Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சபையில் எல்லோரும் எல்லாம் செய்யலாமா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: சபையில் எல்லோரும் எல்லாம் செய்யலாமா?
Permalink  
 


chillsam@Tcs
  • "விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்." (மாற்கு.16:16)
மேற்கண்ட வாக்கியம் இரட்சிக்கும் இரட்சகர் திருவாய் மலர்ந்து உரைத்தாகும்.
  • "பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாகத் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்."(லூக்கா.7:30)
கீழ்ப்படிதலை நற்கிரியைகள் ஒருபோதும் முந்திக்கொள்வதில்லை; கீழ்ப்படிதலே நற்கிரியைதனை சார்ந்ததாகும்.

கீழ்ப்படிபவனே கிறித்தவன்;
கீழ்ப்படிவதே விசுவாசத்தின் கிரியையாகும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

chillsam Wrote on 13-02-2011 08:01:39:

இந்த வேதப்பகுதியை மகா தீவிரமாக எடுத்துக்கொண்டு எளிமையானவர்களைக் குழப்புவதில் முதலிடம் பெறுவோர், நாமகரணக் கூட்டத்தாரே; உதாரணமாக அவர்கள் "நீங்கள் எந்த நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றீர்கள் " என்று கேட்பர்; புது விசுவாசி சற்று தடுமாற்றத்துடன் ரொம்ப நல்லபிள்ளையாக,"பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமத்திலே " என்பார்; உடனே மார்க்கபேத ஓநாய் உடலை சிலிர்த்துக்கொண்டு ஊளையிடும், "ஐயய்யோ அது ஸ்தாபனக் கூட்டத்தின் போதனையாச்சுதே,நீங்கள் இயேசுவின் நாமத்திலே தான் ஞானஸ்நானம் பெறணும்" என்பதாக.சரி எப்படியோ ஆளைவிட்டால் சரி என்று மாற்றம் தேடி உள்ளே நுழைந்த புதிய விசுவாசி பழைய இடத்துக்குச் செல்ல மனமில்லாமலும் புதிய இடத்துக்குப் பொருந்தாலும் அரைகுறை மனதுடன் காலத்தை ஓட்டும்.

rajkumar_s Wrote@Tcs on 13-02-2011 20:47:58:

இப்படித்தான் நானும் இருக்கிறேன்... விவரம் தெரியாத வயதில் எடுக்கப்பட்ட ஞானஸ்நானம் ஒருபக்கம் உறுத்த மறுபக்கமோ... சூயாதீன திருச்சபைகளின் மார்க்க பேத கலாச்சாரத்தில் சிக்கிக் கொள்ள நேரிடுமோ என்ற அச்சமும் உண்டாகிறது. எங்கள் பகுதி சுயாதீனச் சபைகள் உபதேசங்களைக் கேட்கமட்டுமே விசுவாசிகளை ஊக்குவிக்கின்றன, சபை போதகரின் knowledge ‍ இல்லாமல் இரண்டு மூன்று விசுவாசிகள் கூடி ஜெபித்தாலே எங்கே நமக்குப் போட்டியாக சபை ஆரம்பித்து விடுவார்களோ என்ற பயத்தில்

அவர்களோடு பேசவேண்டாம் பழகவேண்டாம் என்று சபை அறிவிப்பிலேயே சொல்லி ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் அளவு நாட்டாமை தீர்ப்பே எழுதி விடுவார்கள்....இதே தான் ஞானஸ்நனத்திற்கும், ஓ நீ அந்த சபையிலயா எடுத்த நிச்சயமா நரகம் தான் போவே... என்ற தொணியில் பேசுவார்கள், இதையெல்லாம் பார்த்து தான் கிறிஸ்தவமே வேண்டாம் என்று விலகியோடினேன்.ஆனால் நிச்சயமாக இந்த வியாபார தந்திரங்களில் சிக்கிக்கொள்ளாமல் ஞானஸ்நானம் எடுப்பேன் என்று கிறிஸ்துவுக்குள் விசுவாசிக்கிறேன்.

எங்கள் சபைதான் உயிருள்ளது அந்த சபை செத்தது, இந்த பாஸ்டர் ஒரு அப்படிப்பட்டவர், இப்படிப்பட்டவர், csi ‍கு போகாதே, இங்கே வா... அங்கே போ... இந்த பாஸ்டர் worship ‍ நல்லா பன்றார். இவர் ஜெபிக்க ஆரம்பித்தாலே தெரித்து விழுவாய்... ஒருமுறை வந்து பாருங்கள் மாற்றத்தை அனுபவிப்பீர்கள் ...என்று விளம்பரம் செய்தாலும் சரி. இல்லை பேய்க்க்கூச்சல் போட்டாலும் சரி நான் எங்கும் போக மாட்டேன் அல்லது எதையுமே ஒதுக்கவும் மாட்டேன். எல்லாமே என் நேசரை துதிக்கும் இடங்களே என்பதிலும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை


//ஆனால் நிச்சயமாக இந்த வியாபார தந்திரங்களில் சிக்கிக்கொள்ளாமல் ஞானஸ்நானம் எடுப்பேன் என்று கிறிஸ்துவுக்குள் விசுவாசிக்கிறேன். //

அருமை நண்பர் இராஜ்குமார் அவர்களின் நேர்த்தியான விளக்கத்தைக் குறித்து அதிக மகிழ்ச்சி,வாழ்த்துக்கள்; தங்கள் பதிலை வாசிக்கும்போது எனக்குத் தோன்றியதை அப்படியே எழுதுகிறேன்; அது எனது வேண்டுகோளோ, உங்கள் மனதிலுள்ள விருப்பமோ, தேவ திட்டமோ அறியேன்; நீங்கள் பீகார் ஒரிஸ்ஸா போன்ற மிஷினரி பணித்தளங்களைப் பார்வையிட குழுவாகவோ தனியாகவோ செல்லுகிறீர்கள்; அங்கே நீங்கள் கலந்துகொள்ளும் ஏதோ ஒரு பெரிய மிஷினரி விழாவில் கலந்துகொண்டு ஆண்டவரைப் போலத் தாழ்த்தி உங்களைக் குறித்து அறியாத ஒரு அந்நிய பிரதேசத்தில் திருமுழுக்கு எனும் கடமையை நிறைவேற்றுகிறீர்கள்; ரோல்டு அவே,ரோல்டு அவே என்று சந்தோஷத்துடன் பாடிக்கொண்டு திரும்பி வருகிறீர்கள்; உங்கள் மனதில் தணியாத மிஷினரி பாரம் உண்டு; அதுவே உங்களை மெழுகுபோல‌ இத்தனை மென்மையானவராக மாற்றி வைத்திருக்கிறது; நான் எழுதியதில் ஏதேனும் சங்கடம் இருந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும்.

எல்லா சபைக் குழப்பங்களுக்கும் காரணம் இக்கரைக்கு அக்கரை பச்சை எனும் மக்களுடைய மாறுகிற மனோபாவம் தான்; உதாரணத்துக்கு ஏஜி சபைகளின் பெயரை சிஎஸ்ஐ என்று மாற்றிவிட்டால் அவ்வளவு கூட்டம் அங்கிருந்து வெளியேறிவிடும்; சிஎஸ்ஐ சபைகளின் பெயரை ஏஜி என்று மாற்றிவிட்டால் அவ்வளவு கூட்டமும் அங்கே குவியும்; என்னைப் பொறுத்தவரையிலும் பல பிரச்சினைகள் இருந்தாலும் சிஎஸ் ஐ சபையின் நிர்வாக அமைப்பே சிறந்தது; சபை என்பது பொதுவான அமைப்பாக இருக்கவேண்டும்; யூத ஜெப ஆலயங்களோ ஏன் உலகெங்கும் இருக்கும் மசூதிகளோ யாருக்கும் சொந்தமானதல்ல; அது அனைவருக்கும் பொதுவானது; அதன் நிர்வாகக் குழுவுக்கும் எந்தவிதமான தனி மரியாதையோ சலுகைகளோ கிடையாது.

ஆவியின் சபை என்று சொல்லிக்கொள்வோர், தங்கள் ஆவியை இதுபோன்ற காரியங்களில் காட்டவேண்டும்; ஒரு சபையிலிருந்து ஒருவர் வெளியேறினால் அதை நிரப்ப மற்றொருவர் ஆயத்தமாக இருப்பார்; இத்தனை சபைகள் இருந்தாலும் சிஎஸ்ஐ சபைகள் எதிலும் சோடை போகவில்லை; அது பெலமாகவே இருக்கிறது; பெந்தெகொஸ்தே சபைகளைவிட கத்தோலிக்க சபை நிர்வாகமானது பண விஷயங்களில் தூய்மையாக இருக்கிறது; கத்தோலிக்க சபை நிர்வாகம் சம்பந்தமான ஏதாவது பிரபலமான வழக்கு கோர்ட்டில் நடைபெறுகிறதா என்று யோசிக்கிறேன்; எனக்குத் தெரிந்த வரையில் சபையார் நிர்வாகத்துக்கு எதிராக எழும்பி கோர்ட்டுக்கு போவது என்பது நம்முடைய மார்க்கத்துக்கே இழுக்கு.

சுயாதீன சபைகளில் அதன் தலைவர்களிடமே அதிகாரம் குவிந்து கிடப்பதால் அவை வேகமாக உடைவதற்கு வாய்ப்பாக இருக்கிறது; இதற்கு முதல் காரணம் தலைமைத்துவ பண்புகள் இல்லாத - தனக்கு கீழுள்ளோரை நம்பாத தலைவர்களே ; இவர்கள் கையால் ஞானஸ்நானம் பெறுவோர்க்கு நிச்சயமாகவே அவருடைய குணமே வரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை; நம் தலையில் யார் கை வைக்கிறார்களோ அவர் ஏதோ ஒருவகையில் நம்மை அடிமைப்படுத்துகிறார்; எனவே எல்லாரிடமும் தலையைக் கொடுக்கவும் கூடாது; சிஎஸ்ஐ சபையிலேயே தற்போது கேட்பவருக்கு ஞானஸ்நானம் எனப்படும் திருமுழுக்கு கொடுக்கப்படுகிறது; எனவே திருமுழுக்கு பெறவிரும்புவோர் அங்கேயே தாராளமாக அந்த கடமையை நிறைவேற்றி அந்த சபையிலேயே சாட்சியாய் நிலைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 


//வேறு சிலர் ஏற்கெனவே எடுத்தது போதும் என்கிறார்கள், வேதத்திலும் யாரும் இரண்டு தடவை ஞானஸ்நானம் எடுத்ததாக இல்லை, மேலும் மூழ்கி எழுந்தால் தான் ஞானஸ்நானம் முழுமையடையும் என்று வேதத்தில் எங்குமே இல்லை//

சகோதரர் வேதத்தை சரியாக வாசித்துத்தான் கூறுகிறாரா?

  • அப்.19 ஆம் அதிகாரத்தில்
  • 1. அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில்,பவுல் மேடான தேசங்கள் வழியாய் போய்,எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு:
  • 2. நீங்கள் விசுவாசிகளானபோது,பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான்.அதற்கு அவர்கள் பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.
  • 3. அப்பொழுது அவன் அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ் நானம் பெற்றீர்கள் என்றான்.அதற்கு அவர்கள்:யோவான் கொடுத்த ஞானஸ் நானம் பெற்றோம் என்றார்கள்.
  • 4. அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனம் திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தை கொடுத்தானே என்றான்.
  • 5. அதை கேட்டபொழுது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
  • 7. அந்த மனுஷரெல்லாரும் ஏறக்குறையப் பன்னிரண்டு பேராயிருந்தார்கள்.
இங்கு 12 பேர் மீண்டும் ஞானஸ்நானம் பெற்றார்கள் என கூறப்பட்டுள்ளது .ஞானஸ்நானம் என்பது வெறும் ஒரு அடடையாளமாக இருந்திருந்தால் பவுல் கேட்டவுடனே அவர்கள் திரும்பவும் ஞானஸ் நானம் பெற்றிருக்கமாட்டார்கள். மேலும் அவர்கள் சாதாரணமானவர்களல்ல, சீஷர்கள். ஆனாலும் பவுல் கூறியதை கேட்டவுடன் எந்த வித மறுப்போ வினாவோ எழுப்பாமல் அவன் கூறியதற்கு கீழ்ப்படிந்தார்கள்.

ஞானஸ்நானத்தை பற்றி தெரியாமல் எடுத்திருந்தால் அதைப்பற்றி தெரிந்து கொண்டு திரும்பவும் எடுக்கவேண்டும் என்று இந்த வேத பகுதி தெளிவாக காட்டுகிறது.

அப்போஸ்தலனாகிய பேதுரு அப்.2 ஆம் அதிகாரம் 38 ல் எருசலேமில் வாசம் பண்ணும் மக்களை நேக்கி” நீங்கள் மனம் திரும்பி,ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியதுமல்லாமல் 40 ஆம் வசனத்தில் மாறுபாடான இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றான்.

மேலும் ஆண்டவரே யோவானிடம் யோர்தான் நதியில் மூழ்கிதான் ஞானஸ்நானம் எடுத்தார் என வேதம் தெளிவாக கூறும்போது அதைப்பற்றி விவாதிப்பது அர்த்தமற்றது.

இன்று நாம் இந்த ஞானஸ்நான காரியத்தில் இப்படி குழம்பிப்போய் கேள்விகேட்டுக்கொண்டிருக்கிறோம்..


ஞானஸ்நானத்தை சாதாரண ஒரு சடங்குதான் என்பவர்களிடமும் மாறுபாடான உபதேசங்களை போதிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருப்போம் அவர்களை விட்டு விலகி நம்மை இரட்சித்துக்கொள்வோம்.


நண்பர் பால் அவர்களின் கூற்று ஓரளவுக்கு சரியானது; ஆனால் அதற்காக அவர் குறிப்பிட்டுள்ள வேதப் பகுதியானது மிகவும் சர்ச்சைக்குரியதாகும்; ஏனெனில் அனைத்து மார்க்கபேதக் குழுக்களுமே ஒருவனை வஞ்சித்து தங்கள் ஆளாக மாற்றிக்கொள்ள இந்த வேதப்பகுதியையே பயன்படுத்துகிறது.

இந்த வேதப்பகுதியை மகா தீவிரமாக எடுத்துக்கொண்டு எளிமையானவர்களைக் குழப்புவதில் முதலிடம் பெறுவோர், நாமகரணக் கூட்டத்தாரே; உதாரணமாக அவர்கள் "நீங்கள் எந்த நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றீர்கள் " என்று கேட்பர்; புது விசுவாசி சற்று தடுமாற்றத்துடன் ரொம்ப நல்லபிள்ளையாக,"பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமத்திலே " என்பார்; உடனே மார்க்கபேத ஓநாய் உடலை சிலிர்த்துக்கொண்டு ஊளையிடும், "ஐயய்யோ அது ஸ்தாபனக் கூட்டத்தின் போதனையாச்சுதே,நீங்கள் இயேசுவின் நாமத்திலே தான் ஞானஸ்நானம் பெறணும்" என்பதாக.சரி எப்படியோ ஆளைவிட்டால் சரி என்று மாற்றம் தேடி உள்ளே நுழைந்த புதிய விசுவாசி பழைய இடத்துக்குச் செல்ல மனமில்லாமலும் புதிய இடத்துக்குப் பொருந்தாலும் அரைகுறை மனதுடன் காலத்தை ஓட்டும்.

இதைக் குறித்து இன்னும் விளக்கினால் அது தனி புத்தகமாகவே போடக்கூடியதாகும்; ஆனாலும் இணையதளத்தில் பல காரியங்களை அடியேன் எழுதாமல் தவிர்க்கக் காரணம் நம்முடைய ஆரோக்கிய உபதேசம் எந்த ஆங்கீகாரமும் பெறாமல் திரித்து பரப்பப்படுமே என்ற அச்சமே; அதையே ஒரு புத்தகமாக அச்சிட்டால் எனது கருத்துக்களுக்கு ஒரு பாதுகாப்பு கிட்டும் என்று எண்ணுகிறேன்; ஏனெனில் இங்கே நண்பர் விஜய் எழுதும் கட்டுரைகளே திரித்து விவாதிக்கப்படுகிறது.

இந்த ஞானஸ்நான விவகாரத்தில் நண்பர் இராஜ்குமார் அவர்களின் உறுதியான மனநிலை பாராட்டுக்குரியது; வேதத்திலும் யாரும் யாருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை, மாறாக அதன் தேவை உணரப்பட்ட போது சம்பந்தபட்ட ஆத்துமாவானது கீழ்ப்படிந்து அந்த மாபெரும் கட்டளையினை தன்னார்வத்துடன் நிறைவேற்றியது.

ஆனாலும் ஞானஸ்நானத்தைக் குறித்த பல்வேறு சர்ச்சைகள் இந்த நவீன காலத்திலும் பரவிகிடப்பது வருத்தத்துக்குரியதாகும்; இதனை இப்படியே விட்டுவிடாமல் சரியான ஆரோக்கிய உபதேசத்தை அறிந்தோர் இதைக் குறித்து தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கவேண்டும்.

இறுதியாக நண்பர் பால் அவர்களுக்கு ஒரு விளக்கம்: தாங்கள் குறிப்பிட்ட வேதப்பகுதியானது மறு ஞானஸ்நானத்தை அனுமதிப்பது போலிருந்தாலும் உண்மை அதுவல்ல; இதனை நீங்கள் இந்த வேதப்பகுதியிலிருந்தே அறியலாம்.

"4. அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி,மனம் திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தை கொடுத்தானே என்றான்."

மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் அறியவேண்டியது யாதெனில் யோவானுடைய காலத்துடன் அவன் கொடுத்த திருமுழுக்கின் பணி முடிந்துவிட்டது; அவன் கொலைசெய்யப்பட்டவுடன் அவனுடைய சீடர்களும் இயேசுவின் பின்னே வந்து விட்டார்கள்; ஆனாலும் இவற்றை அறியாத மக்களிடம் கிறித்துவின் நற்செய்தி வந்தபோது இந்த ஐயம் எழும்பியது; அதற்குரிய ஆலோசனையையே பவுலடிகள் இங்கே கொடுக்கிறார்.

இதன்படி நாம் அறியவேண்டியது என்னவென்றால் யோவான் கொடுத்த ஞானஸ்நானத்துக்கும் இயேசுகிறித்துவின் மீது கொண்ட விசுவாசத்தை அறிக்கையிடும் ஞானஸ்நானத்துக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்பதே; அதை அறியாமல் இன்றைக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும் பெரும்பாலானோர் செய்யும் தவறு என்னவென்றால், திருமுழுக்கு ஒவ்வொருவரும் எடுத்தாக வேண்டும் ஏனென்றால் இயேசுவே எடுத்தாரே என்கிறார்கள்;

யோவான் ஸ்நானன் மூலமாக இயேசுவானவர் பெற்ற திருமுழுக்கு வேறு, இயேசுவானவர் மீதான விசுவாசத்தை அறிக்கையிட்டு நாம் பெறவேண்டிய திருமுழுக்கு வேறு என்பதை நாம் முந்தி அறியவேண்டும்; யோவான் கொடுத்தது மனந்திரும்புதலுக்கு அடையாளமான ஞானஸ்நானமாகும்; இதையே இயேசு பெற்றுக்கொண்டார்; ஆனால் நாம் இன்றைக்குப் பெறவேண்டிய ஒரே ஞானஸ்நானம் பாவமன்னிப்புக்கென்று பிதாகுமாரன் பரிசுத்தாவியின் நாமத்தினால் பெறவேண்டியதாகும்; இதில் மறு திருமுழுக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை.

மேலும் எந்த சபைக்கூட்டத்திலிருந்து எந்த நாமத்தினால் பெற்றீர்கள் என்பதைவிட எந்த உணர்வுடன் எதற்காகப் பெற்றீர்கள் என்பதே இங்கு மதிப்பு பெறும்; மேலும் திருமுழுக்கினால் நீங்கள் இரட்சகரை நம்பவைக்கவில்லை; அவர் ஏற்கனவே உங்களை முத்திரித்து ஆவியின் ஆச்சாரத்தைக் கொடுத்துவிடுகிறார். உங்கள் உள்ளான மனுஷனுக்கும் உங்களைச் சுற்றிலுமுள்ள சபையாருக்கும் அந்த செய்தியை அறிவிக்கிறீர்கள்; இவை நிறைவேறாவிட்டால் நீதி நிறைவேறாது என்று அறிக‌.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
சபையில் எல்லோரும் எல்லாம் செய்யலாமா..?
Permalink  
 


ebi wrote:
அனுபவங்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட பதிவுகள் தவிர மற்ற பதிவுகள் மற்றும் கருத்துகளை விவாத பகுதிக்கு மற்றிவிடலாமே.

//இதோ வந்துட்டன்..!//


எங்கே இன்னும் காணோமே?????????


ஞானஸ்நானம்- ஒரு அனுபவம் -எனும் கட்டுரை இங்கே விவாதமாக உருவெடுத்துவிட்ட காரணத்தினாலும் அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் மாற்றும் வசதியில்லாத காரணத்தினாலும் அருமை நண்பர் எபி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதனை அதற்குரிய பகுதியில் மறுபதிப்பு செய்திருக்கிறேன்.


http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=41110288

மேலும் இந்த திரியின் தலைப்பும் விவாதத்துக்கு ஏற்ப மாற்றப்படுகிறது.

இங்கே வளர்ந்துவிட்ட விவாதத்தின் அடிநாதமாக விளங்கும்  ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்து தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து விவாதிப்போம்;இது திருச்சபை சட்டதிட்டங்கள் சம்பந்தமான விவாதமாக இருப்பதால் தளநண்பர்கள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து சரியான ஆலோசனையை வழங்க உற்சாகப்படுத்துகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: ஞானஸ்நானம்- ஒரு அனுபவம்
Permalink  
 


josephsneha@Tcs:

எத்தனையோ கம்யூனிச நாடுகளில் சிறையில் கொடுக்கப்படும் தே நீரையும், காய்ந்த ரொட்டியையும் திருவிருந்தாக சிறையில் இருக்கும் விசுவாசிகள் பகிர்ந்து கொள்வார்களாம், அப்போது போதகர் போதகர் அல்லாதோர் என பார்ப்பது கிடையாது. என்னை பொருத்தவரை அவர் நாமத்தினாலே நாம் ஆசாரியர்களாக்கப்பட்டு கிறிஸ்து மந்தையில் ஆத்துமாக்களை கொண்டுவரும் பணியை செய்ய கட்டளை பெற்றுள்ளோம். ஒருவேளை சபையோ அல்லது மேய்ப்பனோ இல்லாத பட்சத்தில் ஒரு விசுவாசி இன்னொரு விசுவாசிக்கு ஞானஸ்னானம் கொடுக்கலாம்.

Chillsam:

நண்பர்களே,விதிவிலக்கான சம்பவங்களைக் குறித்து இங்கு யாரும் விவாதிக்கவில்லை;பொதுவான கிறித்தவ விசுவாசம் மற்றும் உபதேசம் என்ன என்பதையே தேடுகிறோம்; ஆனானப்பட்ட பவுலடிகளுக்கு இதுபோன்ற காரியங்களில் ஐயம் உண்டானபோது செய்தது என்ன, அதுவே இதற்கும் பதிலாகும்; தலைமைத்துவ பீடம் அப்போது இருந்ததென்றால்
இப்போதும் இருக்கிறது; அந்த தலைவர்கள் அடுத்தகட்ட தலைவர்களை உருவாக்கிய காரணத்தினாலேயே இன்றுவரை சபையானது நிலைத்திருக்கிறது; மேலும் தலைவர்கள் உருவாக்கப்படுகிறதில்லை; ஆவியானவரால் ஏற்படுத்தப்படுகிறார்கள்.

ebi:

//அனுபவங்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட பதிவுகள் தவிர மற்ற பதிவுகள் மற்றும் கருத்துகளை விவாத பகுதிக்கு மற்றிவிடலாமே.//

ஆம் நண்பரே தாங்கள் சொல்லும் யோசனையை நானும் பலமுறை முயற்சித்தேன்;ஆனாலும் எனது தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வசதிகளின்படி ஒரு குறிப்பிட்ட திரிமுழுவதையுமே இடம் மாற்றலாம் மற்றும் குறிப்பிட்ட சில பின்னூட்டங்களை நீக்கலாம் என்பதைத் தவிர நீங்கள் சொல்லுவது போல செய்திட இயலாது;இதனை ஏற்கனவே வேறொரு திரியில் கோல்டா அவர்களிடம் சொல்லி வேண்டிக் கேட்டபோதும் அவர்கள் புரிந்துகொள்ளாமல் வருத்தப்பட்டது போலிருந்து;எனவே அப்படியே விட்டுவிட்டேன்.

இனி ஒன்று செய்யலாம்,இந்த திரியில் எனது ஆரம்பப் பதிவை மட்டும் எடுத்து மறுபதிப்பு செய்துவிட்டு இந்த திரிக்கு புதிய முன்னுரையைத் தரவேண்டும்;இன்றிரவு முயற்சிக்கிறேன்,நண்பரே.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

அனுபவங்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட பதிவுகள் தவிர மற்ற பதிவுகள் மற்றும் கருத்துகளை விவாத பகுதிக்கு மற்றிவிடலாமே.

//இதோ வந்துட்டன்..!//
எங்கே இன்னும் காணோமே?????????



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

  • "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்." (யோவான்.1:12)
  • "விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்.." (மாற்கு.16:16)
-மேற்காணும் இவ்விரண்டு வசனங்களே கிறித்தவ விசுவாசத்தின் ஆரம்பப் படிகளாக்கும்;அப்படியாக ஒரு ஆத்துமாவின் மனதில் கிறித்துவைப் பற்றிய விசுவாசம் உருவாகக் காரணமானவர் யாராக இருப்பினும் அவர் தன்னிடம் புது விசுவாசியால் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒரு கட்டத்தில் விளக்கம் சொல்ல இயலாத நிலையில் தன்னைவிட அனுபவஸ்தரான மற்றொரு மூத்த விசுவாசியிடம் கொண்டுவருகிறார்; அவர் குறைந்தது ஐந்து வருட கிறித்தவ விசுவாசத்தையுடையவராக இருந்து பலரையும் கிறித்துவிடம் வழிநடத்தியவராக இருக்கும் பட்சத்தில் அவரே ஞானஸ்நானம் கொடுக்கத் தகுதியானவர் ஆவார்; காரணம் ஞானஸ்நானத்துக்குக் காரணமான கிறித்துவைப் பற்றிய உபதேசத்திற்குப் பிறகே விசுவாசம் உருவாகிறது; ஞானஸ்நானத்தைவிட யார் கொடுப்பது என்பதைவிட விசுவாசம் உருவாகக் காரணமாக இருக்கும் உபதேசம் முக்கியமானதல்லவா? சரி யார் வேண்டுமானாலும் உபதேசிக்கலாம் என்றால் சபையில் ஏன் மூப்பர், கண்காணி போன்ற பொறுப்புகளை வேதம் அனுமதித்தது? ஒரு விசுவாசி மற்றொருவருக்கு கிறித்துவைப் பற்றிய விசுவாசம் உருவாகக் காரணமாக இருந்தாலும் அவர் இயல்பாகவே தான் யாரிடமிருந்து அந்த விசுவாசத்தைப் பெற்றாரோ அவரிடம் தான் ஆதாயப்படுத்திய புதியவரைக் கொண்டு சென்று நிறுத்துவது தவிர்க்க இயலாதது.

இதனை ஆசிரியர் - மாணவர் என்ற தொடர்பில் யோசிப்போம்; எல்லோருமே மாணவருமல்ல,எல்லோருமே ஆசிரியருமல்ல;ஆசிரியர் ஒரு காலத்தில் மாணவராக இருந்தார்;மாணவரும் ஒரு காலத்தில் ஆசிரியராக மாறுவார்;ஆனாலும் கற்கும் பருவத்தில் உள்ளவர் கற்பிக்க முடியுமா? ஆனால் மாணவர் தலைவர் போன்ற பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளலாம்;நேரந்தவறாமைக்கும் ஒழுக்கத்துக்கும் முன்னுதாரணமாக இருக்கலாம்;ஆனாலும் கற்கும் பருவத்தில் உள்ளவர் ஆசிரியர் ஸ்தானத்துக்கு வந்து செயல்படுவது பார்க்கவே அவலட்சணமாகவே இருக்கும் அல்லவா?

அதுபோலவே ஞானஸ்நானம், திருவிருந்து பரிமாறுவது போன்றவை சபையின் தலைவராகிய கிறித்துவினால் ஏற்படுத்தப்பட்டு பவுல் அப்போஸ்தனால் போதிக்கப்பட்ட நியமங்களாகும்; பவுல் தனது நிருபங்களைப் பொதுவாக விசுவாசிகளுக்கு எழுதும் தோரணையில் எழுதினாலும் அவை சபையின் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மூலமே வாசிக்கப்பட்டது; ஆண்டவருடைய நாட்களிலும் ஜெப ஆலயத் தலைவன் என்ற ஒரு ஏற்பாடு இருந்ததல்லவா?

கேள்வியானது, ஞானஸ்நானம் விசுவாசி கொடுக்கலாமா, கூடாதா என்பதே; மேலும் ஒரு கேள்வியைக் கேட்கலாமா? ஞானஸ்நானம் கொடுக்கும் விசுவாசியின் விசுவாச அனுபவமானது எத்தனை வருடமாக இருக்கவேண்டும்? அவர் சபைக்குக் கட்டப்பட்டவராக இருக்கவேண்டுமா இல்லையா? சபைக்குக் கட்டுப்படுதல் என்றால் என்ன? சபைக்குக் கட்டுப்பட்டவர் சுயமாக செயல்படமுடியுமா? ஞானஸ்நானம் கொடுப்பவர் எடுப்பவர் என்ற இருவர் மட்டுமே இருந்தால் பரவாயில்லை;அந்த இருவருக்கு அதிகமானோர் இருந்தாலே அவர்களில் ஞானஸ்நானம் கொடுப்பவர் நடத்துபவர் ஆகிவிடுவாரே? ஒருவர் ஞானஸ்நானம் எடுத்ததும் பிலிப்புவைப் போல ஞானஸ்நானம் கொடுத்த விசுவாசி எடுத்த விசுவாசியை 'அம்போ' வென்று விட்டு வந்துவிடலாமா? அவருடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் அவருடைய ஆத்துமாவுக்கும் உத்தரவாதி யார்?

  • "தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.
  • உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே." (எபிரெயர்.13:7 & 9 )
-மேற்கண்ட வேத வசனத்தில் நடத்துகிறவர்கள் என்று ஒரு வகையினர் இருக்கிறார்கள் அல்லவா, அவர்களே புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தல உபதேசத்தின்படி ஞானஸ்நானம் கொடுக்க தகுதியானவர்கள்; கற்றுக்கொள்ளும் பருவத்தில் இருப்பவர்கள், ஆரோக்கிய உபதேசத்த்தில் தேற்றப்பட்டு தொடர்ந்து ஆத்துமா ஆதாய ஊழியத்தில் ஈடுபடவேண்டும்; அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதை விட மேலான பணிகள் உண்டு.

இந்த உதவிக்காரர்கள் ஊழியத்திற்கு முன்னுதாரணமானவர்கள் பழைய ஏற்பாட்டில் மோசேயின் யோசுவா மற்றும் எலியாவின் எலிசா;புதிய ஏற்பாட்டில் பவுலடிகளின் தீமோத்தேயு.

ஒரு விசுவாசி யாரால் நடத்தப்படுகிறாரோ அவருடைய அனுமதியுடன் ஞானஸ்நானம் கொடுக்கும்போது அங்கே தலைமைத்துவ ஒழுங்கு பாதிக்கப்படாது.

உதாரணமாக பிலிப்பு எங்கிருந்து எங்கு சென்றானோ,ஆனால் அவனை நடத்தியவர் ஆவியானவர்; ஆவியானவர் கட்டளையிட்டதை அவன் நிறைவேற்றியதும் ஆவியானவரே அவனைத் தூக்கிக்கொண்டு போனார் என்று வாசிக்கிறோம்; பயணிக்க இரதத்தில் ஏறிய பிலிப்பு காற்றில் பயணித்தானோ? ஆம்,அவன் சேரவேண்டிய இடத்தில் சென்று சேர்ந்ததும் இந்த இனிமையான அனுபவங்களை அங்கே தான் சந்தித்த மூப்பர்களிடம் விவரித்திருப்பான்;அவர்கள் உடனே அவனைக் கடிந்துகொண்டு," நீ எப்படி முந்திரிக்கொட்டை மாதிரி இப்படியெல்லாம் செய்யலாம்" என்று கேட்டிருந்தாலே பிரச்சினை; அல்லது பிலிப்பு தான் பணிக்கப்பட்ட பணிக்குச் செல்லாமல் யோனாவைப் போல ரூட் மாறிச் சென்றிருந்தால் பிரச்சினை;ஆனால் பிலிப்புவின் விசுவாசப்பயணத்தில் இது ஒரு இயற்கைக்கு மாறுபட்ட அனுபவம் அவ்வளவுதான்.

இதற்கு மேலும் கோல்டா போன்றவர்கள் அடம் பிடித்தால் அவர்கள் தாராளமாக ஞானஸ்நானம் கொடுக்கட்டும்; யாருக்கு? வரும் மே மாதத்தில் கூவாகத்துக்குச் சென்று திருநங்கைகள் மத்தியில் ஊழியம் செய்து அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கட்டும்; ஏனெனில் பிலிப்பு ஞானஸ்நானம் கொடுத்த மந்திரி ஒரு திருநங்கையாவார்; மேலும் பிலிப்பு கிரேக்க பாரம்பரியத்தைச் சார்ந்தவனாக இருந்ததால் யூதனல்லாத காந்தகே மந்திரியுடன் பிலிப்புவுக்கு பிரச்சினை இருந்திருக்காது; ஏனெனில் பவுலடிகளின் எழுகைக்குப் பிறகே புறவினத்தார் மீதான யூதப் பின்னணியைச் சேர்ந்த ஆதி அப்போஸ்தலர்களுக்கு இருந்த சங்கட உணர்வு விலகியிருக்கவேண்டும்; இவையெல்லாம் என்னுடைய யூகமாகும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Brother Chillsam:

மேடம், "அதிரடி"க்கு "எதிரடி" எங்களுக்கும் தெரியும்,ஆமா..!

pgolda Wrote on 10-02-2011 19:11:25:

சரிங்கய்யா,என் கருத்தைத் தான் நான் சொல்கிறேன்.நீங்க வேறு யாரையும் தயவுசெய்து வம்புக்கு இழுக்க வேண்டாம்.


"மார்க்கத்துக்கு எதிராகக்" கண்டவர்களும் வந்து கொக்கரிக்க இது ஒன்றும் வேலியில்லாத தோட்டமோ மேய்ப்பனற்ற மந்தையோ அல்ல; உங்களுக்கு ஏதாவது தெரிந்திருந்தாலும் அதைக் குறித்து கற்றுக்கொள்ளும் பாவனையுடன் கேளுங்கள்; அப்போது தான் சரியான பதிலைச் சொல்லமுடியும்; மற்றபடி அப்பாவியான உங்களைத் திட்ட மனதில்லாத காரணத்தினால் இந்த கருத்து எங்கிருந்து வந்து பரவியது என்றும் உங்களையெல்லாம் மயக்கியது யார் என்பதையும் எங்கள் அனுபவ‌த்தினால் ஆராய்ந்து அவர்களுக்கு நேராக கவனத்தைத் திருப்புகிறோம்.

மந்தையைச் சுற்றி சுற்றி வரும் ஓநாயானது எப்படியாவது கவர்ச்சி காட்டி கவனத்தைக் கவர்ந்து ஒரு ஆட்டையாவது வெளியே வரவழைக்கவே பார்க்கும்;அத்தனை ஆட்டையும் கொள்ளையிட அதற்கு சாமர்த்தியம் போதாது;அப்படியிருந்தால் அது மந்தைக்குள்ளாகவே வந்து உபதேசிக்குமே..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

sekarsamuel Quote@TCS

// நீங்கள் சகோ.கோல்டா அவர்களின் கருத்துக்கு பிண்ணனி ஏஞ்சல் டீவியாக இருக்கும் என்று யூகித்திருக்கிறீர்கள் //


நண்பரே, நான் யூகிப்பதாக ஒரு செய்தியை, யூகத்தின் அடிப்படையில் நீங்கள் சொல்லலமா? இது கோல்டாவின் கருத்து அல்ல என்றும் இது(வும்) ஏஞ்சல் டிவியின் சாதுவின் கருத்து என்றும் மனதார அறிந்திருக்கிறேன்; ஏனெனில் அந்த செய்திகளை காதாரக் கேட்டு கண்ணாரப் பார்த்தவன் நான்; அதுமாத்திரமே நம்முடைய பாரம்பரியத்தில் ஏற்கப்படாது என்று அறிந்தவனான‌தலால் தீர விசாரித்து அறிந்தேன்;என்னுடைய தகவல் தவறானது என்றால் உங்களிடமிருந்து நூறு கசையடிகள் வாங்கிக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன்; ஆனால் கோல்டாவிடமிருந்து அல்ல, ஏனெனில் நான் பெண்களிடம் அடிவாங்கும் பாரம்பரியத்தை சார்ந்தவனல்ல‌. இன்னும் ஞானஸ்நானமே- அதாவது நீர் நிலையில் நின்று முழுகி எழும் திருமுழுக்கு தேவையில்லை என்பதையும் இவர்களைப் போலவே வேதத்திலிருந்தே எடுத்துச் சொல்லட்டுமா? ' தள்ளி நில்லுப்பா நான் இடிக்கணும் ' என்பது போலவே இருக்கிறது இவர்களுடைய கள்ள உபதேசம், தொடர்ந்து "எந்த நாமத்தினாலே" திருமுழுக்கு எடுக்கவேண்டும் என்பதையும் கேட்டுச் சொல்லுங்களேன், ஏனெனில் பாரம்பரியத்தின்படி எடுத்த ஞானஸ்நானமானது இவர்களுடைய போதனையின்படி செல்லாது தெரியுமா?

மேடம், "அதிரடி"க்கு "எதிரடி" எங்களுக்கும் தெரியும்,ஆமா..!

sekarsamuel Wrote on 10-02-2011 18:57:03:

ஏன் சகோ.கோல்டா நீங்க கூட வசன ஆதாரம் இல்லாமலேயே தொடர்ந்திருக்கீங்க?


நண்பர் சேகர் சாமுவேல் அவர்களே,அனுபவத்தின் அடிப்படையில் பேசுவோருக்கு பொதுவான பதிலே போதும்;ஆனால் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் கேட்போருக்கு வசனத்தின் அடிப்படையில் நிச்சயமாக ஆதாரத்துடன் சொல்லியாக வேண்டும்;இது என்னுடைய தனிப்பட்ட கருத்தும் பாணியுமாகும்;தயவுசெய்து என்னை வற்புறுத்த வேண்டும்;ஆனாலும் என்னுடைய வரிகளில் வேத வசனத்தின் அனுபவங்கள் இழையோடுவதை நீங்கள் நிச்சயம் உணரலாம்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

golda wrote:
ஞானஸ்நானம் குறித்து என் கருத்தையும் சொல்லி வைக்கிறேன்.ஞானஸ்நானம் கொடுக்க விசுவாசி போதும். ஒரு விசுவாசி மற்றுமொரு விசுவாசிக்கு கொடுக்கலாம்.இராப்போஜனமும் அப்படித்தான். ஊழியக்காரர் இல்லாவிட்டாலும் நடத்திக் கொள்ளலாம்.


ஞானஸ்நானமும் சரி,இராப்போஜனம் எனப்படும் திருவிருந்தும் சரி அனுபவஸ்தரான ஒரு மூப்பரால் மாத்திரமே கொடுக்கப்படவேண்டும்; அதுவே கிறித்தவ ஒழுங்கு.

இவையெல்லாம் ஏஞ்சல் டிவியின் சாதுவால் வந்த சூழ்ச்சியான போதகமாகும்;தூதர்களைப் படம் பிடிக்கும் காமிரா வாங்க அவர் கேட்கும் ரெண்டு கோடி ரூபாயை அவரிடம் வேலை பார்க்கும் யார் பெயருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம் ' என்றா அவர் விளம்பரம் செய்கிறார் அல்லது ஏஞ்சல் டிவியில் பணிபுரியும் அனைவரும் விசுவாசிகளால் ஆதரிக்கப்பட்ட தீர்க்கதரிசிகளைப் போல பரதேசிகளாக இருக்கிறார்களா?

ஆணும் பெண்ணும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள்;அவர்களுடைய திருமணத்தைப் பதிவுசெய்து அங்கீகரிக்க அதற்கென்று அமைப்பு உண்டல்லவா? அதனை உறுதிசெய்யும் சாட்சிகள் தேவையல்லவா?

அதுபோலவே திருமுழுக்கு என்பதும் ஒரு சடங்காக இருக்குமானால் யார் வேண்டுமானாலும் முழுகி எழும்பலாம்;ஆனால் அது ஒரு சாட்சியின் விழாவாக இருப்பதால் அதற்கேற்ற பாரபுத்தியுடன் அதனை நிறைவேற்ற அதற்குரிய சூழ்நிலையும் அதனை நிறைவேற்றும் அமைப்பும் அவசியம் தேவை;தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் மாத்திரம் விதிவிலக்குகள் உண்டு.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

ஞானஸ்நானம் குறித்து என் கருத்தையும் சொல்லி வைக்கிறேன்.

ஞானஸ்நானம் கொடுக்க விசுவாசி போதும். ஒரு விசுவாசி மற்றுமொரு விசுவாசிக்கு கொடுக்கலாம்.

இராப்போஜனமும் அப்படித்தான்.ஊழியக்காரர் இல்லாவிட்டாலும் நடத்திக் கொள்ளலாம்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இத.. இத.. இதத்தான் நான் எதிர்பார்த்தேன்...இதோ வந்துட்டன்..!

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

அந்த சகோதரிக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதா? மீதியையும் சொல்லுங்களேன்...

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
சபையில் எல்லோரும் எல்லாம் செய்யலாமா?
Permalink  
 


சென்னையிலுள்ள மகளிர் விடுதியில் தங்கி மின்புத்தகப் பதிப்பாளர்  (e-publishing) அலுவலகத்தில் பணிபுரியும் சகோதரிகளை அறிவேன்; அவர்களில் ஒவ்வொருவரும் தென் மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தவர்கள்;அவர்களுக்கு கடந்த ரெண்டு வருடமாக நற்செய்தி மற்றும் ஆலோசனை கூறி பிரார்த்தனையில் உதவி செய்கிறேன்.

அவர்களில் ஒரு சகோதரிக்கு வரும் 13-ந்தேதி திருமணமாகப் போகிறது;அவர்களுடைய திருமணத்துக்கு முன்பதாக சத்தியத்தை அறிந்துள்ள அவர்கள் அதற்குக் கீழ்ப்படிந்து ஞானஸ்நானம் எனப்படும் திருமுழுக்கு எடுக்க விரும்பினார்கள்.

பாரம்பரிய இந்து குடும்பத்தைச் சேர்ந்த அந்த சகோதரி இயேசுகிறித்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டாலும் அவர்களால் வீட்டை விட்டு வெளியேற முடியாது;ஒரு இளம்பெண் விசுவாசத்தினிமித்தம் வீட்டை விட்டு வெளியேறி, பாதுகாப்பான- கௌரவமான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்வது என்பது மிகவும் சிரமமான காரியம் எனும் நடைமுறையான உண்மையை அறிந்த நான் அவர்களை வீட்டைவிட்டு வெளியேறிவர ஊக்கப்படுத்தாமலும் தனது விசுவாசத்தினிமித்தம் திருமணத்தைத் தள்ளிப்போட அனுமதிக்காமலும் அவர்கள் சரியான வயதில் திருமண வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பினேன்.

நான் அவர்களுக்காக ஜெபித்துச் சொன்ன அடையாளங்களின்படியே ஒரு வரன் அமைந்து திருமணத்துக்கு ஆயத்தமாகிறார்கள்;இதனிடையே அவர்கள் தனது சாட்சியை சபைக்கு முன் அறிவிக்கவும் திருமண வாழ்க்கைக்கு முன்பதாக தன்னைப் பரிசுத்தமாக்கிக் கொள்ளவும் விரும்பினார்கள்.

அவர்களை என்னிடம் அறிமுகப்படுத்திய மற்றொரு சகோதரியோ ஞானஸ்நானம் எனப்படும் திருமுழுக்கைக் குறித்து அச்சப்பட்டு, 'திருமுழுக்கு எடுத்தபிறகு அவள் இந்துமுறைப்படியான திருமணத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் உட்படுத்தப்பட வேண்டியதாகுமே, இதனால் கர்த்தரை மறுதலித்த குற்றம் நிகழுமே' என்றார்கள்.

நான் மிகத் தெளிவாக அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்,
"மற்றவர்களைக் குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்.அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள். என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன."
(1.கொரிந்தியர்.7:12 ‍ ‍- 14)

-எனும் பவுலடிகளின் ஆலோசனையின் படி திருமுழுக்கு என்பது விசுவாச வாழ்க்கைக்கான ஆரம்பமே தவிர அது ஒரு முடிவல்ல;இதில் நம்மைக் குற்றப்படுத்தவும் தண்டிக்கவும் யாருக்கும் அதிகாரமில்லை;ஏனெனில் நியாயாபதி கர்த்தரே, அவரோ மிகுந்த கிருபையுள்ளவர்;எனவே விசுவாசத்தை ஒரு அக்கினி போல அவியாமல் காத்துக்கொண்டு, நாம் இருக்கும் சூழ்நிலைக்குள்ளிருந்தே நிதானமாக முன்னேறி முழு குடும்பத்தையும் கிறித்துவுக்காக ஆதாயப்படுத்தமுடியும் ' என்றேன்.

என்னுடைய ஆலோசனையானது அந்த சகோதரிகளுக்கு ஏற்புடையதாகவும் திருமணத்துக்கு முன்பதாக திருமுழுக்கு எனும் கட்டளையை நிறைவேற்றிட அந்த சகோதரி விரும்பியதாலும் நான் அந்த சகோதரி ஞானஸ்நானம் எனும் திருமுழுக்கு எடுப்பதற்கான  காரியங்களை குறித்து ஆலோசித்தேன்.

தற்காலத்தில் திருமுழுக்கு எடுப்பது என்பது அத்தனை சாதாரணமான காரியமல்ல;இது சம்பந்தமாக பல அனுபவங்கள் வழியாக அடியேன் கடந்துபோனதுண்டு.இப்போதும் அதேவிதமான சோதனைகள் வந்தது; அதாவது ஒரு ஆத்துமா ஞானஸ்நானம் எடுக்க முதலில் அவசியமானது விசுவாசம் மட்டுமல்ல, தண்ணீரே மிகமிக அவசியமானதாகும்.

ஏனெனில் பொது இடத்தில் ஞானஸ்நானம் கொடுக்கும்போது பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதாகிறது;இதனால் ஏதாவது ஒரு சபையில் அந்த வளாகத்தில் கட்டப்பட்ட தொட்டியில் ஞானஸ்நானம் கொடுக்கலாமெனில் பல சபைகளில் தண்ணீர் நிறைப்பது பிரச்சினையாகும்; அதிலும் ஒரே ஒரு ஆத்துமாவுக்காக ஒரு தொட்டி தண்ணீரை வீணாக்க பலரும் விரும்புகிறதில்லை;மேலும் ஞானஸ்நானம் எடுக்கும் ஆத்துமாவால் தன்னுடைய சபைக்கும் தன்னுடைய ஊழியத்துக்கும் என்ன பயன் என்றே பல ஊழியர்கள் யோசிக்கின்றனர்;இதுபோன்ற பிரச்சினைகளை சமாளிக்க‌ பல சபைகளில் மாதத்துக்கு ஒருமுறையே ஞானஸ்நானம் கொடுக்கப்படுகிறது;இன்னும் வாராவாரம் ஞானஸ்நானம் கொடுக்கக்கூடிய சபைகளிலும்கூட போன உடனே ஞானஸ்நானம் கொடுத்துவிடமாட்டார்கள்; அவர்களுக்கென்று இருக்கும் ஒழுங்கின்படி குறிப்பிட்ட சில வாரங்களுக்கு ஞானஸ்நானம் சம்பந்தமான போதனைகள் கொடுக்கப்பட்ட பிறகே ஞானஸ்நானம் தருவார்கள்; என்னைப் போன்ற தன்னார்வப் பணியாளர்கள் மூலம் ஆதாயப்படுத்தப்படும் ஆத்துமாக்கள் ஆங்கீகரிக்கப்படுவதில் நடைமுறை சிரமங்கள் இருக்கிறது; இத்தனைக்கும் என்னால் பராமரிக்கப்படும் புதிய விசுவாசிகளை எனக்கென்று சொந்தமாக சபை இல்லாததால் அந்தந்த பகுதிகளில் இருக்கும் சபைகளுக்கே ஆராதனைக்காக அனுப்புகிறேன்.

கிறித்துவுடன் அறையப்பட்ட வலதுபக்கக்  கள்ளனுக்குக் கிடைத்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்குமா என்ன, என்னுடைய முயற்சியில் சற்றும் மனந்தளராது அந்த சகோதரியின் விருப்பத்தை நிறைவேற்ற ஒரு மிஷினரி ஸ்தாபனத்தைத் தொடர்புகொண்டேன்; கடந்த ஐந்து  வருடங்களாகவே அவர்களுடைய ஸ்தாபனத்தின் மூலம் நடைபெறும் வருடாந்திர குடும்ப விழாவில் நடைபெறும் பணித்தள விசுவாசிகளின் ஞானஸ்நான ஆராதனையில் என்னுடைய முயற்சியினால் ஆதாயப்படுத்தப்பட்டோருக்கும் திருமுழுக்கு பெறச் செய்வது என்னுடைய வழக்கமானதால் திருமுழுக்கு பெறவிரும்பிய சகோதரியிடம் மிகவும் நம்பிக்கையுடன் கடந்த 26- ம் காலையில் ஆயத்தமாகி வந்து விடும்படி   சொல்லிவிட்டேன்.அதற்கு முன்பதாக மிஷினரி ஸ்தாபனத்தின் பொறுப்பாளர்களிட‌ம் சகோதரியின் பெயர் விவரத்தையும் அவர்கள் சம்பந்தமான சாட்சியையும் சொல்லி லிஸ்ட்டில் அவர்கள் பெயரைச் சேர்க்கச் சொல்லியிருந்தேன்,அவரும் சரி என்றார்;

ஆனால் 25-ம் தேதி பின்னிரவில் அதாவது ஞானஸ்நான ஆராதனைக்கு முந்திய நாள் மிஷினரி ஸ்தாபனத்தின் இயக்குநர் தொடர்பு கொண்டு 'வெளியாட்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க இயலாது,ஏனெனில் பணித்தள விசுவாசிகளுக்காகவே விசேஷமாக ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதால் அதில் வேறு யாரும் ஞானஸ்நானம் பெறுவதை சிலர் விரும்பவில்லை;தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், நாங்கள் செய்யும் ஊழியத்தில் உண்மையுடையவர்களாக இருக்க விரும்புகிறோம் ' என்றார்; 'சரி,அண்ணே நான் வேறு வாய்ப்பை யோசிக்கிறேன், நமக்கென்று இருக்கும் கொள்கைகளைக் காப்பாற்றுவதே முக்கியமல்லவா,' என்று கூறி விடைபெற்றேன்.

அடுத்து அதே நாளில் நான் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த மற்றொரு சபையின் போதகரிடம் விஷயத்தைச் சொன்னதும் அவர் மிகுந்த சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டு வரச் சொன்னார்.

(தொடரும்...)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard