Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Reply for - பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்! Thread


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: Reply for - பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்! Thread
Permalink  
 


அன்பு நண்பரே, தங்கள் சுகவீனம் குறித்து மிகவும் வருந்துகிறேன்,கர்த்தர் தம்முடைய ஊழியக்காரரின் சுகத்தை விரும்புகிறவர் அல்லவா, தாங்கள் எப்போதும் நல்ல தேக ஆரோக்கியத்துடனிருக்க பிரார்த்திக்கிறேன்; தாங்கள் விரும்பினால் ஜெபக்குறிப்புகள் பகுதியில் தங்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ளலாம் அல்லது எனக்கு மின்னஞ்சல் செய்யலாம்.

God bless u..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

கொஞ்சம் உடல் நலம் சரியில்லாததால் தொடர்ந்து எழுத இயலவில்லை. கோவை பெரையன்ஸ் என்பவர் நேரடியாகவே கோவையில் உள்ள ஒரு அன்பு சகோதரரிடம் நேரடியாக போய் மூக்குடைபட்டு வந்து இருப்பதை வாசிக்கையில் மகிழ்ச்சி (நானும் அந்த நேரம் அங்கே இருந்தால் நன்றாக இருந்து இருக்குமே என்று நினைத்தேன்) அடைந்து தேவனை துதித்தேன்!. சகோதரர் கொல்வின் எழுதியிருக்கிற படி யோவான் 1:1 லே இயேசுவினுடைய தெய்வத்துவம் தெளிவாய் சொல்லப்பட்டு இருக்கிறது வேறு வசனங்கள் மூலம் அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. உண்மையில், இவர்களை விட விக்கிரத்தை தொழும் விக்கிர ஆராதனைகாரானே வாசி

  • அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள் (லூக்கா 12:48)

பாவத்திலே பெரிய பாவம் இயேசுவை தொழமறுப்பதுதான். இந்த உலகத்தை தேவன் படைத்ததே அவருடைய குமாரனை அவருடைய படைப்புக்கள் (மனிதன் உட்பட) தொழுது கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். கடைசி நாளில் நியாத்திர்ப்பும் ஆதாமுடைய பாவத்தின் அடிப்படையில் மாத்திரம் இல்லாமல், தேவனுடைய குமாரனை நாம் எப்படி ஏற்றுக்கொண்டோம் என்பதை பொறுத்தே!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

//ரசலின் மனிதப் போதனைகளைப் பின்பற்றும் உங்களுக்கு இது தெரியாது. ஏனென்றால் ரசலின் நூல்கள்தான் உங்களுக்கு வேதப் புத்தகம். அதை அவரே எழுதிவைத்துவிட்டார். //

கோல்வின் சொல்வதைப் பார்த்தால், முகமது தன்னிடம் இறக்கப்பட்ட வேதத்தைத் தவிர வேறு எதையும் வாசிக்கக்கூடாது என்று சொன்னதை போல அல்லவா இருக்கிறது? அந்த அளவுக்கு அமைப்புரீதியாக ஒரு மார்க்கத்தையே தோற்றுவித்துள்ள இரஸல் சாதாரண ஆளாக இருக்கமுடியாது; அவன் நிச்சயமாகவே சாத்தானின் நேரடி அபிஷேகத்தைப் பெற்றவனாகவே இருந்திருக்கவேண்டும்; இவர்களுக்கும் மார்மன் குழுவுக்கும் என்ன வித்தியாசம் என்பதையும் அண்மைக்காலத்தில் இதேபோல எழும்பி பரவியிருக்கும் பிரன்ஹாம் எனும் கள்ளத்தீர்க்கதரிசியைக் குறித்தும் அதிகமாக ஆராய்ந்து சபையாரை நாம் எச்சரித்தாக வேண்டும்...!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

Bro. Dina Wrote
அடுத்து தங்களின் தளத்தில் நண்பர் ஜோன் என்பவர் முக்கி தடுமாறி இயேசு பூமிக்கு வருமுன் என்னவாக இருந்தாரோ அதை நிரூபிக்க முடியாது ,தானே நீங்கள். வேதத்தை நம்பாது பாரன்பரியங்களை நம்பி விசுவாசம் கொள்ளும் உங்களை போன்ற அநேகரை நாம் இந்த ஐரோப்பா தேசத்தில்  சந்தித்துள்ளோம்.

யோவான் 1:1 தெளிவாக இதைப் பற்றி சொல்லுகிறது,
  • ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது
இதைவிட வேறு என்ன ஐயா ஆதாரம் வேண்டும். வெளிப்படுத்திய வசனத்துக்கு அடுத்ததான விடயத்தை பேசக் கூடாது.

சகோ. ஜான் என்ன தேவதுதூதருக்கு கால் கிடையாது என்று பபிலோனியக் கதைகளைக் கூறினாரா? அல்லது சின்ன தெய்வம் பெரிய தெய்வம் கதைகளைக் கூறினாரா? அவரின் பல கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மனிதப் போதனைகளை கூறியவர்தான் கோவை பெரியன்ஸ் என்பதை கவனத்திற் கொள்ளுங்கள்.


Bro. Dina Wrote

வேதத்தை நம்பாது பாரன்பரியங்களை நம்பி விசுவாசம் கொள்ளும் உங்களை போன்ற அநேகரை நாம் இந்த ஐரோப்பா தேசத்தில்  சந்தித்துள்ளோம். அவர்களின் சாட்சி ஒன்றே போதும் தங்களின் விசுவாசம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று.  இப்ப கூட இயேசு தொழத்தக்க தெய்வம் அல்ல என்று உங்கள் அனைவர்க்கும் தெரியும். உங்கள் மனதில் கையே வைத்து உண்மையாக உணர்ந்து சொல்லுங்கள். உங்களிடமே சரியான நன்பிக்கை இல்லாது போது எதுக்காக இந்த பகல் வேஷம்.:::  மீண்டும் மேலே எனது தலைப்புக்கு வேத ஆதாரத்துடன் பதில் இடும் போது உங்கள் முகத்திரை கிளியும் ::::::: தொடரும் ::::

இயேசு தொழத்தக்க தெய்வம் இல்லை என்று சொல்லுபவர்கள் கள்ள உபதேசக்குழுக்கள்.தாம். இந்த வசனங்கள் எதனைக் எடுத்துக் காட்டுகின்றது
  • ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்(அப் 20:28)

  • பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென் (ரோமர் 5:9)

  • நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. (தீத்து 2:13)
பரலோகத்திலும் பூலோகத்திலும் தொழுதுகொள்ளத்தக்கவர் இறைவன் மட்டுமே. பல மனிதர்கள் சில மனிதர்களை தெய்வமாக தொழுவதை இந்நாட்களில் காண்கிறோம். ஆனால் இதனையும் பரலோகத்தில் நடக்கும் இச்செயலையும் முடிச்சுப்போட்டும் பார்க்கும் பெரியவர் இருக்கிறார் இதன் மூலம் பூலோக அசுத்தங்களையெல்லாம் பரிசுத்தர் வாசம் செய்யும் பரலோகத்திற்கு முடிச்சு போடும் கேவலம் கெட்ட தேவநிந்தனையான செயல்களை செய்கிறோம் என்பதை மறந்துவிட்டார்.

வசனம் இப்படியாக சொல்கிறது,

  • மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச் செய்தபோது: தேவதூதர்கள் யாவரும் அவரைத் தொழுது கொள்ளக்கடவர்கள் என்றார்.(எபி. 1:6)

ரசலின் மனிதப் போதனைகளைப் பின்பற்றும் உங்களுக்கு இது தெரியாது. ஏனென்றால் ரசலின் நூல்கள்தான் உங்களுக்கு வேதப் புத்தகம். அதை அவரே எழுதிவைத்துவிட்டார். நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. நீங்கள் பபிலோனிய மதவணக்கக்காரர்கள்.

முகத்திரை கிளியுமா? நாங்கள் ஒன்றும் Parrot அல்ல. கிழியும். ஏற்கனவே உங்கள் முகத்திரை கிழிந்துவிட்டதே. புதிதாக ஒன்றையும் கிளிக்க வேண்டாம.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அன்பான சகோதரர் கோல்வின் அவர்களே, அங்கே எழுதும் தினோ (dino) எனும் கள்ளனே இங்கே ராஜ் (raj) என்ற பெயரில் நுழைந்துள்ளதாக சந்தேகிக்கிறேன்;உங்களுடைய சரியான கணிப்புக்காக உங்களுக்கு வாழ்த்துக்கள்;என்னைப் பொருட்படுத்தாது தயவுசெய்து தொடர்ந்து எழுதி இவர்களுடைய முகமூடியைக் கிழித்தெறியுங்கள்; உங்களைப் போல ஆதாரத்துடனும் கட்டுப்பாட்டுடனும் எழுதுவதற்கு எனக்குத் தெரியாது; என்னிடம் இருக்கும் வேகமும் உங்களுடைய விவேகமுமே இவர்களை வீழ்த்துவதற்குப் போதுமானது;தயவுசெய்து என்மீது என்ன வருத்தம் இருந்தாலும் அதனை தளத்தில் பதிக்கவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்ளுகிறேன்;அவற்றை மின்னஞ்சல் மூலம் எனக்கு தெரியப்படுத்துங்கள்;நான் கடினமாக எதை எழுதினாலும் உங்கள் அன்பான கவலை தோய்ந்த முகமும் நீங்கள் என்னுடைய நற்பெயருக்கு பங்கம் உண்டாகிறதே என்ற அங்கலாய்ப்புடன் சொன்ன அறிவுரைகளும் என் மனக் கண் முன்பாக வருகிறது;ஆனாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை;நான் உயிரோடு இருக்கும் வரை இப்படியே இருந்துவிட்டு போகிறேன்;நீங்கள் தொடர்ந்து போராடுங்கள்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

Bro. Dino Wrote
நண்பரே சில்சாம் அவர்களே;  தங்களின் தளத்தில் பொதுவாக இயேசுவை தொழத்தக்க தெய்வம் என்று வாதாடுவது ஒன்றே போதும் தாங்கள் எந்த வித நம்பிக்கைகளை கொண்டுள்ளிர்கள் என்று.

உங்களை அடையாளம் காட்டிக் கொண்டமைக்கு நன்றி. உலகில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இயேவை தேவன் என்றே அறிக்கையிடுகிறார்கள். யோவான் 1:1 தெளிவாக சொல்லுகிறது.  இயேசு தேவன் என்று.  துர்உபதேசக் குழுக்களே இதனை நிராகரிக்கிறார்கள்.

Bro. Dino Wrote
கேவலம் சாத்தானுக்கு தெரியும் இயேசு கடவுள் இல்லை என்று ::::  ஆனால் சாத்தானின் தூதர்களாகிய சில்சாம் தள உறுப்பினர்களுக்கு தெரியவில்லை பாருங்களேன்!!!!!!!!!!!!!

இதற்குரிய பைபிள் ஆதார வசனம் எது? சாத்தனுக்கு இயேசு தேவன் இல்லை என்பது எப்படி தெரியும் என்று எந்த வசன அடிப்படையில் கூறுகிறீர்கள்.   யெகோவா சாட்சிகள் மற்றும் துர்உபதேசக்குழுக்களின் போதனைகளிலிருந்து எடுத்துக்கூற வேண்டாம். ரசல்தான் இப்படி எழுதி வைத்துள்ளார். சிலவற்றை இத்தளத்திலேயே பதித்துள்ளேன். படித்துப் பார்த்தீர்களா?


Bro. Dino Wrote
அவர் வேதத்தின் பதிவுகளை பேசாமால் யாரோ ஒருவராகிய வசந்த குமார் எழுதிய பதிவுகளை வைத்து, அதே சரியான போதனையாக இருக்கும் என்று நினைத்து வாதாடுகிறார்.

இவ்வாசிரியரை (அவரது ஆக்கங்கள்) உங்களுக்குத் தெரியாது என்பது யாரோ என்ற வார்த்தை புலப்படுத்துகிறது. பின்னர் அவரை விமர்சிப்பது நகைப்புக்குரியது. நான் இவரின் ஆக்கதில் மட்டும் தங்கியுள்ளேன் என்பதை எதை அடிப்படையாக வைத்து சொல்லுகிறீர்கள். என பல பதிவுகளை வாசித்துள்ளீர்களா? ரசல் பற்றிய பதிவுகளைப் பாருங்கள்.

ஆசிரியரின் ஆக்கத்தில் இடம்பெறும் Citation & Refererce பகுதியியில் எந்த நூல்களிலிருந்து எந்த கருத்துக்கள் எடுத்தாளப்பட்டுள்ளன என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும். Library Science கற்றுள்ளேன். ஒரு ஆய்வாளர் Citation & Refererce இல்லாமல் எழுதுவாராயின் அவை ஆய்வு நூலாக ஏற்றுக்கொள்ளப்படாது. இது உலகவிதி முறை. இதை யாராலும் மாற்ற முடியாது. சரியான போதனையா கள்ளப்போதனையா என்பதை வாசகர்கள் தீர்மானிப்பர். நீங்கள் Citation & Refererce உடன் எழுதுகிறீர்களா? அதன் முக்கியத்துவத்தை அறிந்துள்ளீர்களா?

ரசலைப் போன்று Citation & Refererce இல்லாமலா எழுதினார். பல 7ம் நாட் போதனைக்கார்கள், பௌத்தம் போன்ற சமயங்களிலிருந்து அவரின் கருத்துக்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆதாரத்துடன் சில பதிவுகளை இட்டுள்ளேன். பாருங்கள்.

மேலும் The Encylopaedia of American Religions pp77-81 by D. Harris  இது பற்றி என்ன கூறுகிறது என்பதை கவனியுங்கள்; யெகோவா சாட்சிகள் தங்களது உபதேசம் 7-ம் நாள் அட்வாந்து சபையின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளது என்பதை ஏற்காத போதும், இதை எவராலும் மறுக்க முடியாது.

Bro. Dino Wrote
யெகோவாவின் சாட்சி யார்? வேத மாணாக்கர் யார்? என்று கூட தெரியாது மாறி மாறி அதையே பேசும் குழப்ப மனநிலையில் இருபவர்களா நாங்கள்?. இதே தளத்தில் சகோதரர்  பெரியான்ஸ், அதற்கான பல பதிவுகள்   ஆதாரத்தோடு கொடுத்ததும் திரும்ப திரும்ப  குதர்க்கமாக பேசி இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி  விதண்டாவாதம் பேசும் மூடர்கள் அல்ல

நாங்கள் என்று நீங்களே போட்டு அதற்கு பதிலையும் தந்துவிட்டீர்கள். மிக்க நன்றி. கோவை பெரியன்ஸ் தேவதூதர்களுக்கு கால்கள் இல்லை என்று கூறுபவர். ஒரு பெரிய தெய்வம் சின்ன தெய்வத்தை படைத்து அதன் மூலம் உலகை படைத்தது என்று கூறுவது சரியா சகோதரரே! யார் குழப்ப மனநிலை என்பது தற்போது புரிகிறதா? இதற்காக தான் உங்களை பபிலோனிய மதத்தார் என்றும் கூறிப்பிடுகிறேன்

யொகோவா சாட்சி யார், வேதமாணக்கர் யார் என்பது எனக்கு நன்றாக தெரியும்? எனது எந்த கருத்து தவறு என்று மட்டும் சுட்டிக் காட்டுங்கள். அதே விக்கிபீடியாவில் இயேசுவின் கல்லறை காஷ்மீரில் உள்ளது என்ற கட்டுரைகளும் உள்ளன. இவற்றை ஏற்றுக் கொள்ளுவீர்களா?

-- Edited by colvin on Monday 7th of March 2011 09:01:59 AM

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

///எப்போது இங்கே வந்தார்,எதைப் படித்தார் போன்ற எந்த விவரமும் சொல்லாமல் குருடன் யானயைத் தடவியது போல (ஏற்கனவே நிர்ணயித்துக் கொண்ட இரஸலின் போதனைக்கு ஒத்துவரவில்லையோ..? ) பொத்தாம்பொதுவில் எதுவும் சரியில்லை என்பவர் எப்பேற்பட்ட ஆளாக இருப்பார் என்பதையும் ஏற்கனவே அறிந்திருக்கிறோம்; நீங்களெல்லாரும் சேர்ந்து வந்தாலும் அதைக் குறித்து கொஞ்சமும் அஞ்சவேமாட்டேன், அதற்கு ஒரு பதிலே போதும்,அது அப்போஸ்தலர்.4:12 "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்''. ////

மேற்கண்ட நமது கூற்றுக்கு தினோ எனும் ஒரு பெயரில் புறப்பட்டிருக்கும் ஒரு புதுப் பிசாசு கீழ்க்கண்டவாறு பதிலளித்துள்ளது...

நண்பரே சில்சாம் அவர்களே;  தங்களின் தளத்தில் பொதுவாக இயேசுவை தொழத்தக்க தெய்வம் என்று வாதாடுவது ஒன்றே போதும் தாங்கள் எந்த வித நம்பிக்கைகளை கொண்டுள்ளிர்கள் என்று. அடுத்து தாங்கள் எழுதிய வேதப்பதிவு.... அப்போஸ்தலர்.4:12 "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்''

இதன் அர்த்தம் அவர் சர்வவல்லமை உள்ள தேவன் அவரையே தொழுது கொள்ளவேண்டும் என்ற அர்த்ததையா ? கொடுக்கின்றன. கேவலம் சாத்தானுக்கு தெரியும் இயேசு கடவுள் இல்லை என்று ::::  ஆனால் சாத்தானின் தூதர்களாகிய சில்சாம் தள உறுப்பினர்களுக்கு தெரியவில்லை பாருங்களேன்!!!!!!!!!!!!!

அடுத்து தங்களின் தளத்தில் நண்பர் கொல்வின் அவர்களின் பதிவுகள் பாருங்கள். அவர் வேதத்தின் பதிவுகளை பேசாமால் யாரோ ஒருவராகிய வசந்த குமார் எழுதிய பதிவுகளை வைத்து, அதே சரியான போதனையாக இருக்கும் என்று நினைத்து வாதாடுகிறார். அதைவிட ஒரு படி மேலே போய் யெகோவாவின் சாட்சி யார்? வேத மாணாக்கர் யார்? என்று கூட தெரியாது மாறி மாறி அதையே பேசும் குழப்ப மனநிலையில் இருபவர்களா நாங்கள்?.  இதே தளத்தில் சகோதரர்  பெரியான்ஸ், அதற்கான பல பதிவுகள்   ஆதாரத்தோடு கொடுத்ததும் திரும்ப திரும்ப  குதர்க்கமாக பேசி இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி  விதண்டாவாதம் பேசும் மூடர்கள் அல்ல நாம். அடுத்து தங்களின் தளத்தில் நண்பர் ஜோன் என்பவர் முக்கி தடுமாறி இயேசு பூமிக்கு வருமுன் என்னவாக இருந்தாரோ அதை நிரூபிக்க முடியாது ,  வேதப் பதிவுகளுக்கு கூடாக  குருட்டுத்தனமாக பதிவுகள் கொடுப்பவர் தானே நீங்கள். வேதத்தை நம்பாது பாரன்பரியங்களை நம்பி விசுவாசம் கொள்ளும் உங்களை போன்ற அநேகரை நாம் இந்த ஐரோப்பா தேசத்தில்  சந்தித்துள்ளோம். அவர்களின் சாட்சி ஒன்றே போதும் தங்களின் விசுவாசம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று.  இப்ப கூட இயேசு தொழத்தக்க தெய்வம் அல்ல என்று உங்கள் அனைவர்க்கும் தெரியும். உங்கள் மனதில் கையே வைத்து உண்மையாக உணர்ந்து சொல்லுங்கள். உங்களிடமே சரியான நன்பிக்கை இல்லாது போது எதுக்காக இந்த பகல் வேஷம்.:::  மீண்டும் மேலே எனது தலைப்புக்கு வேத ஆதாரத்துடன் பதில் இடும் போது உங்கள் முகத்திரை கிளியும் ::::::: தொடரும் ::::

இவர்களுடைய தவறான கொள்கைகள் ஒவ்வொன்றையும் வரிக்குவரி எடுத்துக்கொண்டு தகுந்த முறையில் பதிலளித்து வருகிறோம்;ஏற்கனவே எழுதப்பட்டவையே போதும் என்ற நிலைக்கு நம்முடைய யௌவன ஜனம் தளம் வந்துவிட்டதைப் போல இவர்களுக்கு நாம் அளித்த நியாயமான பதில்களால் தளமானது
நம்முடைய நிரம்பி வழிகிறது;ஆனாலும் அச்சுறுத்தல் மூலமும் தூஷிப்பதன் மூலமும் மாத்திரமே தங்கள் கருத்தை நிறுவிட (மேசியாவின்) எதிரிகள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர்;ஆனாலும் அவர்களுடைய எண்ணம் ஈடேறப்போவதில்லை;ஆரோக்கிய உபதேசத்தை கைக்கொள்ளுவோரைத் தவிர வேறு யாரையும் மதிப்பதில்லை என்றும் ஆரோக்கிய உபதேசத்துக்கு எதிராகப் புழுதி கிளப்பும் (மேசியாவின்) எதிரிகளை வேரறுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தின் காரணமாகவும் சாதாரண மனிதர்களோடு நாம் கடைபிடிக்கக் கூடிய நட்புணர்வைக் கூட புறந்தள்ளிவிட்டு அவர்கள் நிலைக்கே சென்று அவர்களை கருவறுத்து வருகிறோம்; இது ஏதோ ஒரு தேசத்தின் எல்லை பிரச்சினை போலவோ அல்லது இனரீதியான ஒரு உரிமை பிரச்சினை போலவோ அல்லது மொழிக்கான ஒரு போராட்டம் போலவோ இருந்திருந்தால் நாம் சாத்வீகமான முறையில் இவர்களோடு மென்மையாக பேசிக்கொண்டிருக்கமுடியும்.

ஆனால் (மேசியாவின்) எதிரிகள் ஏற்கனவே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனைக் குறித்தும் அவரை இந்த பூமிக்கு அனுப்பிய தேவாதி தேவனின் தீர்மானத்துக்கு விரோதமாகவும் தொடர்ந்து பேசி அதற்குக் கேடகமாக‌ பரிசுத்த வேதாகமத்தையே எடுத்துக்கொண்ட அக்கிரமத்தைக் காண சகிக்கவில்லை;மேலும் அவர்கள் பயன்படுத்தும் வேதாகமம் நம்முடையதல்ல எனும் உண்மை பலருக்கும் தெரியாது;

எப்படி இஸ்லாமியர் வேதம் திருத்தப்பட்டுவிட்டது என்று கூறி முகமதுவுக்கு வெளிப்பட்டதாகக் கூறி ஒரு வேதத்தை எழுதி வைத்துக்கொண்டு ஓதிக்கொண்டிருக்கிறார்களோ அதைப் போலவே யெகோவா சாட்சிக் கூட்டத்தாரும் தங்களுக்கென்று தனி வேதாகமத்தை எழுதிக் கொண்டனர்;அப்படியானால் அவர்கள் நம்மைக் கேள்வி கேட்கும் தார்மீக தகுதியையே இழந்து கிறித்தவர்கள் எனும் நம்பிக்கையிலிருந்து வழுவிச் சென்றுவிட்டனர் என்று கூறிவருகிறோம்;எனவே நீ உன்னை கிறித்தவன் என்று சொல்லிக்கொண்டு மாயம் பண்ணாதே என்று உறுதியுடன் எதிர்த்து வருகிறோம்;உன் பிள்ளைகளுக்கும் போலியாக கிறித்தவ பெயர்களைச் சூட்டி அவர்களுடைய அனுமதியில்லாமல் அவர்களைக் கிறித்தவர்கள் எழுதாதே என்றும் சொல்லுகிறோம்;

எப்படி திருநங்கையர் தங்களை மூன்றாவது வகையினராக அறிவிக்கச் சொல்லி உரிமைகளுக்காகப் போராடி வருகிறார்களோ அதுபோலவே நீங்களும் உங்களை யெகோவா சாட்சிகள் என்ற மூன்றாவது மார்க்கமாக அறிவித்துக் கொள்ளுங்கள்;அதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபணையுமில்லை; ஆபிரகாமை தன்னுடைய முற்பிதாவாக கண்டவனும் சொல்லிக் கொள்ளுகிறான்; ஏனெனில் ஊர் பட்டணத்தானான அவன் அத்தனை ஊர்களுக்கு சென்றிருக்கிறான்;ஆனால் பரலோகத்தால் அனுப்பப்பட்ட நித்திய பிதாவான இயேசுவானவரை தெய்வமாகத் தொழுவோர் மட்டுமே கிறித்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளமுடியும்; கிறித்து இல்லாமல் பிதாவே இல்லை என்ற நிலையில் யெகோவா என்று உங்களால் உரைக்கப்படும் சர்வவல்லவரின் நாமத்தில் சரிபாகமாக வார்த்தையாகிய இயேசுவும் இருக்கிறார்;இயேசு இணைந்தபிறகே அவர் ஒன்றான மெய்த் தேவனாக இருக்கிறார்;அப்படியாக வார்த்தையும் ஆவியாகிய தேவனும் இணைந்த தன்மைக்கே சர்வவல்லவர் தேவனாகிய கர்த்தர் என்று பெயர்; யெகோவா என்பது மட்டுமே சர்வ வல்ல தேவனுடைய பெயர் அல்ல;யெகோவா எனும் பெயர் இயேசுவையும் இணைந்த தன்மைக்கே வழங்கப்படுகிறது;ஏனெனில் பிதாவானவர் பேசினார்,அவருடைய வார்த்தையே கர்த்தராகிய இயேசுகிறித்து என்கிறோம்.

இந்த நிலையிலிருந்து விவாதிக்க விருப்பமில்லாமல் போகட்டும்;அதை விட்டுவிட்டு நாங்கள் ஏதோ குழப்புவதைப் போலவோ சத்தியம் தெரியாமல் தடுமாறுவது போலவும் பொய்ப் பிரச்சாரம் செய்வதை நீங்கள் உடனே நிறுத்தவேண்டும்;நாங்கள் சொல்லுவதையெல்லாம் மிருகத்தனமாகப் புறக்கணித்துவிட்டு நீங்கள் சொல்லுவதையே நாங்கள் வேதமாக ஏற்கவேண்டும் என்ற மதியீனத்துடன் செயல்படுவது குழந்தைத்தனமானதொரு போக்கு ஆகும்;

எனவே உங்களை எதிர்கொள்ளவும் எதிர்க்கவும் காரணமாக ஒரே ஒரு குறியீட்டை முன்வைத்துள்ளோம்;அது என்னவென்றால் "இயேசுகிறித்துவை தெய்வமாகத் தொழுவோர் மட்டுமே கிறித்தவர்கள்" என்பதாகும்;இது தமிழ் இணையதள உலகில் யௌவன ஜனம் முன்வைத்துள்ள அற்புதமான தீர்மானமாகும்;இதுவரையிலும் இதுபோன்றதொரு வரியை யாரும் எங்கும் வாசித்திருக்க முடியாது என்று நம்புகிறோம்;இதைவிட யெகோவா சாட்சிகளை எதிர்க்க வேறு ஆயுதம் இருக்கமுடியாது;முன்பெல்லாம் இயேசுவை தேவகுமாரனாகக் கூட ஏற்கமறுத்தவர்கள் தற்போது சற்று இறங்கிவந்து அவரை தேவகுமாரனாகவும் இரட்சகராகவும் பெரிய மனது பண்ணி ஏற்றுக்கொண்டுள்ள‌னர்;ஆனாலும் அவர் அடிக்கப்பட்ட‌ சிலுவையைக் குறித்தும் உயிர்த்தெழுதலைக் குறித்தும் வைத்துள்ள‌ விகாரமான வெளிப்பாடுகளை இன்னும் சொல்லவில்லை அல்லது சொல்லுவதற்கு அவர்களுக்கு தைரியமில்லை;

ஆனால் சுவிசேஷத்தை நேர்மையுடன் அறிவிக்கும் சுவிசேடகர்களின் முதலாவது அடையாளம் என்னவென்றால் அவர்கள் பாவத்தின் கொடூரத்தையும் அதற்கு தேவன் செய்த மீட்பின் திட்டத்தையும் குறித்து சொல்லி இயேசுகிறித்து எனும் அற்புதமான தேவனுடைய புதிய ஏற்பாட்டைக் குறித்து அறிவிப்பதே;வேதம் முழுவதுமே இயேசுகிறித்துவை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது;அவரே பிதாவாகிய தேவனுடைய நேரடி வெளிப்பாடாக இருக்கிறார்;பிதாவாகிய தேவனை ஒருபோதும் பார்த்திராத கேட்டிராத மனுக்குலத்துக்கு இயேசுகிறித்துவே அவர்தம் வெளிப்பாடாக இருக்கிறார்;இந்த சாதாரண அறிவு கூட இல்லாமைக்குக் காரணம் கிறித்துவிடமிருந்த மனத் தாழ்மையில்லாமையே;பிதாவாகிய தேவனைக் குறித்து எதைப் போதித்தாலும் அது இயேசுகிறித்துவை நினைவுபடுத்தவேண்டும்;இல்லாவிட்டால் தேவன் மனுக்குலத்துக்காக செய்த மாபெரும் ஏற்பாட்டைப் புறக்கணித்தவர்களாகும் பயங்கரம் வந்து நேரிடும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

திருத்துவ போதனையே நம்புகிறவர்கள் கடவுளில் மூன்று நபர்கள் இருப்பதாக, அதாவது பிதா, குமாரன், ஆவி ஆகிய மூன்று நபர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இம்மூன்று நபர்களும் ஒருவருக்கு ஒருவர் சரிசமமானவர்கள் என்றும், சர்வ வல்லமை உள்ளவர்கள் என்றும், ஆரம்பம் இல்லாதவர்கள் என்றும் சொல்கிறார்கள். எனவே, திருத்துவ போதனையின்படி,  பிதாவும் கடவுளும், குமாரனும் கடவுள், பரிசுத்த ஆவியும் கடவுள் என்றாலும் கடவுள் ஒருவர் என்றே வேதப்பதிவுகள் நமக்கு அத்தாட்சிப்படுத்திக் காட்டுகின்றன. இந்த உபதேசத்தை கொண்டிராத எந்த உபதேசமும் துர்உபதேசங்கள் ஆகும்.

அண்மையில் யௌவன ஜனம் மற்றும் இறைவன், தமிழ் கிறிஸ்தவம் போன்ற தளத்தில் பதிந்த சில பதிவுகளை வாசிக்க நேர்ந்தது. அந்த பதிவுகளின் பல பதிவுகள் வேதத்துக்கு பிறம்பாக இருப்பதை காணக் கூடியதாக இருந்தது. இவர்களின் பதிவுகளுக்கு ஏற்றாத் போல இந்த பகுதியில் சிலகருத்துக்களை எழுத சித்தமாய் இருக்கிறேன். .... (சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் எல்லோரையும் விடுதலையாக்கும்)  தொடரும் ..............

நம்முடைய (மேசியாவின்) எதிரிகள் மிகவும் நல்லவர்கள்;எனவே அவர்கள் நம்மை ஒரேயடியாக தாக்கி சோர்வடையச் செய்யாமல் ஷிப்ட் போட்டு வெவ்வேறு ரூபத்தில் வந்து தாக்குகிறார்கள்;இதோ அண்மையில் கோவை வெறியன் தளத்தில் வந்து இணைந்துள்ள டினோ எனுமொரு புதிய நபர் நமக்கெதிராகப் புறப்பட்டிருக்கிறார்;அவருக்கு வேதம் முழுவதும் தெரியுமாம்; நமக்குக் கற்றுத் தரப்போகிறாராம்;பார்ப்போம்,அவருடைய சாமர்த்தியத்தையும்...!

எப்போது இங்கே வந்தார்,எதைப் படித்தார் போன்ற எந்த விவரமும் சொல்லாமல் குருடன் யானயைத் தடவியது போல (ஏற்கனவே நிர்ணயித்துக் கொண்ட இரஸலின் போதனைக்கு ஒத்துவரவில்லையோ..? ) பொத்தாம்பொதுவில் எதுவும் சரியில்லை என்பவர் எப்பேற்பட்ட ஆளாக இருப்பார் என்பதையும் ஏற்கனவே அறிந்திருக்கிறோம்; நீங்களெல்லாரும் சேர்ந்து வந்தாலும் அதைக் குறித்து கொஞ்சமும் அஞ்சவேமாட்டேன், அதற்கு ஒரு பதிலே போதும்,அது அப்போஸ்தலர்.4:12
  • "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Sunder@Iraivan

//...மொத்தத்தில் தேவத்துவத்தின் உண்மையையும்  அவரின்  வல்லமையையும் சரியாக அறியாத இவர்களிடம் இணைந்து நம்மால் செயல்படவே முடியாது அத்தோடு உண்மையை அறிய வேண்டும் என்ற நோக்கில் அழுது மன்றாடி தேவனிடமிருந்தே நேரடியாக உண்மையை அறிந்த என்னையும் அப்பப்போ  ஆசைவரும் போதேல்லாம் வசைமாரி பொழிவதோடு "பதிவை நீக்கு" என்று அறிவுறுத்துகின்றனர்.  இனி அதுபோன்ற சாத்தானின் மிரட்டல்களிமித்தம் சோர்ந்துபோகாமல் தேவன் நமக்கு கட்டளையிட்டதை செய்வோம். ஆண்டவர்தாமே அவரது சித்தபடி நம்மை வழிநடத்துவாராக


நாம் எல்லோருடனும் சமாதானமாக இருபதையே விரும்பினாலும், கொள்கை விஷயத்தில் எவருடனும்  கூட்டு இல்லாமல் இந்த தளம் தனித்தே செயல்படும்  என்பதை இங்கு  தெரிவித்து கொள்கிறோம்.

உன்னை யாருப்பா பதிவை நீக்கு என்று மிரட்டியது; நீயாகத்தானே பதிவை நீக்குகிறேன் என்று சவால் விட்டாய், இதுபோல‌ சின்னப்புள்ளத்தனமா எழுதலாமா? பொதுவான கிறித்தவ விசுவாசத்துக்கு விரோதமாக யார் எழுதினாலும் அதற்கு எதிராக நம்மால் ஒன்றும் செய்யமுடியாது;ஏனெனில் எழுத்து சுதந்தரமும் கருத்து சுதந்தரமும் எல்லோருக்கும் உண்டல்லவா? ஆனாலும் வின்ஸ்டன் சர்ச்சில்,உனது கட்டற்ற சுதந்தரத்தின் எல்லை எனது மூக்கின் நுனி வரை மட்டுமே என்று சொன்னது போல நம்முடைய உணர்வுகளை பாதிக்கும் எந்தவொரு கருத்தையும் எதிர்த்து நம்முடைய கருத்தைப் பதிவுசெய்து வைக்கிறோம்;கேட்பவர் கேட்கட்டும் கேளாதவர் கேளாதே போகட்டும்;ஆனால் எதிர்கருத்து சொல்லுவோரை சாத்தான் என இகழ்வது என்ன வகை சகிப்புத்தன்மையோ தெரியவில்லை;சில்சாம் யானை குதிரை என்று ஆர்ப்பாட்டம் பண்ணிவிட்டு ஊமை குசும்பன் என்பார்களே அதுபோல தன் வாசனையை அவ்வப்போது வீசச் செய்ய எதையாவது தின்றுவிட்டு எதையாவது கக்குவது சிலருக்கு வாடிக்கையாகிவிட்டது.

இதுவரை என்னை தான் ஜாடை மாடையாக தாக்கிவந்தார்களென்றால் இதோ நம்முடைய  புதிய நண்பர் ஜாண் அவர்களையும் சாத்தான் என இகழ்ந்து தன்னை தேவ தூதன் ரேஞ்சுக்கு ஒருவர் உயர்த்திக் கொண்டுள்ளார்;நான் தேவ தரிசனம் பெற்று பேசுகிறேன்,நீ சாத்தானின் ஆவியுடன் எனக்கு தடைசெய்கிறாய் என்பது என்ன ஆவியோ..? நாங்கள் உன்னிடம் கேட்பதெல்லாம் அதிக‌பட்சமாக நீ அளப்பவற்றுக்கான வேத வசன ஆதாரமே.

நீங்கள் சன்மார்க்கத்தைப் பேசினாலும் நீங்கள் துன்மார்க்கனுடன் அழிக்கப்படுவீர்கள் என்று வேதம் சொல்லுகிறது;எனவே எங்கள் நற்குணங்களைக் குறித்து நீங்கள் கவலைப்படவேண்டாம்;எங்களுக்குத் தேவையானதெல்லாம் நீர் எழுதுபவற்றுக்கான வசன ஆதாரமே..!

உம்முடைய தளம் கிறித்தவ தளத்தில் பதிக்கப்படவில்லை என்பதையும் அது உலக ஞானத்தைப் பேசும் தளங்களின் வரிசையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் அறியாமல் உம்மோடு தொடர்பு வைத்துள்ளோரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது;நீர் ஜீவசமாதியடைந்து பிரேமானந்தா சாமியாரைப் போல பேரும்புகழும‌டைய மனதார வாழ்த்துகிறேன்;உம்மை முதன்முதலாக லூஸு என்று இகழ்ந்து தனது பதிவுகளையெல்லாம் நீக்கிவிட்டு ஓடிய ஓடுகாலி கோவை வெறியனுடன் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கொள்கைப்படி மீண்டும் இணைந்து செயல்படமுடியும்;ஆனால் சத்தியத்துக்காகப் போராடும் நாங்களெல்லாம் வேப்பங்காய்கள் உமக்கு..?! நல்ல நியாயம்'யா...!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

 இது சகோதரர் சுந்தருக்கு நான் எழுதிய மறுமொழி:

வேறு தளத்தில் எழுதினதிற்கு மன்னித்து கொள்ளுங்கள் ஏனென்றால் எல்லா தளத்திலும் "Register" பண்ண விரும்பவில்லை.

//திரித்துவம் என்ற கருத்தை நீங்கள் யாராவது  விளக்கிவிட்டால் நான் ஏன் இதுபோல் பதிவுகளை தரப்போகிறேன்?  அப்படி விளக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அதை நம்பாதவர்களை பிசாசு என்று தீர்க்கிறீர்களே  அதுவலலவா எனக்கு வேதனையை தருகிறது. //

நான் எப்போது அப்படி எழுதினேன் என்று தெரியவில்லை. வேதத்துக்கு புறம்பான காரியங்களை "Inspire" பண்ணுவது பிசாசு என்றுவேண்டுமானால் சொல்லியிருப்பேன். இயேசுவினுடைய தேவத்துவத்தை மறுப்பவர்களுக்கு பின்னே இருப்பது பிசாசு என்றுகூட சொல்லியிருப்பேன்

//தேவன் அவ்வாறு செய்வதில்லைதான் ,  ஆனால் மனுஷர்கள்  அறிவீனமான காரியங்களை செய்து தேவ திட்டத்துக்கு விரோதமாக செயல்படும்போது தேவன் மனஸ்தாபபட்டு பலமுறை  தனது  செய்கையை மாற்றியிருக்கிறார்.//

அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்று எழுதியிருகிறதே!. தேவனுக்கு "ஆள்தத்துவம்" உள்ளவர் ஆகையால் அவருடைய வார்த்தையை மீறும்போது அவர் மனஸ்தாபப்படுவார், விசனப்படுவார். அதற்காக அவர் "அச்சச்சோ இப்படி ஆயிடுச்சே!"  என்று "Reactive" ஆக செய்தார் என்று எப்படி சொல்லுகிறீர்கள்?

ஏரோதும் , பிலாத்துவும் செய்தது தேவனுக்கு விரோதமான செயல். அதை குறித்தும் தேவன் விசனப்பட்டு இருப்பார் ஆனால் இதை முன் குறித்தது தேவனே!  "He was not caught by surprise!" Infact Nobody Can surprise God.

அப்போஸ்தலர் 4:27-28 அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன் குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்.


/////தேவன் சிருஷ்டிப்புக்கு முன்னமே "திரியேக" தேவன். ///  தங்களின் இந்த கருத்துக்கு எனக்கு வசன ஆதாரங்கள் கொடுங்கள், நான் திரித்துவம் சம்பந்தமான எனது கருத்துக்களை உடனே இந்த தளத்தில் இருந்து நீக்கிவிடுகிறேன்.//

சிருஷ்டிப்பின் போதும் தேவன் ஒன்றுக்கு மேற்பட்ட ஆள்தத்துவம் உள்ளவராய் இருந்தார்

ஆதியாகமம் 1:26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக..."

ஆதி என்பது நேரம் "Before Time" உருவாவதற்கு முன்னமே இருந்த நேரம்(?) அப்போதே வார்த்தை "இருந்தது". அது தேவனிடத்தில் இருந்தது Means வார்த்தை வேறு தேவன் வேறு ஆனால் வார்த்தையும் தேவனே

யோவான் 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.


உலகம் உருவாவதற்கு முன்னமே அவர் குமாரன் தான்.

நீதிமொழிகள் 8

22. கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.

23. பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன்.

24. ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.

25. மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,

26. அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.

27. அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,

28. உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும்,

29. சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,

30. நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.


நிங்களே இது ஒன்றை நிருபித்து விட்டால் இந்த பகுதியை நீக்கி விடுகிறேன் என்றதால் இதோடு நிறுத்துகிறேன். அன்பு சகோதரரே, என்னுடை நோக்கம் குற்றம் கண்டு பிடிப்பது இல்லை ஆனால் தவறான ஒரு செய்தியை எல்லோரும் "Follow" பண்ணகூடாது என்பதால் தான்

கிறிஸ்துவுக்குள்
ஜான்



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 


யௌவன ஜனம் தளத்தின் முலமாக அறிமுகபடுத்தப்பட்ட இறைவன் தளத்தில் இந்த விவாதம் தொடருகிறது. இது சகோதரார் சுந்தர் எழுதிய மறுமொழி :


நமது தளத்தில் உள்ள பதிவுக்கு நமது தளத்தில் பின்நூட்டமிடுவது தான் நியாயமான செயல். இங்கு யாரும் மற்றவர்களை  திட்டுவதோ சாபமிடுவதோ கிடையாது. ஆகினும்  சகோ. ஜான் அவர்கள் ஏன்  வேற்று தளத்தில்போய் என் கருத்துக்கு  பின்நூட்டமிட்டுள்ளார்  என்பது புரியவில்லை. பிற தளத்தில் உள்ள பதிவை பதிவிட்டு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்லைதான் ஆகினும் தாங்கள் சொல்வது என்ன வென்பதை திட்டமாக விளக்க தெரியாதவர்கள், அடுத்தவர்கள் பதிவை "தவறு" என்றும் 'அதை நீக்கு" என்றும் திட்டமாக  சொல்வதற்கும் யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள் என்பது எனக்கு புரியவில்லை. 
 
திரித்துவம் என்ற கருத்தை நீங்கள் யாராவது  விளக்கிவிட்டால் நான் ஏன் இதுபோல் பதிவுகளை தரப்போகிறேன்?  அப்படி விளக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அதை நம்பாதவர்களை பிசாசு என்று தீர்க்கிறீர்களே  அதுவலலவா எனக்கு வேதனையை தருகிறது.           
 
sundar wrote:
 //இதே காரியங்கள்தான் தேவனின் மீட்பின்  திட்டத்தில் செயல்பாடும். தேவன் மூவரோ நால்வரோ இருவரோ அல்ல! அவர் ஒருவரே! தன்னால் உருவாக்கபட்ட மனிதன் பாவத்தில் விழுந்தபோது, தனது மூன்றுவிதமான வல்லமைகளை தனித் தனியாக பிரித்து செயல்பட்டு மனிதனை பாவத்தில் இருந்து மீட்க சித்தமானார்.//
 
சகோ. ஜான் எழுதியது:
////தேவன் விளைவை எதிபாராமல் இருந்து ஒரு காரியம் நடந்த பின்பு "அச்சச்சோ இப்படி ஆயிடுச்சே!" என்று சொல்லி எதையாவது செய்கிறவர் அல்ல!. ////
 
தேவன் அவ்வாறு செய்வதில்லைதான் ,  ஆனால் மனுஷர்கள்  அறிவீனமான காரியங்களை செய்து தேவ திட்டத்துக்கு விரோதமாக செயல்படும்போது தேவன் மனஸ்தாபபட்டு பலமுறை  தனது  செய்கையை மாற்றியிருக்கிறார்.  
 
பூமியில் மனிதர்களை படைத்த தேவன் அவர்கள் அக்கிரமம் பெருகியபோது 
அவர்களை படைத்ததற்காக மனஸ்தாபபட்டு அவர்களை அழிக்கிறார்  

ஆதியாகமம் 6:6 தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது

சவுலை ராஜாவா க்கியது தேவனே பின்னர் அவனின் மதியீனமான செயலை பார்த்து அவனை ராஜாவாக்கியதர்க்கு மனஸ்தாபபட்டார்  
 
I சாமுவேல் 15:11 நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது
 
"தேவன் தான் செய்த காரியத்துக்கு மனஸ்தாபபட்டார்" என்று வேதமே சொல்லும்போது  தாங்கள் எதன் அடிப்படையில்  இவ்வாறு சொல்கிறீர்கள் என்பதை விளக்குங்கள்.     
 
Bro. ஜான் wrote
///தேவன் சிருஷ்டிப்புக்கு முன்னமே "திரியேக" தேவன். ///
 
தங்களின் இந்த கருத்துக்கு எனக்கு வசன ஆதாரங்கள் கொடுங்கள், நான் திரித்துவம் சம்பந்தமான எனது கருத்துக்களை உடனே இந்த தளத்தில் இருந்து நீக்கிவிடுகிறேன்.
 
Bro. john wrote: 
////பாவத்தில் மனிதன் விழுந்தபோது அவர் முன்றாக பிரியவில்லை.
  • "அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்." (I பேதுரு 1:20)////
மனுஷன்  பாவத்தில்  விழும்வரை  அவர் "எலோஹீம்" என்னும் ஒரே தேவனாகத் தான் இருந்தார். ஒருவேளை தாங்கள் சொல்வதுபோல்  இயேசு முன் குறிக்கப் பட்ட்வராக இருந்தாலும், தேவன் உலகை உண்டாக்கி மனிதனை படைக்கும் முன்னே "தான் படைக்கபோகும் அந்த மனுஷன் பாவம் செய்வான், அவனுக்காக தன்  வார்த்தையை  மாம்சமாக்கி கடைசி காலத்தில் உலகுக்கு அனுப்பவேண்டும்" என்ற தனது திட்டத்தின் அடிபடையில் இந்த வசனங்கள் சொல்லப்பட்டது.       
 
sundar Wrote: 
//மூளையின்றி ஒன்றும் செய்ய முடியாது  அதபோல் தேவ ஆவியானவர் அனைத்திற்கும் மூளையாக செயல்படுகிறார். அவரே அனைத்திலும் அனைத்தும் ஆனவர். அவரின்றி எந்த செயலும் இங்கு இல்லை. ஆனால் இவர் ஆற்றல் எனப்படும் சக்தியுடனோ அல்லது வார்த்தை எனப்படும் வல்லமயுடனோ சேர்ந்துதான் காரியங்களை செய்யமுடியும்.//
 
Bro. John Wrote
////இது மகா தவறு!
"ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது." (கொலோசெயர் 2:9)////
 
சகோதரரே நான் தேவ ஆவியானவரை பற்றி நான் சொன்னால் நீங்கள் இயேசுவை பற்றி சொல்லப்பட்ட வசனத்தை காட்டி அது மஹா தவறு என்று சொல்கிறீர்கள். இயேசுவே தனது வாயாலேயே "நானும் என் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்" என்று சொன்னபடியால் மாம்சமாக இருந்த இயேசுவினுள் பிதாவாகிய தேவன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் எல்லோருமே வாசம் செய்தனர்.

யோவான் 10:38   பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.

பிதா எதை செய்யசொன்னாரோ அதைதான் இயேசு செய்தார். 

யோவான் 14:10  என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்

பிதாவாகிய தேவன் அவருள் தங்கி  இருந்து கிரியை செய்தபடியால் அவருக்குள் தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம்  வாசமாயிருந்தது  என்ற கருத்து  சரியானதே. அதற்கும் நமது  கட்டுரைக்கும் தொடர்பில்லை.   
 
Bro. John Wrote: 
///தேவத்துவம் முவருக்குள்ளும் (Father , Son and Holy Spirit)  பரிபூரணமாக வாசமாய் இருக்கிறது.////
 
இது வசன ஆதாரம் இல்லாத தேவனை பற்றிய தங்களின் தவறான புரிதல்.
 
யோவான் 10:29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்
 
இப்படி  இயேசுவே  தனது  வாயால்  "என்  பிதா எல்லோரையும்விட பெரியவர்"  என்று சொல்லியிருக்கும்போது , தங்கள் மனித கூற்றை நான் ஏற்க்கவேண்டிய அவசியமில்லை. வசனத்தின்  அடிப்படயில் பிதாவானவர் ஏதாவது ஒரு விதத்தில் இயேசுவைவிட பெரியவர் என்றே நான்  நம்புகிறேன்.  
 
எல்லோரும் சமமானவர்கள் என்பதெல்லாம் வெறும்கற்ப்பனை. அவரவர் செய்ய வேண்டிய பணிகளை அவரவர் செய்தனர்! எல்லோரும் எல்லாவற்றையும் செய்ய முடியாது! 
 
பிதாவின் சித்தம் செய்யாமல் யார் சித்தம் செய்தாலும் பரலோகம் இல்லை! 
இயேசுவின் நாமத்திலன்றி பிதாவின் நாமத்தில் பாவ மன்னிப்பு இல்லை!
பரிசுத்த ஆவியினவரின்றி இயேசுவால்  மீட்பின் நாளுக்கென்ற முத்திரை இல்லை.
 
ஆனால் மூன்று காரியத்தையும் செய்யும் தேவன் ஒருவரே! அவரவருக்கென்று முக்கியமான செயல்பாடுகள் இருந்தன எல்லோருமே தேவனின் சித்தத்தை நிறைவேற்றுகின்றனர்.  
 
அவ்வாறு எல்லோருக்கும் எல்லாம்  முடியும் என்றால் இயேசுவின் இரண்டாம் வருகையை குறித்த நாளைபற்றி குறிப்பிடும்போது "பிதா ஒருவரே அறிவார்" என்று இயேசு சொல்லவேண்டிய அவசியமில்லை.
 
Bro. John wrote: 
////திரியேக தேவனை கூறுபோட முடியாது! தேவனை முன்றாக கூறு போட்டால் இயேசு அதிலே ஒரு பகுதி என்று சொல்ல முடியாது. ////
 
சகோதரரே தாங்கள் மட்டும் சொந்த கருத்துக்களை பதிவிட்டு விட்டு என்னிடம் மட்டும் "வசன ஆதாரம் கொடு" என்று கேட்ககூடாது. தேவனை "திரியேக தேவன்" என்று குறிப்பிடும்  வார்த்தை வேதத்தில் எங்கே இருக்கிறது என்று கூறுங்கள்
 
தேவனின்  வார்த்தையாக  இருந்து  பின்னர் மாம்சமாக பிரிந்த இயேசு தனத பணியை முடித்தபின்னர்  பிதாவின் வலது பாரிச்த்தில்தான் சென்று அமர்ந்தாரே தவிர அவரோடு ஒன்றாகவில்லை என்று   வசனம்  சொல்வதை  தாங்கள் அறிய வேண்டும். எனவே பாவத்தில் இருந்து மனிதனை மீட்கும் திட்டத்தில், இயேசு தேவனை விட்டு பிரிந்தது பிரிந்ததுதான். இங்கு நாம்அவரை கூறுபோடவில்லை.
 
 
Sundar Wrote:
//ஆதியில் ஜலத்தின் மீது அசைவாடி வார்த்தை மூலம் அனைத்தையும் படைத்த தேவ ஆவியானவர், மனிதன் பாவத்தில் விழுந்தபோது எந்த வார்த்தையால் உலகையும் அதிலுள்ளவைகளும்  படைத்தாரோ அந்த வார்த்தையே பாவத்துக்கான பலியாக்கவேண்டிய  நிர்பந்தத்தில் வார்த்தயாகிய இயேசுவை தனியாக பிரித்து மாம்சமாக்க  தீர்மானித்தார். //
 
Bro. John Wrote:
தேவனுக்கு எந்த ஒரு நிர்பந்தமும் இல்லை அவரை யாரும் நிர்பந்திக்கவும் முடியாது. He is Sovereign ! ////
 
தேவன் "சர்வவல்லவர்"என்பதும்"சர்வவியாபி" அவரால் எல்லாம்கூடும்  என்பதும் உண்மை! அதை யாரும் இங்கு மறுக்கவில்லை. ஆனால் மனிதன் பாவத்தில் வீழ்ந்தபோது  அவனை பாவத்திலிருந்து  மீட்கும்திட்டத்தில் எப்படி ஆண்டவராகிய இயேசு பரலோக மகிமையை துறந்து அடிமைகோலம் பூண்டாரோ அதேபோல் தேவன் சில நிர்பந்தங்களை சந்திக்கவேண்டிய நிலை ஏற்ப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது!
 
யோபுவை பற்றி தேவனே அவன் உத்தமன் சன்மார்க்கன் என்று சாட்சி கொடுக்கிறார் பின்னர் சாத்தான் வந்து அவனை சோதிக்கும்படி நிர்பந்திக்கும் போது அதற்க்கு உடன்பட்டு யோபுவை சோதனைக்கு ஒப்புகொடுக்கிறார்.  
 
Sundar Wrote: 
//பின்னர் காலம் நிறைவேறும்வரை  பழைய ஏற்பாட்டு காலம் முழுவதும் தேவ ஆவியானவரும் கர்த்தரின் ஆவியானவரும்சேர்ந்து கிரியைகளின் அடிப்படையில் செயல்களை செய்து வந்தனர்!//
 
Bro. John Wrote
/////தேவன் எந்த சூழ்நிலையிலும் கிரியையின் அடிப்படையில் செயல்களை செய்யவில்லை. கிரியைகள் விசுவாசத்தின் வெளிப்பாடாகும். ரட்சிப்பது விசுவாசமே! (இது பழைய ஏற்பாட்டுக்கும் பொருந்தும்)
 
சகோதரர் ஜான் அவர்களே இங்கு கிரியை மற்றும் கிருபை இரண்டையும்  போட்டு குழப்பவேண்டாம் கிருபையை காட்டி கட்டி கிரியை ஒதுக்கவும் வேண்டாம்.  அதை பற்றிய தெளிவான கட்டுரைகள் கீழ்கண்ட சுட்டிகளில்
உள்ளன.  
 
பழை ஏற்பாட்டு காலத்தில் எல்லாம் கிரியையின் அடிப்படையிலேயே செய்யப்பட்டது என்பதற்கு  பலியிடுதலில் இருந்து பத்துகற்பனைவரை அனேக ஆதாரம் உண்டு தங்களுக்கு புரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள்
 
யாக்கோபு 2:25  ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?

யாக்கோபு 2:24
ஆதலால், மனுஷன் விசுவாசத்திலேமாத்திரமல்ல,
கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே.
 
என்று சொல்வதோடு: 
 
கலாத்தியர் 3:12 நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.
எசேக்கியேல் 20:11 என் கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்து, என் நியாயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; அவைகளின்படி செய்கிற மனுஷன் அவைகளால் பிழைப்பான்.

என்பதுவே பழைய ஏற்பாட்டு தெளிவான  வாக்குத்தத்தம்.   
 
இயேசுவின் மரணத்துக்குபின்னரே கிருபையின்காலம் ஆரம்பமாகி  விசுவாசத்தின் அடிப்படையில் நீதி உண்டானது. ஆகினும் கிரியை இல்லாத வெறும் விசுவாசம் ஒன்றுக்கும் உதவாது!
 
யாக்கோபு 2:26  ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.

யாக்கோபு 2:20
வீணான மனுஷனே,
கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ
 
 
Sundar  Wrote:
//இவர்கள் மூவரும் ஒரே பணியை செய்யும் தனித்தனி தேவனின் வெவேறு வல்லமைகளே! ஒவ்வொருவரையும் நாம்  தனித்தனி ஆளத்துவமாக அனுபவித்து உணர முடியும்!//
 
Bro  John Wrote:
 ////நாம் அனுபவிப்பதற்காக வல்லமைகள் "ஆள்தத்துவம்" உள்ளவைகள் ஆக மாறவில்லை.///
 
"அவரை தனித்தனியாக அனுபவித்து உணரமுடியும்" என்றுதான் சொன்னேநேயற்றி அதற்காகதான்   அவர் அப்படி ஆள்தத்துவம் உள்ளவரானார்  என்று எங்கும் எழுதவில்லை. பாவத்தில்வீழ்ந்த மனிதனை மீட்கும்  திட்டத்துக்காக மூன்றாக பிரித்தார் என்றே எழுதியுள்ளேன்.    
 
Bro.. John Wrote:
// தேவனின் சுபாவத்திலே 3   "ஆள்தத்துவம்"  உள்ளவர்.//
 
இப்படி தேவனுக்கு மூன்று ஆள்தத்துவம் மட்டும்தான்  உண்டு என்று உங்களுக்கு யார் சொன்னது? அல்லது எந்த வசனம் அவ்வாறு கூறுகிறது அல்லது அட்லீஸ்ட் தேவன் உங்களுக்கு அதை வெளிப்படுத்தினாரா சகோதரரே!
 
நான் சொல்கிறேன் தேவனுக்கு ஏழு ஆவிகள் உண்டு!
 
வெளி 4:  தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன
 
எப்படி ஒரு ஆவியுள்ள   மனிதன் ஒரு ஆளாக இருக்கிறானோ அதுபோல்  ஏழு ஆவியை கொண்ட தேவன் எழு ஆள்தத்துவம்  உள்ளவர் என்று நான் சொல்கிறேன். அவரின் தன்மையை குறைத்து மதிப்பிட்டு  மட்டுபடுத்தும் நீங்கள் அதை மறுக்க முடியுமா?
 
 Bro. John Wrote
/////வல்லமைகைளுக்கு இடையில் "நான்", "நீர்" என்ற உறவு இருக்க வாய்ப்பில்லை. வல்லமைகள் ஒன்றிடம் ஒன்று ஜெபிக்காது ///
 
சகோதரரே! வெறும் மண்ணை அள்ளி தன் சுவாசத்தை ஊதி தேவனால் உயிர் கொடுக்கப்பட்ட நாமே  தனி ஆவியுள்ளவர்களாக தேவனிடம்  ஜெபிபவர்களாக  இருக்கும்போது, தேவன் தனது வார்த்தை என்னும் கருப்பொருளை தனியாக பிரித்து அதை மாம்சமாக்கும்போது  இதுபோல் "நான் நீ என்ற உறவு இருக்காது" என்றெல்லாம் தங்கள்  விளக்கம் எழுதுவது ஏற்றதா?  என்று சற்று சிந்தியுங்கள்.
 
சுந்தர் Wrote: 
//இந்த கருத்தின் அடிப்படையில் நீங்கள் எந்த வசனத்தை கொண்டு பொருத்தி பார்த்தாலும் சரியாகவே இருக்கும்//
 
Bro. John Wrote:
///சகோதரரே நீங்கள் உங்களுடைய முழு பதிவுக்கும் ஒரு வசன ஆதாரமும் குறிப்பிடவில்லை. ///

முடிந்தஅளவு தங்கள் மறுப்பக்கு விளக்கத்துடன்  வசன  சுடடுதலும் கொடுத்துள்ளேன் இன்னும்  எந்த கருத்துக்கு தாங்கள் வசன ஆதாரம் கேட்கிறீர்கள் என்று தெரிவித்தல் முடிந்த வரை கொடுக்க தயாராக இருக்கிறேன். 
 
மேலும் வசன ஆதாரத்துடன் ஒரு கருத்தை  சொல்லி விட்டால் அதை அப்படியே ஏற்றுக் கொள்வீர்களா? அல்லது அதை புரட்டி அது இப்படியல்ல இப்படி என்று சொல்வீர்களா? சகோதரர் அன்பு தளத்தில் அனைத்தும் வசன ஆதாரத்துடன்தான் எழுதப்படுகிறது அதை அப்படியே ஏற்றுக்கொள்வீர்களா?  
 
யோவான் 8:51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு 19:17   நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.
மத்தேயு 4:10  உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
 
இயேசுவின் வாயில் இருந்து புறப்பட்ட இந்த வசனங்களை எல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்வீர்களா?
 
 Bro. John Wrote 
 /////இது தவறான உபதேசம்! தயவுசெய்து இதை நீக்கி விடுங்கள்./////
 
உங்கள் உபதேசம் என்ன? திரித்துவம் என்றால் என்ன? என்பதை வசன ஆதாரத்துடன் விளக்கமாக எழுதுங்கள் அடுத்து  தாங்கள் எழுதிய வார்த்தை களுக்கு  நான்  கேட்ட வசன ஆதாரம் கொடுத்தால் அதன்பின்னர் எனது கருத்து தவறா சரியா என்பதை ஆராயலாம்.  
 
BRO. JOHN WROTE
////2000 வருடங்களாக வேத அறிஞர்களுக்கு தெரியாத ஒன்று எனக்கு தெரிந்து விட்டது என்று நினைக்காதீர்கள்///// 
 
2000௦௦௦ வருடம் யாருக்கும் தெரியவில்லை என்றால் அது தெரியாமலே போய்விடுமா? அல்லது அதை யாருக்கும் தெரிவிக்ககூடாது என்று தேவன் முடிவு செய்திருக்கிறாரா?  இதில் எதுவும் பெரிய ரகசியம் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை சகோதரரே.  பிதா/ குமாரன்/ பரிசுத்த ஆவி  இம்மூவரும் தனிதனி ஆள்தத்துவம் உள்ளவர்கள் என்பதை சந்தேகமற அறிந்தாகிவிடது  அதே நேரத்தில்
 
I கொரிந்தியர் 12:6 எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.
 
தேவன் தாங்கள்  சொல்வதுபோல் "மூவரின் தொகுப்பு" என்று எங்கும் சொல்லப் படாமல் "அவர் ஒருவரே" என்றும் வசனம் தெளிவாக சொல்கிறது.  பிறகு எனக்கு அருளப்பட்டவைகளின் அடிப்படையில் நான் இவ்வாறு  தீர்மானிப்பதில் எந்த தவறான உபதேசமும் இல்லை என்றே கருதுகிறேன்.   
 
Bro. John Wrote:
////இது ரகசியம் புரிந்தவரையில் பிடித்து கொண்டு புரியாதவகளை குறித்து "கதை" எழுதாமல் இருப்பது நமது விசுவாச வாழ்கைக்கு உதவும்.////
 
லூக்கா 8:17 வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளுமில்லை.

என்ற வசனத்தை தாங்கள் வாசிக்கவில்லையா?   நீங்கள் வேண்டுமானால் எந்த விளக்கமும் கேட்காமல் யாரோ சொன்னதை அப்படியே நம்பலாம்  ஆனால் நான் எந்த  ஒரு மனுஷனின் கருத்தையம் நம்புவதற்கில்லை மேலும் நான் அறிந்த ஒரு காரியத்தை  தங்களைப்போல "புரியவில்லை" என்று  சொல்வதை விரும்பாமல்  எல்லாவற்றிக்கும் தன்னிடம் பதில்வைத்துள்ள தேவனிடம்வேண்டி பெற்றுகிறேன் காரணம்   மாற்று கருத்துடைய சகோதரர்களுக்கும் பிற மத சகோதரர்களுக்கு நாம் சொல்லும் ஒருகருத்தை அவர்கள்  பரியாசம் செய்யாதபடிக்கு அவரகளுக்கு புரியவைக்க வேண்டியது அவசியமாகிறதே! 
 
வேதவசனத்தின்படியே பேசுவோம் என்று சொல்லும் நாம் வேதத்தில் எழுதப்படாத ஆனால் உண்மை என்று உறுதியாக நம்பும் ஒரு காரியத்தை சொல்லிவிட்டு, பின்னர் அதற்க்கு விளக்கம் தெரியாது என்று சொல்வோமாகில் அவரவர் இதுபோல் வேதத்தில் இல்லாத ஒரு கருத்தை  சொல்லலாமே.     
 
ஓன்று நீங்கள் சொல்லும் கருத்தை நீங்களே  சரியாக விளக்குங்கள் அல்லது உங்களுக்கு தெரியாத ஒரு கருத்துக்கு தேவனிடம் அமர்ந்து சரியான விளக்கம் பெற்று எழுதும் என் வார்த்தையை நம்புங்கள்.  மற்றபடி"எழுதியதை  நீக்கு" என்று தேவனைப்போல வந்து கட்டளையிட நீங்கள் தேவனல்ல!  
 
நான் எழுதிய இந்த கருத்துக்களால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் திரித்துவத்தை  ரகசியம் என்று சொல்லிக்கொண்டு அதன் அடிப்படையில் பிறரை நியயம்தீர்த்துகொண்டு தேவனுக்கு விரோதமான காரியங்களை செய்யும்  சிலருக்கு வேண்டுமானால்  ஐயோ உண்மை தெரிந்துவிட்டதே என்று பதறல் வரலாம்.  மற்றபடி என்னை பொறுத்தவரை "நான் ஆராதிக்கும் தேவன் ஜீவனுள்ளவர்"  எந்த கேள்விக்கு பதில் தேவை என்றாலும் அதை தேவனிடம் இருந்து என்னால்  பெறமுடியும் என்ற நம்பிக்கை எனக்குஉண்டு!முடியாதவர்கள் விசுவாசத்தை மட்டும் காத்துகொண்டு விலகி போகலாம்! விபரம் தெரியாத விமர்சனம் யாருக்கும் தேவையில்லை!  
  
(வேதத்தில் இல்லாத் திரித்துவத்துக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து, இவ்வளவு நேரம் செலவழித்து விளக்கம் கொடுப்பதுவே  தேவைதானா என்பது புரியவில்லை)  
 
 


__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி-12:28)


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

யௌவன ஜனம் தளத்தின் நிர்வாகி என்ற முறையில் இந்த தள பதிவுகளின் காப்புரிமைக்கு நான் பொறுப்பாளியாக இருக்கிறேன்;இதுகுறித்து நாகரீகத்துடனும் தாழ்மையுடனும் அறிவிப்பு செய்த பின்னரும் சிலர் அறியாமையினாலோ அல்லது காழ்ப்புணர்ச்சி காரணமாகவோ நம்முடைய தொடுப்புகளைத் தராமலே நம்முடைய எழுத்துக்களை எடுத்துப்போட்டு விமர்சிக்கின்றனர்;இது வாசகர் மத்தியில் வீணான குழப்பங்களைக் கொண்டு வரும் என்றும் இதன்பாதிப்பை நாம் இருவருமே சந்திக்க வேண்டும் என்றும் மீண்டும் ஒருமுறை எச்சரிக்கிறேன்..!

இணையதள எழுத்துப் பணியில் கடைபிடிக்கவேண்டிய நாகரீகம்

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=41233466


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

நம்முடைய தளத்தைப் பொறுத்தவரையிலும் மற்றவர்களுடைய கருத்துக்களை மேற்கோள் காட்டி எதை எழுதினாலும் அதற்குரிய தொடுப்பைத் தருவதை வழக்கமாக வைத்துள்ளோம்;ஆனால் இந்த சிலர் இதனை கடைபிடிப்பது இல்லை;இது வீணான குழப்பங்களுக்குக் காரணமாக அமையும் என்பதால் நம்முடைய தளத்தைப் பார்வையிட வரும் வாசகர்கள் இந்த தளத்திலிருந்து எந்தவொரு வரியையும் மேற்கோள் காட்டினாலோ எடுத்து மறுபதிப்பு செய்தாலோ அதற்குரிய தொடுப்பைத் தரவேண்டும் என்று வேண்டுகிறேன்.

உதாரணமாக இங்கே நண்பர் ஜாண் அவர்கள் பின்னூட்டமிடுவதற்குத் தேர்ந்தெடுத்த மாற்று தளத்தின் இந்த கட்டுரைக்கு தொடுப்பைத் தராவிட்டாலும் நான் இன்று காலையில் அதனைத் தேடியெடுத்து அதற்குரிய தலைப்புடன் தொடுப்பை இணைத்திருக்கிறேன் என்பதை கவனிக்கவும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

நம்முடைய அன்புக்குரிய சகோதரர் ஜாண் அவர்களின் இந்த பின்னூட்டமானது இறைவன் தளத்தின் சுந்தர் அவர்கள் தனது தளத்தில் எழுதிய பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் எனும் கட்டுரைக்கான பதிலாகும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//இதே காரியங்கள்தான் தேவனின் மீட்பின்  திட்டத்தில் செயல்பாடும். தேவன் மூவரோ நால்வரோ இருவரோ அல்ல! அவர் ஒருவரே! தன்னால் உருவாக்கபட்ட மனிதன் பாவத்தில் விழுந்தபோது, தனது மூன்றுவிதமான வல்லமைகளை தனித் தனியாக பிரித்து செயல்பட்டு மனிதனை பாவத்தில் இருந்து மீட்க சித்தமானார்.//

தேவன் விளைவை எதிபாராமல் இருந்து ஒரு காரியம் நடந்த பின்பு "அச்சச்சோ இப்படி ஆயிடுச்சே!" என்று சொல்லி எதையாவது செய்கிறவர் அல்ல!. தேவன் சிருஷ்டிப்புக்கு முன்னமே "திரியேக" தேவன். பாவத்தில் மனிதன் விழுந்தபோது அவர் முன்றாக பிரியவில்லை.

  • "அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்." (I பேதுரு 1:20)

//மூளையின்றி ஒன்றும் செய்ய முடியாது  அதபோல் தேவ ஆவியானவர் அனைத்திற்கும் மூளையாக செயல்படுகிறார். அவரே அனைத்திலும் அனைத்தும் ஆனவர். அவரின்றி எந்த செயலும் இங்கு இல்லை. ஆனால் இவர் ஆற்றல் எனப்படும் சக்தியுடனோ அல்லது வார்த்தை எனப்படும் வல்லமயுடனோ சேர்ந்துதான் காரியங்களை செய்யமுடியும்.//

இது மகா தவறு!

  • "ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது." (கொலோசெயர் 2:9)


தேவத்துவம் முவருக்குள்ளும் (Father , Son and Holy Spirit)  பரிபூரணமாக வாசமாய் இருக்கிறது. திரியேக தேவனை கூறுபோட முடியாது! தேவனை முன்றாக கூறு போட்டால் இயேசு அதிலே ஒரு பகுதி என்று சொல்ல முடியாது.

//ஆதியில் ஜலத்தின் மீது அசைவாடி வார்த்தை மூலம் அனைத்தையும் படைத்த தேவ ஆவியானவர், மனிதன் பாவத்தில் விழுந்தபோது எந்த வார்த்தையால் உலகையும் அதிலுள்ளவைகளும்  படைத்தாரோ அந்த வார்த்தையே பாவத்துக்கான பலியாக்கவேண்டிய  நிர்பந்தத்தில் வார்த்தயாகிய இயேசுவை தனியாக பிரித்து மாம்சமாக்க  தீர்மானித்தார். //

தேவனுக்கு எந்த ஒரு நிர்பந்தமும் இல்லை அவரை யாரும் நிர்பந்திக்கவும் முடியாது. He is Sovereign !

  • "ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்? தனக்குப் பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? " (ரோமர் 11:33-35 )
  • "இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை மறிப்பவன் யார்? நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்? " (யோபு 9:12 )

    பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.(தானியேல் 4:35)
//பின்னர் காலம் நிறைவேறும்வரை  பழைய ஏற்பாட்டு காலம் முழுவதும் தேவ ஆவியானவரும் கர்த்தரின் ஆவியானவரும்சேர்ந்து கிரியைகளின் அடிப்படையில் செயல்களை செய்து வந்தனர்!//

தேவன் எந்த சூழ்நிலையிலும் கிரியையின் அடிப்படையில் செயல்களை செய்யவில்லை. கிரியைகள் விசுவாசத்தின் வெளிப்பாடாகும். ரட்சிப்பது விசுவாசமே! (இது பழைய ஏற்பாட்டுக்கும் பொருந்தும்)
  • "இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியையினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை." (ரோமர் 3:20)
  • "ஆதலால் மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்." (ரோமர் 3:28)
  • "ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்கு முன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை." (ரோமர் 4:2 )
  • "கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும்." (ரோமர் 4:4 )
  • "ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்." (ரோமர் 4:5)
  • "அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு.."(ரோமர் 4:6 )

    ஆபிரகாமும், தாவிதும் விசுவாசத்தினாலே இரடசிக்கப்படார்கள். எபிரெயர் 11 அதிகாரம் முழுவதையும் வாசிக்கவும்


    //இவர்கள் மூவரும் ஒரே பணியை செய்யும் தனித்தனி தேவனின் வெவேறு வல்லமைகளே! ஒவ்வொருவரையும் நாம்  தனித்தனி ஆளத்துவமாக அனுபவித்து உணர முடியும்!//

நாம் அனுபவிப்பதற்காக வல்லமைகள் "ஆள்தத்துவம்" உள்ளவைகள் ஆக மாறவில்லை. தேவனின் சுபாவத்திலே 3   "ஆள்தத்துவம்"  உள்ளவர். வல்லமைகைளுக்கு இடையில் "நான்", "நீர்" என்ற உறவு இருக்க வாய்ப்பில்லை. வல்லமைகள் ஒன்றிடம் ஒன்று ஜெபிக்காது 

//இந்த கருத்தின் அடிப்படையில் நீங்கள் எந்த வசனத்தை கொண்டு பொருத்தி பார்த்தாலும் சரியாகவே இருக்கும் //

சகோதரரே நீங்கள் உங்களுடைய முழு பதிவுக்கும் ஒரு வசன ஆதாரமும் குறிப்பிடவில்லை.  இது தவறான உபதேசம்! தயவுசெய்து இதை நீக்கி விடுங்கள். 2000 வருடங்களாக வேத அறிஞர்களுக்கு தெரியாத ஒன்று எனக்கு தெரிந்து விட்டது என்று நினைக்காதீர்கள் . இது ரகசியம் புரிந்தவரையில் பிடித்து கொண்டு புரியாதவகளை குறித்து "கதை" எழுதாமல் இருப்பது நமது விசுவாச வாழ்கைக்கு உதவும்.



-- Edited by John on Wednesday 16th of February 2011 08:13:08 AM

-- Edited by John on Wednesday 16th of February 2011 08:41:56 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard