பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை இஸ்ரவேல் புத்திரர் உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு. - (லேவியராகமம் 24:1-2)
கி.மு. 167-ல் இஸ்ரவேல் நாடு சீரியா தேசத்தின் கீழ் இருந்து வந்தது. அப்போது, மத்தியாஹூ (Mattiyahu) என்னும் யூத ஆசாரியரை அவருடைய ஊராகிய மோடி என்னுமிடத்தில் சீரிய இராணுவம் பிடித்து, தங்கள் தெய்வமாகிய ஜீயஸ் (Zeus) என்னும் கடவுளுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, மத்தியாஹூவையும், அவருடய ஐந்து மகன்களையும் அதை வணங்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். அதற்கு மத்தியாஹூ மறுத்ததுமன்றி, அந்த பலிபீடத்தை தைரியமாக இடித்துப் போட்டு, வற்புறுத்திய வீரனையும் கொன்று விட்டு, பக்கத்தில் இருந்த மலைக்கு தன் மகன்களோடும் இன்னும் சில யூதர்களோடும் தப்பி ஓடினார்.
இந்த சிறிய குழுவினர் மக்காபீஸ் (Meccabees) என அழைக்கப்பட்டடனர். அவர்கள் சீரிய இராணுவத்திற்கு எதிராக போர்க் கொடி உயர்த்தி தங்களிடமிருந்த கம்புகளையும், விவசாயத்திற்கு வைத்திருந்த இரும்பு சாமான்களையும் வைத்து, அவர்களோடு போரிட்டு, தேவன் அவர்களுக்கு உதவினபடியால் அற்புதமாக வெற்றி பெற்று, எருசலேமையும் தேவாலயத்தையும் மீண்டும் கைப்பற்றினார்கள். சீரியர்கள் தேவாலயத்தை மிகவும் மோசமான நிலையில் அசுசிப்படுத்தியிருந்தபடியால், அதை சுத்தம் பண்ண ஆரம்பித்தார்கள். தேவனுடைய கட்டளையின்படி குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்க வேண்டும். அதனால் முதலில், குத்துவிளக்கை எடுத்து, அதை எரிய விட ஆரம்பிக்கும் போது, துரதிஷ்டவசமாக, அதற்கு தேவையான ஒலிவ எண்ணெய், ஒரு நாளைக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இருக்கும்வரை எரியட்டும் என்று நினைத்து, அவர்கள், தேவாலயத்தை விடாமல் சுத்தம் செய்ய ஆரம்பித்து, செய்துக் கொண்டிருந்தபோது அதிசயமாக அந்த குத்துவிளக்கிலிருந்த எண்ணெய் குறைந்துப் போகவே இல்லை. எட்டு நாட்களுக்கு அந்த எண்ணெய் போதுமானதாக, அந்த விளக்கு தொடர்ந்து எரிந்துக் கொண்டே இருந்தது. அவர்கள் மீண்டும் எண்ணெய் கொண்டு வரும்வரை எட்டு நாட்களுக்கு அது போதுமானதாக இருந்தது.
அதை நினைவுகூர்ந்து, ஒவ்வொரு வருடமும், இஸ்ரவேலர் ஹனுக்கா(Hanukkah) என்னும் பண்டிகையை எட்டுநாட்களுக்கு கொண்டாடுகிறார்கள். ஹனுக்கா பண்டிகை இந்த நாளில் மூன்றாவது நாளாக கொண்டாடப்படுகிறது. ஹனுக்கா என்பதற்கு Feast of Dedication என்பது பொருளாகும். தேவாலயத்தை திரும்ப சுத்தப்படுத்தி தேவனுக்கு என்று அர்ப்பணித்ததால் அதற்கு அர்ப்பணிப்பின் பண்டிகை என்றுக் கொண்டாடப்படுகிறது.
இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்ற யோவான் 8:12 ல் என்றுக் கூறுகிறார். மட்டுமல்ல, அவரே, உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளியாயிருக்கிறார் (யோவான் 1:9). அவரையன்றி, எந்த மதமும், எந்த மார்க்கமும், மனிதனை பிரகாசிப்பிக்க முடியாது. ஹனுக்காவின் போது,எப்படி அந்த குத்து விளக்கு தொடர்ந்து எரிந்து அற்புதத்தை விளங்க பண்ணினதோ, அதுப் போல கிறிஸ்துவை விசுவாசிக்கிற எந்த மனுஷனையும் பிரகாசிப்பித்து, தொடர்ந்து அவர்கள் ஒளியைக் கொடுக்கத்தக்கதாக அவர்களை நிரப்புகிற தேவனாய் இருக்கிறார்.
நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் (மத்தேயு 5:14) என்று கிறிஸ்துவை விசுவாசிக்கிற நாமும் வெளிச்சமாயிருக்கிறோம் என்று கர்த்தர் கூறுகிறார். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. மற்றவர்கள் நீங்கள் ஒளியிலே நடப்பதைக் கண்டு, அவர்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி நாம் நமக்குள் இருக்கிற ஒளியை வெளிப்படுத்த வேண்டும். மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது என்பதுப்போல நமக்குள் ஒளியிருந்தால் அது மறைந்திருக்காது. அது வெளியே வெளிப்படும். இப்படி கிறிஸ்துவாகிய ஒளியை, இருளிலே இருககிற மக்களுக்கு உலகத்தின் ஒளியாகிய நாம் வெளிப்படுத்தி அவர்களையும் ஒளியினிடத்திற்கு கொண்டு வர வேண்டும்.
யூத மக்கள் உலகத்தின் ஒளியாகிய கிறிஸ்துவைக் கண்டுக் கொள்ள நாம் ஜெபிக்க வேண்டும். அவர்கள் ஹனுக்கா பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அது விளக்குகளின் பண்டிகை என்று அவர்கள் அதைக் கொண்டாடினாலும் கிறிஸ்துவை அறியாதபடிக்கு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தங்களை அறியாமலேயே கிறிஸ்துவைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கண்கள் தெளிவிக்கப்பட்டு கிறிஸ்துவை அறிந்துக் கொள்ளும்படியாக நாம் தொடர்ந்து தேவனிடம் வேண்டிக்கொள்ளுவோம். எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.
காரிருள் நம்மை சூழ்ந்தாலும் கர்த்தர் ஒளியாவார்
ஒளியாய் எழும்பி சுடர் விடுவோம் உலகின் ஒளி நாமே.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
தமது மேலான கருத்தை முன்வைத்த கொல்வின் அவர்களுக்கு நன்றி; இன்னும் மற்ற நண்பர்களும் தத்தமது கருத்துக்களை முன்வைக்க வேண்டுகிறேன்;இந்த கட்டுரையின் எந்தவொரு பகுதியையும் சற்றும் மாற்றாமல் அதன் தொடுப்புடன் எடுத்து மற்ற தளங்களில் விவாதிக்கவும் சம்மதிக்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ரோம சாம்ராஜ்யத்தின் சூழ்ச்சியினால் ஸ்தாபிக்கப்பட்டகத்தோலிக்க மதமானதுஅப்பாவி மக்களை முக்கியமாக அன்று பெரும்பான்மையினராக இருந்த கிறித்தவர்களைமூளைச் சலவை செய்து மதம் மாற்றியது;
இது தவறான கருத்து. புறஜாதியினரைத்தான் அவ்வாறு மாற்றினர் கிறிஸ்தவர்களையல்ல. ஆயினும் இதிலும் கருத்து முரண்பாடு உண்டு. ஒரு சிறிய கட்டுரையை இது தொடர்பாக எழுதலாம் என்றிருக்கிறேன். சற்று காத்திருங்கள். வேறு சில கட்டுரைகளை டைப் செய்து கொண்டிருப்பதால் உடனே பதிக்க இயலாதுள்ளேன்
ஒருமுஸ்லிம்தான்கிறிஸ்மஸ்போன்ற விழாக்களைக் கொண்டாடாவிட்டாலும் வருடமுழுவதும்ஆடுகளை வளர்த்துநமக்கு இறைச்சியை உற்பத்தி செய்து கொடுத்துபணம்சம்பாதிக்கிறான்;இப்படி ஒவ்வொரு சமுதாயமும் இந்த விழாக்களால் பணம் சம்பாதிக்கிறது
உண்மைதான். ஆனால் ஒரு இனத்திற்கு மட்டும் மட்டுப்படுத்திவிட்டீர்கள். கிறிஸ்மஸ் புத்தாண்டு கொண்டாடத்தினால் அதிக பணம் சம்பாதிப்பது புறஜாதியினர் என கொண்டால் நலம்.
கிறித்தவனோ ஏதோ ஒரு மயக்கத்தில் தன்னுடைய பண்டிகைகளை உலகமே கொண்டாடுவதைப் போன்ற கர்வத்தில் இருக்கிறான்
சபாஷ் இது எனது கருத்தும் கூட.
யூதர்களின் பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டாடினால் நினைத்தே பாரக்க முடியாது. அதையும் அசிங்கப்படுத்தி விடுவார்கள். உங்கள் ஆதங்கம் நியாயமானதே. ஆனால் உண்மை நிலையை சிந்தித்துப் பாருங்கள்
வேதத்தில் கர்த்தருடைய பிள்ளைகள் யாரும் நள்ளிரவில் தேவாலயத்தில் கூடிவந்து ஆராதித்தது போலத் தெரியவில்லை;யூதர்களுடைய பாரம்பரியத்தில் நள்ளிரவில் ஆலயத்தில் கூடிவந்து தொழுகை செய்யும் எந்த வழக்கமோ
யூதர்களின் எல்லா பழக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை.
புதிய வருட தொடக்கத்தில் விசுவாசிகளுடன் கூடி ஜெபித்து, வாழ்த்துக்களை பரிமாறி அந்த நாளை தொடங்குவது மிக மகிழச்சியை தருவது. தவறான வேதத்திற்குப் புறம்பான காரியங்களில் ஈடுபடாமல் அவதானமாக இருக்க வேண்டும்
என்னுடன் விவாதிக்க நண்பர்கள் தயங்கும் காரணத்தினால் இனி என்னுடைய கருத்துக்களை விவாதப் பகுதியில் பதிக்காமல் போதனைகள் பகுதியிலேயே பதிக்கலாம் என்று எண்ணுகிறேன்;இதில் விவாதங்கள் ஏற்படும் சூழல் உருவானால் இதனை விவாதப் பகுதிக்கு மாற்றிக்கொள்ளலாம்; நான் இதுவரை துருபதேசக்காரர்களை மட்டுமே நட்பு பாராட்டாமல் தாக்கியிருக்கிறேன்;அவர்கள் துருபதேசக்காரர்களே என்பதற்கான வலுவான ஆதாரங்களும் என்னிடம் உண்டு;அனைத்தையும் வெளியிட எனக்கு அவகாசம் இல்லை அல்லது அது அந்த துருபதேசக்காரர்களின் அனைத்து சூழ்ச்சிகளும் வெளியே தெரிய வருவதற்குத் தடையாக இருக்கும்; இவற்றை அவர்கள் மறுக்கும் ஆள்தத்துவமுடைய பரிசுத்தாவியானவரே எனக்குப் போதித்து நடத்துகிறார்;இனி... புத்தாண்டு -ஒரு அறிமுகம்: புத்தாண்டு ' 2011 என்று உலக முழுவதும் வாழ்த்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளும் விழாக் காலத்தில் இருக்கிறோம்;ஆனால் இதில் எல்லோரும் கலந்து கொள்ளுகிறதில்லை;பெரும்பான்மையான சமூகத்தினர் சொந்த அனுபவத்திலிருந்து இந்த வாழ்த்தைச் சொல்லுகிறதில்லை.
உதாரணமாக பிறந்தநாள் கொண்டாட, சம்பளம் வாங்க, காலண்டர் போட, டைரி வாங்க என்று அனைத்துக்கும் புத்தாண்டாக 2011 அதாவது கத்தோலிக்க ஸ்தாபனத்தின் போப் கிரிகோரி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட சூரிய ஓட்டத்தின் அடிப்படையிலான கால அட்டவணையினை ஏற்றுக்கொள்ளும் யாரும் கிறித்தவ மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.எனவே இதிலிருந்து என்ன தெரிகிறது..? புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஆரம்பம்: இது ஒரு மதத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டதாக இருப்பினும் அந்த மதமானது ஒரு குறிப்பிட்ட செல்வாக்குமிக்க அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்ததால் இந்த காலக் கணக்கீட்டு முறையானது உலக முழுவதும் விரைந்து சென்று அனைத்து சமூகத்தினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது கண்கூடு.
உலகில் பெரும்பாலான மக்கள் படிப்பறிவில்லாத மக்கள், ஆனதால் இதில் பெரிய எதிர்ப்பு எதுவுமில்லை;ஏழை எளிய மக்களுக்கு பகல் என்பது பொழுது விடிவதும் பொழுது சாய்வதும் மட்டுமே; ஆனாலும் அந்தந்த வட்டாரத்தில் வழங்கிய வழக்குகளும் விழாக்களும் அவரவர் கலாச்சார முறையிலேயே தொடர்ந்தது.
இதற்கு ஒரு உதாரணம் நம்முடைய சமுதாயத்தில் கொண்டாடப்படும் பொங்கல் விழா; இது நாத்திகரும் ஏற்றுக்கொள்ளும் விழாவாகும்; இந்த விழாவைக் கொண்டாட தமிழர்கள், ஆங்கில வருடப் பிறப்பு எனப்படும் 2011 பிறக்கக் காத்திருக்கப் போவதில்லை.
புத்தாண்டை ஏற்காத சமுதாயத்தினர்:
இதுபோலவே உலக முழுவதும் சிதறியிருக்கும் (இன்று யூதர் என்று பொதுவாக அழைக்கப்படும் ) இஸ்ரவேலர் இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களிலிருந்து விலகியிருக்கின்றனர்;காரணம் அவர்களுக்கென்று தனி விழாக்களும் கொண்டாட்டங்களும் உண்டு;அது நமக்கு அந்நியமாக இருக்கிறது;ஆனாலும் அவை ஒவ்வொன்றும் தலை தலைமுறைக்குமாக சர்வ வல்ல தேவனாகிய சிருஷ்டி கர்த்தரால் கொடுக்கப்பட்டது;இதன் வழியே சிருஷ்டிப்பும்மீட்பும் நியாயத்தீர்ப்பும் போதிக்கப்பட்டது. புத்தாண்டு உருவாக்கப்பட்ட நோக்கம்:
ஆனால் இதற்கு முற்றிலும் முரணாகவும் யூதருடைய ஆளுமையை அடக்கவுமாக விழாக் கொண்டாட்டங்களையும் கேளிக்கைகளையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு கால அட்டவணையானது ரோமர்களால் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது;இதனை விரைவாக நடைமுறைப்படுத்த யூதரிலிருந்து பிரிந்து சிதறியிருந்த யூதக் கிறித்தவர்களையும் யூதரல்லாத கிறித்தவர்களையும் ரோமர்கள் இணைத்துக் கொண்டனர்;இப்படி வேதத்துக்கு எதிரான பிரித்தாளும் சூழ்ச்சியினை ரோமர்கள் நிறைவேற்றினர்;அவர்களால் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டதே கத்தோலிக்க மார்க்கம்;அதனை மார்க்கம் என்று சொல்லுவதை விட "மதம் " என்றே சொல்லலாம்.
இந்த சூழ்ச்சிகளையறியாத கிறித்தவர்கள் அரசியல்ரீதியில் கிடைக்கக்கூடிய சில சலுகைகளுக்காக ரோமர்களுடன் நம்ம ஊர் பால் தினகரன் போல இணைந்துகொண்டனர்;இதனால் தங்கள் அடையாளங்களைத் தொலைத்தனர்;ஒருவேளை அவர்கள் யூதக் கிறித்தவர்களுடன் நின்றிருந்தால் கூட பெரிய சமுதாயமாக மாறியிருக்கலாம்;ஆனால் அவர்கள் பாபிலோனிய பாரம்பரியத்தில் வந்த ரோமர்களுடன் இணைந்ததால் தங்களுடைய ஆதி நோக்கங்களை இழந்தனர்;
மதம் மாற்றிய புத்தாண்டு:
ரோம சாம்ராஜ்யத்தின் சூழ்ச்சியினால் ஸ்தாபிக்கப்பட்ட கத்தோலிக்க மதமானது அப்பாவி மக்களை முக்கியமாக அன்று பெரும்பான்மையினராக இருந்த கிறித்தவர்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றியது; அன்றைய கிறித்தவர்களுக்குள் ஏற்கனவே பாபிலோனிய விழாக்களைப் பற்றிய மயக்கம் மிச்சமீதி இருந்ததால் இது சீக்கிரமாகவே வேரூன்றியது; இதிலிருந்து மக்கள் தெளிவடைந்து விடாதிருக்கவே வேதமானது சிறைவைக்கப்பட்டது.
அடிகளாலும் உபத்திரங்களாலும் சொந்தங்களின் உயிரிழப்புகளாலும் சோர்ந்து போயிருந்த கிறித்தவர்களுக்கு இது கர்த்தருடைய செயல் போலவும் தங்களுக்குக் கிடைத்த மாபெரும் சுதந்தரம் போலவும் அங்கீகாரம் போலவும் தோன்றியது;பயந்து பயந்து ஆராதித்துக்கொண்டிருந்த அவர்களுக்கு பெரிய பெரிய கோபுரங்களுடன் கூடிய ஆராதனை ஸ்தலம் கிடைத்துவிட்டது;அஞ்சி அஞ்சி வேதத்தை வாசித்துக்கொண்டிருந்த அவர்களுக்கு எந்த சிரமமுமில்லாமலே பீடத்திலிருந்து யாரோ எழுதிய போதகங்கள் காதில் வந்து விழுந்தது.
ஆனாலும் வேதத்தை வைத்திருப்போர் அதை வாசிக்கவோ போதிக்கவோ கூடாது;வேண்டுமானாலும் வணங்கிக்கொள்ளலாம்; இவையெல்லாம் தற்கால கிறித்தவத்திலும் சபைகளிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதே என்று சிலர் ஆச்சரியப்படலாம்;ஆம் அதன் பாதிப்பு அத்தனை சீக்கிரம் போகக்கூடியதல்ல;ஏனெனில் அந்த வழக்குமுறைகளிலிருந்து வெளியேறினால் நாம் சமுதாயத்தில் அனாதைகள் போலாகிவிடுவோமே என்ற அச்சமே எதிரியின் பலமாகும்;இந்து சமுதாயத்திலும் இதேபோன்ற அச்சம் நிலவுவதாலேயே அவர்கள் இயேசுவை நேசித்தாலும் மதம் மாறுவதை விரும்பாமல் அதனை எதிர்க்கிறார்கள்.
யூத இனத்தின் மார்க்க வைராக்கியம்: ஆனால் யூதர்களை கவனித்தால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும்;அவ்வளவு ஏன் அவர்களுக்குப் பின்னர் யூதக் கிறித்தவ பாதிப்பினால் தோற்றுவிக்கப்பட்ட இஸ்லாமை நோக்கினாலும் பிரமிப்பாக இருக்கும்; ஏனெனில் அவர்களும் இந்த சமுதாயத்தில் வாழ்ந்தாலும் இந்த விழாக்களின் அனைத்து பலாபலன்களையும் மறைமுகமாக அனுபவித்துக்கொண்டே இந்த கொண்டாட்டங்களில் கலக்காமல் இருக்கிறார்கள்;உதாரணமாக ஒரு முஸ்லிம் தான் கிறிஸ்மஸ் போன்ற விழாக்களைக் கொண்டாடாவிட்டாலும் வருடமுழுவதும் ஆடுகளை வளர்த்து நமக்கு இறைச்சியை உற்பத்தி செய்து கொடுத்து பணம் சம்பாதிக்கிறான்;இப்படி ஒவ்வொரு சமுதாயமும் இந்த விழாக்களால் பணம் சம்பாதிக்கிறது.
கிறித்தவத்தின் மாயையான பெருமை: ஆனாலும் இந்த மாயைதனை உணராத கிறித்தவனோ ஏதோ ஒரு மயக்கத்தில் தன்னுடைய பண்டிகைகளை உலகமே கொண்டாடுவதைப் போன்ற கர்வத்தில் இருக்கிறான், தான் வீழ்த்தப்பட்ட ஆதிநிலையை உணராமலே;இதில் நாங்கள் சீர்திருத்தவாதிகளாக்கும், கிறிஸ்மஸ் கொண்டாடமாட்டோம்,எங்களுக்கு நியூ இயர் மட்டுந்தான் என்ற பெருமை வேறு;
கிறித்தவ சபை வரலாற்றைப் பற்றிய உண்மைகளை அறியாமல் நீங்கள் புதுவருடமோ கிறிஸ்மஸோ அல்லது வாராவாரம் ஞாயிற்றுக்கிழமையன்று ஆராதனையோ செய்தாலும் அதனால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை;அது உம் ஒருவருக்கு மட்டுமே பக்திவிருத்தியைக் கொடுத்தாலும் சந்தோஷமே;ஆனாலும் பக்திவிருத்தி என்ற வார்த்தைக்கே தனி விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் சபை இருக்கிறதே;அந்த வார்த்தையானது அகராதியில் இருக்கிறதா என்று முதலில் பார்க்கவேண்டும். என்ன செய்யலாம்..?
வேதத்தின் நடைமுறைகளுக்கும் போதனைகளுக்கும் முற்றிலும் விரோதமாக ஸ்தாபிக்கப்பட்ட கத்தோலிக்கத்தின் வழிவந்த விழாக்களைக் கொண்டாடலாமா அல்லது பரிசுத்த வேதாகமத்தின் ஒவ்வொரு கால நேர நிர்ணயங்களையும் மாற்றாமல் கர்த்தருடைய நீதி நியாயங்களையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் போதிக்கும் பண்டிகைகளைக் கொண்டாடும் யூதர்களைப் பின்பற்றலாமா என்பது மாபெரும் கேள்வி.
இது ஒரு புதிய கேள்வியல்ல,ஏற்கனவே ஆதி கிறித்தவர்கள் மத்தியில் எழும்பி மறைந்த கேள்விதான்;அந்த கேள்விக்கு பதிலாக அன்றைய தலைவர்களால் -அதாவது அப்போஸ்தலருடைய காலத்துக்குப் பிறகு உபத்திரவக் காலத்தில் இருந்த தலைவர்களால் எடுக்கப்பட்ட தீர்மானமானது யூதரைப் புறக்கணிப்பது ,ரோமர்களை சேவிப்பது என்பதாகும்;அதன் பாதிப்பையே நாம் அனுபவிக்கிறோம்.
எழுப்புதல் தாமதிக்கக் காரணம் என்ன? சபையானது எத்தனை எழும்பினாலும் - எழுப்பினாலும் எழுப்புதல் என்பது தூர தரிசனமாகத் தோன்றும் காரணம் நம்முடைய சுவிசேஷ முயற்சிகள் ரோம கலாச்சாரத்தின் பின்னணியிலிருந்து வந்ததே;கர்த்தரையும் அவருடைய ஜனத்தையும் அழிக்க சூழ்ச்சியினால் கொண்டு வரப்பட்ட மாற்று கால நேர நிர்ணயங்களும் விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களும் ஆண்டவரால் அங்கீகரிக்கப்படாததால் அதில் பெரிய எழுப்புதலைக் காணமுடியவில்லை;நீங்கள் எத்தனை கோடி ரூபாய் செலவு செய்து இந்த விழாக் காலங்களை பிரபல்யப்படுத்த முயற்சித்தாலும் விழா முடிந்ததுமே சிதறியிருக்கும் பட்டாசு துகள்களைப் போல அனைத்தும் குப்பையாக மாறும்.
தரித்திரம் ஒழியுமா?
நம்முடைய ஆலய வாசலில் உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரனுக்கு பத்து ரூபாயை தானமாகப் போட்டு உங்கள் தயாள உள்ளத்தைக் காண்பிக்கிறீர்கள்;மேலும் அதன் மூலம் புண்ணியம் சம்பாதிக்கும் நப்பாசையும் உங்கள் மனதில் உண்டு;ஆனாலும் இங்கே "தோத்திரம் ஐயா " என்று கும்பிடும் அந்த பிச்சைக்காரன் அடுத்த தெருவிலிருக்கும் விக்கிரகக் கோவில் வாசலிலிருந்து "சாமி சரணம் " என்று சொல்லிக் கொண்டிருப்பான்;அவன் பரம்பரை பிச்சைக்காரனாக்கும்;பிச்சைபோட்டு தானம் செய்து மார்க்கத்தை வளர்க்க முடியுமானால் அரசாங்கமும் அதையே பல ஆயிரக்கணக்கான வருடங்களாக செய்துகொண்டிருப்பதை கவனிக்கவும்;அல்லது இந்த நற்கிரியைகள் மூலம் இந்த உலகில் இருக்கும் தரித்திரத்தை ஒழிப்பது உங்கள் நோக்கமானால் அதையும் ஏற்கனவே அரசாங்கம் வருடமுழுவதும் திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறது.
யூதர்கள் மீதான பகையுணர்ச்சி:
இப்படி எந்த முகாந்திரமும் இல்லாமல் வேதத்துக்கு விரோதமான விழாக்களைக் கொண்டாடும் கிறித்தவ சமுதாயமானது யூதர்களின் பண்டிகைகளை அந்நியமாக பாவிக்கக் காரணமென்ன? அவர்கள் தங்கள் இரட்சரை சிலுவையில் அறைந்தவர்கள் என்ற பகையுணர்ச்சியே;இது ரோமர்களாலும் அவர்களுக்குப் பிறகு வந்த நாஜிக்களாலும் (ஹிட்லராலும்) தோற்றுவிக்கப்பட்டது;இதன் பாதிப்பு சபையின் மாபெரும் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மார்ட்டீன் லூதர் அவர்களுக்கும் இருந்தது என்று சொல்லுவார்கள்;அந்த அளவுக்கு யூதருக்கு எதிரான மனநிலையானது குழந்தைப் பருவம் முதலே ஊட்டப்பட்டு ஒவ்வொரு மனுஷனும் மூளைச் சலவை செய்யப்படுகிறான்;
இதுவே இஸ்லாத்தின் உலகளாவிய வெற்றிக்கு ஆதாரமாகவும் அதன் பிரதான நோக்கமாகவும் விளங்குகிறது; கிறித்தவர்களாகிய நாமும் கூட யூதர்களை வெளிப்படையாக எதிர்க்காவிட்டாலும் கூட அமைதியாக இருப்பதும் அல்லது இந்த வரலாற்று உண்மைகளை அறியாதிருப்பதும் கூட ஒருவகையில் எதிர்மனநிலையே;
ஆண்டவர் அனைத்தையும் சிலுவையில் செய்து முடித்துவிட்டார் என்று நீங்கள் எல்லா நாளையும் சமமாக பாவித்து எந்த ஒரு நாளுக்கும் முக்கியத்துவம் தராமல் சாதாரணமாக இருந்தால் மிகவும் சந்தோஷம்;ஆனால் வேதத்தின் பண்டிகைகளை யூதர்களுடையது அது கிறித்துவில் நிறைவேறிவிட்டது என்று ஒதுக்கிவிட்டு வேறொரு சாம்ராஜ்யத்தின் பண்டிகைகளை தேவையில்லாமல் கிறித்துவுடன் சம்பந்தப்படுத்திக் கொண்டாடுவது என்ன நியாயம்..?
கிறித்தவர்களின் தனித்தன்மையும் மேன்மையும்:
அன்றும் சரி இன்றும் சரி உலகத்தாரின் அச்சுறுத்தலாக விளங்குவோர் இஸ்ரவேலரே;காரணம் அவர்கள் கர்த்தருடைய ஜனம்; அவர்களுக்கு சற்றும் குறையாத ஆனால் அவர்களைக் காட்டிலும் மேன்மையானவர்களாக ஆவியானவரால் ரூபிக்கப்பட்டோர் கிறித்தவ சமுதாயம்;உலகெங்கும் பரவியிருக்கும் பெரும்பான்மையினரான கிறித்தவ சமுதாயத்தை எந்தவொரு பக்திவிருத்திக்கும் உதவாத வீணான பண்டிகைக் கொண்டாட்டங்களில் சத்துரு சிறை வைத்திருக்கிறான். இந்த மாயையிலிருந்து தப்பி கரைசேர ஒரே வழி யூதர்களுடைய பண்டிகைகளை கவனித்து அதிலிருந்து ஆவிக்குரிய சத்தியங்களைக் கற்று நம்முடைய சந்ததியாருக்கு அறிமுகப்படுத்துவதே.
ஆண்டவர் பண்டிகைகளையோ கொண்டாட்டங்களையோ தம்முடைய ஜனம் மகிழ்ந்திருப்பதையோ வெறுக்கவில்லை;ஆனால் விழாக்களின் மையப் பொருளாக - நாயகராக தாம் மட்டுமே இருக்க விரும்புகிறார்;இந்த கருத்துக்களால கவரப்பட்டு அங்கிருந்து வெளியேறும் அவசரமோ அல்லது இங்கே ஓடிவரும் அவசரமோ தேவையில்லை;நிதானமாக இந்த வரலாற்று உண்மைகளை ஆராய்ந்து சத்தியத்தை பகுத்தறிந்து சபைக்குள் மெய்யான ஒரு மறுமலர்ச்சியையும் எழுப்புதலையும் கொண்டுவருதல் வேண்டும்.
புத்தாண்டைக் குறித்த வரலாற்று இரகசியம்:
முதலாவது இந்த புத்தாண்டைக் குறித்து தர்க்கரீதியாக சில உண்மைகளை முன்வைக்கிறேன்;இது பன்னிரண்டாவது மாதமான டிசம்பர் எனும் மாதம்;ஆனால் டிசம்பர் வார்த்தையானது கிரேக்க மொழியிலிருந்து வந்த வார்த்தையின் அர்த்தமாவது பத்து என்பதாகும்;இப்படியே நவம்பர்,அக்டோபர்,செப்டம்பர் ஆகிய மாதங்களின் சொல்லர்த்தமானது முறையே ஒன்பது, எட்டு,ஏழு என்பதாகும்;ஆனால் இவை மாதங்களின் வரிசையில் பனிரெண்டு, பதினொன்று, பத்து, ஒன்பது, எட்டு என்று வருகிறதல்லவா? இதற்குக் காரணம் வேறொன்றுமில்லை ரோம பேரரசர்களான ஜூலியஸ் ஸீஸர் மற்றும் அகஸ்டஸ் ஸீஸர் இருவரும் நம்ம ஊர் அரசியல்வாதிகளைப் போல தங்கள் பெயரிலும் மாதங்கள் வழங்கப்பட வேண்டும் என்று விரும்பியதே;மற்ற மாதங்களின் பெயர்களும் பாபிலோனிய கிரேக்க ரோம பாரம்பரியத்தில் தொழப்பட்ட தேவதைகள் மற்றும் கிரகங்களின் பெயர்களே;இதில் ஒன்றுகூட பரிசுத்த வேதாகமத்தில் இல்லாதது;
ஒரு வருடத்துக்கு பன்னிரண்டு மாதம் எனும் சிருஷ்டிப்பின் நியமத்தை மாற்றாமலே அதற்கு மாற்றாக இன்னொன்றைக் கொடுத்தான் சத்துரு; இதையே தானியேல் தீர்க்கதரிசி கூறுகிறார்,
"உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்." (தானியேல்.7:25)
யூதர்களின் மாதம் ஆங்கிலப் புத்தாண்டில்...
எப்படியோ தப்பிப்பிழைத்த உண்மைகளில் ஒன்று சத்துரு தாறுமாறாக்கி அறிமுகப்படுத்திய புதிய காலக் கணக்கீட்டு முறையில் கலந்துவிட்டது ஆச்சரியமே; அதாவது பெயரிடப்படாமலே எண்ணிக்கையின் பெயரால் வழங்கப்படும் மாதங்களான ஏழு,எட்டு,ஒன்பது, பத்து ஆகிய மாதங்கள் யூதருக்கு மறைமுகமான உரிமை பங்கு போல விட்டுத் தரப்பட்டிருக்கலாம்;ஆம்,அது நடைமுறையில் ஏழாம் மாதமானது ஒன்பதாவது மாதமாகவும் எட்டு பத்தாகவும் ஒன்பது பதினொன்றாகவும் பத்து பன்னிரெண்டாகவும் வழங்கப்பட்டாலும் இந்த மாதங்களின் பெயர் மாறாமலிருக்கும் இரகசியம் ஒன்று உண்டு.
இனி அது இரகசியமல்ல,இந்த குறிப்பிட்ட மாதங்களிலேயே யூதருடைய கால அட்டவணையில் வழங்கும் மாதங்கள் பிறக்கிறது;அதாவது ஏழு எனும் அர்த்தம் கொள்ளும் செப்டம்பர் மாதமானது ஒன்பதாவது மாதமாக வந்தாலும் அந்த மாதத்திலேயே யூத கால அட்டவணையின் ஏழாம் மாதம் பிறக்கிறது;இப்படியே எட்டு எனும் அர்த்தம் கொள்ளும் அக்டோபர் மாதத்தில் யூதர்களின் எட்டாவது மாதமும் ஒன்பது எனும் அர்த்தம் கொள்ளும் நவம்பர் மாதத்தில் யூதர்களின் ஒன்பதாவது மாதமும் பத்து எனும் அர்த்தம் கொள்ளும் டிசம்பர் மாதத்தில் யூதர்களின் பத்தாம் மாதமும் பிறக்கிறது.
மாதப்பிறப்பையும் வருடப்பிறப்பையும் குறித்த வேத சத்தியம்:
அப்படியானால் யூதர்களின் முதலாம் மாதம் எப்போது பிறக்கிறது அதில் என்ன விசேஷம் என்பீர்களாகில் அது இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறிய நாளில் பிறக்கும் மாதமாகும்;அதைக் குறித்து,யாத்திராகமம்.12 ம் அதிகாரம் முதலாக வாசித்தறியலாம்.
எப்படி கிறித்தவர்கள் கிரேக்க தேவதைகளின் பெயரில் அமைந்த மாதங்களின் பெயர்களைத் தங்கள் வருடமாகப் பெற்றார்களோ அப்படியே யூதர்களும் கானானியரின் வழக்கத்திலிருந்த மாதங்களின் பெயர்களையே தங்களுக்கு மாதங்களாகப் பெற்றார்கள்;ஆனால் அதிலிருந்து முதலாவது மாதம் இதுவாக இருக்கட்டும் என்று ஆண்டவர் அங்கீகரித்துக் கொடுத்த மாதமே ஆபிப் மாதம்.
"கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக."(யாத்திராகமம்.12:1,2)
இது இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறியதைக் குறித்துக் கொண்டாடும் பஸ்கா பண்டிகையாம்.இதன் ஏழாவது மாதமான எத்தானீம் மாதத்தில் மற்றொரு வருடப்பிறப்பைக் கொண்டாடுவார்கள்; அது எக்காளப் பண்டிகை எனப்படும்; அந்த ஏழாம் மாதம் நம்முடைய கால அட்டவணையில் ஒன்பதாவது மாதமான செப்டம்பரில் பிறக்கிறது; சரி இப்ப என்ன பிரச்சினை, எல்லாம் சரியாகத் தானே இருக்கிறது என்கிறீர்களா? அதுதான் பிரச்சினையே..!
யூதப் பண்டிகைகளும் கிறித்தவப் பண்டிகைகளும்:
யூதர்கள் தங்கள் பண்டிகைகளெயெல்லாம் கொண்டாடி முடித்தபிறகு நாம் தனியாகத் துவங்குகிறோம் என்பதே பரிதாபமான நிலையாகும்;இந்த டிசம்பர் மாதம் 2 -ந்தேதியிலிருந்து 9 -ந்தேதி வரை வரலாற்று சிறப்புமிக்க ஒரு பண்டிகையான " ஹனுக்கா "எனப்படும் விளக்குகளின் பண்டிகையைக் கொண்டாடி முடித்துவிட்டனர்;அதன் எந்தவொரு செய்தியும் கர்த்தருடைய பிள்ளைகளை வந்து எட்டாதவாறு எதிரி பார்த்துக்கொண்டான்; ஆனால் அதன் மாற்றாக அதே விளக்கு அலங்காரத்துடன் மரங்களையும் காகித நட்சத்திரங்களையும் ஸ்தாபித்து நாமும் ஒரு பண்டிகையைக் கொண்டாடிவிட்டோம்; எனவே யூதர்களுக்கு நாம் சற்றும் சளைத்தவர்களல்ல என்று விளங்கினது;கொண்டாட்டங்களுக்கு நமக்கு இணை நாமே;நம்மிடம் இருக்கும் பல விசேஷித்த பண்டிகை அம்சங்கள் யூதரிடம் இல்லை; அவர்கள் பயபக்தியுடன் வெறும் ஒலிவ எண்ணெய் விளக்குகளை ஏற்றி தேவாலய மறு அர்ப்பணிப்பைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்;இதே போன்ற தியாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் ஏழாம் மாதமாகிய செப்டம்பர் மாதத்தில் ஒன்பது நாட்கள் காத்திருந்து பத்தாவது நாளில் ஆசீர்வாதத்துடன் புத்தாண்டையும் எந்த ஆர்பாட்டமுமில்லாமால் துவங்கிவிட்டார்கள்;
இப்படி ஒவ்வொறு சிறுகாரியத்திலும் யூதருடைய பண்டிகைகளைப் புறக்கணிக்கும் பண்டிகைகளையே நாம் அறிந்திருக்கிறோம்;ஆனால் யூதருடைய பண்டிகைகள் என்பது யூதருடையது மாத்திரமல்ல,அது பரிசுத்த வேதாகமத்துக்கு சொந்தமானது என்பதையும் அவை நமக்கு சொந்தமானது என்பதையும் கிறித்தவர்களாகிய நாம் அறியவில்லை.
யூதர்கள் கொண்டாடும் இரண்டு வருடப்பிறப்புகளையும் புறக்கணித்துவிட்டு வேதத்துக்குப் புறம்பான ஒரு பாரம்பரியத்தில் வந்த பண்டிகைகளையும் வருடப்பிறப்புகளையும் கொண்டாடுவது ஏற்புடையதுதானா என்பதை கிறித்தவ சமுதாயம் சிந்திக்க வேண்டும்;
நாம் பாரம்பரியத்தைவிட்டு வெளியேறி வேதத்தை நோக்கி திரும்ப வேண்டுமானால் நம்முடைய சமுதாய அடையாளத்தையும் தனித்தன்மையையும் நிலைநிறுத்தவேண்டுமானால் ரோம சாம்ராஜ்யத்தினால் யூதர்களையும் பரிசுத்த வேதாகத்தையும் அழிப்பதற்காகவே தோற்றுவிக்கப்பட்ட கத்தோலிக்க மதவிழாக்களையும் கொண்டாட்டங்களையும் புறக்கணித்துவிட்டு பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்ட பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும்;அதாவது யூதர்களைப் போல சடங்காக அல்ல , பவுலடிகள் போதிப்பதைப் போன்று அதன் பொருளை உணர்ந்து ஆசரிக்கவேண்டும். "ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்." (1.கொரிந்தியர்.5:7,8)
இங்கே பவுலடிகள் இஸ்ரவேலர் கொண்டாடிய முதலாவது பண்டிகையான பஸ்காவைக் குறிப்பிடுவதை கவனிக்க வேண்டும்.
"இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்." (2.கொரிந்தியர்.7:1)
"வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது."(சங்கீதம்.65:11)
இங்கே வேதம் கூறும் வருஷத்தைக் குறித்த அறிவில்லாமல் போப் கிரிகோரி கொடுத்த வருடப் பிறப்புக்கு இந்த வேத வசனத்தைப் பயன்படுத்துவது அக்கிரமில்லையா? குறிப்பிட்ட இந்த 65ம் சங்கீதம் முழுமையும் யூதர்களின் இரண்டாவது வருடப் பிறப்பு கொண்டாட்டத்தின் சம்பவங்களோடு இணைந்து செல்லுவது; இதற்கும் தற்கால வருடப்பிறப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை; இரண்டாவது வருடப்பிறப்பு என்பது பிரதான வருடப் பிறப்பான ஆபிப் மாதத்திலிருந்து ஏழாவது மாதத்தில் விதைப்பு அறுப்பு சம்பந்தமான பருவங்களின் ஆரம்ப விழாவாகும்;அதிலும் கொண்டாட்டங்களைவிட அர்ப்பணமே பிரதானமாகும்.
நள்ளிரவில் சபை கூடுவதா..? ஆண்டவர் நம்மைத் தேடிய நாட்களில் தூங்கிவிட்டு வேறொரு அந்நிய மார்க்கம் கொடுத்த நாளில் அதுவும் நள்ளிரவில் உட்கார்ந்திருந்து ஆசீர்வதியும், ஆசீர்வதியும் கூப்பிடுவதாலும் ஹாப்பி நியூ இயர் (Happy New Year..!) என்று வாழ்த்திக் கொள்வதாலும் என்ன பயன் உண்டாகுமோ,ஆசீர்வதிக்கும் தேவன் யாரோ அறியோம்.
வேதத்தில் கர்த்தருடைய பிள்ளைகள் யாரும் நள்ளிரவில் தேவாலயத்தில் கூடிவந்து ஆராதித்தது போலத் தெரியவில்லை;யூதர்களுடைய பாரம்பரியத்தில் நள்ளிரவில் ஆலயத்தில் கூடிவந்து தொழுகை செய்யும் எந்த வழக்கமோ அதுபோன்ற கட்டளையோ கிடையாது. "Happy New Year'2011..!"
#9 - Kislev 5771
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
On The HEBREW'S Calendar... Chanukah Begins: Thursday, 25 Kislev 5771
#10 - Tevet 5771
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
On The HEBREW'S Calendar... Chanukah Ends: Thursday, 2 Tevet 5771
Dec. 2010 - Jan. 2011
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
1
2
3
4
5
GREGORIAN Calendar: ATSUNDOWN... Hanukkah Ends: Thursday, December 9, 2010
யூதர்களுடைய கால அட்டவணையையும் ஆங்கிலக் கால அட்டவணையாக உலக முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரோம கத்தோலிக்க சாம்ராஜ்யத்தின் கால அட்டவணையையும் ஒப்பீட்டுக்காகத் தந்துள்ளேன்.
அதில் கிஸ்லேயு எனப்படும் ஒன்பதாம் மாதம் 25ம் தேதியிலிருந்து ஏழு நாட்கள் விளக்குகளின் திருவிழா (Festival of Lights) அல்லது தேவாலய மறு அர்ப்பணத்தின் பண்டிகையானது கொண்டாடப்பட்டது;அதன் விளைவாகவோ அதனை மறக்கச் செய்யவோ அதே ஒன்பதாம் மாதம் கலந்து வரும் டிசம்பர் மாதத்தில் அதே 25ம் தேதியன்று கிறிஸ்மஸ் எனும் ஒளியின் திருவிழா (Festival of Lights) கொண்டாடப்படுகிறது;இதைக் கொண்டாட கிறித்தவர்களுக்கு ஏதாவது சங்கடமா,"அதே நாளில் உங்கள் தலைவர் (Jesus) பிறந்ததாக வைத்துக்கொள்ளுங்கள், அவரும் தன்னை உலகத்தின் ஒளி என்று சொல்லிக்கொண்டாரே" என்று சமாதானம் சொல்லப்பட்டது.
(இன்னும் வரும்...)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)