"ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்." (ஆதியாகமம்.5:24) அண்மையில் எங்கள் பகுதிக்கு ஊழியஞ் செய்யவந்த மதுரையைச் சார்ந்த பிரபல ஆராதனை வீரரும் போதகருமான Rev.ஜெயசிங் கல்குரா அவர்கள் மேற்கண்ட வசனத்தை எடுத்துச் சொன்னவிதம் இரசிக்கும்படியாக இருந்தது. ஆண்டவரும் ஏனோக்கும் அன்றும் வழக்கம் போல இணைந்து பேசிக்கொண்டே தேவ பர்வதம் வரை வந்துவிட்டனர்; நேரம் போனதே தெரியவில்லை; ஆண்டவர் கேட்டாராம், "ஏனோக்கு,பக்கத்திலிருக்கும் என் வீட்டுக்குப் போகலாமா, தூரத்திலிருக்கும் உன் வீட்டுக்குப் போகிறாயா.." என்று; ஏனோக்கு தூரத்திலிருக்கும் தன் வீட்டைவிட பக்கத்திலிருக்கும் தேவனுடைய வீட்டுக்குச் சென்றுவிட்டான்;அதற்குப் பிறகு அவனால் அங்கிருந்து வருவதற்கு மனமில்லாததால் அங்கேயே தங்கிவிட்டானாம்;இது ஒரு எல்லைகடந்த கற்பனையாகும்;ஆனாலும் இதில் சத்தியம் விளங்கும், பக்தி, விருத்தியாகும் அல்லவா..? வாரியார் ஒருமுறை தனது சொற்பொழிவில் சொன்னாராம், "மதுரைக்குப் போகும் பஸ்ஸில் ஏறினால் மதுரைக்குப் போகலாம்,ஆனால் மதுரைக்குப் போகும் பஸ் நம்மீது ஏறினால் வைகுண்டத்துக்கே போகலாம்" என்று; அதாவது இந்த காலத்தில் வண்டிகள் போகும் வேகம் அப்படித்தான் இருக்கிறது; இவையெல்லாம் கர்த்தருடைய வருகை அதி சீக்கிரம் என்பதன் அடையாளமாகும்.
{இதுவும் Rev.ஜெயசிங் கல்குரா அவர்கள் சொன்னது...}
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)