கடந்த வருடமுதல் இதோ சுமார் ஒரு வருடமாக -தேசத்தில் அமைதலோடு வாசம் பண்ண நினைக்கும் நமக்கு எதிராக அடக்குமுறைகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு ஊடகங்களும் அரசாங்கங்களும் நியாயமானதொன்றையும் செய்யவில்லை.இன்னும் வெளியே தெரியாத கொடுமைகள் அநேகமுண்டு.இதனைக் குறித்து விவரமாக எழுத ஆயத்தப்படுகிறேன். ஆனாலும் அதற்கு முன்பதாக ஒரு முக்கியமான ஊக்கம் தேவைப்படுகிறது. காரணம் நமது தளம் அதனை சாதிக்கும் ஒரு மாபெரும் ஆற்றல் பெற்றதாக இன்றைக்கு விளங்குகிறது.
சுதந்தரப் போராட்டங்களோ தாழ்த்தப்பட்டோர் விடுதலை இயக்கமோ அது எங்கோ ஒரு சிறு நெருப்பாக தெரித்ததுதான் என்பது மனுக்குல வரலாறு..!
சட்டசிக்கல்களில் சிக்கிக் கொள்ளும் எதையும் நாம் செய்யப் போவதில்லை.ஆனால் இந்த தளத்தின் மூலம் அதனை ஒரு மாபெரும் புரட்சியாகக் கொண்டு செல்லும் ஆற்றல் நமக்கு உண்டு என நான் உறுதியாக நம்புகிறேன்.
விஷயத்துக்கு வருகிறேன்.., ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஏழை ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வீண்பழி சுமத்தப்பட்டு அவர்கள் மீது வன்முறை ஏவிவிடப்பட்டு மானத்தையும் மரியாதையையும் வாழ்வாதாரங்களையும் இழந்து ஆயிரக்கணக்கான மக்கள் இன்றைக்கும் காடுகளில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.நமக்கு 3மணி நேரம் மின்வெட்டையே பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.
தயவுசெய்து மையப் பொருளைவிட்டு விலகாமல் எனது யோசனைக்கு ஆதரவு தருவதோடு தங்கள் மேலான கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்.இது என்னுடைய யோசனை மட்டுமல்ல.,ஒரிஸ்ஸா பிரச்சினைக்காக நான் துக்கத்தோடு ஜெபித்தபோது ஆண்டவர் எனக்குக் கொடுத்த சவால்..!
அடுத்த மாதத்தில் கிறிஸ்தவர்களாகிய நாம் "கிறிஸ்மஸ்" மற்றும் புது வருட பண்டிகைகளைக் கொண்டாட ஆயத்தமாக வேண்டும்.,உலக முழுவதும் இது ஒரு மாபெரும் பணப்புழக்க விழாவாக மாறிவிட்ட நிலையில் துக்கவீடாகி நிர்க்கதியாகி நிற்கும் இந்திய கிறிஸ்தவ சபையாருக்கு இந்த கொண்டாட்டங்கள் தேவையா..? நமது வீட்டில் ஒரு துக்கம் என்றால் நாம் பண்டிகைக் கொண்டாடுவதில்லை.நமது சபையார் அங்கே துன்பப்படும் போது நாம் எப்படி "வான்கோழி" பிரியாணி சாப்பிடப்போகிறோம்..?அது அவர்களுடைய மாம்சத்தை சாப்பிடுவது போலிருக்காதா..?
எனவே இந்த வருடம் நாம் இந்தியாவில் கிறிஸ்மஸ் பண்டிகையினைப் புறக்கணித்துவிட்டு சர்வ வல்ல தேவனை நோக்கி மனங்கசந்து அழுதால் என்ன..?
இதனால் ஐயங்கார் பேக்கரிகளும் சரவணா துணிக்கடைகளும் சுகுணா சிக்கன் கடைகளும் தடுமாறட்டுமே..!அந்த ஒரு நாள் நமது ஒற்றுமையினை தேசத்துக்கு உணர்த்தும் வண்ணம் உபவாசித்து அழுவோம்., தேவன் வேறு பல அதிசயங்களை செய்ய ஆயத்தமாக இருக்கிறார்..!
இந்த புரட்சி விதையினை நான் செல்லும் இடங்களில் தூவத் துவங்கி விட்டேன்.,எனது கருத்தினை ஆதரிக்கும் நண்பர்கள் தங்களது ஆதரவினை இங்கே பதிவு செய்வதுடன் இந்த செய்தியினை வேகமாகப் பரவிட (ஒரு வதந்தியைப் போல..)வழிவகை செய்யவேண்டுகிறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கடந்த 2008 வருடம் கிறிஸ்மஸ் காலத்தில் தமிழ்க் கிறித்தவ தளத்தில் பதிக்கப்பட்ட இந்த கட்டுரையினை நான் மறுபதிப்பு செய்தேன்;அதனை நம்முடைய தள நண்பர்களின் கவனத்துக்கு மீள்பதிவாகக் கொண்டு தருகிறேன்.
"தேவன் ஒருதரம் விளம்பினார்,இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்" (சங்கீதம்.62:11) இரண்டுதரம் வாசித்தால் என்ன? கட்டுரைப் பகுதியில் கவனிக்காதோர் இங்காவது வாசிக்கட்டுமே.,சற்றுப் பொறுமையாக வாசித்தால் கண்கள் திறக்கும்.,திறக்கவேண்டும்..!
CHRISTMAS CELEBRATION - AN APPROACH Posted bytamilchr on Friday, December 21 @ 05:53:11 EST Contributed by ilayaraja
Consider Christmas, which is celebrated by many as the birthday of Jesus Christ. Shopkeepers of all religions look forward to Christmas, for it is a time when they can make much profit. It is a commercial festival, not a spiritual one. Millions of rupees are spent on Christmas cards and gifts. Sales of alcoholic drinks go up at this time. And the traffic police around the world are kept on their toes, for there are never so many accidents on the roads as during the Christmas season. More people go to hell through road accidents at this time, than any other time of the year.
Is this really then the birthday of the Son of God, or of another ''Jesus''? Let us look at God''s Word first of all. The Bible tells us that there were shepherds with their sheep out in the fields of Judea, on the night that Jesus was born in Bethlehem. The shepherds in Palestine did not keep their flocks out in the open fields at night after October and until February - the weather being both rainy and cold. So the real Jesus must have been born sometime between March and September. December 25 then must be the birthday of another ''Jesus'' that has been foisted on an unsuspecting Christendom by Satan!
Further, even if we did know the exact date of Jesus'' birth, the question would still be whether God intended His church to celebrate it. Mary, the mother of Jesus, would certainly have known the exact date of birth of Jesus. And she was with the apostles for many years after the day of Pentecost. Yet there is no mention anywhere of Jesus'' date of birth. What does this show? Just this - that God deliberately hid the date of Jesus'' birth, because He did not want the church to celebrate it.
In the Bible we read of earthly kings celebrating their birthdays publicly - Pharaoh (Gen. 40:20) and Herod (Mk. 6:21). God never intended Jesus to be in that category.
An understanding of the difference between the old and the new covenants will also enable us to understand why God does not want His children to celebrate any special holy days now. Under the old covenant, Israel had been commanded to celebrate certain days as specially holy days. But that was only a shadow. Now that we have Christ, the will of God is that every day of our lives be equally holy. Even the weekly sabbath has been done away with under the new covenant. This is why no holy days are mentioned anywhere in the New Testament ( Col.2:16 17).
How then did Christmas and Easter make their entry into Christendom? The answer is: in the same way that infant baptism, priestcraft and a host of other human traditions have made their entry - by the subtle working of Satan.
When the emperor Constantine made Christianity the state religion of Rome in the 4th century, multitudes became Christian ''in name'' without any change of heart. But they did not want to give up their two great annual festivals - both connected with their worship of the sun. One was the birthday of the sun-god on December 25 when the sun which had gone down to the southern hemisphere began its return journey (the winter solstice). The other was the spring festival in March/April, when they celebrated the death of the winter and the birth of the warm summer that their sun-god had brought. They renamed their sun-god ''Jesus'' and continued to celebrate their two great festivals, now as Christian festivals and called them Christmas and Easter. The Encyclopaedia Brittanica (an authority in secular history) has the following to state about the origin of Christmas:
"December 25 was the Mithraic feast of the unconquered sun of Philocalus. Christmas customs are an evolution from times that long antedated the Christian period - a descent from seasonal, pagan, religious and national practices, hedged about with legend and tradition. The exact date and year of Christ''s birth have never been satisfactorily settled, but when the fathers of the church in A.D. 440 decided upon a date to celebrate the event, they wisely (?) chose the day of the winter solstice which was firmly fixed in the minds of the people and which was their most important festival. As Christianity spread among the people of pagan lands, many of the practices of the winter solstice were blended with those of Christianity" - (1953 edition, Vol. 5 Pages 642A, 643).
These pagan customs originated with the Babylonian religion begun by Nimrod (Gen. 10:8-10). After he died, his wife Semiramis had an illegitimate child, which she claimed was Nimrod come back to life again. Thus began the worship of the mother and child, which the Roman Catholics took over centuries later and transferred to ''Mary and Jesus''.
The birthday of this child-god was celebrated by the ancient Babylonians on December 25. Semiramis was the queen of heaven (Jer. 44:19), worshipped centuries later in Ephesus as Diana or Artemis (Acts 19:28 ).
Semiramis claimed that a full grown evergreen tree grew overnight from a dead tree stump. This symbolised Nimrod''s coming back to life, and bringing heaven''s gifts to mankind. Thus began the practice of cutting down a fir tree and hanging gifts on it. That is the origin of today''s Christmas tree!
Thus says the Lord, "Do not learn the way of the heathen. The customs of the people are futile. One cuts a tree from the forest with the axe. They decorate it with silver and gold; they fasten it with nails so that it will not topple!" (Jer. 10:2-4).
Brother Zac Poonen
Dear ones,I am attaching the article for the benefit of our dear belivers. May God bless everyone. In Christ, S. Sivakumar Ilayaraja hiilayaraja@gmail.com
இந்த கட்டுரையின் விளைவான முக்கிய விவாதங்கள்... josephsneha:
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு இது போன்ற விளக்கங்கள் இருந்தாலும் நடைமுறை கிறிஸ்தவ வாழ்க்கைக்கு கொண்டாடலாமா, வேண்டாமா என்பது தேவையில்லாத விவாதம் என்று கருதுகிறேன். ஆண்டவர் நம் உள்ளத்தில் பிறந்தால் தினமும் கிறிஸ்துமஸ் தான். இன்றைக்கு கிறிஸ்துமஸ் வியபாரமாகி விட்டது உண்மையே. பலர், அதுவும் குறிப்பாக மேலை நாடுகளில் இப்பண்டிகையை வியாபார நோக்கிலேயே அணுகுகின்றனர். மைசூர் போண்டாவில் எப்படி மைசூர் இருக்காதோ அதேபோல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்து இருக்க மாட்டார். நீங்கள் யூதேயாவின் கால நிலைகளையும், மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி இருந்ததையும் வைத்து கிறிஸ்து அனேகமாக மார்ச், ஏப்ரலில் தான் பிறந்து இருப்பார் என கருதி புதிய தேதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட ஆரம்பித்தாலும் அந்த கிறிஸ்துமசும் வியாபாரம் சார்ந்த நோக்கில் தான் கொண்டாடப்படும். அதனால் கிறிஸ்துமசை என்றைக்கு கொண்டாடினாலும் தவறில்லை. இது தொடர்பாக உலகம் முழுவதும் ஒரு பொது கருத்தையோ அல்லது புதிய தேதியையோ ஏற்படுத்த முடியாது. யாரும் கிறிஸ்துமஸ் தேதியான டிசம்பர் 25 ந் தேதியில் நிம்ரோதையோ அவனது தாயாரையோ வணங்குவதில்லை, இயேசுவை தான் கிறிஸ்தவர்கள் வணங்குகின்றனர். இயேசு இந்த உலகில் மனிதனாக அவதரித்து நம் பாவங்களுக்காக மரித்தது உண்மை. எனவே என்றைக்கு கொண்டாடுகிறோம் என்பது முக்கியமல்ல எதற்கு கொண்டாடுகிறோம் என்பது தான் முக்கியம். உதாரணமாக வளைகுடா நாடுகளில் கிறிஸ்தவர்கள் வெள்ளிக்கிழமைதான் ஆலயம் செல்வார்கள். ஏனெனில் வெள்ளியன்று தான் இஸ்லாமியர்களுக்கு விடுமுறை, அதனால் அவர்கள் வேறு ஒரு இயேசுவை வணங்குகிறார்கள் என்றா அர்த்தம். சொல்லப்போனால் எதன் அடிப்படையில் நாம் ஞாயிறு ஆராதனையை ஆராதிக்கிறோம். சற்று சிந்தித்தால் இது போன்ற விவாதங்கள் தேவையில்லை என்பது புலப்படும்.
chillsam:
நண்பர் ஜோ அவர்களது பதில் சுவாரசியமாக இருப்பினும் இது தான் நடைமுறைக்கு ஒவ்வாதது.,ஆம் விண்ணக நடைமுறைகளுக்கு ஒவ்வாதது;
பரலோகத்தின் மைசூர் போண்டாவில் நிச்சயமாக மைசூர் இருக்கும்., காரணம் அது வெளிச்சத்தில் வெளிச்சம்.,உண்மையிலும் உண்மை., இதை விட எத்தனையோ தடைகளைத் தாண்டித்தான் சீர்திருத்த மார்க்கம் வளர்ந்தது.
"நான் உன்னோடே பேசும்போது, உன் வாயைத் திறப்பேன்; அப்பொழுது கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைத்தார் என்று அவர்களோடே சொல்வாய்; கேட்கிறவன் கேட்கட்டும், கேளாதவன் கேளாதிருக்கட்டும்; அவர்கள் கலகவீட்டார்".(எசேக்கியேல்.3:27)
சீஸனுக்கு ஏற்ற வியாபாரத்தினை அவர்கள் செய்யும் போது நாமும் அதே போல சீஸனுக்கு ஏற்ற சத்தியத்தை சொல்லித்தான் ஆகவேண்டும்.
"தேவனுக்கு ஏற்ற பலி"க் கொண்டாட்டம் மறைந்து தேவகோபம் வெளிப் பட்டால் பரவாயில்லையா.,
சீனாய் மலையடிவாரத்திலும் சரி,வனாந்தரத்திலும் சரி,பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போதும் சரி.,விருந்து பண்டிகைக் கொண்டாட்டங்களின் போது வாதையும் அழிவுமே சம்பவித்தது.,
யோபுவின் சரித்திரமும் ஏரோது ராஜாவின் ஜனன நாள் யோவான் ஸ்நானனின் மரணநாளான கொடூரத்தினையும் ஏன் நமது இரட்சகர் பிறந்த அன்று எண்ணற்ற இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதையும் பார்க்கும் போது "பிறந்த நாள்" கொண்டாட்டங்களையே வேதம் ஒப்புக் கொள்ளவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. devaraj:
"யோபுவின் சரித்திரமும் ஏரோது ராஜாவின் ஜனன நாள் யோவான் ஸ்நானனின் மரணநாளான கொடூரத்தினையும் ஏன் நமது இரட்சகர் பிறந்த அன்று எண்ணற்ற இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதையும் பார்க்கும் போது "பிறந்த நாள்" கொண்டாட்டங்களையே வேதம் ஒப்புக் கொள்ளவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது" என்கிறதான சில்சாம் அவர்களின் கருத்து, சுவாரசியமாக இருப்பினும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்னும் அவர் கருத்தினை வேதத்தின் சில மரணங்களோடு ஒப்பிட்டு நியாயப் படுத்தும் முயற்சியே. இது தொடரும் ஒரிசாவில் சென்ற வருடம் கிறித்து பிறப்பு பெருவிழாவில் ஆரம்பித்த வன்முறை இன்று கொலை வெறியாய் தாண்டவமாடுகிறதே, இதிலிருந்து தேவன் கிறிஸ்துமஸ் பெருவிழாவை வெறுகிறார் என புரியவில்லையா எனக் கேட்கத் தூண்டும். நகைப்பிற்குறிய வாதம் இது.
chillsam:
மரணமில்லாதோர்க்கு பிறந்தநாள் விழா ஒரு கேலிக்கூத்து..,
ஓங்கி உரைக்கவேண்டியது இயேசுவின் உயிர்த்தெழுந்த செய்திதான்.,அதுவே கட்டளையாகக் கொடுக்கப்பட்டது.,வேத எழுத்துகளை வரிக்குவரி கடைபிடிக்க விரும்பும் கிறிஸ்தவன் பிரதான அப்போஸ்தலனாகிய பேதுருவோ ஏன் அன்னை மரியாளோகூட கொண்டாடாத ஒரு விழாவினை எப்படி ஏற்றுக் கொள்வான்?
இயேசு பிறந்தார் என்பது செய்தி;ஆனால் கிறிஸ்து உயிர்த்தெழுந்தது விசேஷம்..!இதுவே ஆதி அப்போஸ்தலர்களின் பிரதான செய்தியாக இருந்தது.ஏனெனில் இயேசுவை தேவகுமாரனாகவும் தேவனாகவும் நிறுவுவதே -மூர்க்கமான மத வைராக்கியம் கொண்ட யூத மார்க்கத்தமைந்தவர்களிடத்தில்(இன்று இந்து,முஸ்லிம் மக்களிடம்...)சவாலாக இருந்தது. இயேசுவானவரைப் புனிதராக,இறைத்தூதராக,அவதாரமாக ஏற்றுக் கொள்ளும் சமுதாயம் அவரை(மட்டும்) தெய்வமாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.காரணம் இறைவன் இவையெல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவனாக இருக்கவேண்டும் என்பது இறைக் கொள்கை.எனவே புனிதர்கள் தங்கள் இறைச்செய்தியில் வந்தார்,தோன்றினார்,வெளிப்பட்டார் எனும் வார்த்தைகளைப் பயன்படுத்தினர்.
"இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்,மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்."(ரோமர்.1:4 5 ) "அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார். (1.தீமோத்தெயு.3:16) "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்" (1.தீமோத்தேயு.1:15) பார்ப்போம்...
devaraj:
டிவி மீடியாவில் சர்ச்சைக்குரிய உபதேசம் சம்பந்தமான விளக்கங்களையும் சபைகளுக்கெதிரான தாக்குதல்களையும் ஊழியர்கள் தவிர்த்துவிட்டு எத்தனை சேனல் வேண்டுமானாலும் நடத்தட்டும்.இஷ்டப்பட்டவன் கஷ்டப்பட்டா நமக்கென்ன?" என்று சொன்னீர்களே...
chillsam: எனது அரும்பெரும் கருத்துக்களை(?!) சேமித்துவைத்திருக்கிறீர்களோ அல்லது ஞாபகத்திலிருந்து மேற்கோள் காட்டினீர்களோ தெரியவில்லை.,எப்படியாயினும் சற்று தடுமாறித்தான் போனேன்.,பதிலளிக்கும் நாகரிகத்துக்காகவே மீண்டும் வருகிறேன்.,மற்றபடி இது சம்பந்தமாக -உங்களிடம் இதுவே கடைசி..!
கிறிஸ்து பிறந்ததை அனைவரும் விசுவாசிக்கும் போது கிறிஸ்து பிறப்பு எப்படி அவிசுவாசிகளின் கொண்டாட்டமாக இருக்கும்?
=>மேற்சொன்ன "டிவி மீடியாவில் சர்ச்சைக்குரிய செய்தி" சம்பந்தமான எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை.,ஆனாலும் ஒன்றை நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.,இதை நான் எழுதினவுடனே எல்லாரும் அதனை நிறுத்திவிடவில்லை. ஆனால் இந்த ஞானமான அணுகுமுறையினை நீங்கள் சகோதரர் மோகன் சி.லாசரஸ் அவர்களிடம் காணமுடியும்.மீடியாவில் குடும்ப உறவுகள் பற்றியும் கடவுளுடைய அன்பைக் குறித்தும் மாத்திரம் பேசும் அவர் உபவாச முகாம்களிலும் வெளிக்கூட்டங்களிலும் அனல் பறக்க கண்டித்துணர்த்திப் பேசுவார். =>டிவி மீடியாவில் (பொதுமக்கள் கவனிப்பதால்.,)இது போன்ற கட்டுப்பாடுகள் இருக்கலாம்; ஆனால் நமது தளம் கிறிஸ்தவர்களுக்காக மட்டும் என்று நினைக்கிறேன்;இங்கே கருத்து சுதந்தரம் பேணப்படுகிறது., பேணப்படவேண்டும் என்பதே எனது விருப்பம்.,
அதற்காகக் கண்டவனும் வந்து நமது தளத்தினை "லைட் போஸ்டாக்க" நினைத்தால் நாம் அதற்கு "செக் போஸ்டாக" இருக்கவேண்டும்.,அது நானாக இருந்தாலும் என்னைக் கேட்காமலே என்னை நீக்கும் உரிமை தள நிர்வாகிகளுக்கு உண்டு என்பதனை மிகக் குறைந்த காலக்கட்டத்திலேயே அதிக போஸ்ட்(சுமார் 70)[ காபி பேஸ்ட் செய்யாமல் கைப்பட டைப் செய்து] பதிவு செய்தவன் என்ற(நினைப்பு?)அனுபவத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
ஆனாலும் வாதப் பிரதிவாதம் என்பது என்னைப் பொறுத்தவரையில் கூர்தீட்டிக்கொள்வது போலவும் மொழிப்புலமையினை வளர்த்துக் கொள்ளவும் புதுப்புது கருத்துக்கள் தோன்றுவதால் எனது சிந்தனா மண்டலத்தினைச் செழிப்பாக்கிக் கொள்ளவுமே உதவுகிறது.ஒருவேளை நாம் நேரில் சந்தித்துக் கொண்டால்கூட இந்த அளவுக்கு பேசிக் கொள்ளமுடியாது.
ஒருவருடைய கருத்து ஒவ்வொருவருக்குள்ளும் விதவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற உண்மையினை அந்த கருத்தினைப் பதிவு செய்பவர் உட்பட யாவரும் அறிவர்.,எனவே கருத்துத் திணிப்பு என்ற பிரச்சினை இங்கே இல்லை.
மாற்றுக்கருத்தையே ஒருவர் சொல்லக்கூடாது எனில் அதில் சுவாரசியம் இருக்காது.தினமணி நாளிதழுக்கும் தினத்தந்தி நாளிதழுக்கும் என்ன வித்தியாசம்.,இரண்டுக்கும் தனித்தனி வாசகர் வட்டம் உண்டு.
எனவே கிறிஸ்மஸ் அவிசுவாசிகளின் அடையாளம்;அதைத் தவிர்த்து பூரணராக நாடுவது விசுவாசிகளின் அடையாளம் எனக்(வசன உல்டா மன்னிக்கவும்; நன்றி பவுலடிகளாருக்கு..,1.கொரிந்தியர்.14:22) கொள்வோமாக..! இறுதியாக "மலர்ப்பாதங்கள்" மேட்டர்..,எனது தனிப்பட்ட நட்பின் அடிப்படையிலான அலங்காரச் சொல்லாகும்;சத்தியத்தின்படி அது தவறு..!
எச்சரிக்கை: =>கிறிஸ்மஸ் தாத்தா.,கிறிஸ்மஸ் மரம்.,5ஸ்டார்.,என்ற பொருளில் வாதங்கள் தொடரும்.. =>"நீ பாபிலோன் குமாரத்தியா?சீயோன் குமாரத்தியா" என்ற தலைப்பிலும் செய்தி வருகிறது.
josephsneha:
கிறிஸ்து பிறந்ததை அனைவரும் விசுவாசிக்கும் போது கிறிஸ்து பிறப்பு எப்படி அவிசுவாசிகளின் கொண்டாட்டமாக இருக்கும்?
chillsam: நமது தளத்தில் மேம்போக்காக பதிலளிக்கும் போக்கைக் கண்டு வருந்துகிறேன்.,நேரமெடுத்து சிந்தித்து பதியப்படும் ஒரு கருத்து இது போன்ற அணுகுமுறையினால் தட்டிக்ககழிக்க(ளையப்)படுகிறது.இதனால் அடுத்து வருபவரின் திறனும் திசைதிருப்பப்படும் அபாயமுண்டு.
இதனைக் குறிப்பாக யாரையும் குறிப்பிட்டுக் கூறாமல் பொதுவான கருத்தாகக் கூறுகிறேன்.காரணம் இங்கு வரும் யாரும் அறிவில் குறைந்தவர்களல்ல;பொழுதுபோக்க வரவில்லை;மெய்யான ஈடுபாட்டுடன் இணைந்து செயல்பட்டால் கிறிஸ்தவ நம்பிக்கைகளை ஒருங்கிணைப்பதுடன் சபைகளையும் ஒருமுகப்படுத்தி நம்மை இந்த தேசத்தில் ஒரு வலுவானதொரு அமைப்பாகக் கொண்டுவரமுடியும்.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து இதனை யார் மீதும் நான் திணிக்கவில்லை..!
உதாரணத்துக்கு நண்பர் ஜோ அவர்களின் கருத்துக்கு வருகிறேன்;நான் சொன்ன கருத்தின் ஆழத்துக்கே செல்லாமல் மேலோட்டமாக "கிறிஸ்து பிறந்ததை அனைவரும் விசுவாசிக்கும் போது கிறிஸ்து பிறப்பு எப்படி அவிசுவாசிகளின் கொண்டாட்டமாக இருக்கும்?" எனக்கேட்கிறார்.
அடுத்த வாரம் கொலை செய்யப்படப்போகிற இயேசுவை "ஓசன்னா" என வரவேற்ற எருசலேம் நகரத்தாரைப் போலவே இந்த உலகம் இருக்கிறது,வருடம் முழுவதும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்படும் "மானங்கெட்ட அரசியல்வாதிகள்" அன்றைக்கு நமக்கு வாழ்த்து கூறுவார்கள்;வாழ்த்தின் அர்த்தமே வாழ்வுதான்,ந்மது வாழ்வுரிமைகளை நசுக்கிய பிறகு எப்படி வாழமுடியும்?வருடமுழுதும் மனம்போன போக்கில் வாழும் எண்ணற்றோர் அன்று ஒருநாள் தான் ஆலயத்துக்கே வருகிறார்கள்.(அதற்காகவாவது..?என்பீர்களோ)
எனது மையக் கருத்தினை மீண்டும்.., நாம் கொண்டாடும் கிறிஸ்மஸ் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் கொண்டாடும் பிறந்தநாள் விழா(போல தான்)போலிருக்கக்கூடாது.அது வெறும் அன்னதானம் அல்லது இரத்ததானத்தோடு முடியக்கூடியதல்ல.,(''தானம்'' என்றால் ஏன் போட்டோ பிடிக்கிறாய்?) எனவே கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒருவன் கிறிஸ்மஸ் பண்டிகையினை அவிசுவாசிக்கு அடையாளமாகக் கொண்டாடவேண்டும்;அந்த அவிசுவாசி சீக்கிரமே ஆத்தும ஆதாயம் செய்யும் விசுவாசி நிலைக்கு உயரவேண்டும் என்கிறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)