கிறித்தவர்கள் விசேஷமாக தமிழ்க் கிறித்தவர்கள் ஜாதி பார்த்து தங்கள் இனத்திலேயே சம்பந்தம் கலப்பது உலகப் பிரசித்தம்; இதைக் குறித்து யாரேனும் கேள்வி எழுப்பினால் அவர்கள் கைக் காட்டுவது ஆபிரகாம் எனும் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவானையே..! இதைக் குறித்த எனது இன்றைய சிந்தனை
ஆபிரகாம் ஜாதி வேறுபாடு பார்த்தது உண்மை தானா..?ஆபிரகாம் கிறித்தவரா? ஆபிரகாமைக் குறித்த முழு வரலாற்றுப் பின்னணியையும் ஆபிரகாம் எந்த இடத்தில் ஜாதி வித்தியாசம் பார்த்தார் என்பதையும் அறிந்தோர்க்காக சுருக்கமாகச் சொல்லுகிறேன்,ஆபிரகாம் தன் தேசத்தையும், இனத்தையும், தன் தகப்பன் வீட்டையும் விட்டு வெளியேறி வந்தவர் என்பதால் அவர் மீது ஜாதி உணர்வுடையவர் என்ற குற்றச்சாட்டை வைக்கமுடியாது; ஆனால் அவர் தன் மகன் ஈசாக்குக்கு தன் இனத்தைச் சேர்ந்த பெண்ணையே வாழ்க்கைத் துணையாக்க விரும்பினாரே அது என்ன? நல்ல கேள்வி தான்; இதற்கு நல்ல பதில்களை என்னால் தரமுடியும்; ஆனால் நான் அறிய விரும்புவது என்னவென்றால் கிறித்தவரல்லாத ஆபிரகாம் தன் இனத்தில் தன் மகனுக்குப் பெண் தேடியதற்கும் கிறித்தவரான நாம் நம்முடைய இனத்திலேயே சம்பந்தம் தேடுவதற்கும் வித்தியாசம் இல்லையா என்பதே..! நாம் நம்முடைய கிறித்தவ விசுவாசத்தைவிட நம்முடைய இனத்துக்கு முக்கியத்துவம் தருவது சரிதானா..? ஆபிரகாம் வேற்று இனத்தில் பெண் எடுக்கத் தயங்கியதற்கு ஒருவேளை அவர் ஜீவனுள்ள தேவன் மீது வைத்திருந்த விசுவாசத்தின் காரணமாக இருந்திருக்கலாம்; ஆனால் நாம் வேற்று இன சம்பந்தத்தைத் தவிர்க்கக் காரணம் நம்முடைய கிறித்துவ விசுவாசமா, என்று அறிய விரும்புகிறேன்.குறைந்த பட்சம் தன் இனத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் தன்னுடைய விசுவாசத்துக்கு அவளை எளிதாக சம்மதிக்க வைத்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக ஆபிரகாம் தன் இனத்திலேயே தன் மகனுக்கு பெண் தேடியிருக்கலாம்.
ஆனால் நாம் நம் இனத்திலேயே சம்பந்தம் தேட நம்முடைய கிறித்தவ விசுவாசம் காரணமாக இல்லாதபட்சத்தில் இந்த காரியத்தில் இனி ஆபிரகாமை மேற்கோள் காட்டுவதைத் தவிர்க்கவேண்டும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)