Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆராதனை என்பது என்ன‌..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
ஆராதனை என்பது என்ன‌..?
Permalink  
 


இது நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவின் சார்பு அமைப்பான சிநேகா சிறுவர் மேம்பாட்டு மையத்தின் (பெப்ருவரி' 2010) ஜெபச் செய்தி மடலிலிருந்து  எடுக்கப்பட்டது:

images?q=tbn:ANd9GcSGnFuBLa6jYZoSxnXiNpFK5fai693DTN3WkmiFDul8CltQTcmpag

"பரலோக தேவனிடம் பணிவுடன் பரிந்து பேசுங்கள்"

"அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை." (ரோமர்.12:1)  

images?q=tbn:ANd9GcR3qrXVu4rfLvST6G-eilK-k79Uf5D4fAVsCZvmhcEZ9RwsVjeA1Q

ஆராதனை

ஆராதனைக்கு ஆலயம் அவசியம் - ஆனால்
ஆலயத்தில் ஆராதனை மிகமிக அவசியம்


ஆராதனையில் ஆரவாரம் இருக்கும் - ஆனால்
ஆரவார‌ங்கள் எல்லாம் ஆராதனை அல்ல‌


ஆராதனையில்,
அழகு வார்த்தைகள் அவசியம்
அழகு ராகங்கள் அவசியம்
அழகு இசைகளும் அவசியம் -இதைவிட
ஆண்டவர் மிகமிக அவசியம்.


அர்த்தமுள்ள ஆராதனை
உணர்வுகளை அல்ல,
உள்ளத்தைத் தொடும்.


ஆராதனை ஆண்டவருக்கு
ஆசீர்வாதம் ஆராதிப்பவனுக்கு.

பரலோக தேவன் உனக்குள் உலாவ "ஆராதனை செய்"


images?q=tbn:ANd9GcQNYMEirvcwxkoMnEYgJyJFB8ZdOpb8E8upuRBegjSBIZuTpqoI

ஆராதித்து மகிழ்பவர்கள் விசுவாசிகள்
மகிழ்ந்து ஆராதிப்பவர்கள் சீஷர்கள்

தேவனை நம்புகிறவர்கள் விசுவாசிகள்
தேவன் நம்புகிறவர்கள் சீஷர்கள்

தன் பாவத்திற்காக‌ ஜெபிப்பவன் விசுவாசி
பிறர் பாவத்திற்காக ஜெபிப்பவன் சீஷன்

வேதத்தை வாசிக்கிறவன்
விசுவாசி
வேதத்தை தியானிக்கிறவன்
சீஷன்

துன்பத்தில் ஜெபிக்கிறவன்
விசுவாசி
துன்பத்தில் துதிக்கிறவன் சீஷன்

images?q=tbn:ANd9GcRu6dPXRPLRxrNFGwxAQk4McrVJw0MfQRq52eJTfcCekcapsRZq

இன்று தேவனை துதிக்கிறவன்
நாளைக்கு தேவனுக்கு நன்றி செலுத்துவான்

உன் ஆராதனையில் உள்ளம் நிறைந்தால்
உன் உதடுகள் திறக்கும்

துன்பப்படுத்துகிறவனைப் பார்த்தால் கோபம் வரும்
துன்பப்படுகிறவனைப் பார்த்தால் வேதனை வரும் -ஆனால்
துன்பத்தில் இருந்து நம்மை விடுவிக்கிற‌வரைப் பார்த்தால் சாதனை வரும்


images?q=tbn:ANd9GcQCldJLbTcUn3rI8AmOs8nQO-DQBVF8RHrRK2JmiJWpMM86T_Vu

துதிப்பதன் விளைவுகள்... வேதத்தின் நிழலிலிருந்து...


தேவன் லேயாளுக்கு யூதாவைக் கொடுத்தார்,
லேயாள் தேவனைத் துதித்தாள். (ஆதியாகமம்.29:35)

இஸ்ரவேலர் தேவனைத் துதித்தார்கள்;
தேவன் எரிகோ கோட்டையை உடைத்தார்.(யோசுவா.6)

தேவன் தாவீதின் இராஜ்யத்தை ஆசீர்வதித்தார்,
தாவீது தேவனைத் துதித்தார்.(1.நாளாகமம்.23 )

தாவீது தேவனைத் துதித்தார்,
தேவன் தாவீதை இராஜாவாக மாற்றினார்.(1.சாமுவேல்.16)

தேவன் அன்னாளுக்கு சாமுவேலைக் கொடுத்தார்,
அன்னாள் தேவனைத் துதித்தாள்.(1.சாமுவேல்.2)

யோசபாத்தின் சேனை தேவனைத் துதித்தார்கள்,
தேவன் எதிரிகளை வெட்டுண்டு மடியச் செய்தார். (2.நாளாகமம்.20:21,22)

தேவன் தமது மகிமையை தேவ ஆலயத்தில் இறக்கினார்
சாலொமோன் தேவனைத் துதித்தார்
. (2.நாளாகமம்.7 )

எசேக்கியா,ஜனங்களைத் துதிக்கச் செய்தார்,
ஜனங்களின் விண்ணப்பம் பரலோகத்தை எட்டியது.(2.நாளாகமம்.30:20-27)

images?q=tbn:ANd9GcS1h5hqAuYBQOJmdn-ZhAjslth0uB0QANGGg1Zn1cZ-S8BDFHkYYQ


(படைப்பு:சகோதரர் கிங்ஸ்லி அவர்கள்)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard