இது நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவின் சார்பு அமைப்பான சிநேகா சிறுவர் மேம்பாட்டு மையத்தின் (பெப்ருவரி' 2010) ஜெபச் செய்தி மடலிலிருந்து எடுக்கப்பட்டது:
"பரலோக தேவனிடம் பணிவுடன் பரிந்து பேசுங்கள்"
"அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை." (ரோமர்.12:1)
ஆராதனை
ஆராதனைக்கு ஆலயம் அவசியம் - ஆனால் ஆலயத்தில் ஆராதனை மிகமிக அவசியம் ஆராதனையில் ஆரவாரம் இருக்கும் - ஆனால் ஆரவாரங்கள் எல்லாம் ஆராதனை அல்ல
ஆராதனையில், அழகு வார்த்தைகள் அவசியம் அழகு ராகங்கள் அவசியம் அழகு இசைகளும் அவசியம் -இதைவிட ஆண்டவர் மிகமிக அவசியம். அர்த்தமுள்ள ஆராதனை உணர்வுகளை அல்ல, உள்ளத்தைத் தொடும்.
இன்று தேவனை துதிக்கிறவன் நாளைக்கு தேவனுக்கு நன்றி செலுத்துவான்
உன் ஆராதனையில் உள்ளம் நிறைந்தால் உன் உதடுகள் திறக்கும்
துன்பப்படுத்துகிறவனைப் பார்த்தால் கோபம் வரும் துன்பப்படுகிறவனைப் பார்த்தால் வேதனை வரும் -ஆனால் துன்பத்தில் இருந்து நம்மை விடுவிக்கிறவரைப் பார்த்தால் சாதனை வரும்