அன்பான சகோதரனே இதை தற்செயலாக காண நேர்தது. நான் படித்ததை தமிழில் டைப் செய்ய நேரமாகும்..... திருத்துவம் என்ற வார்த்தை பைபிளில் இல்லை என்பது உண்மை தான்.ஆனால் அதற்கு ஆதாரமாக பல வசனங்கள் பைபிளில் உண்டு. தேவன் = பிதாவாகவும் குமாரனாகவும் பரிசுத்தஆவியாகவும்.. இருக்கிறார்.. ஆனால்,பிதா.. குமாரனாக முடியாது. அதே போல் குமாரன் பிதாவாக முடியாது.. மீண்டூமாக தேவனால் = பிதாவாகவும் /குமாரனாகவும் / பரிசுத்த ஆவியானவராகவும்.ஆக முடியும்.
உதாரணத்திற்கு.. "நாம் மனுசரை உண்டாக்குவோமாக" என்ற வசனம்.. "தேவனாகிய கர்த்தர்,பூமியின் மண்ணினாலே மனுசனை.... மனிதன் = ஆவி / ஆத்துமா/ சரீரம் கொண்டவன். இதனால் மனிதன் மூன்றா? ஒருனவனா? அல்லது மூன்றும் இணைத ஒருவனா? பதில் அளித்தால் தோடரலாம்...
திரித்துவம் சம்பந்தமான போதனையை எழுத்துக்களால் விவரிக்க ஒருவராலும் கூடாது, அது உணர்வு பூர்வமானது என்று சொன்னாலும் நம்முடைய எதிரிகள் அதனை ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து புழுதி கிளப்பிக் கொண்டேயிருக்கிறார்கள்; சரி,நாமும் முயற்சிப்போமே என்று களத்தில் இறங்கியுள்ளோம்; மேற்கண்ட விளக்க சித்திரம்ஒரு துருபதேசத் தளத்திலிருந்து எடுத்ததாகும்; "திரித்துவம் என்பதே வேதத்தில் இல்லை திரியேக தேவன் என்பதே கட்டுக்கதை" என்பார், ஏன் இதுபோன்றதொரு விளக்கச் சித்திரத்தைப் பதித்தார்களோ அறியோம்; ஆனாலும் நம்முடைய தள நண்பர்கள் இந்த விளக்க சித்திரத்தைக் குறித்த தங்கள் கருத்தை முன் வைத்தால் நாமும் ஆரோக்கியமான விவாதத்தின் மூலம் சத்தியத்தை அறியும் வாய்ப்பு கிட்டும்.
ஒரு சிறு திருத்தம்: மேற்காணும் விளக்க சித்திரங்களில் ஒன்று திரித்துவத்தை மறுக்கும் எதிரிகளால் பயன்படுத்தப்பட்டாலும் அதனைத் தொடரும் செய்தியானது எதிரானதாகவே இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்;அதன் தொடுப்பைத் தொடருவது பெரிய விஷயமல்ல;அதனைத் தருவதிலும் எனக்கு எந்த பிரச்சினையுமில்லை;யாராவது இதில் ஆர்வம் காட்டினால் அதனை இணைக்க ஆயத்தமாக இருக்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)