இது " ஏஞ்சல் டிவியின் துருபதேசம்: சாதுஜி காலில் விழு..!" திரியிலிருந்து பிரிந்து வந்த திரியாகும்;அதில் சாதுஜிக்கு எதிராக நாம் வைத்த வாதங்களுக்கு நேரடியான விளக்கத்தைக் கூறாமல் சகோதரி கோல்டா அவர்கள் நம்ம ஊர் அரசியல்வாதிகளைப் போல நம்மைத் திருப்பி கேள்விகளைக் கேட்டு வாதத்தை திசைதிருப்பி சாதுஜியைக் காப்பாற்ற முயல்கிறார்;ஏஞ்சல் டிவியைக் குறித்து எழுதி மாளாது என்பதாலேயே இத்தனை நாள் அமர்ந்திருந்தோம்;ஆனால் நம்முடைய அன்புக்குரிய சகோதரி கோல்டா அவர்கள் மூலம் அதற்கொரு வழி பிறந்திருக்கிறது;அவரே ஏஞ்சல் டிவி சம்பந்தப்பட்ட அனைத்து துருபதேசங்களூக்கும் விளக்கம் சொல்லுவாராக;எந்தநிலையிலும் அவர் விவாதத்தைவிட்டு தயவுசெய்து ஓடிவிடாதிருக்க நாம் விரும்புகிறோம்.
அவரே இந்த திரியின் விவாதத்துக்கு காரண கர்த்தா;அவர் கேட்கிறார்,ஒரு மனுஷனை ஆவிக்குரிய தந்தை என்றழைப்பது சரியா என்று;அதற்கான விடையை வேத வெளிச்சத்தில் தேடுகிறோம்...
"என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை." (3.யோவான்.1:4)
"கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன்." (1.கொரிந்தியர்.4:15)
"என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்..(கலாத்தியர்.4:19) சகோதரி கோல்டா அவர்களே கழுகைக் குறித்தும் அதன் பார்வையைக் குறித்தும் ஆய்ந்தறிவிக்கும் நீங்கள் வேத வசனத்திலும் ஜோடு ஜோடாக இருக்கக்கூடிய இணை வாக்கியங்களின் மூலமே எந்தவொரு சத்தியத்திலும் ஒரு முடிவுக்கு வரமுடியும். //(பவுல்) அவர்தான் தன்னை தகப்பன் என்று சொன்னாரே அன்றி, அவரை யாரும், ஆவிக்குரிய தந்தை என்று அழைத்ததாக தெரியவில்லை. //
தங்களுடைய இந்த கூற்று அடிப்படையற்றதாகும்; வேதத்திலுள்ள நிருபங்கள் சபைகளுக்கு எழுதப்பட்டது;சபைகள் அப்போஸ்தலர்களுக்கு எழுதப்பட்டிருந்தால் உங்கள் விருப்பம் நிறைவேறியிருக்கும்; மேற்கண்ட வேத வசனங்களில் பவுல் மாத்திரமல்ல, அன்பின் அப்போஸ்தலனாகிய யோவானும் இதே பொருளில் "பிள்ளைகளே" என்று எழுதுவதை கவனிக்கவும்.
மேலும், பவுல் தீமோத்தேயுவைக் குறித்து," பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: " (2.தீமோத்தேயு.1:2) என்று நேரடியாகவே குறிப்பிடுகிறார்; இதெல்லாம் ஞானார்த்தமாகக் கொள்ளப்படவேண்டிய வேதமுறைமைகளாகும்; மனுஷ்ய ஞானத்துக்கும் எல்லைகளுக்கும் அப்பாற்பட்டது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)