Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுகிறித்துவின் இரண்டாம் வருகை இரகசிய வருகையா, பகிரங்க வருகையா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: இயேசுகிறித்துவின் இரண்டாம் வருகை இரகசிய வருகையா, பகிரங்க வருகையா..?
Permalink  
 



// எனக்கு உங்கள் அளவுக்கு சத்தியம் தெரியாது நான் போகும் சபையிலும் இரகசிய வருகை குறித்து சொல்லுவது கிடையாது, //

நண்பர் இராஜ்குமார் அவர்களிடம் ஒரு பெர்ஸனல் கேள்வி; தயவுசெய்து காயப்பட்டுவிடவேண்டாம்; உங்களை கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்படுத்தாத சபையிலிருந்து நீங்கள் எவ்வாறு கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்படமுடியும் என்று எண்ணுகிறீர்கள் அல்லது எந்தவொரு கிறித்தவ ஐக்கியத்துக்கும் தன்னை உட்படுத்திக் கொள்ளாத ஒரு ஆத்துமா எப்படி கர்த்தரை சந்திக்க ஆயத்தப்படமுடியும்? அப்படியாக உங்களை விட குறைந்த அறிவே உள்ள அல்லது தனது அறிவை ஸ்தாபனத்தின் கொள்கைக்காக மறைத்துவைத்து மாயம் பண்ணும் ஆசாரியனிடத்தில் அப்பம் வாங்கி புசிப்பது ஒரு மாய்மாலம் அல்லவா? ஏதோ நீங்கள் சுயமுயற்சியினால் அங்கு இங்கு தேடி பிடித்து சத்தியத்தை அறிகிறீர்கள்;ஆனால் உங்கள் சபை ஐக்கியத்திலுள்ள மற்ற ஏழைகளுக்கு யார் உதவிசெய்வார்? இவையெல்லாம் கர்த்தருடைய இரகசிய வருகை என்னும் கான்செப்ட்டுடன் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும் கேள்விகளாகும்;இதையே துருபதெசக்காரர்களும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அப்பாவியான மந்தையை சாய்த்துக்கொண்டுபோகிறார்கள்;நாம் ஏன் இதற்கெல்லாம் கமிட்டி போட்டு நம்முடைய சபைத் தலைவர்களை வற்புறுத்தக் கூடாது? அதாவது எங்களுக்கு ஆரோக்கிய உபதேசத்தை தெளிவாகப் போதியுங்கள்,உங்கள் பட்டம் பதவி சொத்துசுகங்களைக் குறித்த சண்டைகளைப் பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று சண்டை போடக்கூடாதா..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
இயேசுகிறித்துவின் இரண்டாம் வருகை இரகசிய வருகையா, பகிரங்க வருகையா..?
Permalink  
 


கிறித்துவின் இரண்டாம் வருகையைக் குறித்த பல்வேறு குழப்பமான உபதேசங்கள் பரவியிருப்பது நாமெல்லாரும் அறிந்த விஷயம்.;கிறித்துவின் இரண்டாம் வருகையை விசுவாசிப்பதும் அதைக் குறித்து உபதேசித்து தேசத்து குடிகளை தேவனுடைய இராஜ்யத்துக்காக ஆயத்தப்படுத்துவதும் நம்மேல் விழுந்த கடமையாகும்;ஆனால் அவருடைய இரண்டாம் வருகையானது பொதுவான புரிதலின் படி பகிரங்கமானதாக மட்டுமே சொல்லப்பட்டிருந்தால் அவருடைய நீதி நியாயங்களுக்கு கீழ்ப்படிந்து நற்கிரியைகள் செய்து காத்திருப்பதாலும் அவருடைய விசுவாசத்தைக் காத்துக்கொண்டு அவருக்குள் மரிப்பதாலும் நாமும் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைந்து அவருடன் அரசாள மீட்கப்படுவோம் என்று போதிக்கலாம்;ஆனால் இதனிடையே இரகசிய வருகையைக் குறித்து நம்பிக்கைக்குரிய போதகர்களால் போதிக்கப்பட்டது;அதனை வேத வசனங்களின் ஆதாரத்துடன் உறுதிபடுத்திக்கொண்டோம்;ஆனால் இந்த போதகத்தையுடைய சபைப் பிரிவினரின் மற்ற உபதேசங்கள் கடினமாக இருப்பதால் பெரும்பான்மையான மற்ற சபைப் பிரிவினர் சிலதை மட்டும் ஸ்வீகரித்துக்கொண்டு சபையைப் புறக்கணித்துவிட்டு தங்கள் பாரம்பரிய சபையையும் விடாமல் பழைய கொள்கை உபதேசங்களுடன் இவற்றையும் கலந்து விசுவாசிப்பதால் கிறித்தவர்களிடையே பல்வேறு குழப்பமான உபதேசங்கள் பரவியிருக்கிறது.

இப்போது யௌவன ஜனம் தளத்தின் நண்பர்களிடமும் அன்புக்குரிய வாசகர்களிடமும் நான் எதிர்பார்ப்பது என்னவென்றால் இயேசுவின் இரண்டாம் வருகையை விசுவாசிக்கிறீர்களா?ஆம் எனில் அது இரகசிய வருகையா பகிரங்க வருகையா, என்பதே..!

சீக்கிரமாக செயல்பட்டு தங்கள் விசுவாசத்தை வேத வசன ஆதாரத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்;கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்படுவதுடன் பிறரையும் ஆயத்தப்படுத்துவோம்..!

கீழ்க்காணும் விவாதமானது தமிழ் கிறித்தவ தளத்தில், கடைசிக் கால வெளிப்பாடுகள் எனும் திரியில் இடம்பெற்றுள்ளது;அதுவே இந்த புதிய  திரிக்கும் காரணமாக அமைந்தது.


rajkumar_s Wrote@Tcs on 17-02-2011 23:16:57:


எனக்கு உங்கள் அளவுக்கு சத்தியம் தெரியாது நான் போகும் சபையிலும் இரகசிய வருகை குறித்து சொல்லுவது கிடையாது, மற்ற படி கேள்வி ஞானமும் வேதத்தை தியானிக்கும் போது எனக்கு தோண்றிய எண்ணத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் இது தவறாகக் கூட இருக்கலாம் நண்பர்கள் சுட்டிக்காட்ட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

1தெசலோ4:16,17-ன் படி இயேசுவானவர் பிரதான தூதனாகிய மிகாவேலோடும் ஆரவாரத்தோடும் பரத்திலிருந்து இறங்கி வருவார். அப்போது மரித்தவர்கள் தங்கள் முறைமையின் படியே உயிர்த்தெழுவர் மேலும் பூமியில் உயிரோடு இருக்கும் நாமெல்லாம் ஆகாயமண்டலத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவர்ரோடு கூட மகிழ்ந்திருப்போம்.

இப்படி எடுத்துக் கொள்ளப்படுகிறவர்கள் மணவாட்டிகள், அதாவது பரிசுத்தவான்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பூமிக்கு ஒளி, சாரமுள்ள உப்பு, ஆடுகள் என்று மணவாளனாய் உவமைகளாய்ச் சொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் மத்திய ஆகாயத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவுடன்.

பூமியில் ஒளியில்லாதவர்களும், உப்பற்ற பண்டம் போன்றவர்களும், ஓநாய்கள் போன்றவர்களும் எஞ்சியிருப்பார்கள். ஏற்கெனவே வானமண்டலங்களில்(எபே 6:12) பொல்லாத ஆவிகள் உள்ளன, அவைகள் இயேசுவானவர் பரத்திலிருந்து பிரதான தூதரோடு இறங்கி வந்த போது பிரதான தூதனாகிய மிகாவேலோடு யுத்தம்பன்னுவார்கள்(வெளி 12:7‍‍-9) ‍அதன் பின்பு பிசாசும் அவனுடைய தூதர்களும் பூமியில் விழத்தள்ளப்படுவார்கள்

ஏற்கெனவே தீமையினால் நிறைந்திருக்கும் பூமியில் பிசாசுகள் கட்டவிழ்க்கப்பட்டு ஆளுகை செய்யும் அதுவே அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி

இன்னுமொரு கோணத்தில் மேற்சொன்ன சம்பவங்களை ஆராய்வோம், யோவேல் 2:28ன் படி கடைசி நாளில் பரிசுத்த ஆவி மாம்சமான யாவர் மேலும் ஊற்றப்படும், இப்பொது அது நடந்தேறிவருகிறது, அதே போல 2தெசலோ7,8ல் சொல்லியிருக்கிற படி பரிசுத்த ஆவியானவரே அந்திக் கிறிஸ்து எழும்ப தடையாக இருக்கிறார் என்பது தெளிவாகிறது, அப்படி இயேசுவின் இரகசிய வருகையில் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாய் பெற்ற பரிசுத்த ஆவியானவரோடு மனிதர்களும் எடுக்கப்பட்ட பின்பு தடை செய்கிறவர் இல்லாமல் போனபின்பு அந்திக் கிறிஸ்து எழும்புவான்(2தெசலோ9,10),

அந்திகிறிஸ்து பூமியில் ஆட்சி செய்வது 7 ஆண்டுகள் (வேத ஆதாரங்களை பின்பு விரிவாகத்தருகிறேன்)

இனி வானத்துக்கு செல்லுவோம்... வானத்தில் மணவாட்டியாகிய சபை மணவாளனாகிய கிறிஸ்துவோடு இனைக்கப்பட்டு (வெளி19:7) பின்பு மிகுந்த வல்லமையோடும், அக்கினியோடும், (2.தெச1:8), அவரைக் குத்தினவர்களும் காணும்படியாக(சகரியா12:10) பூமியின் குடிகள் எல்லாம் அவரைப் பார்த்து புலம்பும் படியாகவும் (வெளி1:7) மிக முக்கியமாக ஆதியாகம காலத்தில் வாழ்ந்த ஏனோக்கின் கூற்றின் படி (யூதா1:15) மீட்டுக்கொள்ளப்பட்ட ஆயிரம் ஆயிரமான பரிசுத்தவான்களோடும் கூட பூமியை நியாயம் தீர்க்க இறங்கி வருவார்.


அதன் பின் நியாயத்தீர்ப்பு நடைபெறும் அதன் பின்பு கிறிஸ்துவின் ஆயிரவருட அரசாட்சி நடைபெறும்.


இது என்னுடைய புரிதல் தான், இது சரியா? சரியென்றால் எப்படி சரி? தவறு என்றால் எப்படி தவறாகும்? ஆதாரங்களுடன் சொல்லுங்கள் திறந்த மனதோடு ஏற்றுக்கொள்கிறேன்; நன்றி.


"நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு.." (2.தீமோத்தேயு.3:14)

கர்த்தருக்குள் பிரியமான சகோதரரே,மேற்கண்ட வேத வாக்கியத்தின்படி நாம் கற்று நிச்சயித்துக்கொண்டதை ஒருவித ஐயத்துடன் சொல்லவேண்டும் என்ற அவசியமில்லை;சத்தியத்தை ஓங்கி சொல்லுவோரே இன்றைய உடனடி தேவை;நீங்கள் எழுதியுள்ளவை பெரும்பாலும் சரியாகவே இருக்கிறது;ஆனாலும் இரகசிய வருகை என்பதைக் குறித்து இன்னும் சற்று விரிவாக விளக்க வேண்டியதிருக்கிறது.

வேதம் மறைபொருளைத் தன்னகத்தே கொண்டு தேடுவோர்க்கு அள்ளித் தருகிறது,அல்லவா? அதன்படி தேவ திட்டம் என்பது சாதாரண மனிதனால் யூகிக்க இயலாத வண்ணமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறியிருக்கிறது;சேர்த்து சேர்ந்துகொண்டு- சேரும்படி சேர்க்கிறவன்
பாக்கியவான்; ஓரளவு சரியாகவே எழுதியுள்ள நீங்கள் இறுதியில் நியாயத்தீர்ப்புக்குப் பிறகு ஆயிரம் வருட அரசாட்சி என்பதில் சற்று முரண்பாடு தோன்றுகிறது;தள நண்பர்களின் கருத்துக்கு வழிவிட்டு காத்திருக்கிறேன்.


மேலும் நீங்கள் எழுதியதிலிருந்து எனக்கு ஒரு அற்புதமானதொரு வெளிப்பாடு கிடைத்தது;இயேசுவை பிரதான தூதனின் அவதாரம் என்று யெகோவா சாட்சிகள் கூறுகின்றனர்;ஆனால் அவர் வரும்போது அந்த பிரதான தூதனுடனே வருவாராம்;இதற்கு அந்த மாபாவிகள் என்ன புதிய விளக்கம் சொல்லுவார்களோ..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard