Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பேதையான புறாக்களைப் போல...


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: பேதையான புறாக்களைப் போல...
Permalink  
 


துருபதேசக்காரனின் தந்திரங்களில் ஒன்று ஒன்றுந் தெரியாதவன் போலவும் ஏதோ தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருப்பது போலவும் உள்ளே நுழைவான்;ஆனால் ஒருபுறம் அப்பாவி போல நட்பு பாராட்டிக் கொண்டே மறுபுறம் தனது காரியத்தில் கவனமாக இருப்பான்; இதோ அதற்கு ஒரு உதாரணம்:

// நன்றி நண்பரே, தங்களின் ஆலோசனைக்கு. நான் வேதத்தை அறிவதில் ஒரு பாலகனாகவே தற்பொழுது இருக்கிறேன். வேதத்தை கூட அண்மையில் தான் படிக்க ஆரன்பிதேன். மற்றும் நீங்கள் எல்லோரும் எழுதும் பதிவுகளை தினம் தோறும் வாசித்து சத்தியத்தை அறிந்து கொள்கிறேன்.
அடுத்து நீங்கள்  //வாழ்வின் துன்பங்களுக்கான காரணத்தை கண்டறிதல்!// என்ற தலைப்பில் எழுதிய பதிவுகளையும் வாசித்தேன். அருமையாகவும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி //

இந்த சரக்குகளின் ஆதாரம் என்ன என்றும் இது எங்கோ கொண்டு நிறுத்தும் என்றும் நன்கு அறிந்தும் கண்களைத் திறந்துவைத்துக்கொண்டே கிணற்றில் விழுவது போலவும் மற்றவரையும் தள்ளிவிடுவதைப் போலவும் பலர் எச்சரித்தும் துணிகரமாக தனது தளத்தில் இந்த எழுத்துக்களை அனுமதித்து தமிழ்க் கிறித்தவ தளத்தை மாசுபடுத்திக் கொண்டிருக்கும் சுந்தர் போன்ற பேலியாளின் மக்களுக்காக மனம் வருந்துகிறோம்;

இறைவன் தளத்தில் புதிதாக உள்ளே நுழைந்தவர் ஒன்றும் அறியாதவராம், கற்றுக்கொள்ளப்போகிறாராம்;ஆனால் அவர் பதித்திருக்கும் புற்றீசலைப் போன்ற தலைப்புகளும் அதற்கு அவர் கொடுத்திருக்கும் தொடுப்புகளையும் பார்த்து கூட சுந்தருக்கு தெளிவடைய முடியாவிட்டால் அவரை நடத்துவது எந்த ஆவி என்று உணர்ந்து கொள்ளமுடிகிறதா? இவரைக் கொஞ்சம் பாராட்டிவிட்டால் போதும், அதற்கு மயங்கியா தன் இரட்சகரைப் போஸ்ட்மார்ட்டம் செய்வது..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

paul222@TCS On 15-01-2011 16:40:13

babies_8%20new.jpg

சகோதரர் கொல்வின் அறிவிப்பு ஆச்சரியமாக இருக்கிறது.ஒரு சகோதரருடன் ஏற்பட்ட மனவருத்தத்தில் தளத்தை விட்டு போகிறேன் என்பது சிறுபிள்ளைதனமாக இருக்கிறது.மறுபரிசீலனை செய்யும்படி கோட்டுக்கொள்கிறேன்.

மேலும் சகோதரர் சில்சாம் அவர்களை பற்றி.....

துருபதேசகாரர்களை தான் அவர் கடுமையாக சாடுகிறார். அவர் தன் நிலைப்பாட்டை தெளிவாக கூறிவிட்டாரே!
தவறான உபதேசத்தின் வாயிலாக இளம் விசுவாசிகள் பலியாகக்கூடாது என்கிற நல்ல எண்ணத்தில்தான் கடிந்து கொள்கிறார்.ஆனால் தனி நபர் தாக்குதல் தவறு என்று நானும் கூறியவன்தான்.ஆனால் ஆண்டவருக்கு விரோதமாக வேதவசனங்களை புரட்டுபவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதில் ஒன்றும் தவறு இல்லை.முதன்மை சீஷனாகிய பேதுருமீது அந்தியோகியேவில் குற்றம் சுமந்தபோது அப்போஸ்தனாகிய பவுல் முகமுகமாக எதிர்த்ததை வேதத்தில் பார்க்கிறோம். நண்பர்கள் மனம் வருந்துவார்களே என்று கடிந்து கொள்ளாமல் மௌனமாக இருப்பவர்கள் ஒருவகை.தவறான உபதேசம் செய்தால் அது யாராக இருந்தாலும் கடிந்து கொள்பவர்கள் இன்னோருவகை. சகோதரர் சில்சாம் இரண்டாம் வகையை சார்ந்தவர். ஆண்டவருக்கடுத்த காரியங்களில் compromise செய்து போவது என்னை பொறுத்தவரை சரியல்ல.

chillsam Wrote on 15-01-2011 01:20:59:

கொல்வினைக் குறித்து நான் ஒரு வார்த்தையும் எழுதவில்லை; அவரைக் குறித்த எந்த தீய எண்ணமும் என் மனதில் இல்லை;

pgolda Wrote on 15-01-2011 00:51:15:

அப்படியானால் சரி! Thanks for the explanation!

chillsam Wrote on 14-01-2011 22:42:56:

கொல்வின்
மற்றும் சுந்தர் அவர்களுடைய பிரிவுக்கு நான் காரணமாக இருந்திருந்தால் அவர்களிடம் இந்த தளத்தின் வாயிலாக மன்னிப்பு கோருகிறேன்..!

pgolda Wrote on 15-01-2011 00:51:15:

Accept the apology Colvin!

chillsam@Tcs On 16-01-2011 00:23:13
wordofgodhitssatan.gif

தயவுசெய்து நண்பர்கள் என்னை மையப்படுத்த வேண்டாம்; கொல்வின் அவர்களது மனம் புண்படும்படி நான் எதை எழுதினேன் என்று தெரியவில்லை; ஆனால் தளத்தின் ஒருமனப்பாட்டைக் கருதி நான் மீண்டும் மன்னிப்பு கோருகிறேன்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

pgolda@TCS On 15-01-2011 01:08:47

water%20lilies.jpg

சிலசாம் அவர்களே ! கொல்வின் எந்த தளத்திற்கு சென்றாலும் தன விசுவாசத்தை காத்துக் கொள்ளுவார் என்று நான் நம்புகிறேன்.எனவே அவரை திட்டுவதை விட்டு விடுங்கள் !


நண்பரே, கொல்வின் எனும் ஒரு நபருக்காகவா நான் இங்கே உட்கார்ந்து மணிக்கணக்காக அமர்ந்திருந்து வாசித்து வாசித்து பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்; எனது எழுத்துக்கள் எதுவுமே காப்பி பேஸ்ட் செய்யப்படுவதில்லை என்பதை கவனிக்கவும்;சற்று பொறுப்புணர்வுடன் யோசியுங்கள், நண்பரே; கொல்வினைக் குறித்து நான் ஒரு வார்த்தையும் எழுதவில்லை; அவரைக் குறித்த எந்த தீய எண்ணமும் என் மனதில் இல்லை; அப்படியானால் அவரிடம் ஏதோ கோளாறு இருக்கிறது என்றே அர்த்தம் நான் எனக்குக் கொடுக்கப்பட்ட வெளிச்சத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்; என்னைக் குறித்து விமர்சிக்கவும் குறைகூறவும் திருத்தவும் கொல்வினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று அறிய விரும்புகிறேன்; அவர் தனக்கு சிறிதும் சம்பந்தமில்லாத காரியத்தில் மூக்கை நுழைத்துவிட்டு மாய்ந்துபோகிறார்; நான் யாருக்கு எதிராக பணிபுரிகிறேனோ அவன் சாந்த சொரூபியாக அமர்ந்திருக்கிறான்; ஆனால் ஒருபாவமுமறியாத ஆடுகள் முட்டிக்கொண்டு இரத்தம் சிந்துகிறது..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Chillsam@Tcs

// இங்கு கிறிஸ்துவுக்கு விரோதமான எந்த உபதேசிகளும் ஆக்கிரமிக்க முடியாது அந்த பயம் உங்களுக்கு வேண்டாம்.இது ஆவிக்குரிய பிள்ளைகளால் நிர்வாகிக்கபடும் தளம்.அதனால் அவ்வளவு சீக்கிரத்தில் எதுவும் அனுமதிக்கப்படாது. //

நண்பர் மைகோவை அவர்கள் நம்முடைய தமிழ்க் கிறித்தவ தளத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு மேற்கண்ட கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள்; ஆனால் நான் சொல்ல வந்தது அதுவல்ல; நான் முழு தமிழ் இணையத்தையும் மனதில் கொண்டு யோசிக்கிறேன்; தமிழ் மொழியில் கிறித்தவம் சம்பந்தமான எந்தவொரு சேதியை நீங்கள் தேடுபொறி (Search engine) யில் தேடினாலும் அது புதியவர்களை நேராக துருபதேசத் தளத்துக்கே கொண்டு சென்று சேர்க்கும் என்பதே எனது அச்சம்; அதனை இந்த நவீன காலத்தில் யாராலும் தடுக்க இயலாது என்பது எனக்குத் தெரியும்; ஆனால் ஏற்கனவே நம்முடைய விசுவாசத்தை ஒடுக்கும் முயற்சிகள் இந்து இஸ்லாமிய தளங்களில் முழுமூச்சுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நம்முடைய சகோதரர்கள் என்ற போர்வையில் இன்னும் குழப்பத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் செயல்படும் துருபதேசக்காரர்களை என்ன செய்வதாக உத்தேசம்..? குறைந்த பட்சம் நம்முடைய எல்லைகளையாவது நாம் காக்கவேண்டாமா?

உதாரணமாக காட்டுத் தீயானது வேகமாக மக்கள் வாழும் பகுதியை நெருங்கிவரும் போது நம்மையுடைய எல்லைகளைப் பாதுகாக்க ஒரு சிறுபகுதியை கொளுத்திவிடுவார்களே அதைப்போன்ற ஒரு முயற்சியாக நாம் என்ன செய்யலாம்? வழக்கம்போல ஜெபித்தால் போதுமா அல்லது ஆரோக்கிய உபதேசத்தைக் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாமா? இங்கே என்னால் விமர்சிக்கப்படும் எதிரிகள் என்னைத் தாக்குவதைப் போல அற்புதம் , கொல்வின் போன்ற மிதவாதிகளை பொருட்படுத்துவதில்லை; இதற்கு என்ன காரணம்? என்னைவிட அற்புதம் போன்றவர்கள் இன்னும் அதிகமாக நம்முடைய விசுவாசத்தை மையமாகக் கொண்டு எழுதுகிறார்கள்; அதாவது எது சரியானது என்பதை மிக அழகாக எழுதிவைத்துவிட்டு அமர்ந்துவிடுகிறார்கள்; இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்புமில்லை; ஆனால் எவையெல்லாம் சரியில்லை என்று அடையாளங் காட்டும் என்னைப் போன்றோர் பல்முனைத் தாக்குதலுக்கு உள்ளாகிறோம், பரியாசம் பண்ணப்படுகிறோம்; காரணம் என்ன‌?

உதாரணத்துக்கு அரசு அலுவலகத்தின் ஒரு அறிவிப்பு பலகை சொல்லும் சேதியானது, "லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தண்டனைக்குரிய செயல் " என்று வைத்துக்கொள்வோம்; அதனால் வாங்குபவருக்கும் கொடுப்பருக்கும் எந்தபாதிப்புமில்லை; ஆனால் அவர்கள் இன்னார் என்று என்னைப் போன்றோரால் அடையாளம் காட்டப்பட்டால் குழப்பம் வரும் தானே..? இதனால் என்னைப் போன்றோருக்கு என்ன இலாபம் என்றே கேட்கிறேன்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

Chillsam@Tcs

இங்கே நமது அருமை நண்பர் சேகர் சாமுவேல் அவர்களுக்கு ஏற்புடையதாக இருந்த எனது கருத்து கொல்வினை ஏன் கோபப்படுத்தியது என்று புரியவில்லை; அவர் எனது தளத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டுரையைப் பதித்துவிட்டு மீண்டும் மீண்டும் என்னைக் கருத்து சொல்லும்படி ஏவினார்; ஆனாலும் நான் அவரது நட்பை விரும்பியதாலும் அவரது கட்டுரையில் சர்ச்சைக்குரிய விசுவாசத்தை பாதிக்கும் கருத்து எதுவும் இல்லாததாலும் மாற்று கருத்து எதையும் பதிக்கவில்லை; ஆனாலும் அவரே தொடர்ந்து என்மீது ஏதோ ஒருவித வன்மம் கொண்டு என்மீது புகார் செய்துகொண்டே இருக்கிறார்; நான் இங்கே குறிப்பிட்ட கருத்துக்கள் யாவும் யெகோவா சாட்சிகள் தளத்தைக் குறித்ததே; மேலும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க சுந்தர் அவர்களிடம் மிகவும் தாழ்மையாக வேண்டுதல் செய்திருக்கிறேன்; நாய் என்ற வார்த்தையும் சரி, ஓநாய் என்ற வார்த்தையும் சரி வேதத்தில் இருக்கிறதே; அது யாரைக் குறிப்பிட்டு சொல்லுகிறதோ அவர்களையே நான் அடையாளம் காட்டியிருக்கிறேன்; இப்படி வேருக்கே வெந்நீர் விட்டால் கனியை எப்படி பறிப்பீர்கள்..? எனினும் நண்பர் இராஜ்குமார் அவர்களின் கருத்துக்கு நன்றி கூறுவதுடன் கொல்வின் மற்றும் சுந்தர் அவர்களுடைய பிரிவுக்கு நான் காரணமாக இருந்திருந்தால் அவர்களிடம் இந்த தளத்தின் வாயிலாக மன்னிப்பு கோருகிறேன்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

rajkumar_s@TCS on 14-01-2011 22:26:23

savelife.gif
சகோ. கோல்வின் எடுத்த முடிவு மிகவும் தவறானது, அவரைப் போன்றவர்கள் நம்முடைய தளத்துக்குத் தேவை. இதே போன்ற ஒரு முடிவை எடுத்திருப்பதாக சகோ. சுந்தர் அவர்கள் கூட நேற்றிரவு எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தார்கள். இதுவும் வருந்தத்தக்கது, அவர் விலகுவதற்கான காரணமும் கோல்வின் அவர்கள் சொன்ன காரணம் தான். நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சபையாகக் கூடியிருக்கிறோம். ஒருவருக்கு ஒருவர் விசுவாச வளர்ச்சிக்கு ஏற்ற பல நல்ல விசயங்களை நாம் பகிர்ந்து கொள்கிறோம், நாம் அனேக விசயங்களில் தவறுகிறோம், ஆனால் அவைகள் பொறுத்துக் கொள்ளக்கூடியதே,

சில்சாம் அவர்களின் கடிந்து கொள்ளுதல் நியாயமானதே, அவர் சாடிய (ஆடுதிருடர்கள்) விசுவாசத்தில் வளர்ச்சியடையாத ஆண்டவருடைய மந்தையின் ஆடுகளை திருடவே முயல்கிறார்கள் என்பது என்னுடைய கருத்தும், ஆனாலும் முன்பே சொன்னது போல சொல்லவருகிற விசயம் நல்லதாக இருந்தாலும், சில மூன்றாம் தர வார்த்தைகளை அவர் பிரயோகிக்கும் போது அது சொல்ல வந்த நல்ல விசயத்தை விழுங்கி வெறுப்பு உண்டாகிறது. ஆனால் அதைப் பொறுத்துக் கொண்டு அவர் சொல்ல வரும் நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக பழகிக்கொண்டேன்

சகோ. சுந்தர், சகோ. கோல்வின், உங்கள் முடிவுகளை மாற்றிக்கொள்ளும் படி மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பதிவை வெகுவிரைவில் இங்கே பார்ப்பேன் என்று விசுவாசிக்கிறேன். மனிதர்களுக்காக அல்ல கிறிஸ்துவை அறிவிக்கவாவது உங்கள் முடிவை தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்களேன்

நன்றி


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

sekarsamuel@TCS on 14-01-2011 14:23:59

சகோ.சில்சாம் நீங்கள் டெவில்.காம் என குறிபிட்டிருக்கும் அந்த தளத்திற்குச் சென்றேன். அப்பப்பா! எவ்வளவு நயவஞ்சகமான ஊழியக்காரர்கள். வசனத்தை திரித்து பேசுவதில் ஜெகஜ்ஜாலக் கில்லாடிகள் அவர்கள். உதாரணமாக ஒன்றைக் கூறுகிறேன். அவர்களின் தளத்தில் about us பகுதியில் ஒரு வசனத்தை எப்படி திரிக்கிறார்கள் என்று பாருங்கள்.
“இவர் தேவ குமாரனாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருக்க எண்ணாமல், அக்கிரமங்களினால் ஜீவனை இழந்த மனுஷர் பேரில் மனதுருகி தம்மைத் தாமே வெறுமையாக்கி மனிதனாகி எல்லோரையும் மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனையே கொடுத்து தேவனுக்கும் மனுஷருக்கும் சமாதானத்தை உண்டு பண்ணினாரென்றும் விசுவாசிக்கின்றோம். (யோவா .10:36) ”

வேதாகமத்தில் இவர்கள் குறிப்பிட்டிருக்கிற வசனம் (இருவசனத்தி ஒன்றாக்கி, வசதியாக இருப்பிடத்தை மாற்றி குறிப்பிட்டு விட்டு விட்டார்கள்) எப்படி வருகிறது என்று பாருங்கள்.
“பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?”

தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் என்பதற்கும் தேவனுக்குச் சமமாக இருப்பதை எண்ணாமல் என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது பாருங்கள். அவர்களின் தளம் வஞ்சிக்கிறவர்களின் தளம் என்பதில் சந்தேகமே இல்லை.பழைய பாடல்களைக் கூட மாற்றி திரித்து அவர்கள் உபதேசத்துக்கேற்றவாறு பாடியிருக்கிறார்கள்.

தேவனே இவர்களை மன்னியும். வேதாகம வசன தெளிவு இல்லாதவர்கள் அவர்கள தளத்தைப் பார்க்காமல் இருந்தால் நலம்.


mycoimbatore@TCS on 14-01-2011 15:10:00


2210225144704a70c65b41.jpg
//அது என்னமோ தெரியல, இறைவன் தளத்தின் சுந்தரைத் தேடியே எல்லா ஓநாய்களும் படையெடுக்கிறது; நம்முடைய தளமானது இந்த (ஓ)நாய்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது குறித்து கர்த்தராகிய இயேசுகிறித்துவுக்கு மகிமை செலுத்துகிறேன்;
//

கிறிஸ்துவுக்குள் அன்பான போதகர் சில்சாம் அவர்களுக்கு விசுவாசத்தில் வளராத அல்லது தடுமாற்றம் உள்ள விசுவாசிகளை வஞ்சிக்கவே சாத்தான் அதிகமாக வாஞ்சிப்பான் என்பது ஒன்றும் புதிதில்லை.

//அருமை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்; நீங்கள் தெருவில் இறங்கி சண்டை போடவேண்டாம்; ஆனால் தமிழ்க் கிறித்தவ‌ இணையத்தை இந்த புல்லுறுவிகள் ஆக்கிரமித்து கொள்ளை கொண்டு போவதற்கு முன்பதாக நாம் விழித்துக்கொண்டு நம் நம்பிக்கையை இங்கே நிலைநிறுத்த அன்புடன் அழைக்கிறேன்;//

இங்கு கிறிஸ்துவுக்கு விரோதமான எந்த உபதேசிகளும் ஆக்கிரமிக்க முடியாது அந்த பயம் உங்களுக்கு வேண்டாம்.இது ஆவிக்குரிய பிள்ளைகளால் நிர்வாகிக்கபடும் தளம்.அதனால் அவ்வளவு சீக்கிரத்தில் எதுவும் அனுமதிக்கப்படாது.


//இதுபோன்ற ஆடு திருடர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதுடன் மற்றவர்களையும் எச்சரிக்க வேண்டுகிறேன்; பேசித் தான் பார்ப்போமே , பழகித் தான் பார்ப்போமே என்று துணிகரம் கொண்டால் ஆணுக்கு ஒரு உதாரணமும் பெண்ணுக்கு உதாரணமும் வேதத்தில் உண்டு, அவர்கள் நிலைமையே நம்முடைய சந்ததியாருக்கும் நேரிடும்; ஆணுக்கு ஒரு சிம்சோன்; பெண்ணுக்கு ஒரு தீனாள்.
//

இது தனிப்பட்ட நபர்களுக்கு சரி ஆனால் இது போன்ற இணையங்களுக்கு சரிப்பட்டு வராது.எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இங்கு முடிவுகள் எடுக்க முடியாது.

ஒரு சிலரைப் பற்றிய அறிவு நமக்கு முன்பே தெரிந்தாலும் அவர்கள் வாயில் பிடிபடும் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.அதுவே இணைய ஊழியத்தின் முறையாகும்.

மேலும் அவர்கள் பேசவேண்டும் இன்னும் அதிகமாய் பேச வேண்டும் அப்படி பேச ஆரபித்தால் தான் அவர்களின் சுயரூபம் வெளிப்படும்.

//சுந்தர் அவர்களை மீண்டும் தயவாக கேட்கிறேன்; நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசுவானவரைக் குறித்து அவதூறு செய்து அல்லது தேவத்துவத்தின் உயர்நிலைகளையும் அதன் மகத்துவத்தையும் அறியாதோரின் எழுத்துக்களை தங்கள் தளத்தில் வைத்துக்கொண்டு அவர்களுடன் பொறுமையாக விவாதம் நடத்திக்கொண்டு இருந்தால் நான் நேரடியாகவே சொல்கிறேன், உங்களைவிட பேதையும் முட்டாளுமான ஊழியனான விசுவாசி யாரும் இருக்கமுடியாது; இது ஒரு மகன் தகப்பன் இன்னாரே நிரூபித்து தன் தாயின் கற்பைக் காப்பாற்ற செய்யும் முயற்சியைப் போன்றதாகும்.//

கிறிஸ்துவுக்குள் அன்பான சுந்தர் உங்களை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம்.உங்களின் ஒருசில தனிப்பட்ட அனுபவங்கள் வேதத்துக்கு முரணானவை.

இது போன்ற ஒரு சில அனுபவங்கள் எனக்கும் உண்டு அவைகள் வேத வசனத்துக்கு முரணானவை அதனால் அவைகளை நான் வெளியே சொல்லகூட வெட்கப்படுகிறேன்.நானும் அவற்றை முழுமையாக மறக்க விரும்புகிறேன்.கள்ள உபதேசிகளுடம் நாம் விவாதிப்பது தவறல்ல.ஆனால் நாம் முழுமையாக தெளிவுள்ளாவர்களாக இருத்தல் வேண்டும்.

//கலகத்துக்கும் கலக்கத்துக்கும் காரணமான நாய்களை அடித்து விரட்டுங்க‌... அவனுக்கெல்லாம் வரவேற்பு ஒரு கேடா..? குறைந்த பட்சம் ஆரம்பத்திலேயே நீங்கள் நாடி பிடித்து உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுகிறேன்;இங்க வந்தாலும் நானும் அதையே செய்வேன்.

இங்கொன்றும் அங்கொன்றுமாக இலைமறைக்காயாக இருந்துகொண்டு விவாதித்துக்கொண்டிருந்த அந்த பிடாரிகள் இன்றைக்கு வெப்சைட் போட்டு வேலை பாக்கற அளவுக்கு வந்துட்டாங்க என்றால் நிலைமை அத்தனை மோசம் என்பதை நாம் உணரவேண்டும்.
//

தயவு செய்து இப்படிப்பட்ட வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.ஆரம்பத்தில் எதிர்ப்பை காட்டுவது தவறல்ல ஆனால் அவரகள் பேசாமலேயே இருந்து விடமாட்டார்கள் வேறு இடத்தில் பேசுவார்கள்.நாம் அவர்களை துரத்துவதை பார்க்கு சிலர் எதோ அவர்களிடம் மறைவான பொக்கிஷம் இருப்பதாக நினைக்கும்வாய்ப்பை நாம் ஏற்படுத்தி விடுகிறோம்.அவர்கள் பேசட்டும் அவர்களின் அத்தனை எழுத்துக்களும் போலி ,வஞ்ஞனையுள்ளது என்பதை நம் எழுத்தில் நிறுபிப்போம் அதை விடுத்து ஏன் இவ்வளவு கோப்பப்படுகிறீர்கள்.

நாம் நம்மவர்களை எச்சரிக்கலாமே தவிரஅவர்களை(வஞ்சகர்களை) தடை செய்ய முடியாது.அவன்(சாத்தான்) எப்படியும் களை விதைப்பவனே.களையும் வளரும் கதிரும் வளரும் கண்டிப்பாக களைகளை அறுத்தெரியும் ஆண்டவரின் கரங்கள் கண்டிப்பாக செயல்படும் அதற்காக ஜெபிக்க வேண்டுகிறேன்.

colvin@TCS on 14-01-2011 17:32:22


சகோ. சில்சாமின் முதிர்ச்சியற்ற பேச்சுக்கள் கண்டனத்திற்குரியவை. யாரையெல்லாம் இவர் குறிப்பிட வருகிறார் (சாடுகிறார்) என்பது விளங்குகிறது. தளவிதிமுறைகளையெல்லாம் மீறி இவர் எழுதுவதை தளநிர்வாகம் வேடிக்கை பார்ப்பது வருத்ததிற்குரியது.

இவருக்கு இது முதல்முறையல்ல. பலதடவை இதுபோன்ற விதமாக நடந்து கொண்டுள்ளார். மற்றவர்கள் கூறும் கருத்துகளை திரிப்பதிலும் இவருக்கு நிகர் இவரே. தனிநபர்களை சாடுதல் இவரிடம் அதிகமாக காணப்படுகின்றது.

இனி இங்கு பதிவிடுவது குறித்து யோசித்துக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் இதுவே என இறுதி பதிவாக இருக்க கூடும்..

வாய்ப்பளித்த தளநிர்வாகத்திற்கு நன்றி!. விடைபெறுகிறேன்.


mycoimbatore@TCS on 14-01-2011 17:54:48


2210225144704a70c65b41.jpg
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர் கோல்வின் அவர்களுக்கு உங்களின் கோபம் சரியானதே.பல இடங்களில் சில்சாம் அவர்கள் அப்படி எழுதுகிறார்.இதற்கு பல நேரங்களில் தள நிர்வாகம் கண்டித்துள்ளது.

வேடிக்கை பார்ப்பதாக நான் நினைப்பதில்லை பொருமை காக்கிறார்கள் என்றே சொல்லுவேன்.


//இவருக்கு இது முதல்முறையல்ல. பலதடவை இதுபோன்ற விதமாக நடந்து கொண்டுள்ளார். மற்றவர்கள் கூறும் கருத்துகளை திரிப்பதிலும் இவருக்கு நிகர் இவரே. தனிநபர்களை சாடுதல் இவரிடம் அதிகமாக காணப்படுகின்றது. //

தனி நபர் தாக்குதல் என்பது யார் தொடர்ந்தாலும் அது தடை செய்ய படவேண்டியதே.இந்த பதிவை பொருத்தவரை சில்சாம் அவர்கள் கொஞ்சம் ஆவேசப்படுகிறார் என்பதன் காரணம் புரிகிறது.அவரின் ஆதங்கள் கள்ள உபதேச பேர்வழிகளை பற்றியது.ஆனால் அதிலும் கடைபிடிக்கபட வேண்டிய ஒழுங்குகள் உண்டு.

//இனி இங்கு பதிவிடுவது குறித்து யோசித்துக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் இதுவே என இறுதி பதிவாக இருக்க கூடும்..

வாய்ப்பளித்த தளநிர்வாகத்திற்கு நன்றி!. விடைபெறுகிறேன்.//

என்ன இது சிறு பிள்ளை போல பேசுகிறீர்கள்.ஒரு சில நேரங்களில் இது போன்ற சூழ்நிலைகளை நாம் மேற்கொள்ள வேண்டுமே தவிர நாம் விலகி ஓடக்கூடாது.இது நம் அனைவரின் தளம்.இதில் இருந்து விலகுவேன் என்பதெல்லாம் தவறானது.தயவு செய்து அது போன்ற முடிவுகளை மாற்றுங்கள்.தொடர்ந்து வாருங்கள்.சில்சாம் அவர்கள் இந்த பதிவில் உங்களை எதுவும் சொன்னதாக எனக்கு தெரியவில்லை.

எது எப்படியோ ஆனால் நீங்கள் ஒரு தவறான முடிவை எடுத்துள்ளீர்கள்.அதை தயவு செய்து மாற்றுங்கள்


arputham@TCS on 14-01-2011 19:26:23

heaven-re.jpg

சகோ.கொல்வின் உங்கள் உங்கள் கருத்துக்களைக் கண்டோம். நம் தளத்தில் சகோ.சில்சாம் குறித்து கூறிய கூற்றுகளுக்கு சகோ.மைகோவை அவர்கள் சொன்னதே நிர்வாகக்குழுவின் கருத்தும் ஆகும். சமீப காலங்களாக நம் தளத்தில் அவ்வப்போது தனி நபர் தாக்குதல் எழுவது வருத்தமளிக்கிறது. சகோ. சில்சாம் அவர்களிடமும் முன்பு பலமுறை நான் நிர்வாகக்குழு சார்பாக பேசியிருக்கிறேன்.

பிரச்சனை என்னவெனில், கூடுமானமட்டும் உறுப்பினர்கள் எழுதுபவைகளை நிர்வாகக் குழு நீக்க விரும்புவதில்லை. நிர்வாகக் குழுவுக்கு வரும் கருத்துக்களை ஆராய்ந்தே செயல்படுகிறோம். ஒவ்வொருமுறையும் சொல்லுவது என்பதை விட நம் சகோதரர்களே புரிந்து சரியான வார்த்தைகளை தேர்வு செய்து எழுதினால் எவ்வித குழப்பமுமில்லை.

நாம் கோபம் கொள்ளும்போது கூட வார்த்தைகளை ஜாக்கிரதையாக எழுத வேண்டும். ஏனெனில் நாம் எழுதுகிற ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் எழுதுகிற நாமே பொறுப்பு. பிரதான தூதனாகிய மிகாவேல், மோசேயின் சரீரத்தைக் குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப்பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான். (யூதா 1:9)

நாம் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் பதில் சொல்ல வேண்டும் என்பதே நம் தள உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறோம்.

சகோ.சில்சாமுக்கு நாங்கள் கூற விரும்புவது என்ன வெனில், உங்களைக் குறித்து ஒரு சிறு விமர்சனம் எழுந்தால் கூட நீங்கள் அதற்கு சரியான பதில் கூறாமல் கோபப்பட்டு உங்கள் பதிவுகளை நீங்களே நீக்கியும் விடுகிறீர்கள். இதினால் யாருக்கு என்ன லாபம். உங்கள் ஒவ்வொரு பதிவுகளும் மிகுந்த பிரயாசத்தில் போடப்படுபவைகள் தானே! பின்னர் ஏன் அவசரப்படுகிறீர்கள். இப்போதும் நாங்கள் பொறுமையாகவே இருக்கிறோம்.

கடைசியாக நாம் சகோதரர்கள். நமக்குள் வாக்குவாதம் வேண்டாம் என்கிற வேத வசனத்தை நினைவு கூர்ந்து சமாதானமாகவும் தேவனுக்கு மகிமையாகவும் நம் உறவைத் தொடர்வோம். சகோ.கோல்வின் மற்றும் சகோ.சில்சாம் தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறோம்.

robin@TCS on 14-01-2011 19:38:31


red-capped_robin-male.jpg
சகோ. கொல்வின் அவசரப்படவேண்டாம். தொடர்ந்து வருகை தாருங்கள்.


Chillsam@TCS on 14-01-2011 21:33:22


ஆரோக்கிய உபதேசத்துக்காக நிற்கும் சகோதரர்களைத் தவிர வேறு யாரையும் மதிக்கும் எண்ணம் நமக்கு இல்லை; மேலும் இதுவரை ஆண்டவருடைய திவ்ய அன்பையறியாதோரின் பாதங்களை நானே கழுவி என் தலையில் ஊற்றிக்கொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன்; வேறு யாரிடமும் நிதானமாக நின்று பேசும் அவகாசம் எனக்கில்லை; ஏனெனில் இந்த ஓநாய்களால் நான் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டிருக்கிறேன்; எனக்கு அருமையான பல நல்ல குடும்பங்களை இழந்திருக்கிறேன்; அனைத்தையும் கர்த்தர் அறிவார்..!


மேற்கண்ட கருத்துக்கள் தமிழ்க் கிறித்தவ தளத்தின் நண்பர்களுடைய கருத்துக்கள் இதில் அவர்களெல்லாராலும் விமர்சிக்கப்பட்டது யார் என்றும் நண்பர்களின் கவனம் எதில் இருக்கிறது என்றும் எனக்கன்பான வாசகர்களே அறியட்டும்; நாம் மீண்டும் மீண்டும் விவாதப் பொருளாக வேண்டாமே என்ற ஒரே எண்ணத்துடன் சர்ச்சைக்குக் காரணமான நமது முந்தைய கருத்தை நீக்கிவிட்டு மேற்காணும் நமது பொதுவான கருத்தை அங்கே பதித்துள்ளோம்; எத்தனை முறை தான் தீர்மானத்தாலும் பழக்க தோஷமும் பழகிய பாசமும் விட்டுப் போகாததால் அங்கே மீண்டும் மீண்டும் சென்று குட்டு வாங்கிக் கொண்டு தலையத் தடவிக் கொண்டு வருவது நமக்கும் பழகிவிட்டது..!

இப்போதைக்கு - எனக்குத் தெரிந்த அளவில் தமிழ்க் கிறித்தவ உலகின் நல்லதொரு கலந்துரையாடல் தளமாக விளங்குவது தமிழ்க் கிறித்தவ தளமாகும்; எனது கருத்துக்களை முதன்முதலில் பதித்த தளமாதலால் உரிமையுடன் அங்கு சென்று வருவது எனது வழக்கம்; ஆனாலும் அந்த தளமானது செயல்படுவது தடைபட்டிருந்த காலத்தில் கிடைத்த வேறு சில வாய்ப்புகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் தொடர்ந்து இறைப் பணியாற்றி வருகிறோம்; நாம் ஆரோக்கிய உபதேசம் என்று நிர்ணயித்துக் கொண்டவற்றுக்காக மாத்திரமே போராடுகிறோமேயன்றி யார் மீதும் எந்த வித தனிப்பட்ட விரோதமோ காழ்ப்புணர்ச்சியோ நமக்
கு எந்த காலத்திலும் கிடையாது; யாருடைய புகழ்ச்சிக்காகவோ சுயபெருமைக்காகவோ சுயலாபத்துக்காகவோ இதுவரை செயல்பட்டது இல்லை; இவையெல்லாவற்றிலும் என்னை மீட்டுக்கொண்ட எனது அருமை இரட்சகரான இயேசுவானவருக்கே பயந்திருக்கிறேன்; அவருடைய பரிசுத்த நாமத்தை நானும் என் வீட்டாரும் தொழுவதை எவன் குறைகூறுகிறானோ அவனைக் குறித்து என் ஆவி சஞ்சலம் அடைகிறது; இவனை வைத்துக்கொண்டு நான் எப்படி இயேசுவானவரின் அருமை பெருமைகளைக் குறித்து பேசவோ எழுதவோ முடியும் என்று தெரியவில்லை; நான் மாதா வணக்கத்தையோ, தூதர் வணக்கத்தையோ, புனிதர் வணக்கத்தையோ குறித்து இங்கு பிரச்சாரம் செய்யவில்லையே..? அப்படியானால் பிரச்சினை எங்கேயோ அங்கே மோதாமல் என்னிடமே சிலர் கசந்துகொள்ளுவதைப் பார்த்து சாத்தானுக்கு ஒரே கொண்டாட்டம்..!

"நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்." (2.தீமோத்தேயு.3:14,15)

"சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்லு." (2.தீமோத்தேயு.4:2)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

உடனடி ரியாக்ஷன் எங்கிருந்து வருகிறது, பார்த்தீர்களா? நான் கடந்த நள்ளிரவில் இந்த எச்சரிக்கையைப் பதித்தேன்; காலையில் வந்து  பார்த்தால் நமக்கு அருமையான கோவை பெரியன்ஸிடமிருந்து அதற்கு நல்லதொரு ஆதரவான பதிலைக் கண்டு ஆனந்தமடைந்தேன்...

// சில்சாம் அவர்களே, நாங்கள் பிஸ்கோத்து தான், எழை முதல் அனைவரின் பசியையும் ஆற்ற கூடிய தன்மையுடையவர்கள்!! சத்தியத்திற்காக கூட்டம் சேர்க்காமால், ஐய்யோ என் தளத்தில் ஒருவனும் எனக்கு ஆதரவாக எழுத மாட்டேன் என்கிறானே என்று ஆதரவு கேட்டு மன்றாடும் பழக்கம் எனக்கு இல்லை!! ஏற்ற நேரத்தில் ஆகாரத்தை எனக்கு என் தேவன் தருகிறார்!! இன்னும் கொஞ்சம் காலம் தான் அது வரையில் ஆட்டம் போடும் இந்த பிசாசின் கோட்பாடுகள், அதன் பின் நீதியின் சூரியன் உதிக்கும் போது அவர் செட்டையின் நிழலில் ஆரோக்கியம் பெற்று, எல்லாவற்றையும் தெர்நிதுக்கொள்வீர்கள்!! இன்று உங்களுக்கு துருபதேசமாக தோன்றுவது எல்லாம் (பிசாசு கண்களை கட்டி வைத்திருக்கானே) நாளை கிறிஸ்துவின் வருகையில் வெளிச்சமாகி விடும், முதலில் கண்கள் கூச தான் செய்யும் (உமது நாமத்தின் இதை செய்தோமே, அதை செய்தோமே, தமிழ் கிறிஸ்தவ தளத்திற்கு பரிந்து பேசினோமே) ஆனாலும் அவரின் கிருபையினால் எல்லாவற்றையும் தெரிந்துக்கொள்வீர்கள்!!

சத்தியம் ஊடுருவி ஒவ்வொரு தளமாக போகும் போது இப்படி தான் கூச்சலிட துவங்குவீர்கள்!! உங்களுக்கு வசனங்களை வைத்து ஆரோக்கியமான விவாதம் நடத்த தெரியாததினால், அடுத்தவனை மிருகம் என்றும், இன்னும் பிசாசின் பார்வையில் வேதத்தில் அவனுக்கு பிரியமான விஷயங்களையும் பெயர்களையும் தேடி பிடித்து கொடுப்பீர்கள்!! வேறு என்ன உறுப்படியா தெரியும்!! சுந்தர் தளத்தில் ஒருவர் சத்தியத்தை கொண்டு வந்ததால் அதை வசன ஆதாரத்துடன் தவறு என்று நிரூபித்து காண்பிப்பதை விட்டு விட்டு, சும்மா கூச்சலிட்டு, மிரட்டி, சபித்து, அடுத்தவர்களை மட்டம் தட்டி, எழுதும் அளவிற்கு தான் உம்மிடம் விஷயம் இருக்கு என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறீர்!!



சில்சாமை எரிச்சலடைய செய்த பதிவுகள்:

1) பரிசுத்த வேதாகமமாகிய “பைபிள்” புத்தகத்தை எழுதியது யார்? (http://lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=40478014)

2) வேதாகமத்தை நாம் எவ்வாறு படிக்க வேண்டும்? (http://lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=40478125)

3) தேவன் உண்டென்று நாம் அறிய முடியுமா? (http://lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=40478182)


4) சத்திய வேதாகமம் கூறும் தேவனுடைய தன்மை குணலட்சணங்கள் என்ன?
(http://lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=40478202)

5) வேதாகமத்தில் தம்மை வெளிப்படுத்திய மெய்தேவனின் நாமம் என்ன?
(http://lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=40478234)


6) இயேசு கிறிஸ்து யார்?
(http://lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=40478248)


சுந்த‌ராவ‌து இந்த‌ ப‌திவுக‌ளை விட்டு வைப்பாரா அல்ல‌து, சில்சாம் போன்றோரின் மிர‌ட்ட‌லுக்கு அடி ப‌ணிவாரா என்று பொறுந்திருந்து தான் பார்க்க‌ முடியும்!! அது வ‌ரையில் முடிந்த‌வ‌ர்க‌ள் இந்த‌ தொடுப்பை ப‌ய‌ன்ப்ப‌டுத்த‌லாம்!!

இதை எல்லாம் வாசித்து விட்டு, த‌ன் வீட்டு குப்பையை ச‌ரி செய்யாத‌வ‌ர் அடுத்த‌வீட்டின் தூசியை த‌ட்ட‌ கிள‌ம்பியிருக்கிறார் போப்புக‌ளின் வாரிசு சில்சாம்!! போப்புக‌ளும் ஒரு கால‌த்தில் த‌ங்க‌ளை கிறிஸ்துவின் விகார் (Vicar) என்று சொல்லிக்கொண்டு, நாங்க‌ள் சொல்லுவ‌து தான் கிறிஸ்த‌வ‌ம் என்று இருந்தார்க‌ள், சில்சாம் அதை சுமார் 1700 வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து த‌ன்னை மீண்டும் ஒரு போப் என்று என்ன‌த்தில் ந‌ட‌க்கிறார்!! ச‌த்திய‌த்தை பார்த்த‌வுட‌ன் சில்சாமின் விம‌ர்ச‌ன‌ம்;

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=40343255

இவ‌ர்க‌ளின் விசுவாச‌ம் நிச்ச‌ய‌மாக‌ இந்த‌ உல‌க‌த்தில் ப‌ர‌வும் அப்ப‌டி தான் வேத‌ம் சொல்லுகிற‌ர்து, ஆனால் தேவ‌ன் த‌ன் ச‌பையை இந்த‌ உல‌க‌த்திலிருந்து தான் தேர்ந்துக்கொள்வார், அதை நின்று வேடிக்கை பார்க்க‌ தான் பொகிறீர்க‌ள்:

லூக் 18:8 ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்

ஏசா 60:2. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். 3. உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள். //

இதற்கு மேலும் நாங்கள் ஏமாளிகளாக இருக்கமாட்டோம், ஐயா; எங்களிடம் பதில் இல்லாததனால் நாங்கள் உங்களுக்கு பதிலளிக்காமல் இல்லை;இந்த காரியத்திலேயே எங்கள் பொன்னான நேரத்தை செலவிடுவதால் நாங்கள் சந்திக்க வேண்டிய அப்பாவி மக்களை சந்திக்க முடியாமல் போய்விடும்.

உங்களுக்கு அந்த பிரச்சினையில்லை; ஏனெனில் உங்களைப் பொறுத்தவரையிலும் உலகில் பாவிகள் என்று யாருமில்லை;இயேசு மாத்திரமே பாவி;ஆத்துமா என்று எதுவும் இல்லை;ஏனெனில் நரகமே இல்லை; இப்படி ஒவ்வொன்றிலும் வேறுபடும் உங்களுடன் எந்த வகையிலும் இணைந்து செல்லமுடியாது என்பதாலேயே விலகிப் போக அவசரப்படுத்துகிறோம்;அப்புறம் ஒரு விஷயம் இப்பவாவது நீங்கள் யெகோவா சாட்சிகள் என்பதை ஒப்புக்கொள்ளுகிறீர்களா.?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அது என்னமோ தெரியல, இறைவன் தளத்தின் சுந்தரைத் தேடியே எல்லா ஓநாய்களும் படையெடுக்கிறது;நம்முடைய தளமானது இந்த (ஓ)நாய்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது குறித்து கர்த்தராகிய இயேசுகிறித்துவுக்கு மகிமை செலுத்துகிறேன்;

அருமை நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்;நீங்கள் தெருவில் இறங்கி சண்டை போடவேண்டாம்;ஆனால் தமிழ்க் கிறித்தவ‌ இணையத்தை இந்த புல்லுறுவிகள் ஆக்கிரமித்து கொள்ளை கொண்டு போவதற்கு முன்பதாக நாம் விழித்துக்கொண்டு நம் நம்பிக்கையை இங்கே நிலைநிறுத்த அன்புடன் அழைக்கிறேன்;

இதுபோன்ற ஆடு திருடர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதுடன் மற்றவர்களையும் எச்சரிக்க வேண்டுகிறேன்; பேசித் தான் பார்ப்போமே , பழகித் தான் பார்ப்போமே என்று துணிகரம் கொண்டால் ஆணுக்கு ஒரு உதாரணமும் பெண்ணுக்கு உதாரணமும் வேதத்தில் உண்டு, அவர்கள் நிலைமையே நம்முடைய சந்ததியாருக்கும் நேரிடும்; ஆணுக்கு ஒரு சிம்சோன்; பெண்ணுக்கு ஒரு தீனாள்.

சுந்தர் அவர்களை மீண்டும் தயவாக கேட்கிறேன்; நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசுவானவரைக் குறித்து அவதூறு செய்து அல்லது தேவத்துவத்தின் உயர்நிலைகளையும் அதன் மகத்துவத்தையும் அறியாதோரின் எழுத்துக்களை தங்கள் தளத்தில் வைத்துக்கொண்டு அவர்களுடன் பொறுமையாக விவாதம் நடத்திக்கொண்டு இருந்தால் நான் நேரடியாகவே சொல்கிறேன், உங்களைவிட பேதையும் முட்டாளுமான ஊழியனான விசுவாசி யாரும் இருக்கமுடியாது; இது ஒரு மகன் தகப்பன் இன்னாரே நிரூபித்து தன் தாயின் கற்பைக் காப்பாற்ற செய்யும் முயற்சியைப் போன்றதாகும்.

கலகத்துக்கும் கலக்கத்துக்கும் காரணமான நாய்களை அடித்து விரட்டுங்க‌... அவனுக்கெல்லாம் வரவேற்பு ஒரு கேடா..? கோவை பெரியன்ஸ் இனி வெறும் பிஸ்கோத்து., இதோ வந்துட்டான் பாரு அஸ்தரோத்து..! குறைந்த பட்சம் ஆரம்பத்திலேயே நீங்கள் நாடி பிடித்து உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுகிறேன்; இங்க வந்தாலும் நானும் அதையே செய்வேன்.

இங்கொன்றும் அங்கொன்றுமாக இலைமறைக்காயாக இருந்துகொண்டு விவாதித்துக்கொண்டிருந்த அந்த பிடாரிகள் இன்றைக்கு வெப்சைட் போட்டு வேலை பாக்கற அளவுக்கு வந்துட்டானுங்க என்றால் நிலைமை அத்தனை மோசம் என்பதை நாம் உணரவேண்டும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

"ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்."(மத்தேயு.10:16)

இது நம்முடைய ஆண்டவர் நமக்குக் கொடுத்துள்ள எளிமையான ஆலோசனையாகும்; இதன் அடிப்படையிலேயே நாம் செயல்பட்டு வருகிறோம்; ஆனாலும் பலமுறை பேதையான புறாக்களைப் போல ஏமாற்றப்பட்டதும் உண்டு; சிலரை தவறாகக் கணித்து நமது வீடுகளுக்கு வரவழைத்து அதனால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய முடியாமலும் போய்விடுகிறது; சில நல்ல உறவுகளை அதனால் இழந்த அனுபவங்களும் நமது இருதயத்தை வாதித்துக் கொண்டிருக்கிறது.

விஷயத்துக்கு வருகிறேன்,அண்மையில் இறைவன் தளத்தில் ஒரு அறிவிப்பைக் காண நேர்ந்தது;அதில் ஒரு தொடுப்பும் கொடுக்கப்பட்டிருந்தது; அதனை அப்படியே எடுத்து இங்கே கொடுத்திருக்கிறேன்; எனவே இதனைத் தேடி நண்பர்கள் அங்கே போகவேண்டாம்; இந்த தொடுப்பு எங்கே நம்மை நடத்துகிறது? இந்த தொடுப்பில் கொடுக்கப்படும் போதனை என்ன‌ என்பதே தெரியாமல் இறைவன் தளத்தின் நிர்வாகியானவர் அவர்களை இன்முகத்துடன் வரவேற்கிறார் எனில் அவர் பேதையான புறாவைப் போல இருக்கிறார் என்பது இதனால் விளங்குகிறது; மேலும் இந்த தொடுப்பு கடந்த வருடத்திலேயே ஏற்கனவே மற்றொரு தளத்தில் கொடுக்கப்பட்டு எடுத்தஎடுப்பிலேயே புறக்கணிக்கப்பட்டது; ஒருவேளை நாகரீகத்துக்காக வரவேற்றாலும் அந்த வரவேற்பு தவறான ஒரு போதனைக்குக் கொடுக்கப்பட்டால் அதுவும் தவறுதான்; ஏதோ பேச்சுத் துணைக்கு ஒருவர் வந்திருக்கிறார் என்று அறிந்தே செய்தாலும் அதுவும் துரோகமே.

ஆனாலும் இங்கே அலப்பிக்கொண்டிருக்கும் மும்மூர்த்திகளுக்கு ஒரு வகையில் சரியான பதில் கொடுக்கக்கூடிய காரியங்கள் அந்த தளத்தில் அதாவது இறைவன் தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தொடுப்பில் இருக்கிறது; குறிப்பிட்ட இந்த தொடுப்பைக் கொடுத்த நண்பர் அறிந்தோ அறியாமலோ அந்த போதனைக்கு நம்மை அழைக்கிறாரே தவிர அவரும் கூட எடுத்த எடுப்பிலேயே எல்லா போதனையையும் நேரடியாக விளக்கிவிடப் போவதில்லை.

ஆனாலும் அடியேனுக்கு பற்பல வித்தியாசமான போதனைகளின் வழியே சென்று துருபதேசங்களை அடையாளங் காணும் கிருபை கொடுக்கப்பட்டிருக்கிறபடியினால் இதுபோன்ற விஷசெடிகளை முளையிலேயே கிள்ளியெறியத் தெரியும்; எனவே நம்முடைய யௌவன ஜனம் தளத்துக்குள் நுழைய எந்த துருபதேசத்தாருக்கும் தைரியமிருந்தது இல்லை.

இறைவன் தளத்தில் புதியதாக இணைந்துள்ள நண்பர் கொடுத்துள்ள‌ தொடுப்பிலுள்ள செய்திகள் என்ன, அதுவும் கூட துருபதேசந்தானா என்பதை விரைவில் விளக்குவேன்; இங்கே கவனிக்க வேண்டிய ஒரு ஆறுதலான செய்தி இறைவன் தளத்தின் நிர்வாகியான சுந்தர் அவர்களின் பல போதனைகளுக்கு ஏற்ற போதைனைகளே அந்த தொடுப்பிலும் இருக்கும்; எனவே அவர் மகிழ்ந்ததில் ஆச்சரியமில்லை.


தொடருவது இறைவன் தளத்தின் விவரங்கள்:


Amazing New Tamil Christian End-Time Web-Site !!!

Hi, I come across an amazing new tamil christian end time web-site. Please visit the site atleast once. You can hear or download or play online. Powerpoint slides also present in the web-site

Main Pagehttp://calvarytabernacle.in

2010 Sermons
:

http://calvarytabernacle.in/Web_Page_Model_4/2010_Sermons.html

Thanks.


இறைவன் தள நிர்வாகியின் வரவேற்பு:


believerendtime wrote:

Hi, I come across an amazing new tamil christian end time web-site. Please visit the site atleast once. You can hear or download or play online. Powerpoint slides also present in the web-site

Main Page : http://calvarytabernacle.in

2010 Sermons
:

http://calvarytabernacle.in/Web_Page_Model_4/2010_Sermons.html

Thanks.



தங்கள்  வருகைக்கும் பதிவுக்கும் நன்றி சகோதரரே!

தாங்கள் கொடுத்துள்ள தொடுப்பில் அனேக பயனுள்ள தேவசெய்திகள் இடம்பெற்றிருப்பதை அறிய முடிகிறது நேரம்கிட்டும்போது ஒவ்வொன்றாக கேட்கலாம் என்று கருதுகிறேன்.  

தள  நண்பர்கள் சுட்டியை  பயபடுத்திகோள்ளவும்!

தொடுப்பு தந்தமைக்கு மிக்க  நன்றி!

N.B:எழுத்துப்பிழைகளும் கூட சமயத்தில் நல்லதற்கே போலும்; இங்கே கவனியுங்கள்,நீங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டாமாம், பயபடுத்திகோள்ளவும்!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard