Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவ மனிதன் என்றழைக்கப்படுவது தவறா?


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: தேவ மனிதன் என்றழைக்கப்படுவது தவறா?
Permalink  
 


நிக்கோலாய்த்தியர்கள் என்பவர்கள் யார்?

நிக்கோலஸ் என்பவரால் தொடங்கப்பட்ட ஒரு Cult group இது. அப்போஸ்தலர் 6:5 இல் சொல்லப்படும் ஆதிச்திருச்சபையில் ஏழு டீக்கன்களின் ஒருவராக நியமிக்கப்பட்ட ”அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலா” இவராக இருக்கலாம் என்று சொல்லுபவர்களுமுண்டு. இவரது தொடக்கம் மகிமையாக இருந்து பிற்பாடு இவர் விழுந்து போயிருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது


That is an interesting information.


__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

அன்பு சகோதரி! Clergy-Laity முறை குறித்து நான் கேட்ட கேள்வியை தவிர்த்து விட்டீர்கள். ஆதித்திருச்சபையில் மூப்பர்கள் இருந்தாலும் எல்லோரும் சகோதர சகோதரிகள் என்ற முறையே இருந்தது. ஆனால் இதை மாற்றி சில மூப்பர்களை Clergy-க்களாக நியமித்து அவர்கள் வேறு, சாதாரண மக்கள் வேறு என்று பிரித்ததே இந்த Clergy-Laity முறையாகும். இதை கர்த்தர் அருவெறுக்கிறார். ”நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை...” என்று ஆண்டவர் வெளிப்படுத்தல் 2:6-இல் குறிப்பிடுவது இதைத்தான்.

நிக்கோலாய்த்தியர்கள் என்பவர்கள் யார்?

நிக்கோலஸ் என்பவரால் தொடங்கப்பட்ட ஒரு Cult group இது. அப்போஸ்தலர் 6:5 இல் சொல்லப்படும் ஆதிச்திருச்சபையில் ஏழு டீக்கன்களின் ஒருவராக நியமிக்கப்பட்ட ”அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலா” இவராக இருக்கலாம் என்று சொல்லுபவர்களுமுண்டு. இவரது தொடக்கம் மகிமையாக இருந்து பிற்பாடு இவர் விழுந்து போயிருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

நிக்கோலாய் என்ற சொல்லைப் பிரித்துப்பார்த்தால்:

It comes from two Greek words, “Nike” (or “Nikos”) and “Laios” (or “Laos”). The first word (Nike) means to conquer, subdue, or overcome. The second word (Laios) means a body of people, or the common people. When we put these two words together, we arrive at a definition of Nicolaitans as “conquerors of the common people.”

கிறிஸ்துவுக்குள் எல்லோரும் ஒன்று என்ற உன்னத நிலையைத் தகர்த்து விசுவாசிகளுக்கு மேலாக Clergy என்ற முறையைக் கொண்டுவந்தவர்கள் இந்த நிக்கோலாய்த்தியர்கள். இதையே பின்னால் வந்த கத்தோலிக்க சபை பின்பற்றியது.

கிறிஸ்து தலை விசுவாசிகள் அவரது சரீரம் இதற்கிடையில் வேறொரு விசேஷப் பிரிவும் இல்லை. எல்லா விசுவாசிகளும் தேவ மனிதர்கள்தான்.



-- Edited by vijay76 on Monday 31st of January 2011 01:31:03 PM

__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

அருமையாகச் சொன்னீர்கள்.

I fully agree with you. The passion that they are working for their Father -is missing with many of the (full time) ministers. Many see it as a profession in which they are supposed to excel by building a costly big church, increase the members by all means, and to become internationally popular!

What is missing is real love for God and real love for unsaved souls.

(Same reply with a big font size!)


__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

அருமையாகச் சொன்னீர்கள்

. I fully agree with you. The passion that they are working for their Father -is missing with many of the (full time) ministers. Many see it as a profession in which they are supposed to excel by building a costly big church, increase the members by all means, and to become internationally popular! What is missing is real love for God and real love for unsaved souls.



__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

நான் யாருக்கும் எதிரியில்லை சகோதரி!!

முழு நேர ஊழியன், முக்கால் நேர ஊழியன், கால் நேர ஊழியன் என்றெல்லாம் எங்காவது வேதத்தில் பார்த்திருக்கிறீர்களா? These are all terms used by business world. இவை கூலியாட்கள் பயன்படுத்தும் வார்த்தைகள். தாவீது சிங்கமும், கரடியும் வந்தபோது ஒரு ஆட்டுக்காக உயிரைப் பணையம் வைத்து சிங்கதுடன் போரிட்டானே! அவன் முழுநேர ஊழியனா? பகுதி நேர ஊழியனா? அவன் “மகன்”

அதற்க்காக, முழு நேர ஊழியன், பகுதி நேர ஊழியன், என்ற பதத்தைப் பயன்படுத்துவோரெல்லாம் கூலியாட்கள் என்று நான் கூற வரவில்லை. அவை தவறான வார்த்தைப் பிரயோகம் என்றே கூற விரும்புகிறேன். நாம் அப்பாவின் திராட்சைத் தோட்டத்தில் வேலைபார்க்கும் அவர் பிள்ளைகள்.

 



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

ok brother Vijay!

சாதுவிற்கு எதிரிகள் பல இருக்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது

!

Christianity has a lot of traditions. One of them is seeing full time ministers as special category.

It is harmless, as long as (full time) ministers see themselves as part of the congregation, as servants , and not as Lords!

Anyway, let us bless and pray and support those doing the work of Lord, full time!



__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

அன்பு சகோதரி! நான் ஏன் அந்தக் கருத்தை முன் வைத்தேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒருமுறை தங்கள் அபிமான ஊழியரான சாது ஐயா அவர்கள் டி.வியில் தோன்றி ”வாங்க என் அன்புச் செல்லங்களா! கண்மணிகளா! ....என்று சொல்லிவிட்டு அடடே தேவமனிதர்களை மறந்துவிட்டேனே!...தேவமனிதர்களே நீங்கள் Special Catagory அல்லவா... என்று சொன்னார். நாம் எல்லோரும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருக்கிறோம் என்று வேதம் சொல்லியிருக்க இந்த Special catagory எங்கிருந்து முளைத்தது என்று யோசிக்கிறேன்.

நீங்கள் Clergy-liaty system குறித்து என்ன நினைக்கிறீர்கள்?????



-- Edited by vijay76 on Monday 31st of January 2011 11:59:02 AM

__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

தம்பி விஜய்! (Hope you have no objection in calling you this way!)

அது, யாரையும் தேவ மனிதர் என்று அழைக்கத் தேவையில்லை என்று தங்கள் தள்த்தில் சொன்ன கருத்தை நினைவு படித்தி செய்த ஒரு அன்பு நிறைந்த கேலி என்று எடுத்துக் கொள்ளவும். smile.gif

Anyway, ஆவிக்குரிய தந்தை என்று அழைப்பதை விடவா தேவ மனிதர் என்று சொல்வது மோசமானது?


__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

அன்பு சகோதரர் அவர்களே! தங்கள் ஆலோசனைக்காகவும் உரிமையோடு என்னை கண்டித்ததற்காகவும் நன்றி இந்த உறவைத்தான் நான் சபையில் எதிர்பார்க்கிறேன். நான் தேவமனிதன் என்று சொல்லிக்கொள்ள ஒருபோதும் தயங்கியதில்லை. என்னுடைய மின்னஞ்சல் முகவரியே man.of.god25 என்றுதான் வைத்திருக்கிறேன். ஆனால் சகோதரி கோல்டா என்னை விளித்த விதம்தான் என்னை உறுத்தியது. என்னைப் பொறுத்தவரை நமக்கு நமது சொந்தக் குடும்பத்தில் உறவும் பாசமும் அன்பும்தான் தேவை. கனம் அல்லவே அல்ல. சகோதரி கோல்டா தன் சொந்த சகோதரன் ஒரு பெரிய தேவமனிதராய் இருந்தாலும் இவர் அவரை அப்படி அழைப்பாரா என்பதே எனது கேள்வி. அண்ணே! என்றுதானே அழைப்பார்?

நாம் ஒரு பெரிய குடும்பத்தின் பிள்ளைகள், ஒரே சரீரத்தின் அவயவங்கள் அந்த உணர்வுடன் நாம் நமது சக விசுவாசியை, ஊழியக்காரனை, சகோதரனை அணுகினாலே போதும். சுயமகிமைக்காக ஊழியம் செய்யும் ஓநாய்களால் நாம் பட்டதும் போதும்.



-- Edited by vijay76 on Monday 31st of January 2011 08:47:27 AM

-- Edited by vijay76 on Monday 31st of January 2011 08:48:20 AM

-- Edited by vijay76 on Monday 31st of January 2011 08:51:27 AM

-- Edited by vijay76 on Monday 31st of January 2011 08:53:56 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இதுவும் "ஏஞ்சல் டிவியின் துருபதேசம்: சாதுஜி காலில் விழு..!" எனும் திரியிலிருந்து பிரிந்து வந்ததாகும்...

//தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி சகொதரி கோல்டா அவர்களே! நான் ஒரு சாதாரண விசுவாசி. என்னை மதிப்பிற்க்கும் மரியாதைக்கும் உரிய தேவமனிதர் என்றெல்லாம் அழைக்க வேண்டாம். நீங்கள் கிண்டலாக அதைச் செய்திருந்தால் கூட உங்கள் கருத்தை வாசிக்கும் என்னை அறியாத சகோதர சகோதரிகள் என்னைக் குறித்து மேன்மையாக நினைக்க வாய்ப்புண்டு. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.//

விஜய் அவர்களே தங்களுடைய தன்னடக்கத்துக்காக தேவனுக்கு மகிமை செலுத்துகிறேன்; ஆனாலும் தேவ மனுஷன் என்பது அத்தனை பயன்படுத்தக்கூடாத வார்த்தையா என்ன? அப்படியானால் நீங்கள் செய்யும் ஊழியத்தைக் குறித்து, ஆண்டவருடைய நாட்களில் ஆண்டவரையே கேட்டது போல, எந்த அதிகாரத்தில் இவற்றையெல்லாம் செய்கிறீர் என்று எதிர்தரப்பினர் கேட்கும் கேள்விகளுக்கு தாங்கள் பதில் சொல்லவேண்டியிருக்கும்.

"நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு." (1.தீமோத்தேயு.6:11)

ஒரு குறிப்பிட்ட தளத்துடன் போராடி சோர்ந்துபோய் அங்கிருந்து நான் வெளியேறியபோது என்னை ஓடுகாலி என இகழ்ந்தனர்; அதுவே மேற்கண்ட வசனத்தை வாசிக்கும்போது நினைவுக்கு வருகிறது; ஆம்,எனக்கன்பான சகோதரனே, தேவனுடைய பிள்ளை, தேவனுடைய மனுஷன் என்பதெல்லாம் கிறித்துவை தெய்வமாகத் தொழுவோருக்கான ஆரம்பக்கட்ட தகுதியாகும்; அந்த தகுதியைக் காத்துக்கொள்ளவே பிரயாசப்படவேண்டுமே தவிர அதுபோன்று அழைக்கப்படுவதைக் குறித்து வெட்கப்படக்கூடாது; மேலும் அது நமக்கு ஒரு பாதுகாப்பு கவசமாகவும் நாம் தவறிவிடாதிருக்க ஒரு எச்சரிப்பின் கோடாகவும் இருக்கிறது.

உதாரணமாக, நான் இரட்சிக்கப்பட்ட ஆரம்பகாலத்தில் ஒரு வசன பேட்ஜை அணிவது வழக்கம்; அது என்னுடைய மாம்ச எண்ணங்களுக்கும் அச்சங்களுக்கும் மறைவிடமாக இருந்ததுடன் என்னுடைய சாட்சிக்கும் அடையாள‌மாக இருந்தது.

அடுத்து தேவ மனுஷன் என்பதோடு மதிப்பும் மரியாதையும் எப்படி இணையும்?

"நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்." (1.தீமோத்தேயு.5:17)

மேற்கண்ட வசனத்தின்படி சபையைக் குறித்த விழிப்புணர்வு கட்டுரைகளை வரைந்து திருவசனத்தில் பிரயாசப்படும் நீங்கள் இரட்டிப்பு கனத்துக்குரியவர்; உங்கள் தகுதிக்கு மீறி நீங்கள் செயல்பட்டால் கண்டிக்கப்படுவீர்; அதை எதிர்கொள்வதுடன் அதற்குரிய விளக்கத்தையும் கொடுக்க நீங்களே பொறுப்பு; உங்களை மதிக்காதவர் தண்டிக்கப்படுவார்; அதுவே நீங்கள் பெற்றுள்ள கிருபைக்கு அடையாளம்; உங்களைப் பரியாசம் செய்யும் எண்ணத்தோடு யாராகிலும் மதிப்பிற்குரிய தேவ மனிதர் விஜய் அவர்களே என்று குறிப்பிட்டாலும் அதற்குரிய பலனை அவரே அடைவார்; ஆனாலும் இவையெல்லாவற்றுக்கும் மேலாக மதிப்பிற்கும் மரியாதைக்குமுரியவராகத் தங்களைக் காத்துக் கொள்வது உங்கள் பொறுப்பு;ஏனெனில் என்னைப் போன்றோர் இருக்கவே இருக்கிறோம்,குறை சொல்ல‌..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard