருந்தால் சொல்லுகிறேன்// என்பதாக வேண்டி கேட்டுக்கொண்டதற்கு என்ன அர்த்தமோ,இது எப்படி நம்முடைய நட்பை வளர்க்க உதவும்? நான் செய்யவேண்டிய வேலைகள் ஏராளம் இருக்க அதற்கு இடையூறு செய்வதுபோல ஓநாய்களுக்கும் கோட்டான்களும் கொடிபிடிக்க எண்ணும் சிலர் என்னுடைய நோக்கங்களை சிதைப்பதைக் குறித்து வருந்துகிறேன்.
நிர்வாகத்தாருக்கு ஒரு வேண்டுகோள்: நாம் எடுத்துக்கொள்ளும் விவாதத்திற்குப் பொருந்தாத திசைதிருப்பும் கருத்துக்களை உடனுக்குடன் நீக்கிவிடுமாறு வேண்டுகிறேன்; என்னுடைய கருத்தையும் நீங்கள் தாராளமாக தணிக்கை செய்யலாம்.
vijay76 Wrote@Tcs on 23-02-2011 13:53:43: சகோ.சில்சாம் எழுதியது: //இப்படி குறிப்பிடத்தகுந்த மாதிரிகள் இருப்பினும் அவர்களைக் குறித்து திறந்த மனதுடன் சாட்சிகூறி தேவனை மகிமைப்படுத்த சிலர் தயங்குவதற்கான காரணம் என்னவோ நான் அறியேன்;ஆனாலும் அவரவர் தங்கள் தங்கள் தனித்தன்மையைக் காண்பிக்க எண்ணும் சுயமே இதற்குக் காரணமாக இருக்குமோ என்று யோசிக்கிறேன்;//
மன்னிக்க வேண்டும் என் அன்பு சகோதரரே! எனக்கோ அல்லது வேறு யாருக்குமோ இந்த விஷயத்தில் சுயம் காரணமாக இல்லை. அவர்கள் பெயரை முன்வைத்தால் நம்மைப் பகைப்பவர்கள் நம்மீது உள்ள கோபத்தில் அவர்களைக் குறித்து ஆராய்ந்து இல்லாததையும் பொல்லாததையும் இதுபோன்ற பொதுவான தளங்களில் எழுதி வைத்துவிடுவார்கள். பிரபலத்தை நாடாமல் அமைதியாக ஊழியம் செய்யும் அவர்களை இதில் ஏன் இழுக்கவேண்டும்? என்ற எண்ணம்தான் காரணம். நீங்கள் முதலில் சொன்ன இரு தலைவர்களும் என் வாழ்க்கையில் திருப்புமுனையைக் கொண்டு வந்தவர்கள்.
"நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது" என்று பக்தன் யோபு சொன்னதைப் போல விஜய் அவர்கள் பயந்த காரியம் பரிசுத்தவான்களுக்கு நேரிடாத வண்ணம் பார்த்துக்கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம்; நான் இந்த குறிப்பிட்ட விவாதத்தில் யாரையும் யாருடனும் ஒப்பிடவில்லையென்று எண்ணுகிறேன்; சரியானவர்கள் யார் என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டேனே தவிர, யாரை விட சரியானவர்கள் என்று வாதிக்கவில்லை;ஆனால் எதிர்தரப்பு, அவர் மட்டும் என்ன யோக்கியமா என்ற ரீதியில் வாதத்தை துவக்க நினைப்பது அக்கிரமமாகும்;இதுவே நமது விசுவாசப் பயணத்தில் சோர்வையும் மனப் பதட்டத்தையும் கொண்டு வருகிறது; ஆம், முன்னோடிகள் கண்ணுக்குத் தெரியாவிட்டால் காடு, மலை, ஆறு ஆகிய எப்பேற்பட்ட பயணத்திலும் மனச் சோர்வுண்டாகும் ஆபத்து உண்டு;தெளிந்த நீரோடையைப் போன்ற விசுவாசத்தைக் கற்பித்த முன்னோடிகள் எந்தவகையிலும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களே; அவர்கள் இந்த தலைமுறையிலும் நம்மோடு இருக்கிறார்கள், இருக்கவேண்டும்; இராதிருந்தால் நான் ஒரு நாத்திகனாகவே இருந்திருப்பேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
vijay76@Tcs: சகோ.சில்சாம் எழுதியது: //இப்படி குறிப்பிடத்தகுந்த மாதிரிகள் இருப்பினும் அவர்களைக் குறித்து திறந்த மனதுடன் சாட்சிகூறி தேவனை மகிமைப்படுத்த சிலர் தயங்குவதற்கான காரணம் என்னவோ நான் அறியேன்;ஆனாலும் அவரவர் தங்கள் தங்கள் தனித்தன்மையைக் காண்பிக்க எண்ணும் சுயமே இதற்குக் காரணமாக இருக்குமோ என்று யோசிக்கிறேன்;//
மன்னிக்க வேண்டும் என் அன்பு சகோதரரே! எனக்கோ அல்லது வேறு யாருக்குமோ இந்த விஷயத்தில் சுயம் காரணமாக இல்லை. அவர்கள் பெயரை முன்வைத்தால் நம்மைப் பகைப்பவர்கள் நம்மீது உள்ள கோபத்தில் அவர்களைக் குறித்து ஆராய்ந்து இல்லாததையும் பொல்லாததையும் இதுபோன்ற பொதுவான தளங்களில் எழுதி வைத்துவிடுவார்கள். பிரபலத்தை நாடாமல் அமைதியாக ஊழியம் செய்யும் அவர்களை இதில் ஏன் இழுக்கவேண்டும்? என்ற எண்ணம்தான் காரணம். நீங்கள் முதலில் சொன்ன இரு தலைவர்களும் என் வாழ்க்கையில் திருப்புமுனையைக் கொண்டு வந்தவர்கள்.
லுத்தரன் பின்னணியைச் சேர்ந்த எனக்கு இரட்சிப்பு என்ற வார்த்தை தெரியும் ஆனால் அதன் பொருள் தெரியாது, எனது கல்லூரி நாட்களில் சகோ.ஜோஷ்வா டேனியேல் அவர்களது இலேமன்ஸ் இவாஞ்சலிகல் ஃபெல்லோஷிப் மூலமாக இரட்சிக்கபட்டேன். மனந்திரும்புதல் மற்றும் இரட்சிப்பு அனுபவங்களை ஆழமாக நங்கூரம் மாதிரி நமது வாழ்க்கையில் இறக்கிவிடுவார்கள். மற்ற சபைகளைப் போல, கைதூக்கச்சொல்லி அட்டையில் கையெழுத்து வாங்குவதோ, பாவிகளின் ஜெபத்தை திரும்பத் திரும்ப கிளிப்பிள்ளை போலச் சொல்லச் சொல்லுவதோ போன்ற பழக்கங்களேல்லாம் அங்கு இல்லை. மனந்திரும்புதலையும் கல்வாரியையும் ஆழமாய்ப் பிரசங்கித்து உங்களையும் இயேசுவையும் தனித்து விட்டுவிடுவார்கள் நீங்கள் உடைந்து நொறுங்கி இரட்சிக்கப்பட்டவனாகவே வெளியே வர முடியும். அவர்களைப் போல இரட்சிப்பின் அனுபவத்துக்குள் நடத்துபவர்களை வேறு எங்கும் பார்க்க முடியாது, இதை அன்புக்குரிய சகோ.R.ஸ்டான்லி அவர்களே தனது ஒரு பிரசங்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
1996 ஆம் ஆண்டு அவ்விதமாக இரட்சிக்கப்பட்ட நான் சுயாதீன ஊழியர்களின் அனுபவம் சார்ந்த போதனைகளினாலும் மேடை வித்தைகளாலும் இழுக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டுவரை அப்படிப்பட்ட சபைகளில் இருந்தேன். பற்பல ஆவிக்குரிய அனுபவங்கள் இருந்தது, மிக நல்ல ஊழியக்காரனாக எல்லோராலும் அறியப்பட்டேன். ஆனாலும் பரிசேயத்தனத்திலானும், ஆவிக்குரிய பெருமையினாலும் நிறைந்து சர்தை சபை போல உயிருள்ளவன் என்று பெயர் பெற்றிருந்தும் செத்தவனாகவே இருந்தேன். கர்த்தர் ஒரு குறிப்பிட்ட அனுபவத்தின் மூலம் ஷாக் கொடுத்து என்னை வெளியே எடுத்தார். குழம்பிய நிலையிலிருந்த என் கையில் சகோ.சகரியாபூணன் (Bro.Zac Poonen) எழுதிய “யார் இயேசுவின் உண்மை சீஷன்?” என்கிற புத்தகம் கிடைத்தது. அப்புத்தகத்தின் மூலம் கர்த்தர் என்னுடன் பேசிய காரியங்களே என் கிறிஸ்துவ வாழ்க்கையை புரட்டிப்போட்டது.
சகோ.சகரியாபூணன் குறித்து அறிந்து கொள்ள அவரது இணைய பக்கத்தைத் தேடினேன். அவரது இணையதளத்தில் “தனது ஊழியத்துக்குக் காணிக்கை அனுப்புவது" குறித்து அவர் எழுதியிருந்த காரியம் அவர்மீது எனக்கு மதிப்பை பலமடங்கு அதிகரிக்கச் செய்தது.
அவரது இணையதளத்தில் அவரது பிரசங்க வீடியோக்கள், ஆடியோக்கள், கட்டுரைகள் ஈ-புத்தகங்கள் எல்லாமே இலவசம்! வெகு எளிய ஆங்கிலத்தில் பேசுவார். அவரது பிரசங்கங்கள் பலவற்றையும் கேட்டிருக்கிறேன். அவரோடு நெருங்கிப் பழகியவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக ஊழியர்களுடன் நெருங்கிப் பழகுபவர்கள் அவர்களை மதிப்பதில்லை காரணம் அவர்களின் உண்மைமுகம் இவர்களுக்குத் தெரியும். ஆனால் சகோ.சகரியாபூணன் அவர்களை நன்கு அறிந்தவர்கள் அவர் மீது அவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள்! காரணம் அவர் வாழ்வதைப் பேசுகிறார், பேசுகிறதை வாழ்கிறார். நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவது போல நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள் என்று சொல்லத்தக்க தைரியமான மனிதர்.
அதே போல மறைந்த சகோ.பக்தசிங், பாஸ்டர்.சுந்தரம் என்று எத்தனையோ உத்தம ஊழியர்கள் எல்லா திருச்சபைப் பிரிவுகளிலும் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள் பலர் பிரபலமாக இல்லை. அவர்கள் பிரபலமாக இல்லாததுவும் அவர்கள் நன்மைக்கே!!
இவ்வளவு தெளிவான விளக்கங்களுக்குப் பின்னும் சகோ.சந்தோஷ் பாடிய பாட்டையே பாடிக்கொண்டிருப்பது ஏமாற்றத்தைத் தருகிறது. கொடுத்த விளக்கங்கள் தவறாக இருந்தால் அது குறித்து விவாதித்து விவாதத்தில் இன்னும் அடுத்த நிலைக்குக் கடந்து சென்றிருந்திருக்கலாம். ஆனால் தனது முதல் பதிவில் என்ன சொல்லியிருந்தாரோ அதையே இப்பொழுதும் சொல்லுகிறார். மாய்ந்து மாய்ந்து விளக்கம் எழுதி நேரத்தை வீணாக்குகிறோமோ என்று தோன்றுகிறது.
சரி, இப்பொழுது தங்கள் ஸ்டெயிலுக்கே நானும் வருகிறேன்!
//இயேசுவை உண்மையாக அறிவிக்கும் இந்த ஊழியர்களில் சிலர் புகழுக்காக, பணத்துக்காக நாடகமாடுகின்றனர் என்ற குற்றசாட்டு இருக்கின்றது. இவ்வாறு சொல்பவர்களுக்கு அதை நிரூபிக்க வேண்டிய கடமையும் இருக்கிறது.// அவர்கள் உண்மையாக அறிவிக்கிறர்கள், நாடகமாடவில்லை மாத்திரமல்ல அவர்கள் மேடையில் நடக்கும் அற்புதங்களெல்லாம் உண்மையே! பரலோகத்துக்கு சென்று வந்ததாகச் சொல்லும் அனுபவங்கள் உண்மையே! என்பதை நிரூபிக்கும் பொறுப்பு அவர்களுக்காக வழக்காடும் தங்களுக்கு இருக்கிறது/
//அடுத்ததாக பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பற்றி சொல்லும் ஊழியர்களும் கள்ளத் தீர்க்கதரிசிகள் ஆகி விட்டனர்.// அவர்கள் போதிப்பதும், பிறருக்கு பகிர்ந்து கொடுப்பதும் உண்மையான ஆவியானவர்தான் என்பதை வேதத்தின்படி நிரூபிக்கும் பொறுப்பும் கடைமையும் தங்களுக்கு இருக்கிறது.
//மேற்கண்ட இருவரும் சரியான வழியில் ஊழியம் செய்யாமல் இருந்தாலும், அவர்கள் கள்ளத் தீர்க்கதரிசி என்று சொல்லும் அளவுக்கு மோசமானவர்கள் இல்லை என்பது என் கருத்து. அதை நிரூபிக்கவே நான் போராடி வருகிறேன்.// வேறு எந்த அளவுக்கு மோசமானவர்களாக இருந்தால் அவர்களைக் கள்ளத் தீர்க்கதரிசிகள் என்று சொல்லலாம்?
//போதகர்களாக இருக்க கூடியவர்கள் இந்த தளத்தில் இருந்தாலும் இந்த போக்கை அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. நான் தேவ ஊழியனாக இல்லாததால் ஊழியர் சார்பாக இவவளவு தூரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எந்த போதகருமே இதை கண்டு கொள்ளாதது வியப்பை தருகிறது. இந்த நிலை தொடருமானால் நாளை எதையாவது காரணம் சொல்லி உங்களை கூட கள்ளத் தீர்க்கதரிசிகள் என்று சொல்லும் நிலை வரலாம்.//
சகோ.சந்தோஷ் தயவுசெய்து விவாதத்தில் ஜெயிக்கவேண்டும் என்று வாதிடாமல் சத்தியத்தை அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் வாதிடுங்கள். pgolda:
//அவர் எழுத்துக்களில் பெண்களை தரைமட்டத்தில் தான் வைத்திருப்பார் - என்ற என் கருத்தையும் சொல்லிக் கொள்கிறேன்.//
இப்படிப் பொத்தாம் பொதுவாகக் கூறாமல் எந்தெந்தக் காரியங்களில் பெண்களை மட்டம்தட்டி எழுதியிருக்கிறார் என்று கூறுவிர்களானால் அதுபற்றி வேறொரு திரியில் விவாதிக்கலாம். எனக்குத் தெரிந்து அவர் பெண்களை மட்டம்தட்டி பேசுபவரோ எழுதுபவரோ அல்லவே அல்ல. பெண்கள் சபையின் மேய்ப்பர்களாக இருக்கக்கூடாது என்று ஒருவேளை அவர் சொல்லியிருந்தால் நீங்கள் அவரையல்ல அப்போஸ்தலர் பவுலையே கேள்வி கேட்க வேண்டும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
//பூரணமான ஊழியர் அல்லது பூரணத்தை பற்றி சரியாக போதிக்கிற ஊழியர் இந்தியாவில் யாராவது இருக்கிறார்களா? அல்லது ஒருவரும் இல்லையா? என சொல்ல வேண்டுகிறேன். குறைந்த பட்சம் ஒருவரது பெயரையாவது சொல்ல வேண்டுகிறேன்.//
சந்தோஷ் அவர்களின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டு உதவிசெய்ய முயற்சிக்கிறேன்;நான் குறிப்பிட நினைக்கும் சில தலைவர்களை யாருக்கும் தெரியாது;எனவே அவர்கள் பெயரைக் குறிப்பிடுவதே அவசியமற்றது; ஆனாலும் அனைவராலும் அறியப்பட்டவர்களும் அறியப்பட விரும்பாதவர்களுமான இரண்டு பிரதான தலைவர்களை நான் அறிவேன்;அவர்கள் தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை;தாங்கள் அழைக்கப்பட்ட அழைப்பில் இறுதிவரை நிலைத்திருக்கிறார்கள்;தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ள வாய்ப்புகளைப் புறக்கணித்தார்கள் அல்லது மறுத்தார்கள்,அவர்களுடைய ஐக்கியத்திலிருந்து இதுவரை முறைகேடும் தேவதூஷணமும் தேவனுடைய நாமத்துக்கு அபகீர்த்தியை உண்டுபண்ணும் காரியங்களும் வெளியாகவில்லை;இந்த இரு தலைவர்களும் முன்மாதிரியான ஜீவியத்தினால் பலரையும் நீதிக்கு நேராக நடத்தி வருவது மட்டுமல்லாது ஊழியத்தில் வாரிசு முறையைத் தவிர்த்து அடுத்த கட்டத் தலைவர்களை உருவாக்குவதில் வெற்றிக்கண்டுள்ளார்கள்;இந்த தலைவர்களிடத்தில் ஜாதி உணர்வோ வட்டார உணர்வோ இருப்பது போலத் தெரியவில்லை;பண விவகாரங்களிலும் இதுவரை நேர்மையைக் கடைபிடித்து வருகிறார்கள்; மேலும் அவர்களுடைய ஊழியத்தை வியாபாரமாக்கவில்லை;இதற்கு உதாரணமாக அவர்களுடைய செய்திகள் அடங்கிய ஒலி ஒளி பேழைகள் சாதாரண விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது;பல்வேறு ஊழிய திட்டங்களை அறிவித்து மீடியாக்களில் பணம் கேட்பதில்லை. இப்படி இந்த இரு பரிசுத்தவான்களைக் குறித்து சொல்லிக்கொண்டே போகலாம்;எனக்கு அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை;நான் அவர்களுடைய எந்த போதனையையும் இன்னும் ஒரு மணிநேரம் கூட முழுதாக கவனித்ததோ அவர்களுடைய புத்தகங்களைப் படித்ததோ இல்லை;ஆனாலும் நான் இவர்களைப் பற்றிய எனது பொதுவான அபிப்ராயத்தை இங்கே கர்த்தருக்கு மகிமையாகப் பகிர்ந்து கொள்ளுகிறேன்;ஆனால் இவர்களுடனும் இவர்களுடைய ஊழியத்துடனும் நெருங்கிய தொடர்பிலிருந்து அவர்களால் ஞான போதகத்தைப் பெற்று வளர்ந்தோர் அதைக் குறித்து வெளிப்படையாக சொல்லுகிறதில்லை;அதற்கான காரணத்தை அறியேன்;ஒருவேளை இவ்விருவரும் ஆவியில்லாதவர்கள் என்று மற்றவர்களால் ஒதுக்கப்பட்டது தான் காரணமோ என்னவோ? ஆவி என்பது திரள்கூட்டத்தைக் கூட்டி உணர்ச்சிவயப்படவைப்பது என்று பரவலாக நம்பப்படுகிறது;அந்த வகையில் இவர்களிடம் அதிகப்பட்ச தாழ்மை இருந்தாலும் இவர்கள் ஆவியின் அபிஷேகம் பெறாதவர்கள் என்றும் அந்நிய பாஷை போன்ற பெந்தெகொஸ்தே அனுபவத்துக்கு தூரமானவர்கள் என்றும் மற்ற தலைவர்களால் பிரச்சாரம் செய்யப்பட்டதால் இவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களாகத் தம்மைக் காட்டிக்கொள்ள சிலர் அஞ்சுகிறார்கள்;ஆனாலும் கர்த்தர் நம்முடைய தலைமுறைக்காகக் கொடுத்துள்ள நல்ல தலைவர்களின் முன்மாதிரியான ஜீவியத்தைக் குறித்து பேசுவதையும் பின்பற்றுவதையும் நாம் தவிர்ப்பதைக் குறித்து நிச்சயமாகவே வருத்தப்படுவார். அடியேன் எந்த உள்நோக்கமுமில்லாமல் குறிப்பிட விரும்பிய அந்த இரு தலைவர்கள் யாரென்று அறிய மனதுண்டா? அவர்களைக் குறித்தும் விவாதிப்போம் என்று யாரும் சொல்லாதிருந்தால் சொல்லுகிறேன்,ஒரு தலைவர்.சகோ.ஜோஷுவா டானியேல்; அடுத்தவர் சகோ.சாக் பூணன்;
இவர்கள் இருவரும் கடந்த 40 வருடத்துக்கும் மேலாக ஊழியம் செய்தும் இதுவரை ரெவரெண்ட் பட்டமோ டாக்குடரு பட்டமோ பிஸப்பு பட்டமோ போட்டுக்கொள்ளாமலும் கோட்டு சூட்டு டையைப் போட்டுக் கொண்டு மிரட்டாமலும் இருந்து காரியத்தில் கண்ணாக இருக்கும் கண்ணான தலைவர்கள் ஆவர்;இவர்களைக் குறித்த இனிமையான அனுபவங்களை தோழர்கள் அவசியம் பகிர்ந்துகொள்ளலாம்;இவர்கள் நான் தூரத்திலிருந்து இரசித்து மனதார நேசித்து பின்பற்றத் துடிக்கும் தலைவர்களாவர். மேலும் கர்த்தரிடத்தில் சேர்ந்தவர்களில் பரிசுத்த ஜீவியத்துக்கு முன்மாதிரியாகிய விளங்கிய பக்தசிங் ஐயா மற்றும் பிசாசுகள் அஞ்சி நடுங்கிய ஜீவானந்தம் ஐயா அவர்களையும் குறிப்பிடலாம்.
பக்தசிங் ஐயா
அவர்களுடைய பதிமானங்களும் அடிச்சுவடுகளும் இந்த மண்ணிலிருந்து இன்னும் மறையாத காரணத்தினால் அவர்களும் நிச்சயமாகவே நாம் பின்பற்றத் தகுந்த மாதிரிகளில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர்;மேலும் பிராமண சமுதாயத்திலிருந்து மலர்ந்து மறைந்திருந்தே கிறித்துவுக்காக வாசம் வீசும் (?) சாமுவேல் கணேஷ் அவர்களும் குறிப்பிடத்தகுந்த மாதிரியாவார்;அவர் மற்றவர்களைப் போல தனது பழைய மார்க்க நம்பிக்கையினை வியாபாரமாக்காமலும் தான் புகழைடைய அதனைப் பயன்படுத்தாமலுமிருந்து சுத்த சுவிசேஷத்தை அறிவித்தவர்களில் சிறப்பானவர்;அடைப்புக்குறிக்குள்ளிருக்கும் கேள்விக்குறிக்கான காரணம் ஐயா அவர்கள் பல வருடங்களாகவே இருதய நோயினால் அவதிப்பட்டு வந்தார்;அவருடைய தற்போதய நிலை தெரியவில்லை,என்பதே;அவரைக் குறித்து அறிந்த தோழர்கள் அவரைக் குறித்த அண்மைய தகவலைப் பகிர்ந்துகொள்ளலாம். இப்படி குறிப்பிடத்தகுந்த மாதிரிகள் இருப்பினும் அவர்களைக் குறித்து திறந்த மனதுடன் சாட்சிகூறி தேவனை மகிமைப்படுத்த சிலர் தயங்குவதற்கான காரணம் என்னவோ நான் அறியேன்;ஆனாலும் அவரவர் தங்கள் தங்கள் தனித்தன்மையைக் காண்பிக்க எண்ணும் சுயமே இதற்குக் காரணமாக இருக்குமோ என்று யோசிக்கிறேன்;ஏனெனில் தேவன் ஒருபோதும் தம்முடைய ஜனத்தை நடத்தும் தலைவர்களையும் மேய்ப்பர்களையும் தராமலிருந்ததே இல்லை;ஆனாலும் நான் எனக்கு யாரும் முன்மாதிரியே இல்லை அல்லது தேவையில்லை;இயேசுவே எனக்கு முன்மாதிரி;ஆவியானவரே என்னை நடத்துகிறார் என்பது சரியானது அல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)