எனக்கு அருமையான நண்பர்களே, இந்த உலகின் எந்தவொரு கலாச்சாரமோ மார்க்கமோ இன,மொழி வேறுபாடின்றி உலகமுழுவதையும் ஒன்றுபடுத்தும் ஒரு அம்சம் ஒன்று உண்டானால், அது ஒரு வாரம் என்பதும் அதற்கு ஏழு நாட்கள் என்பதும் அதில் ஒரு நாள் நிச்சயமாக விடுமுறை என்பது தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
எனக்குத் தெரிந்த அளவில் உலகின் எந்தவொரு மார்க்கத்தாலும் இதற்குத் தகுந்த காரணமோ விடையோ சொல்லிவிடமுடியாது; ஆனால் யூதத்தின் மற்றொரு உலகளாவிய பரிமாணமும் பரிணாமமுமான கிறித்தவம் இதற்கு சரியானதொரு விடையை வைத்துள்ளது.
யூதர் மற்றும் கிறித்தவர்களுக்குப் பொதுவான பைபிள் எனப்படும் வேதாகமத்தின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில் முதல் அத்தியாயத்திலேயே ஒரு வாரம் என்பது என்ன என்பதையும் அதற்கு எத்தனை நாட்கள் என்பதையும் அவற்றின் விசேஷத்தையும் அதிலும் ஏழாவது நாளின் பிரமாணத்தையும் நாம் அறிந்திட முடியும்.
அதனை சுருக்கமாக அறிவோமானால் ஆறு நாள் வேலை செய்வதும் ஒரு நாள் ஓய்ந்திருத்தல் என்பது தான்; இந்த ஆறுக்கு ஒன்று என்ற ஒப்பந்தம் தேவன் தாமே சிருஷ்டிகர் என்பதற்கும் மனுஷனைப் படைத்தவர் என்ற உரிமைக்கும் உறவுக்கும் அடையாளமாக இருக்கிறது; இதன் காரணமாக ஆண்டவர் எதிர்பார்ப்பது என்னவென்றால் தாம் மனுஷனை சந்திக்கும் நாளாக ஒரு நாளை விசேஷித்திருக்கிறார்; அந்த நாளில் அவன் தன் வேலைகளைவிட்டு ஓய்ந்திருந்து சிருஷ்டிகரை தியானித்துக்கொண்டிருந்து அவருடைய பாதத்தில் அமர்ந்திருக்கவேண்டும்.
இது ஒன்றே இந்த உலகைப் படைத்த இறைவன் மனிதனிடத்தில் எதிர்பார்க்கும் ஒரே ஒரு காரியமாகும்; இது சம்பந்தமாகவே அனைத்து வெற்றிகளும் தோல்விகளும் பின்னிப்பிணைந்து இருக்கிறது; இதனைப் பின்பற்றியே அனைத்து மார்க்கங்களும் பக்திமுயற்சிகளும் வழிபாடுகளும் தோன்றி செழித்தது; ஆனாலும் இந்த உலகைப் படைத்த கடவுளைக் குறித்து அறியும் அறிவினால் அவர் அமைத்துக்கொடுத்த பூஜாமுறைகளின் பிரகாரமாக அவரைத் தொழுவோருக்கே அவர் அருள் பாலிக்க இயலும்.
எனவே தள நண்பர்கள் யாரும் இங்கே நேரத்தை வீணாக்காமல் உடனே எழுந்து அருகிலிருக்கும் ஆலயத்துக்குச் சென்று அங்கே ஆராதிக்கும் அடியவர்களுடன் இணைந்து ஆவியான தேவனை ஆவியில் நிரம்பி பாடித் துதித்து மகிழ்ந்திருந்து உங்களையும் உங்கள் வாழ்வையும் உங்களை நம்பியிருப்போரையும் செழிப்பாக்கிக் கொள்ள (வாருங்கள் என அன்போடு அழைக்கிறேன்..) செல்லுங்கள். "கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன். "(சங்கீதம்.122:1)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)