ஒரே தேவன் அண்ட சராசரங்களையும் படைத்து அதை ஆளுகை செய்கிறார் என்பதும் அந்த தேவன் தானகவே வந்தவர் (அனாதி) என்பதும் அவருக்கு முன்பாக காலங்கள் கிடையாது என்பதும் கடவுள் நம்பிக்கை உள்ள எல்லா மதங்களும் ஒப்புக் கொண்ட ஒரு விஷயமாகும்.
ஏக தேவனானவர் முதன் முதலில் தன்னிலிருந்து குமாரனை ஜெனிப்பித்தார். இதுவே இந்த உலகில்? அல்லது சூனியத்தில் (அப்போது உலகங்கள் இல்லை) ஏற்பட்ட முதல் சலனமாகும். இந்த நிகழ்வே காலத்தின் ஆரம்பம். இது ஆதி எனப்படுகிறது. அனாதியாக குமாரனை ஜெனிப்பிக்க முடியாது என்பது ஒரு சாதாரண லாஜிக்.
எப்போது குமாரன் ஜெனிப்பிக்கப்பட்டாரோ அப்போதிலிருந்து ஏக தேவன் பிதாவாக அறியப்படுகிறார். குமாரன் வந்தது எப்படி காலத்தின் ஆரம்பமோ, அப்படியே ஏக தேவன் பிதாவாக இருப்பதும் காலத்தின் ஆரம்பத்திலிருந்தே.
இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில் ஏக தேவன் வந்தது ஆதியிலிருந்து அல்ல அவர் அனாதியிலிருந்து இருக்கிறார். ஆனால் அவர் பிதாவாக ஆனது ஆதியில் இருந்தே. அதாவது குமாரனும், பிதாவும் ஆதியில் இருந்தே வந்தவர்கள்.
தெளிவாக சொல்லப்பட்டிருக்கும் மேற்கண்ட செய்தி அல்லது லாஜிக் புரியவில்லை என்று நடிப்பவர்களுக்கு நான் ஒன்றும் சொல்ல முடியாது. ஒரு நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் கூட இதை புரிந்து கொள்ள முடியும்.)
(உதாரணம் 1 : என் வயது முப்பது எனில், எனக்கு 20 வயதில் பிள்ளை பிறந்தது எனில் நான் பத்து வருடமாகத்தான் தந்தையாக இருக்கிறேன். என் வயது முப்பது ஆனாலும் நான் முப்பது வருடமாக தந்தை அல்ல
உதாரணம் 2 : தேவன் ஆபிரகானின் தேவனாக ஆனது ஆபிரகாம் பிறந்த பிறகே. அதற்கு முன்பு அவர் ஆபிரகாமின் தேவன் அல்ல.)
குமாரன் ஜெனிப்பிக்கப்படுவதற்க்கு முன்னால் குமாரன் பிதாவுக்குள் அதாவது ஏக தேவனுக்குள் இருந்தார் என்பதால் அவர் அனாதியிலிருந்து இருக்கிறவர் என்றும் சொல்லலாம். லாஜிக்படி இதுவும் சரிதான்.
ஆனால் இவ்வாறு சொல்வதில் இன்னொரு பிரச்சனையும் உள்ளது அது என்னவெனில், ஏக தேவன் குமாரனை ஜெனிப்பிக்க, குமாரன் உயிர்களை சிருஸ்டித்தார். இதையே இன்னொரு வகையில் சொல்லவதெனில் மனிதர்களாகிய நாமும் ஒருவகையில் ஏக தேவனிடத்திலிருந்து வந்தவர்கள் ஆகையால் மனிதர்களும் அனாதியிலிருந்து இருக்கிறவர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இதுவும் லாஜிக்படி சரியே.
(ஆத்துமா அனாதி என்ற இந்த கருத்தைத்தான் இந்து, புத்த, ஜைன மதங்கள் சொல்கின்றன.)
ஆனால் ஆத்துமா அனாதி என்ற கருத்து (அது அப்படி இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும்) தேவனுக்கு சமமாக மனிதர்களை எண்ண வைத்து விடும் என்பதால் இந்த கருத்தை ஆபிரகாமிய மதங்கள் மறுக்கின்றன.
ஆக குமாரன் வந்ததே காலத்தின் ஆரம்பம் என்பதால் அவர் ஆதியிலிருந்து வந்தவர் என கொள்வதே சரியானது. ஆனால் அவர் அனாதியில் இருந்து இருக்கிறவர் என்ற கருத்தை விசுவாசிப்பதில் எந்த தவறும் இல்லை.
ஆதியிலிருந்து வந்த குமாரனே அனாதியான ஏக தேவனை அறிவார். அவரை தவிர வேறு ஒருவரும் அனாதியான தேவனை அறிய முடியாது. அனாதி தேவனை அறிவதற்க்கு வழியும் ஆதியிலிருந்து வந்த குமாரனே ஆவார். இவரே அனாதியான தேவனுக்கு வழியான அல்பா, ஒமேகாவை அறிந்தவர். அதாவது காலத்துக்கும் காலமின்மைக்கும் பாலமானவர். (அல்பா, ஒமேகா - கிராப் ஷீட்டில் ஒரு போதும் முடிவுறாத, என்ன மதிப்பு என சொல்ல முடியாத, infinite என்பதை காட்ட எக்ஸ் ஆக்ஸிஸ், மற்றும் ஒய் ஆக்ஸ்ஸில் வரையப்படும் ஏரோ மார்க்.)
எப்படி உயிர்கள் தோன்றினதோ அப்படியே மறுபடி போய் தேவனை சேர வேண்டும். அதாவது
ஆரம்பம்
(அனாதி) ஏக தேவன் - (கால ஆரம்பம்) பிதா & குமாரன் - உயிர்கள் படைப்பு
முடிவு
மனிதர்கள் - குமாரன் & பிதா - ஏக தேவன்
இதில் விவாதம் செய்வதற்க்கு என்ன இருக்கிறது என புரியவில்லை. குமாரன் ஆதியில் இருந்து வந்தவர் என்பதாலும், ஆதிக்கும், அனாதிக்கும் அவரே பாலமானவர் என்பதாலும் அவர் மதிப்பு குறைந்ததாக நான் கருதவில்லை. அவர் தொழக்கூடாத தெய்வமாகி விட்டதாகவும் நான் நினைக்கவில்லை.
(பி.கு : தேவன் பிதாவாக அனாதியிலிருந்து இருக்கிறார் என சொல்பவர்கள், குமாரனும் அனாதியிலிருந்து இருக்கிறார் என்பதை ஒத்துக் கொள்கிறார்கள்)
பிதாவும், குமாரனும் :
உலகத்து மக்களை இரட்சிப்பதற்க்காக, கால கட்டத்திற்க்கு ஏற்ப பல்வேறு விதமாக தன்னை வெளிப்படுத்தின ஏக தேவன், இந்த உலகில் வாழும் ஒரு கால கட்ட மக்களுக்காக தன்னை பிதாவாக வெளிப்படுத்த சித்தம் கொண்டார்.
வேதத்தில் ஏசாயா 9.6 இல் தான் குமாரனுடைய வருகை தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இந்த வசனத்துக்கு முன்பு வரையில் ஒருவரும் தேவனை பிதா என்று அழைத்ததாக பதிவு செய்யப்படவில்லை. குமாரன் வெளிப்பட்ட பிறகே தேவன் பிதாவாக வெளிப்படுகிறார்.
தேவனை பிதா என்று சொல்லும் முதல் வசனம் (இதற்கு முன்பு ஏதாவது வசனம் இருந்தால் அறிந்தவர்கள் சொல்லவும்)
ஏசாயா 63.16. தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும் எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது பூர்வகாலமுதல் உம்முடைய நாமம்.
பிதா ஆதியிலிருந்து வந்தவர் என்பதற்க்கு வசனம் வேண்டும் என்பவர்கள் மேலே உள்ள வசனத்தில் "பூர்வகால முதல்" அவருடைய நாமம் பிதா என சொல்லப்பட்டுள்ளதை கவனிக்கவும். ஆங்கிலத்தில் நித்தியம் என்ற அர்த்தத்தில் வருகிறது.
(நித்தியம் என்பதற்க்கு ஒரு தொடக்கம் உண்டு. ஆனால் அதன் முடிவு மனிதன் கணிக்கும் எல்லைக்குள் இல்லை)
இவ்வாறு தேவனை பிதா என்று சொன்னாலும் தங்களை அவருடைய குமாரர்கள் என அழைக்க முடியாத ஒரு நிலை இருப்பதை தீர்க்கதரிசிகள் உணர்ந்து கொள்கின்றனர்.
ஏசாயா 64.8. இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.
தேவனை பிதா என்று சொன்னாலும் தாங்கள் அவரின் பிள்ளைகள் என்ற நிலையில் இல்லாமல் களிமண் ஆக இருக்கிறோம் என தீர்க்கதரிசிகள் சொல்லுகின்றனர்.
தன்னை பிதா என்று சொல்லும் மனிதர்களையும் தேவன் அங்கீகரிக்கவில்லை. அவர்களை தான் குமாரனாக ஏற்று கொள்ள முடியாத நிலையில் இருப்பதை அவர் வெளிப்படுத்துகிறார்.
எரேமியா 3.4. நீ இதுமுதல் என்னை நோக்கி: என் பிதாவே, தேவரீர் என் இளவயதின் அதிபதியென்று சொல்லி,
5. சதாகாலமும் கோபத்தை வைப்பாரோ? அதை என்றென்றைக்கும் காப்பாரோ என்கிறாய் அல்லவோ? இதோ, இப்படி நீ சொல்லியும் பொல்லாப்புகளைச்செய்து, மிஞ்சிப்போகிறாய் என்கிறார்.
மல்கியா 1.6. குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள் உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம் என்கிறீர்கள்.
இதுவே பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளின் நிலைமை.
ஆனால் இயேசு வந்த உடன் தேவன் அவரை என் நேச குமாரன் என சொல்கிறார். அதை தொடர்ந்து புதிய ஏற்பாட்டு கால பரிசுத்தவானகள் தேவனை பிதா என்று அழைக்கின்றனர். இந்த புத்திர சுவீகாரத்தின் ஆவியாகிய தன் ஆவியை மக்களுக்கு தரவே இயேசு கிருஸ்து இந்த பூமிக்கு வந்தார்.
ரோமர் 8.14. மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.
15. அந்தப்படி, திரும்பவும்பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
16. நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.
17. நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.
18. ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.
19. மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.
பிதா-குமாரன் உறவு, பரலோக ராஜ்ஜியம், நித்திய ஜீவன் முதலியவை புதிய ஏற்பாட்டு கால மக்களுக்கே உரிய வார்த்தைகள். அதனாலேயே பரலோக ராஜ்ஜியத்தில் சிறியவனான எவனும் யோவானை விட பெரியவன் என இயேசு கூறுகிறார். ஏனெனில் புதிய ஏறபாட்டு கால மக்களே இயேசு கிருஸ்துவின் பிறப்பு-இறப்பு-உயிர்தெழுதலின் மூலமாக ஏக தேவனை பிதா என்று அழைக்க தகுதி பெற்றவர்கள். {நல்ல கருத்துக்கள் எங்கிருந்தாலும் அது கர்த்தருடைய ஆவியினால் மனுக்குலத்தின் நன்மைக்காக அருளப்படுவதாகும்;அதற்கு யாரும் சொந்தங் கொண்டாட இயலாது;உதாரணத்துக்கு இங்கே நம்முடைய தளத்தில் அலசிக் கொண்டிருக்கும் காரியத்துடன் தொடர்புடைய மேற்கண்ட கட்டுரை சிறப்பாக இருக்கிறது;நம்முடைய தள நண்பரான சந்தோஷ் அவர்கள் அதனை இங்கே பகிரலாமே? நாம் அங்காங்கே தனித்து செயல்படுவது நம்மை பெலவீனப்படுத்தி விடுமல்லவா? என்னுடைய வேலைப் பளு காரணமாக என்னுடைய தளங்களையே நிர்வகிக்க முடியாமல் தவிக்கிறேன்;உதாரணமாக என்னுடைய வோர்டு பிரஸ் வலைப்பூவில் நான் எழுதி ஒரு மாதத்துக்கும் மேலாகிறது;அதன்காரணமாகவே நண்பர் சந்தோஷ் போன்றவர்களின் தளங்களில் எழுதமுடியவில்லை;மற்றபடி யாருடைய ஊழியத்தையும் அடியேன் புறக்கணிக்கிறதில்லை என்பதே உண்மை;ஒருவேளை நண்பர் சந்தோஷ் அவர்களின் தளத்தில் நான் எழுதாததால் அவர் இங்கே எழுதுகிறதில்லையோ என்ற வருத்தத்தினால் இவ்வாறு யோசிக்கிறேன்..!}
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
bereans: // நிச்சயமாகவே ஆதிக்கும் அநாதிக்கும் வித்தியாசம் இருக்கிறது!! பிதாவாகிய தேவன் அநாதியாக (From Eternity to Eternity or everlasting to everlasting; no time boundation; God is not bound in time; and Hence God the Father is Eternal as the Holy Scriptures teach us) இருக்கிறார் என்பதும் உண்மை, அவரின் குமாரனான கிறிஸ்து இயேசு ஒரு ஆதியிலிருந்து (From a Beginning, From a Start of Period before becoming flesh) இருக்கிறார் என்பதும் உண்மை!! //
"பழைய கள்ளு, புதிய பானையில்.." என்பார்களே அதுபோல ஏற்கனவே எழுதியதையே மாற்றி மாற்றி புதிதாக எழுதுவது எழுதி திருந்தவும் மனமில்லாமல் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்,லேகியோனால் பீடிக்கப்பட்ட பேலியாளின் மக்கள்;இதுபோன்ற அவதூறுகளை விரைவில் தோலுரிப்போம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// சிவபெருமானின் அவதாரமான மற்றொரு நண்பர் யார்? // கொல்வின் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலாக அமையக்கூடிய விவாதமும் துவங்கிவிட்டது;"யுத்தம் கர்த்தருடையது " என்று வேதம் காரணமில்லாமலா சொல்லுகிறது?
இதோ, நாயின் காதைப் பிடித்து இழுக்கிற செயலைப் போல எதையோ செய்துவிட்டு, நாம் பட்ட வேதனைகளுக்கு தற்காலிக ஓய்வு தருகிற வண்ணமாக தாறுமாறானவர்களே தங்களுக்குள் மோதிக்கொள்ளத் துவங்கிவிட்டார்கள்;இது நாம் அமர்ந்திருந்து கவனிக்க வேண்டிய நேரமாகும்.
Andu:அன்பான சகோதரரே, மறுபிறவி அல்லது மறுஜென்மம் பற்றிய நம்பிக்கை உங்கள் மனதின் ஓர் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதால், உங்கள் நம்பிக்கையையொட்டி வேதாகமத்தில் காணப்படும் வசனங்களெல்லாம் மறுபிறவி அல்லது மறுஜென்மம் உண்டு எனும் கருத்தை ஆதரிப்பதாகக் கருதுகிறீர்கள்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அன்பு நண்பர் கொல்வின் அவர்களே, நான் வேறொரு திரியில் சுட்டிக்காட்டியது போல இவர்கள் தங்கள் உபதேச வித்தியாசங்களை நேரடியாக முதல் சந்திப்பிலேயே சொல்லுவதில்லை;நம்முடன் நட்புரீதியில் நீண்டகாலம் பழகிவிட்டு கொஞ்ச கொஞ்சமாகவே நம்மை சத்தியத்தை விட்டு பிரிப்பார்கள்;இதனால் இவர்களை நான் நண்பர்கள் என்றோ சகோதரர்கள் என்றோ அழைப்பதில்லை;எனக்கு வெளிவேடமான அலங்காரச் சொற்கள் பிடிக்காது;இந்த வார்த்தைகளுக்கு நல்ல அர்த்தங்களுண்டு;வேண்டுமானால் "திரு" என்ற சொல்லால் இவர்களைக் குறிப்பிடலாம்;ஏனெனில் "திரு" என்பதில் "திருடன்" என்ற அர்த்தமும் கொள்ள முடியுமல்லவா?ஆனாலும் இவர்கள் நேரடியாக தங்கள் கொள்கைகளை அறிவிக்கத் துவங்கிவிட்டதால் மனதார நண்பர்கள் என்று சொல்லுவேன்;ஏனெனில் மறைத்து, மாற்றி, மாயம் செய்து, மயக்கி பேசி வந்த இவர்கள் நேரடியாக பேசத் துவங்கிவிட்டதால் இவர்களை அடையாளம் காண்பது எளிதாகிறது;இதனைச் செய்யவே நான் ஆரம்பம் முதலே நெருக்கம் கொடுத்து வந்தேன், என்கிறேன்.
ஆனாலும் இவர்களுக்கு நம்முடைய ஊழியர்களைக் குறைகூற எந்த தார்மீக தகுதியுமில்லை ;ஒரு இந்துவோ முஸ்லிமோ ஆண்டவரையும் அவருடைய ஊழியர்களையும் தூஷித்தால் கூட நான் பொறுமையாகவும் சாந்தத்துடனும் பதிலளிப்பேன்;ஆனால் இவர்கள் உண்டு கொழுத்து சளுக்கு பண்ணுகிறவர்கள்;எனவே தங்களை கிறித்தவர்கள் என்று குறிப்பிடக்கூட இவர்களுக்கு தகுதி கிடையாது; ஏனெனில் கிறித்துவை தெய்வமாகத் தொழுபவர்களே கிறித்தவர்கள்;அவரே கண்கண்ட தெய்வம்; கிறித்தவையும் அவருடைய தொழத்தக்க தெய்வத்தன்மையும் மட்டுமே இவர்களுடனான இணக்கத்துக்கு எல்லையாக நான் வைத்துள்ளேன்;மற்ற உபதேச வித்தியாசங்களை எளிதில் பேசித் தீர்க்கமுடியும்;அவர்கள் இந்த நிலைக்கு வரும் வரை அவர்களுக்கு நான் எந்த பதில் விளக்கங்களையும் கொடுத்து வாதத்தை வளர்க்க விரும்பவில்லை;பிதாவும் இயேசுவும் ஒன்றா வெவ்வேறா என்பதற்கு என்னிடம் நேரடியான பதில் உண்டு, ஆனால் சொல்லமாட்டேன்;ஏனெனில் இவர்கள் வெளிப்படையாகவே இயேசு தொழத்தக்கவரல்ல என்று ஏற்கனவே எழுதிவிட்டார்கள்;
சிவபெருமான் அவதாரக் கதை பெரிய கதை; அதை இப்போதே சொல்லமுடியாது;ஆனாலும் நீங்கள் எச்சரிக்கையாக இருந்து நான் அதிகமாக ஊடாடி அடையாளம் காட்டி வரும் துருபதேசத் தளங்களில் தங்கள் ஆரோக்கிய உபதேச தொடர்களை பதிக்காமல் இருந்தால் நான் சந்தோஷப்படுவேன்;ஏனெனில் அவிசுவாசியுடன் விசுவாசிக்கு பங்கில்லையே..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஆமாங்கோ... நான் ஏன் என் மானம் மரியாதையெல்லாம் விட்டுவிட்டு கோவைபெரியன்ஸ் செய்யும் தூஷணங்களையெல்லாம் பொறுத்துக்கொண்டு அவர்களுடன் போராடிக்கொண்டிருக்கிறேன் என்ற காரணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் துவங்கியிருக்கிறது;
கோவைபெரியன்ஸ் - தாங்கள் வெளிப்படையாகப் பேசத் துவங்கியிருப்பதால் நான் இனிமேல் தங்களை நண்பர் என்று அழைக்கப்போகிறேன்;உங்களுடைய முழுமையும் வெளிப்படுத்தி நேரடியாக விஷயத்துக்கு வாருங்கள் என்றழைத்தே இத்தனை நெருக்கம் கொடுத்து வந்தேன்; தற்போது நீங்களே பெரிய மனது வைத்து எனது வேலைகளை எளிதாக்கியமைக்கு நன்றி நண்பரே..!
இதுபோலவே சிவபெருமானின் மறுஅவதாரமான மற்றொரு நண்பரும் யாருக்கும் பயப்படாமல் சீக்கிரம் தன்னிடமுள்ள சரக்குகளை எடுத்து வைத்துவிட்டால் நாங்களெல்லாம் நிம்மதியாக வேறு வேலை பார்க்கப்போவோமுங்க..!
இனி கோவைபெரியன்ஸ் தளத்திலிருந்து இயேசுகிறித்துவின் தெய்வத்தன்மையை மறுக்கும் செய்தி...
// நண்பர் சந்தோஷ் அவர்களின் "உண்மைபேசுகிறது" தளத்தில் ஒரு வித்தியாசமான வாக்கியத்தை வாசிக்க நேர்ந்தது,
//ஏக தேவன், உலகை படைக்கும் முன் தன்னிலிருந்து குமாரனை வெளிப்படுத்தினார். அதனால் அவர் பிதா என்ற நாமம் பெற்றார். அதாவது குமாரனும், பிதாவும் ஒரே நேரத்திலேயே உண்டானவர்கள். ஒருவருக்கு குழந்தை பிறந்த பிறகே அவர் அப்பாவாகிறார். அதாவது அப்பா என்ற ஸ்தானம் உருவாவது குழந்தை வெளிப்பட்ட பிறகே. இதை வேறு கோணத்தில் பார்த்தால் குழந்தையால் தந்தை பிறக்கிறார் என்றும் சொல்லலாம். குமாரனே பிதாவை வெளிப்படுத்த முடியும். //
உலகத்தை படைக்கும் முன் தேவன் தன்னிலிருந்து குமாரனை வெளிப்படுத்தினார் என்பது வேதத்திற்கு புறம்பான ஒரு கருத்து!! கிறிஸ்து தேவனின் முதல் பேறானவர், ஜெனிப்பிக்கப்பட்டவர் என்று தான் வேதம் சொல்லுகிறது!! கிறிஸ்து தேவனிடத்தில் தோன்றினார் என்பது அபத்தம்!! முதற்பேறானவருக்கும் தோன்றுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது!!
அடுத்த வாக்கியம் அதைவிட அபத்தம்!! குமாரனும் பிதாவும் ஒரே நேரத்திலேயே உண்டானவர்கள் என்பது!! பிதாவாகிய தேவனை குறித்து வேதம், அவர் அநாதியாய் இருக்கிறவர் என்றும், கிறிஸ்துவை குறித்து அவருக்கு ஒரு ஆதி இருந்தது, அதாவது துவக்கம் இருந்தது என்று தான் சொல்லுகிறது!! பிதா திடீரென்று பிதாவாகிவிடவில்லை!! அவர் அனைத்தையும் அறிந்தவராக இருப்பதால், இந்த படைப்புகள் ஒன்றும் நினைத்து நினைத்து திடீர் திடீர் என்று தோன்றியது அல்ல, எல்லாம் தேவனின் ஆதீன திட்டத்தில் இருந்தது தான்!! தேவனை ஒரு போதும் ஒருவனும் கண்டதில்லை, குமாரன் அவரை அவரின் தன்மையை அவரின் அன்பை, அவரின் படைப்பின் தன்மையை அனைத்தையும் வெளிப்படுத்தினார், மாம்சத்தில் வந்த போது!!
பிதாவிலிருந்து குமாரன் தோன்றுவது என்பது அபத்தமான கருத்து என்று இத்தளம் பதிவு செய்கிறது!! "நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்,என்னைக் கண்டவன் என் பிதாவைக் கண்டான் " என்று ஆண்டவரே சொன்னபிறகும் அவரையும் பிதாவையும் கூறுபோடும் குள்ளநரித்தனத்தை என்னவென்று சொல்ல..? இங்கே சந்தோஷ் ஏதோ எழுதியிருக்கிறார்,அது அத்தனை ஆபத்தான உபதேசக் கோளாறல்ல,ஆனால் கோவை பெரியன்ஸ் குறித்து நான் மீண்டும் எச்சரிக்கிறேன்;அவர்கள் தேவ பக்தியின் வேஷம் தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாக்கும். http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=40115864
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)