இதைக்குறித்து எழுதவதென்றால் பக்கம் பக்கமாகக எழுத வேண்டும். ஆயினும் நான் ஒரு காரியம் செய்துள்ளேன். சகோ. வசந்தகுமார் எழுதிய நூல் என்றினை தரவேற்றம் செய்துள்ளேன். அதில் பின்வரும் விடயங்கள் காணப்படுகின்றன.
மரணத்தின் மறுபக்கம்
முதலாம் அத்தியாயம்
மரணம் விழித்து எழக்கூடிய நித்திரை
1.மரண நித்திரையின் அற்புதம்
2.மரண நித்திரையின் அடிப்படை
3.மரண நித்திரையின் அனுபவம்
இரண்டாம் அத்தியாயம்
மரணம் விடுதலைப் பெற்றுச் செல்லும் யாத்திரை
1.மாமிசத்திலிருந்து விடுதலை
2.மண்ணுலகிலிருந்து விடுதலை
3.மரணத்திலிருந்து விடுதலை
மூன்றாம் அத்தியாயம்
மரணம் விண்ணுலக வாழ்வுக்கு ஒரு முத்திரை
1.பாதாளமும் பரலோகமும்
2.ஆவிகளும் பரலோகமும்
3.பரசீசும் பரலோகமும்
4.நியாயத்தீர்ப்பும் பரலோகமும்
5.நாமும் பரலோகமும்
உசாத்துணை நூல்கள்
உங்கள் அனைத்துக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என நம்புகிறேன். இலங்கையில் இந்த நூல் பல பதிப்புகளை கண்டு விற்பனையில் சாதனை படைத்தது. தற்போது விற்பனைக்கும் கிடைப்பதில்லை. நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க உங்களுக்கு தந்துள்ளேன். படித்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவியுங்கள்.
இந்த திரியின் ஆதாரமானது ஒரு கட்டுரையின் பின்னூட்டத்திலிருந்து வருகிறது; இந்த குறிப்பிட்ட பின்னூட்டத்திலுள்ள கேள்விகள் கவனத்தை ஈர்ப்பதாக இருந்ததால் இதனை விவாதத்துக்கு எடுத்திருக்கிறோம்;நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த சத்தியத்தை இங்கே பதிக்கலாம்.
// 6000 வருடங்களாக ஆதாம் உணர்வுடன் இருக்கிறார் என்கிறீர்கள். அவர் “லாசருவைப்” போல ஆபிரகாமின் மடியிலிருப்பாரா, அல்லது “ஐசுவரியவானைப்” போல பாதாள அக்கினியில் வேதனையுடன் ஒரு சொட்டுத் தண்ணீருக்காக ஏங்கிக் கொண்டிருப்பாரா? //
இந்த கேள்விக்கு யாரும் பதில் சொல்லாத கவலையில் வேறொரு நண்பர் தனது தளத்தில் இதனைப் பதிக்க,அந்த தொடுப்பைத் தொடர்ந்து இங்கே வந்திருக்கிறேன்.
நமது பின்னூட்டத்தை மட்டுறுத்திய பிறகே வெளியிடுவர்;அதுவரை நமக்கு பொறுமையில்லாததாலேயே நண்பர்களின் வலைப்பூக்களில் அதிகம் நான் பதிவிடுகிறதில்லை;ஆனாலும் கருகலான இந்த கேள்விக்கு எனக்குத் தெரிந்த பதிலைச் சொல்லத் தூண்டப்பட்டேன்.
கேள்வி கேட்டவர் யாரென்பது எனக்கு முக்கியமில்லை;ஆனால் கேள்வி முக்கியமானது;யாருடைய மனதிலும் எழும்பக்கூடியது;இதனைத் தவறான விதத்தில் அணுகாமல் இஸ்லாமிய நண்பர்களைப் போலவே, 'அதற்கான விளக்கம் இதுதான்,அதை நான் நம்புகிறேன் ' என்று சொல்லிவிட்டு போகவேண்டியதுதான்;இஸ்லாமியரிடம் எனக்குப் பிடித்த விஷயம் இதுதான்;அவர்கள் முகமது சொன்னதை எந்த எதிர்கேள்வியும் கேட்காமல் நம்புகிறார்கள்.
ஆனால் நாம் நம்மை நோக்கி நேரடியாக கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு நேர்மையான ஒரு பதிலைத் தரமுடியாமலோ அல்லது தரவிரும்பாமலோ தாமதிக்கவும் திருப்பித் தாக்கவுமே முயற்சிக்கிறோம்;காரணம் நாம் கற்றுக் கொள்வதைவிட யாரோ எங்கோ கற்று அறிவிப்பதை விரைந்து நம்புகிறோம்.
இப்போது கூட இந்த கேள்வியைத் தத்தமது தளத்தில் போட்டு விவாதிக்கத் துவங்கியிருக்கும் நண்பர்களைப் பார்த்து மற்றவர் எக்கலித்து சிரிக்கும் வண்ணமாக விவாதிப்பார்கள்;ஏனெனில் அவர்களில் யாருக்கும் சத்தியத் தேடலும் இல்லை,சத்தியத்தில் தெளிவும் இல்லை.
இங்கே நடக்கும் விவாதத்திலேயே எடுத்துக்கொள்வோம்,ராபின் அவர்கள் கடவுள் கொலை செய்யப்படவில்லை, கொலை செய்யப்பட அனுமதித்தார் என்கிறார்;கடவுள் கொலை செய்யப்பட்டார் என்று வேதம் எங்காவது சொல்லுகிறதா என்ன?
மேலும் கொல்வின், அவர் மரித்தாலும் அவருக்கு உணர்வு இருந்தது எனவே உலகை அவரால் நிர்வகித்திருக்க முடியும் என்கிறார்;காரணம் மரித்தாலும் ஆத்துமாவுக்கு உணர்வு உண்டு என்பது அவருடைய நிலை; அப்படியானால் உங்கள் கூற்றுப்படி 6000 வருடமுன்பு மரித்த ஆதாம் இன்னும் உணர்வுடன் தான் இருப்பாரா என்று எதிர்தரப்பு கேட்டதும் நமக்கு நேரடியான பதிலைத் தருவதைவிட குறுக்குவழியில் பதிலளிப்பதே எளிதாக இருக்கிறது;இதன்மூலம் குரான் கூறும் கேலிக்கூத்தான ஒரு சலுகையை பரியாசம் செய்வது போலிருந்தாலும் மேலோட்டமாகப் படிப்பவர்க்கு குரானின் கூற்றை நாம் ஏற்றுக்கொள்வது போலாகிறது;இப்படியே இங்கே அதாவது இணையதள தமிழ் கிறித்தவ உலகில் (..?!) தேவையற்ற விவாதங்கள் வளர்ந்து நம்முடைய குணாதிசயத்தையே மாற்றிவிடுகிறது;
நான் இந்த விஷயத்தில் கேள்வி கேட்டவரின் பக்கமே நின்று எனக்கும் சேர்த்து ஒரு நியாயமான பதிலைத் தரவேண்டுகிறேன்..! முக்கியமாக பதிலளிக்க வேண்டிய கேள்விகள்: கடவுள் மரித்த நிலையிலிருந்த அந்த மூன்று நாள் உலகம் எப்படி இயங்கியது?
ஆதாமின் ஆன்மாவும் இயேசுவின் ஆன்மாவும் ஒன்றா?
ஆதாமின் ஆவியும் இயேசுவின் ஆவியும் ஒன்றா?
ஆதாமின் சரீரத்துக்கும் இயேசுவின் சரீரத்துக்கும் என்ன வித்தியாசம்?
ஆதாம் இப்போதும் உணர்வுடன் இருப்பதை லாசருவின் உவமை தவிர்த்து எப்படி நிரூபிக்க இயலும்?
ஆபிரகாமின் மடி என்பது என்ன? தனிப்பட்ட முறையில் நான் அறிய விரும்பும் ஒரு தகவல்: ஈசா நபியே, தனக்கு நான்கு வேதங்களையும் கொடுத்ததாக முகமது சொன்னாராமே;அதைக் குறித்த விவரத்தை அறிய விரும்புகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)